மரண அறிவித்தல் பரமேஸ்வரி (மணி) மகாதேவா

.


பரமேஸ்வரி (மணி) மகாதேவா
(இளைப்பாறிய ஆசிரியர் யாழ்-இந்து மகளிர் கல்லூரி)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, திருநெல்வேலி கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை  வதிவிடமாகவும் கொண்ட, திருமதி பரமேஸ்வரி மகாதேவா (மணி) அவர்கள் 31 /03/18  சனிக்கிழமையன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்..
அன்னார் காலஞ்சென்றவர்களான ஊரெழு ராசா தங்கம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லூர் இளையப்பா, விசாலாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவா (தேவன் –யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயஸ்ரீ, விஜயஸ்ரீ, பத்மஸ்ரீ-பப்பு, குகஸ்ரீ-குக்கு, லயஸ்ரீ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மதிகுணபாகன், பானு, கலைச்செல்வி, டேவிட் செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகேந்திரன், புவனேந்திரன், ராஜேஸ்வரி, ராஜேந்திரன், ராமச்சந்திரன், பாலகிருஸ்ணன், மற்றும் சிவனேஸ்வரி- குஞ்சு (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிலாஷ், அபிஷான், Dr.அபிஷேக், Dr.அபிராம், அபிசாயினி, அபிதேவ், அபிநயனி, அபிநேஸ்  ஆகியோரின்  அன்புப் பாட்டியுமாவார்.

பார்வைக்கு:          
04/04/2018 Wednesday – 6:00 to 8:00 PM, Liberty Funeral Parlour, 101 South Street, Granville
இறுதிக்கிரியைகள்:   
05/04/2018 Thursday – 10:00 to 1:00 PM Palm Chapel, Macquarie Park, North Ryde

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்களுக்கு; 
பப்பு பத்மஸ்ரீ: 0416 102 294
குக்கு குகஸ்ரீ;  0403 009 807

எம் மனது ஏங்கிறது ! - எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .


          நாயொன்று நாம் வளர்த்தோம் 
          நம்காலைச் சுற்றி வரும் 
          நோயென்று நாம் படுத்தால்
          நூறுமுறை நக்கி நிற்கும் 

          கதவருகே நாம் சென்றால் 
          காத்திருக்கும் திறக்கும் வரை
          திறந்த உடன் பாய்ந்தோடி
          திரும்பிநின்று எமைப் பார்க்கும் 

            கார் கதவு திறந்தவுடன்  
            கடுகதியாய் ஏறி நிற்கும்
            பார்க்க நாம் வேண்டுமென்று
            பரபரத்து எமை நோக்கும் 

           குழந்தை பக்கம் இருந்தாலும்
           குழைந்தபடி பார்த்து நிற்கும்
           குழந்தை அங்கே அழுதுவிடின்
           குனிந்து நின்று முகம்பார்க்கும் 

           அழுகை நீக்க தன்வாலை
           ஆட்டியாட்டி அது காட்டும்
           அப்போது பொக்கை வாயால்
            எங்குழந்தை சிரித்து நிற்கும்

சொல்லத்தவறிய கதைகள் - அங்கம் 06 தொடரும் கனவுலகில் வலி சுமக்கும் நூலக நினைவுகள் "புத்தகங்கள் என்ன குற்றம் செய்தன? " - முருகபூபதி - அவுஸ்திரேலியா


எனக்கு அப்போது பதினைந்து வயதிருக்கும். நீர்கொழும்பில் எங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் புத்தளவெட்டு வாய்க்காலும் (டச்சுக்கார்கள் தமது கோட்டைக்குச்செல்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கியது) இந்து சமுத்திரமும் சங்கமிக்கும் முன்னக்கரை என்ற இடத்திற்குச்சமீபமாக வாழ்ந்த டேவிட் மாஸ்டர் என்பவரிடம் கணிதம் படிப்பதற்காக (ரியூசன் வகுப்பு) சென்றுவருவேன்.

பண் காட்டும் பழந்தமிழிசை 08/04/2018 Homebush






யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழ் 📖 நூல் நயப்பு


இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட ஆரம்பகால அறிஞர் பேராசிரியர் தஞ்சயராசசிங்கம் ( வாழ்ந்த காலம் 1933 - 1977) அவர்களின் எட்டு மொழியியல் கட்டுரைகளின் தொகுப்பே இவ்வாறு நூலுருப் பெற்றிருக்கிறது.

பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்து முதல் வகுப்பில் சித்தியடைந்ததோடு பேராசிரியர் தொ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் கீழ் “இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பிரகடனங்கள்” என்ற M.Litt ஆய்வுப் பட்டமும் எடின்பரோ பல்கலைக் கழகத்தில் யாழ்ப்பாணத் தமிழ் பற்றி ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றவர். 
இந்த நூலின் பதிப்பாசிரியர் முருகேசு கெளரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழக முதுகலைமாணி (தமிழ்) உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைச் செய்தவர்.

யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில்  என்ற தலைப்போடு ஒவ்வொரு கட்டுரைகளும் அதன்
இலக்கிய வழக்கு, முறைப் பெயர் வழக்கு, தொழில் பெயர் வழக்கு, ககரத்தின் மாற்றொலிகள், சொல்லும் பொருளும், போர்த்துக்கேய மொழியின் செல்வாக்கு, ஒல்லாந்த மொழிச் சொற்கள், தமிழில் எதிர்ச் சொற்கள்  என்று எட்டு அத்தியாயங்களாக விரித்து நிற்கின்றது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து பத்து நிமிடத்துக்குள் வாசிக்கக் கூடிய கச்சிதம் கொண்டவை என்பதோடு நூலாசிரியர் குறிப்பிடுவதைப் போன்று இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியவை.

சைவமன்றம் அறிவுத்திறன் தேர்வு 08/04/2018





இலங்கைச் செய்திகள்


முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழில் தாக்குதல்

 யாழ். மாநகர சபை மேயர் ஆர்னோல்ட் : துணை மேயர் ஈசன் 








முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது யாழில் தாக்குதல்

26/03/2018 யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பிரதான வீதி, முட்டாசுக்கடை சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மெல்பனில் நடந்த தென்னாசிய கவிஞர்கள் ஒன்றுகூடல் ஈழத்து கவிஞர்கள் கருணாகரன் - நிலாந்தன் கவிதைகளும் இடம்பெற்ற நிகழ்வு ரஸஞானி


அவுஸ்திரேலியா குடியேற்ற பல்லின கலாசார நாடாகவும் திகழ்வதனால், பல விடயங்களில் இந்த கங்காரு தேசம் துரிதமாக அபிவிருத்தியடைந்து முன்னேற்றப்பாதையில் செல்வதாகவே அவதானிக்க முடிகிறது.
காலத்துக்குக்காலம் பொருளாதாரப் பிரச்சினைகள் வேலை இல்லாத் திண்டாட்டம்  தோன்றினாலும், இனங்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவதில் எந்தக்கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் முன்னுதாரணமாகவே திகழுகின்றது. அதனால்தான் இங்கு அனைத்து தென்னாசிய நாடுகளின் மொழிகளுக்காகவும் பாடசாலைகள் இயங்குகின்றன. அம்மக்களின் கலாசாரப்பணிகளுக்கு அரசின் அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்கின்றன.
பல்லினங்களினதும் கலாசாரப் பணிகளை ஊக்குவிப்பதற்காக பல்லின கலாசார ஆணையமும் இயங்குவதனால், அதன் ஊடாக  மானியங்களும் வழங்கப்பட்டு வருவதுடன் வருடாந்தம் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை நிகழ்த்தியவர்களை தெரிவுசெய்து, மாநில அரசுகள் விருதுகளும் வழங்கிவருகின்றன.
அவுஸ்திரேலியாவில்  வாழும் பலதேசங்களையும் சேர்ந்த இனத்தவர்களின் அமைப்புகள்,   அரசில் பதிவுசெய்யப்பட்டு இயங்குவதனால் அவற்றின் நிகழ்ச்சிகளுக்கு வருகைதரும் பல்லின கலாசார ஆணையர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற மேயர்களும் தொடர்ச்சியாக இன நல்லிணக்கம் பற்றியும் இனங்களின் மொழி, பண்பாடு, கல்வி, தொழில், கலாசாரம் குறித்து ஆக்கபூர்வமான நற்சிந்தனைகளை முன்வைத்துவருவதையும் அவதானிக்க முடிகிறது.

மெல்பனில் கவிஞர்கள் ஒன்றுகூடும் கவிதா மண்டலம்


   
               அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் கவிஞர்கள்  ஒன்றுகூடும் கவிதா மண்டலம் நிகழ்ச்சி எதிர்வரும்  08-04-2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி முதல் மாலை  6.00 மணி வரையில் மெல்பனில்  நடைபெறவுள்ளது.  
சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சுப்பிரமணியன் தலைமையில் இக் கவிதா மண்டலம்,   நடைபெறும் இடம்:  கிளேய்ட்டன் பொது நூலகம் (Clayton Community Centre   Library Meeting Room - 9-15, Cooke Street ,  Clayton, Victoria - 3168 ) 
சங்கத்தின் உறுப்பினர்களான கவிஞர்களும் மெல்பனில் வதியும் இதர கவிஞர்களும் பங்குபற்றலாம். கலந்துகொள்ள விரும்பும் கவிஞர்கள்,  தமது கவிதையை அல்லது தமக்குப்பிடித்தமான கவிதையை இந்நிகழ்ச்சியில் சமர்ப்பித்து கலந்துரையாடும் வகையில் இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.  கவிஞர்கள் தங்கள் கவிதையை 5 முதல் 7  நிமிடத்திற்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு:
சங்கர சுப்பிரமணியன்
(தலைவர்- அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
atlas25012016@gmail.com     ----     maniansankara@gmail.com
தொலைபேசி:     0423 206 025

-->




ஒலி ஒளி 2018: LIGHTS - CAMERA - ACTION: இது என்னோட கதை


இது என்னோட கதை 
Oli Olli 2018 – Lights Camera Action: Ithu Ennoda Kathai is an annual charity event run by UNSW Anjali Tamil Society. We help raise money for the UNIFUND Project who raise funds to provide humanitarian assistance to disadvantaged youth in North and East Sri Lanka. Tickets for our university student show can be purchased by calling one of the producers on the flyer, or online at https://www.qnectapp.com/buy/lightscameraactionithuennodakathaioliolli2018.


உலகச் செய்திகள்

ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு : 16 பேர் பலி





ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு : 16 பேர் பலி

31/03/2018 இஸ்ரேல் நாட்டின் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ் சினிமா - கேணி – திரை விமர்சனம்



நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர் ஜெயிலுக்கு செல்கிறார். அங்கு எதிர்பாராதவிதமாக திடீரென இறந்துவிடுகிறார். கணவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு செல்கிறார் ஜெயப்பிரதா.
இவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞனின் மனைவியான பார்வதி நம்பியாரும் செல்கிறார். இவர்கள் போகும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார் ஜெயப்பிரதா. அதே நேரத்தில் தன் வீட்டுத் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் காண்கிறார்.
தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் அந்த ஊர் மக்களுக்காக கேணியில் இருக்கும் தண்ணீரை தர முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தான் அந்தக் கேணிக்குப் பின்னால் இருக்கும் எல்லைப் பிரச்சினையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சியும் இருப்பது ஜெயப்பிரதாவிற்கு தெரிகிறது.
ஆனால் மக்களின் தாகத்தைப் போக்கியே ஆக வேண்டும் என்று தீவிரமாக களமிறங்குகிறார் ஜெயப்பிரதா. இதற்கு பல தடைகள் வருகிறது. இதில் ஜெயப்பிரதா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் ஜெயப்பிரதா. இவருடைய அனுபவ நடிப்பால் படம் முழுவதையும் தாங்கி பிடித்திருக்கிறார். பல இடங்களில் இவருடைய நடிப்பு ரசிக்கும் படி இருக்கிறது. இவர் கண்கலங்கும் போது, நமக்கே அந்த உணர்வை கொடுத்து விடுகிறார்.
பஞ்சாயத்து தலைவராக இடையிடையே வந்து நியாயம் பேசி, குறும்புத்தனமான நடிப்பால் ரசிக்க வைத்திருக்கிறார் பார்த்திபன். வக்கீலாக வரும் நாசர், கலேக்டர் ரேவதி, ஊர் மக்களில் ஒருவராக வரும் அனு ஹாசன், நீதிபதி ரேகா, ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு மிகவும் உதவி இருக்கிறார்கள். ஜெயப்பிரதாவுடன் படம் முழுவதும் பயணிக்கும் பார்வதி நம்பியாரின் நடிப்பு சிறப்பு. கணவனை பிரிந்து தவிப்பது, தன் மீது ஆசைப்படும் போலீசின் வலையில் இருந்து தப்பிப்பது என நடிப்பால் கவர்ந்திருக்கிறார்.
டீக்கடையில் வெட்டியாக பேசும் சாம்ஸின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. அதுபோல் டீ மாஸ்டராக வரும் பிளாக் பாண்டியும் காமெடியில் துணை நின்றிருக்கிறார்.
தமிழ்நாடு – கேரளா எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு படக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத். கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக இருமாநில காவல்துறையையும் பாதுகாப்பிற்காக நிறுத்தும் போது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஞாபகம் வருகிறது.
படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இப்படி மலையாளிகளால் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் தமிழர்களுக்கான உரிமையைப் பேசுவது சிறப்பு. சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார்.
தாஸ் ராம் பாலாவின் வசனம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பல வசனங்கள் பட்டாசு போல் வெடித்திருக்கிறது. ஒளிப்பதிவில் மிரட்டி இருக்கிறார் நௌஷாத் ஷெரிப். பச்சைப் பசேலென இருக்கும் பூமியையும், வறண்டு வெடித்துக் கிடக்கிற பூமியையும் அழகாக நம் கண்முன் நிறுத்திருக்கிறார்.
ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாக அமைந்திருக்கிறது. அதிலும் ‘ஐய்யா சாமி…’ பாடல் தாளம் போட வைக்கிறது. ‘கலையும் மேகமே…’ பாடல் முணுமுணுக்கும் ரகம். சாம்.சி.எஸ் பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘கேணி’ சமுக அக்கறையுள்ள படம்.
நன்றி tamilcinema.news