பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா சமாதியடைந்தார்

 .

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா  ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அவரது 85ஆவது வயதில் ஜீவசமாதியடைந்தார். பாபா கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில்  அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் பாபா ஞாயிற்றுக்கிழமை காலை ஜீவசமாதியடைந்துள்ளார்.

மரண அறிவித்தல்


              .
     மரண அறிவித்தல்
    வல்லிபுரம் திருநாவுக்கரசு

மறைவு : 22 .04 .2011
இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வல்லிபுரம் திருநாவுக்கரசு அவர்கள் 22/04/11 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் இணுவில் வல்லிபுரம், பத்தினிப்பிள்ளையின் அன்பு மகனும், பவளரத்தினத்தின் அன்பு கணவரும், காலஞ்சென்ற சுப்பையா, காலம் சென்ற இராஜதுரை, காலம் சென்ற குமாரலிங்கம், காலம் சென்ற பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலம் சென்ற கணபதிப்பிள்ளை, ஞானதுரை ( நியூசிலாந்து) ஆகியோரின் மைத்துனரும், திருச்செல்வகுமாரி (சிட்னி), திருநந்தகுமார் (சிட்னி), திருநந்தகுணாளன் (ஜேர்மனி), திருகுகசக்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜனநாயகம், தயாநந்தி, உதயகுமாரி, அருணாசலம் ஆகியோரின் அன்பு மாமனாரும்ராகுலன், சாயிபிரியா, ஆதவன், வியாசன், கபிலன், அபிராமி, ஆதித்தன், கஜானனி, விஸ்ணுகர், வித்தகன், அட்சயன், சுபானு, திபியன், திவாரகா, திவாசினி ஆகியோரின் அன்புப் பேரனும், ஆரியனின் அன்புப் பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் T. J Andrew Parlour Auburn எனும் இடத்தில் திங்கட்கிழமை 25/04/11 காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படும்ஈமைக்கிரிகைகள்  புதன்கிழமை 27/04/11 முற்பகல் 9.00 மணிக்கு No:1 Billabong Street, Pendle Hill NSW 2145 எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகள்  பி. 1.00 மணிக்கு Rookwood Gardens Crematorium West Chappel, Lidcombe NSW 2141 எனும் இடத்தில் நடைபெறும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும்.
சக்தி அருணாசலம்: 02 98637773
நந்தா ஜனநாயகம்: 02 96367846
திருநந்தகுமார்: 0403534458

சிட்னியில் திறம்பட நடந்தேறிய “ஜெயராஜ்ஜியம்” நூல் வெளியீடும் இலக்கியப் பட்டி மன்றமும் .................... எனது பார்வையில்....................வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.

.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் சென்ற சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை அரங்கில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் சிறப்புக் கட்டுரைகள் அடங்கிய “ஜெயராஜ்ஜியம்” என்ற நூல் வெளியீட்டையும் “கம்பராமாயண- பாலகாண்டம்” சொற்பொழிவுகள் அடங்கிய இறுவெட்டுக்களின் தொகுப்பின் வெளியீட்டையும் வெற்றிகரமாக நடாத்தியதுடன் இலக்கியப் பட்டிமன்றம் ஒன்றையும் வெகு சிறப்பாக அரங்கேற்றித் தனது மங்காப் பெருமையை உயர்த்திக்கொண்டது. பாடசாலை வாயிலிலே கட்டப்பட்ட வாழைகளும் தொங்க விடப்பட்ட மாவிலைகளும் அரங்கு அலங்கரிக்கப்பட்ட வண்ணமும் கம்பன் கழகவிழாவென்றால் சீராகவும் செம்மையாகவும் திருப்தியாகவும் அமையும் என்பதைக் கூறாமற் கூறுவதாயிருந்தது. ஆம்! உண்மையாக விழாக்கோலம் எல்லோரையும் கவர்ந்திருந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் செல்வி சுகன்யா பாலசுப்பிரமணியம் தனது இனிமையான குரலில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். அவுஸ்திரேலியக் கம்பன் கழக ஆரம்பித்த நாள்முதல் அதற்குப் பலவகையாலும் தோள்கொடுத்து வந்த திரு திருமதி வேலாயுதப்பிள்ளை தம்பதியினர் தமிழரின் பாரம்பரியத்தை நிலைநாட்டும் வண்ணம் மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார்கள். தொடர்ந்து இராமபிரானின் திருவுருவத்திற்கு சிவத்திரு இந்திரக்  குருக்கள் கர்ப்பூரதீபம் காட்டிப் பூசை செய்ததைத் தொடர்ந்து கம்பன் கழக வாழ்த்துப்பாடப்பட்டது. திரு குமரதாஸ் அவர்கள் தலைமையில் ஆரம்பித்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தாங்கள் எதிர் கொண்ட சவால்கள், அனுபவித்த இன்ப துன்பங்கள், எதிர்நீச்சல் போட்டுக் கழகத்தை வளர்த்து உயர்ந்த சுவையான சம்பவங்கள் இப்படிப் பலதரப்பட்ட தகவல்களை மிகவும் உருக்கமாகவும் தௌளத் தெளிவாகவும் விளக்கி உரையாற்றினார். பின்பு இலங்கையின் தலைநகரான கொழும்பில் தொடரப்பட்ட கம்பன் கழகம் எவ்வாறு வீறுநடைபோட்டு வெற்றிவாகை சூடியதென்பதை அழகாக விபரித்தமை எம் இதயத்தை ஈர்த்ததென்றே கூறலாம்.

திருமறைக் கலாமன்றம் வழங்கிய ‘முள்முடி’ “The Crown of Thorns”


கனடா .
news
அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளால் 1965ம் ஆண்டு 
ஈழத்தில் ஸ்தாபிக்கப்பட்ட திருமறைக் கலாமன்றம், தற்போது 
கனடா உட்பட உலகின் பல பாகங்களிலும் கிளைகளைக் 
கொண்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் கனடாவில் இம்மன்றம் 
அரச இன மத அரசியல் சார்பற்ற ஒரு கலைமன்றமாக இயங்கி, 
வருடாவருடம் பல கலை நிகழ்ச்சிகளை நடாத்தி வருவது யாவரும் 
அறிந்ததே.அந்த வகையில் கடந்த வாரம் ரொறன்ரோவின் 
டொன்மில்ஸ் எக்லின்ரன்சந்திக்கருகே அமைந்துள்ள கனடா 
கிறிஸ்தவக் கல்லூரிக் கலையரங்கிலே பக்திப் பரவசமான ‘முள்முடி’ என்ற யேசுவின் 
திருப்பாடுகள் காட்சி, மிகவும் சிறப்பாக மேடையேறி பலரது பாராட்டையும் பெற்றுக் கொண்டது.



சிட்னியில் கிளைட் ரெயில் ஸ்ரேசனில் தமிழ்ப்பெண் மரணம்.


.
74 வயதுடைய இலங்கை ஈவினை சுண்ணாகத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெண்மணியான திருமதி இரத்தினம் சத்தியதாசன் அவர்கள் சென்ற 11ம் திகதி சிட்னியில் கிளைட் ஸ்ரேசனில் விழுந்து இறந்து விட்ட செய்தி பலரும் அறிந்த செய்தியாகும். ஆரோக்கியமாக தனியாக பிரயாணிக்கும் இவர் விழுந்து இறந்தது என்பது அவரை அறிந்த பலருக்கும் கவலை தரும் செய்தியாகவே இருந்தது. இவரது கணவரான காலம் சென்ற சத்தியதாசன் Times of Ceylon இல் Journalist என்பது குறிப்பிடத் தக்கது. இவருக்கு சத்தியவான், சத்தியேந்திரா, சத்திய வாணி, சத்தியநிதி என்ற நான்கு பிள்ளைகள் சிட்னியில் இருக்கின்றார்கள்.. இந்த மரணம் பற்றி அவரது மகன்மாரில் ஒருவரான சத்தியேந்திரா கூறியதாவது.

இலங்கைச் செய்திகள்

.
இறுதிப் போரின் இரத்தக் கறைகளை அழித்த ஐ.நா நிபுணர்குழு அறிக்கை - த ரைம்ஸ்
வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப் படங்கள் இணைப்பு

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...

அமீருக்கு இரண்டு பங்கு கேக் - ரெ.கார்த்திகேசு


.

“அப்பா, அமீருக்கு கேக் குடுக்காதீங்க!” என்றாள் மல்லி.

மல்லிக்குப் பிறந்த நாள் வந்திருந்தது. மூன்று வயது நிறைந்து நாலாம் வயதிற்குப் போகும் நாள். மல்லியைப் பொறுத்த வரையில் அது ஒரு மாபெரும் வளர்ச்சி.
இன்று காலை முதலே தன் பிறந்த நாள் பிரதாபங்கள் வீட்டில் அல்லோலகல்லோலப்பட்டன. மல்லியின் முதல் மகிழ்ச்சி தான் நான்கு வயது எல்லையை வெற்றிகரமாக அடைந்துவிட்ட வேளையில் அமீர் – அவளுடைய பாலர் பள்ளி சகா மற்றும் தலையாய பகைவன் – இன்னும் அதனை அடையவில்லை என்பது. “அமீருக்கு இன்னும் நாலாவது பெர்த்டே வரல! இன்னும் ரெண்டு மாசம் இருக்கு!”
பிறந்த நாள் ஒரு வார மத்தியில் வந்ததால் மல்லியின் பெற்றோர்களுக்கு அதனை நண்பர்களின் குடும்பங்களை அழைத்துக் கொண்டாட முடியவில்லை. அநேகமாக வார இறுதியில் பெலூன்களுடன்கூடிய ஒரு விழா இருக்கும். ஆனால் பிறந்த நாளான இன்று பெற்றோர்கள் வேலையிலிருந்து அரைநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு காலையில் மல்லியைக் கோயிலுக்குக் கொண்டு சென்றார்கள். பின்னர் மல்லியின் பாலர் பள்ளிக்குச் சென்று அங்கு கேக் வெட்டி கொண்டாடுவதாக ஏற்பாடு.
கோயிலுக்குப் போகும் மகிழ்ச்சியை விட பள்ளிக்குப் போகும் மகிழ்ச்சிதான் மல்லிக்கு அதிகமாக இருந்தது. கோயிலில் அவள் அம்மா பூசிவிட்ட கீற்றுத் திருநீறும் சின்ன சந்தனப் பொட்டும் மல்லிக்கு அழகாக இருந்தன. புதுச் சட்டையெல்லாம் வாங்கி வைத்திருந்தாலும் பள்ளிக்கூட நாளாதலால் வழக்கமான பள்ளிச்சீருடையையே அணிவித்திருந்தார்கள்.
‘சீக்ரெட் ரெசிப்பி’யில் வாங்கியிருந்த விலையுயர்ந்த கேக் பெட்டியில் இருந்தது. சீக்ரெட் ரெசிப்பியின் கேக்குக்குத் தனி ருசி உண்டு. ஆனால் அதற்கான விலையும் கொடுக்க வேண்டும். கேக்கில் சுற்றிலும் தென்னங்கீற்றுத் தோரணங்கள் போல அமைத்திருந்தார்கள். நீளப் பாவாடை அணிந்த பெண்ணின் படம் போட்டிருந்தார்கள். எல்லாம் மல்லியின் அம்மா கொடுத்த மாதிரிப் படத்தைப் பார்த்துக் கேக்கை அணி செய்யும் சீனப் பெண் ஐசிங்கொண்டு வரைந்தது. பாவாடை இந்தியத்தனமாக இருந்தாலும் உப்பிய சிவப்புப்பூச்சுடைய கன்னங்களுடனான முகமும் (நெற்றியில் ஒரு பொட்டு இருந்தாலும்) மேல்நோக்கி ஏறி இறங்கும் இரட்டைச் சடையும் சீனர்கள் சாயலில் இருந்தன. சரிதான். இப்படியெல்லாம் இருப்பதால்தான் இது மலேசியா.

சிட்னி ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத்திறன் போட்டி 2011

.
இப் போட்டிகள் மே மாதம் 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோவிலில் பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது.

வர்ணம் தீட்டுதல் (பாலர் ஆரம்ப பிரிவுக்கும் பாலர் பிரிவுக்கும் மட்டும்), சமய அறிவுப் போட்டி, பேச்சுப் போட்டி என மூன்று போட்டிகள் நடைபெறும். (பேச்சுப் போட்டிக்கான பேச்சுக்களும் அறிவுப்போட்டிக்கான மாதிரி வினாக்கள் என்பனவற்றை இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்)

இப்போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கு பரிசில்கள் முதற் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவென மூன்று வகையாக வழங்கப்படவுள்ளது. ஓவ்வொரு பிரிவிலும் ஓன்றுக்கு மேற்பட்ட திறமையானவர்களுக்கு பரிசில்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக இப்படி வகுக்கப்பட்டடுள்ளது.

மேலதிக விபரங்கள் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்

மெல்பேணில் ஒரே மேடையில் இருசகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம்

.
கடந்த பெப்ருவரிமாதம் மெல்பேணில் நடைபெற்ற இருசகோதரர்களின் மிருதங்க அரங்கேற்றம் இசைப் பிரியர்களுக்கும், கலைஞர்களுக்கும் மட்டுமன்றி எல்லோருக்குமே பெருவிருந்தாக அமைந்திருந்தது. திரு.திருமதி. விஜயமனோகரன் - குமுதினி தம்பதிகளின் புதல்வர்களான செல்வன் லோஜன் விஜயமனோகரன், செல்வன் ஆதவன் விஜயமனோகரன் இருவரதும் மிருதங்க அரங்கேற்றம் கடந்த பெப்ருவரி மாதம் ஆறாம் திகதி மாலை பேசின் நிகழ்கலை அரங்கத்தில், ஒரே மேடையில் ஒன்றாக இடம்பெற்றது.

ஈழத்துப் பொன்மணி - தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல்கல்

.


ஈழம் என தமிழர்களால் அறியப்பட்ட இலங்கைத் தீவுக்கும் தென்னாட்டுக்கும் பன்னெடுங்காலமான தொடர்புகள் உண்டு. ஒரு இலங்கையரை கூட்டிக் கொண்டு வந்து அவரைப் பேச விடாமல் இவர் எந்த ஊர்க் காரராய் இருப்பார் என நாம் கேட்டால் நிச்சயம் தமிழ்நாடு என்று தான் சொல்லுவோம். அது இலங்கைத் தீவில் வாழும் சிங்களவராயினும் சரி, தமிழராயினும் சரி - அப்படி தமிழ்நாட்டுக்கும் ஈழத்தவருக்கும் புறத்தோற்ற வேறுபாடுகள் குறைவு என்றாலும் அவர்களுக்கும் தமிழ்நாட்டவருக்கும் அகத் தோற்றங்களில் வேறுபாடுகள் உண்டு. புவியியல் காரணங்களாக இருக்குமோ எனத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஈழத்தில் வாழும் இரண்டு கோடி மக்களில் 90 சதவீதக்கும் அதிகமானோர் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிலிருந்து தான் குடியேறி இருக்கின்றார்கள். அவர்களின் கலாச்சாரம், மொழி, நம்பிக்கைகள் இப்போது வேண்டுமென்றால் சிறிதளவு மாற்றம் கண்டு இருக்கலாம் - ஆனால் அவற்றின் வேர் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் இதனை பெரும்பாலான இலங்கையர்கள் மறுத்துவிடுவார்கள் - அதற்கான காரணம் இந்தியா தேசத்தின் நிழலில் தாம் இருக்கக் கூடாது எனவும், தாம் தனித்துவமானவர்கள் என்பதை பேண நினைப்பதுமே. ஆனால் ஊர்க்குருவி என்ன உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாது என்பார்கள்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

51. ஒதுங்கி நிற்க வேண்டாம் - ஓடிப்போங்கள்!

நான் உங்களிடம் கெட்டவர்களிடமிருந்து, தீயவர்களிடமிருந்து வெறுமனே ஒதுங்கி நில்லுங்கள் என்று சொல்லவில்லை. அவர்களிடமிருந்து ஓடிப்போய்விடுங்கள் என்றுதான் சொல்லுகின்றேன்.

52. மரம் - ஆறு - பசு

தன்னலம், பொறாமை, தான் தான் பெரியவன் என்ற அகங்காரச் செருக்கு ஆகிய மூன்று மனப்போக்குகளும், மனப்பாங்குகளும் இளமையான இதயங்களில் வேர்விடக்கூடாது. அவர்களைப் பிறருக்குச் சேவை செய்வதில் தூண்டி ஈடுபடுத்துங்கள்.

வாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட்டுவோம்



ஷேக்ஸ்பியர் பிறந்த தினம் உலக புத்தக தினம். அறிவுப் புதையலான புத்தகம் தனது புன்னகைக்குப் பின்னே புதைத்து வைத்துள்ள புதிய புதிய மனித சாத்தியங்களை அனைவரும் அடைய சூளு‍ரைப்போம். பிறந்தநாள் பரிசாகவும், திருமணநாள் அடையாளமாகவும், குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும், நட்பின் பகிர்தலாகவும் புத்தகங்களே நமது வாழ்வில் இடம்பெற அனைவருக்கும் உலகப் புத்தக தின வாழ்த்துகள்


ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.

அவுஸ்திரேலியாவில் குடியேறி வாழும் தமிழ் மக்களை சந்திப்போம்

.






Conscila Jerome
Settelment Grant Program Worker
The Hills Holroyd Parramatta
MIGRANT RESOURCE CENTRE

 Ph:    (02) 9687 9901
Fax:  (02) 9687 9990
 Website: www.thhpmrc.org.au
 Email:tamilsgp@thhpmrc.org.au

திருநந்தீஸ்வரத்தில் சுமார் 500 வருடங்களின் பின் கும்பாபிஷேகம்_


.
  திருநந்தீஸ்வரத்தில் சுமார் 500 வருடங்களின் பின் கும்பாபிஷேகம் இரத்மலானையில் அமைந்துள்ள திருநந்தீஸ்வரம் ஆலயத்தில் சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன் காலை 7.30 மணிமுதல் 9.00 மணிவரை உள்ள சுபவேளையில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய வரலாறு

“மண்ணுக்குள் இருக்கும் என்னை அகழ்ந்து கோயில் எழுப்புங்கள்” என சிவன் உத்தரவிட்ட அதிசயம்

ஆப்புக்கு ஆப்பு


ஞாநியின் ‘ஆப்புக்கு ஆப்பு’ நாடகத்தை இங்கே பார்க்கலாம். கீழே முழுதாகப் படிக்கலாம். வாசக வாக்காளர்களுக்குத் தேர்தல் தின நல்வாழ்த்துகள்.

கட்டியக்காரன்: பரத கண்டம் என்று சொல்லப்படும் இந்திய உபகண்டத்திலே போதை தேசம் என்று ஒரு நாடு இருக்கிறது. வரைபடத்தில் அது எங்கே என்று சிரமப்பட்டு கூகிள் மேப்பிலெல்லாம் தேட வேண்டாம்.
(அப்போது கோரஸ் வந்து ஒரு டாஸ்மாக் கடை போர்டுடன் நிற்கிறது. எதிரே தெருவில் ஒருவன் போதையில் விழுந்து கிடக்கிறான்)
கட்டியக்காரன்: ஒவ்வொரு தெருவிலும் டாஸ்மாக் என்று ஒரு போர்டு போட்டிருக்கும். அந்த தேசம்தான் போதை தேசம். ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அங்கே ஒரு விசித்திரமான ஏலம் நடக்கும். யாருக்கு நாம் அடிமையாக இருப்பது என்று மக்கள் தாங்களே முடிவு செய்வார்கள். ஏலத்தில் மிக அதிகமான இலவசங்களை யார் அறிவிக்கிறார்களோ அவர்களுக்கே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அடிமையாக இருப்பதாக ஒப்புக் கொண்டு விடுவார்கள்.

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

.
.

உலகச் செய்திகள்

1. அமெரிக்காவில் பயங்கர சூறாவளியுடன் கூடிய மழை: 22 பேர் பலி
2. இளவரசர் வில்லியத்தின் திருமணம் யுடியுப் வழியாக நேரடி ஒளிபரப்பு!

அமெரிக்காவில் பயங்கர சூறாவளியுடன் கூடிய மழை: 22 பேர் பலி

அமெரிக்காவில் தென் பகுதியில் உள்ள கரோலினாவில் உள்ள கடலில் பயங்கர புயல் கிளம்பியது. பின்னர் அது வலுவடைந்து வாஷிங்டன் நகரை தாக்கியது.

கடுமையான சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. பலத்த காற்று வீசியதால் வீடுகளின் கூரைகள் பறந்தன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டன. ரோடுகளில் மரங்கள் சாய்ந்தன.

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) வித்யாசாகர்!!


6
நான் ஒன்றும் பேசவில்லை.

பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் -

“எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா திரியிறேனா, அதான் கோபம் சுருக்குனு வந்துட்டுது” என்று அவர் தன்னை பொருமைப் படுத்திக்கொண்டு பேசினார்.

என்றாலும் அவர் இத்தனை விளக்கிக் கூறியப் பின்பும் ‘அதென்ன நம் தேசமா? நாம் இந்தியர், அவர்கள் இலங்கையர் தானே? என்றதும், குறிப்பாக அதென்ன நம் தேசமா நாம் வக்காலத்து வாங்க என்றதும்; எனக்கு முகம் பாராத ஒரு கோபம் சுள்ளென வந்தது.

சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? -சிவா

.
ஆதியிலிருந்து தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபு கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது.

சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியது. இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.

தமிழ் சினிமா


.
பொன்னர் சங்கர்

கலைஞர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் வரலாற்று கதை அவரது திரைக்கதை வசனத்தில் படமாகியுள்ளது. சிற்றரசர் நெல்லையன் கொண்டான்-தாமரை தம்பதி

மகன்கள் பொன்னர்-சங்கர் இவர்களால் எதிரி அரசனான காளிமன்னன் உயிருக்கு ஆபத்து என ஜோதிடர் கணிக்க இருவரையும் கொல்ல உத்தரவிடுகிறான்.

கண்ணானால் நான் இமையாவேன்..


.
உறவுகளின் உன்னதம் தன்னலத்தில் இல்லை! பிறர்நலத்தில் இருக்கிறது! நான் உனக்காகவும், நீ எனக்காகவும் என்றானபின் இதைவிட இன்பம் எங்கே? நினைவில், கனவில் எல்லாம் தொடரும் உறவில் இந்தப் பரிமாற்றம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், மனதிற்குள் ஒரு உந்துதலையும் தருவதுடன், மகிழ்ச்சிப்பந்தல்கட்டி திருவிழா நடத்துகிறது.

அன்பும் அக்கறையும் தன்மீது செலுத்த இன்னொருவர் / இன்னொருத்தி இருக்கிறார் எனும்போது மனதில் நம்பிக்கை நங்கூரமிடுகிறது. ஆண் –பெண் உறவின் அந்தரங்கம்கூட இதன் அடிப்படையிலேதான் சந்தோஷ சாம்ராஜ்யம் நடத்துகிறது.

சமீபத்திலும் கூட ஒரு திரைப்பாடல்..