மொழிபெயர்ப்புக்கவிதை: அந்தகாரத்துக்கு முன்பு

.
 சந்திரகுமார விக்ரமரத்ன | தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ

அமாவாசைக் கனவுகள் வந்து
தம்பியை அச்சுறுத்துகையில்
நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட
யாருமில்லை வீட்டில் இப்பொழுது
இன்றிரவு சொந்தங்கள்
எம் குடிசையில் விழித்திருப்பர்
எவ்வாறிருக்குமோ நாளை
நாம் உணரும் அந்தகார இருள்

வண்ணத்துப் பூச்சிகளே
மெதுமெதுவாக
மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்
இனி
பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்
உறைந்துவிடும் அம்மாவின் வாசனை
அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு
மயானத்துக்கு வந்து நாளை
கூட்டிச் செல்லுங்கள் அப்பா
சிறைச்சாலைக்கு எம்மையும்

நான் ரசித்த மத்திய கல்லூரியின் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி - செ .பாஸ்கரன்

.

யாழ் மத்திய கல்லூரி பழையமாணவர்சங்கம் சிட்னி கிளையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை 19 04 2015  நடாத்திய அன்றும் இன்றும் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சி Riverside Theatre  Parramatta tpy;  5.15 மணிக்கு ஆரம்பமானது. திவாகர் சத்தியபிரகாஷ் , நிகில் , சோனியா , அல்கா அஜித் ஆகிய சுப்பர் சிங்கர் பாடகர்களும் சுப்பர் சிங்கர் இசைக்குழுவான மணி அவர்களின் இசைக்குழுவும் இவர்களோடு சுப்பர் சிங்கரின் செல்லப்பிள்ளை அறிவிப்பாளர் பிரியங்காவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2015. 25 April 2015

.





மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.

.
புனைப்பெயரில்
கம்ப்யூட்டர் மவுஸை பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் மட்டும்தான் விமர்சனம் செய்ய வேண்டும்”
சொன்னவர்இ சுஹாசனி.
நடிகைஇ இயக்குனர்இ காமிராஉமன்இ பிலிம் இன்ஸ்ட்டியூட் அட்மிஷன்
இதெல்லாம் அடைய காரணமாக இருந்த அடையாளமான
கமல் அண்ணன் பெண்
சாருஹாசன் மகள்
மற்றும் இன்றைய இண்டநேஷனல் அடையாளம் ஆனஇ
மணிரத்னம் பெண்டாட்டி.
சொன்ன இடம், அவரது கணவரும்
தமிழ் சினிமாவின் GOD FATHER no...இல்லை “நாயகன்” என அவர் தம் குழுவால் சொல்லப்படும் MANI”RAT”NAM மணிரத்னம் பட விழாவில்.
இதை படித்து விட்டு இ எங்க வாய் சும்மா இருந்தாலும்இ கை சும்மா இருக்க மாட்டேன் என்குது

நீங்கள் எப்படி தயாரிக்கும் வலு இருப்பதால்  சினிமா எடுப்பது நிறுத்தாமல் சினிமா எடுத்துத் தள்ளுவதாலும்

மார்கெட்டிங் தெரிந்ததால் கல்லா கட்டுவதாலும்
அதிலும்இ புழுனு குயுவுர்நுசு படத்தை காப்பி அடித்து  வுஐஆநுளு 100 டீநளவ டுளைவல்
”நாயகன்”இ இடம் பெறச் செய்யும் தந்திரம் தெரிந்ததாலும்
தொடர்ந்து படம் எடுப்பது போல்
மவுஸ் பிடிக்கத் தெரிந்தவன் விமர்சனம் பண்ணுவது


தமிழ் வளர்த்த சான்றோர் விழா 26 04 2015

.













பேராசிரியர் சி மௌனகுருவின் நெறியாள்கையில் மாணவர்களின் அளிக்கை

.


பேராசிரியர் சி மௌனகுருவின் நெறியாள்கையில் மட்டக்கிளப்பின் வடமோடி கூத்தை அடி நாதமாக கொண்ட  மாணவர்களின் அளிக்கை நிகழ்வு 18ம் திகதி சனிக்கிழமை மட்டக்கிளப்பு நகர மண்டபத்தில் இடம் பெற்றது .பேராசிரியர் மௌனகுரு அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டுக் கூத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டு வருகின்றார். மட்டக்களப்பின் பாரம்பரிய கலை ஒன்று அருகிவிடாமல் காத்து வருகின்றார்.


பாரதி பள்ளியின் 20ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம் 26 04 2015

.

மெல்பன்  
பாரதி பள்ளியின்  20 வருட  நிறைவு  விழாவும்  பெற்றோர் - பிள்ளைகள்  - பொதுமக்கள்  ஒன்றுகூடலும்.
மெல்பனில்  1994  ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டு  வேறு  வேறு  பிரதேசங்களில் நான்கு   வளாகங்களில்   வாராந்தம்  இயங்கிவரும்  பாரதி  பள்ளியின் இருபது  வருட  நிறைவு விழாவும்  மாணவர்கள் - பெற்றோர்கள் - பொதுமக்கள்   இணைந்து  பங்குபற்றும்  பல்வேறு   நிகழ்ச்சிகளுடன் ஒன்றுகூடலும்   எதிர்வரும்   26-04-2015   ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை முற்பகல்  10   மணியிலிருந்து  மாலை  6  மணிவரையில்  Dandenong High School  மண்டபத்தில் (Ann Street, Dandenong 3175)     நடைபெறும்.
தமிழுக்கு  தொண்டாற்றி  மறைந்த  தமிழ்  அறிஞர்கள்,   கலைஞர்கள்,   எழுத்தாளர்களின்  ஒளிப்படக்கண்காட்சி,   நூல்,  இதழ்களின்  கண்காட்சி பெரியவர்கள்   பிள்ளைகள்  கலந்துகொள்ளும்  பலதரப்பட்ட விளையாட்டுப்போட்டிகள்,   உற்சாகமூட்டும்  கலை   நிகழ்ச்சிகள், சிந்தனைக்கு   விருந்து  படைக்கும்  அறிவியல்  நிகழ்ச்சிகள்  என்பனவும் இடம்பெறும்.  மழலைகள் முதல் வளர்ந்தோர் வரை யாவரையும் மகிழ்விக்கும் விளையாட்டு நிகழ்வுகள், புதுமையான  தமிழ்  மொழிப்போட்டிகள்,  சிறுவர் ஓவியப்போட்டி    என்பனவும்    இடம்பெறும்.
அனுமதி  இலவசம்.   எனினும்  பாரதி  பள்ளியின்  20  வருட  நிறைவை முன்னிட்டு   மைதானத்தில்  இடம்பெறும்  வேடிக்கையான  பொழுது போக்கு (Rides)  நிகழ்ச்சிகள்   அனைத்திலும்   கலந்துகொள்வதற்கு $ 20 வெள்ளிகள்  பிரவேசக்கட்டணம்  பெறப்படும்.   முற்கூட்டியே  அதற்கான சீட்டுக்களுக்கு  பதிவுசெய்துகொள்ளுமாறு   பாரதி  பள்ளியின்  நிருவாகம் கேட்டுக்கொள்கிறது.
மேலதிக  விபரங்களுக்கு:
திரு. பரம்:  0417 139 629   திரு. வேந்தன்:   0411 090 049  திரு. நிஷாகர்:  0408 563 234
----------------------------------

திருக்குர்ஆன் மருத்துவம் - நரம்பை பலப்படுத்தும் இஞ்சி

.

 
           
                      டாக்டர் எம்.ஏ. ஹாருன்
  “ ( இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17)
  இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது !
  இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது.
  இஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
  இப்போது உலகப் புகழ் பெற்ற டாக்டர்களும், மருத்துவ பல்கலைக்கழகங்களும் இஞ்சியின் மருத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டுள்ளன.

கலாநிதி ஆறு திருமுருகனபது; சமய சொற்பொழிவு 19 .04 - 27.04 2015

.












ஒளியில் மலர்ந்த மொட்டுக்கள் - முருகபூபதி

 .

     

" வாருங்கள்... வாருங்கள்.... வந்து.... பாருங்கள்..... பாரதி  பள்ளியின்   20 வருட நிறைவு   விழாவை  "  
மெல்பன்  பாரதி  பள்ளியின் 20 ஆண்டு  நிறைவு  விழா   26 - 04-2015
தலைமுறைகளைக்கடந்து  வாழும்   பாப்பா பாரதி  வீடியோ   ஒளிப்பதிவு     இறுவட்டு  தொடர்பான  பார்வை.
                                             
அவுஸ்திரேலியா  மெல்பனில்  கடந்த  இருபது  வருடங்களுக்கும் மேலாக  இயங்கும்  பாரதி  பள்ளியின்  20  வருட  நிறைவு விழா எதிர்வரும்  26-04-2015   ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை   மெல்பனில் 

Dandenong  High School (Ann Street, Dandenong, Victoria 3175)      மண்டபத்திலும்   முன்றலிலும்  நடைபெற  ஏற்பாடாகியுள்ளது.
பாரதி  பள்ளியின்  உருவாக்கத்திற்கு  மூலகாரணமாக  இருந்தது நாடகக்கலைஞரும்   எழுத்தாளருமான  மாவை   நித்தியானந்தன் ஸ்தாபித்த  மெல்பன்  கலை  வட்டம்.   இந்த  அமைப்பு  1994  ஆம் ஆண்டு  தொடக்கத்தில்  மொனாஷ்   பல்கலைக்கழகத்தில்  பெற்றோர் - பிள்ளைகள்  உறவு    தொடர்பான  முழுநாள்  கருத்தரங்கை நடத்தியது.   அதன்  பெறுபேறாக  அதே   ஆண்டில்  மெல்பனில்  சில பிரதேங்களில்   பாரதி  பள்ளியின்  வளாகங்கள்  அமைக்கப்பட்டு வாராந்தம்   தமிழ்  மொழி   மற்றும்  கணிதம்,   ஆங்கிலம்,  விஞ்ஞானம் முதலான   இதர  பாடங்களும்  பயிற்றுவிக்கப்பட்டன.   

இனிய மாலைப் பொழுது 25 April 2015.

.
சிவபூமி சிறுவர் இல்லக் கட்டிட நிதிக்காக கலாநிதி
ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுது 25 April 2015.



இலங்கைச் செய்திகள்


தேர்தலில் சந்திரிகா

இலங்கையின் முதலாவது இஸ்லாமிய நூதனசாலை திறப்பு

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறப்பு

யாழ்ப்பாணத்தில் கஞ்சா மீட்பு

ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் : டேவிட் கமரூன் வலியுறுத்தல்

அர்ஜுன மகேந்திரனிடம் ஆறரை மணி நேரம் விசாரணை

சங்க இலக்கியக் காட்சிகள் 47- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

யாரந்தக் கடவுள்?

காதல் மனைவியோடு இல்லறத்தில் இணைந்து ஒன்றாக வாழ்ந்திருந்த கணவன்ää ஒருநாள் பரத்தையரை நாடிச்சென்று இன்ப சல்லாபத்தில் ஈடுபட்டான். அங்கேயே சிலநாட்கள் தங்கி இருந்துவிட்டு ஒருநாள்ää இரவுநேரத்தில் வீட்டுக்கு வருகிறான். இவ்வளவு நாட்களும் தான் எங்கு சென்றிருந்தேன் என்பதை மனைவி அறிந்திருப்பாளோ? அதுபற்றி கேட்டுவிடுவாளோ என்ற பயமும், குற்ற உணர்வும் அவனுக்கு எழுகிறது. அதனால், இத்தனை நாளும் கடவுளை வணங்குவதற்காகக் கோயிலுக்குச் சென்றிருந்ததாகப் பொய் சொல்கிறான்.
ஒருவர் ஒரு பொய்யைச் சொல்லும்போது பொருத்தமாகவும் சொல்ல வேண்டுமல்லவா? அத்துடன் பதற்றப்படாமலும் சொல்லவேண்டும். இல்யையென்றால் அவர் பொய்சொல்லுகின்றார் என்கின்ற உண்மை வெளிப்பட்டுவிடும். இங்கேயும் அப்படித்தான். அவனது நாக்கு வாய்க்குள்ளேயே தடம் புரள்கின்றது. பேச்சு நடுங்குகின்றது.


நாகர் கல்வெட்டு சாசனம் கண்டுபிடிப்பு‏



.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

விழுதல் என்பது எழுகையே தொடர்

.
 உலக எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் பெருந் தொடரில்  திடீர்என ஏற்பட்ட தொழில்நுாட்பகோளாறு காரணமாகவும் கதை ஆசிரியர்களின்  கதையை இணைய எழுத்துரு மாற்றம் செய்யப்பட உள்ளதாலும் விழுதல் என்பது எழுகையே   கதை தவிற்கமுடியாத காரணத்தால்  மீண்டும்  08.5.2015ல்  தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகச் செய்திகள்


லிபியாவில் படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலி

ஜப்பானில் தரையிறங்கிய வேளை ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற பயணிகள் விமானம்







லிபியாவில் படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலி


15/04/2015 லிபியாவிற்கு  அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலியாகியுள்ளதாக  சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர்.

இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இத்தாலிய கடற் படை வீரர்கள் சுமார் 140 பேர்களை உயிருடன் மீட்டனர்.

விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

நடைமுறைக்கு வந்தது இந்தியாவுக்கான ஒன் அரைவல் விசா


15/04/2015 இந்தியாவுக்கு செல்லும்  இலங்கையர்கள் எதிர்வரும் காலங்களில் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே வீசாவினை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை  நேற்று முதல் நடைமுறை  வந்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கான வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாத இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது அவரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைய இந்த வீசா முறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
இந்தியா ஏற்கனவே 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. 
அதனைத் தொடர்ந்து தற்போது இலங்கையை 44 ஆவது நாடாக ஒன் அரைவல் வீசா பட்டியலில் இந்தியா இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது

.

இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்)​ பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார்.
மேற்படி விருதானது (நுடளநஎநைச யனெ ஆயவநசயைடள ளுஉநைnஉந யனெ நுபெiநெநசiபெ ஊ லுழரபெ சுநளநயசஉhநச யுறயசன) உயிரியல் விஞ்ஞானம்இ ​​பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டுஇ 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது.



அகநி வெளியீட்டிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் வெளியீட்டிற்கான பதிப்பகப் பரிசு.

.


வந்தவாசி.ஏப்.14. வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு 
கிராமத்தில் இயங்கிவரும் அகநி வெளியீட்டிற்கு
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்
வெளியீட்டிற்கான பதிப்பகப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும்
தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்கும், அந்த நூலினை
வெளியிட்ட பதிப்பகத்திற்கும் பரிசும் பாராட்டும்  வழங்கி  வருகின்றது.
  
   அவ்வகையில், வந்தவாசி அகநி வெளியீடு வெளியிட்ட தமிழக 
வேளாண்மைத்துறை இயக்குநர் டாக்டர் மு.ராஜேந்திரன் எழுதிய
'பாண்டியர் காலச் செப்பேடுகள்' எனும் நூல் 2013-ஆம் ஆண்டிற்கான
நாட்டு வரலாறு, கல்வெட்டியல், தொல்லியல் பிரிவில் சிறந்த நூலாகவும்,
அந்நூலை வெளியிட்ட அகநி வெளியீடு சிறந்த பதிப்பகமாகவும் தேர்வு
செய்யப்பட்டது.

தமிழ் சினிமா



கொம்பன்


மெட்ராஸ் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி தன் பழைய வேட்டி, சட்டையை மாட்டி நடித்த படம் தான் கொம்பன். பருத்திவீரனுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் மீண்டும் ஒரு கிராமத்து படம். பருத்திவீரன் அளவிற்கு ஆழமாகவும் மற்றும் அழுத்தமாகவும் இல்லாமல் இருந்தாலும், ஒரு ஜனரஞ்சகமான மாமனார்-மருமகன் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இந்த கொம்பன்.
இயக்குனர் முத்தையா முந்தைய படத்தில் பயன்படுத்திய அந்த வேட்டி, சட்டையை கார்த்திக்கு கொடுத்து அதே களத்தில் இறக்கி அழகு பார்த்துள்ளார். இதில் ப்ளஸாக அதே வெற்றிப்பட நாயகி லட்சுமி மேனனை, கார்த்திக்கு ஜோடியாக்கியுள்ளார்.
கதை
நீ என்ன பெரிய கொம்பனா? என்ற வார்த்தைக்கு ஏற்றார் போல் கார்த்தி ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கும் முரட்டு இளைஞனாக வலம் வருகிறார். செம்மநாடு, வெள்ளநாடு, அரசநாடு என்ற மூன்று ஜில்லாக்களிலும் செம்மநாடு, வெள்ளநாடு ஒன்று சேர்ந்து அவர்களின் சொந்த ஊர்காரர்களையே தலைவராக்கி வருகின்றனர், இதை தட்டி கேட்கும் அரசநாட்டை சேர்ந்த பெரிய தலை ஒன்றை கொல்கிறார்கள்.
அதே அரசநாட்டில் தலை தூக்கும் கார்த்தி யாருக்கும் அடங்காத கொம்பனாக இருந்து வருகிறார். அப்போது செம்மநாட்டை சார்ந்த லட்சுமிமேனனை பார்த்ததும் காதல், அவரை பெண் பார்க்க கார்த்தியின் அம்மா கோவை சரளா செல்ல, ‘என் அப்பா என்னுடன் தான் இருப்பார், அதற்கு சம்மதித்தால் தான், கல்யாணம்’ என்று சொல்ல, திருமணம் சுபமாக அரங்கேறுகிறது.
ஆனால், தன் மாமனாரான ராஜ்கிரணை, கார்த்தி மதிக்காமல் தொடர்ந்து அசிங்கப்படுத்தி வர, ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை செல்கிறது. இதற்கிடையில் ஊரின் பெரும் தலை ஒன்று அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து அரஜாகம் செய்ய, கார்த்தி அந்த கும்பலின் தலைவரை அடித்து விடுகிறார்.
இதனால் கார்த்தியை பழிவாங்க அந்த கும்பல் லட்சுமி மேனனுக்கு செக் வைத்து ‘உண் புருஷனை வர சொல் என்கிறார்கள். இதை அறிந்து அந்த இடத்திற்கு வரும் ராஜ்கிரண், கார்த்தி வந்தால் அவருக்கு தான் பிரச்சனை என்று அவராகவே நடுரோட்டில் அந்த கும்பலை பந்தாடுகிறார். இதனால் கோபமடைந்த அவர்கள் ’உன்னையும் உன் மருமகனையும் கொன்றே தீருவேன்’ என்று கங்கனம் கட்டுகிறார்கள். இந்த உண்மை அறிந்த கார்த்திக்கு, ராஜ்கிரண் மீது அதிக மரியாதை வருகிறது.
இதற்கு அடுத்து பழிவாங்க வில்லன் குரூப் எடுக்கும் முயற்சியை கார்த்தி முறியடித்தாரா? தன் மாமா ராஜ்கிரணை அவர்களிடமிருந்து காப்பாற்றினாரா? என்பது தான் விறுவிறுப்பான மீதிக்கதை.
நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பங்களிப்பு
கொம்பனாக கார்த்தி வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும், பருத்திவீரனில் இடம்பெற்ற அதே தோரணை. அதேபோல் அம்மாவாக வரும் கோவை சரளா, அண்ணனாக வரும் கருணாஸ், தாய் மாமாவாக வரும் தம்பி ராமையா என நம்மை ஒரு குடும்பத்திற்குள் கொண்டு போய் சேர்த்து விட்டார் முத்தையா. லைட்டா விக்ரமன் சார் படத்துல அதிக வன்முறை சேர்த்த மாதிரி ஒரு பீலிங்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் நகர மக்கள் இதுவரை பார்க்காத கிராமத்தை அழகாக கண்முன் கொண்டு வந்துள்ளார். இசை ஜி.வி. பிரகாஷ், என்ன பாஸ் ஹீரோவாகிட்டா மற்ற ஹீரோ படங்களை கண்டுக்க மாட்டீங்களா?
க்ளாப்ஸ்
கார்த்தி-ராஜ்கிரண் கெமிஸ்ட்ரி ஹீரோ, ஹீரோயினை விட நன்றாக ஒர்கவுட் ஆகியுள்ளது. ராஜ்கிரண் அவர்கள் தான் பிறவி கலைஞன் என்பதை நிருபித்துள்ளார். அட நம்ம கோவை சரளாவா இது? என்று கூறுவது போல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார்.
காலரை தூக்கிவிடும், வேட்டியை மடித்து கட்டும் கார்த்தி செம்ம மாஸ் சார், 50 பேரை அடித்தாலும் நம்பலாம் போல. படத்தின் வசனத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும், ’கோவிலுக்கு ஜாதி ஜனத்தோட போகாதீங்க, ஜாதிய விட்டுட்டு ஜனத்தோடு போங்க’ போன்ற வசனம் கைத்தட்ட வைக்கிறது.
பல்ப்ஸ்
குட்டி புலி படத்தின் சாயல் ரொம்ப தெரியுது முத்தையா சார். பிரச்சனை செய்யும் அளவிற்கு படத்தில் எந்த வசனமும் இல்லை என்றாலும், அங்கங்கு ஜாதி குறியீடு தேவை தானா?
ஜி.வி. பிரகாஷ் சார் என்ன கிளைமேக்ஸில் மங்காத்தா பட தீம் மியூஸிக்கெல்லாம் வருது. கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே. கருப்பு நெறத்தழகி தவிர எந்த பாடலும் முடியல சார்.
மொத்தத்தில் குடும்ப ரசிகர்களையும், B, C செண்டர் ரசிகர்களையும் கவர இறங்கி அடித்துள்ளான் இந்த கொம்பன்.
Rating- 3/5
நன்றி cineulagam