ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்

 

ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர்... இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள் ​

ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வோம்.. ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்கள்

எனக்காய் ஜீவன் விட்டவரே... ​ஈஸ்டர் வாழ்த்துக்கள்!

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது.... ஈஸ்டர் வாழ்த்துக்கள் ​

கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை.. ஹேப்பி ஈஸ்டர் 2025

ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும்... ஈஸ்டர் வாழ்த்துக்கள் 2025

தேவன் நல்லவர் நன்மை செய்பவர் சர்வ வல்லவர் அவர் அதிசயமானவர்.... ஈஸ்டர் நாள் நல்வாழ்த்துக்கள்

உயிர்த்த ஞாயிறில் உயிரிழந்தவர்கள் நினைவாக ! ஆறாவது ஆண்டையும் கடந்து செல்லும் ஆறாவடு !! நீதியில்லா நாட்டில் நாதியற்றவர்களின் ஓலம் !! முருகபூபதி


இம்மாதம் சித்திரைப் புத்தாண்டுடன், இலங்கை வரலாற்றில் சில  விடயங்கள் கவனத்திற்குள்ளாகின்றன.

2019 ஆம் ஆண்டு இதே  ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று,  இலங்கையில்  மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும்  மூன்று நட்சத்திர விடுதிகளிலும்   சில தற்கொலைக் குண்டுதாரிகளினால்   நடத்தப்பட்ட  தாக்குதலில் 277 பேர்  கொல்லப்பட்டனர்.

 

நானூறுக்கும் அதிகமானோர்  படுகாயமடைந்தனர்.

40 வெளிநாட்டவர்களுடன்  45 பிள்ளைகளும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

 

ஆயினும்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. 

 

கடந்த ஆறு ஆண்டு காலத்திற்குள் அரசுகளும் மாறின, அதிபர்களும் மாறினார்கள்.  எனினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் அரசு காலத்திலாவது உண்மைகள் கண்டறியப்படுமா? என்பதும் தெரியவில்லை.

 

கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவிக்கு வருமுன்னர்,


 அச்சம்பவம் நடந்த காலத்தில் அந்தப்பதவியில் இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. பிரதமராக இருந்தவர் பின்னாளில் பிரதமராகவும்  ஜனாதிபதியாகவும் மாறிய  ரணில் விக்கிரமசிங்கா.

 

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. குறிப்பிட்ட பதவிகளில் இருந்தவர்கள் தேர்தல்களின் மூலம் மாறினர்.

 

எம்.பி. பதவியே இல்லாமல் இருந்த கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானர்.  அவர் வெளியேறியபோது,  எம். பி. பதவியே இல்லாதிருந்த ரணில் விக்கிரமசிங்கா, சந்தர்ப்ப சூழ்நிலைகளினால்  ஜனாதிபதியானார்.

ஈழப்போராட்டத்தில் பங்கேற்ற முதல் பெண்ணாளுமை புஷ்பராணி நினைவுகள் ! முருகபூபதி


தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற  சகோதரி புஷ்பராணி அவர்கள் கடந்த 17 ஆம் திகதி பாரிஸில் மறைந்துவிட்டார்.  

அண்மைக்காலமாக  அவர் சற்று சுகவீனமுற்றிருந்தார். எனினும், என்னோடு வாட்ஸ் அப்பில் தொடர்பிலிருந்தார்.

தொடர்ச்சியாக தொடர்பிலிருப்பவர்கள், திடீரென எம்மை விட்டுப் பிரியும்போது,  அந்தத் துயரத்தை கடப்பது மிகவும் சிரமமானது. எனினும் நாம் கடந்துதான் செல்லவேண்டும்.

புஷ்பராணி அவர்களை 2019 இல் முதலில் பாரிஸில் நடந்த எனது சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுக  அரங்கிலும், பின்னர் கடந்த 2023 இல்  அவரது இல்லத்திலும் சந்தித்தேன்.

இறுதியாக நடந்த சந்திப்பிற்கு தோழர் ராயப்பு அழகிரி என்னை அழைத்துச்சென்றிருந்தார்.

தனது வாழ்வில் வசந்தத்தை காணாமல், வலிகளை மாத்திரமே அனுபவித்த புஷ்பராணி போன்ற பெண் ஆளுமைகளை எமது சமூகம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.  

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கி


ஐம்பத்தி மூன்று ஆண்டுகள்  நிறைவடைந்துள்ள காலப்பகுதியில்      ( 1972 – 2025 )  நாம் வாழ்கிறோம்.  தமிழ் ஈழ விடுதலைக்காக  முதல் முதலில் களமிறங்கிய பெண்தான் புஷ்பராணி!

இலங்கையில் ஏற்கனவே 1915 இல் கண்டி கலவரமும், 1958 இல் தென்னிலங்கையில் மற்றும் ஒரு இனக்கலவரமும் வந்திருந்தாலும்,  1965 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசும், தமிழ்க்காங்கிரஸும் அரசமைத்து தேன்நிலவு கொண்டாடினர்.

ஆனால்,  அந்த ஐக்கிய தேசியக்கட்சி 1970 இல் தோல்விகண்டபோது, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் சமசமாஜக்கட்சியும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து அரசை அமைத்தது. அதற்கு மக்கள் அரசாங்கம் என்று பெயரையும் சூட்டிக்கொண்டது.

உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற ஶ்ரீமாவின் காலத்தில்தான் தென்னிலங்கையிலும் வட இலங்கையிலும் விடுதலை வேட்கை நிரம்பிய பெண்கள் சித்திரவதைக்குள்ளாகத் தொடங்கினர்.

1970 ஆம் ஆண்டு மேமாதம் நடந்த பொதுத்தேர்தலில், 90 தொகுதிகள் ஶ்ரீலசு. கட்சிக்கும், 19 தொகுதிகள் லங்கா சமமாஜக்கட்சிக்கும், 6 தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கிடைத்தன. டட்லி சேனநாயக்காவின் ஐ. தே. க. 17 தொகுதிகளில்தான் வென்றது.

தமிழரசுக்கட்சிக்கு  13 ஆசனம், தமிழ்க்காங்கிரஸ் மூன்று ஆசனம்.

பார் போற்றிட வாழ்வாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சி மண்டிலம்)


உன்றன் வழிதான் ஒழுக்கமாய் என்றும் அமைந்தே இருந்திடில் உன்னைப் போற்றும் உலகம்தான், பொன்னைப் போன்றே பொலிந்திடு! (1) உன்றன் எண்ணமும் உயர்வாய் என்றும் நிலைத்தே இருந்திடில், நன்றே செய்வாய் நாட்டினிற்கே நன்மை எங்கும் நிலைத்திட! (2) தன்னலம் தன்னைத் தவிர்த்தே நன்றாய் பிறர்நலம் நாடுவோர் இன்றும் எம்மிடை இருக்கின்றார் நன்றே அவர்வழி நடந்திடு! (3) நிலமகள் அளித்தநல் லறிவே உலகினில் காக்குமே உன்னையும் உலகிலுன் மாண்பை உயர்த்திநீயும் நிலமதில் வாழ்வாய் நீடு! (4)

வாழ்வும் வளமும்:



-சங்கர சுப்பிரமணியன்.
   





முதலில் இந்த கட்டுரை எழுத தளம் அமைந்ததற்கு காரணம் நண்பர் முருகபூபதி அவர்களே என்பதால் அவர்களுக்கு என் 

நன்றியைத் தெரிவித்து கட்டரையை எழுதுகிறேன்.


நண்பர் முருகபூபதி அவர்கள் நம் பெயர் நிலைத்திருக்க வேண்டுமானால் வீடுகட்ட வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் அல்லது ஒரு நூலாவது வெளியிட வேண்டும் என்று விவேகானந்தர் குறிப்பிட்டதாக எழுதியிருந்தார்.

விவேகானந்தர் ஒரு துறவியாக இருந்தும் நிலையாமையைப் பற்றிக் குறிப்பிடாமல் நிலையற்றவை பற்றி குறிப்பிட்டதை 

நினைக்கும்போது விந்தையாக உள்ளது. தத்துவஞானிகள் அனைவருமே வாழ்வு நிலையற்றது என்பதை ஏற்பவர்கள்தான். வாழ்வும் புகழும் நிலையற்றது என்பதற்கு சான்றாக ஒன்றை சொல்கிறேன்.


தியாகராஜ பாகவதர் நடித்த திரைப்படமான ஹரிதாஸ் மதுரை சிந்தாமணி திரையரங்கில் மூன்று தீபாவளி கடந்து ஓடியது. இன்று ஒருசில படங்களே நூறு நாட்கள் ஓடுகின்றன. அல்லது ஓடவைக்கப்படுகின்றன. இன்றுள்ள சிறுவர்களில் யாரிடமாவது தியாகராஜ பாகவதரை பற்றி கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாகத் தெரிந்திருக்காது. தலைசிறந்த எழுத்தாளர் மு. வரதராசனார் எழுதிய அற்புதமான நாவல் அகல் விளக்கு. அன்று பாலாற்றங்கரையில் என்று தொடங்கும் அந்த நாவலின் வரிகள் இன்றும் என் நினவில் மோதிக்கொண்டிருக்கின்றன.

வாண்டுமாமா - எங்கள் பால்யகாலத்துக் கதை சொல்லியின் நூற்றாண்டு

 


எங்கள் அம்மாவின் இளமைக்காலத்துப் பொழுதுபோக்கை, எங்கள் வீட்டின் புத்தக அறை மெய்ப்பிக்கும். ஆசிரியையாக மலையகத்துக்குச் சென்ற காலத்தில் இருந்து அவருடைய பேச்சுத்துணையில் முதல் ஆள் கல்கி, ஆனந்த விகடன் தான். அந்தக் காலத்துக் கல்கி, ஆனந்த விகடன் சஞ்சிகைகளில் வந்த கதைகளைத் திரட்டிப் பின்னர் கோர்த்து ஒவ்வொரு கதைகளின் சித்திர அட்டைகளை முகப்பில் ஒட்டி அடுக்கி வைத்திருப்பார்.


எங்கள் வீட்டில் எந்த அறைக்கும் சுதந்திரமாக உலாவலாம் எதையும் எடுக்கலாம் ஆனால் அந்தப் புத்தகக் கட்டுகளை எடுப்பதென்றால் அம்மா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறப் பகீரதப் பிரயத்தனம் தான் செய்ய வேண்டும். அப்பாவும் புத்தகப் பிரியர் என்றாலும் அவருடைய எழுத்தாளர்கள் கல்கி, ஜானகிராமன், அகிலன் என்று இருக்கும். அம்புலிமாமா, ரத்னபாலா, பாலமித்ரா என்று அவ்வப்போது புதுசு புதுசாக வந்து கொண்டிருக்கும் சிறுவர் சஞ்சிகைகளை விழுந்தடித்துப் படித்துச் செரிமானம் அடைவதற்குள் இன்னொரு புத்தகத்தின் மேல் கை படரும். அப்படியான ஒரு நாளின் தான் என் தொல்லை தாங்காமல் அம்மா தான் கட்டி வைத்த புத்தகச் சொத்தில் இருந்து "ஓநாய்க் கோட்டை" என்ற சித்திர நாவலை எடுத்துத் தந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. "புத்தகத்தை ஒரு சிறு கீறலும் இல்லாமல் படிச்சு முடிச்சுட்டுக் குடுத்துடவேணும்" என்று என் அம்மாவின் கட்டளையெல்லாம் ஒரு காதில் போட்டாச்சு.

வாசனைத் திரவியம் – கதை - கே.எஸ்.சுதாகர்


நாங்கள் மெல்ரன் என்னும் பிரதேசத்துக்கு, புதிதாகக் குடிபெயர்ந்து

போனோம். வீட்டிற்கு வந்த அன்று இரவு, கராஜ்ஜிற்குள்ளும் கார்டன்

செட்டிற்குள்ளும் பலத்த ஆரவாரம் கேட்டது. ஏற்கனவே அங்கு

குடியிருக்கும் எலிகள், புதிதாக வந்திருந்த எம்மை வரவேற்று மகிழ்ச்சி

ஆரவாரம் செய்தன.

பகல் முழுவதும் வீடு மாறிய களைப்பில் இருந்த எங்களுக்கு, அவர்களின்

ஆரவாரம் எரிச்சலைத் தந்தது. இரவு முழுவதும் உறங்கவிடாமல்

அவர்களின் கொண்டாட்டம் நடந்தது.

எங்களுக்கும் அவர்களுக்குமிடையே இருந்த பொதுவான சுவரைத் தட்டி,

அவர்களைக் கொஞ்சம் சத்தம் போடாமல் இருக்குமாறு கேட்டுக்

கொண்டோம். சிறிது நேரம் அமைதி காத்த அவர்கள், `கறக்… கறக்’ என்று

சுவரைச் சுரண்டி தங்கள் இருப்பை நிலைநாட்டினார்கள். மனைவி

அவர்களின் பாணியில், தானும் சுவரை விறாண்டி, உள்ளே மூன்று பெரிய

எலிகள் இருக்கின்றோம் எனச் சமிக்கை செய்தார். கொஞ்ச நேரம்

பயந்துபோய் இருந்தார்கள். பின்னர் மீண்டும் அவர்கள் தமது

விளையாட்டைத் தொடங்கினார்கள். இரு பகுதியினருக்குமிடையே

உக்கிரமான போர் விடியும் வரை தொடர்ந்தது.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 2025

 




 



விழா நாயகன்:-- 

தமிழ் நாட்டில்லிருந் து வருகை தந்து சரித்திரப் பிரசித்திபெற்ற மாவிட்டபுரத்தை இருப்பிடமாக்கி திருப்பொலிய வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய பணி ஆற்றிய ‘மாவைக் கவுணியன்’

 சிவத்திரு பண்டிதமணி க. சு. நவதீத கிருஷ்ணபாரதியார் அவர்கள்





திகதி :- 24 - 05 – 2025  சனிக்கிழைமை

இடம் :- அருள்மிகு சிட்னி முருகன் கோயில் கலாசார மண்டபம்

நேரம் - மாலை 4.45 மணி

(பார்வையாளர் தயவு கூர்ந்து 4.30 மணிக்கு அரங்கிற்கு வருகைதந்து விழாவினைச் சரியாக 4.45 மணிக்கு ஆரம்பிக்க உதவவும்)

சிறப்புப் பேச்சாளர்கள் :-

 Ø  கலாநிதி சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்கள்

Ø  Ø திருமதி கலையரசி சின்னையா அவர்கள் (முன்னாள் யாழ்.பல்கலைக்கழகச் சிரேஷ்ட தமிழ் விரிவுரையாளர்)

Ø   Øஇன்னிசை விருந்து:- மருத்துவ கலாநிதி யதுகிரி லோகதாசன் அவர்கள்

அன்புக் கரங்கள் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 இரவு , பகல் பாராமல் ஏராளமான படங்களில் நடித்துக்


கொண்டிருந்த சிவாஜி தனது சொந்த நிறுவனங்களினால் தயாரிக்கப் பட்ட படங்களிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நடித்துக் கொண்டிருந்தார். அவரின் குடும்பம் விரிவடைய, விரிவடைய அவரின் பட நிறுவனங்களும் புதிது புதிதாக உருவாகி கொண்டிருந்தன.

 

ஆரம்பத்தில் தாயார் ராஜாமணி பேரில் ராஜாமணி பிச்சர்ஸ் பட கம்பனி ஆரம்பித்து பாசமலர் படத்தில் நடித்தவர் பின்னர் மனைவி கமலா பேரில் கமலா பிச்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கி அன்னை இல்லம் படத்தில் நடித்தார். இடையில் பிள்ளைகள் பிரபு, ராம்குமார் பேரில் பிரபுராம் பிச்சர்ஸை நிறுவி விடி வெள்ளி படத்தில் நடித்தார். இப்போது மகளின் முறை. தன் மகள் சாந்தி பேரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி அவர் நடித்து 1965ம் வருடம் வந்த படம்தான் அன்புக் கரங்கள். ஒன்றை சொல்லியாக வேண்டும் , இந்த நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்களே தயாரிப்பாளர்கள் என்றிருந்த போதும் அந்த தயாரிப்புகளில் சிவாஜியின் மறை கரம் ஒன்று இருக்கவே செய்தது. அந்த வகையில் சிவாஜியின் நெருங்கிய சிநேகிதரான பெரியண்ணா இந்தப் படத்தை தயாரித்தார்.
 

படத்துக்கு கதை, வசனம் எழுதியவர் பாலமுருகன். அவருக்கு இதுவே

முதல் படமாகும். பாசமலர் பாணியில் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை கருவாக கொண்டு கதை எழுதி அதற்கு வசனங்களையும் எழுதியிருந்தார். ஆனால் வசனங்களில் இருந்த நேர்த்தி கதையில் இருக்கவில்லை. பெற்றோர்கள் இன்றி வாழும் சிவராமன் தன் தங்கை ஆனந்தியை உயிருக்கு உயிராக வளர்கிறான். ஆனால் அவளோ அண்ணனுக்குத் தெரியாமல் தன்னுடன் படித்த கண்ணனை காதலிக்கிறாள். இந்தக் காதலில் தன்னையே பறி கொடுத்தும் விடுகிறாள். இவளின் காதலை பற்றி அறியும் சிவராமன் ஆத்திரத்தில் கண்ணனை தாக்கி விடுகிறான். அவன் இறந்து விட்டதாக தீர்மானிக்கும் சிவராமன் ஒரு கூட்ஸ் வண்டியில் அவன் உடலை தூக்கி போட்டும் விடுகிறான். இந்த விஷயம் எதுவும் தெரியாத ஆனந்தி கண்ணன் தன்னை கை விட்டு விட்டதாக நினைக்கிறாள். சில நாட்கள் கழித்து ஆனந்தி தாயகப் போகும் விஷயம் தெரிய வரவே அதிர்ந்து போகிறான் சிவராமன். தன்னால் அண்ணனுக்கு கெட்ட பேர் வரக் கூடாது என்று என்னும் ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதற்கு இடையில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயிருந்த சிவராமன் , ஆனந்தியின் தாய் திடீரென்று வந்து சேர்கிறாள். வந்தவள் தன் மகள் ஆனந்தி எங்கே என்று மகனை கேட்கிறாள். நடந்தவற்றை தாயிடம் சொல்லத் தயங்கும் சிவராமன் தன்னை தீவிரமாக காதலிக்கும் அன்னத்தை இவள்தான் ஆனந்தி என்று தாயிடம் அறிமுகப் படுத்துகிறான்.

இலங்கைச் செய்திகள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கிறோம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி

உதய கம்மன்பில பிள்ளையானை சந்தித்தது சட்டத்தரணியாகவா?, அரசியல்வாதியாகவா? - அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ

பிள்ளையான் கண்ணீருடன் பல விடயங்களை என்னிடம் குறிப்பிட்டார் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது - கம்மன்பில

வடக்கு கிழக்கில் சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் ஆலயங்களை விடுவிக்கவேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள்

நுவரெலியா கிரகரி வாவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சிஐடியிடம் சமர்ப்பிப்பு  



யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க முயற்சிக்கிறோம்; இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் - ஜனாதிபதி

Published By: Vishnu

17 Apr, 2025 | 09:14 PM


(இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

உலகச் செய்திகள்

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் - ஒப்பந்தம் கைச்சாத்தானது.

அமெரிக்க சீன வர்த்தக போரின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும் எதிரொலிக்கும் - இருநாடுகளிற்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் முற்றாக செயல் இழக்கும் - சிங்கப்பூர் பிரதமர்

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கான நிதியை நிறுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

சூடானில் அகதி முகாம் மீது தாக்குதல் : 20 குழந்தைகள் உள்ளிட்ட 114 பேர் உயிரிழப்பு! 



ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 

19 Apr, 2025 | 10:01 AM

ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. 

 இதேவேளை, இந்த தாக்குதலில் இதுவரை 171 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயற்படும் ஹவுத்தி அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் அமெரிக்காவின்  சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுத்தி அமைப்பு தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.  

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 48 "ராஜம் கிருஷ்ணனின் எழுத்துலகம்"


நாள்:
         சனிக்கிழமை 26-04-2025       

நேரம்:     

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

 

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

சிறப்புப் பேச்சாளர்கள்:

எம்.எம்.ஜெயசீலன்

இரா. பிரேமா

பா.இரவிக்குமார்

லறீனா அப்துல் ஹக்

இரா.செல்வி

ஒருங்கிணைப்பு:

அகில்  சாம்பசிவம்

மேலதிக விபரங்களுக்கு: -  001416-822-6316

சிட்னியில் சித்திரைத் திருவிழா 05/05/2025