மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !


ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் ஆசிரியர் பாபி கோஷ், கடந்த செப்.11, 2017 அன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தனது சொந்தக் காரணங்களுக்காக அமெரிக்கா திரும்பவிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.
மோடியுடன் ஷோபனா பார்த்தியா
ஆனால் பாஜக தரப்பிலிருந்தும், அரசு அதிகாரிகள் மட்டத்திலிருந்தும் கொடுக்கப்பட்ட நிர்பந்தங்களின் காரணமாகத்தான், பத்திரிக்கை நிர்வாகத்தால், அவர் இராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என ’தி வயர்’ இணையதளம் தெரிவிக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் கோஷுடன் பணிபுரிபவர்களும் அவ்வாறே கருதுவதாகக் கூறுகிறது.
பாபி கோஷ் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் முதல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். இதற்கு முன் ‘குவார்ட்ஸ்’ என்ற பத்திரிக்கையின் நிர்வாக இயக்குனராகவும், ’டைம்’ பத்திரிக்கையின் சர்வதேச பதிப்புக்கு ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ஆசிரியராக பதவியேற்ற பின்னர், பல புதிய புதிய விசயங்களைச் செயல்படுத்தினார்.

கார்த்திகா கணேசரின் நாட்டிய நிகழ்வு 14 10 2017


சனிக்கிழமை நடை பெரறும் இந்த நாட்டிய நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் . நுழைவு இலவசம் . நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் 


இலங்கையில் பாரதி - அங்கம் 37 முருகபூபதி


"சந்திதெருப் பெருக்கும் சாத்திரம்  கற்போம், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம்"   என்று பாடியிருப்பவர் பாரதியார்.
சந்தி தெருப்பெருக்குவதற்கும், சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவதற்கும்  என்ன  தொடர்பிருக்கிறது...? என்றுதான் நாம் கேட்போம்.  ஆனால், இரண்டுக்குமிடையே தொடர்பிருக்கிறது என்பதை  தீர்க்கதரிசனமாகச்சொன்னவர்  பாரதியார். இரண்டுமே தொழில்கள்தான்.
சந்திதெருப்பெருக்கும் தொழிலை செய்பவர்களை தோட்டிகள் என்றும் தீண்டத்தகாதவர்கள்  என்றும்  புறம்ஒதுக்கியது  கீழைத்தேய சமூகம். ஆனால்,   அந்தத்தொழிலுக்கும்  பயிற்சி இருக்கிறது என்று சொன்னது  மேலைநாட்டு கல்வி முறை.
சந்திரனுக்கு சென்று கால் பதிப்பதற்கும்  விஞ்ஞானக்கல்வி தேவைப்பட்டது. எத்தனையோ வருடங்களுக்கு முன்னர், தீர்க்கதரிசனமாக செய்யும் தொழிலே தெய்வம் என்ற வாக்கிற்கு அமைய, அறிவதற்காக கற்றல், செயலாற்றுவதற்காக கற்றல், பிறரோடு சேர்ந்து வாழக்கற்றல், சுயஆளுமையுடன் வாழக்கற்றல் என்ற பிற்கால யுனெஸ்கோவின்  சிந்தனையை அன்றே மக்களிடம் விதைத்தவர் மகாகவி பாரதி.
இந்த உண்மைகளை தொகுத்து வழங்கியிருப்பவர் இலங்கையின் மூத்த இலக்கிய விமர்சகர் கலாநிதி ந. இரவீந்திரன்.
இலங்கையில் பாரதி இயல் ஆய்வுத்துறையில் கலாநிதி ந. இரவீந்திரனின் பங்களிப்பும் முக்கியமானது. இவர் எழுதிய பாரதியின் மெய்ஞானம்  என்ற நூல் பற்றி முன்னர் ஒரு அங்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
இந்திய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, பாரதியின் கல்விச்சிந்தனைகளை தொகுத்து வழங்கியிருப்பவர்தான் கலாநிதி ந. இரவீந்திரன். இதுவரையில் நான்கு பதிப்புகளை கண்டுவிட்ட இந்நூலில் பாரதியார்,  சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், சுதேசமித்திரன் முதலான பத்திரிகைகளில் எழுதிய கல்வி சார்ந்த கட்டுரைகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் இரவீந்திரன்.
கல்வியில் மறுமலர்ச்சி தோன்றவேண்டுமென்பதற்காக யுனெஸ்கோ முன்வைத்த கோட்பாடுகளை பாரதியின் கல்விச்சிந்தனைகளிலிருந்தே காணமுடிகிறது என்பதை நிரூபிக்கின்றது  இந்தத்தொகுப்பு நூல்.

"திருத் தொண்டர் மாண்பு" சொற்பொழிவுகள்

பயணியின் பார்வையில் அங்கம் -- 16 1925 இல் தோன்றிய இலங்கை வானொலியின் பொற்காலமும் இன்றைய காலமும் முருகபூபதி


-->இலங்கை வானொலி தொடங்கப்பட்டு 92 வருடங்களாகின்றன. தொலைக்காட்சியின் வருகைக்குப்பின்னர் உலகெங்கும் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அதன்பின்னர் கணினியின் தோற்றத்தையடுத்து இணையத்தளத்தின் அறிமுகம் வந்ததும்,  மேலும் வானொலி  நேயர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆயினும், இன்றும் வானொலி நேயர்களின் ரசனைக்கும் பயன்பாட்டிற்கும் வானொலிகள் இயங்கியவண்ணமிருக்கின்றன.
வாகனத்தை செலுத்திக்கொண்டே வானொலியை இயக்கவிட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பவர்கள், கைத்தொலைபேசியில் கேட்பவர்கள்,  இணையத்தின் வழியே கேட்பவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை.
இந்தப்பின்னணிகளுடன்தான் கொழும்பு ரேடியோ என்ற பெயரில் 1925  ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட இலங்கை வானொலிதான் உலகிலேயே இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் பெற்றிருக்கிறது.
நான் இலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் தொலைக்காட்சி இருக்கவில்லை. இலங்கை வானொலியின் தேசிய சேவையும், வர்த்தகசேவையும் இலங்கையில் மூவின மக்களையும் பெரிதும் கவர்ந்திருந்த ஊடகமாகத்திகழ்ந்தது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டினரும் விரும்பிக்கேட்ட நிகழ்ச்சிகள் இலங்கை வானொலியில்தான் ஒலிபரப்பாகின.
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் ஒரு திரைப்படத்தில் இலங்கைவானொலி அறிவிப்பாளர் மயில்வாகனம் பற்றிப்பேசுவார். அந்தளவுக்கு தமிழகத்து நேயர்களையும் கவர்ந்திருந்த இலங்கை வானொலியில் எனது குரலும் ஒலிக்காதா...?  என்று ஏங்கியிருந்த காலம் ஒன்றிருந்தது.
எமது ஊருக்கு, கலஞர்  'சானா'  சண்முகநாதன் தமது குழுவினருடன் வந்து,  குதூகலம், மத்தாப்பு முதலான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிபரப்பும்போது நான் மாணவன். அந்த நிகழ்ச்சி எங்கள் பாடசாலையில் 1962 ஆம் ஆண்டில் நடந்தது. 

உலகச் செய்திகள்


லாஸ் வெகாஸ் துப்பாக்கி சூடு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு  : 200 பேர் காயம்

பிரான்ஸில் 'அல்லாஹு அக்பர் ' எனக் கூறியபடி கத்திக்குத்து : இரு பெண்கள் பலி : உரிமை கோரியது ஐ.எஸ். அமைப்பு

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க விஜயம்

 59 பேரைக் கொன்று, 527 பேரை காயப்படுத்திய சூத்திரதாரி யார் தெரியுமா?
லாஸ் வெகாஸ் துப்பாக்கி சூடு : உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு  : 200 பேர் காயம்

02/10/2017 அமெரிக்காவின் லாஸ் வெகாஸில்  இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  50 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைச் செய்திகள்


ராஜீவ் ராஜேந்திரன் மரணம் குறித்து தவறான தகவல்கள்; ஆஸி. தூதரகம் விளக்கம்

ரோஹிங்யா விவகாரம் குறித்து சவூதியில் உயர் மட்டப் பேச்சு

புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடம்

சுற்றுலா தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்...!
ராஜீவ் ராஜேந்திரன் மரணம் குறித்து தவறான தகவல்கள்; ஆஸி. தூதரகம் விளக்கம்
பப்புவா நியூகினியின் மனுஸ் தீவில் அண்மையில் மரணமடைந்த இலங்கைத் தமிழரின் பூதவுடலை இலங்கைக்குத் திருப்பியனுப்ப, அவரது உறவினர்களிடம் பணம் கோரியதாக ஊடகங்களில் எழுந்த தகவல்களை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலியத் தூதரகம் மறுத்திருக்கிறது.

தமிழ் சினிமா

கறுப்பன்


தமிழ் சினிமா ஹீரோக்கள் மாஸ் ஹீரோவாக எடுக்கும் அவதாரம் போலீஸ் அல்லது கிராமத்து கதைக்களம். இந்த இரண்டிலுமே நடித்து ஹிட் அடித்துவிட்டால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள் தங்களை என்று ஒரு நம்பிக்கை. அப்படி சேதுபதியில் போலீஸாக ஜெயித்த விஜய் சேதுபதி, கிராமத்து இளைஞனாக கருப்பனிலும் ஜெயித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

Karuppanவாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் இருந்து ஆரம்பிக்கின்றது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு பசுபதி, அவருடைய காளையை இதுவரை யாரும் அடக்கியது இல்லை என்ற கர்வத்தில் இருக்க, அவரிடம் வாயை கொடுத்து இந்த காளையை அடக்குபவருக்கே தன் தங்கையை திருமணம் செய்து வைக்கின்றேன் என சொல்ல வைக்கின்றனர்.
அதை தொடர்ந்து அந்த காளையை விஜய் சேதுபதி அடக்கி ஒரு சில பிரச்சனைகளை கடந்து தான்யாவை கரம் பிடிக்கின்றார். பசுபதிக்கும் ஒரு வீரனுக்கு தான் தன் தங்கையை கொடுக்கின்றோம் என மன நிம்மதியுடன் இருக்கின்றார்.
ஆனால், அதே வீட்டில் சிறு வயதில் இருந்து வளரும் பசுபதி மனைவியின் தம்பி பாபி சிம்ஹாவிற்கு தான்யா மீது காதல் இருக்க, இவர்களை பிரித்தாவது தான்யாவுடன் வாழவேண்டும் என்று அவர் ஆட்டத்தை ஆரம்பிக்க, பிறகு என்ன ஆகின்றது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி இதுவரை சென்னை வட்டார மொழியில் கலக்கியவர் மதுரை தமிழிலும் மிரட்டுகின்றார். உருவம் பெரிதாக இருந்தாலும் கிராமத்தில் இருப்பவர்களை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகின்றார். குடித்துவிட்டு பாபி சிம்ஹா அனுப்பும் ஆட்களை நடனமாடிக்கொண்டே அடிக்கும் இடத்திலும் சரி, தான்யாவுடன் ஒரு கணவனாக அவர் செய்யும் கலாட்டாவும் சரி எப்போதும் போல் சூப்பர் ஜி சூப்பர் ஜி.
தான்யா என்ன தான் முன்பு இரண்டு படம் நடித்திருந்தாலும், இந்த படத்திற்கு பிறகு தான் மார்க்கெட் சூடுபிடிக்கும் போல, கணவராக இருந்தாலும் தவறு என்ற இடத்தில் விஜய் சேதுபதியை செல்லமாக அதட்டும் இடத்தில் எல்லோரையும் கவர்கின்றார். அடுத்தடுத்து பல முன்னணி ஹீரோக்களின் படத்தில் இனி இவர் கமிட் ஆனாலும் ஆச்சரியமில்லை.
இறைவி படத்தில் என்ன செய்தாரோ அதை தான் இதிலும் செய்துள்ளார் பாபிசிம்ஹா. ஆனால், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல ரோல், திருமணமாகி சென்றாலும் அடைந்தே தீருவேன் என்று அவர் செய்யும் வில்லத்தனம், கடைசி நொடியில் கூட ஐ லவ் யூ என்று அவர் சொல்வது செம்ம. ஹீரோ ஆசையை ஒதுக்கி இப்படி தேர்ந்தெடுத்து நடித்தால் மீண்டும் நல்ல எதிர்காலம் தான்.
அதே நேரத்தில் ஒரு வில்லன் என்றால் நேரடியாக ஹீரோவிடம் மோதினால் தான் அனல் பறக்கும். ஆனால், பாபி சிம்ஹா கிளைமேக்ஸ் வரை விஜய் சேதுபதியிடம் நட்பாகவே தான் இருக்கின்றார். இருவருக்குமிடையே இன்னும் கொஞ்சம் மோதல் அதிகமாகியிருந்தால் படம் மேலும் பரபரப்பாகியிருக்கும்.
படத்தின் ஆரம்பத்திலேயே ஜல்லிக்கட்டு காட்சிகளை காட்டுகின்றனர். அதை எடுத்த விதம், CG Work என படக்குழு மிகவும் சிரமப்பட்டுள்ளது. ரேணிகுண்டா படத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் எங்கு சென்றார் என்று தேட, கருப்பனாக மீண்டு வந்துள்ளார்.
சக்திவேலின் ஒளிப்பதிவில் மதுரை பகுதிகளின் சுற்று வட்டாரத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். அதிலும் ஜல்லிக்கட்டு காட்சி, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டல், மிகவும் ஏமாற்றியது டி.இமான் தான்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதி- தான்யா இருவருக்குமிடையே உள்ள காட்சிகள், மிக யதார்த்தமாக பதிவு செய்துள்ளனர்.
இத்தனை நாட்கள் ஒரு தரப்பினரை மட்டும் திருப்திப்படுத்திய விஜய் சேதுபதி இதில் B,C என இறங்கி அடித்துள்ளார்.

பல்ப்ஸ்

எப்போதும் கேட்டவுடன் பிடிக்கும் இமான் பாடல்கள் இதில் மிஸ்ஸிங்.
ஹீரோ- வில்லனுக்கான மோதலை கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் சென்னை விஜய் சேதுபதியாக மட்டுமில்லை, மதுரையிலும் மீசையை முறுக்கியுள்ளார்.

நன்றி CineUlagam