தென் துருவ தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆர்பாட்டம்

                                                                                                          - நாதன் - 
• அவுஸ்திரேலியாவிற்கான ஸ்ரீ லங்கா தூதரின் நியமனத்தை எதிர்த்து தமிழர்கள் போராட்டம்


• போர் குற்றவாளி குற்றம் சாட்டப்படும் கடற்படை தளபதி இங்கு தேவை இல்லை என தலை நகர் கான்பெர்ராவில் ஆர்பாட்டம்

• அவுஸ்திரேலிய பிரசை பாலித கொஹோன மீதும் போர் குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை



அவுஸ்திரேலிய தமிழர்களால் தென் துருவ தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் (Australian Federation of Tamil Associations - AFTA ) தலைமையில் சிட்னி ஈழத் தமிழர் கழகமும் கான்பெர்ர தமிழ் சங்கமும் இணைந்து இந்த ஆர்பாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்தானர்.

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதி வணக்க நிகழ்வு

.
தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் வணக்கநிகழ்வுகள் சிட்னியிலும், மெல்பேணிலும் மிகவும் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா சிட்னியில்  ஹோம்புஸ் ஆண்கள் உயர்தரப் பாடசாலையில்  23.02.2011 பி.. 7.15 மணிக்கு தமிழர்  ஒருங்கிணைப்புக்குழுசிட்னிப் பொறுப்பாளர்  திரு ஜனகனின் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
 அன்னையின் உறவினரான திருமதி கனகாம்பிகை அற்புதநாதன் அவர்கள் தீபத்தை ஏற்ற திரு ஜெகதீஸ்வரன் அவர்கள்மலர் அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
 மண்டபம் நிறைந்த நிலையில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எமது தேசத்தின் தாய்க்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினர்.

இலங்கைச் செய்திகள்

.
மக்கள் கதறியழ பார்வதி அம்மாளின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்




யாழ்நகர் நிருபர் : ஆயிரக்கணக்கான மக்கள் கதறியழ, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாவின் பூதவுடல்  செவ்வாய்க்கிழமை மாலை வல்வெட்டித்துறை ஊறணி மயானத்தில் தீயுடன் சங்கமமானது.

உலகச் செய்திகள்


அடக்குமுறைகளை மீறி மத்திய கிழக்கு முழுவதும் பரவும் மக்கள் எழுச்சிகள்

சர்வாதிகார மேற்கத்தேய ஆதரவு பெற்ற ஆட்சியாளர்கள் மிருகத்தனமான படுகொலைகளை நடத்தியும்கூட மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் இராணுவத்தினருடனும் பொலிஸுடனும் கடுமையான மோதல்களும் தொடர்ந்தன. கடுமையான தெரு மோதல்களும் பல இறப்புகளும் நடந்த பஹ்ரைன்,லிபியா மற்றும் யேமன் நாடுகளைத் தவிர அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் மற்ற அமெரிக்க வாடிக்கை நாடுகளான சவூதிஅரேபியா,குவைத் மற்றும் ஜோர்தானிலும் நடைபெற்றன.

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
எனது இலங்கைப் பயணம் - பகுதி 11 





நிலாவெளி சென்றபோது வீதிகள் மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. வீட்டுத்திட்டத்தில் பல வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அவை அமைக்கப்பட்டிருந்த முறை ஒரு திட்டமிட்ட குடியேற்ற அமைப்பாக காணப்படுகின்றது. தண்ணீர் வசதிக்காக கூரைமேல் வைக்கப்பட்டுள்ள நவீன தண்ணீர்தாங்கிகள் சோலா பவர் மின்சாரம். நெடுக்கும் குறுக்குமான வீதி இணைப்புக்கள் என்று வடிவமைக்கப் பட்டுள்ளதை பார்த்தபோது மீண்டும் முல்லைத்தீவில் அவசர அவசரமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் நிலமை வேதனையாக இருந்தது. எங்கும் பச்சைப் பசேலென காணப்படுகின்றது. குறிப்பாக கமத்தொழில் நிலையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குட்டையான பப்பாசி மரங்கள் காய்த்திருக்கும் அழகு மகிழ்வை தருகிறது. இது போன்ற பழவகைகளை எல்லா இடங்களுக்கும் அறிமுகப்படுத்தினால் விவசாயம் பார்க்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்மட வாய்ப்புள்ளது. 

ATBC ஊடாக அவுஸ்ரேலிய மக்களின் வன்னிக்கான உதவி


.
பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் காலணிகள் வழங்கும் விழா



முல்லைத்தீவு மாவட்டம் திருமுறிகண்டியைச் சேர்ந்த இந்து வித்தியாலய மாணவ மாணவிகளுக்கான கொப்பிகள் மற்றும் காலணிகள் வழங்கும் வைபவம் கடந்த 21.02.2011 திங்கட்கிழமையன்று நடைபெற்றது.
வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் புலம்பெயர் உறவுகளிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினரின் அனுசரணையுடன் புலம்பெயர் உறவுகளின்மூலம் ரூ269,000 நிதிதிரட்டப்பட்டு  அந்தத்தொகையில் மேற்படி கொப்பிகள் மற்றும் காலணிகள் என்பன கொள்வனவு செய்யப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

யுத்தத்தின் பின் இலங்கைப் பெண்களின் வாழ்வு நிலை. - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம.

.
ஓரு நாட்டில் உள்ள பெண்களின் பொருளாதார, அரசியல் வாழ்வின் நிலைப்பாடுகள்; எப்படி இருக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பதில் அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலை பொருளாதார, சமுகவாழ்க்கை நிலைகள் எப்படி இருக்கின்றன என்பதில் தங்கியிருக்கின்றன.

உலகத்தில் நடந்த பாரிய விடுதலைப்போராட்டங்கள், புரட்சிகளின்பின் பெண்களின் நிலையில் ஏற்படும் பல தரப்பட்ட மாற்றங்களும் இலங்கையிலும் நடந்து கொண்டிருக்கின்றன. உயிர் அழிவுகள்,

எஸ்.பொவுக்கு இயல் விருது - அ.முத்துலிங்கம்

.
2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி கே.கணேஷ் வெங்கட் சாமிநாதன் பத்மநாப ஐயர் ஜோர்ஜ் எல் ஹார்ட் தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி போன்றவர்களைத் தொடர்ந்து விருதுக்குரியவராக இவ்வருடம் தேர்வு செய்யப்பட்டிருக்கும் எஸ்.பொ அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கியத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

காதுகளில் இன்னும் கூட ஒலிக்கிறது அந்த சிம்மக்குரல்


.
இறுதி வரை ~ஹிற்' பாடல்கள் தந்தவர் மலேசிய வாசுதேவன்

பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் கடந்த ஞாயிறன்று சென்னையில் காலமானார். அவருக்கு இறக்கும் போது வயது 70.

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவரான மலேசியா வாசுதேவன், எவ்வளவு கடினமான பாடலையும் அழகாகப் பாடிய அசாத்திய திறமைசாலி, இவரது தமிழ் உச்சரிப்பு அட்சர சுத்தமாக இருந்ததே, இவர் சினிமா துறையில் பிரபலமடைய காரணமாக அமைந்தது.

மதிப்பு கூட்டு(ம்) வரி - மஷூக் ரஹ்மான்


.                       
                                                                                                          கட்டுரை – 5    மஷூக் ரஹ்மான்


இதமாக பேசுவது, பிறர் பேச்சை கவனிப்பது இரண்டும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் கண்ணியத்துடன் பேசுவதும் மிக மிக அவசியம்.
பேச்சைப் பற்றி இத்தனை பார்வைகளா?! என்று நினைக்கிறீர்களா?! ஆம்! அப்படி சிந்திக்க வேண்டியது அவசியமே!
நாம் பேசும் வார்த்தை எத்தனை முக்கியமானது! எத்தனை சக்தி வாய்ந்தது! நாம் அறிவோம்தான் ஆனால் அதை எப்படி ஆள்கிறோம் என்பது அதைவிட முக்கியமானது. பொதுவாக இரண்டு முகமோ அல்லது அதற்கு மேற்பட்ட முகங்களோ நம் அனைவருக்கும் உண்டு. அதுஇ நாம் கொள்ளும் உறவுக்கு தகுந்தாற்போல் வெளிப்படும். அந்த மற்றுமொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவது நம் வார்த்தைகள்தான்.

பத்து நாள் பந்தம் - சிறு கதை – உஷா ஜவாகர் (அவுஸ்திரேலியா)

.
அவுஸ்திரேலியாவில் சிட்னியில் பேர்வுட்(Burwood) என்ற இடத்தில் அமைந்திருந்தது ரோஸ் என்கிற விசாலமான நர்ஸிங் ஹோம். விசாலமில்லாத மனமுடைய புத்திரச் செல்வங்கள் தங்கள் செல்வத்தைப் பாவித்துத் தங்கள் செல்வத்தைப் பாவித்துத் தங்கள் பெற்றோரைக் கொண்டு வந்து தள்ளிவிட அந்த விசாலமான நர்ஸிங் ஹோம் பல வகையிலும் உதவி செய்து கொண்டிருந்தது.

அந்த நர்ஸிங்ஹோமில் வெள்ளைக்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள் என்று எல்லா நாட்டு முதியோர்களும் வாழ்ந்து வந்தாலும் இலங்கைத் தீவைச் சேர்ந்தவர்களே அதிகம் வாழ்ந்து வந்தார்கள்.

சமையலில் எண்ணை - செல்வி. ப. இளவரசி

.

மாறிவரும் நாகரீக உலகில் விதவிதமான உணவு வகைகள் பலவற்றை நாம் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்கிறோம் . அதிலும் எண்ணெய்சேர்த்து செய்யப்படும் உணவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும் அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு ஆகும் என்பதற்கு ஏற்ப எண்ணெய் சேர்த்து செய்யப்படும் உணவுவகைகள் அளவிற்கு மீறினால் பக்க விளைவுகளை ஏற்ப்படுத்தக்கூடும்.

ஆனால் இன்றைய நிலவரம் அப்படியா இருக்கிறது ,எதை உண்ண வேண்டும் , எதை உண்ணக்கூடாது எந்த அளவு உண்ணலாம் ,ஏன் சாப்பிட வேண்டும் ?எப்படி ? சாப்பிட வேண்டும் ?என்றகேல்விகளையாரும் மனதில் ஏற்று கொள்வது இல்லை இருப்பினும் இருக்கும் வரை ஆரோகியமான உடல் நிலை பெரிதும் அவசியம் என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.

அவுஸ்திரேலியாவை நோக்கி படகில் சென்ற 17 இலங்கையர்கள் கைது

.
அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமான முறையில் படகொன்றில் சென்ற 17 இலங்கையர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டைக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கடுவெல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த இம்மீனவர்கள் காலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். மேற்படி படகிலிருந்து உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.


நன்றி வீரகேசரி

பேராசிரியர் மருது கந்தப்புவின் நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் மருது கந்தப்புவின் "மூளை நரம்பியல் சிகிச்சை' நூல் வெளியீட்டு விழாவில் கேட்டவை



நோய்த்தடுப்பு வைத்திய முறைமைக்குப் புதியதோர் சிகிச்சை முறையை ஆராய்ச்சிகள் மூலம் கண்டடைந்து உலகுக்களித்திருக்கும்வைத்திய கலாநிதிபேராசிரியர் மருது கந்தப்புவின் "மூளை நரம்பியல் சிகிச்சை' என்ற மருத்துவம் சார் நூலின் வெளியீட்டு விழா 12.02.2011 ஆம் திகதி கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் மத்தியில் நடைபெற்றது.

ரஜனி சந்திரலிங்கம் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார். பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நூலாசிரியரின் பேராசான் வைத்திய கலாநிதி பேராசிரியர் ஸ்ரீகாந்தா அருணாசலம் மங்கள சுடரேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார்.

சிட்னி முருகன் கோயிலில் மஹா சிவராத்திரி 3ம் திகதி வியாழக்கிழமை நடைபெறும்.

.
சிவராத்திரியின் திதியானது மாசிமாத தேய்ப்பிறை சதுர்தசித் திதி இரவு 12மணிக்கு லிங்கோற்பவ பூசையின் போது நிற்க வேண்டும். இவ்விதிக்கமைய சிட்னியில் 3ம் திகதி இரவு 12 மணிக்கு சதுர்தசித் திதி நிற்பதோடு 4ம் திகதி காலை வரை அத் திதி நிற்கின்றது. எனவே 03.03.2011 அன்றே சிவராத்தியாகும் என திரு பா சிவானந்தா தெரிவித்துள்ளார்.

சிட்னி முருகன் கோயிலில் நடைபெறும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி நிரல்

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்! 145க்கும் மேற்பட்டோர் பலி

.
நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் கிறிஸ்சர்ச் நகர் உள்ளது. நியூசிலாந்து நேரப்படி சென்ற  செவ்வாய்கிழமை மதியம் 12.51 மணிக்கு கிறிஸ்சர்ச் நகரில் திடீர் என்று நில நடுக்கம் ஏற்பட்டது.


கவிஞர் முத்துலிங்கம்- -எழில்முத்து


.
விஞர் முத்துலிங்கம் கவிஞர் மட்டுமல்ல; சிறந்த உரைநடை வித்தகர்; சிறந்த பேச்சாளர்; பத்திரிகையாளர். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய இவர், "பொண்ணுக்கு தங்க மனசு' எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்படப் பாடலாசிரியராக நுழைந்தார். இதுவரை 1500-க்கும் மேற்பட்ட- மக்கள் மனதில் நீங்காத திரை இசைப்பாடல்களைப் படைத்தவர்.

சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக் கான தமிழக அரசு விருது, கலைமாமணி விருது, கலைத்துறை வித்தகர் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது என பல விருதுகளின் சொந்தக்காரர்.

தமிழகச் சட்டமன்ற மேலவை உறுப்பினர், அரசவைக் கவிஞர் என அரசியலில் உலா வந்தவர்; வருகிறவர்.

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.
11. வெப்பமாணி

ஒரு ‘தெர்மாமீட்டர்’ (உடல் வெப்பத்தை அளவிடும் கருவியாகிய ‘வெப்பமானி’) எவ்வாறு உடம்பின் வெப்பத்தை சரியாக அளந்து காட்டுகின்றதோ, அதேபோல்தான் உங்களின் பேச்சு (சொற்றகள்), ஒழுக்கம், நடத்தை ஆகியவை உங்களுடைய மனத்தின் தன்மை, மனத்தின் போக்குகள் ஆகியவற்றைக் காட்டும்! மேலும், அது உங்களை பீடித்துள்ள ‘உலகியல்’ என்ற காய்ச்சல் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதையும் காட்டும்.

12. புதுத்துணி – பழைய துணி

தமிழ் சினிமா

.
சிறுத்தை - திரைவிமர்சனம்
 * உலகக்கிண்ணத்தால் 'எங்கேயும் காதல்' பாதிப்பு!

பெப்ரவரி 26இல் வெளியிடப்படவிருந்த பிரபுதேவாவின் 'எங்கேயும் காதல்' ஏப்ரல் மாதத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் மீதான மோகம் ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலையில் அது படத்தின் வெற்றியைப் பாதிக்கும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் இப்படம் ஏப்ரல் மாதம் 2 வது வாரத்திலிருந்து சக்கை போடு போடும் என எதிர்பார்க்கலாம். ஐ.பி.எல் போட்டிகளின் போதும் ரசிகர்கள் திரைப்படங்களைப் புறக்கணித்தது தெரிந்ததே. அத்துடன் கோடைகால விடுமுறையையும் கருத்திற் கொண்டு தயாரிப்பாளர் கல்பாத்தி.எஸ்.அகோரம் இம்முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி

.
அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி
தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றி
பொண்டிங் தொலைக்காட்சிப்பெட்டியை உடைத்துள்ளார்
69 ஓட்டங்களில் சுருண்டது கென்யா பத்து விக்கெட்டால் நியூஸிலாந்து வெற்றி

இலங்கை 210 ஓட்டங்களால் வரலாற்று பூர்வமான வெற்றி

கனடாவுக்கு எதிராக ஹம்பாந்தோட்டை சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில்  நடைபெற்ற ஏ குழுவுக்கான பகல் இரவு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த இலங்கை அணி 210 ஓட்டங்களால் வரலாற்று பூர்வமான வெற்றியை பெற்றது.


திருமுறை முற்றோதல் (57வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி) 06.03.2011 ஞாயிற்றுக்கிழமை

.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 06.03.2011 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருவாரூர்ப்பதிகத்தின் (ஆறாம் திருமுறை 34ம் பதிகம்) பொருள் விளக்கம் திரு மா அருச்சுணமணி அவர்களால் கூறப்பட்டு பின்னர் ஆறாம் திருமுறையில் ஐம்பதாம் பதிகம் (திருவீழிமிழலை தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
( Cnr Burlington Rd & Rochester St), Homebush)

நேரம்: 06.03.11 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

திருவாரூர் பதிகம்
(திரு மா அருச்சுனமணி அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்;; மேலதிக விபரங்களுக்கு:
திரு க சபாநாதன் Tel: 96427767
திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு மா அருச்சுனமணி Tel: 87460635