மரண அறிவித்தல்




மரண  அறிவித்தல் - திருமதி மாலினி ராஜ்குமார்

யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட மாலினி (யோக ரஞ்சினி) ராஜ்குமார் அவர்கள் செவ்வாய்க் கிழமை 2017 ம் ஆண்டு மார்ச் மதம் 21 ம் திகதி இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி நடராஜா (அச்சுவேலி) அவர்களின் கனிஷ்ட புதல்வியும் திரு திருமதி பரம்சோதிராஜா (தும்பனை) அவர்களின் மூத்த மருமகளுமாவார். இவர் ராஜ்குமார் அவர்களின் ஆருயிர் மனைவியும் பிரசன்னா, சேகான் அவர்களின் அன்புத் தாயாரும், நேகா, சுபாங்கி ஆகியோரின் மாமியாரும். சோனியா, அமரா அவர்களின் அன்பு பேத்தியுமாவார்.

ஜெகரஞ்சினி, ஜெகஸ்காந்தா, காலம் சென்ற சிவகாந்தா, தனஸ்காந்தா, சுரேஸ்காந்தா ஆகியோரின் அன்புத் சகோதரியும், சிவா செல்லத்துரை, ஆனந்தி, ராஜனி, ரேணுகா, வசந்தி, ஆகியோரின் அன்பு மைத்துனியும், திரு திருமதி விஜய், திரு திருமதி மகேந்திரன் ஆகியோரின் சம்பந்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 2017 மார்ச் மாதம் 25 ம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை Pinegrove Crematorium, Kington Street, Michinbury - North Chapel ல் பார்வைக்கு வைக்கப்படும். அதனைத் தொடர்ந்து அதே இடத்தில் 10:30 முதல் 12:30 வரை இறுதிச் சடங்குகள் இடம் பெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.

தகவல் - பரிபுரபவன் தொலை பேசி: 0416226915

சிட்னி துர்க்கைஅம்மன் கோவில் மாசிமக தீர்த்த திருவிழா

சிட்னி துர்க்கைஅம்மன் கோவில் மாசிமக தீர்த்த திருவிழா மிக சிறப்பாக பெரும் பக்தர் கூட்டத்துடன் பத்தாம் நாள் திருவிழா ஆக 11/03/2017 ம் திகதி சனிக் கிழமை நடைபெற்றது.

Image may contain: one or more people

NSW பல்கலைக்கழக அஞ்சலி தமிழ் சங்கம் - The Aunty Network

.

NSW பல்கலைக்கழக அஞ்சலி தமிழ் சங்கம் 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை தமிழ் இளைஞர்கள் இடையே தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்காக அஞ்சலி தமிழ் சங்கம் பல நிகழ்வுகளை ஆண்டுதோறும் நடாத்தி வருகிறது. அவற்றுள் மிகவும் பிரபல்யமானது ஒலி ஒளி எனப்படுகின்ற நிகழ்வு. வருடாவருடம் இடம் பெறும்  இந்த நிகழ்வில் சேர்க்கப்படும் நிதியாவது UNIFUND திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக ஒலி ஒளி ஒரு புதிய பரிணாமத்தில் இசை நாடகத் தயாரிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த வைகையில் இந்த வருடமும் ஒலி ஒளி 2017ல்  “The Aunty Network “ எனும் ஒரு புதிய இசை நாடகத் தயாரிப்பு அரேங்கேறவுள்ளது. இது முற்றுமுழுதாக பல்கலைக்கழக மாணவர்களால் எழுத்தப்பட்டு , இயக்கப்பட்டு , தயாரிக்கப்பட்டு அவர்களாளேயே அரங்கேற்றப்படவுள்ளது.

புனிதமுடன் நோக்குவோம் ! ( எம். ஜெயராமசர்மா.... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


      கருணையொடு பாசமும் கள்ளமில்லா உள்ளமும்
          உருகிநிற்கும் அன்புமே உருவமெனக் கொண்டதாய் 
      கருவறையில் சுமந்துமே கண்விழித்துப் பார்த்துமே
            மனமுழுக்கச் சுமந்திடும் மாண்புடைய மங்கையை 
       நிலமுழுதும் இன்றுநாம் நீக்கமறப் போற்றுவோம்
           அவள்மனதில் ஆனந்தம் அமர்ந்துவிடச் செய்குவோம் !

       பொறுமையில் சிகரமாகி பொறுப்பினில் வைரமாகி
           அறிவினில் கூர்மைகொண்டு அனைத்திலும் உழைத்துநிற்கும்
       பெருமையாம் பெண்கள்தம்மை பெருமையாய் பார்க்கும்பாங்கு
            உலகினில் உதிக்கவேண்டி  ஒலியுடன் குரலெழுப்பி
        தனிமையில் வாடும்பெண்மை தலைநிமிர்ந் திடுகவென்று
             அனைவரும் அழைப்போம்வாரீர் அவரகம் மகிழ்ந்துநிற்பார் !

      மாதர்தம்மை இழிவுசெய்வார் மடமையைப் பொசுக்குவோம்
      மாநிலத்தில் மாதர்தம்மை மதிப்புயரச் செய்குவோம் 
      பேதமின்றி பெண்கள்வாழ பெரிதும்பணி ஆக்குவோம் 
      பூதலத்தில் பெண்கள்தமை புனதமுடன் நோக்குவோம் !
      

இலங்கையில் பாரதி - அங்கம் 12 முருகபூபதி



கண்ணுக்கு  இமை தெரிவதில்லை. கண்ணாடியில் பார்த்தால்தான் கண்ணைப்பாதுகாக்கும் இமை எமக்குத்தெரியும். எமது உடலமைப்பின்  பிரகாரம்  கண்ணுக்கு இமை தெரியவாய்ப்பில்லை.
அதுபோன்று அருகிலிருக்கும் மனிதநேய ஆளுமைகளும்  சமூகமாந்தர்களுக்குத்  தெரிவதில்லை. அவ்வாறே பாரதியும்  அவர்  வாழ்ந்த  காலத்திலேயே அவர்பற்றிய அருமை பெருமை தெரியாமல்தான் அவர் பிறந்த எட்டயபுரத்து  மக்கள் இருந்தார்கள்.
சிறுவன்  சுப்பிரமணியனின்  பால்யகாலத்தின்  வாக்கு வசீகரத்தினால் கவரப்பட்ட எட்டயபுர மன்னர்,  பாரதியாக்கினார். எனினும்  வளர்ந்த பாரதியின்   நடையுடை  பாவனைகளையும் அவர் கூடித்திரிந்த  நண்பர்களையும் அவதானித்த எட்டயபுரத்து பிராமண  சமூகம் ' கோட்டி'  என்றே எள்ளி நகையாடியிருக்கிறது.
'கோட்டி' என்றால் கிறுக்கன் , விசரன், பைத்தியக்காரன் என்று பொருள்படும். பாரதியார் சித்தனாக வாழ்ந்திருப்பவர். அதனால்தான் அவரால் எவருடனும் ஏற்றத் தாழ்வின்றி, சாதி வித்தியாசம் பாராமல் சரி சமமாக உறவாட முடிந்திருக்கிறது. காக்கைக்கும் குருவிக்கும் வீட்டில் சமையலுக்கு வைத்திருந்த அரிசியையும் அள்ளித்தூவ முடிந்திருக்கிறது.  கழுதைக்குட்டியை சுமந்துகொண்டு எட்டயபுரத்தின் அக்ரஹாரத்தெருக்களில் ஆடிப்பாட முடிந்திருக்கிறது. ஹரிஜனச்சிறுவன் கனகலிங்கத்தை தனது வீட்டின் நடுக்கூடத்தில் இருத்திவைத்து அவனுக்கு உபநயனம் செய்து  பூநூல் அணிவித்து அவனையும் ஒரு பிராமணனாக்க  முடிந்திருக்கிறது. அத்துடன் அவர் நிற்கவில்லை. "  கனகலிங்கம், இன்று முதல் நீயும் ஒரு பிராமணன்தான். எவரிடமும் துணிந்து சொல்."  என்றும் சொல்லியனுப்பியவர்.

மெல்பனில் மூத்த - இளம் தலைமுறையினர் சங்கமித்த அனைத்துலக பெண்கள் தின விழா






பொன்மணி குலசிங்கம்  - அருண். விஜயராணி நினைவுகூரப்பட்ட  ஒன்றுகூடல்


அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மெல்பனில் நடத்திய அனைத்துலக பெண்கள் தினவிழாவில் இளம் தலைமுறையினரும் மூத்த தலைமுறையினரும் சங்கமிக்கும் நிகழ்ச்சிகள்  இடம்பெற்றன.
சங்கத்தின் தலைவர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெற்ற இவ்விழா, மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மெல்பனில் வதியும் கலை, இலக்கியம் மற்றும் கல்வி சார்ந்த துறைகளில் ஈடுபட்ட மூத்த பெண்மணிகள் மங்கல விளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்தனர்.
திருமதிகள் இந்துமதி கதிர்காமநாதன், கனகமணி அம்பலவாண பிள்ளை, மெல்பன் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், ஞானசக்தி நவரட்ணம், செல்வி கமலா வேலுப்பிள்ளை ஆகியோருடன், இவ்விழாவுக்கென சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான திருமதி கௌரி அனந்தனும் விளக்கேற்றி வைத்தனர்.
திருமதி ஞானசக்தி நவரட்ணம் இலங்கையில் உரும்பராயைச்சேர்ந்தவர். தமது தாயாரிடமும் பாட்டியாரிடமும் தையல் நுண்கலையை இளமைக்காலத்தில் பயின்றவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அவர், தாம் பெற்ற அந்தப்பயிற்சியிலிருந்து, இயற்கை, சுற்றுச்சூழல், வீதிப்போக்குவரத்து, மற்றும் குழந்தைகள்,  தெய்வங்களின்  படிமங்களையும் தையல் பின்னல் வேலைப்பாடுகளில் வடிவமைத்துவருபவர்.
அவரது கைவண்ணத்தில் உருவான படங்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சிட்னி தமிழ் அறிவகம் - வசந்த மாலை 2017 19/03/2017

.
சிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்த மாலை 2017                                          
(சிட்னி தமிழ் அறிவகம் 197 Great Western Highway, Mays Hill. Next to Sydney Murugan Temple.)

ஈழத்துப்பாடகர் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் வணக்கநிகழ்வு - மெல்பேர்ண், அவுஸ்திரேலியா

கடந்த 26 - 02 - 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா சீவராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார்

இலங்கைச் செய்திகள்


இலங்கை இந்தோனேசியாவிடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்..! 

பிள்ளையானின் பிணை மனு நீதமன்றத்தால் நிராகரிப்பு!

வவுனியாவில் சமாதான விகாரை திறந்து வைப்பு

வவுனியாவில்  11 ஆவது நாளாக தொடரும் காணாமல் போன உறவுகளின் போராட்டம்

விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கை ஜனாதிபதியுடன் இந்திய  துணை ஜனாதிபதி சந்திப்பு..!

பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில்  கைது

கேப்பாபுலவு இராணுவத்தலைமையக வாயிலில் நின்று இராணுவத்தை திட்டி தீர்த்த மக்கள் : அனுமதிக்காவிட்டால் அத்துமீறுவோம் என எச்சரிக்கை!

 கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு



உலகச் செய்திகள்


டொரன்டோ நகர சபை உறுப்பினராக இலங்கையர் நீதன் ஷான் தெரிவு!

வைத்தியர் வேடத்தில் வந்த ஐஎஸ் தீவிரவாதிகளால் 38 பேர் பலி : ஆப்கானிஸ்தானில் சம்பவம்..!

டிரம்பின் தொலைபேசியை ஒட்டு கேட்ட விவகாரம் : முன்னாள் உளவுத்துறை தலைவர் மறுப்பு..! 

ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராகப் போரிட மேலும் ஆயிரம் அமெரிக்க வீரர்கள்!
H-1B விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து சிக்கலில் H4 வகை விசாக்கள் : அமெரிக்காவின் அடுத்த அதிரடி..!
 சிரியாவில் வான்வழித் தாக்குதல்; 23 பொதுமக்கள் பலி!




ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவசமய அறிவுத் திறன் போட்டி – 26.03.2017


ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவசமய அறிவுத் திறன் போட்டிகள்  எதிர்வரும் மார்ச் மாதம் 26 ம் திகதி 2 மணிக்கு நடைபெறும்

SYDNEY MURUGAN SAIVA SAMAYA ARRIVUTHIRAN PRIZE GIVING ON 26.03..2017



சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் திருக்குறள் போட்டிகள் 26/03/2017 காலை 10மணி



தமிழ் சினிமா

குற்றம்-23

தமிழ் சினிமாவில் த்ரில்லர் வகை கதை என்பது மிகவும் அரிது, அப்படியே வந்தாலும் அதை திறம்பட கையாள பெரிதும் ஆட்கள் இங்கு இல்லை,
ஆனால், தொடர்ந்து த்ரில்லர் வகை படங்களை சிறப்பாக எடுத்து வரும் அறிவழகன் இந்த முறை மெடிக்கல் கிரைம் பற்றி பேசியுள்ளார், இந்த கிரைமையும் அறிவழகன் வெற்றிகரமாக முடித்தாரா? பார்ப்போம்.

Kuttram 23கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே சர்ச்சில் ஒரு இரண்டு கொலை நடக்கின்றது, அதில் கர்ப்பமான ஒரு பெண் இருக்க, அந்த கேஸ் அருண்விஜய் கைக்கு வருகின்றது. அவரும் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்த கேஸை திறம்பட கையாள்கிறார்.
இந்த கொலை நடந்த இடத்தில் இருந்தது மஹிமா தான், அவரை விசாரணை செய்ய அருண்விஜய் அடிக்கடி சந்திக்கின்றார், அவர் உண்மையை சொல்லிவிடுவாரா என்ற அச்சத்தில் அந்த கொலை செய்த கும்பல் இவரையும் தாக்க வருகின்றது.
அருண்விஜய் அவரை காப்பாற்றுகிறார். அதை தொடர்ந்து கர்ப்பமாக இருப்பவர்களே தொடர்ந்து ஒரு சிலர் இறக்க, கேஸில் எந்த ஒரு எவிடன்ஸும் கிடைக்காமல் அருண்விஜய் இருக்க, மஹிமாவை தேடி அந்த கும்பல் மீண்டும் வருகின்றது.
இதை மஹிமா அருண்விஜய்யிடம் சொல்ல, அவர் அங்கு உடனே வர, அந்த கும்பல் எஸ்கேப் ஆகின்றது, ஆனால், பிறகு தான் தெரிகின்றது, அவர்கள் கொல்ல வந்தது மஹிமாவை அல்ல, அருண்விஜய்யின் அண்ணியை என்று? அவர்கள் ஏன் இவருடைய அண்ணியை கொல்ல வேண்டும், இந்த தொடர் கொலைகளுக்கு என்ன காரணம் என்பதை விறுவிறுப்பான காட்சிகளில் அறிவழகன் அசத்தியிருக்கின்றார்.

படத்தை பற்றிய அலசல்

அருண்விஜய் விக்டராக மிரட்டிய கையோடு அடுத்து வெற்றிமாறனாக கலக்கியிருக்கிறார், ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகம், அடுத்தடுத்து அவர் விசாரணை செய்யும் யுக்தி, காதலை கூட கண்ணியமாக சொல்லும் விதம், குறிப்பாக அருகில் நடக்கும் விஷயங்களை வைத்தே கேஸில் ஒவ்வொரு முடிச்சுகளை கண்டுப்பிடிக்கும் விதம் என விக்டரின் 2 வருட இடைவெளியை FullFill செய்கின்றார்.
மஹிமாவும் அட இந்த பொண்ணு சேட்டை படத்தில் நடித்ததா? என ஆச்சரியமாக வைக்க வைக்கின்றது, படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் வந்து போகும் கதாநாயகிகள் மத்தியில் இவரை வைத்து கதை நகர்வது அறிவழகன் சூப்பர்.
அண்ணியாக நடித்திருக்கும் அபினயா குழந்தை இல்லாததால் மாமியாரிடம் திட்டு, பிறகு கர்ப்பம் தரித்ததும் அவர் காட்டும் ரியாக்‌ஷன் அதை விட இரண்டாம் பாதியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள் என நாடோடிகள், ஈசனுக்கு பிறகு கவனிக்க வைக்கின்றார்.
மெடிக்கல் கிரைம் அதிலும் கர்ப்பம் என்பதில் எப்படியெல்லாம் மருத்துவமனையில் நம் கண்களுக்கு தெரியாமல் ஒரு சில விஷயங்கள் நடக்கின்றது என்பதை தோல் உரித்து காட்டுகின்றது, ஒரு நிமிடம் நமக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
சமீப காலமாக போலிஸ் மீது வெறுப்பாக இருக்கும் மக்களுக்கு, இந்த போலிஸ் கொஞ்சம் ரசிக்க தான் வைக்கின்றார், விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் 2 தான் என்றாலும், கதையுடன் வருவது சலிப்பு தட்டவில்லை, பின்னணியில் மிரட்டியிருக்கின்றார், ஆனால், ஆரம்பம் தீம் மியூஸிக்கை ஏன் போட்டிருக்கின்றார் என்று தான் தெரியவில்லை, பாஸ்கரின் ஒளிப்பதிவு நம்மையும் மெடிக்கல் மற்றும் போலிஸ் விசாரணைக்குள் அழைத்து செல்கின்றது.

க்ளாப்ஸ்

கதைக்களம் பல படத்தில் சமீப காலமாக பார்த்து வருவது என்றாலும் திரைக்கதையில் செம்ம ஸ்கோர் செய்கிறார் அறிவழகன்.
அருண்விஜய்யின் கதாபாத்திரம் ஒரு ரியல் லைஃப் போலிஸை பார்த்த அனுபவம்.
படத்தின் ஒளிப்பதிவு, அதிலும் இரண்டாம் பாதியில் ஒரு நாடக நடிகையை சேஸ் செய்யும் காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது, மிகவும் லைவ்வாக படம்பிடித்துள்ளனர்.

பல்ப்ஸ்


மொத்தத்தில் குற்றம்-23 படத்தில் அருண்விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் தான் படத்தின் ரிசல்ட்டும்- வெற்றிஇரண்டாம் பாதி ப்ளாஷ்பேக் காட்சியை இன்னும் கொஞ்சம் வேகமாக சொல்லியிருக்கலாம்.
நன்றி cineulagam