fsfghdghfjhjgh

மாதாவே கருணை மாதாவே - செங்கவி ம.ரமேசு

.

மாதாவே கருணை மாதாவே
கண்கள் பனிக்கத் துதிக்கின்றோம்
கார் சூழ்ந்த வேளை தன்னில்
 நம்மை காத்து அருளும்  தேவி
 ஓடி வரும் துன்பந்தன்னை
 ஒடித்துக்காரும் தேவி

பூத்த மலரின் மக்கள்
 நற் புன்னகை
புரியும் செல்வர்
சேற்று வயலின்உழவர்
 செந்தமிழ் பாடும் குயில்கள்
ஆற்று வெள்ளம் போலே
 அன்பில் அடங்கி வாழும் மாந்தர்
என்றுந் தொழுந் தெய்வம்
 எங்கள் தேவலோக  மாதா

கொட்டுங் குளிரில் அலைமேல்
துணிந்து  தொழில் செய்வோர்
பட்டு நெய்யும் பண்பர்
 மற்றுத் தமரை எல்லாம்
 மானத்தோடு வாழ
மண்டலத்தில் நீரே
  பாதுகாக்க வேண்டுந் தாயே

மாதா மாதா  எங்கள் மரியே மாதா
தா தா தா தா எங்கள் உயிரின் தா தா
மாதா மாதா  எங்கள் மரியே மாதா


செ.பாஸ்கரனின் முடிவுறாத முகாரி நூல் வெளியீடு


நேற்று 17 10 2015 இடம்பெற்ற செ.பாஸ்கரனின் முடிவுறாத முகாரி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி 

துர்காதேவி தேவஸ்தான நவராத்திரி விழா 13-22/ 10 / 15


படித்தோம் சொல்கின்றோம் - பாஸ்கரனின் "முடிவுறாத முகாரி - - முருகபூபதி

.
சர்வதேசம்  எங்கும்  ஒலிக்கும்  பாதிக்கப்பட்ட  மக்களின் முடிவுறாத  முகாரி
ஈழத்து   புங்குடுதீவிலிருந்து  அவுஸ்திரேலியா சிட்னிவரையில்  தொடர்ந்து  வரும்  ஒரு   கவிஞனின் ஆத்மக்குரல். இன்று  சிட்னியில்  பாஸ்கரனின்   "முடிவுறாத  முகாரி " வெளியீடு
Baskaran Photo01                               -    முருகபூபதி
மாறிவிட்ட நம்தேசத்தில்
இன்னம் எவ்வளவு காலம்தான்
இசைத்துக்கொண்டிருக்கும் இந்த முகாரி
நெஞ்சில் உருண்ட கேள்வியோடு
என் பிஞ்சுக்குழந்தையைப் பார்க்கிறேன்.
முகாரி அறியாத மகிழ்வோடு
நீலாம்பரி இசைத்துக்கொண்டிருக்கிறது.
இலங்கையில்  கடலை  அண்டிய  புங்குடுதீவிலிருந்து  கடல் சூழ்ந்த கண்டம்   அவுஸ்திரேலியாவுக்கு  வந்து,  கடந்த  அரைநூற்றாண்டுக்கும்   மேலாக    இலக்கியப்பிரதிகளை  எழுதிவரும் செ. பாஸ்கரனின்  முதலாவது  கவிதைத்தொகுதியில்  இடம்பெற்றுள்ள   இந்நூலின்  தலைப்பில்   வெளியாகியிருக்கும் கவிதையின்   இறுதி   வரிகளையே  இந்தப்பதிவின்  தொடக்கத்தில் படித்தீர்கள். இதனை   எழுதிக்கொண்டிருக்கும்பொழுதும்  இலங்கையில்  பல தாய்மாரின்  முடிவுறாத  முகாரிகள்தான் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு  தாய்  தாங்கள்  அழுது  அழுது  கண்ணீரும்  வற்றிவிட்டது என்கிறாள். சர்வதேசப் புகழ்பெற்ற  லண்டன் பீ.பீ.சி.யின்  ஒலிபரப்பில் அந்தத்தாயின்   முகாரி   கேட்கிறது.   அதனைக்கேட்டுக்கொண்டே பாஸ்கரனின்  இந்தத்தொகுப்பினை    படிக்கின்றேன்.
பாஸ்கரன்  பிறந்த  ஊர்  புங்குடுதீவின்  மகிமை   பற்றி  சமீபத்தில் எழுதியிருந்த   ஒரு  பதிவில்  குறிப்பிட்டிருக்கின்றேன்.   கவிஞர்கள், கலைஞர்கள்,   சமூகப்பணியாளர்கள்,  கல்விமான்கள்  பலரால் பெருமைபெற்ற  புங்குடுதீவு  ஒரு  பள்ளிமாணவிக்கு  நேர்ந்த வன்கொடுமையால்   உலகத்தையே  திரும்பிப்பார்க்கவைத்தது.

ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 4- நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.
SIVANJALI -  EASWARI
1970 இல் பிருத்தானியாவில் இருந்து இலங்கை திரும்பிய நான் எனது நாட்டிய கலையகம் "கார்த்திகா ஆடற்கலையகத்தை நிறுவி நடனம் கற்பிக்க ஆரம்பித்தேன். நளினமான வழுவூர் பாணியிலான நடனத்தை கற்பிக்கும் அதே வேளையில் எனது மாணவியருக்கு நாம் கூற வேண்டியவற்றை எவ்வாறு உடலை ஊடகமாக கொண்டு புரிய வைக்கலாம் என்பதை கற்றுக் கொடுத்தேன். ஒரு எழுத்தாளனுக்கு பேனா எப்படியோ அதே போன்றதே நடனக் கலைஞனுக்கு உடல். நாம் கூறுவதை உடல் என்ற சக்தி மிகுந்த ஊடகத்தால் எடுத்துக் கூறும் போது பார்ப்போர் மனதில் கருத்தை பதிய வைப்பதே நாட்டியம். இத்தகைய பயிற்சி சனி ஞாயிறு கிழமைகளில் காலை 7.30 இக்கு ஆரம்பமாகி மதியம் 1 மணி வரை நீளும். நாம் பரதம் மட்டும் ஆடவில்லை. நாளாந்தம் வெவ்வேறு கருத்துக்களை எவ்வாறு உடலால் புரிய வைக்கலாம் என்பதை பயிற்சி முறையில் ஆராய்ந்தோம். சந்திர மண்டலத்திற்கு செல்லும் ரொக்கெட்டாகவும் சந்திரனில் நடப்பதாகவும் செய்து பார்த்தோம். காட்டிலே தமையில் விடப்பட்ட ஒருவனின் அனுபவங்கள் என வேறுபட்ட கருப்பொருள்கள் எமது மனதில் தோன்றியவற்றை மனம் போன போக்கில் உருவாக்கினோம். மாணவியருக்கு மட்டுமல்ல எனக்குமே இது ஒரு பயிற்சி பட்டறை தான். எனது பயிற்சி பட்டறையில் இவ்வாறு வளர்ந்தவரே ஆனந்தராணி பாலேந்திரா எனும் நாடக நடிகை. இன்று தனது கணவருடன் சிறுவருக்கான நாடக பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.

சிட்னி முருகன் ஆலயத்தில் நவராத்திரி

.

டேவிட் ஐயா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

.

டேவிட் ஐயா மறைந்து விட்டார் என்ற செய்தி மனதில் ஊசிமுனைகளால் கீறி விட்டது போன்ற உணர்வை தந்தது . இயக்கங்களின் ஊற்றுவாயாக இருந்து ஈழ விடுதலை இயக்கங்கள் உருவாக அறிந்தோஅறியாமலோ உதவிய மனிதர். வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதையாக இயக்கங்களே அவரின்உயிருக்கு கெடு வைத்தபோதும் உறுதியாக நின்று எதிர்க்குரலை வைத்த நல்ல மனம்படைத்தவர். அவரோடு வாழ்ந்த பழகிய காலங்கள் இன்றும் பசுமரத்தாணிபோல் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது. தனது உழைப்பையும் பணத்தையும் மக்களுக்காக செலவு செய்துவிட்டு கடைசிக் காலத்தில் தனது வாழ்க்கைக்காக சிரமபட்டார். நினைத்திருந்தால் எப்படிஎல்லாமோ வாழ்ந்திருக்கலாம் அவர் அதை விரும்பாமலேயே வாழ்ந்துமுடித்துவிட்டார். அந்தமனிதனுக்கு தமிழ்முரசின் கண்ணீர் அஞ்சலிகள் .

தமிழ் ஈழக்கனவுடன் இறுதிவரை வாழ்ந்து மறைந்த டேவிட் ஐயா - நடேசன்

.

மறைந்த கட்டிடக்கலைஞரும் இலங்கை காந்தீயம் அமைப்பின் ஸ்தாபகருமான டேவிட் ஐயாவை நாம் நினைவு கூரவேண்டும். அதை எப்படி என்பதுதான்…? என் முன்னால் நிற்கும் கேள்வி.
இறந்தவர்களை நினைவில் நிறுத்துவது நமது கலாச்சார விழுமியத்தை சேர்ந்தது. உறவினர்கள், பழகியவர்கள் ஒருவரது பிரிவை துயராக கருதுவார்கள்.
நன்றாக முதுமையடைந்து முனிவர்போல் வாழ்ந்து இறந்தவர் டேவிட் ஐயா. மரணத்தை வெல்லமுடியாத நிலையில் இதில் துயரப்படாமல் அவர் செய்தவற்றை நினைக்கவேண்டும். அவர் இலங்கைத் தமிழராக திருமணம் செய்யாது பொது வாழ்வில் இருந்துவிட்டுச் சென்றவர். அவர் வாழ்வையும் பணிகளையும் உணர்வு நிலைக்கு அப்பால் நின்று பார்ப்பது எமக்கு அவசியம்.
ஐம்பதுகளில் உலகின் மிகசிறந்த பல்கலைக்கழகமென கருதப்பட்ட அவுஸ்திரேலியா மெல்பன் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றவர். அதன் பின்பு இங்கிலாந்தில் நகர் மயமாக்கத் துறையில் கற்றவர்.
அதன்பின்பு கென்யாவில் சிலகாலம் தொழில் புரிந்தவர்.
ஐம்பதிற்கு பின்பே ஐரோப்பா வட அமெரிக்கா தவிர்ந்த உலகத்தின் மற்றைய நாடுகளில் நகர்மயமாக்கம் நடந்தது. இந்தக்காலகட்டத்தில் டேவிட்ஐயா எவ்வளவு முக்கியமான மனிதராக இருந்தார்…?

மலரும் முகம் பார்க்கும் காலம் 17 - தொடர் கவிதை

.

கவிதை 17மருத்துவர் திரு.அகிலன் நடேசன்,  மட்டக்களப்பு, இலங்கை
அவளுக்காக காத்திருக்கிறது மனம்
அவளின் வருகையை எண்ணி
அங்கலாய்த்து அங்கலாய்த்து
விண்ணை அணணார்ந்து பார்த்து அது
விம்மி அழுகிறது

திமிர்கொண்ட கார்மேகம்
திசைமாறிப்போனதென்று
கறையான் புற்றுக்குள் கதைகள் அடிபடுகின்றன

வெயில் கொட்டித்தீர்த்த வெப்பத்தளும்புகள்
இன்னும் ஆறாமல் அப்படியே இருக்கின்றன

புல்பூண்டு செடிகொடிகளெல்லாம்
மலரும் முகம் பார்க்கும் காலம் வருமென்றும்
கருவண்டு தேனுண்டு அம்மலரில்
கண்ணயர்ந்து உறங்குமென்றும்
கனவுகள் இன்னும் இருக்கின்றன

மழைத்தேவதை வருவாள் என்று
மயங்கி நிற்கும் மானங்கெட்ட உடம்பின் மீது
வெற்றுக்தாத்தை ஊதி
வீராப்பு பேசுகிறது மேகம்

தீர்வுப்பொதிகளை காட்டி காட்டி தினந்தோறும்
எத்தி பிழைக்கிறது வானம்

திரும்பிப்பார்க்கின்றேன் - பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

.
இயற்கை  எழில்   கொஞ்சிய  கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து  வல்லரசு  இங்கிலாந்து  வரையில் பயணித்த   பெண்ணிய  ஆளுமை   இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
படைப்பு   இலக்கியத்திலும் , பெண்ணிய  மனிதஉரிமை செயற்பாட்டிலும்   ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும்  பங்காற்றிய  மருத்துவ தாதியின்  வாழ்வும்  பணிகளும். முருகபூபதி


பெண்கள்   எப்பொழுதும்  வீட்டுக்குள்  இருந்து குடும்பக் கடமைகளைப்பார்த்தால்  போதும்  என்றும் -  அடுப்பூதும் பெண்களுக்கு  படிப்பெதற்கு  என்றும்  சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில்  வாக்களிக்கும்  உரிமையும்  மறுக்கப்பட்ட  ஒரு  காலம் முன்பிருந்தது.


சமையல்கட்டு  வேலை ,  பிள்ளைப்பராமரிப்புடன்  கணவனின் தேவைகளை  பூர்த்திசெய்யும்  இயந்திரமாகவும்  பெண்ணின்  வாழ்வு முடக்கப்பட்டிருந்த  காலம்  மலையேறிவிட்டது  என்று  இன்னமும் சொல்ல முடியாதிருக்கிறது.

இத்தகைய   பின்புலத்தில்  எமது  இலங்கையில்  கிழக்கு மாகாணத்தில்  இயற்கை  எழில்  கொஞ்சிய  அழகிய  கிராமத்திலிருந்து -  அதேவேளை   கல்வியிலும்  பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்தாலும்,  கூத்துக்கலைகளில்  முன்னிலை வகித்த தமிழர்களும்  முஸ்லிம்களும்  ஒரு  தாய்  மக்களாக  வாழ்ந்த அக்கரைப்பற்று  கோளாவில்  கிராமத்திலிருந்து -  பல  நாடுகளை தனது   ஆளுகைக்குள்  கட்டிவைத்திருந்த  முடிக்குரிய  அரசாட்சி நீடித்த   வல்லரசுக்கு  புலம்பெயர்ந்து  சென்ற  சகோதரி  இராஜேஸ்வரி   பாலசுப்பிரமணியம்  அவர்களைப்பற்றி நினைக்கும்தோறும்   எனக்கு  வியப்பு  மேலிடுகிறது.
புலம்பெயர்   இலக்கியத்தின்  முன்னோடியான  அவரது  எழுத்துக்களை   இலங்கையில்  1980  களில்   படிக்கநேர்ந்தபொழுது, அவர்  பற்றிய   எந்த  அறிமுகமும்  எனக்கு  இருக்கவில்லை. பம்பலப்பிட்டி  சரஸ்வதி  மண்டபத்தில்  இராஜேஸ்வரி  எழுதி, அலை வெளியீடாக  வந்திருந்த  ஒரு  கோடை  விடுமுறை  நாவல் வெளியீட்டு   விமர்சன  அரங்கிற்கு  சென்றிருந்தேன்.

தமிழ் சினிமா - ருத்ரமாதேவி.

.


தென்னிந்திய சினிமாவை கண்டு சில காலங்களாக வட இந்திய சினிமா கொஞ்சம் அஞ்சித் தான் உள்ளது. எந்திரன் படத்தின் மூலம் ஷங்கர் போட்ட விதை, ராஜமௌலியால் மரமாக தற்போது வளர்ந்து நிற்கின்றது. இந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ருத்ரமாதேவி.
ஏற்கனவே அருந்ததி, பஞ்சமுகி என சோலோ ஹீரோயினாக வெற்றிக்கொடுத்த அனுஷ்கா, இதில் கொஞ்சம் அல்லு அர்ஜுன், ராணா என முன்னணி நடிகர்களுடன் களம் இறங்கியுள்ளார்.
கதைக்களம்
காகத்திய ஆட்சி பல சிற்றரசர்களை அடக்கியது, வயதான அரசனுக்கு குழந்தை பிறக்கின்றது, அந்த குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டும், அந்த குழந்தை தான் நம்மை பக்கத்து நாட்டு பகையாளியான தேவகிரி அரசனிடம் இருந்து காப்பாற்றும் என மக்கள் நம்புகின்றனர்.
இதை அரசனின் தம்பிகளான சுமன் மற்றும் ஆதித்யாவும்விரும்பவில்லை. (பெண் குழந்தை பிறந்தால் அதை காரணம் காட்டி நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர துடிக்கும் நய வஞ்சகர்கள்). அவர்கள் நினைத்தது போல், பெண் குழந்தையாக அனுஷ்கா பிறக்கின்றார். இந்த செய்தி கேட்டால், எதிரி நாட்டுக்கு பலம் வந்துவிடும், மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள் என, ராஜகுருவானபிரகாஷ் ராஜ் பேச்சை கேட்டு பிறந்தது ஆண் என்று பொய் கூறுகிறார்கள்.
அனுஷ்காவை ஒரு ஆணாகவே வளர்க்க, அவரும் வாள் சண்டை, கத்தி சண்டை என ஒரு ஆணுக்கு நிகராக வளர்கிறார், ஒரு கட்டத்தில் தன் பெண்மையை அவர் உணர்ந்தாலும், நாட்டு மக்களின் நலனுக்காக ஆண் என்றே பொய் கூறி வாழ்கிறார்.
ஆனால், ஒரு கட்டத்தில் இந்த உண்மை சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் வெளிப்பட, நாட்டு மக்கள் அனுஷ்காவின் ஆட்சியை விரும்பாமல் அவரை நாட்டை விட்டு துரத்துகின்றனர். பகையாளி மன்னனுடன் சுமன், ஆதித்யா மற்றும் சிற்றரசர்கள் சேர்ந்து கொள்கின்றனர். இதன் பின் தேவகிரி நாட்டினர் சிற்றரசர்கள் உதவியுடன் படையெடுக்க, மீண்டும் அனுஷ்கா ருத்ரதாண்டவம் எடுத்து எப்படி நாட்டை மீட்கிறார் என்பதை மிக பிரமாண்டமாக கூறியிருக்கிறது இந்த ருத்ரமாதேவி.
படத்தை பற்றிய அலசல்
தென்னிந்தியா மட்டுமில்லை நாம் முன்பே கூறியது போல் இந்திய சினிமாவிற்கே லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அனுஷ்கா தான், அதிலும் அவர் ஆணாக நடிக்கும் போது உயரம், தோற்றம் என அனைத்திலும் நிஜ ஆண்களுக்கு உண்டாக கம்பீரம், யானை அடக்குதல், வாள் சண்டை என ஹீரோக்களுக்கே சவால் விடும் பாத்திரம்.
படத்தில் மொத்தமே அல்லு அர்ஜுன் 25 நிமிடம் தான் வருகிறார், ஆனால், அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் விசில் சத்தம் பறக்கின்றது. கடைசி வரை அனுஷ்காவை தோற்கடிக்க போராடி கிளைமேக்ஸில் கொடுக்கும் டுவிஸ்ட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்கின்றது.
படத்தின் பல காட்சிகள் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் தான் எடுத்துள்ளனர், இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கோலிவுட்டில் வெளிவந்த கோச்சடையான் போன்று, பல கதைகளை ஜவ்வாக இழுக்காமல் இந்த டெக்னாலஜி உதவியுடன் மிக அழகாக காட்டியுள்ளனர். ஆனால், ஒரு கட்டத்தில் பொம்மை படம் போல் தெரிகிறது.
ராணாவிற்கு அனுஷ்கா நண்பன், காதலன் என தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்தாலும், பாகுபலியில் மிரட்டிவிட்டு இதில் ஓரத்தில் நிற்பது வருத்தம் தான். அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கின்றது. ராஜா காலத்திற்கு சென்று வந்த அனுபவம். இவர்களை எல்லாம் விட படத்தை தாங்கி நிற்பது அனுஷ்காவை தாண்டி நம்ம ஊர்இளையராஜாவின் இசை தான். பின்னணியின் தான் முன்னணி என்று நிரூபித்து விட்டார்.
க்ளாப்ஸ்
தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் அனுஷ்கா, பெண் என்றாலே திட்டி தீர்க்கும் இன்றைய சினிமா ட்ரண்டிற்கு பெண்களை போற்றும் வசனத்தை தந்த பா.விஜய்க்கு ஒரு சல்யூட்.
எடுத்துக்கொண்ட கதைக்களம், படத்தின் முதல் பாதி, அடுத்தடுத்து சாகச காட்சிகள் நிரம்பி வழிகின்றது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி கொஞ்சம் நீளம், அதிலும் போர்க்காட்சி ஒரே நேர்க்கோட்டில் செல்லாமல் அங்கொன்று, இங்கொன்று என கொஞ்சம் சோதிக்கின்றது.
மொத்தத்தில் இந்த ருத்ரமாதேவி படத்தில் மட்டுமில்லை ரசிகர்களின் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.
ரேட்டிங்-3/5