பிறந்தநாள் வாழ்த்து 13 . 07 .2010

                                   .
                                   திருமதி. மதுரா மகாதேவ்  
                               பிறந்தநாள் வாழ்த்து  13 . 07 .2010




...........................................................................................................................................................................................................................................................................
....................................................................,.......................................                                           இன்று தனது பிறந்தநாளை கொண்ட்டாடும் தமிழ் முரசு ஆசிரியர்களில் ஒருவரான திருமதி மதுரா மகாதேவ் அவர்களை அவரது அன்புக் கணவன் மகாதேவ், அப்பா அண்ணன் மார் , அண்ணிமார் ,மாமா மாமி , குடும்பத்தவர் , நண்பர்கள்  அனைவரும் , நீண்ட காலம் வாழ வாழ்த்துகின்றார்கள். அவரை தமிழ் முரசு குடும்பம் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறது.

'மருதடியான் கான நடனாஞ்சலி தொடர்ச்சி

.


கடந்த ஆறு வருடங்களாக நிகழ்ந்து வரும் மருதடி பிள்ளையார் கோயில் புனர்நிர்மான திருப்பணிகளுக்காக 13 ஜூன் 2010௦ அன்று Ryde Civic Centre இல் 'மருதடியான் கான நடனாஞ்சலி" மாலை 6 மணிக்கு நடை பெற்றது.

உலகக் கோப்பையை வென்றது ஸ்பெயின்

.


உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து கோப்பையை வென்றது.சாக்கர் சிட்டியில் நடந்த இறுதிப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தும் எதையும் கோலாக்க முடியவில்லை. பிற்பாதி ஆட்டம் தொடங்கிபிறகும் இதே நிலைதான் நீடித்தது. 62-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் ஸ்னைடருக்கு கோலடிப்பதற்கான அருமையான வாய்ப்பு கிடைத்தது. அதனை ஸ்பெயினி்ன் கோல்கீப்பர் கேசிலாஸ் அருமையாகத் தடுத்தார். 69-வது நிமிடத்தில் ஸ்பெயினின் டேவிட் வில்லாவும் ஒரு வாய்ப்பை வீணாக்கினார்.பின்னர் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது அதில் ஸ்பெயின் அணியின் இனியெஸ்டா கோல் அடித்தார். இதன்பிறகு நெதர்லாந்து வீரர்கள் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை இதனால், 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.கோலடித்த இனியெஸ்டா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

800 ஆவது விக்கெட்டை எதிர்பார்க்கும் முரளி

.

செய்தித்தொகுப்பு - கரு

சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒய்வு பெறுவதற்கு முன்னர் நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் தனது 800 ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்ற முடியும்

என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அவுஸ்ரேலிய நடுவர் டெரல் ஹெயருடனான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மருதடியான் கான நடனாஞ்சலி ஒரு பார்வை

.

                                               மதுரா மகாதேவ்


கடந்த ஆறு வருடங்களாக நிகழ்ந்து வரும் மருதடி பிள்ளையார் கோயில் புனர்நிர்மான திருப்பணிகளுக்காக 13 ஜூன் 2010௦ அன்று Ryde Civic Centre இல் 'மருதடியான் கான நடனாஞ்சலி" மாலை 6 மணிக்கு நடை பெற்றது. இன் நிகழ்ச்சி மானிப்பாய் மருதடி விநாயகர் மன்றம் சிட்னி குழுவினரால் நடாத்தப் பட்டது. இன் நிகழ்வில் திருமதி கேதீஸ்வரி பகீரதனின் மாணவ மாணவிகளின் கானாஞ்சலி, திருமதி சுகந்தி தயாசீலனின் மாணவ மாணவிகளின் நடனாஞ்சலி, தமிழ், ஹிந்தி, மலையாளம் புகழ் Newzealand ரவியின் இன்னிசை இரவும் நடை பெற்றன.

இலங்கை அகதிகள் வருகை

'

இலங்கை அகதிகள் வருகை ஆஸ்திரேலியாவில் தடை நீங்கியது ஆஸ்திரேலியாவில்  சட்டவிரோதமாக குடியேறும்  இலங்கை அகதிகளுக்கான தடையை,  அரசு நீக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை குறைவு என்பதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள், இந்த நாட்டில் தஞ்சம் புகுந்து வந்தனர்.

அகதி அந்தஸ்து இனி இல்லை ஐ.நா

'

இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை  ஐநா அகதிகள் ஸ்தாபனம்
இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

ATBC வானலையில் கவிஞர் ரிஷான் ஷெரீப்

'

                    செ. பாஸ்கரன்


அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திநூடாக 08.07 .2010  அன்று  ஈழத்து இளம் கவிஞரான ரிஷான் ஷெரீப்   அவர்களுடன் நடை பெற்ற பேட்டியின் சுருக்கமான வடிவம் இங்கு தரப்படுகின்றது. பேட்டி கண்டவர் செ.பாஸ்கரன்

ஒரு இளம் கவிஞராக, பல தரமான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் ஒருவராக இருக்கும் நீங்கள் உங்களை பற்றி, உங்கள் எழுத்துக்களைப் பற்றி என்ன கூறுவீர்கள்?


நான் இலங்கையின், மாவனல்லையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவன். எனது முதலாவது கவிதைத் தொகுப்பான 'வீழ்தலின் நிழல்' கடந்த சனிக்கிழமை, இந்தியாவில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளியிடப்பட்டது. இன்னும் பிரான்ஸ், எக்ஸில் பதிப்பகம் மூலமாக எனது மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுப்பும், இந்தியா உயிர்மை பதிப்பகம் ஊடாக குறுநாவல் தொகுப்பொன்றும் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன.

எப்படி பாடுவேன் -கவிதை - கலா



அகர முதல எழுத்தெல்லாம்

.

செம்மொழியான தமிழ்மொழி வாழ்த்து பாடலை ஒளி வடிவில் பார்க்க
பாடல்  கலைஞர்  மு.கருணாநிதி  இசை ஏ.ஆர்.ரகுமான்.  நெறியாள்கை - கௌதம் வாசுதேவ் மேனன் .

சுய துரோகம் - கவிதை


.
 

நேற்று

நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்
காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம்
காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம்
காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம்
எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்





பேச்சின் சக்தி - உமை புருசோத்தமர்

.

இளம் கவிஞராக அறிமுகமாகும் உமை அவர்கள் உயர் தர வகுப்பில் தமிழை ஒருபாடமாக படிக்கின்றார். புலம் பெயர் வாழ்வில் தமிழை கற்பது மட்டுமல்லாது ஹோம்புஷ் தமிழ் பாடசாலையின் கலைவிழாவில் கவியரங்கில் பங்குகொண்ட ஒரு இளம் கவிஞர்.

தமிழே! என் பேச்சே!
மூச்சாய் என் உயிராய் நீ வந்தாய்
தமிழோடு விளையாடி நீ நின்றாய்
உள்ளத்தின் உணர்வுகளை நீ தந்தாய்
உதட்டோரம் அழகாகி வெளி வந்தாய்!

ஆலம் விழுது - சிறுகதை சோனா பிறின்ஸ்

.


அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல்இ கண்ணனுக்கு மனம் கனத்தது. எத்தனையோ வருடங்களாக குழந்தைக்காக ஏங்கியவனுக்குஇ ஆழக்கடலில் தேடிய முத்தாகக் கிடைத்த தன் மகள் சரண்யாஇ முதல்நாள் இரவு தூங்கும் வரைக்கும் அழுததை நினைக்கஇ கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதனைப் பிறர் பார்த்து விடாமல் மறைத்துக் கொண்டான்.

2010 ஆம் ஆண்டிற்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

.

2010 ஆம் ஆண்டிற்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 15, மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

உங்களது விண்ணப்பங்கள் 12/07/2010 திகதிக்கு முன்னதாக தபால் மூலமாகவோ, தமிழ்ப் பாடசாலையூடாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நீங்கள் அனுப்பி வைக்க முடியும்.

மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் தூள்


.

இயற்கையில் நம் முன்னோர் சமையலில் பயன்படுத்திய பல பொருட்களில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது, பின்னாளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.



பத்திரிக்கைக்கு ஆர்வம் உள்ளவர்கள் தேவை
வணக்கம் வாசகர்களே
உங்கள் தமிழ் முரசு   பதினைந்தாவது வாரமாக வெளிவருகிறது. ஆஸ்திரேலிய செய்திகளையும். நிகழ்வுகளையும், விளம்பரங்கள் அறிவித்தல்கள் போன்றவற்றையும் தாங்கி வாரம் தோறும் வெளிவருகிறது. பல குறைகள் இருக்கின்றது என்பதை பல நல்ல உள்ளங்கள் எடுத்துக்காட்டி இருந்தனர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள். தற்போது வாரம்தோறும் 1000  முறைகளுக்கு மேல் இந்த பத்திரிக்கை பார்க்கப் படுகின்றது. எங்களோடு சேர்ந்து பணியாற்ற பல துறைகளிலும் ஆட்கள் தேவைப்படுகின்றார்கள். இதில் ஆர்வம் உள்ளவர்கள் தமிழ் முரசு மின்அஞ்சல் ஊடாக   தொடர்பு கொள்ளுங்கள்.
webpage designers , Reporters for all Suburb , தமிழில் Type செய்ய தெரிந்தவர்கள் , கட்டுரை எழுத கூடியவர்கள் , போட்டோ editing தெரிந்தவர்கள் என்பவர்களின் உதவி தேவைப்படுகிறது. கீழுள்ள ஈமெயில் இல் தொடர்பு கொள்ளுங்கள்.
tamilmurasu1@gmail .com

நன்றி ஆசிரியர் குழு

கொங்கு மண்டலத்தின் வரலாறு

.

செம்மொழி மாநாடு கண்ட கொங்கு மண்டலத்தின் வரலாறை ஆய்வு செய்து புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை வாங்கியிருக்கிறார் பிரண்டா பெக். அத்தோடு நின்றுவிடாமல் கொங்கு மக்களின் வரலாறுகளை -அவர்களின் பாரம்பரிய பெருமைகளை ஆவணப்படுத்தும் பணியிலும் கடந்த 7 ஆண்டுகளாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறார், கனடாவில் பிறந்த வெள்ளை இன பெண்மணியான பிரண்டா... கொங்கு மக்களையும், அவர்களின் விருந்தோம்பல் பண்பையும் காதலிப்பதாக சொல்கிறார். தமிழ் பேசவும் கற்றுக்கொண்டிருக்கிறார்.

குப்பிழான் கிராமம்

.

                                 -கலாநிதி க. கணேசலிங்கம்

குப்பிழாய் செடி


அழகும் வளமும் மிகுந்த அமைதியான கிராமம் குப்பிழான். அதன் செம்மண் நிலமும் அதில் செழித்து வளர்ந்துள்ள மரஞ்செடிகளும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கும் தோட்டங்களும் காண்பவர் மனத்தைக் கவர்வன. இயற்கை எழில் கொஞ்சும் குப்பிழான் கிராமத்தின் வளர்ச்சியும் வரலாறும் தனிச்சிறப்புடையன.

மெல்பேர்ன் ஆஞ்சநேயம்" நாட்டிய நாடகநிகழ்வு

.



அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை "ஆஞ்சநேயம்" எனும் கலைநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. விக்டோரிய தமிழ் இளையோர் அமைப்பின் ஆதரவுடன் "பட்ச் வேக்" எனும் அமைப்புக்காக நடத்தப்பட்ட இக்கலைநிகழ்வின் மூலம் கிடைக்கப்பெறும் நிதி தாயகத்தில் மாற்றுவலு தேவைப்படுவோரின் ஆதரவு நிதிக்காக செலவிடப்படவுள்ளது.

ஆடியின் சிறப்பு ஆடிப் பிறப்பு

.

சாந்தினி புவனேந்திரராஜா

ஆடிமாதத்தின் ஆரம்பநாள், ஆடி முதல்நாள் - ஆடிப் பிறப்பு. இந்த ஆண்டு, எதிர்வரும் சனிக்கிழமை ஜுன் 17ஆம் தேதி பிறக்கிறது ஆடி. ஒவ்வொரு மாதமும் தான் மாதம் பிறக்கிறது – முதல் தேதி வருகிறது. அவை எல்லாவற்றையும் மாதப்பிறப்பென்று நாம் கொண்டாடுவதில்லையே. மாதப்பிறப்பில் ஒருசிலர், மிகச்சிலர் விரதம் இருப்பார்கள். அவ்வளவுதான். ஆனால் ஆடிமாதப்பிறப்பை நாம் ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறோம்? சிறப்பாகக் கொண்டாடுவதற்குக் காரணம் தான் என்ன?

இரண்டாம் மாதமும் வட்டிவீதம் ஏறவில்லை

மத்திய வங்கி வட்டி வீதத்தை இரண்டாம் மாதமும் ஏற்றவில்லை.
இரண்டாவது மாதமாக வட்டி வீதத்தை ஏற்றாமல் 4.5 வீதத்தில் விட்டுவிட்ட மத்திய வங்கியின் முடிவு வீட்டுக்கடன் வைத்திருப்போர் அனைவருக்கும் மனநிம்மதியை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அடுத்துவரும்  இரண்டு மாதமும் வட்டி வீதம் ஏற்றப்படலாம் என நம்பப்படுகின்றது.

A Touching Poem......

.


I went to a party Mom,                                 
I remembered what you said.
You told me not to drink, Mom,                 
So I drank soda instead.
I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.

வாகன சோதனையில் கைது

லண்டனில் இருந்து சென்னை வந்திருந்த  இலங்கை தமிழரை கடத்திச் சென்று ரூ.17 1/2 லட்சத்தை பறித்த கும்பலை போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர்.இங்கிலாந்து நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் சண்முகவேல் (வயது 36). இவர் தொழில் அதிபர் ஆவார். இவரது மனைவி பெயர் ராதிகா. இவர் சென்னையை அடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர்.

நீரிழிவு -மருத்துவர் கு. சிவராமன்

அவர் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற மிக உயர் அதிகாரி. ஒருமுறை கவர்னர் மாளிகையில் அரசின் ஓர் முக்கிய விருந்தில் கலந்து கொண்டு இரவு 9-9.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியதும் அவருக்கென தயாராக இருந்த ராகி தோசையை சாப்பிடத் துவங்கினார். அருகில் இருந்த நான் ”கவர்னர் மாளிகையில் சாப்பிடலையா?,” என்றதும்,

சிட்னியில் இந்திய கடை தீக்கிரை

சிட்னி சறே ஹில்ஸ்சிலுள்ள ஒரு இந்திய சாப்பாட்டுக்கடை தீக்கிரையாக்கபட்டது. தாக்கப்பட்ட இந்திய சாப்பாட்டுக்கடைக்கு மேல் வசித்து வந்த நால்வர் உயிர் தப்பியுள்ளார்கள். இச்சம்பவம் சுமார் இரவு 11.30 மணியளவில் பெரிய குண்டு வெடிப்புச்சத்தத்தோடு தீ பரவத்தொடங்கியது. அவ்விடத்திலிருந்து இருவர் ஓடிச்சென்றதை சிலர் அவதானித்ததாக காவல் படையினர் கூறுகின்றார்கள். இக்கடை முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. சில மணி நேரம் கிளிவெலாண்ட் வீதி மூடப்பட்டிருந்தது.

விமானத்தில் குழந்தை பெற்ற மாணவி





பெற்ற குழந்தையை வீசுகின்ற துர்ப்பாக்கிய சங்கதிகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். அப்படியொரு சம்பவம் துர்க்மேனிஸ்தான் விமானத்தில் இடம்பெற்றிருக்கிறது.