பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..

.

இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....

காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..

மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...

நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..

இந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி?

.

எதையும் ஆரவாரமாகவும் வித்தியாசமாகவும் செய்வது ஒன்றும் நமது பிரதமர் மோடிக்குப் புதிய விஷயமில்லை. காந்தியின் பிறந்த நாள் அன்று மோடி முன்னெடுத்திருக்கும் ‘தூய்மை யான இந்தியா’ என்ற கோஷமும் அப்படித்தான்.
புதுடெல்லியில் இருக்கும் துப்புரவுப் பணியாளரின் காலனி யான வால்மீகி பஸ்தியிலிருந்து இந்தத் திட்டத்தை மோடி தொடங்கியிருக்கிறார். டெல்லி வரும்போதெல்லாம் காந்தி அதிகம் தங்கிய இடங்களுள் ஒன்றுதான் வால்மீகி பஸ்தி. அங்கிருந்து தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்குவதன் மூலம், நாட்டுக்கு அரசு சொல்லும் செய்தி என்ன? நாம் நம்முடைய தூய்மைப் பணியைச் சேரிகளிலிருந்து தொடங்க வேண்டும் என்பதா?

இலங்கைச் செய்திகள்


நுவரெலியாவில் மினி சூறாவளி

கிழக்கு பல்கலை உணவுச்சாலைகள் திடீர் பரிசோதனையையடுத்து மூடப்பட்டுள்ளன

ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியாவில் மினி சூறாவளி

நுவரெலியா, பொரலந்த வஜிரபுர பகுதியில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.



சிட்னி துர்க்கா தேவி கோவிலில் சமய சொற்பொழிவு 07/10/2014 7:30pm



சிட்னி முருகன் ஆலயம் மூடப்படுகிறது

.

ஆறுமுக நாவலருக்கு மத்திய அரசு தபால்தலை வெளியிட வேண்டும்: பாஜக கோரிக்கை

.
ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வந்து சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஸ்ரீஆறுமுக நாவலருக்கு, மத்தியஅரசு தபால் தலை வெளியிட்டு கவுரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரகாஷ் ஜாவேட்கருக்கு கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் வே.ராஜரத்தினம் கடிதம் அனுப்பியுள்ளார்.
அவரது கடித விபரம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் 1822-ல் பிறந்து இந்தியாவிற்கு வந்து சைவத்தையும், தமிழையும் வளர்த்தவர் ஸ்ரீஆறுமுக நாவலர்கள். மேலும் அவர் கல்வி பணிக்காக அரும்பாடுபட்டார். தமிழகத்தில் சிதம்பரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஆறுமுகநாவலர் பள்ளியை நிறுவி கல்விப்பணி மேற்கொண்டுள்ளார். அவர் வாழ்ந்த காலம் இலங்கையும், இந்தியாவும் பிரிட்டிஷார் ஆட்சியில் இருந்தது. அப்படி இருந்தும் கூட தமிழை வளர்க்க பல்வேறு நூல்களை இயற்றி வெளியிட்டு தமிழுக்கு பெருமைபடுத்தியவர் ஆறுமுகநாவலர். தமிழுக்காகவும், சைவத்திற்கு இறுதி மூச்சு வரை பாடுபட்ட நாவலர் தமிழகசதத்திலேயே இயற்கை எய்தினார். 1971-ம் ஆண்டே இலங்கை அரசு அவருக்கு தபால்தலை வெளியிட்டுள்ளது. அவர் நிறுவிய சிதம்பரம் ஸ்ரீஆறுமுக நாவலர் பள்ளியின் 150வது ஆண்டை முன்னிட்டு மத்தியஅரசு, அவருக்கு தபால் தலை வெளியிட்டு சிறப்பிக்க வேண்டும் என கடிதத்தில் வே.ராஜரத்தினம் தெரிவித்துள்ளார்.

நன்றி தினமணி.காம் 

சங்கத் தமிழ் மகாநாடு 10,11,12 -10 -2014

.
சிட்னி தமிழ் இலக்கிய  கலை மன்றம் வழங்கும் சங்கத் தமிழ் மகாநாடு

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் வரும் அக்டோபர் 2014 இல் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில்  (மாலை  4 மணி முதல் 9.30 வரை )சிட்னியில் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மகாநாட்டில் தங்கள் வருகை மாகாநாட்டிற்கு சிறப்பாகும்.

நமது இளைய தலைமுறைக்கு தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் வகையில்  தாங்கள்  ஆற்றி வரும் தொண்டு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மாநாட்டை அனைவருக்கும் அறியசெய்து பெருமளவில் தமிழர்கள் பங்கு கொள்ள வேண்டுகிறோம்.

தமிழால் இணைவோம்!     தமிழை வளர்ப்போம்!!

Please Visit : www.stmsydney.com.au


மகாத்மா காந்திக்கு 145 வயது - முருகபூபதி

.

சிறையிலிருந்த   காந்தியும்  அவர்  சுத்திகரித்த  கழிவறையும்  சுத்தப்படுத்த   முனைந்த    தேசமும்

 இந்தியாவில்  குஜராத்  மாநிலத்தில்   போர்பந்தர்   என்னும்  இடத்தில் 145    ஆண்டுகளுக்கு   முன்னர்    பிறந்த   குழந்தை   காந்தி   எப்படி மகாத்மாவானார்...?  எவ்வாறு    ஒரு    தேசத்தின்    பிதாவாக   மாறினார் ....? என்பதற்கெல்லாம்    வரலாறுகள்    இருக்கின்றன.
 தற்காலக்குழந்தைகளுக்கும்  இனிபிறக்கவிருக்கும்  குழந்தைகளுக்கும்    இப்படியும்   ஒரு    மனிதர்   ஆசியாக்கண்டத்தில் ஒரு  காலத்தில்   பிறந்து   -  வாழ்ந்து   - மறைந்தார்    என்று சொல்லிக்காண்பிப்பதற்கு  காந்தி    பற்றிய   திரைப்படங்களும் ஆங்கிலத்திலும்   அனைந்திந்திய    மொழிகளிலும்  இருக்கின்றன.
இந்திய   சுதந்திரத்திற்காக   அகிம்சை    வழியில் உண்ணாவிரதப்போர்களையும்  மௌனத்துடன்   உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும்   நடத்தி    நேற்று  வரையில்    இந்தப்போர்களை எதற்காகவும்    தொடரலாம்   என்ற    முன்னுதாரணத்தையும்   அன்றே விதைத்துவிட்டுச்சென்றிருப்பவருக்கு   (02-10-2014)    145   ஆவது  பிறந்த  தினம்.

சங்கத் தமிழ் மாநாட்டுப் பாடல் சங்க தமிழ் காட்சியோடு

.

சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 10,11 & 12th October-2014 சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் வரும் அக்டோபர் 2014 இல் 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் சிட்னியில் நடத்தவுள்ள சங்கத் தமிழ் மாநாட்டில் 
தமிழ் அறிஞர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றார்கள் .துர்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள தமிழர்  மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. அனைவரையும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றத்தினர்.
மாநாட்டுப்பாடலை சங்க தமிழ் காட்சியோடு பாருங்கள் .

சங்க இலக்கியக் காட்சிகள் 26- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காவலன் போல நிற்கும் காதலன்!



அவனும் அவளும் காதலர்கள். ஊருக்கும் தெரியாமல். உறவினரும் அறியாமல் ஒருவரையொருவர் நீண்ட காலமாகக் காதலித்து வருகிறார்கள். பகலிலே அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதில்லை. சந்திக்கவும் முடியாது. வெளியில் எங்காவது ஒருவரையொருவர் காண நேர்ந்தாலும் முன்பின் அறியாதவர்கள்போலää பழக்கம் இல்லாதவர்கள் போலவே காட்டிக்கொள்வார்கள். ஆனால் அடிக்கடி இரவு நேரங்களில் இருவரும் சந்திப்பார்கள். தமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்பார்கள். அப்போதும்கூடää அவள் தனது தோழியையும் துணைக்குக் கூட்டிக்கொண்டே வருவாள். அவர்களது காதல் உறவு அவளது தோழிக்கு மட்டுமே தெரிந்த விடயம். யாரிடமும் மாட்டிக்கொள்ளக் கூடாதே என்பதற்காக இருவரும் சந்திக்கும் இடத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்வார்கள்.

அன்றும் அப்படித்தான் இரவு நேரத்திலே, ஊர் உறங்கும் சாமத்திலே அவளும் தொழியும் காதலனைச் சந்திக்கச் செல்கின்றார்கள். அன்று அவர்கள் சந்திக்க முடிவுசெய்திருந்த இடம் குளக்கரை.

இசை உலகில் நிரோஜன் பிரபாகரன்

.

MELBOURNE எந்திர மாலை 2014 - 11.10.2014

.


செயற்பாடுகளை காண்பதற்கு கீழே செல்லுங்கள்

ஆஸ்கர் விருது இந்தியா சார்பில் கீது மோகன்தாஸின் 'லையர்ஸ் டைஸ்' தேர்வு

.

2015- ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியின் சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 'லையர்ஸ் டைஸ்' (Liar's Dice) அனுப்பப்பட உள்ளது.
என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நள தமயந்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்த கீது மோகன் தாஸ் இயக்கிய படம் 'லையர்ஸ் டைஸ்'. இந்த திரைப்படத்தில் கீதாஞ்சலி தபா, நவாஸுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சிறந்த நடிகை மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதுகளை கடந்த ஆண்டு இந்த திரைப்படம் வென்றது.
2015-ஆம் வருடத்திற்கான ஆஸ்கார் விருது போட்டிக்கு சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவில் பங்கேற்க, இந்தியாவிலிருந்த அனுப்பக் கூடிய திரைப்படங்களை தேர்வு செய்யும் போட்டியில் 30 படங்கள் பங்கேற்றன. அந்த திரைப்படங்களில் 'லையர்ஸ் டைஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புது டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் சுப்ரான் சென், இந்தியாவின் சார்பாக ஆஸ்கார் விருது போட்டியில் 'லையர்ஸ் டைஸ்' படத்தை அனுப்புவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

குடிக்கக் கொஞ்சம் தண்ணி தாங்கோ! - பானுபாரதி-

.
இது தீவகத்தில் மெலிஞ்சிமுனை என்ற மீன்பிடிக் கிராமத்தின் இன்றைய நிலை, நாளைய வரலாறு. -
தாகத்தில் நா வரண்டு
தவிக்கிறது கிராமம்.
மனிதக் கருவாடுகளாய்
அதன் மக்கள்.

மாண்புமிகு தலைவர்கள்
தலை மறைவு.

நாளை வருவார்கள்
தண்ணீர் ஆய்வுகள் செய்ய
ஆராய்ச்சியாளர்கள்.
அப்போ
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மனித எலும்புக் கூடுகளை
தோண்டியெடுத்து
காட்சிச் சாலைக்கு
எடுத்துச் செல்வார்கள்.

இந்தச் சாதனையை ஊடகங்கள்
கவர்ச்சிகரமாக எடுத்தியம்பி
தங்கள் கல்லாவை நிறைக்கும்.



nantri  piraththiyaal.com

'தூய்மை இந்தியா' திட்டம்: மோடி அழைப்பை ஏற்றார் கமல்ஹாசன்

.

ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பினை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஸ்வச் பாரத் அல்லது தூய்மை இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் புதிய விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக அவர் மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவின் முக்கிய ஆளுமைகள் பெயர்களைக் கூறி அவர்களும் தன்னுடன் இணையுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ், உள்ளிட்ட ஆளுமைகளை தனது தூய்மை இந்தியா சவாலுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்தார்.
பிரதமரின் சாவலை நடிகர் கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை.
"மதிப்பிற்குரிய பிரதமர் குறிப்பிட்டுள்ள ஒன்பது பேர்களில் என் பெயரும் இடம் பெற்றிருப்பதை ஒரு பெரும் பாக்கியமாக நான் கருதுகிறேன். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட மனித சேவை என்பதில் என்றுமே நம்பிக்கை உள்ளவன் நான்.
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் அரிய ஒன்பது பேர்களில் நாங்கள் அனைவருமே வெவ்வேறு கருத்துக்கள் உடையவர்கள். நான் மனித நேயத்தை ஆத்திகம் மூலமாகவோ, வேறு சித்தாந்தங்கள் மூலமாகவோ அணுகாமல் மனிதம் மூலமாக, பகுத்தறிவு மூலமாக அணுகி வாழ்க்கையைய் வாழ்ந்து கொண்டிருப்பவன்.

கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்

.
ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர். புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். 

புத்தரின் பிறப்பு :

கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது. 

புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.

வில்லவராயர்-சின்னத்தம்பிப் புலவர் - வேதா இலங்காதிலகம், டென்மார்க்

.
ரராச சேகர மன்னர் பரம்பரையில்
வில்லவராய முதலியாரொரு வித்துவான்,
ஒல்லாந்த ராட்சிக்காலக் கச்சேரி முதல்வர்.
வல்லவனான தன் இளையமகனுக்கு இவர்
வைத்த பெயர் செயதுங்கமாப்பாண முதலி.
நிலைத்தது சின்னத்தம்பியென அழைத்த பெயர்.
பாடத்தில் கருத்தற்றுச் சிறாருடன் சின்னத்தம்பி
ஓடி விளையாடிக் களித்தார் இளமையில்.
விளையாடினும் கவிபுனையும் ஆற்றலுடனிருந்தார். 
மாலையில் கூழங்கைத் தம்பிரானின் வித்தியா 
கலாட்சேபங்கள் கேட்டு ஏழு வயதிலேயே 
பாடல்களை அவதானித்து ஒப்புவித்தார் – ஒருநாள்
வடதேச வித்துவானொருவர் நல்லூருக்கு வந்தார்.
தடம் தெரியாது, வில்லவராயர் வீடெதுவென்று 
தெருவில் விளையாடிய சிறுவரிடம் வினவினார்.
சிறுவனொருவன் துணிந்து பாட்டிலேயே பதிலிறுத்தான்.

Blood Drive / இரத்த தானம்‏

.
Date:              Saturday 8 November 2014
Venue:           Red Cross Parramatta Donor Centre, 22-30 Oak Street, Rosehill NSW 2142
Times:           9am – 3pm

உலகச் செய்திகள்


ஜப்பானிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ. பன்னீர்செல்வம்

ஜெ : சில குறிப்புகள்

இந்திய அரசியலின் மிகப்பெரிய புற்றுநோய் ஊழல்

எமது இணைந்த முயற்சிகள் சர்வதேச பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு உதவும்

சிரியாவில் ஐ.எஸ். போராளிகளால் ஐவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை - தண்டனை விதிப்புக்குள்ளானவர்களில் மூவர் பெண்கள்


ஜப்பானிய எரிமலை குமுற ஆரம்பிப்பு

29/09/2014  ஜப்­பா­னி­லுள்ள ஒன்டேக் எரி­மலை சனிக்­கி­ழமை குமுற ஆரம்­பித்­த­தை­ய­டுத்து, அந்த எரி­ம­லைக்கு அருகே 31 மலை ஏறு­ப­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அஞ்­சப்­ப­டு­கின்­றது.


அவர்கள் 31 பேரி­டமும் சுவாசம் இல்­லா­தி­ருந்­த­துடன் அவர்களது இரு­தய இயக்­கமும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தி­ருந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன. எனினும், அவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளார்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான மருத்­துவப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்ட பின்­னரே அவர்­க­ளது மரணம் தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

காந்தியின் பரிசோதனைக்கூடமாக இருந்த சத்தியத்தின் வரலாறு…

.

நன்றியின் அடையாளமாக உப்பும், மானத்தின் குறியீடாக ஆடையைத் தரும் ராட்டையும், மனசாட்சியின் பிரதி பலிப்பாகச் சத்தியமும் விடுதலைக் கால இந்தியரின் மூன்று போராட்ட ஆயுதங்கள். அக உணர்வைத் தூண்டும் தன்மை கொண்ட அவை இந்தியர்களிடம் எழுச்சியை உருவாக்கின. காந்தி இந்த எழுச்சியை வெற்றியாக மாற்றினார், இந்தியாவின் தந்தையானார்.
விடுதலை அடைந்த இந்தியாவில் உப்பும் ராட்டையும் பல மாற்றங்கள் பெற்றன. வைரம்போல மின்னும் கல் உப்பு உடைந்து தூளாகி, இன்று அயோடின் கலந்து ஆரோக்கியத்தின் அடிப்படையாகிவிட்டது. பெருநிறுவனங் களும் அரசாங்கமுமே அதன் விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ராட்டைகள் பெரும் தொழிற்சாலைகளில் ராட்சச வடிவம் எடுத்துத் துணிகளை நெய்துதள்ளுகின்றன. தெருவுக்கு நான்கு பிரம்மாண்ட துணிக் கடைகள்.
இப்படி முன்னிரண்டும் கால ஓட்டத்தில் மிதமிஞ்சிப் பெருகச் சத்தியத்துக்கு மட்டும் சோதனை. சத்தியத்தின் இருப்பு முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது அருகிவிட்டது. புராண அரிச்சந்திரனின் பிறந்த நாள் உறுதியாகத் தெரியாத நிலையில், கண்கண்ட அரிச்சந்திரனான காந்தியின் பிறந்த நாளில் சத்தியத்துக்கும் நமக்குமான பண்பாட்டு உறவைக் கொஞ்சம் அசை போடலாம்! இதை சத்தியாக் கிரகத்திலிருந்தே தொடங்கலாம்.
சத்தியாக்கிரகத்தின் தோற்றம்

ஏர் பிடித் துழுவோம்

.

எழிலுரு உலக மாதா
இதயமாம் இளைஞர் சக்தி !
தொழிலெனும் கருவி கொண்டு
துரத்துதல் ஆகும் :பொல்லா
இழிவிருள் வறுமை தன்னை
இரவியாய் மிளிரும் தூய
இளைஞரே ஒன்று கூடி
இன்பமாய் உழைக்க வாரீர்
பள்ளியில் படித்தோம் !மேன்மை
பட்டங்கள் யாவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி பூண்டு
குவலயம் தன்னை மீட்க
தெள்ளிய உணர்வி னோடு
திறம்பட உழைத்து மண்ணை
வெள்ளிடை மலையாய் என்றும்
விளங்கிட வைக்க வாரீர்

தமிழ் சினிமா


ஜீவா


கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட் தான்.தன்னுடைய படங்களில் எப்போதும் ஒரு சாதாரண மனிதனின் இயல்பு வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களையே படமாக எடுக்கும் சுசீந்திரன் இந்த முறை கையில் எடுத்திருப்பது கிரிக்கெட். நம் தமிழக மண்ணில் கிரிக்கெட் ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது என்பதை மிக நெருக்கமாக படம் பிடித்திருக்கிறார் .

மிக இயல்பாக நாயகனுக்கு கிரிக்கெட் சிறு வயதில் இருந்து அவனோடு எப்படி ஒட்டிப்போகிறது என்பதை படம் துவங்குவதில் மிக அழகாக சொல்லிவிட்டு, வழக்கமான ஒரு காதல் எபிசோடை ரொம்பவும் போட்டு திணிக்காமல், சின்னதாக ஒரு பிரேக் விட்டு பின்பு தொடர்கிறார்.

கிரிக்கெட்டையும் அதனால் ஏற்படும் சாதாரண குடும்பத்து பிரச்சினைகளையும், கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் சாதாரண குடும்பத்து இளைஞர்கள் எப்படி எல்லாம் ஓரங்கட்டபடுவார்கள் என்பதை தைரியமாக சொல்லிவிட்டு, கிரிக்கெட் நட்பையும் அந்த நட்பின் பிரிவையும் அழுத்தமாக சொல்லி நெகட்டிவாக ஒரு எண்டு கார்டு போடாமல் பாசிட்டிவாக படத்தை முடித்து கைதட்டு வாங்கிவிட்டார் சுசீந்திரன்.

“ஜீவா” வாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் அப்படியே இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்திவிட்டார். நல்ல விளையாடுகிறார் [அவரும் ஒரு நிஜ கிரிக்கெட்டர்] நல்ல நடிக்கவும் செய்திருக்கிறார். இமான் பின்னணி இசையிலும் பாடல்களிலும் [ஒரே ஒரு பாடலை தவிர] பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவு மதி கிரிக்கெட் விளையாட்டை படம் பிடிப்பதில் இருக்கும் சிரமங்களை துளியும் திரையில் தெரியாமல் மிக நேர்த்தியாக படம் பிடித்து இருக்கிறார்.

கதாநாயகி ஸ்ரீ திவ்யா பள்ளிக்கு செல்லும் மாணவியாக, கல்லூரி மாணவியாக, வேலைக்கு செல்லும் பெண்ணாக பொருத்தமாக இருக்கிறார்.கிரிக்கெட்டில் திறமையும் வேகமும் மட்டும் இருந்தால் போதாது அதுக்கு வேற ஒரு குடியில பிறந்திருக்கணும் என்பதையும், கண்ணுக்கு தெரிந்த மனித விஷக்கிருமிகள் இன்னும் எத்தனையோ திறமைசாலிகளை ‘எப்படி இல்லாமல் ஆக்குகின்றனர்’ என்பதை வெளிச்சம்போட்டு காட்டி இருக்கும் படம்தான் “ஜீவா”.
மொத்தத்தில் “ஜீவா” கிரிக்கெட் வீரனின் மற்றொரு ஜீவன் -  நன்றி cineulagam