பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா பிறந்த தின வாழ்த்துக்கள்

அவுஸ்திரேலியாவிலும் மற்றைய இடங்களிலும் நவம்பர் மாதம் 23ம் திகதி பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்  பக்தர்கள் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்  85வது பிறந்த தினத்தை பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின்   நிலையங்களில் மிக சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

கவிதை - ஈழமண்ணுக்காய் நீங்கள் போராட

.
ஈழமண்ணுக்காய் நீங்கள் போராட

ஈழமண்ணைவிட்டு நாங்கள் ஓடினோம்
மண்ணுக்காய் நீங்கள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டீர்கள்
மண்ணின் நினைவை மண்ணுக்குள் நாங்கள் புதைத்தோம்
காட்டிலும் மேட்டிலும் ஈழக்கனவோடு நீங்கள் படுத்துறங்க
கட்டிலில் படுத்திருந்து காசுக்கனவுகண்டோம் நாங்கள்

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்ப்பாண விஜயம்

.
மக்கள் விடுதலை முன்னணி யாழ்ப்பாணத்திலும். கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் மாத்திரமன்றி முக்கியஸ்தர்கள் பலரும் யாழ்ப்பாணம் போயிருந்தார்கள். இவர்கள் அங்கு சுற்றுலாவுக்குச் செல்லவில்லை. வணக் கத் தலங்களைத் தரிசிப்பதற்காகவும் செல்லவில்லை.

அண்மைக் காலத்தில் பலர் காணாமல் போயிருக்கின்றனர். அரசாங்க படையினர் மேற்கொண்ட மனிதாபிமான இரா ணுவ நடவடிக்கை முடிவடைந்த பின்னர், காணாமல் போனவர்கள் பற்றிய பிரச்சினை எழுந்திருக்கின்றது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்திடம் பலர் கோரிக்கை விடுக்கின்றார்கள். நல் லிணக்க ஆணைக்குழு வடக்கில் நடத்தும் விசாரணைக ளிலும் இக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

ஆங் சான் சூகி

.
ஆங் சான் சூகி.மியான்மாரில் இராணுவ சர்வாதிகாரிகளை எதிர்த்து கடந்த 20 ஆண்டுகளாகப் போராடிவரும் இந்தச் சுதந்திரப் போராளி,கடந்த சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.நமது அண்டை நாடான மியன்மாரில்(பழைய பர்மா) நடந்துவரும் மிகப்பெரிய சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்து மனித இனத்தின் சுதந்திர,சமத்துவ,சமதர்மக் கோட்பாடுகளுக்காகக் குரலெழுப்ப வேண்டிய கடமை இந்தியாவுக்கு உண்டு.

கணவருடன் தென்னாபிரிக்கா சென்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை!

தனது பிரித்தானிய கணவருடன் தேன்நிலவுக்காக தென்னாபிரிக்கா சென்றிருந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை

.

 யாழ்ப்பாணத்த்தின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணற்காடு - குடத்தனைப் பகுதியிலுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திலுள்ள வாழையொன்று 10 அரை அடி நீளமான வாலைக்குலையொன்றை ஈர்ந்துள்ளது.

கந்தாஸ் (Qantas) விமானம் அவசரகால நிலைமையின் கீழ் தரையிறக்கம்

 .
பேர்த் நகரிலிருந்து மெல்போர்ன் நகருக்கு 234 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று சனிக்கிழமை மாலை இயந்திரக் கோளாறு காரணமாக அவசரகால நிலைமையின் கீழ் பேர்த் நகரில் மீளவும் தரையிறக்கப்பட்டது.

இந்த “போயிங் 767' விமானமானது தரையிலிருந்து 7000 அடி உயரத்தில் பயணித்தபோது விமானத்தின் இயந்திரமொன்றில் கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து தரையிறக்கப்பட்ட விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு பிறிதொரு விமானத்தில் மெல்போர்ன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அறிவியல் என்னும் வழிபாடு

.

<><><>அமரர் சர் சி.வி.ராமன் தமிழில் மொழிபெயர்ப்பு சத்யானந்தன்

(18.11.1950 அன்று ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நோபல் பரிசு  பெற்ற அமரர் சர் சி.வி.ராமன் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் வாய்ப்பு அற்பமான கவுரவம் அல்ல. அதுவும் இரண்டாவது முறையாக ஒரே பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவது வித்தியாசமான அனுபவம். வறுமை தரும் வலிகளை நான் அறிவேன்.

உண்மை கலந்த நாட் குறிப்புகள் நூல் விமர்சனம் - பராசக்தி சுந்தரலிங்கம்


ரஸவாதம்யாழ்ப்hணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. அ. முத்துலிங்கம் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர். இப்பொழுது அவர் கனடா நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவருடைய ~உண்மை கலந்த நாட்குறிப்புகள்
(சுயசரிதை) என்னும் நூலைச் சமீபத்திலே வாசித்த போது நல்லதோர் அனுபவப் பதிவைப் படித்த மனநிறைவு ஏற்பட்டது.

தமிழ் சினிமா

1. இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்… ரஜினிக்கு சிக்கு புக்கு நடிகை வாழ்த்து2. 500 கோடி பட்ஜெட்டில் ஷங்கரின் படம் – தகவல் வரவில்லை – கமல்ஹாசன் பதில்

ஆன்மீகம்

.
தொண்டரடி பொடி ஆழ்வார்

இந்த வாரம் 12 ஆழ்வார்களுள் அடுத்த ஆழ்வாரான தொண்டரடி பொடி  ஆழ்வாரை பற்றி காண்போம்.  பெரியாழ்வரின் குமாரியான ஆண்டாளின் பெருமையை புனிதமான மார்கழி  மாதத்திர்க்கு முன் பார்ப்போம்.
தொண்டரடி பொடி ஆழ்வார் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளால் மண்டங்குடி  என்னும் ஊரில் கலியுகம் 289 ஆம் ஆண்டில் ஒரு அந்தணர் குலத்தில் அவதரித்தார். இவருக்கு பெற்றோர்விப்ர நாராயணன்” என்று பெயர் சூட்டினார். இவர் பகவானின்வைஜயந்தி மாலையின்” அம்சம் ஆவார். விப்ர நாராயணன்  தக்க வயதில் கல்வி கேள்விகளிலும், வேத சாஸ்திரங்களிலும் தேர்ச்சி, பகவத் பக்தியிலும் , பாகவத சேவையிலும் சிறந்து விளங்கினார்.

இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கைல் 333 ஒட்டங்களைப் பெற்றார்

.
இலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கைல் முச்சததத்தைக் கடந்துள்ளார். காலியில் நடைபெறும் இப்போட்டியில் இரண்டாவது நாளில் தனது இரண்டாவது டெஸ்ட் முச்சதத்தைப் பூர்த்தி செய்தார். 31 வயதான கிறிஸ் கைல், 2005ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா அணிக்கெதிராக 317 ஒட்டங்களைப் பெற்றமையே டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்ற அதிகூடிய ஒட்ட எண்ணிக்கையாக இருந்தது.