யாவரும் வியக்கும் வண்ணம் நற்கதி அடைந்தார் நிறைவில் !

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



              காமனைத் தகனம் செய்தார் 


            கதிர்வேலன் உதிக்க வைத்தார்
            பிரம்மமாய் எழுந்து நின்றார்
            பெரும்விஷம் எடுத்து நின்றார் 
            அப்பெரும் அரனார் அருகில்
            அணுகிடும் தொண்டர் ஆகி 
            நிற்கின்ற பெருமை பெற்றார்
            நினைப்பதில் களங்க முற்றார்  

            அணுகிடும் தொண்டர் மாற்றம்
            அரன் உளம் ஏற்கவில்லை
            புவியதில் பிறப்பாய் என்று
            புகன்றிட்டார் பொறுக்க வொண்ணா 
            காத்திட வேண்டும் என்று
            கைகூப்பிக் கேட்டார் தொண்டர்
            கைலையில் இருக்கும் நாதன்
            கருணையைப் பொழிவேன் என்றார்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 23 பொன்னியின் செல்வன் ஓவியர் மணியம் இல்லத்தில்…. தமிழக கலை, இலக்கிய ஆளுமைகளிடம் கற்றதும் பெற்றதும் !! முருகபூபதி


கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் புகழ்பெற்ற புதினம். எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கல்கியில் தொடராக எழுதிய இக்கதை, அவர் மறைந்த பின்னரும் தொடர்ந்து பேசப்படுகிறது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திரப் பட்டாளமே தோன்றியிருக்கும் பொன்னியின் செல்வன் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது. மற்றும் ஒன்று 2023 ஆம் ஆண்டு வெளியாகிறது.

பல வருடங்களுக்கு முன்னர் எம்.ஜி. ஆர். இக்கதையை


ஐம்பதினாயிரம் ரூபாவுக்கு வாங்கி, பின்னாளில் தமிழ்த்திரையுலகில் பிரபல்யம் பெற்ற முள்ளும் மலரும் மகேந்திரனை அழைத்து தனது வீட்டில் தங்கவைத்து  திரைக்கதை வசனம் எழுதி வாங்கினார்.

எனினும்,  அன்று அந்தப்படம் தயாரிப்பிற்கான முன் முயற்சியோடு நின்றுவிட்டது.  இதுபற்றி முள்ளும் மலரும் மகேந்திரன் தனது சினிமாவும் நானும் என்ற நூலிலும் விரிவாக எழுதியுள்ளார். இதனை பதிப்பித்து வெளியிட்டவர் எங்கள் எஸ். பொ. ( மித்ர பதிப்பகம் )

பென்னியின் செல்வன் தொடர்கதை மீண்டும் மீண்டும் கல்கியில் வெளியானது.  நூலாக வெளிவந்து பல பதிப்புகளையும் கண்டுவிட்டது.

அதன் வசனங்களுடன் இறுவட்டுக்களும் வெளியாகிவிட்டன.  எங்கள் குடும்பத்தில் எனது அம்மா, பெத்தாச்சி உட்பட பலரும் எனது சிறிய வயது காலத்தில் படித்தார்கள். எனது மச்சானுக்கு  ( அக்காவின் கணவர் )  தற்போது 85 வயதாகிறது. அவர் இப்போதும் பொன்னியின் செல்வனை படித்துக்கொண்டிருக்கிறார்.

எனது மனைவி மாலதியின் குடும்பத்திலிருக்கும் அனைவருமே பொன்னியின் செல்வனை படித்தவர்கள்தான்.

ஆனால், நான்தான் இதுவரையில் அதனை படிக்கவேயில்லை.  இதனை அறிந்த எனது மனைவி ஒருநாள்  “ பொன்னியின் செல்வனை படிக்காத  நீங்கள் எல்லாம் என்ன எழுத்தாளர்…?  “ என்றும் கேட்டிருக்கிறாள்.

அதற்கு நான் ஜெயகாந்தன் பாணியில்,  “ எனக்கு அம்புலிமாமாவில் வரும் கதைகள்தான் பிடித்தமானது  “ என்றேன்.

இந்த முன்கதைச் சுருக்கத்தின் பின்னணியில்  மணிரத்தினம் பொன்னியின் செல்வனை பெரும் பொருட் செலவில் தயாரித்து முடிக்கும் கட்டத்திற்கு வந்துள்ளார்.

வாசகர் முற்றம் வாசகியாக வளர்ந்து, படைப்பிலக்கியவாதியாகிய சியாமளா யோகேஸ்வரன் முருகபூபதி


எழுத்தாளர்கள் என்ற மகுடத்திற்குள்தான் படைப்பிலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும் வருகின்றார்கள்.

இவர்களின் முதல் தெரிவாகியிருப்பது நூல்களும் இதழ்கள், பத்திரிகைகளும்தான்.  அவற்றை வாசித்து பெற்ற அனுபவங்களிலிருந்தே, எழுத்துத் துறைக்குள் பிரவேசிக்கின்றார்கள்.

அவ்வாறு படிப்படியாக தேர்ந்த வாசகியாக வளர்ந்து காலப்போக்கில் படைப்பிலக்கியவாதியாக மலர்ந்து சிறுகதை, நாவல்  எழுதியவர் பற்றித்தான் இந்த வாசகர் முற்றத்தில் அறிமுகப்படுத்துகின்றோம்.

இலங்கையின் வடபுலத்தில் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக்கொண்டு அங்கே  மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆண்டு பன்னிரண்டாம் தரம்  வரையில் பயின்று பின்னர் பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து பின்னாளில்  அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து  பிறிஸ்பேனில் கடந்த பதினாறு ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர் எழுத்தாளர் திருமதி சியாமளா யோகேஸ்வரன்.

இதுவரையில்  இதயராகம் ( நாவல் ) உறவுகள் ( சிறுகதை ) ஆகிய நூல்களையும் வரவாக்கியிருப்பவர்.  அண்மையில் கானல் நீர் என்ற நாவலையும் எழுதி முடித்துள்ளார்.

இளம்வயதில் பெற்ற வாசிப்பு அனுபவம் பற்றி, சியாமளாவிடம் கேட்டோம்.

 “ ஐந்து வயதில் சிறுவர்களுக்கான காமிக்ஸ்  நூலில் தொடங்கி, பின்னர் வீரகேசரி, தினக்குரல் முரசொலி முதலான  பத்திரிகைகளை வாசிக்க வீட்டில் அனுமதி கிடைத்தது.  இந்திய எழுத்தாளர்களான லஷ்மி, இந்துமதி, பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சாண்டில்யன், கல்கி, பாலகுமாரன் போன்றோரின் கதைகளையும் இலங்கை எழுத்தாளர்களான தாமரைச்செல்வி, டொமினிக் ஜீவா போன்றோரின் கதைகளையும்  எனது  பதின்ம வயதுகளில் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றேன். கைகளில் கிடைக்கும் புத்தகங்கள் எதுவானாலும் வாசித்து முடித்து விடுவது எனது பழக்கமாகவே இருந்தது.  “ என்றார்.

பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் படைப்பாளி கே ஆர் டேவிட் சிறுகதைகள் – வாசிப்பு அனுபவம் தாமரைச்செல்வி

 

( அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட போட்டியில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற கே. ஆர். டேவிட் சிறுகதைகள் தொடர்பாக இச்சங்கம் நடத்திய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட உரை )

 


இலக்கிய உலகில் தன் எழுத்துக்களால் தனக்கென ஒரு இடத்தைத்  தக்க வைத்திருப்பவர் கே ஆர் டேவிட்.  . சிறுகதை, குறுநாவல், நாவல் எனும் தளங்களில் அறுபது வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர். தன்னுடைய  எழுத்துக்களுக்காக பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருப்பவர்.  இலங்கையில் வசிக்கும் எழுத்தாளர்களுக்காக அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய போட்டியில் சிறுகதைகளுக்கான விருதை கே

ஆர் டேவிட்  சிறுகதைகள் எனும் தொகுதி பெற்றிருக்கின்றது. இப்படி ஒரு போட்டியை  நடத்திய அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினருக்கு பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கின்றேன். பரிசு பெற்ற  இந்நூலின் ஆசிரியருக்கும் என் வாழ்த்துக்கள்.

 இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய இராஜேஸ் கண்ணன்,  தோழமையுரை வழங்கிய ராதேயன் மற்றும் கருத்துரைகளை வழங்கிய இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகள் ஆறுபேர் என எட்டுப் பேர் கே.ஆர். டேவிட் பற்றியும் அவரது கதைகள் பற்றியும் இதில் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு படைப்பாளி


இச்சமூகத்தை எப்படிப் பார்க்கிறான்… எப்படி அந்த மக்களின் வாழ்வியலை உள்வாங்குகின்றான்… அதை எந்த விதத்தில் எழுத்தாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறான்… என்பது பற்றி பல பார்வைகள் விமர்சனங்கள் எழுவதுண்டு. அதற்காக ஒரு படைப்பாளி எந்த விதமாக செயல்படுகிறான் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த விதத்தால் தனது எழுத்தால் கவனம் பெற்ற ஒருவராகவே எம்மால் கே. ஆர், டேவிட் அவர்களைப் பார்க்க முடிகிறது. இவரது சிறுகதைகள் நமக்கு பல்வேறு அனுபவங்களைத் தருகின்றன. அந்த அனுபவங்கள் எமக்குள் அதிர்வுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கால நகர்வு இவரது எழுத்துக்களுக்கு வலு சேர்த்துக் கோண்டே வந்திருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. சக மனிதர்களை நோக்கும் இவரது பார்வை கூர்மை மிக்கது. தன்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்வை பதிவு செய்வதே எழுத்தாளராகிய தனது கடமை என்ற நோக்கில் தனது பயணத்தை மேற்கொண்டு வந்திருப்பவராகவே இவரைப் பார்க்க முடிகிறது.

 கே. ஆர். டேவிட் எனும் பெயர் நான் எழுத ஆரம்பித்த எழுபதுகளிலேயே எனக்கு பரிச்சயமாகிவிட்ட ஒரு பெயர். பத்திரிகைகள் சஞ்சிகைகளில் இவரது கதைகள் வரும்போது தவறாமல் படித்திருக்கிறேன். இப்போது இந்நூலை வாசிக்கும்  போது பல கதைகளை அந்த நாட்களில் படித்த நினைவு வந்தது. மனதைப் பாதித்த கதைகள் என்றும் நினைவில் இருந்தும் மறையாமல் நெருடிக்கொண்டேதான் இருக்கும். எளிமையான நடையில் வலுவான கருத்துக்களைச் சொல்லும் கதைகள் இவருடையது. நல்லதொரு கதை சொல்லியாக தன்னை எப்போதுமே அடையாளப்படுத்தியிருக்கிறார்.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 24 காலத்தின் குரலாக ஒலித்த ஜெயகாந்தன் நினைவுகள் ! ஈழம் வராமலேயே ஈழத்து இலக்கியத்தில் தாக்கம் செலுத்திய ஜேகே. !! முருகபூபதி


நான்  இலக்கிய உலகில் பிரவேசித்த  ( 1971 ) காலப்பகுதியில்தான்  தென்னிலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சியை தொடங்கியது.

அவ்வேளையில் அவசர கால சட்டமும் இரவில் ஊரடங்குச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.  என்னைப்போன்ற இளைஞர்கள் வெளியே நடமாட அஞ்சிய காலம்.  அதனால் வீட்டில் வளர்மதி நூலகம் அமைத்து நண்பர்களிடம் நூல்களை பரிமாறி வாசித்தோம்.

அப்போது ஜெயகாந்தனின் எழுத்துக்கள் எம்மை பெரிதும்


கவர்ந்தன.  அவர் மல்லிகை ஜீவாவின் நண்பராகவும் இருந்தார்.

ஜெயகாந்தனுடன் கருத்து ரீதியாக முரண்பட்ட ஜீவா, மல்லிகையில் நீண்ட தொடரும் எழுதினார்.  ஜெயகாந்தனும் அவற்றை படித்திருந்தாலும்,  தனக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத பிறவி அவர்.

பின்னாளில் ஜீவா சென்னை சென்றவேளையிலும் வீட்டுக்கு அழைத்து உபசரித்தவர்தான் ஜெயகாந்தன் என்ற ஜேகே.

அவரது பெரும்பாலான நூல்களை 1970 – 1980 காலப்பகுதியிலேயே படித்து முடித்துவிட்டேன். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அந்த நூல்களில் அவர் எழுதும் முன்னுரைகளிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

1984 இல் சென்னை சென்றவேளையிலும் அவரை சந்திக்கத் தயங்கிய நான், வெகு தொலைவில் கோவில்பட்டிக்கு அருகாமையிலிருக்கும் இடைசெவல் கிராமத்திற்குச் சென்று எழுத்தாளர் கி. ராஜநாராயணனை சந்தித்துவிட்டு வந்து வீரகேசரியிலும் எழுதியிருக்கின்றேன்.

கி.ரா. , நான் ஜேகே.யை சந்திக்காமல் செல்வது குறித்து கவலைப்பட்டார்.

 “ நீங்கள் நினைப்பது போன்று ஜே. கே. கோபக்காரர் அல்ல.  அடுத்த முறை வந்தால் அவசியம்  சந்தித்து பேசுங்கள். அவரை எவரேனும் சீண்டினால்தான் கோபப்படுவார்  “ என்றார் கிரா.

1990 ஆம் ஆண்டு மீண்டும் நான் சென்னை  சென்றபோது, குடும்பத்தினரும் இலங்கையிலிருந்து வந்தமையால் ஜே.கே. யுடனான சந்திப்பு இறுதி நேரத்தில்தான் நடந்தது.

சோவியத் கலாசார நிலையத்தில் நடந்த தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக்கும் ஜேகே. வரவில்லை.  திருநெல்வேலி, சாத்தூர், மதுரை, திருச்செந்தூர் பயணங்களை முடித்துக்கொண்டு  மீண்டும் சென்னைக்கு வந்தோம்.

சென்னை தினமணியில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் கார்மேகமும் , இம்முறையாவது ஜேகே யை பார்த்துவிட்டு திரும்புங்கள் என்றார்.

SPB பாடகன் சங்கதி நூல் பிறந்த கதை - நூலாசிரியர் கானா பிரபா பேசுகிறார்



இந்த நூல் ஆக்கிய அனுபவத்தை சிட்னியில் இயங்கும் பல்லின மொழி வானொலி "தமிழ் முழக்கம்" நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நண்பர் சிறீதரன் திருநாவுக்கரசு 
எடுத்திருந்தார்.

அந்தப் பகிர்வைக் கேட்க

சுவாமி விபுலாநந்த அடிகளாரது 75 வது நினைவு ஆண்டில்……,.

 

இருளகற்றும் இளம்பரிதி போன்று உதித்த

   ஈழத்து அடிகளாரை நினைவு கூர்வாம். 












சுவாமி விபுலானந்த அடிகளார்


…….பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்   
 



கைமலிந்த கலையேடும் யாழும் கொண்ட

     கலைமகளின் கடாட்சம்பெற்(று) உயர்ந்த செம்மல்

மெய்யுருகச் செந்தமிழிற் கவிப டைத்தார்

    வித்தகனார் யாத்திட்ட செய்யுள் யாவும்

தெய்வமணம் கமழுமையா! செந்தண்மை விஞ்சத்

     திருப்பொலியும் அந்தணனாய்  ஈழ நாட்டிலே

செய்ததிருப் பணிகளெலாஞ் செப்பவோ காலம்

     சிறிதும்பற் றாதேயவர் திருத்தாள் போற்றி!

   

பலமொழியிற் பெரும்புலமை பெற்றே  இலங்கையிற்;

    பார்போற்றும் முதற்பண்டிதன் எனவே மலர்ந்து

சிலகாலம் பல்கலைக்கழ கந்தனிற் சேர்ந்து

    சீரியபெரும் பேராசிரி யனாகி உயர்ந்து

உலகத்தமிழ் வித்தகர்கள் உவந்தே மெச்ச

    உத்தமனார் சொல்லாக்கப் பேரவைத் தலைவனாய்

பலர்வியந்து போற்றிடவே அகராதி தந்து

     பாடுபட்டே வெற்றிகண்ட மாமனி தனன்றோ?

  

ஏன் பெண்ணென்று... குறுநாவல் (2/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 2


காலை பத்து மணி இருக்கும். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்து, அம்பாள் கோவிலைவிட்டு அவர்கள் புறப்பட்ட சற்று நேரத்தில் சாரதா விழுந்தடித்துக் கொண்டு கோவிலுக்கு வந்தாள். அம்பாளை நோக்கியபடி கைகளைக் கூப்பியவாறே மண்டபத்திற்குள் இருந்து கொண்டாள். சற்றுத்தூரத்தில் நாக்கைத் தொங்கப்போட்டபடி, மணலிற்குள் குந்தி இருந்து சாரதாவைப் பார்த்துக்கொண்டிருந்தது அவர்கள் வீட்டு நாய்.

சாரதாவினால் பிரச்சினை வரலாம் என நினைத்து, தந்தையார் சுந்தரம் அவளை ஒரு அறைக்குள் பூட்டி வைத்திருந்தார். அம்மா எப்போதோ இறந்துவிட்டார். அவர் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது. கோவிலில் திருமண வைபவம் எல்லாம் முடிந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்துகொண்ட சுந்தரம் கதவைத் திறக்க, உள்ளேயிருந்து பாய்ந்து வெளியே வந்த சாரதா, அவரைத் தள்ளி விழுத்திவிட்டு ஓடிக் கோவிலுக்கு வந்திருந்தாள்.

கோவிலில் ஒருவருடனும் கதைக்கவில்லை. எவரது கேள்விக்கும் பதில் பேசவில்லை. மனதை ஒருமுகப்படுத்தி அம்பாள் மீது குவிய வைத்தாள்.

வன்னி 2022 ஜூலை 2022 கல்வி மேம்பாடு பகுதி 1

 இலங்கைக்கு வருகை தரும் நம்பிக்கை

"இன்று ஒருவர் புன்னகைக்க காரணம்"


Translation result

வன்னி  ஹோப் வருகை வீடியோக்கள் கல்வி மேம்பாட்டிற்கான YouTube இணைப்பு கீழே உள்ளது.




மேலும் விவரங்களுக்கு:  ரஞ்சன் சிவா (வன்னி  ஹோப்) - கைபேசி/வாட்ஸ்அப் +61428138232


இலங்கைச் செய்திகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் 18 பேருக்கு வகுப்புத்தடை 

லங்கைக்கு உதவ கமல்ஹாசன் விருப்பம்

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் உரையாடினார் ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர்

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை

நாட்டைக் கட்டியெழுப்ப முக்கிய 3 விடயங்களின் கீழ் சர்வகட்சி அரசு


யாழ்.பல்கலைக்கழகத்தில் 18 பேருக்கு வகுப்புத்தடை 

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையின் பிரகாரம் 2 வருட காலத்துக்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகச் செய்திகள்

 ரஷ்ய, உக்ரைன் போர் அழிவுகளை தடுக்க நடவடிக்கை

பெரியம்மை தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கு பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் அனுமதி

குரங்கு அம்மை நோய் உலகை தொற்றும் அபாயம், 70 நாடுகள் ஆபத்தில்

மியன்மாரில் நால்வருக்கு தூக்கு தண்டனை

 


ரஷ்ய, உக்ரைன் போர் அழிவுகளை தடுக்க நடவடிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் தற்போது 150 நாட்களை எட்டியுள்ளன. இப்போர்,கடந்த பெப்ரவரி 24 இல் ஆரம்பமானது.ரஷ்யா புறப்பட்ட வேகத்தில் இதுவரை வெற்றி கிட்டாதுள்ளதால்,பாரிய தடுமாற்றங்களை ரஷ்யப் படைகள் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ரஷ்யாவின் முன்னேறும் வியூகங்கள் முன்னேற்றம் அடைவதாகவே அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

“கு.சின்னப்ப பாரதியின் புனைவெழுத்துக்கள்” 07/08/2022

 

‘தி லெஜண்ட்’ பாக்ஸ் ஆபிஸ்: முதல் நாளில் ரூ. 2 கோடி வசூலானதாக தகவல்

 Sunday, July 31, 2022 - 10:38am

அருள் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படம் முதல் நாள் 2 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.

இத்திரைப் படம் கடந்த ஜூலை 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 600 இற்கும் அதிகமான திரைகளிலும், நாடு முழுவதும் 1,200 திரைகளில் வெளியானதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 'தி லெஜண்ட்' திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் ரூ. 2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பான் இந்தியா படமாக வெளியான இப்படம் உலகம் முழுக்க ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 நன்றி தினகரன்