கார்த்திகைத் தீபம் ஏற்றியே நிற்போம் !

 





































மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



நாளும் நல்லது கோளும் நல்லது
மாதமும் நல்லது வருடமும் நல்லது
மனதில் இறையைத் தினமும் நினைத்தால்
எல்லா நாளும் இன்பமாய் இருக்கும்

இதனைக் கருத்தில் இருத்திய முன்னோர்
இறையை நினைத்திட எல்லாம் செய்தனர்
மாதம் அனைத்தையும் மாண்புடை ஆக்கி
மனமதில் இறையைத் துதித்திட வைத்தனர்

தையினைத் தொடர்ந்து வருகின்ற மாதங்கள்
ஒவ்வொன்றும் முக்கியம் ஆக்கியே வைத்தனர்
பண்பாட்டை இணைத்தனர் பக்குவம் இணைத்தனர்
பாங்குடன் இறையை போற்றிட வைத்தனர்

ஆண்டு விழா!…..சங்கர சுப்பிரமணியன்.


சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் குடியேறியது நேற்ற நடந்ததுபோல் இருக்கிறது. ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிவிட்டன. நல்ல வேலை, கைநிறைய பணம் என்பதால் குடும்பத்திற்கென ஒரு பல்பொருள் அங்காடி மதுரை தெற்கு வாசலில் இருந்தும் மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் முத்தழகன் குடியேறினான்.

அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தடுத்தும் பாலச்சந்தர் படத்தை பார்த்ததில் இருந்தே தொற்றிய சிங்கப்பூர் மோகம் அவனை வென்று விட்டது. கடைசியில் அப்பா சொன்ன வார்த்தைகள் மட்டும் இன்னும் அவன் நினைவில் பதிந்திருந்தது. என்ன என்று கேட்க ஆர்வமுள்ளவர்களுக்கு
மட்டுமாவது சொல்லித்தான் ஆகவேண்டும்.

“முத்து இந்த வியாபாரத்தை மிகவும் கடும் உழைப்பினால் இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளேன். என் ஆயுளுக்குப்பின்னும் இது தொடர வேண்டும் நம்மை நம்பியும் சில குடும்பங்கள் வாழ்கிறார்கள். உன் ஆசைக்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் இருந்து விட்டு வா”
அப்பா விமனநிலையத்தில் வைத்து சொன்னார்.

“சரி அப்பா, உங்கள் ஆசையையும் நான் நிறைவேற்றி வைப்பேன்.” என்று அப்பாவுக்கு பதில் சொன்னதெல்லாம் நெஞ்சில் நினைவாடின.

இன்று சிங்கப்பூர் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் ஆண்டு விழாவுக்கு அழைப்பு வந்துள்ளது. எப்படி சிங்கப்பூரில் இருந்து திரும்பினேன் என்கிறீர்களா? சிங்கப்பூர் சென்று இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே அப்பா வா வா என்றழைத்து தொந்தரவு கொடுக்க ஆரம்பித்து விட்டார். எப்படியெல்லாமோ அவரை சமாளித்து ஒன்பது ஆண்டுகளை ஓட்டினேன்.

உரிமைக் குரல் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 

திரையுலகில் எத்துணை உச்சத்தில் , புகழில் இருந்தாலும் திடிரென்று சரிவுகளை சந்திக்க நேரிடும் என்பதற்று பலரை உதாரணம் காட்டலாம். அவர்களில் ஒருவர் தான் இயக்குனர் ஸ்ரீதர். ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கி, பல நடிகர்களை அறிமுகம் செய்து அகில இந்திய அளவில் புகழ் பெற்றிருந்த அவர் 70ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தொடர் சரிவுகளை சந்தித்த வண்ணம் இருந்தார். அவருடைய சித்ராலயா பட நிறுவனம் பொருளாதார நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதை மீட்டெடுத்து மீண்டும் திரைக் கடலில் செலுத்துவதற்கு அவர் எம் ஜி ஆருடன் கரம் கோர்த்து உருவாக்கிய படம்தான் உரிமைக் குரல்.

 
சிவாஜி நடிப்பில் அவர் தயாரித்துக் கொண்டிருந்த ஹீரோ 72படம்

நான்காண்டுகளாக தயாரிப்பில் இழுப்பட்டுக் கொண்டிருந்த சமயம், ஏற்கனவே ஹிந்தியிலும் , தமிழிலும் எடுத்த அவளுக்கென்று ஒரு மனம் வெற்றி பெறாததாலும் , அலைகள் படமும் தோல்வியடைந்ததாலும் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருந்த ஸ்ரீதருக்கு பிரபல ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார் ஒரு ஆலோசனை வழங்கினார். நீங்கள் ஏன் எம் ஜி ஆரை வைத்து படம் எடுக்க கூடாது என்பது தான் அது.

உரிமைக் குரல் தயாரானதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு 1964ல் ஸ்ரீதர் , எம் ஜி ஆர் நடிப்பில் அன்று சிந்திய ரத்தம் என்று ஒரு படத்தை ஆரம்பித்து சில தினம் படப்பிடிப்பு நடந்து பின்னர் எம் ஜி ஆரின் கால்ஷீட் கிடைக்காமல் அதன் படப்பிடிப்பு நின்று விட்டது. புதுமுகங்களை வைத்து கலரில் காதலிக்க நேரமில்லை படம் எடுக்கும் ஸ்ரீதர் தன்னை போட்டு கருப்பு  வெள்ளையில் படம் எடுக்கிறார் என்ற கோபம் எம் ஜிஆருக்கு! அதன் பின் அதே அன்று சிந்திய ரத்தம் சில மாறுதல்களோடு சிவாஜி நடிப்பில் சிவந்த மண்ணாகி வெளிவந்து வெற்றி கண்டது. இந்த சம்பவத்தாலும், தொடர்ந்து சிவாஜி பட டைரக்டராக தான் அடையாளப் படுத்தப் பட்டிருப்பதாலும் எம் ஜி ஆரை அணுக ஆரம்பத்தில் அச்சப் பட்ட ஸ்ரீதர் பின்னர் எம் ஜி அரை நேரில் சென்று சந்தித்து தனக்கொரு படம் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனானடியாக அதற்கு உடன் பட்ட எம் ஜி ஆர் மூன்று மாதங்களில் படத்தை முடித்து கொடுப்பதாக எழுத்து மூலமும் உத்தரவாதம் வழங்கினார். அதே போல படமும் துரித கதியில் தயாராகி வெளியானது.

எழுத்தாளர் நொயல் நடேசனின் படைப்புலகம் வாசிப்பு அனுபவப்பகிர்வு மெய்நிகர் நிகழ்ச்சி – 21-12-2024 சனிக்கிழமை

 அவுஸ்திரேலியா – மெல்பனில் வதியும்  எழுத்தாளரும்  விலங்கு


மருத்துவருமான  நொயல் நடேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின்   படைப்புலகம் தொடர்பான வாசிப்பு அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம்  21 ஆம் திகதி                               ( 21-12-2024 ) சனிக்கிழமை  மெய்நிகரில் ( Zoom Meeting ) நடைபெறும்.

வண்ணாத்திக்குளம் ( நாவல் )  ஜே.பி. ஜொசப்பின் ( தமிழ்நாடு )

உனையே மயல் கொண்டு ( நாவல் ) டாக்டர் பஞ்சகல்யாணி                     ( இலங்கை )

அசோகனின் வைத்தியசாலை (  நாவல் ) கவிஞர்  சல்மா ( தமிழ்நாடு )

கானல்தேசம் ( நாவல் ) இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்       

                                                                    இங்கிலாந்து )       

பண்ணையில் ஒரு மிருகம் ( நாவல் )  சந்திரிக்கா அரசரட்ணம்                   ( பிரான்ஸ் )       

தாத்தாவின் வீடு   ( நாவல் )   கலாஶ்ரீரஞ்சன் இங்கிலாந்து )

வாழும் சுவடுகள் ( புனைவு சாரா பத்தி )

அசோக்  ( அவுஸ்திரேலியா )

நாலு கால் சுவடுகள் - புதிய வரவு –டாக்டர்  கிருபானந்த குமரன்  ( இலங்கை )

எக்ஸைல் – ( கட்டுரைகள்   )    நடராஜா சுசீந்திரன் ( ஜெர்மனி )

  எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையில் நடைபெறும்  இந்நிகழ்வில் இணைந்துகொள்ளுமாறு  இலக்கிய  ஆர்வலர்களை அன்புடன்  அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பு  எழுத்தாளர் ஓவியர் கிறிஸ்ரி நல்லரெத்தினம்.

 

முதல் மரியாதை - - நாட்டி கலாநிதி கார்த்திகா கணேசர்

.

கதைகள் கூறுவது காலம் காலமாக தொடர்ந்து வருவரும் மரபு. கதைகள் மூலமாக சிறந்த அறிவு, நற் பண்புகள்  இளம் சிறார் முதல் பெரியவர்களுக்கும் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. பஞ்சதந்திர கதைகள், ஈசாப் கதைகள் இந்த மரபிலே தோன்றியவையே. இங்கு நான் கூறுவது

வெறும் புனைவு கதையல்ல, இது சில சம்பவங்கள் ஆனாலும் சிந்தனையை தூண்டுவது மட்டுமல்ல,தமிழரான , நமது பண்புகள் உயர்ந்தது என்ற எண்ணம் எம் மனதில் உண்டு, ஆனால் எம்மை வியப்பில் ஆழ்த்தும் சில கலாசார பண்புகளும் உண்டு. நான் அறிந்தவை சில, அவற்றை பகிர்கிறேன்.

 

 

இது சிட்னியில் நடந்தவை. எனது சினேகித்களில் ஒருவர் தனது குடும்பத்துடனும், தகபன் தாயாருடனும் வாழ்ந்து வருகிறார். தகபனார் நல்ல உடற்கட்டும் உயரமும் கொண்டவர். இவர் வெய்யில் காலத்தில் நல்ல வெள்ளை வேட்டி சம்பிரதாய நாஷனல் மேல்சட்டை அணிந்து ‘வென்வத்தில்’ தெருகளிலே உலாவி வருவார். அங்கு பல தமிழர்கள் வாழ்வதால் பலரையும் கண்டு சுகம் விசாரிப்பார். எம்மவர் சொந்த ஊரையும் உறவுகளையும் இழந்து வந்தவர்கள், இவர்களுக்கெல்லாம் இவரை பார்பதால் தம் உறவுகளை உற்றாரை பெற்றவரை பார்பதுபோல உணர்வு வருவது இயற்கையே.

 

இலக்கியவெளியின் முந்தைய இதழ்களை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

https://www.ilakkiyaveli.com

Ilakkiyaveli Tvயை பார்க்க

 


www.youtube.com/@IlakkiyaveliTv

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பிரிட்டன் தடை விதிக்க தயங்குவது ஏமாற்றமளிக்கிறது - யஸ்மின் சூக்கா

 Published By: Rajeeban

13 Dec, 2024 | 01:51 PM
tamilguardian.com

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த மாதம் இலங்கையின் பாதுகாப்பு படையினர் இந்திய அமைதிப்படையினருக்கு எதிரான 60 தடைவேண்டுகோள்களை சமர்ப்பித்திருந்தது.

இலங்கையின் ஆயுதமோதலின் போதும் அதன் பின்னரும் இந்திய அமைதிப்படையினரும் இலங்கை பாதுகாப்பு படையினரும் இழைத்த மனித உரிமை மீறல்களிற்காக இந்த தடைவேண்டுகோள்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சமர்ப்பித்திருந்தது.

தமி;ழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் ஐடிஜேபியின் நிறைவேற்று பணிப்பாளரும் மனித உரிமை சட்டத்தரணியுமான ஜஸ்மின் சூக்கா இலங்கைமீதான தடைகள் குறித்து தனது  எதிர்பார்ப்புகளை வெளியிட்டுள்ளதுடன் சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தான் எவ்வளவு தூரம் ஆதரிக்கின்றார் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா பிரிட்டன் கனடா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு தடைகள் குறித்த மனுக்களை சமர்ப்பித்த ஓரிரு நாட்களிற்குள் இது குறித்து கருத்து தெரிவித்த  அவர் இலங்கையில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான தி;ட்டம் ஆவணப்படு;த்தியுள்ளது,நாட்டில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த பெருமளவு ஆவணதொகுப்பை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான பணியின் போது மிகவும் சவாலான விடயம் என்னவென்றால் இவ்வாறான ஆவணதிரட்டை, பாதிக்கப்பட்டவர்களிற்கு பொறுப்புக்கூறலை நீதியை உறுதி செய்வதற்கு நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப்போகின்றீர்கள் பொறுப்புக்கூறலிற்கான மாற்றுவழிமுறைகளை என்பதே  என தெரிவித்துள்ள அவர் சர்வதேச மக்னிட்ஸ்கி தடைகளின் கீழ் தடைகளை சமர்ப்பிப்பது எங்களிற்கு உரிய பணி எனவும் தெரிவித்துள்ளார்.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலையே பொறுப்புக்கூறலிற்கான முக்கிய காரணம் என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான மனித உரிமை

 December 12, 2024


‘எங்கள் உரிமைகள் – எங்கள் எதிர்காலம் – இப்போதே எங்கள் உரிமை’ இதுதான் இந்த ஆண்டுக்கான மனித உரிமைகள் தின வாசகமாகும். 1948ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் பத்தாம் திகதி, அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஜக்கிய நாடுகள் பொதுச் சபையால் உள்வாங்கப்பட்டு, பிரகடனம் செய்யப்பட்டது.

அதன் நினைவாகவே ஒவ்வோர் ஆண்டும் டிசெம்பர் மாதம் குறித்த தினம் நினைவு கொள்ளப்படுகின்றது.2009இற்கு பின்னரான ஈழத் தமிழர் அரசியல் நகர்வில் மனித உரிமைகள் என்னும் விடயம் புதிதாக உள்வாங்கப்பட்டது. புதிதாக என்று சொல்வதில் ஒரு விடயமுண்டு – அதாவது, அதற்கு முன்னர் மனித உரிமைகள் என்னும் விடயம் ஈழ அரசியலில் ஒரு விடயமாக இருந்ததில்லை.

ஏனெனில் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடப் புறப்பட்ட எந்தவோர் ஆயுத இயக்கமும் மனித உரிமைகளை மதித்ததில்லை – ஆகக் குறைந்தது ஒரு பொருட்டாகக் கூட எடுத்ததில்லை. ஆனால் இறுதி யுத்தமானது, பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் இறப்பில் முடிவுற்றதைத் தொடர்ந்தே, ஈழ அரசியல் மனித உரிமைக் கோரிக்கையாக உருமாறியது.

அரசியலில் மூத்தவர்களின் ஒய்வு

 December 13, 2024


நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த விடயம் அப்போது ஊடகங்களில் பிரசுரமாகியிருந்தது. தற்போது, அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றீர்களா என்பதை அறியும் நோக்கில், கட்சியின் செயலாளர் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியைப் பொறுத்தவரையில் மாவை சோனாதிராசா ஒரு மூத்த தலைவர். சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் அந்த கட்சியை வழிநடத்தியிருக்க வேண்டியவர் – ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மாவை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பெருமளவுக்கு அவர் கட்சிக்குள் முக்கியத்துவமற்ற ஒருவராக மாறிவிட்டார். சம்பந்தன் இருக்கின்றபோது கூட, மாவையின் குரலுக்கு கட்சிக்குள் பெரியளவில் செல்வாக்கு இருந்ததில்லை. வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை கொண்டு வந்த விடயம் தொடக்கம், தேசிய பட்டியல் ஆசனத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு வரையில், மாவை சேனாதிராசாவை கட்சிக்கு தேவையான ஒருவராக தற்போதுள்ள தமிழ் அரசு கட்சிக்காரர்கள் கருதவில்லை.

இலங்கைச் செய்திகள்

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா

மனோ , நிசாம் காரியப்பர், முத்து மொஹம்மட், சுஜீவ சேனசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி.க்களானர்

இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய விமானப்படை வழங்கிய Beechcraft King Air 350

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு பெப்ரவரி 27 இல்

இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒத்துழைப்பு



யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா

Published By: Vishnu

14 Dec, 2024 | 01:20 AM
image

அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். 

உலகச் செய்திகள்

 தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை -சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம்

சிரிய ஜனாதிபதி ஆசாத்தின் ஆட்சி வீழ்ந்தது – மேற்குலக நாடுகள் வரவேற்பு

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆசாத் ரஸ்யாவில்

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின் தனிப்பட்ட முடிவு - கிரெம்ளின் பேச்சாளர்

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பங்களாதேஷ்அரசிடம் இந்தியா வலியுறுத்தல் 


தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் சிறையில் உயிரை மாய்க்க முயற்சி

11 Dec, 2024 | 11:43 AM

தென்கொரியாவில் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டு பின்னர் மார்ஷல் சட்டம் நீக்கப்பட்டமையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் யன் உயிரை மாய்க்க முயன்றார்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ஷல் சட்டத்திற்கு தான் பொறுப்பேற்பதாக அறிவித்திருந்த அமைச்சர்சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை உயிரை மாய்;ப்பதற்கு முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவாசக முற்றோதல் 2024