சிட்னி முருகன் ஆலயத்தின் ஏழாம் திருவிழா 14.03.14

.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற ஏழாம் திருவிழா வேட்டைத் திருவிழாவாக இடம் பெற்றது.  HILLS  பகுதி மக்கள் இந்த திருவிழாவின் உபயகாரர்களாக இருந்தார்கள்.




சிட்னி முருகன் ஆலயத்தின் ஆறாம் திருவிழா 13.03.14


சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆறாம் திருவிழா மாம்பழத்திருவிழாவாக இடம் பெற்றது. ஸ்ரத்பீல்டும் அதை அண்டிய பகுதி மக்களும் இந்த திருவிழாவின் உபயகாரர்களாக இருந்தார்கள்.




சிட்னி பென்ரல் கில்லில் இலங்கைத் தமிழர் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ளார்.

.


Aussie Unity Real Estate இன் உரிமையாளர் ஈசன் வேலுப்பிள்ளை அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் பென்ரல் கில்லில் இருக்கும் அவரது வியாபார நிலைத்திற்கு சென்றபோது. கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்றும் யாரும் காணாத நிலையில் அதிக குருதிப்பெருக்கு ஏற்பட்டதாகவும் அதன் பின் வெஸ்மீட் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துள்ளார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இவரைக் கத்தியால் குத்தியவர் என்று 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை பரமட்டா பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இவர் வெள்ளை இனத்தைசேர்ந்தவர் என்று உத்தியோக பூர்வமற்ற செய்திகள் குறிப்பிடுகின்றது.
புதிதாக வந்த பல இளைஞர்களுக்கு இவர் மிகவும் உறுதுணையாக இருந்து உதவிகள் புரிந்துவரும் ஒருவர் என்றும் எல்லோருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவரென்றும் பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.

சிட்னி முருகன்கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக காலையில் நேரத்துடன் வியாபார நிலையத்தை திறந்து பணியாற்றி விட்டு செல்வதற்காகவே அந்த வேளையில் சென்றதாக குறிப்பிடப் படுகின்றது.

20 வருடங்களுக்கு முன்பு ஒஸ்ரேலியா வந்த இவர் கெலிவில்லில் வாழ்ந்து வந்தவர் என்றும் தமிழ் சமூகத்திற்கு பல வகைகளிலும் உதவி புரியும் ஒருவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இவரது வியாபார நிலையத்திற்கு அண்மையில் உள்ள பழக்கடையில் பணிபுரியும் ஒருவர் , தான் இவருடன் வழமையாக உரையாடுவதாகவும் மிகவும் நல்ல மனிதர் என்றும் பொலிசாருக்கு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர் மேரிலாண்ட்ஸ் பொலிஸ்  நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக குற்றத்தடுப்பு பொலிசாரை தொடர்பு கொண்டு தகவல் தரும்படி கேட்டுள்ளார்கள்  தொலைபேசி ,இலக்கம் 1800 333 000,

 

தமிழ் சமூகத்தில் ஒரு அக்கினிக்குஞ்சு!

.

லட்சுமி லோகதாசன் அவர்களை தமிழ்முரசுஒஸ்ரேலியா வாழ்த்துகின்றது 

2014 New South Wales Young Woman of the Year எனும் மதிப்பும், கௌரவமும் கொண்ட விருதை லட்சுமி லோகதாசன் எனும் சிட்னி நகரில் வாழும் 18 வயது தமிழ்ப்பெண் பெற்றுள்ளார். லட்சுமியின் சமூக சேவைகளைப் பாராட்டி இந்த விருதை NSW மாநில Premier Barry O Farrell வழங்கி கௌரவித்தார். இந்த விருதை NSW மாநில அரசு இந்த ஆண்டு அறிமுகம் செய்தபின்னர் இந்த விருதை முதன் முதலாக பெற்றிருப்பவர் லட்சுமி என்பது இன்னும் அதீதச் சிறப்பு.
இந்த விருதைப்பெற பரிந்துரைக்கப்பட்ட 239 பேரில் லட்சுமி தெரிவுசெய்யப்பட்டிருப்பது நம்மை வியக்கவைக்கிறது. University of Western Sydney எனும் பல்கலைக் கழகத்தில் International Studies and Law எனும் பிரிவில் படித்துவரும் லட்சுமி, எதிர்காலத்தில் வழக்கறிஞராக ஒடுக்கப்படும் இனங்களுக்காக சர்வதேசரீதியில் பணியாற்றுவது தமது கனவு என்று குறிப்பிடுகிறார். 
நன்றி SBS .com .au 
Young Woman of the Year winner and finalists. Premier Barry O’Farrell, Harvey Norman’s Young Woman of the Year finalist Bee Orsini, Harvey Norman’s Young Woman of the Year finalist Jennifer Star, Harvey Norman’s Young Woman of the Year finlaist Kimberley Abbott, 
Harvey Norman’s Young Woman of the Year winner Lakshmi Logathassan, Katie Page (CEO Harvey Norman), Minister for Women Pru Goward.

சிட்னி முருகன் ஆலயத்தின் மூன்றாம் திருவிழா

.


சிட்னி முருகன் ஆலயத்தின் இரண்டாம் திருவிழா

.

சுகம் அங்கே கிடைத்துவிடும்! எம்.ஜெயராமசர்மா..... மெல்பேண்

.

    

நல்லூரை நினைத்தாலே
நாவெல்லாம் இனிக்கிறது 
வெல்லுகின்ற வேலுடனே 
வேலவனும் வருவானே

அள்ளஅள்ள குறையாத
அருளை வாரித்தருகின்ற
தெள்ளுதமிழ் கந்தனவன்
நல்லைநகர் உறைகின்றான்

சித்தர்பலர் வந்தார்கள்
முத்திநிலை பெற்றார்கள்
அத்தனைக்கும் வேலவனின்
அருள்நோக்கே காரணமாம்

நல்லூரில் கொடியேறில்
நாடெல்லாம் திரண்டுவரும்
அல்லல்தனைப் போக்கிடென
அடியார்கள் வேண்டிநிற்பர்

தேரிலே கந்தன்வந்தால்
தெருவெல்லாம் பக்தர்கூட்டம்
ஊரெல்லாம் கூடியங்கு
ஒருங்குடனே தேரிழுப்பர்

சிட்னி முருகன் ஆலயத்தின் கொடியேற்றம்

.
படப்பிடிப்பு  ஞானி 

சிட்னி மாநகரில்  Mays Hill ல் அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது . 
10 நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவை  சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய 
சிவஸ்ரீ லவக்குருக்கள்  ஆலய சிவாச்சாரியர்கள்  சூழ்ந்திருக்க கொடியேற்றி  ஆரம்பித்து வைத்தார் .

நாதஸ்வர தவில் இசையை   இசைக்   கலைஞர்களான சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர்  வழங்கி முருகன் அடியார்களை  இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள் .

சிட்னி முருகன் மார்ச் மாதம் 16ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை தேரேறி திருஉலா வரும் காட்சி இடம்பெற இருக்கிறது. ஆறுமுக சாமி வள்ளி  தெய்வானை சமேதராய் தேர் ஏறும் காட்சியை காண்பதற்கு 


காவல் தெய்வங்கள் - தொடர்ச்சி -செ .பாஸ்கரன்



.
எனக்கு அடுத்த கட்டிலில் இருந்தவர் மரியா என்ற தென்ஆபிரிக்கப்பெண் இவரை நான் முதன்முதலில் பார்த்தபோது ராமாயணத்தில் வரும் கூனிபாத்திரம் தான் கண்முன்னால் வந்து நின்றது. முதுகுவளைந்து ஒருபக்கமாக சாய்ந்து நடந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு. நானோ பல விதமான நோவுடன் இயலாமல் படுத்திருக்கின்றேன் என்மனைவியிடம் என்னைப்பற்றி கேட்டறிந்து விட்டு பாதர் வருவார் உமது கணவனுக்காக பிரார்த்தனை செய்ய சொல்லட்டுமா என்று கேட்டிருக்கின்றார். நிலைமையை புரிந்து கொண்ட என்மனைவி இல்லை நண்பர்கள் பலர் கோவிலில் பிராத்தனை செய்துவிட்டார்கள் நன்றி என்று நாசூக்காக மறுத்து விட்டார்.

மரியாவிற்கு எதிராக இருந்தவர் மகமூட் என்ற இளைஞர் காலை விசிறி விசிறி நடப்பார் யாரையும் பார்த்து சிரிக்கமாட்டார்.திடீரென்று நின்று உற்றுப்பார்ப்பார் மீண்டும் நடக்க தொடங்கி விடுவார். பக்றீரியா காலில் தாக்கியதாக அறிந்தேன். அவரோடு எந்தவிதமான சிரிப்பையும் வைத்துக்கொள்ளவில்லை.

எனது கட்டிலுக்கு எதிராக இருந்தவர் அவுஸ்ரேலிய பெண்மணி அவரது கணவன் அவரை அணைத்துக்கொண்டே இருப்பார் பாசக்கிளிகள் போல் இருக்கிறது எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்து உறங்கிவிடுவேன். 

நான் மற்ர அறையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டபோது நண்பர்கள் கொண்டுவந்து தந்த பூங்கொத்துக்கள்   அனைத்தும் கொண்டுவரப்பட்டு சுற்றி அடுக்கப்பட்டிருந்தது. அதுவும் பூந்தோட்டம் அமைப்பதில் அதிக பிரியமுள்ள என் மனைவி அந்த இடத்தையும் ஒரு பூந்தோட்டமாகவே மாற்றிவிட்டார். வார்டை நோக்கி வருபவர்களுக்கு இந்த சிறிய பூந்தோட்டம் கண்ணைக்கவரும். சிறிய உருவம்கொண்ட ஒரு பாட்டி காலையும் மாலையும் நடை பயில்வாள் மெல்ல மெல்ல நடந்துவரும் அவள் பியூட்டிபுல் என்று சொல்லிக்கொண்டு அந்த பூக்களை தடவிப்பார்ப்பாள் முகர்ந்து பார்ப்பாள். நன்றாக இருக்கிறது அழகாக இருக்கிறது என்று பலவிதங்களில் கூறுவாள். அவளுக்கு யாரும் பூக்கள் கொடுக்கவில்லையோ என்று மனதில் எண்ணம் எழும் அது விடைகாணமுடியாத எண்ணமாகவே இருந்து விட்டது. அவளது கட்டிலை நான் சென்று பார்க்கவே இல்லை. 

சிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழா 08.03.2014

.


திரும்பிப்பார்க்கின்றேன் - 27 - முருகபூபதி

.
காணாமல்  போனவர்கள்    பட்டியலில்    இணைந்துள்ள  காவலூர்  ஜெகநாதன்

1980  ஆம்    ஆண்டு     காலப்பகுதி.

 வீரகேசரி   அலுவலகம்   பரபரப்பாக   இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஒப்புநோக்காளர் -  அறைக்குள்   Proof   திருத்திக் கொண்டிருக்கின்றேன்.

இங்கே     யார்   முருகபூபதி ?    கேள்வி     எழுந்த     பக்கம்    நோக்கித் திகைக்கிறேன்.    வாசல்     கண்ணாடிக்கதவை     தள்ளித் திறந்து  கொண்டு    ஒரு   இளைஞர்   நிற்கிறார்.

எனக்கும்    அவரை  முன்பின்    தெரியாது.

நான்தான்  முருகபூபதி.      நீங்கள் யார்?   உங்களுக்கு    என்ன    வேண்டும்? - என்று எழுகின்றேன்.

சக   ஊழியர்களின்   முகத்திலும்   திகைப்பு   வழிகின்றது.   திடீரென  ஒருவர் உட்புகுந்து   இவ்வாறு   நடந்து   கொண்டது   வியப்பல்லவா?

அந்த   வியப்பும்   சில   கணங்கள்தான்.

நான்தான்   காவலூர்   ஜெகநாதன்.

  அது   நீங்களா ?

மெல்பனில் கவிஞர் மர்ஹ_ம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

.

மெல்பனில்

மூத்த  கவிஞர்  மர்ஹ_ம்  மருதூர்க்கனியின்

மூன்று    நூல்கள்    வெளியீட்டு   விழா

இலங்கையின்    மூத்த    கவிஞரும்     ஸ்ரீலங்கா    முஸ்லிம்   காங்கிரஸின் ஸ்தாபகர்களில்    ஒருவருமான    (மூத்த   துணைத்தலைவர்)    லங்கா திலகம் - புலவர் நாயகம்     மருதூர்க்கனியின்    மூன்று   நூல்களின்  வெளியீட்டு விழா  எதிர்வரும்  15-03-2014  ஆம்  திகதி   சனிக்கிழமை   மாலை  4  மணிக்கு மெல்பனில்     Mulgrave  CCTC         கேட்போர்   கூடம்   (44- 60 Jacksons Road, Mulgrave. - Melway: 80k3)     மண்டபத்தில்      நடைபெறும்.

சிட்னி முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் காணொளி

.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2014

.


பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி … காவிரிமைந்தன்

.
இதை எழுதும்போது, என் மனதின் முன்வரிசையில்
நிரந்தரமாக இடம் பிடித்து அமர்ந்திருக்கும் பெண்கள் 
சிலரை நினைத்துக் கொள்கிறேன்…!
(நாளை உலக மகளிர் தினம் …!)
முதலில் என் பாட்டி -(திருமதி சாவித்ரி அம்மாள்)
அப்பாவின் அம்மா.
கும்பகோணம் சாரங்கபாணி தெரு ஓட்டு வீடு ஒன்றில்
பிறந்தார். பள்ளிக்கூடமே போனதில்லை.
7 வயதில் கல்யாணம்.
13 வயதில் ஒரு(ஒரே..!) மகனுக்குத் தாய் ஆனார்.
14 வயதில் விதவையானார்.
பின்னர், அந்த ஒரே மகன் படித்து, பெரியவனாகி,
சம்பாதிக்கும் வரை சகோதரர்களின் ஆதரவில் வாழ்ந்தார்.
பின்னர் மகனும், அவன் குடும்பமுமே சகலமும்.
73வது வயதில் காலமானார்.

இசை அருவி 16.03.2014


உலகச் செய்திகள்


பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை

உக்ரேனிய பிராந்தியத்தில் படையினரை குவிக்கும் ரஷ்யா; பதற்றநிலை அதிகரிப்பு


கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டம்
======================================================================


பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை


07/03/2014  இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை பட்டினியால்  வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதியொன்றுக்கு தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்ற  மலேசிய உயர் நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.

கவனயீர்ப்பு ப் பேரணி - 19 .03.14

.


இலங்கைத் தமிழர்களால் மறக்கப்பட்ட 'வாடைக்காற்று' -நாவுக்கரசன், ஒஸ்லோ, நோர்வே

.

இலங்கைத் தமிழர்களால் மறக்கப்பட்ட 'வாடைக்காற்று'


Pictures courtesy wikipedia.org
யாழ்ப்பாணத்தில் 'ராணி' தியேட்டரில் ஓடிய, இலங்கைக் கலைஞர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு 'வாடைக்காற்று' என்ற கறுப்பு வெள்ளைப் படம். அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூழ்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது யோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினைக் கூறும் 1978 ஆம் ஆண்டின் 'சிறந்த தமிழ்த் திரைப்படம்' என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற 'வாடைக்காற்று' படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு. இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள். அது எவ்வளவு பெரிய இழப்பு என்று இள வயதில் என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.

குவின்ஸ்லாந்து மாநிலத்தில் இலக்கிய சந்திப்பு 22.03.2014

.
      அவுஸ்திரேலியா  தமிழ்     இலக்கிய   கலைச்சங்கம்
                                       குவின்ஸ்லாந்து    மாநிலத்தில்
                 பிரிஸ்பேர்ணில்    நடத்தும்  கலை -  இலக்கிய சந்திப்பு
அவுஸ்திரேலியாவில்   பல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர் விழாக்களையும்    கலை,   இலக்கிய   சந்திப்புகளையும்     அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்      நடத்திவரும்     அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய கலைச்சங்கத்தின்        ஏற்பாட்டில்    எதிர்வரும்        மார்ச்   22   ஆம்      திகதி    (22-03-2014)   சனிக்கிழமை    குவின்ஸ்லாந்து   மாநிலத்தில்   
                                           கலை - இலக்கிய    சந்திப்பு
                                      Centenary Community Hub

                      171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074

என்னும்    முகவரியில்    காலை  10  மணி   முதல்  மாலை  5 மணி  வரையில்    நடைபெறும்.
இலக்கிய  கருத்தரங்கு -  தமிழ்  தட்டச்சு  மற்றும்  விக்கிப்பீடியா  செயல் விளக்கம் -  நூல்  அறிமுகம் - மாணவர்   அரங்கு     உட்பட   பல நிகழ்ச்சிகள்    இடம்பெறும்   இந்நிகழ்வில்     கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள்  - கலைஞர்கள்     மற்றும்  அன்பர்கள்    தமிழ்  ஆசிரியர்கள் மாணவர்கள்    -  கலை,  இலக்கிய    சுவைஞர்கள்  - ஊடகவியலாளர்கள் மேலதிக     விபரங்களுக்கு      தொடர்புகொள்ளவும்.
திரு. லெ. முருகபூபதி  ( செயலாளர் - அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)       04 166 25 766    atlas2001@live.com 
       திரு. முகுந்தராஜ்      ( உறுப்பினர் - அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்)     04 237 30 122   mugunth@gmail.com
       


இலங்கைச் செய்திகள்

நிறைவுக்கு வந்தது மன்னார் மனித புதைக்குழி அகழ்வு : இதுவரை 80 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு கைது!

இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாரவிரதம்

இலங்கையில் நிலைமை மோசம், சர்வதேச விசாரணை தேவை: தென்னாபிரிக்க பேராயர்

=======================================================================
நிறைவுக்கு வந்தது மன்னார் மனித புதைக்குழி அகழ்வு : இதுவரை 80 மனித எலும்புக் கூடுகள் மீட்பு

மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைக்குழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இன்று புதன் கிழமையுடன்  முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிட்னியில் திருக்குறள் மாநாடு - 23.03.2014





சிட்னி  தமிழ் இலக்கிய கலை மன்றம் சார்பாக கடந்த செப்டம்பர் மாதம்  உலக தமிழ் இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23ஆம் திகதி திருக்குறள் மகாநாடு - 2014 உம், மார்ச் மாதம் 2 ஆம் திகதி திருக்குறள் போட்டிகளும் நடைபெற உள்ளது.

வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயத்திற்கு தமிழை ஊக்குவிக்கும் நோக்கில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்ற்ம் வருடா வருடம் திருக்குறள் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டிகள் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

பிளமிங்கோ பறவைகளும் நெடுந்தீவு மக்களும் --நாவுக்கரசன், ஒஸ்லோ



.
யாழ்ப்பாணத்தில்  இளவயதில் நான் வாசித்த எழுத்தாளரில், கொஞ்சம் ஜனரஞ்சகமா சுவாரசியமா , தினசரி பத்திரிகை ,மல்லிகை போன்ற முற்போக்கு பத்திரிகை, வேறு பல இலக்கிய வெளியிடுகளில் நாவல் ,சிறுகதை எழுதிய ஒருவர் 'செங்கை ஆழியான்' என்ற புனைபெயரில் எழுதிய, 'குணராசா மாஸ்டர்' என்ற பெயரில புவி இயல் படிப்பித்த , உதவி அரசாங்க அதிபரா இருந்து ,பின்னர் யாழ் பல்கலைக்கழக பதிவாளரா, புவியியலில் டாக்டர் பட்டம் பெற்ற கலாநிதி கந்தையா குணராசா. அவர் எப்படியான இலக்கிய வகை எழுத்தாளர் எண்டு எனக்கு சொல்ல முடியவில்லை, பலராலும் அதிகம் வாசிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர். 30 வருடங்களின் முன் அவர் எழுதி நான் படித்த சில நாவல்கள் பற்றி சொல்லுறேன் .
அவர் எழுதிய ஒரு முக்கியமான நாவல் 'வாடைக் காற்று'. நெடுந்தீவில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், அவர் அந்தத்  தீவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த பொழுது எழுதிய கதை. மன்னாரில் இருந்து வாடைக்காத்து சீசனுக்கு 'வாடி' அமைத்துத் தற்காலிகமா தங்கி, 'தங்கு தொழில்' செய்யவந்த ஒரு மீனவ இளைஞனுக்கும், உள்ளுரில் இருந்த ஒரு இளம் மீன்கொத்திப் பெண்ணுக்கும் இடையில் வந்த காதலில், சம்மாட்டியார் ,கரைவலை ,கருவாடு சகிதம் வில்லன்களும், வில்லங்கங்களும் வர, அந்தக் கதையைப் பின்னர் இலங்கை இந்திய தயாரிப்பா படம் ஆக்கினார்கள் "வாடைக்காற்று" என்ற நாவலைச் சினிமா ஆக்குமாறு முன் மொழிந்தவர் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்த பாலநாதன் மகேந்திரன் என்ற 'பாலு மகேந்திரா' என்கிறார்கள்!



சிட்னி முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் இரவுத் திருவிழா

.

படப்பிடிப்பு ஞானி 

வெண்கழியில் செய்த கலைவண்ணம்.




சீன கற்பனை நயமும்  கைவண்ணமும்.

ஓர் இலக்கிய அன்பர் சிங்கை நகரில் இருந்து அனுப்பி வைத்த இந்த அழகு வண்ணங்களை கற்பனை நயத்தை  இந்த அழகிய கலையழகை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன் யசோதா.



எழுதி !எழுதி !! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

.


பாரமிருக்காது என்று நினைத்துத்தான் 
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின்  தத்துவம்  படிப்பினையாகமாறிப் போகின்றது .

தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில்  நின்று 
 தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு 
பொறாமை உணர்வுகள்  
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
  
வஞ்சகத் தனத்தை வளர்த்துக் கொண்ட
பிடிவாதம் தன் அசிங்கத் துணியை 
அகங்காரமாய் மொட்டைத் தலையில் 
உலரப் போடுகின்றது.
போட்டி பொறாமைகளில்உற்றெடுத்த  
குருதித் துளிகளில்  
கசிந்து கசிந்து 
எழுதி எழுதி 
திறமை சாலிகளின் படைப்புக்களில் 
விமர்சனமாய் விழுகின்றது . 

குழிதோண்டிபுதைப்பது கற்றறிந்தவர்கள் 
என்றால்
வளர்கின்ற படைப்பாளிகள் 
திறமைசாலிகளை இனம் காட்டி  விடுவார்களா ..?

SK .RISVI @GMAIL .COM 

தமிழ் சினிமா


பிரம்மன்


படம் தொடக்கமே சசிகுமாரின் சிறு வயதில் ஆரம்பமாகிறது.
சசிகுமார் அவருடைய நண்பன் நவீன் சந்திரன் இவர்களுக்கு சினிமா மற்றும் அந்த ஊரில் இருக்கும் பழைய சினிமா தியேட்டர் தான் தங்கள் உலகம் என்று வாழ்கிறார்கள்.

சிறு வயதிலே சினிமாவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று சபதம் எடுக்கும் இவர்கள் பிறகு தவிர்க்க முடியாத சில காரணத்தினால் அந்த நட்பு வயதிலே பிரிய, பிறகு படம் நிகழ்காலத்துக்கு வந்து நம் உயிரை எடுக்க ஆரம்பிக்கிறது.

சிறு வயதில் சுற்றி திரிந்த அந்த சினிமா தியேட்டர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார் சசிகுமார், எல்லா படத்திலும் வரும் அதே நண்பனாகவும்+ஆப்பரேட்ராகவும் சந்தானம் இருக்க ,சசிகுமாரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம்.
பார்த்தவுடனே காதல், அதன் பின் அவளை எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி. இப்படியே கதை போக ஒரு கட்டத்தில் தன உயிராய் நேசிக்கும் தியேட்டரை தொடர்ந்து நடத்த சிக்கல் ஏற்படுகிறது.
இப்படி ஒன்னத்துக்கும் உதவாத தியேட்டரை வைத்திருக்கும் இவருக்கு எப்படி பொண்ணு கொடுக்கிறது என்று காதலுக்கும் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் சசிகுமாருக்கு தன் பால்ய நண்பன் சென்னையில் பெரிய இயக்குனர் என்று தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து தன் நண்பனின் உதவி கேட்டு சென்னை செல்கிறார் சசிகுமார்.

நண்பனை தேடி சென்னை வரும் ஹீரோ, ஒரு சினிமா கம்பெனியில் தன் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவங்களை சொல்லி ஏதேட்சையாக இயக்குனராகிறார்.
பின்பு அதே நண்பனுக்காக இந்த கதையே விட்டு தருகிறார், கூடவே தான் நேசித்தே காதலையும் தாரை வார்க்கிறார் சசிகுமார்.
எல்லா விக்ரமன் சார் படத்தில் வர்ற மாதிரி கடைசி வரை தான் யார் என்று நண்பனிடம் சொல்லாமல் லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சர்ப்ரைஸிங் படம் இது.
இன்றைய காலகட்டத்தில் பழைய செகண்ட் ஷிபிட் சினிமா தியேட்டர் நடத்தி வருவது எவ்வளு கஷ்டம் என்று நகைச்சுவையாகவும் மற்றும் யாதர்த்தமாகவும் காட்டி இருப்பது பாராட்டுக்குரியது.
வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.

இந்த படத்தில் வித்தியாசம் என்றால் சசிகுமரே அல்ட்ரா மார்டனாக காட்டி இருப்பது தான், கிராமத்து பாணியில் பார்த்து பழகி போன நமக்கு இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். மற்ற படி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை, ஆனால் படத்தில் சொல்லும்படியாக சில காட்சிகள் என்றால் பார்த்தவுடன் காதலில் விழுந்தாலும் சில இடங்களில் சசிகுமார் காதலைவிட தியேட்டரை பெரிதாக மதிப்பு தருவது ஓரளவு டச்சிங்காகவே இருந்தது. சந்தானம் ஒன்லைனர்கள் என முதல்பாதி ஓகே ரகம்.
இரண்டாம் பாதி சூரியின் அலப்பறை ஆரம்பம் ஆகிறது, சென்னையில் நாம் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நாம் எதிர்பார்த்தது சந்தானம், சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். இதில் இருந்தே தெரிகிறது இயக்குனர் பாடு உஷார் என்று.
பிறகு அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது பணம் சம்பாதித்து தியேட்டர் ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் படம் முழுக்க ஒரே கொட்டாவி டா சாமி என்று முடிவுக்கு வருகிறது.
தேவிஸ்ரீ பிரசாத்ரிப்ர இசையில் பாடல்கள் பழைய ராகம், பின்னணி இசை 90களில் கேட்டு அதே எஸ்.ஏ.ராஜ்குமார் ஸ்டைல், ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் நச்.

சாக்ரட்டீஸ் தன் முதல் படைப்பிலேயே எந்தவித விரசமும் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் எடுத்தற்காக அவரை பாராட்டலாம்.

ஆனால் வெயில், குசேலன் போன்ற படங்களின் தாக்கம் இருப்பதும் சோர்வை அடையவைக்கிறது, மக்கள் இளம் இயக்குனர்களிடம் எதிர் பார்ப்பது புதுமையான விஷயம் தான் புரிஞ்ச எடுங்க பாஸ்.
படம் பார்த்து முடித்துவுடன் எல்லோருக்கும் தோன்றும் ஒரு விஷயம், இந்த படத்தை “பிரம்ம தேவன்” பார்த்தால் என்னவாகும்?
சற்று தடுமாறி தடிக்கி விழுந்து “அட மதி கெட்ட உலகம் இன்னும் மாறவில்லையே” என்றுதான் நினைப்பார்!
ஆக மொத்தத்தில் பிரம்மன் பழகிப்போன புளிச்சமாவு.
நடிகர்: சசிகுமார்
நடிகை:லாவண்யா திரிபாதி
இயக்குனர்:சாக்ரடீஸ்
இசை:தேவி ஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு:ஜோமோன் டி ஜான் / பைசல் அலி
நன்றி லங்காஸ்ரீ  சினிமா