மரண அறிவித்தல்



திருமதி. மகாதேவி கந்தசுவாமி


பிறப்பு 09-12-1925                     இறப்பு 09-09-2017

ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகக் கொண்டிருந்தவரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின்  முன்னாள் அதிபர் அமரர் திரு.சி.கே. கந்தசுவாமி அவர்களின் அன்பு மனைவியுமான திருமதி. மகாதேவி கந்தசுவாமி சென்ற சனிக்கிழமையன்று காலமானார்.
அவர் தயானந்தன் (சிட்னி), சாந்தினி (இலண்டன்), அபிராமி (இலண்டன்), வாகீசன் (பிரிஸ்பேன்), கீதாஞ்சலி (சிட்னி) ஆகியோரின் அன்புத் தாயாரும், விஜயலட்சுமி, டாக்டர் கந்தையா சிவகுமார், டாக்டர் ஜயந்தா ஆனல்ட், துஷ்யந்தி, நிர்மலராஜன், ஆகியோரின், அன்பு மாமியாரும், கஜேந்திரன், ஜனார்த்தனி,பிரணவன், சிவகாமி, ஆரன், ரம்யா ஆரணி, ஹரிஹரன், பார்கவி,சிந்தூரா ஆகியோரின் அன்புப் பாட்டியாரும் ஆவார்.

அவரது பூதவுடல் 12 செப்டெம்பர் அன்று கிரியைகளுக்காக காசில் ஹில்லில் இருக்கும் இல்லத்தில் வைக்கப்பட்டு, பின் இறுதி மரியாதைக்காக றூக்வூட் மயானத்திற்கு எடுத்துச்  செல்லப்பட்டு மாலை 2-30 -4-30 மணிக்குமிடையில் தகனம் செய்யப்படும் என்பதைத்தெரியப்படுத்துகிறோம்.

உற்றார்  உறவினர் நண்பர்கள்  இந்த அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  

தயானந்தன் +612 9649 6146, வாகீசன் +617 3376 0564, கீதாஞ்சலி +612 8850 0946,

டாக்டர் சாந்தினி சிவகுமார் +447791632927, டாக்டர் அபிராமி ஆனல்ட் +447956699420



மரண அறிவித்தல்


திரு வைத்திலிங்கம் கனகசபாபதி


திரு வைத்திலிங்கம் கனகசபாபதி யாழ் கந்தர்மடம் மணல்த்தறை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் சிட்னியில் வசித்து வந்தவருமாகிய திரு வைத்திலிங்கம் கனகசபாபதி அவர்கள் 9-9-2017 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், தில்லைப்பிள்ளை தம்பதிகளின் மனனும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற இலட்சுமிப்பிள்ளையின் அன்புக்கணவரும் ஸ்ரீசுதர்ஸன் (சிட்னி), குமணன் (சிட்னி), காலஞ்சென்றவர்களான சசிகரன் மற்றும் தர்மதாவின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற மனோன்மணி, கனகலிங்கம் (லண்டன்), பரமேஸ்வரி (ஓக்லண்ட்), யோகேஸ்வரி (கந்தர்மடம்), மற்றும் காலஞ்சென்ற கனகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் காலஞ்சென்ற பொன்னுச்சாமி, சுசீலா (லண்டன்), நாகரத்தினம் (ஓக்லண்ட்), பத்மநாதன் (கந்தர்மடம்), இளைப்பாறிய பேராசிரியர் ஆறுமுகம் (உரும்பிராய்), காலஞ்சென்ற காராளசிங்கம், தெய்வசோதி (ஆவரங்கால்), காலஞ்சென்ற திரவியம் தெய்வநாயகி (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் செல்வராணி (உரும்பிராய்), தர்மேஸ்வரி (பரிஸ்), மகாதேவன் (ஆவரங்கால்), ஆயித்தர் (துண்ணாலை) மற்றும் சுபாஷ்சந்திரன் (கொழும்பு) ஆகியோரின் சகலனும் ஆதவன், வித்தகன், ஆருதி, ஆதிபன், சங்கவி, நிருஜா, மிதுஷன் மற்றும் வாஷினியின் அன்புப் பேரனுமாவர்.

அன்னாரின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக செவ்வாய்க்கிழமை 12-09-2017ம் திகதி Lidcombe Rookwood மயானித்தின்  South Chapel யில் காலை 9-30 முதல் காலை 11-30 வரை வைக்கப்பட்டு, ஈமக்கிரிகைகள் அதே இடத்தில் காலை 11-30 முதல் மாலை 12-30 வரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு:

ஸ்ரீசுதர்ஸன் 0416 063 482
குமணன் 0411 139 756


அன்பு கொண்ட இரண்டு உள்ளம்
அருகருகாய் அமர்ந்திருக்க
புன்னகையும் பொன்னகையும்
பூவைதனை அலங்கரிக்க
உற்றவரும் பெற்றவரும்
உவகையுடன் வாழ்த்தி நிற்க
உளம் நிறைந்த சபையினிலே
களித்திருக்கும் தம்பதிகாள்
இனிதாக இல்லறத்தில்
இணைந்திடவே வாழ்த்துக்கிறோம்

காதல் கொண்ட கண்ணியவள்
ஸ்ரீரஞ்சன்  ராதை பெற்ற  செல்ல  மகள்
கோபிகா எனும் அழகுத் தேவதையாள்
கொஞ்சும் மொழி வஞ்சியினள்
புன்னகை முகத்திலாட
பூமாலை கழுத்திலாட
வந்து மெல்ல மணவறையில்
கணவனுக்காய் காத்திருக்க

போராட்டம் ! ( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )



             மொழிகாக்கப் போராட்டம் 
                  இனம்காக்கப் போராட்டம்
              மதம்காக்கப் போராட்டம் 
                   மன்னருக்கும் போராட்டம் 
              ஏழைக்கும் போராட்டம்
                    கோழைக்கும் போராட்டம் 
              இவ்வுலகில் போராட்டம்
                     எத்தனையோ நடக்கிறது !


            இல்லாமை காரணமாய்
                 எடுக்கின்றார் போராட்டம்
            வல்லமையை நிலைநிறுத்த
                   வகைவகையாய் போராட்டம்
            வாழவெண்ணி நடத்துகிறார்
                    வாழ்வெல்லாம் போராட்டம்
              நீழமாய் தொடர்கிறது
                     நீழ்புவியில் போராட்டம் !


             முதலாளி போராட்டம்
                  முதல்பெருக வைப்பதற்கு
             தொழிலாளி போராட்டம்
                     தோல்வியின்றி வாழ்வதற்கு
              அரசியலார் போராட்டம் 
                     ஆட்சியிலே அமர்வதற்கு
              அவர்மனதில் போராட்டம்
                  அதிகசொத்துச் சேர்ப்பதற்கு !
                   
              மாணவர்கள் போராட்டம்
                   மதிப்பெண்கள் பெறுவதிலே
             பெற்றவர்கள் போராட்டம்
                     பிள்ளைகளை உயர்த்துவதில்
             ஆசிரியர் போராட்டம்
                      ஊதியத்தைப் பெருக்குவதில்
              ஆழுகின்றார் போராட்டம்
                     அனைத்தையுமே பதுக்குவதில் !

இலங்கையில் பாரதி -- அங்கம் 33 முருகபூபதி




இலங்கையில் பாரதியின் தாக்கம்  கலை, இலக்கியத்திலும் ஊடகத்துறைகளிலும் அதேசமயம் கல்வித்துறையிலும் செல்வாக்குச்செலுத்தியிருக்கிறது.  
பாடசாலைகள் பாரதியின் நாமத்துடன் இயங்கியிருப்பதையும் இயங்கிவருவதையும் காணமுடிகிறது.
கல்வித்தெய்வம் கலைமகளுக்கு மற்றும் ஒரு பெயர் பாரதி. அந்தவகையில் கல்விக்கான கலங்கரைவிளக்கமாகத் திகழும் பாடசாலைகளுக்கும் பாரதியின் நாமம் சூட்டப்பட்டிருக்கிறது.
1908 ஆம் ஆண்டளவில் இன்றைய யாழ்ப்பாணம் பஸ்நிலையத்திற்கு சமீபமாக பாரதி பாஷா வித்தியாசாலை தொடங்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் பாரதி தமிழகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். பாரதியின் சிந்தனை இலங்கையில் வேரூன்றிய காலம் 1922 என முன்னரே இந்தத்தொடரில் குறிப்பிட்டிருந்தோம்.
அதனால், பாரதி இலங்கையில் அறிமுகமாவதற்கு முன்னரே யாழ்ப்பாணம் பாரதி பாஷா வித்தியாசாலை தொடங்கப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.
யாழ்ப்பாணத்தில் அக்காலப்பகுதியில் வாழ்ந்த திருவிளங்க நகரத்தார் எனப்படும் சமூகத்தினரால் சைவமும் தமிழும் இந்தப்பிரதேசத்தில் வளர்க்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட  இப்பாடசாலையை ஸ்தாபித்தவர் சின்னத்தம்பி செட்டியார். 

பயணியின் பார்வையில் அங்கம் - 13 முருகபூபதி


-->

"காற்று  வாங்கப்போனேன் ஒரு செய்தி வாங்கி வந்தேன்"
இலங்கையில்   மூத்த பத்திரிகையாளரின் அனுபவமும் கப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் வார்த்தைகளும்
கிளிநொச்சி ஊடக அமையத்தின் சந்திப்பில் கலந்துரையாடல்

இந்த அங்கத்தை ஒரு சொல்லமறந்த கதையுடன் ஆரம்பிக்கலாம்.
தென்னிலங்கையிலிருந்து பலவருடகாலமாக  வெளியாகிறது அந்தப்பத்திரிகை. ஒரு இந்தியத்தனவந்தரினால்  தொடங்கப்பட்டு காலப்போக்கில்  பல  தனவந்தர்களின் பங்குடன் வளர்ந்து, பலதரப்பட்ட  வர்த்தகத்துறை  செல்வந்தர்களிடம் கைமாறிச்சென்று ஒரு கால கட்டத்தில் அரச மற்றும்  அரசியல் கட்சிகளின் மட்டத்திலும் செல்வாக்குச்செலுத்தி,  இலங்கை  வர்த்தகத்துறையில் தேர்ந்த ஞானமும்  பெற்றவரின் தலைமைப்பொறுப்பிற்கு வருகிறது அந்தப்பத்திரிகை.
ஒரு காலகட்டத்தில் அவருக்கு,  அந்தப்பத்திரிகை " இன்னாரின் பத்திரிகை " என்ற பெரும் புகழுக்கும் அப்பால், தமிழ்  மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்ற ஊடகம் என்பதிலும் பெருமிதம் நீடித்திருந்தது.
உலகவங்கியும் அவரது இதர வர்த்தகத்துறைகளின் அபிவிருத்திக்கு  கடன் வழங்குவதற்கு முன்வந்திருந்தது.

உலகச் செய்திகள்


இந்­தி­யாவின் முதல் முழு­நேர பெண் பாது­காப்பு அமைச்­ச­ரானார் நிர்­மலா சீதா­ராமன்

கடும் எச்­ச­ரிக்­கை­க­ளையும் மீறி வட கொரியா வெற்­றி­க­ர­மாக புதிய அணு­சக்திப் பரி­சோ­தனை

வட கொரி­யாவின் புதிய ஆறா­வது அணு­சக்தி பரி­சோ­த­னைக்கு உலக நாடுகள் கடும் கண்­டனம்

பிரபல பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ் படுகொலை..!

வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

பேஸ்புக் மூலம் 13 ஆண்களை திருமணம் செய்த பெண் ! எதற்குத் தெரியுமா ? 




இலங்கைச் செய்திகள்


தமிழ் மக்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­ம் ஜனா­தி­பதி மைத்­திரி : மனோ புகழாரம்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது

பொலிஸ் மா அதிபரை சந்தித்தார் ட்ராவிஸ் சின்னையா

காணாமல் போனோரின் உற­வு­களை கொழும்பில் சந்­திக்கும் ஜனா­தி­பதி

"முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"

கிளிநொச்சி மாணவன் சிங்கப்பூர் கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு 

தொடரும் சீரற்ற காலநிலையின் எதிரொலி தீவிரமடைகின்றது டெங்கு நோய் பரவல் 

இரு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்தனர் : மத்தள விமானநிலைய விவகாரமே முக்கிய பேச்சு 

சீரற்ற காலநிலையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு



இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்காக நடன அரங்காற்றுகை

.

அவுஸ்திரேலியாவில்  கடந்த 29 வருடகாலமாக  ( 1988 - 2017) இயங்கிவரும்   இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் வளர்ச்சிக்காக மெல்பன் இளம் கலைஞர்கள் வழங்கும் நடன அரங்காற்றுகை.

ஶ்ரீமதி யாழினி திருலோஜன் அவர்களின் சிவாலயம் நடனாலயா மாணவர்கள் வழங்கும் சிவசக்தி நடன அரங்காற்றுகை.

                         எதிர்வரும் 17 - 09-2017 ஆம் திகதி ஞாயிறு

                        மாலை 5.30 முதல் இரவு 8.00 மணிவரையில்

                                    Chandler Community Centre Theater

                                  Issac Road, Keysborough, Victoria - 3173

இலவசமாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் கிடைக்கப்பெறும் நன்கொடைகள்,  இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்கப்படும்.

             kalvi.nithiyam@yahoo.com      -      www. csefund.org

தமிழ் சினிமா

புரியாத புதிர்

Puriyatha Puthirபுரியாத புதிர் நீண்ட நாளாய் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. பெயர் மாற்றப்பட்டு நாட்கள் நகர்ந்து போய் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தின் பெயர் போல கதைக்குள் ஒளிந்திருக்கும் சம்பவம் என்ன, புதிர் புரியுமா என பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி ஒரு கிடார் இசைக்கலைஞர். தன் நண்பனின் இசைக்கருவிகள் தொழிலை கவனித்து வருகிறார். வயலின் வாங்க கடைக்கும் வரும் ஹீரோயின் காயத்திரியின் நட்பு கிடைக்கிறது.
காயத்திரி இசை ஆசிரியையாக பணி செய்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பின் காதல் மலர்கிறது. இவரின் அன்பான கல்லூரி தோழி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.
கதையின் ட்விஸ்ட் இங்கே தான். சமூக வலைதளக்குற்றங்கள், சைபர் கிரைம் என காயத்திரியை சுற்றுகிறது. மீராவாக நடித்திருக்கும் இவரின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள் விஜய் சேதுபதிக்கு தெரியவர அவர் நிலை குலைந்து போகிறார்.
தன் நண்பன் தற்கொலை செய்துகொண்டது, காயத்திரி சம்பவம் என அடுத்தடுத்த நிகழ்வால் விஜய் சேதுபதியின் குணங்களில் வரும் திடீர் மாற்றம் காயத்திரிக்கு ஒரு ட்விஸ்ட். ஒரு கட்டத்தில் விசயம் இவருக்கு தெரியவர இவரும் தற்கொலைக்கு முயல்கிறார்.
விஜய் சேதுபதி தன் நிலையில் இருந்து மீண்டாரா, காயத்திரி உயிருக்கு என்னானது, சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார், அமானுஷ்யமா, திட்டமிட்ட சதியா என்பது புரியாத புதிரின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி ஒரு நகரத்து இளைஞராக கலக்கியிருக்கிறார். அவரின் நடிப்பு, சூழ்நிலையால் குணம் மாறும்விதம் என டபுள் ஆக்ட் போல தோன்றும். அவரின் உடல் அசைவுகள், நடிப்பிற்கு உணர்வுகள் கொடுக்கிறது.
காயத்திரி விஜய் சேதுபதிக்கு பொருத்தமான ஜோடியாக மாறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரும் கதைக்கு ட்விஸ்டாக மாறியது எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.
விஜய் சேதுபதியின் படங்களில் ஹூயூமர் இருக்கும். ஆனால் இப்படத்தில் நண்பனாக அர்ஜுனன் வந்தாலும் பெரிதளவில் காமெடிகள் எதுவும் இல்லை. ஹீரோவுக்கு வைக்கப்படும் செக் சமீபத்தில் பரவி வரும் ப்ளூ வேல் கேம் போல தோன்றும்.
ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் தான் படத்தில் தனித்துவம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதற்கேற்ப பாடல்களும் ஓகே. இடையில் திடீரென வந்து கைதாகும் ரமேஷ் திலக் எங்கிருந்து வந்தார், எதற்காக வந்தார் என்பது சஸ்பென்ஸ்..
வேறொருவரின் தற்கொலையில் நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். தற்கொலை பிரச்சனைகளுக்கு தீர்வல்ல. பார்க்கும் பார்வை கூட தற்கொலைக்கு தூண்டும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதியை பாராட்ட வேண்டும். கதை தேர்ந்தெடுத்த விதம், அதற்கு ஏற்ப மாறிய விதம், ரொமான்ஸ் என ஸ்கோர் அள்ளுகிறார்.
மீரா என்ற பெயர் காயத்திரிக்கு பொருந்தியதோடு விஜய் சேதுபதியுடன் கெமிஸ்ட்ரியில் இணையாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் கதையை காட்டிய விதம் கச்சிதம், இருக்கையின் நுனியில் உட்கார வைத்துள்ளது. ஆங்காங்கே கதைக்கு தேவையான பின்னணி இசை.

பல்பஸ்

கதையில் சில இடங்களில் லாஜிக் இடிப்பது போல தோன்றலாம்.
ரமேஷ் திலக் வந்துபோகும் காட்சி கதையின் பாதையை மாற்றுகிறதோ என தோன்றுகிறது.
மொத்தத்தில் புரியாத புதிர் கதைக்கு சரியான பெயர். அத்தனை பொருத்தம். புதிரின் உச்சம், உணர்ச்சியுடன் விளையாடுகிறது.


நன்றி  CineUlagam