புல்லாங்குழல் புஹாரி( வடகரை)


ஆம்! என்னவளும் ஒரு புல்லாங்குழல்தான்,
அதை வாசிக்க நினைத்தவர்களின் மத்தியில்
நேசிக்க நினைத்தவன் என்பதால்தான்
என்னவோ அதன் இசை ஸ்வரங்களை
என் இரு விழி நரம்புகளிலும் சுமக்கும்
வரம் கிடைத்தது ஒரு கணம்!!!!
என் இரு விழி நரம்புகளிலும் அதன்
இசை நாளங்களை இணைத்தேன்
உயிர் கொடுத்தேன் பின் உரு கொடுத்தேன்
உணர்வில்லாது நடமாடும் உலகம்
என்னவளின் சுவாசம் மட்டும் என்னுடன்...
சத்தியமாக சொல்கிறேன்
நான் தவறவிட்ட புல்லாங்குழலல்ல அவள்..
என்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட புல்லாங்குழல்..
ஏனோ! அதை வாசிக்க நினைத்தவர்கள்
உறவுகள் என்பதாலா,
இல்லை அதற்கு நான் தகுதியற்றவன்
என்பதாலா????

nantri koodal.com

இனியும் பிறப்பாரா ஸ்ரீதர் பிச்­சை­யப்பா - கனிவுமதி

.
விடி­காலை என்று கூட சொல்ல முடி­யாது ஒன்று அல்­லது இரண்டு மணிக்கு என் கைப்­பேசி சிணுங்­கு­கின்­றது. அடுத்த பக்­கத்­தி­லி­ருந்து அழைப்­பது ஸ்ரீதர் என்று தெரிந்­து­விடும் ஏனென்றால் இந்த இரண்டும் கெட்ட நேரத்தில் தொலை­பேசி எடுப்­பது அவ­ரா­கத்தான் இருக்கும் என்­பது என்­அ­சைக்க முடி­யாத நம்­பிக்கை.கைப்­பே­சியை எடுத்தால் ''டேய் கவிஞா தூங்­கு­றியா? தூங்­கப்­போறியா? அல்­லது என் போனுக்கு காத்­தி­ருக்­கியா?" என அடுத்­த­டுத்து கேள்­வியை கேட்டு விட்டு சிரித்­துக்­கொண்­டி­ருப்பார்.நானும் இல்லை உடுப்பு துவைக்­கப்­போறேன்''என  சொல்ல ''உனக்கு உடுப்பு துவைக்க நேரங்­கா­லமே கிடை­யாதா? என என்னை கலாய்ப்பார். அந்த கல­க­லப்­புக்கு பின் இலக்­கியம் பேச ஆரம்­பிப்போம்.அன்று தான் வாசித்த ஏதேனும் ஒரு நூலைப்­பற்றி அல்­லது ரசித்த திரைப்­படம் பற்றி ஓவி­யங்கள் பற்றி நாம் பேச ஆரம்­பிப்போம்.ஒரு படைப்பை இர­சித்து அதனை மற்­ற­வ­ரோடு பகிர்ந்து கொள்­கின்ற உயர்ந்த பண்­பினை அவ­ரிடம் நிறைய தடவை கண்­டி­ருக்­கிறேன்.  

இது ஒரு நிலாக் காலம் 28/02/2015


https://www.youtube.com/watch?v=q43hHa5PTiQ



அன்பு இசை இரசிகர்களுக்கு வணக்கம்,

பலரது விருப்பத்திற்கு இணங்க உலகப்புகழ் வீணை வித்தகர்,
இராஜேஷ் வைத்தியா வழங்கும் இது ஒரு நிலாக்காலம்...
வாத்தியத் திரையிசைக் கச்சேரி!
சிட்னியிலிருந்து எம் இளம் இசைக் கலைஞர்களும் அணிசெய்ய இருக்கின்றார்கள்.
இனிய இசைப் பொழுதாக மலரவிருக்கும் இவ்விசை நிகழ்ச்சிக்கு,
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நன்றியுடன்,
 
-சுப்ரதீபம் கலையரங்கத்தினர்-

இது ஒரு நிலாக்கால நிகழ்விற்கு இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள்: 



இலங்கைச் செய்திகள்


கனகசுந்தர சுவாமி காலமானார்

 ஜனாதிபதி- மோடி சந்திப்பு: இருதரப்பு நல்லுறவு குறித்து கலந்துரையாடல்
காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரம் : 500 பெண்கள் பங்கேற்பு
நல்லிணக்கம் என்பது உண்மைய வெளிகொண்டுவருவதாகும்: பிரிட்டன் கூறுகின்றது
வரவேற்கின்றது அமெரிக்கா..!

  'ப்ரொன்ட்லைன்' இல் பிரபாகரனின் செவ்வி மீள் பிரசூரம்: தடையை நீக்குமாறு பிரதமர் வேண்டுகோள்




சிட்னி துர்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 23 .02 .2015

.
சிட்னி துர்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் மாசி மாதம் 23ம் திகதி
முதல் மார்ச் மாதம் 6ம் திகதி வரை இடம் பெறுகின்றது . அனைத்து விபரங்களையும் இங்கே பார்க்கலாம்

சங்க இலக்கியக் காட்சிகள் 40- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்.  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்டின் வனப்பால் காதலியின் நினைப்பு!

நாடாளும் மன்னன் ஒருவன் வேற்று நாடொன்றுடன் போர்தொடுத்துப் படை நடத்திச் சென்றபோது அவனது படையிலே ஒரு வீரனாகச் சென்றிருந்த தலைவன்ää போர் முடிந்து,  போர் தொடர்பான ஏனைய தனது கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றிய பின்னர் தன் ஊருக்குத் திரும்புகின்றான். அங்கே இவ்வளவு காலமும் பிரிவுத் துயரைத் தாங்கிக்கொண்டு அவனது வரவுக்காகக் காத்திருந்த தன் காதலியோடு கூடிக் குலாவுகின்றான். அவளைப் பிரிந்திருந்த காலப்பகுதியில் தான் தங்கியிருந்த பாசறையை அண்டிய பகுதியிலே, தான் கண்ட காட்சிகளையும், இவ்வளவு விரைவாகத் தான் அவளை நாடி வருவதற்குக் காரணமாகத் தன்னைத் தூண்டிவிட்ட நிகழ்சிகளையும் அவளிடம் விபரிக்கிறான்.


சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கு இலண்டனில் மாபெரும் விழா - யசோ

.
நவாலி ஊர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர்
  அவர்களுக்கு இலண்டனில் மாபெரும் விழா
ஆயிரமாயிரம் செந்தமிழ்ப் பாக்களைப் பாடி ஈழப் புலவர் பரம்பரையை இலங்கச் செய்த நவாலி ஊர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களுக்கு இலண்டனில் வேர் ஊன்றிப் பெரு விருட்சமாக வளர்ந்து தமிழ் வளர்க்கும் “இலக்கிய சங்கமம்” என்னும் அமைப்பு பெரு விழா ஒன்றினைச் சனிக்கிழமை 21 – 02 – 2015அன்று மிகவும் கோலாகலமாகக் கொண்டாடியது. புலவரின் அரிய படைப்புகள் பற்றிப் பலர் சொற்பொழிவு ஆற்றினார்கள். புலவரின் மூத்த புதல்வன் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த மகன் பல் மருத்துவ கலாநிதி பாரதி அவர்களின் வாழ்த்துரையுடன் ஆரம்பமாகிய இந்தப் பெரு விழா முருகப் பெருமானின் திருவருளாலே சிறப்பாக நிறைவுற்றது.
விழாவிற்கு இலக்கிய சங்கமம் வெளியிட்ட அழைப்பிதழையும் மருத்துவ கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்களின் வாழ்த்துரையையும் கீழே பார்க்கவும். நேரடியாகவும் வாழ்த்துரையைச் செவி மடுக்கலாம்

திருமுறை முற்றோதல் 01 .03 .2015

.



விழுதல் என்பது எழுகையே" - பகுதி 39 மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

.
 பகுதி 39
தொடர்கிறது...

அம்மா, தங்கச்சி, பத்மகலா, சுவிசில் சந்தித்த தவத்தார், இராமலிங்கம், அவரின் மகள், ஆபிரிக்க இளைஞன், டேவிட் அங்கிள், பானு, தமிழகப் பேராசிரியை, யாழ்ப்பாண பேராசிரியர் என எல்லோருடைய நினைப்பும் அவனைச் சூழ்ந்து நின்றது.
எனது படிப்பு?. ஏக்கம் அவன் இதயத்தை ஓங்கி அறைந்தது.எங்கும் போகாமல் அறைக்குள்ளேயே இருந்தான்.
ஞாயிற்றுக்கிழமையும் இரவைச் சந்தித்து விடிந்தது. விடிந்ததும் மீண்டும் சீலன் எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு கடைக்குச் சென்றான்.வேலை செய்யத் தொடங்கினான்.
கடை முதலாளி, „வெளிநாட்டிலை போன் இல்லாமலே வாழ முடியாது இதிலை பத்து குரோன்கள் இருக்குது அவசரத் தேவைக்கு மட்டும் பாவியுங்கள்“ எனக் கூறியபடியே சீலனிடம் ஒரு கைப்பேசியையும் அதற்குரிய சிம் கார்டையும் கொடுத்தார். 
எதிலுமே பிடிப்பு இல்லாமலிருந்த சீலனுக்கு கடை முதலாளியின் உதவி பெரும் அறுதலாய் இருந்தது. குழம்பி இருந்த சீலனின் மனம் தெளிவடையத் தொடங்கியது.
இனி என்ன? என் வாழ்வில் வசந்தம் வருமா?. பலவாக அவன் மனம் எண்ணத் தொடங்கியது. குழம்பிய அவன் மனதில் வேலை கிடைத்தமையால் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது.
அம்மாவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைக்க வேண்டும் என்ற ஆவலுடன் தாயாரின் தொலைபேசி இலக்கத்தைத் தேடினான்,கிடைக்கவில்லை இலக்கம் தொலைந்துவிட்டது.

ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட "மகா மகா" திரைப்படம்

.

"மகா மகா" திரைப்படம் காதலும் த்ரில்லரும் கலந்த தமிழ் படம். இந்த படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட படம். சிட்னி மற்றும் அதன் அருகே உள்ள ஒரு சின்ன டவுனில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது.

மகா மகா படத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல நடிகர் மற்றும் நடிகைகள் முதன் முறையாக நடித்து இருக்கிறார்கள்.  மேலும் நிழல்கள் ரவி, அனுபமா குமார், மற்றும் மீரா கிருஷ்ணன் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இந்த திரைபடத்தில் "மதராசபட்டினம்" மற்றும் "I" திரைப்படத்திற்கு அடுத்து ஒரு ஆங்கில பெண் கதநாயாகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மணிரத்தினம் இயக்கிய "பாம்பே"  திரைப்படத்திற்கு படதொகுபிற்காக (Editing) இந்தியாவில் நேஷனல் அவார்ட் பெற்ற சுரேஷ் ஆர்ஸ், பனியாற்றி உல்லார். மேலும் சங்கர் இயக்கிய "காதலன்"   திரைப்படத்திற்கு சவுண்ட் எபக்ட்ஸ்க்காக  (Sound Effects) இந்தியாவில் நேஷனல் அவார்ட் பெற்ற முருகேஷ், மகா மகா படத்தில் பனியாற்றி உல்லார்.

பேஸ்புக்கின் ஆண்டு வருமானம் 10 பில்லியன் டொலரைக் கடந்தது

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது  வரலாற்றில் முதன் முறையாக 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஆண்டு வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் January வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
தொலைபேசிகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு வரும் வருமானத்தால் இந்த அளவு அதிக இலாபம் கிடைத்ததாகவும், உடனடியாக பணம் சம்பாதிப்பதை விட எதிர்கால தொழில் நுட்பங்களுக்காக அதிக முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் மட்டும் 3.85 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிய பேஸ்புக், அதன்மூலம் 696 மில்லியன் டொலரை இலாபமாக பெற்றது. 
இந்நிலையில் கடந்த ஆண்டு முழுவதுமான பேஸ்புக்கின் வருமானம் 58 சதவீதம் உயர்ந்து 12.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதனால் அதன் இலாபம் 2.9 பில்லியன் டொலர் என்ற அளவிற்கு இருமடங்காக உயர்ந்துள்ளது.

வயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்!!



.
இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள்வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமானதோற்றத்தை உண்டாக்கும்மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும்உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்றுபகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய்இதய நோய்கள்வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால்சரியான உணவுகள் கண்டிப்பாக தேவைஅவைகள் உங்கள் ஈரலில் உள்ள நச்சுத்தன்மையைநீக்கவும்உங்கள் மெட்டபாலிசம் அளவை ஊக்குவிக்கவும் உதவும்இதனால் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க அது உதவும்கொழுப்புகளை எரிக்கஉதவும் உணவுகளும்மசாலாக்களும் பல உள்ளதுஇவைகள் உங்கள் வயிற்றில் உள்ள கொழுப்புகளை குறைக்க திறம்பட செயல்படும்இவ்வகைஉணவுகள் மற்றும் மசாலாக்களின் உதவியோடு வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க சில திறமையான வீட்டு சிகிச்சைகள் உள்ளதுஇதோஅவைஉங்களுக்காக!
எலுமிச்சை ஜூஸ்

உலகச் செய்திகள்



கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த காட்சியை வெளியிட்டது ஐ.எஸ் அமைப்பு

மத்தியதரைக்கடலை கடந்து இத்தாலி செல்ல முயற்சித்த 2,000 குடியேற்றவாசிகள் மீட்பு

எண்ணெய் ஏற்றிச் சென்ற ரயில் தடம்புரண்டு தீபற்றியது..!

பாகிஸ்தானில் பொலிஸ் தலை­மை­ய­கங்­க­ளுக்கு அருகில் குண்டு வெடிப்பு; 8 பேர் பலி

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 45 பேர் எரியூட்டப்பட்டு படுகொலை


கிறிஸ்தவர்களின் தலையை துண்டித்த காட்சியை வெளியிட்டது ஐ.எஸ் அமைப்பு

16/02/2015 எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பிணைக் கைதிகள் 21 பேரை வரிசையாக வைத்து, அவர்களது தலையை துண்டிக்கும் வீடியோ காட்சியை ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.



தமிழ் சினிமா அனேகன்

.

தனுஷ் தொட்டதெல்லாம் பொன் ஆகும் காலம் போல, அந்த வகையில் சென்ற வருடம் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் தனுஷ் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த ஷமிதாப் ஹிந்தி படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது மீண்டும் கோலிவுட்டில் இறங்கி அடிக்க கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து அனேகனாக களம் கண்டுள்ளார். தனுஷ், படத்திற்கு படம் தன் நடிப்பை உயர்த்தி கொண்டே தான் போகிறார். அந்த வகையில் சைக்லாஜிக்கல் த்ரில்லர் கதையம்சத்தில் வந்துள்ளது இந்த அனேகன்.

கதை
படத்தின் ஆரம்பத்திலேயே சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஹீரோயின் அமைராவிற்கு திடிரென்று முன் ஜென்ம நியாபகம் வருகிறது. இதில் பர்மாவில் ஏழை இளைஞனாக தனுஷ் வருகிறார். அங்கு இருவருக்குமிடையே காதல் வளர, பின் அது கைக்கூடாமல் சோகத்தில் முடிகிறது.


இதை தொடர்ந்து ஹீரோயின் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் தனுஷ் வேலைக்கு சேர, அங்கு பாஸாக வருகிறார் நவரச நாயகன் கார்த்திக். இங்கு அமைரா சொல்லும் கதையை யாரும் நம்பாமல் இருக்க, மீண்டும் மற்றொரு கதை தொடங்குகிறது. இங்கு தான் தனுஷ் சென்னை இளைஞனாக கலக்கியுள்ளார். இந்த எபிசோட் தான் படத்தின் ஹைலட்.
ஆனால், வழக்கம் போல் இதிலும் காதல், பின் அது ஒன்று சேராமல் எதிர்ப்பாரத டுவிஸ்ட்வுடன் முடிகிறது இந்த கதை. தற்போது இந்த கதைகளையெல்லாம் நிகழ் காலத்தில் ஒட்டவைத்து அதிரடி கிளைமேக்ஸுடன் முடிகிறது படம்.
நடிகர், நடிகைகள், மற்றும் படத்தை பற்றிய அலசல்
தனுஷுற்கு நடிக்கவா சொல்லி தர வேண்டும், ஒவ்வொரு காட்சியிலும் அடித்து தூள் கிளப்புகிறார். அதேபோல் கதாநாயகியும் படம் முழுவதும் வந்து மனதில் ஒட்டி செல்கிறார். இதையெல்லாம் விட நவரச நாயகன் கார்த்திக் சார் இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் என்று கேட்கும் அளவிற்கு அவர் வரும் காட்சிகள் அத்தனை எனர்ஜி. குறிப்பாக ஹீரோயினிடம் கதை கேட்கும் தருணத்தில் செம்ம.
சுபா அவர்களின் வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் டங்கா மாரி பாடலில் தியேட்டர் இருக்கைகளில் யாரும் இல்லை, எல்லாம் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். ஒளிப்பதிவும் மிகவும் அழகாக உள்ளது. படத்தின் லொக்கேஷன் ஹாலிவுட் தரத்தில் உள்ளது.
க்ளாப்ஸ்
தனுஷ் தன் யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார்த்திக் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார். பாடல்கள் அதை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது. கே.வி.ஆனந்த் எடுத்துக்கொண்ட களம் ஹாலிவுட் படத்தை போல் உள்ளது.
பல்ப்ஸ்
திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது, எல்லோருக்கும் இப்படம் புரியுமா? என்றால் சந்தேகம் தான். சில நீளமான காட்சியமைப்புகளை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் அனேகன் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவன், என்றாலும் ரசிக்க வைப்பவன்
ரேட்டிங்-3.25/5    
நன்றி cineulagam