நவராத்திரி துதி - அலைமகள் , கலைமகள் , விஜயதசமி வீரதுர்க்கை துதி

 













அலைமகள் துதி 
அருள் புரிவாயே அம்மா இலக்குமி ! 


         மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
          மெல்பேண் …. ஆஸ்திரேலியா



செல்வம் செல்வம் தேயாச் செல்வம்
தேடித் திரிகிறோம் தெரியவே இல்லை
அனைத்துச் செல்வமாய் ஆகியே இருக்கிறாய் 
அம்மா லக்சுமே அடியினைத் தொழுகிறோம்

நிறைந்த செல்வம் நீயே அம்மா
நினது அருளே அனைத்தும் அம்மா
அலைந்து திரிகிறார் செல்வந் தேடி
அவரின் மனத்தைத் திருத்திடு அம்மா

ஓய்வே இல்லா உழைக்கிறார் அம்மா
உழைத்து உழைத்துக் குவிக்கிறார் அம்மா
அருளை அன்பை மறக்கும் அவரை
திருத்திடு தாயே திருவடி சரணம் 

வாழும் வரைக்கும் செல்வம் வேண்டும்
செல்வம் உன்னருள் பெற்றிட வேண்டும்
திருவருள் நிறைவுடன் செல்வம் சேர்ந்திட
அருள் புரிவாயே அம்மா இலக்குமி 

சரஸ்வதி தோத்திரப் பாடல்கள்

 










செந்தமிழ்ச் செல்விநின் செம்பதங்கள் பிடித்தேன்

சித்திகள் அருள்வாய் அம்மா      

சித்திகள் அருள்வாய் அம்மா!

                                      (செந்தமிழ் )                                                                                                           

சிந்தையிலே மலர்ந்து செந்நா வினிலே கனிந்து

செவியினிலே செழுந் தேனாய் இனித்திடும்

                                      (செந்தமிழ்)                                                                               

நல்லோரின் நாவிலே நடம்புரி தெய்வமே

எல்லோர்க்கும் அருள்புரி ஆனந்தமே

 கல்யாணியே கல்விக் காரணியே பாரில்

நல்வாணியே உன்னை நாடி வந்தேன் அம்மா!

                                     (செந்தமிழ்)

                                                                    

சிற்பரையே தாயே யிந்தச் சிறியனேன்  பிழைபொறுப்பாய்

கற்பகத் திருவுருவே கபாலி மனோகரியே

பொற்பதத் தாமரையே புவிதனில் கதிநீயே

நற்பதி தில்லைவதி  நாயகிநீ தஞ்சமம்மா!

                                                                     

சுந்தரத் தமிழ்கொண்டு  மந்திரம் ஓதிவந்தேன்

வந்தா தரித்திட மனந்தான் இரிங்கலையோ?

எந்தாய் நீயல்லையோ? ஏழைக்(கு)அருள்வ தெப்போ?

சிந்தா மலர்ப்பாதம் சிரஞ்சூட்டும் நாளெதுவோ?

                                     (செந்தமிழ்)                                                

சிலப்பதிகாரத்தை தொடர்ந்து இராமாயணம். ஒஸ்ரேலிய நாடக ஆர்வலர்களுக்குப் பெரு விருந்து!


பாரதி பள்ளியின் இளைய தலைமுறையினர் மேடையேற்றிய சிலப்பதிகார நாடகத்தைப் பார்த்து மெய்மறந்த நாடக ஆர்வலர்களுள் நானும் ஒருவன். சிலப்பதிகாரக் காட்சிகளை தத்துரூபமாக எம் கண்முன்னே அரங்கேற்றி எம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைத்த பெருமை பாரதி பள்ளியின் முதவர் திரு மாவை நித்தியானந்தன் அவர்களையே சாரும். சிலப்பதிகாரத்தின் பசுமையான நினைவுகளுடன் (ஒரு வருட காலத்துக்குள்) இராமாயண நாடகத்தை பார்க்கச் சென்றேன்.

 இராமாயணத்தின் முதலாம் பாகம் இசை நாடகமாக அரங்கேறியது. நாடகத்தின் ஆரம்பக் கட்டத்தில் விசுவாமித்திர முனிவர் இராமனையும் இலக்குமணனையும் அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரராக வேடம் பூண்டு நடித்தவர் சினம் கொண்ட முனிவராக காட்சியளித்தார். இராமன் இலக்குமணனாக வந்தவர்களும் தமது கதாபாத்திரங்களை திறம்பட நடித்தனர் என்றால் மிகையாகாது.

 இராமன் தாடகையை வதம் செய்யும் காட்சியில் தாடகையின் நடிப்பும் ஓங்காரமான ஆட்டமும், உடலில் பாய்ந்த அம்பை பிடுங்கி கையில் பிடித்துக் கொண்டு விழுந்த தாடகையின் நடிப்பும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்து. இதன் போது ஒளியில் ஏற்படுத்திய மாற்றங்களும் வர்ணங்களும் பின் திரையில் வெளியிட்ட காட்சிகளும் மேலும் இராமாயண இசை நாடகத்தின் தத்துரூபத்தினை வெளிப்படுத்தியதென்றே கூறலாம்.

 இராமனும் இலக்குமணனும் மிதிலை வீதியில் விசுவாமித்திரரின் பின்னால் நடந்து செல்லும் காட்சி, இனிமையான பாடலுடன் வருகிறது. கம்பனின் “அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்” அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து முழுநிலவில், சீதை விரகதாபத்துடன் மென்மையாகப் பாடி, வாடும் காட்சி எல்லோருடைய மனதையும் ஈர்த்தது.

இதை விடவா அது சுமை?


முருகனின் மனைவி மாதவிக்கு திடீர் திடீரென்று ஆசைவந்துவிடும்உடனே கணவனை தொந்தரவு செய்வாள்.

அப்படி என்ன ஆசை என்று நினைக்கிறீர்களா? சம்பந்தம்ல்லாதடத்தில் சம்பந்தமில்லாத ஆசையெல்லாம் 

ந்துவிடும். ஒருமயம் இந்தியாவில் உள்ள சிறு 

கிராமத்தில் குலதெய்வம்கோவிலுக்கு சாமி கும்பிட  

சென்றபோது அங்கு பர்கர் கிடைக்குமா என்று கேட்டுகேட்டதோடு விடாமல் தேடிப் பார்த்துவாங்கிவரவும் 

சொல்லியிருக்கிறாள்நடக்கிற காரியமா அது

அவளுக்கு சொல்லி புரியவைத்து பெரிய நகரம் 

ஒன்றிற்கு ந்த பின் அவள் கேட்தை வாங்கிக் 

கொடுத்திருக்கிறான் முருகன். இதுதான் அவள் 

பிரச்சனைமாமா என்று அழைத்துக் கொண்டுபக்கத்தில்வரும்போதே அய்யோ ப்போது என்ன 

கேட்கப்போகிறாளோ என்று பயப்படும் அளவுக்கு அவன் நிலமைஆகிவிட்டது

 

அன்று ஒரு சனிக் கிழமை மெதுவாக எழுந்து குளித்து 

டிபன் சாப்பிட்டபின் சோபாவில் சாய்ந்தபடி டீவி ரிமோட்மூலம்சானலை மாற்றிக் கொண்டிருந்தான்ஒரு 

சானலில்


"மாம்பழம்னா மாம்பழம் சேலத்து மாம்பழம்என்ற 

பாடல் ஓடிக்கொண்டிருந்ததுஅப்போது 

அடுக்களையிலிருந்து மாதவி,

 

"இந்தாங்கஅந்த சானலை மாத்தாதிங்எனக்கு 

பிடித்தபாட்டுஎன்று உத்தரவிட்டாள்.

 

"சரிசரி மாத்தலஎன்று சொல்லிக் கொண்டே அவனும் ந்தப்பாட்டைக் கேட் ரம்பித்தான்

 

பாட்டு முடிந்ததும், "மாமாஒன்னு கேட்டா கோபிச்சுக்கமாட்டீகளே?" என்று கேட்டாள்

 

"சரி சொல்லுஒன்னும் கோபிச்சுக்க மாட்டேன்"

 

"எனக்கு மாம்பழம் சாப்பிடனும்போ இருக்கு,

வாங்கிட்டு ருவீங்களா?" என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

 

அப்பாடாஇந்த தடவை பெரிதாக சோதனை 

ஒன்றுமில்லநல்லவேளை இப்போது மாம்பழ சீசன் தான்.இல்லாவிட்டால் ஒவ்வொரு இடமா மாம்பழத்தை தேடி 

இலங்கையில் அனுமன் சீதையைத் தேடி அலைந்த 

மாதிரி அலைய வேண்டிஇருந்திருக்கும்அல்லது 

அவளை சமாதானப் படுத்துவதற்குள் மாம்பழ சீசன் 

இல்லாவிட்டாலும் மாம்பழ சீசன் ந்திருக்கும்.

இதற்காகவாவது பிள்ளையாருக்கு சிதறுகாய் ஒன்று 

போடவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே,

 

"சரிமத்தியானம் போய் வாங்கித்தரேன்"  என்று சொல்லிவிட்டு அம்மாத தமிழ்  இதழ் ஒன்றை 

புரட்டிக் கொண்டிருந்தான்

 

"மத்தியானம் சாப்பிட்டா நீங்க போ மாட்டீங்க

சாப்பிட்டவுடனே ஒரு குட்டித் தூக்கம்அப்புறம்

சோம்பேறியாகிடுவீங்க"

 

"கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தால் ஒனக்கு பிடிக்காதேசரிபோயிட்டு வரேன்என்று சொல்லிக் கொண்டே காரை 

எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

 

அன்று டாண்டினாங்க் மார்க்கெட்டில் நல்ல கூட்டம்

கடைக்குஅருகிலே காரை நிறுத்த இடம் கிடைக்கால் கார் பார்க்கை ரண்டு மூன்று தடவை சுற்றி வந்தும் 

பலன் இல்லாததால் கடைக்கு சற்று தூரத்தில் காரை 

நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்குள் சென்றான்.

கட்டில் சொன்ன கதை – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும்.


கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து துள்ளி நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான்.

ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் - கட்டில்.

"என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?" விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான்.

"ஏதோ 'றோ மில்லு'க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!" இன்னமும் பயந்தபடியே முணுமுணுத்தான் சுந்தர்.

றோ மில்லைச் (Raw Mill) சுற்றி புகை கிழம்பிக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் புகைமூட்டத்தினுள் சிக்கினார்கள். ஒவ்வொன்றாகத் தூரத்தே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் மெல்ல அணைந்து தொழிற்சாலை இருளில் மூழ்கியது. 'சைரன்' மூன்று முறை கூவியது.

"நான் ஒருக்காப் போய் இஞ்சினியருக்கும் போமனுக்கும் சொல்லிப் போட்டு வாறன்" சுந்தர் படிகளினின்றும் கீழே இறங்கினான்.

விழுந்து கிடந்த ராமநாதன் - எழுந்து என் மீது படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு மீண்டும் குந்தினான்.

சற்று நேரத்தில் இஞ்சினியரும் போமனும் வேறும் சிலரும் துடுக்குத் துடுக்கு என்று படிகளில் ஏறி வந்தார்கள். உள்ளே றோ மில் வெடித்திருக்க, வெளிப்புறத்தைச் சுற்றி ரோச் லைற்றை அடித்துத் துருவித் துருவித் தடவினார்கள். ராமநாதனும் சுந்தரும் கை கட்டியபடி அவர்களின் பின்னால் சுற்றினார்கள். இஞ்சினியர் ஏதோ இங்கிலிஷில் வெளுத்துக் கட்ட போர்மன் 'ஆ... ஆ...' என்றார்.

"பெயரிங் (Bearing) போயிட்டுது போல கிடக்கு!" இஞ்சினியர் சொல்ல, "மனேஜருக்கு சொல்லிட்டியளோ?" என்றார் போர்மன்.

"ஆருக்குத் தெரியும். என்ன வெடிச்சதெண்டு. ஒரு ஊகம்தான். பெயரிங் பெயில்யர் ஆகியிருக்கலாம் எண்டு சொன்னனான். அது சரி இப்ப மணி என்ன ஆகுது?"

"விடியப்புறம் நாலு மணியாப் போச்சு."

"விடிய ஆறு மணி மட்டிலை மனேஜர் வாறதெண்டு சொன்னவர். அதுக்கிடையிலை ஸ்ரோரிலை இருக்கிற நாலு பெயரிங்கையும் எடுத்துக் கொண்டு வந்து மேலுக்கு வைக்க வேணும். ஒவ்வொண்டும் பிணம் கனம் இருக்கும்" இஞ்சினியர் சொல்லி முடிப்பதற்குள்,

" இலக்கியவெளியின் - நீலாவணன் சிறப்பிதழ் " அறிமுக நிகழ்வு - பேராதனைப் பல்கலைக்கழகம்

 " இலக்கியவெளியின் - நீலாவணன் சிறப்பிதழ் " அறிமுக நிகழ்வு - பேராதனைப் பல்கலைக்கழகம்

 


https://youtu.be/r3U-H-zIcrI?si=cYuUjTzZvRR1gtej

எல்லோரும் நல்லவரே - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


இந்தியத் திரைத் துறையில் தனக்கென்று ஓர் உன்னத இடத்தை தக்க வைத்த நிறுவனம் ஜெமினி ஸ்தாபனம். இதன் அதிபர் எஸ் .எஸ் . வாசன் பிரம்மாண்டமான முறையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் தயாரித்த சந்திரலேகா மாபெரும் வெற்றி படமானது. அது மட்டுமன்றி வட இந்திய சினிமா உலகத்தை தென்னிந்திய சினிமா பக்கம் வியப்புடன் திரும்பி பார்க்க வைத்தது. இன்னும் சொல்லப் போனால் வாசன் தமிழை விட ஹிந்தியில் எடுத்த படங்களே பெரு வெற்றிகளை படைத்து பணத்தை வாரி வழங்கியது. 


 வாசனின் மறைவை அடுத்து அவரின் சன் எஸ் . எஸ். பாலன்

கைகளுக்கு நிர்வாகம் மாறியது. ஆனந்த விகடன் நிர்வாகம், ஜெமினி ஸ்டுடியோஸ், படத் தயாரிப்பு, ஜெமினி கலர் லேப் என்று எல்லாம் பாலனின் தலையில் விடிந்தது. 

1975 ம் வருடம் கன்னடத்தில் சித்திராமலிங்கய்யா இயக்கி வெற்றி கண்ட பூதையன் மகா ஆய்யு படத்தை ஜெமினி நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்க பாலன் முடிவு செய்தார். ஜெமினி நிறுவனத்துக்கு உரிய முறையில் பிரம்மாண்டமான தயாரிப்பாக படத்தை எடுக்க விரும்பிய பாலன் ஒரே செலவில் படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாக்கினார். 

கிராமத்தில் வடி கட்டிய கஞ்சனாக வாழும் பணக்காரன் தர்மலிங்கம் . ஏழைகளுக்கு பணத்தை கடனாக கொடுத்து வட்டியாக பிழிந்தெடுத்து அவர்களின் கொஞ்ச நஞ்ச நிலங்களையும் பிடுங்கி எடுப்பவன். இறக்கும் தருவாயில் தன மகன் நாகப்பனிடம் ஊரில் இருக்கும் எவருக்கும் இரக்கம் காட்டாதே , உதவி செய்யாதே என்று சொல்லி விட்டு மாண்டு விடுகிறான். மகனும் தந்தை சொல்லை சிரம் மேல் கொண்டு நடக்கிறான். இவர்களுடைய அட்டூழியத்தால் பாதிக்கப் படும் குடும்பங்களுள் கந்தன், கண்ணம்மா குடும்பமும் ஒன்று. நாகப்பனிடம் அடமானம் வைத்த சொத்தை மீட்க நீதிமன்றத்தை நாடுகிறான் கந்தன். ஆனால் வழக்கில் தோல்வியடையவே சொத்தையும் இழந்து, மேலும் கடன்காரனாகிறான். இதனால் நாகப்பன் மீது அவனுக்கு வன்மம் கூடுகிறது. ஆனால் திடிரென்று கிராமத்தில் ஏற்படும் பயங்கர வெள்ளம் எல்லோருடைய வாழ்வையும் புரட்டி போடுகிறது.