அமேஷாவின் "பக்தி" - அற்புதமான நடன நிகழ்ச்சி கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியன்

 "பக்தி" என்பது கலையின் ஆன்மாவாக செயல்படுகிறது. பல
நூற்றாண்டுகளாக
நாடகம்நடனம் மற்றும் சமகால கலைத் துறைகளில் உள்ள கலைஞர்கள் பக்தியை காட்சி ரீதியாக வெளிப்படுத்தியுள்ளனர்இந்திய பாரம்பரிய நடனத்துடன் ஆழமாக பின்னிப் பிணைந்த ஒன்று பக்தியாகும். .

 அமேஷா தர்ஷனா தனது குருவான நாட்டியக்ஷேத்திரத்தின் முதன்மை இயக்குநரான அனுஷா தர்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நடனப் பயணத்தை மேற் கொண்டவர்   . இலங்கை நடன ஆசியையான அனுஷா தர்மராஜாசென்னையில் கலாக்ஷேத்ராவின் நிறுவனரான புகழ்பெற்ற திருமதி ருக்மணி தேவி அருண்டெலிடம் பரதநாட்டியம் கற்ற பெருமைக்குரியவர். கலாக்ஷேத்திரத்தில் ஊட்டப்பட்ட விழுமியங்களைப் பிரதிபலிப்பதன் மூலம் ஆசிரியரும் மாணவரும் பரதக்  கலையின் புனித பாரம்பரியத்தை பாதுகாத்துள்ளனர்.

 நேர்த்தியான மற்றும் ஆற்றல் மிக்க இளம் நடனக் கலைஞர் பள்ளி ஆசிரியர் இரண்டு குழந்தைகளின்  தாய் அமேஷாபாங்க்ஸ்டவுன் கலை மையத்தில் தனது நடனப் பள்ளியான நிருத்யசாகரத்தின் முதல் கச்சேரியில்  பக்தியை அதன் பல்வேறு வடிவங்களில் திறமையாக கையாண்டு  நடன வடிவில் வழங்கினார் . பக்தி என்பது பற்றுமரியாதைநம்பிக்கைஅன்புபக்திவழிபாடு மற்றும் தூய்மை போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதுமேலும் அது தெய்வங்கள்குருகாதலர் மற்றும் ஒருவரின் தாய்மண் வரை கொள்ளக் கூடியது . பக்தி நம்பிக்கைகள் மற்றும் செயல்களை வடிவமைக்கும் ஒரு பலம் பொருந்திய சக்தியாக செயல்படுகிறது,

 ஆசிரியர்கள்தெய்வங்கள் மற்றும் இயற்கை அன்னை மீதான


பக்தியை அமேஷா தனது நடனக் கலையில் அழகாகப் பதிவு செய்துள்ளார். இவரது முதல் கச்சேரியில் "குரு பக்தி" தொடங்கி பல தலைப்புகளில் நடன நிகழ்ச்சிகளாக வடித்திருந்தார்.   பல ஆண்டுகளாக தனது அடையாளத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த அனைத்து குருக்களுக்கும் அமேஷா தனது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் நடன வடிவமைப்பு அமைத்திருந்தார்.

ஆஸி தமிழ்ச் சமூகத்தின் மற்றுமொரு படைப்பு ❤️ யாதும் யாவரும் 🙋🏻‍♀️💃🤷‍♀️ முழு நீளத் திரைப்படம் -

 

நாடக அரங்கியல், குறும் பட இயக்கங்கள் இவற்றோடு  "பொய்மான்" என்ற வெற்றிகரமான முழு நீளத் திரைப்படத்தை இயக்கிய Dr J. ஜெயமோகன் முற்றிலும் வித்தியாசமான, புலம் பெயர் மண்ணின் இன்னொரு கதைக்களத்தோடு "யாதும் யாவரும்" படத்தை ஆக்கியுள்ளார்.


வழக்கம் போல திறன் வாய்ந்த தொழில் நுட்பக் கூட்டணியாக இளைஞர் பட்டாளத்தோடு, தேர்ந்த நடிகர்களும் இணைந்த இந்தப் படைப்பில் வழியாக புலம் பெயர் மண்ணில் வாழும் பெண்களின் மனவோட்டத்தை யதார்த்தபூர்வமாகப் பதிவாக்கியுள்ளார். 

வீடியோஸ்பதி தளத்துக்காக Dr J. ஜெயமோகன் வழங்கிய இந்த நேர்காணல் வழியாக "யாதும் யாவரும்" படம் பிறந்த கதை மற்றும் இந்தப் படைப்பை ஆக்கத் துணை நின்றவர்களை அடையாளப்படுத்தியிருக்கின்றார்.




வேலு பரி படைத்த “மெளனத் தீவு” நூல் நயப்பு கானா பிரபா


 

இந்த நாவலைப் படித்த போது கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கால
இயந்திரத்தில் என பால்யகாலத்துக்குப் போய் விட்டேன். அந்தக் காலத்தில் தினம் ஒரு புத்தம் என்று வெறி கொண்டு படித்த போது நமக்குப் பெருந்தீனியாக வாய்த்தவர்கள் வாண்டு மாமா என்ற எழுத்தாளரும், குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பா போன்றோர்.


அது போல் நம் ஈழ வரலாற்றை நாவல் வடிவில் கொடுத்த வகையில் செங்கை ஆழியான் மிக முக்கியமானதொரு படைப்புலகப் பணியைச் செய்திருக்கிறார்.
அந்த நாட்களில் நாம் படித்த சிறுவர் நவீனங்கள் இன்னமும் பசுமரத்தாணி போல் நம் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
காரணம் அழகு தமிழ் விளையாடும் எழுத்து நடையில் வீர தீரம் நிறைந்த வரலாற்றுப் பின்னணியோடு அவை எழுதப்பட்டிருக்கும்.
இங்கே பரி அவர்களது மெளனத்தீவு நாவலைப் படித்து முடித்த பின்னர் அந்த நாள் இனித்த இலக்கியச்சுவை தான் மனதில் சப்புக் கொட்டியது.

ஈழத்தில் நம் கிராமிய வாழ்வியலை அவர் எழுத்தில் படிக்கும் போது நாம் வாழ்ந்த அந்தக் காலம் பசுமையாக முளைக்கின்றது. அவ்வளவுக்குத் அனுபவித்து எழுதியிருக்கிறார்.
இந்த நூலின் வடிமைப்பே வெகு சிறப்பாக வந்திருக்கிறது. பயன்படுத்தப்பட்ட பெரிய எழுத்துரு, எழுத்துப் பிழைகள் அற்ற வாக்கியங்கள் என்று ஒரு இடறல் இல்லாமல் படிக்க முடிகின்றது.

மனமதில் யாவரும் இருத்திடல் வேண்டும் !

 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


அறமொடு ஆட்சி அமைந்திட வேண்டும் 
அரசியல் தூய்மை ஆகிட வேண்டும்
ஆணவம் ஆட்சியை அணுகிடா வகையில்
அனைவரும் காப்பாய் ஆகிட வேண்டும் 

காத்திடும் தலைமையில் கண்ணியம் வேண்டும்
கைகளைச் சுத்தமாய் வைத்திடல் வேண்டும்
நேர்த்தியாய் அனைத்தும் செய்திடல் வேண்டும்
நீதியை நெஞ்சில் நிறுத்திட வேண்டும்

வேற்றுமை என்பதை விலக்கிட வேண்டும்
ஆற்றலை என்றும் மதித்திட வேண்டும்
தூற்றுவார் தம்மை பார்த்திடா நின்று
துணிவுடன் காரியம் ஆற்றிட வேண்டும்

நட்சத்திரக்காட்டில் . - கவிதை - காகிதம் அநாமிகா

.


பறந்து செல்லும்
பட்டாம் பூச்சி
சிறகுதனைக் கேட்போமா...?!
வான் விட்டம் தொட்டு
விரைந்து செல்லும்
ஒரு பறவையின்
இறக்கை (இ)ரெண்டைக்
கேட்போமா...?!
அதை இரந்துதான் பார்ப்போமா
இல்லை இரவல் தரக்கேட்போமா...?!

விளங்காத விண்ணின்
விளிம்புக்கோடு தாண்டி
அண்டவெளி சேர்வோமா...?!
ஒளியாண்டுகளில்
விழி சிமிட்டிய
விண்மீன் கூட்டம் தொட்டுத்
தோரணம்கட்டிப் பார்ப்போமா...?!
வால்வெள்ளி கொண்டுள்ள
பரம (இ)ரகசியத்தின்
பல காரணம் கண்டு
பரவசம் ஊட்டுவோமா...?!
நாம் பார்க்கப் பொழியும்
எரிகல் மழையும்- இன்னும்
ஏராளமும் கண்டு...
நிலை குலையாது
நீளவான் கலையினைக்
கண்கொட்டாது காண்போமா...?!

அஞ்சலிக்குறிப்பு வீரகேசரி முன்னாள் விளம்பர – விநியோகப்பிரிவு முகாமையாளர் து. சிவப்பிரகாசம் கனடாவில் மறைந்தார் முருகபூபதி


வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலம் விளம்பர – விநியோகப் பிரிவுகளின் முகாமையாளராக பணியாற்றியவரும், கனடாவிற்கு புலம்பெயர்ந்த பின்னரும் Monsoon Journal   என்ற  ஆங்கிலப் பத்திரிகையை நடத்தியதோடு   கனடிய   தமிழர்களுக்கான   வர்த்தக                          களஞ்சியமான ‘தமிழர் மத்தியில்  என்ற   மலரையும்   வெளியிட்டிருப்பவருமான                து. சிவப்பிரகாசம் அவர்கள் கனடாவில் மறைந்தார் என்ற துயரமான செய்தி கிடைத்தது.

 கடந்த ஜூன் மாதம் தொடக்கத்தில் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் விருது விழாவுக்காக ஸ்காபரோவுக்கு சென்றிருந்தபோது,  சிவப்பிரகாசம் அவர்களை  அவரது வீடு தேடிச்சென்று  சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருந்தமையால்,  அவரது திடீர் மறைவு எனக்குள்ளே  சற்று அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  “ முருகபூபதி, குறிப்பிட்ட இயல்விருது விழாவுக்கு என்னால்  வருகை


தரமுடியாதிருக்கும்,  உடல் நலக்குறைவினால் வெளிப் பயணங்களை தவிர்த்துவருகின்றேன்   என்று அவர் தொலைபேசி ஊடாக சொன்னபோது,     சேர்… நீங்கள் ஓய்வெடுங்கள். நானே உங்களை வந்து பார்க்கின்றேன்  “ எனச்சொல்லி, அவரது வீட்டு முவரியை கேட்டுப்பெற்றுக்கொண்டு,  மெக்ஸிக்கோவிலிருந்து வருகை தந்திருந்த எனது உடன்பிறந்த தம்பியின் மகள் லாவண்யாவையும் அழைத்துக்கொண்டு அவரைப் பார்க்கச்சென்றேன்.

 வீட்டிலிருந்த அவரது மருமகன்,  “ அவரால் மாடியை விட்டு கீழே இறங்கி வரமுடியாது.  “ எனச்சொல்லி,  எம்மை மேலே அழைத்துச்சென்றார்.

 கட்டிலில் படுத்திருந்தவாறே சிவப்பிரகாசம் அவர்கள் நீண்டநேரம் உரையாடினார்.

லண்டனில் வதியும் நூலகர் என். செல்வராஜா எழுதியிருந்த வீரகேசரியின் பதிப்புலகம் என்னும் நூலின் பிரதியையும் அவருக்காக எடுத்துச்சென்று கொடுத்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

 அந்த நூலில் எனது கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. அதில் து. சிவப்பிரகாசம் அவர்கள் பற்றியும் எழுதியிருக்கின்றேன்.

 தங்களையெல்லாம் மறக்காமல் ஆவணப்படுத்தியிருக்கிறீர்கள் என்று பெருமிதத்துடன் பேசினார்.  அவரது அன்புத்துணைவியார் சில மாதங்களுக்கு முன்னர்தான் மறைந்திருக்கிறார் என்ற துயரமான செய்தியையும் இந்தச்சந்திப்பில்தான் அறிந்துகொண்டு, அவருக்கு ஆறுதல் கூறினேன்.

 கடந்த 2007 ஆம் ஆண்டு கனடா சென்றவேளையிலும் அவரது வீட்டுக்குச்சென்று அவரது துணைவியாரையும் பார்த்திருக்கின்றேன்.

 துணைவியாரின் திடீர் மறைவு அவரை உளரீதியாக பெரிதும் பாதித்திருந்ததை அவருடனான உரையாடிலிலிருந்து தெரிந்துகொள்ளமுடிந்தது.

 அவர் படுக்கையிலிருந்தவாறு உரையாடியமையால், நான் அவருடன் சேர்ந்து படம் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அந்தக்கட்டிலின் அருகிலேயே நெருக்கமாக அமர்ந்து, அவரது கரம் பற்றியவாறு உரையாடிக்கொண்டிருந்தேன்.

 தற்போது அவர் பற்றிய நினைவுகளைத்தான் தொலைவிலிருந்து எழுத முடிகிறது.

 பத்திரிகைகள்   என்றால்  அங்கு    பிரதம   ஆசிரியர்  -   செய்தி ஆசிரியர்- வாரவெளியீடு  ஆசிரியர்  -  மற்றும்    துணை    ஆசிரியர்களின்  பெயர்கள்தான்    வெளியே   தெரியும்.    சாதாரண   நிருபரின்   பெயர்கூட   By Line  இல்  வாசகர்களுக்குத்   தெரிந்துவிடும்.

கூழாங்கல் 🪨 திரைப் பார்வை

 ஆகச் சிறந்த சிறுகதை ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கும் போதே


அதற்குக் கை, கால், நிலம், புலம் முளைக்க வைத்து மனசுக்குள் ஓட விடுவோமே அப்படி ஒரு உணர்வு பிறந்தது இந்தப் படத்தைப் பார்த்த பின்னர்.

யதார்த்த சினிமா என்பதன் முழு அர்த்தத்தைப் பிரதிபலிக்கும் கதை மாந்தர்களும், மண் படிமங்களும்.

திரைமொழிக்கேற்ற சமரசம் எதுவுமில்லாமல் ஒரு கேமராவை வறண்ட நிலக் காட்டின் ஏதோவொரு புழுதிப்படிமம் கொண்ட மரக்கிளையில் களவாகப் பொருத்தி வைத்து எடுத்தது போல அப்பட்டமான யதார்த்தம் பறைகிறது.

உச்சரிக்கும் வார்த்தைகளில் கிராமத்துக் குழைவு, உரையாடலில் கெட்ட வார்த்தைகள் அப்படியே கொட்டுகின்றன. அப்பழுக்கற்ற கிராமத்து வாழ்வியலுக்கு முகம் கொடுத்தோருக்கு இதெல்லாம் தணிக்கை குழு வைத்துச் செய்யாத சாதாரண மொழி அவ்வளவே.

ஆங்காங்கே நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் காட்சிகளில் ஊடுருவினாலும் அவை மாமூல் திரைப்பட வாசனை அற்ற, கடந்து போதல்கள் மட்டுமே.
பேரூந்துக்குள் நிகழும் மோதலின் சத்தத்தை அமுக்கிக் குழந்தையின் வீறிடலைப் பிரதிபலிக்கும் உத்தி நம் தமிழ் சினிமாவுக்குப் புதிது.

அலைகள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 1973ம் வருடம் தமிழ் திரையில் ஒரு மாற்றத்தைக் கண்டது. அது வரை


காலமும் இல்லாத விதமாக வித்யாசமான கதைகள் படங்களாக உருவாகத் தொடங்கின. குடும்ப வறுமை காரணமாக விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் , சந்தர்ப்ப வசத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலைகாரியாக மாறும் பெண், கணவன் மூலம் இல்லற இன்பம் அடைய முடியாமல் தவிக்கும் பெண், தீயவனை திருத்துவதாக சவால் விட்டு அவனிடமே கற்பை பறி கொடுக்கும் பெண், இவ்வாறானவர்களின் கதைகள் படமாக்கப்பட்டு இந்த ஆண்டில் திரைக்கு வரத் தொடங்கின.


இப்படியான கதைகளை படமாக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள்

புதிய இயக்குனர்கள் அல்ல. ஏற்கனவே திரையுலகில் பழம் தின்று கொட்டைப் போட்ட இயக்குனர்களான ஸ்ரீதர், கே பாலசந்தர், ராமண்ணா, எ சி திருலோகசந்தர் போன்றவர்களே இது போன்ற படங்களை உருவாக்கத் தலைப்பட்டார்கள். அவ்வாறு 73ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளிவந்த படம்தான் அலைகள்.

அலைக்கடலில் சிறிய தோணி கலையுலகில் புதிய பாணி என்ற வாசகத்துடன் உருவான ஸ்ரீதரின் சித்ராலயா பட நிறுவனம் பொருளாதார அலைகளில் சிக்கித் திணறிக் கொண்டிருந்த நேரம் அலைகள் படம் தயாரானது. ஹிந்தியில் உருவான அவளுக்கென்றொரு மனம் அடைந்த தோல்வி, சிவாஜியின் ஹீரோ 72 இழுப்பட்டுக் கொண்டிருந்த ஆயாசம், இவற்றுக்கு மத்தியில் சிறிய பஜெட்டில் ஒரு படத்தை தயாரிக்கத் தொடங்கினார் ஸ்ரீதர். துளசி என்ற பேரில் ஏவி எம் ராஜன் கதாநாயகனாக நடிக்க தயாரான படம் இடை நிறுத்தப்பட்டு , பின்னர் அலைகள் என்ற பேரில் மீண்டும் உருவாகத் தொடங்கியது.

அனாதை பெண்ணான லஷ்மி வாழ வழி தேடி , டிக்கெட் வாங்காமல் ரயிலில் பிரயாணம் செய்து டிக்கெட் பரிசோதகரிடம் பிடிபடுகிறாள். அவள் நிலையை கண்டு பரிதாபப்படும் சக பிரயாணியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜு அவளுக்கான பணத்தை செலுத்தி உதவுகிறான். அத்துடன் முடிய வேண்டிய அவர்களின் உறவு சந்தர்ப்பவசத்தால் தொடர்கிறது. சமூக சேவகி நளினாவால் அவள் சேர்க்கப் படும் இடம் ஒரு விபசார விடுதியாகும். அங்கு கைதாகும் அவள் ராஜு முன் நிறுத்தப்படுகிறாள். பின்னர் உணவு உண்ணப் போகும் டீ கடையில் தன் மீது கைவைத்த முதலாளியை அடித்து விட்டு மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் ராஜு முன் வந்து நிற்கிறாள். பிறகு தெருவில் அவதூறு பேசியவனை அடித்து விட்டு ராஜுவின் சீற்றத்துக்கு ஆளாகிறாள். தொடர்ந்து வீட்டு வேலைக்காரியாக பணியாற்ற போகும் வீட்டின் எஜமான் அவளை பெண்டாள நினைக்கும் போது ஏற்படும் கலாட்டாவில் திருட்டு பழிக்கு ஆளாகி சிறை செல்கிறாள். பின்னர் சிறை மீண்டு வரும் போது வில்லனால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டு அவனை கொலை செய்து விட்டு கொலைகாரியாகிறாள் . அப்பப்பா எத்தனை சோதனைகள், துயரங்கள்!

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 82 கல்லிலிருந்து கணினிக்கு வந்த தமிழின் அதிசயங்கள் ! Download Journalism – Cut and Past Journalism பெருகும் காலத்தில் வாழ்கின்றோம் ! ! முருகபூபதி


பாரிஸ் மாநகரில் வென்மேரி அறக்கட்டளை நடத்திய வாழ்நாள் சாதனையாளர்கள் விருது விழாவுக்கு கடந்த ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் நான் சென்றிருந்தபோது, சில நாட்கள் அந்த நகரில் தங்கியிருந்தேன்.

எனக்கு சிறிய வயதில் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின்  புதல்வி உமாவின் குடும்பத்தினர் என்னை ஒரு  நாள் மதியவிருந்துக்கு அழைத்திருந்தார்கள்.

விருந்தினையடுத்து, உமாவின் கணவர் கணேஸ்வரன், தாங்கள்


ஊரும் உலகும் என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்அப் குழுமத்தை தொடங்கவிருப்பதாகவும், அத்துடன் ஒரு இணைய இதழையும் ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொன்னார்.

அதற்கு என்னிடமிருந்து ஒரு வாழ்த்துச்செய்தி வேண்டும் எனச்சொன்னவர், எனது செய்தியை காணொளியிலும் பதிவுசெய்தார்.

பின்னர், என்னைப்பற்றிய அறிமுகத்திற்கு குறிப்புகள் தேவை என்றார்.

  கணினியில் எனது பெயரை நீங்கள் தமிழில் பதிவுசெய்தால் விபரங்கள் கிடைக்கும்.   என்றேன்.


உடனே அவர் தனது கைத்தொலைபேசியை வாயருகே கொண்டு சென்று  “ முருகபூபதி  “ என்றார்.

அந்த கைத்தொலைபேசியின் திரையில் எனது படத்துடன் முழுவிபரங்களும் வெளிவந்தது.

அதனைப்பார்த்து வியப்புற்றேன்.

இது இவ்விதமிருக்க, மற்றும் ஒரு செய்தியையும் சொல்கின்றேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் கவிஞர் அம்பியின் 94 ஆவது பிறந்த தினம் வந்தது.

அதனை முன்னிட்டு, அம்பியின் சொல்லாத கதைகள் மின்னூலை மெய்நிகரில் வெளியிட்டோம். அந்தத்  தொடர் அவுஸ்திரேலியா அக்கினிக்குஞ்சு, தமிழ் முரசு இணைய இதழ்களில் ஏற்கனவே கடந்த ஆண்டு முதல் வெளிவந்திருந்தது.

அதனை கணினியில் பதிவுசெய்ததும் அடியேன்தான். அம்பி மீது கொண்டிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலும், அதற்கு நேரம் ஒதுக்கி செய்து முடித்தேன்.  கவிஞர் அம்பி அவர்களுக்கு உடல் நலக்குறைபாடு வந்திருப்பதனால், அவரால் பேசுவதற்கு முடியாதிருக்கிறது.

அதனால்,  குறிப்பிட்ட சொல்லாத கதைகள் நூலில் இடம்பெற்ற அம்பியின் முன்னுரையை தனியாக எடுத்து, அம்பியின் ஏக புதல்வன் திருக்குமாருக்கு மின்னஞ்சலில் அனுப்பினேன்.

மெய்நிகர் நிகழ்ச்சியின்போது, பாப்புவா நியூகினியில் வதியும் அம்பியின் புதல்வி மனநல மருத்துவர் திருமதி உமா சிவகுமார் அவர்கள்  அதனை வாசிப்பதாக ஒப்புக்கொண்டார்.

அதற்கிடையில் அம்பியின் புதல்வர் திருக்குமாரின் மனைவி தர்மினி, அந்த உரையை கூகுலில் பதிவேற்றி, அதனை குரலில் ஒலிக்கச்செய்துவிட்டு, எனக்கு அதன் இணைப்பினை அனுப்பியிருந்தார்.

தெளிவான உச்சரிப்புடன்  யாரோ ஒரு பெண்குரல் அந்த உரையை வாசித்தது.  அதில் மிகவும் பொருத்தமான  ஏற்ற இறக்கமும் இருந்தது.

நான் திகைத்துவிட்டேன்.

மேலும் ஒரு செய்தியை சொல்கின்றேன்.

பயணியின் பார்வையில் – அங்கம் - 04 ஒக்டோபர் 28 நடிகை ருக்மணி தேவியின் நினைவு தினம் முருகபூபதி


நீர்கொழும்பு – கொழும்பு வீதியில்  ஜா – எலைக்கு அருகில் துடல்ல சந்தியை கடக்கும்போது நீங்கள் ஒரு சிலையை காணமுடியும்.  தேவதைபோன்று வெண்ணிறத்தில் காட்சியளிக்கும் அந்தச்சிலை நடிகை ருக்மணிதேவி.

கொழும்புச்செட்டி சமூகத்தைச்சேர்ந்த இவரது முன்னோர்கள் தமிழர்கள். ருக்மணிதேவி சிங்கள திரையுலகில் பிரபல்யம் பெற்றிருந்தாலும் ஓரளவு தமிழும் பேசக்கூடியவர். சிறந்த பாடகி.

அவர் நடித்த சிங்களப் படங்களில் அவர் சம்பந்தப்பட்ட பாடல்களுக்கு அவரே குரல்கொடுத்தார். இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி பாடிவந்தவர்.

1978 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி  காலை


வழக்கம்போன்று நீர்கொழும்பிலிருந்து கொழும்பில் வீரகேசரிக்கு வேலைக்குப்புறப்பட்டேன்.

எங்கள் நீர்கொழும்பூருக்கு கிரியுள்ளை என்ற ஊரிலிருந்து கொழும்பு நோக்கி வரும் கடுகதி இ.போ. ச. பஸ்ஸை காலை             7-45 மணிக்குப் பிடித்தால், கொழும்பு ஆமர்வீதி சந்தியில் 8-45 மணிக்குள் வந்தடைந்துவிடலாம். நான் வழக்கமாகச்செல்லும் பஸ். ஆசனம் கிடைப்பது அபூர்வம். நின்றுகொண்டு பயணித்தாலும், அந்த பஸ் கடுகதி என்பதனால் சோர்வு இருக்காது.

ஜா – எலையில்தான் அடுத்த தரிப்பு வரும்.  அன்றைய தினம் துடல்ல சந்தியை நெருங்கும்போது எமது பஸ் தனது வேகத்தை குறைத்தது.

வீதியில் பொதுமக்கள்  நிரம்பியிருந்தனர். எட்டிப்பார்க்கின்றேன்.

வீதியில் இரத்தம் சிந்தியிருக்கிறது.  ஒரு பெண்ணை சிலர் தூக்கி ஒரு வாகனத்தில் ஏற்றுகின்றனர்.  அவர் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

அவரது உடலிலிருந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.

   ருக்மணி தேவி .. ருக்மணி தேவி    என்று மக்கள் கத்திக்கொண்டிருந்தனர்.

எமது பஸ் அந்தக்காட்சியை கடந்து சென்றுகொண்டிருந்தது.  சமகாலத்தில்தான் வீதி விபத்துக்கள் அதிகம் என்று எண்ணிவிடாதீர்கள்.  நற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னரும் இதுதான் நிலைமை.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் பதவிக்காலத்தில் அணிசேரா உச்சிமாநாடு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1976 ஆம் ஆண்டு நடந்திருப்பதை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்காக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரையில் வீதி அகலமாக்கப்பட்டது.

அதன்பின்னர்  வாகனங்களின் வேகமும் அதிகரித்தது. 

வீரகேசரி அலுவலகத்திற்குச்  சென்றதும் வழியில் கண்ட விபத்து பற்றிச்சொன்னேன்.  படுகாயமடைந்த ருக்மணிதேவி குற்றுயிருடன் எடுத்துச்செல்லப்பட்டதை கண்டேன். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை எமது அலுவலக நிருபர்கள் கண்டறிந்து எழுதினர்.

ருக்மணிதேவியை சில சந்தர்ப்பங்களில் நீர்கொழும்பு பிரதான கடை வீதியில் கண்டிருக்கின்றேன். அழகான பெண்மணி. எப்பொழுதும் சிரித்த முகம். அவரது குரலில் வெளிவந்த பல பாடல்கள் சோகரசமானவை.

புத்தக வெளியீட்டு விழா - 03/11/2023 3pm - Toongabbie NSW 2146

 
















இலங்கைச் செய்திகள்

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு 

சட்டவிரோத மதுபான விற்பனை; வீட்டின் அழைப்பு மணியை அடித்தால் மதுபானம் - நடவடிக்கை எடுக்குமாறு அங்கஜன் கோரிக்கை

டவர் மண்டப அரங்க மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் நாடகத் திருவிழா - முதற் தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கிய பதிவாளர் - இ.தொ.காவின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் பதிவிட ஒப்புதல்

மானிப்பாயில் வர்த்தக நடவடிக்கைய ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்


இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தில் பலியான இலங்கைப் பெண்ணின் உடல் நாட்டுக்கு 

October 28, 2023 10:28 am 

இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையிலான யுத்தத்தில் பலியான அனுலா ரத்நாயக்க எனும் இலங்கை பெண்ணின் சடலம் இன்று (28) இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும், இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டிருந்தது.

உலகச் செய்திகள்

இஸ்ரேலிய தரைப்படை காசாவில் ஊடுருவி தாக்குதல்; 7,000 பேர் இதுவரை பலி 

ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் ஹிஸ்புல்லா தலைவர்கள் பேச்சு

ஹமாஸ் விடுவித்த இரு பெண்கள்; அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டதாக தெரிவிப்பு - காசாவில் தொடரும் மனிதப் பேரவலம்!

உலகெங்கும் ஆர்ப்பாட்டம்

மத்திய கிழக்கில் அமெரிக்க ‘வான் பாதுகாப்பு’ அதிகரிப்பு

இம்ரானுக்கு பிணை மறுப்பு

இஸ்ரேலின் தரைப்படை போர் விமானங்களுடன் மத்திய காசாவுக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் - தரைவழி தாக்குதலுக்கு ஒத்திகை: உயிரிழப்பு அதிகரிப்பு


இஸ்ரேலிய தரைப்படை காசாவில் ஊடுருவி தாக்குதல்; 7,000 பேர் இதுவரை பலி 

October 27, 2023 7:46 am 

இஸ்ரேலிய தரைப்படைகள் காசாவுக்கு முன்னேறி ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட தரைவழி ஆக்கிரமிப்புக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

கட்டுரை தேவை துணிகரமான அரசியல் நடவடிக்கைகள்

 October 28, 2023


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை வித்தியாசமான ஜனாதிபதியாக காண்பிக்கும் நோக்கில் பல்வேறு விடயங்களை பேசி வருகின்றார்.
ஒப்பீட்டடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் இனவாத வேலைத்திட்டம் இல்லைதான்.
தீவிர இனவாத கருத்துக்களை எப்போதுமே ரணில் வெளிப்படுத்தியதில்லை.
இந்த பின்புலத்தில், தென்னிலங்கையின் ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டால், ரணில், சற்று மாறுபட்டவர்தான்.
ஆனால், இனவாத சக்திகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஒரு துணிகரமான அரசியல்வாதியாக அவரால் இதுவரை தன்னை நிரூபிக்க
முடியவில்லை.
இந்த நிலையில் இனவாத நடவடிக்கைகளுக்கு அரசியல்வாதிகள் துணைபோகக் கூடாது – நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று ரணில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இப்படியாக, நிகழ்வுகளில் பேசுவதனால் மட்டும், இனவாத நிகழ்சிநிரலை தோற்கடிக்க முடியுமா? ரணில் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கின்றபோது, மட்டக்களப்பில், ஒரு பௌத்த பிக்கு, தமிழர்கள் அனைவரையும் வெட்டுவேன் என்று கூறுகின்றார்.
இதற்கு முன்னர் ஓர் அரசியல்வாதியும் அவ்வாறு கூறினார்.
ஆனால், இவர்களுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ரணில் அதிகாரத்தில் இருக்கின்றபோது, இடம்பெறும் இவ்வாறான விடயங்களுக்கு எதிராக எவ்வாறான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது?

கட்டுரை தலைமைப் பிரச்சினை

 October 27, 2023

சம்பந்தன் பதவி விலக வேண்டுமென்னும் கோரிக்கை பொது
வெளியில் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பிறிதொரு விடயம் முக்கியம் பெறுகின்றது.

சம்பந்தன் தற்போது இயலாத நிலையிலிருந்தாலும், குறிப்பிட்ட காலம், அனைத்து கட்சிகளையும் ஏதோவொரு வகையில் வழிநடத்தும் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்.
சம்பந்தனதும், அவரது தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சியினதும் செயல்பாடுகளில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கடும் அதிருப்தியை கொண்டிருந்தாலும் கூட, ஏதேவொரு வகையில் சம்பந்தனுடன் ஒத்துழைத்திருந்தனர்.
இதன் காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவாறான உள்முரண்பாடுகளின் மத்தியிலும் உடையாமல் தொடர்ந்தது.
சம்பந்தனை தவிர்த்துச் செல்வது அன்றைய சூழலில் ஒரு விசப் பரீட்சையாகவும் நோக்கப்பட்டது, மறுபுறம், சம்பந்தன்தான் இலங்கை தமிழரசுக் கட்சியின் பலமாகவும் இருந்தார்.
ஆனால் சம்பந்தன் தளர்வடையத் தொடங்கியதை தொடர்ந்து கூட்டமைப்பாக தொடரும் நிலைமையும் வீழ்ச்சியுறத் தொடங்கியது.
சம்பந்தனை மேவியும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய நிலைமை ஏற்பட்ட சூழலிலேயே, கூட்டமைப்பும் உடைவுற்றது.
உள்ளூராட்சித் தேர்தலை காரணம் காட்டி, தமிழரசுக் கட்சி தனியான போட்டியிடும் முடிவை அறிவித்தது.
ஒருவேளை சம்பந்தன் தீர்மானிக்கக் கூடிய இடத்திலிருந்திருந்தால், அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.

கட்டுரை சம்பந்தனை அகற்றுதல்

 October 26, 2023

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பணியாற்ற முடியாத நிலையில் இருப்பதால், அவர் பதவி விலகுவதே சரியானதென்று தமிழரசுக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருக்கின்றார்.

சுமந்திரன், சம்பந்தனின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தவர்.
அவரே சம்பந்தனின் பதவி விலகலை கோரும் நிலைமை உருவாகியிருக்கின்றது.
சம்பந்தனை பதவி விலகி, தனக்கு அடுத்த நிலையில் வாக்குகளை பெற்றவரிடம் பதவியை ஒப்படைக்க வேண்டுமென்று, இதற்கு முன்னரும் கூட, சிலர் அபிப்பிராயங்களை வெளியிட்டிருக்கின்றனர்.
திருகோணமலையை சேர்ந்த ஒரு குழுவினர் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவிடமும், இது தொடர்பில் முறையிட்டிருந்தனர்.
இது தொடர்பில் சம்பந்தனுடன் தமிழரசு கட்சியின் உயர் குழுவொன்று கலந்துரையாடியுமிருந்தது – எனினும் சம்பந்தன் அதனை நிராகரித்துவிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் முதல் முறையாக தமிழரசுக் கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், பொது வெளியில் சம்பந்தனின் பதவி விலகல் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

ஆனால் சம்பந்தன் பதவி விலகும் நிலையிலிருப்பதாக தெரியவில்லை.
சம்பந்தனை பொறுத்தவரையில் திருகோணமலை மக்கள் தனது நிலைமை அறிந்தே, வாக்களித்திருக்கின்றனர் – எனவே தான் பதவி விலகவேண்டிய அவசியமில்லை.
எனினும் சம்பந்தனது பதவி விலகல் விவகாரமானது, சம்பந்தனுடன் முடிந்துவிடக் கூடிய விடயமுமல்ல.
தமிழரசுக் கட்சியை புதியவர்களின் கீழ் கொண்டுவர வேண்டுமென்னும் வாதமுண்டு.
இந்த பின்புலத்தில் மாவை சேனாதிராசா உட்பட முதிய நிலையிலிருப்பவர்கள் பலரும் வெளியேறுவதே கட்சிக்கு நல்லதென்னும் அப்பிராயமும் வெளிவரக்கூடும்.
சுமந்திரன் அதற்கான பிள்ளையார் சுழியையே தற்போது வரைந்திருக்கின்றார்.
சம்பந்தன் தொடர்பில் அதிருப்திகள் நிலவுகின்றன.
ஒரு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அவர், குறித்த மாவட்டத்தில் தனக்கு வாக்களித்த மக்களை சந்திப்பதற்கே முடியாத நிலையிலிருக்கின்றார்.
இந்த நிலையில் அவர் பதவி விலக வேண்டுமென்னும் கோரிக்கையை தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக கோர முடியும்.
கட்சியின் மத்திய குழுவில் தீர்மானமொன்றை கொண்டுவந்து, சம்பந்தனை வெளியேற்றலாம் – அதற்கு கட்சி தயாராக இருக்கின்றதா என்னும் கேள்வியுண்டு.
ஆனால் தமிழரசுக் கட்சியின் பாரம்பரியத்தில் முதுமையினால் இயங்கமுடியாத நிலையிலிருப்பவர்கள், தலைமையிலிருப்பது, புதிய விடயமல்ல.
தமிழரசுக கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், சக்கரநாற்காலியில் இருக்கும் நிலையிலும் கட்சியின் தலைமையை கைவிடவில்லை.

மெல்பனில் எழுத்தாளர் முருகபூபதிக்கு பாராட்டு விழா


எழுத்தாளர் முருகபூபதி பாராட்டுவிழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி ( 04-11-2023 ) சனிக்கிழமை,  மெல்பனில்,  பேர்விக் மூத்த பிரஜைகள்

 மண்டபத்தில் ( Berwick Senior Citizen’s Hall – 112, High Street , Berwick – 3806  )  நடைபெறவிருந்த எழுத்தாளர்

 முருகபூபதிக்கான  பாராட்டு விழா, தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய திகதி பின்னர் அறியத்தரப்படும்.

முன்னைய அறிவித்தலினால் நேர்ந்துவிட்ட அசெகரியங்களுக்கு எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்

 வருந்துகின்றது.

தகவல்:  கிறிஸ்டி நல்லரெத்தினம்


தலைவர் – அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.