மரண அறிவித்தல்

.
                      திருமதி வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை

                    
மறைவு - 06.02.2015

யாழ். நாகர்கோவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வள்ளிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லியப்பர், வைரமுத்து தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ராசமலர்(அவுஸ்திரேலியா), தங்கவேலாயுதம்(அவுஸ்திரேலியா), பூமாதேவி(அவுஸ்திரேலியா), தங்கமலர்(அவுஸ்திரேலியா), சகுந்தலாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீஸ்கந்தராசா(அவுஸ்திரேலியா), ரதிமலர்(அவுஸ்திரேலியா), செல்லத்தம்பி(இலங்கை), மயில்வாகனம்(அவுஸ்திரேலியா), அன்ரன் அருள்நாயகம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கரையோர அகதியாய்

.
இந்தக் கனவுகள்
பசித்துப் பரந்து கிடக்கின்றன.
குளத்தோரப் பாசியாய்
கப்பல்கள் சென்றுவிட்டன
கரையோர அகதியாய்
வானம் வெறிக்கும் நான்
தன்னாராய்ச்சி
அலைகளுக்கு ஓய்வே கிடையாது
இந்த விரல்கள்
அழுதுகொண்டேதான் அசைகின்றன.

என்னுடைய கொலுசுகள்
கண்ணாடிக்கூண்டுக்குள்ளே
சிறைப்பட்டுப் பாதம்
பார்த்துப் பரிதவிக்கும்.

இருட்டு வானம் மெல்லவந்து
குளிர்க்காசைச் சுண்டிப் போடும்.

கரையோர அகதியாய்க்
கவிழ்ந்து கிடக்கும் நான்.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற தைபூச விழா

.

வில்லிசைக் கலைஞர் சின்னமணிஅவர்கள் மறைந்து விட்டார் -செ .பாஸ்கரன்

.
தமிழ்முரசு அவுஸ்திரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது .
வில்லிசைக் கலைஞர் சின்னமணிஅவர்கள்  மறைந்து விட்டார் அவர் நினைவுகள் மறையாது







சின்னமணி எனஅழைக்கப்படும் க.நா.கணபதிப்பிள்ளை  மார்ச30,1936  இல் பருத்தித்துறையில் மாதனை யில் பிறந்து   பெப்ரவரி 4, 2015 இல் அமரத்துவம் அடைந்து விட்டார்   யாழ்ப்பாணத்தில்  புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கியவர் 

திருபூங்குடி வித்துவான்  V .K ஆறுமுகம் அவர்கள் வில்லிசை கலைஞராக இருந்த காலத்தில் சின்னமணி அவர்களும் இன்னுமொரு வில்லிசை கலைஞராக  கலைவாணர் (சின்னமணி) வில்லிசை குழு என்ற பெயரில் வில்லிசையை நடத்தி வந்தவர்.

இவருடைய கதை சொல்லும் பாணி அங்க அசைவுகள் என்பன இளைஞர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் இவருடைய வில்லிசை என்றால் அதிக இளைஞர் கூட்டத்தை காணக் கூடியதாக இருக்கும். 
கலியாணத்திற்கு  மணமகன் பொம்பிளை பார்க்க வந்தால் பெண் எப்படி நடந்து கொள்வாள் என்பதற்கு " ஒருபக்கம் பார்க்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா என்ற பாடலை பாடி கம்பி போட்ட யன்னலிலே கன்னத்தை தேய்க்கிறா  என்று இரண்டு வில்லு தட்டும் கோல்களையும் யன்னல் கம்பிபோல் முகத்திற்கு முன்பாக பிடித்துக  கொண்டு முகத்தை அதில் தேய்த்து காட்டுவது இன்றும் மனதை விட்டு அகலாது இருக்கின்றது . 

5 ம் திகதி முதல் சிட்னி திரை அரங்குகளில் என்னை அறிந்தால்

.
அரங்கு நிறைந்த காட்சிகளாக 2வது வாரமாக சிட்னி திரையரங்கில் என்னை அறிந்தால். இத்திரைப்படம் 18ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. அஜித், அருண் விஜய், திரிசா, அனுஸ்கா, விவேக் நடித்த இப்படத்தினை காக்கா காக்கா, மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கெளதம் மேனன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




1986 ஆண்டளவில் நடிகர் விஜயகுமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த பொழுது-வீடியோ

.
நடிகர் விஜயகுமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் செய்த பொழுது யாழ் மாவட்ட தளபதி கேணல் கிட்டு, மொழிபெயர்ப்பாளர் ரகீம் , அரசியல் துறை திலீபன் ஆகியோர் வரவேற்று கைதிகள் பரிமாற்றம் பற்றி பேசிய விடயங்களை பார்க்கலாம்



இந்த வீடியோ விவரணத்த 86 ஆண்டு அல்லது 87 ஆண்டின் முற்பகுதியில் ஜெர்மன் தொலைகாட்சி ஒளிபரப்பி இருந்தது .அப்பொழுது இதை டிவியில் பார்வையிட்டு இருந்தேன் .. இந்த வீடியோ தற்செயலாக இணையத்தில் திரும்பவும் பார்க்க கிடைத்த்து அதை பகிர்ந்து கொள்ளுகிறேன் .

Nantri sinnakuddy1.blogspot

திரும்பிப்பார்க்கின்றேன். - முருகபூபதி

.
முற்போக்கு    இலக்கிய  இயக்கத்தின்  தீர்க்கதரிசி  பிரேம்ஜி
 முதலாவது நினைவு தினம்
                                                                                            



                    இலங்கை     முற்போக்கு      எழுத்தாளர்     சங்கத்தின்      மூத்த    உறுப்பினரும்  நீண்டகாலமாக     அந்த     அமைப்பின்     செயலாளராகவும்    பணியாற்றிய  எழுத்தாளரும்      ஊடகவியலாளருமான    பிரேம்ஜி  ஞானசுந்தரன்    அச்சுவேலியில்   17-11-1930   ஆம்    திகதி    பிறந்தார்.   இலக்கிய உலகில்  பிரேம்ஜி  என்ற புனைபெயருடன்  பரவலாக  அறியப்பட்டவரின் இயற்பெயரைக்கேட்டால்  ஆச்சரியப்படுவீர்கள்.
ஸ்ரீ கதிர்காம தேவஞானசுந்தரம்   என்பதே   அவரது  பெற்றவர்கள் இட்ட பெயர்.   ஆனால், அவர்   எவ்வாறு  பிரேம்ஜியானார்  என்பதும் அவரது  இலக்கிய  மற்றும்  பொதுவாழ்வில்  ஆச்சரியம்தான். பெயரில்  மட்டுமல்ல   தனது   பணிகளின்  ஊடாகவும்   ஆச்சரியங்களை ஏற்படுத்தியவர்.    தமது    ஆரம்பக்கல்வியை   அச்சுவேலி    கிறீஸ்தவ     கல்லூரியிலும்   பின்னர்     யாழ். பரமேஸ்வராக்கல்லூரியிலும்    கற்றார்.    1947 இல்   தமது  17 வயதிலேயே     சுதந்திர     இளைஞர்    சங்கம்    என்ற   அமைப்பை உருவாக்கினார்.     அன்றிலிருந்து   பிரேம்ஜி    ஞானசுந்தரன்     தீவிரமான     வாசிப்பிலும் எழுத்துத்துறையிலும்    ஈடுபடத்தொடங்கினார்.
அவரது  பெற்றோர்கள்  தமது  மகன்  ஒரு சட்டத்தரணியாக வரவேண்டும்   என்றுதான்   எதிர்பார்த்து,  கொழும்பில்  மேற்படிப்பை தொடர    அனுப்பிவைத்தார்கள்.   ஆனால்,  நடந்ததோ  வேறு. சிறிதுகாலம்   கொழும்பில்  கற்றுவிட்டு  பின்னர்
தமிழகம்சென்று     மூத்த    அறிஞர்கள்     நாமக்கல்     கவிஞர்  - வி.க.  வா.ரா-  சுவாமிநாத சர்மா  -   பேராசிரியர்    ராமகிருஷ்ணன்  - தமிழ் ஒளி   முதலானோரின்    தொடர்பினால்     இடதுசாரிக்கருத்துக்களை     உள்வாங்கி   இடதுசாரியாகவும்     முற்போக்கு     எழுத்தாளராகவும்   மாறினார்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர் விருதைப் பெற்ற தமிழர் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா



நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் (UNSW) Electrical Engineering & Telecommunications  பிரிவின் தலைவர் பேராசிரியர் இளையதம்பி அம்பிகைராஜா அவர்களுக்கு தலைமைத்துவத்துக்கான உயர்விருது துணைவேந்தர் அவர்களால் 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியில் வழங்கப்பட்டது. இந்த விருதுதான் நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் உயர்ந்த விருதாகும். தமிழர் ஒருவர் இவ்வாறு உயர் விருதினைப் பெற்றமையையிட்டு அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

பேராசிரியர் அம்பிகைராஜா அவர்கள் ஸ்ரீலங்காவில் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஸ்ரீலங்கா பல்கலைக்கழக கட்டுபெத்தை வளாகத்தில் படித்து 1975ல் Bachelor of Science Engineering  பட்டம் பெற்றார். 3 ஆண்டுகள் விஞ்ஞான ஆய்வாளராக ஸ்ரீலங்கா விஞ்ஞான ஆராய்ச்சி நிறுவனத்தில் (CISIR) பணியாற்றினார். அவரது திறமையின் காரணமாக அரசாங்கம் நெதர்லாந்தில் உள்ள(Philips) சர்வதேச ஆராய்ச்சி நிறுவனத்தில் படிப்பதற்கு புலமைப்பரிசில் கொடுத்து கௌரவித்தது, ஸ்ரீலங்காவிலிருந்து  Philips இற்கு சென்ற முதல் மாணவன் என்ற பெருமைக்குரியவர்.

ஈழத்து வில்லிசைக் கலைஞர் "கலா விநோதன்" சின்னமணி - ஓய்ந்த வில்லுப்பாட்டுக்கார் - கானா பிரபா

.


 ஈழத்து வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட "சின்னமணி" ஐயா அவர்களின் இறப்புச் செய்தியை நண்பன் விசாகன் மூலம் அறிந்தேன்.

கோயில்கள் தோறும் வளர்த்தெடுக்கப்பட்ட இசை நாடக மரபில் வில்லுப்பாட்டு தனக்கெனத் தனியிடம் கொண்டு விளங்கி வருகின்றது.

இந்த வில்லுப்பாட்டுக் கலையானது ஆலயங்களிலே நெறிப்படுத்தப்பட்ட அனுபவம் வாய்ந்த வில்லிசைக் கலைஞர்களால் மட்டுமன்றி பள்ளிகள் தொடங்கித் தனியார் கல்வி நிலையங்கள் ஈறாக மாணவர்களும் இந்தக் கலை வடிவத்தை உள்வாங்கி வளர்த்தெடுத்து வந்தனர். எண்பதுகள் தொண்ணூறுகளிலே என் சம காலத்து மாணவருக்கு வில்லிசைக் கலையின் ஆதர்ச நாயகனாக விளங்கியவர் அமரர் நா.கணபதிப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சின்னமணி அவர்கள். புராண இதிகாசப் படைப்புகளை எடுத்துக் கொண்டு அவற்றை நகைச்சுவை என்ற தேன் தடவி ஆழ்ந்த இறையியல் கருத்துகளை வில்லிசையில் பாட்டும் கதையுமாகச் சொல்வதில் சின்னமணி சூரர். அது மட்டுமன்றி சமுதாய வாழ்வியல் குறித்த வில்லுப்பாட்டு நிகழ்வுகளையும் தன் பாணியில் சுவைபட வழங்கியவர். இதனாலேயே வயது வேறுபாடின்றி அவருக்கான ரசிகர் வட்டம் ஈழத்தைக் கடந்து இன்றும் இருக்கிறது.

மலேசியாவில் நடந்த ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

.
வழக்குரைஞர் சந்திரிகா  சுப்ரமண்யன்
அண்மையில் மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்மலாயா பல்கலைக்கழகத்தின்இந்திய ஆய்வியல் துறை ஆகியன இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் 9-வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை  நடத்தின.
இந்த மாநாட்டில்சிங்கப்பூர்இந்தியாஇலங்கைஆஸ்திரேலியாகுவேத்மொரிசீயஸ் எனப் பல்வேறு  நாடுகளில் இருந்து இரண்டாயிரத்து  ஐந்நூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் தமிழ்ஆர்வலர்கள் வந்து  உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

இலங்கைச் செய்திகள்


கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க 

வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா

அத்தநாயக்க கைது : பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம்...!

சவால்களை எதிர்கொள்வதற்கு இணைந்து பணியாற்ற தயார்
கே.பி. க்கு நாட்டைவிட்டு வெளியேறத் தடை

கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா


03/02/2015 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் குறு­கிய காலத்தில் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஆனால் இலங்கை இன்னும் செய்­ய­வேண்­டிய பல கடி­ன­ மான நட­வ­டிக்­கைகள் உள்­ளன. மீண்டு வரு­வ­தற்கு பல கடி­ன­மான சவால்கள் இன்னும் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தனை நாம் அறிந்­துள்ளோம் என்று மத்­திய மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கச் செய­லாளர் நிஷா பிஷ்வால் தெரி­வித்தார்.




பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல், ஊழலை தடுத்தல் மற்றும் நல்­லாட்­சியை முன்­னி­றுத்தல், அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மைகள் மற்றும் ஜன­நா­யக பங்­கேற்­பினை உறுதி செய்தல் என்­ப­வற்றில் பங்­கா­ள­ரா­கவும் நண்­ப­ரா ­கவும் இருக்கும் அமெ­ரிக்­காவை நம்­பலாம். இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சங்க இலக்கியக் காட்சிகள் 38- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

அரசன் போரை முடிப்பானா? அவளைச் சென்று காண்பேனா?

பண்டைத்தமிழகத்தில் பொதுவாக இளவேனிற் காலத்திலும், வேனிற் காலத்திலுமே அதாவது கோடை காலங்களிலேயே போர் நடைபெறும். மன்னர்கள் அந்தக்காலங்களையே போரிடுவதற்குத் தேர்ந்தெடுப்பார்கள். மன்னர்களும் படைவீரரும் அந்தக்காலங்களில் பாசறைகளிலே தங்கியிரப்பார்கள். பாசறைகளுக்குப் பலத்த காவல் போடப்பட்டிருக்கும். ஆயுதம் ஏந்திய வீரர்கள் எந்நேரமும் பாசறைகளைச் சுற்றிவரக் காவலில் ஈடுபட்டிருப்பார்கள். பல ஊர்களைச் சேர்ந்த படைவீரர்கள் பாசறைகளில் தங்கியிருப்பார்கள். அவர்கள் பல்வேறு அணிகளாக இருப்பார்கள். யானைப் படையினர்,

March மாதம் திரைக்கு வர இருக்கும் மகா மகா திரைப்படம்

.
அவுஸ்ரேலியாவில் தயாரிக்கப்பட்ட மகா மகா  திரைப்படம் March  மாதம் திரைக்கு வர இருக்கிறது .

காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிர்வாகம்=வெற்றி நூல் வெளியீடு

.






துபாயில் வானலை வளர்தமிழ் மற்றும்தமிழ்த்தேர் சார்பில் தமிழ்ச்சான்றோருக்குப் பாராட்டு .. கவிதையும் கற்பனையும் தலைப்பில் கவியரங்கம் மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம்+நிர்வாகம்=வெற்றி நூல் வெளியீடு 30.01.2015 வெள்ளிக்கிழமை காலை 11.00மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.

செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இயக்குனர் சிகரம் அமரர்  கே. பாலச்சந்தர் அவர்களுக்குகவிஞர் ஜியாவுத்தீன் அவர்களும் பிரபல கல்வியாளர்தொழிலதிபர் துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிறுவனர் அமரர்பி.எஸ்அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு கவிஞர் அதிரை கலாமும் கவிதாஞ்சலி வழங்கினர்.

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 38 மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்

அறிமுகம்

மகேந்திரன் குலராஜ் – பிரான்ஸ்
இவர் இலங்கை யாழ்மாவட்டத்தில் வலிகாமம்  மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பிறந்தார். யாழ்/பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பயின்ற இவர் 11வது வயதிலிருந்து கவிதை எழுத ஆரம்பித்த இவர் 2011ஆம் ஆண்டு தனது முதல் நூலான "வைரம்" கவிதைதொகுப்பை தனது பாடசாலையில் நடந்த முத்தமிழ் விழாவில் மிகச்சிறப்பாக வெளியிட்டார் வலிகாமம் கல்விவயத்தில் 11வயதில் நூல் வெளியிட்ட முதல்மாணவர் என்ற பெருமைக்குரியர் குலராஜ். 
2012ஆம் ஆண்டு தனது இரண்டாவது நூலான "சீரழிந்துபோகும் தமிழரின் பண்பாடு"என்ற கவிதைநூலை வெளியிட்டுவைக்கப்பட்டது. 
இவ் நூலுக்காக வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இவருக்கு "கவி அரசு"என்ற கௌரவத்தையும் வளங்கி கௌரவித்தார்.  பல பத்திரிக்கைகள் ,சஞ்சிகைகள் >இணைய வலைத்தளங்கள் பலவற்றிலும் இவரது படைப்புக்கள் இடம்பெற்றது பன்முகம் ஆற்றல் மிக்கவராக சிறுவயதில் திகழ்கிறார்  
 தற்போது இருஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இவர் அங்கு கல்விற்றுக்கொண்டிருக்கும் மாணவன் 16 வயது சிறுவன் குலராஜ் இலக்கியத்துறையில் தன்னை அடையாளம் காட்டிவருகின்றார். அவர் எமது பெருந் தொடர் கதையை வாசித்து தானும் இதில் எழுத வேண்டும் என்று வாய்ப்பை தானாக வலிந்து பெற்றுக் கொண்டார். விழுதல் என்பது எழுகையே தொடரை எழுதிய ,எழுதவிருக்கும் எழுத்தாளர்கள் அனைவரும் மிக பிரபலியமான நிலையில் இருப்பவர்கள். அவர்கள் சார்பாகவும் தமிழ் எழுத்தாளர் இணைய அகம் சார்பாகவும் சிறுவன் குலராஜ்சை ஊக்கமளிக்கவேண்டியது எமது கடமையாகும்.
அன்புடன்
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
திரு ஏலையா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்  - யேர்மனி)

தொடர்கிறது பகுதி  -38

 போன் மணி அடிக்கத் தொடங்கியது.கலோ சீலன் நான்
அங்கிள் கதைக்குறேன்.என்று அங்கிளின் குரல் எதிரொலித்தது.  
"என்ன அங்கிள் இப்பதானே போன் பண்ணினீங்க"என்று சீலன் கேட்க "ஓமடா சீலா 

உலகச் செய்திகள்


ஸ்பெயினில் பாரிய ஆர்ப்பாட்டம் 100000 பேர் பங்கேற்பு

தாய்வானில் விமான விபத்து : 12 பேர் பலி

அமெரிக்காவில் புகையிரதம் வாகனத்தில் மோதி விபத்து : 7 பேர் பலி

தாய்வான் விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31 ஆக உயர்வு



ஸ்பெயினில் பாரிய ஆர்ப்பாட்டம் 100000 பேர் பங்கேற்பு




02/02/2015 ஸ்பெயினின் மட்றித் நகரில் கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 
மாற்றத்துக்கு ஊர்வலம் என்ற தலைப்பில் இடது சாரி பொடெமொஸ் கட்சியின் ஏற்பாட்டில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. 
மாற்றம் இப்போது என பொருள்படும் பதாகைகளை ஏற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆம் எம்மால் முடியும் என கோஷம் எழுப்பினர். நன்றி வீரகேசரி 

புத்தம் - மதமா? மார்க்கமா?

.
புத்தர் கொள்கை கடவுளை ஏற்றுக் கொள்வது கிடையாது. ஆத்மா என்ற ஒன்றையும் ஏற்றுக் கொள்வது கிடையாது. அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படி நட என்று சொல்லுகிற ஒரு மார்க்கமாகும்.
நேற்று நான் தங்கிருந்த இடத்தில் ஒரு பார்ப்பனர் என்னை வந்து சந்தித்தார்.
periyarஅவர் கேட்டார், நீ மதங்களைப் பற்றிக் கண்டித்துப் பேசுகிறாயே! புத்த மார்க்கத்தில் சேரச் சொல்லி மக்களைப் பார்த்துச் சொல்லுகிறாயே! அதுவும் ஒரு மதம் தானே என்று அதற்கு நான் சொன்னேன். அப்படிப் பித்தலாட்டமாக மக்களிடம் நீங்கள் (பார்ப்பனர்கள்) சொல்லி அப்படி அவர்களை ஆக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதாகச் சொன்னேன்!
அதற்கு அவர் சொன்னார்.
ஏன் அதில் புத்தம் சரணம் கச்சாமி; தம்மம் சரணம் கச்சாமி; சங்கம் சரணம் கச்சாமி என்று சொல்லுகிறார்களே என்றார். அதற்கு நான் சொன்ன பதிலை எடுத்து விளக்கினால் அது ஓரளவு பயன்படும் என்று நினைக்கிறேன்.
புத்தம் சரணம் கச்சாமி என்பது ஒன்றும் மூடநம்பிக்கைத் தத்துவம் அடங்கியதல்ல. நீ யாரைத் தலைவனாக ஏற்றுக் கொண்டிருக்கிறாயோ, அவனிடத்தில் உண்மையாக நடந்து உறுதியோடு பின்பற்று என்பதாகும்.


தமிழ் சினிமா


என்னை அறிந்தால்


என்னை அறிந்தால் - Cineulagam

என்னை அறிந்தால் படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, நம் அண்டை தேசமான இலங்கையில் இன்று மாலை 6 மணிக்கு காட்சி தொடங்கியது.
தமிழகத்தில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ அதே அளவிற்கு இலங்கையிலும் இப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருந்ததாம். மேலும், இப்படம் அங்கு 20க்கு மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸ் ஆகியுள்ளது.
நம் நெருங்கிய வட்டாரங்கள் மூலம் படத்தை பற்றி பல ருசிகர தகவல்களை கேட்டு அறிந்தோம். அதை நம் மக்களுக்கு முதன் முதலாக பகிர்வதில் சினி உலகம் பெருமையடைகிறது.
படத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே அஜித் ஒரு கேங்ஸ்டராக ஒரு கூட்டத்தில் நுழைந்து, அவர்களாலே செய்ய முடியாத பல வேலைகளை அவர் செய்து முடித்து, அனைவரின் நற்பெயரையும் சம்பாதிக்கிறார்.
இதை தொடர்ந்து அவர் எடுக்கும் அதிரடி முடிவு, அந்த கும்பலை அதிர்ச்சியாக்க, பின்பு தான் தெரிகிறது அஜித் ஒரு போலிஸ் அதிகாரி என்று. இந்த உண்மை தெரிந்த அருண் விஜய், த்ரிஷாவை கொலை செய்கிறார்.
மேலும், குழந்தையையும் கொலை செய்ய அவர் முயற்சிக்க, அஜித் ஏதும் வேண்டாம் என்று ஊரை விட்டு கிளம்ப, அவரை சுற்றி பல மர்ம சம்பவங்கள் நடக்கிறது, இதில் அஜித் தப்பித்தாரா? என்பதை யாரும் எதிர்பாராத கிளைமேக்ஸில் கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.
படத்தின் மிகப்பெரிய பலம் இசை மற்றும் ஒளிப்பதிவு தானாம், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்துள்ளதாம். அஜித் இந்த படத்தில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளாராம். இதற்கெல்லாம் மேலாக அருண் விஜய் மிரட்டியெடுத்துள்ளாராம்.
1 1/2 வருடம் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம விருந்து தானாம். அஜித் நீண்ட இடைவேளைக்கு பிறகு காதல், எமோஷன், ஆக்‌ஷன் என அனைத்து வித கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம். மொத்தத்தில் என்னை அறிந்தால் 1000 வால சரவெடி தான். என்ன தல ரசிகர்கள் ரெடியா? நன்றி cineulagam