.
தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2013 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ஆசிரியர் குழு
ஆசிரியர் குழு
அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை 02/11/2024 - 08/12/ 2024 தமிழ் 15 முரசு 34 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
பைபிளது வழிகாட்ட வருடங்கள் காத்திருந்தோம்
கடல்கடந்த பலமதங்கள் கண்கலங்கி நின்றிடவே
உலகெங்கும் பாவங்கள் பலவாகப் பெருகியதேன்?
சொல்லுக் கடங்காத கொடுமைகள் தலைதூக்க
பொல்லாத அரசாட்சி பாரெங்கும் கோலோட்ச
தள்ளாடும் மனித இனம் தவறான வழி போக
இல்லாது போனதேன் உன்கருணை என் தேவா?
அவுஸ்திரேலியாவுக்கு
மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுத்து நிறுத்துவதற்காக
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் நான்கு அம்சத்
திட்டமொன்றை முன்வைத்துள்ளார்.
சட்டவிரோத ஆட்கடத்தலை ஒழித்துக்கட்டுவதற்கும், நீர்ப்பரப்பு ஒத்துழைப்பின் அதிகரிப்பு, உளவறியும் தகவல்கள் பகிர்வு, சட்டவிரோத ஆட்கடத்தலில் கிடைக்கும் வருமானக் குறைப்பிற்குமான நான்கு அம்சத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் இன்று அறிவித்துள்ளார். |
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கிற நிலையில் கடந்த ஒரு வருட நினைவுகளை மறந்துவிடுகிற ஹீரோவின் சிந்தனையை சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன். |
'ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்’ ஐடியாவில் இத்தனை ஜோக்கும் த்ரில்லும் புதைத்து அசர அடித்திருக்கிறது 'N.k.P.K.’ கூட்டணி! கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிற நிலையில் நண்பர்கள்களின் ரூமிற்கு வருகிறார் ஹீரோ விஜய் சேதுபதி. கிரிக்கெட் ஆடலாம் என்று கிளம்புகிறார்கள். பந்தை கேட்ச் பிடிக்கிற நேரத்தில் பின்னால் சாயும் விஜய் சேதுபதிக்கு பின் மண்டையில் நல்ல அடி விழ அப்புறம் அரை சேதுவாகி நண்பர்களை அல்லாட வைக்கிறார். அதுவும் எப்படி? ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப சொல்லி... நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம் என்னாச்சி? என்று கேட்டபடியே "பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? மெடுலாவில அடிபட்டிருக்கும் அதான். இப்ப ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்" ஐந்து நிமிடத்திற்குகொரு முறை இதை சொல்லிக் கொண்டேயிருக்கிறார் இவர். இந்த அடியில் சுமார் ஒரு வருட சம்பவத்தை அப்படியே மறந்தும் விடுகிறார் விஜய் சேதுபதி. அதுவும் ஒரு வருடத்திற்குள் காதலித்து கல்யாணம் செய்யப் போகிற வருங்கால மனைவியையும் கூட. கல்யாணத்திற்கு இன்னும் இரண்டே தினங்கள் இருக்கிற நிலையில் நண்பர்கள் அதே காதலிக்கு கல்யாணம் செய்து வைத்தார்களா? விஜய் சேதுபதி குணமடைந்தாரா? நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் க்ளைமாக்சோடு முடிகிறது படம். ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் டூயட் இல்லை. படம் துவங்கி சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அறிமுகமாகிறார் ஹீரோயின். ஒரே ஒரு பாட்டுதான். இப்படி தமிழ்சினிமாவின் ரெகுலர் ஃபார்முலாவை கிழித்து காயப் போட்டிருக்கிறார் புதுமுக இயக்குனர் பாலாஜி. இந்த சம்பவம் அப்படியே உண்மைக்கதை என்று கடைசியில் விளக்குகிறார்கள். அதுவும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் வாழ்வில் நடந்த சம்பவமாம் இது. தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, சுந்தரபாண்டியன் என்று கதை தேர்வில் மெனக்கெடுகிற ஆள் போலிருக்கிறது விஜய் சேதுபதி. இந்த படமும் அவரது கதைகேட்கும் திறனுக்கு ஏற்றார் போலதான் அமைந்திருக்கிறது. முகத்தில் பெரிய ரீயாக்ஷன் ஏதுமின்றி, அதே நேரத்தில் ரசிகர்களை குலுங்க வைக்கிற வித்தையும் தெரிந்திருக்கிறது இவருக்கு. விஜய் சேதுபதியின் நண்பர்களாக அறிமுகமாகி இருக்கும் ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஆகிய மூவரும் அட்டகாசம். 'காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!’ என்று அள்ளிவிட்டு பக்ஸ் வாங்கும் பல்பு, 'அவன்தான் மாப்பிள்ளை பேரை மறந்துடுறான்ல. இந்தத் தடவை பக்ஸ் பேரைச் சொல்லு!’ என்று கோத்து விடும் சரஸ்... நண்பர்களின் ஒவ்வொரு ஸ்டாப் ப்ளாக்குமே செம காமெடி மேளா! தெரு கிரிக்கெட்டுக்கு ஐ.பி.எல். பாணி ஷாட்கள், நண்பர்களின் குளோசப் டென்ஷன் என நிலவரத்தின் கலவரத்தைப் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்துகிறது பிரேம்குமாரின் ஒளிப்பதிவு. (நிஜத்தில் இவரேதான் அந்த மெமரி லாஸ் ஹீரோ!) படம் முழுக்க ரிப்பீட் அடிக்கும் வசனங்களுக்கு, சோகம், டென்ஷன், நெகிழ்ச்சி, வருத்தம் என்று டோன் மாற்றியதில் டிஸ்டிங் ஷன் அடிக்கிறது சித்தார்த் விபினின் பின்னணி இசை. நிஜ சம்பவத்தில் தொடர்புடைய சிலரைப் படத்திலும் அப்படியே உலவவிட்டு இருப்பது... அடடே! முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த கொமெடி எக்ஸ்பிரஸ். நடிகர்கள்: விஜய் சேதுபதி, ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் ஒளிப்பதிவு: பிரேம் குமார் இசை ஷங்கர், சித்தார்த் இயக்கம் பாலாஜி தரணிதரன் |