மரண அறிவித்தல்

                                                          மரண அறிவித்தல்

திரு .சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார்காலமானார் 

இறப்பு : 27 March 2014


புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும் சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார் அவர்கள் 27 March 2014  வியாழக்கிழமை சிட்னி நகரில் காலமானார்.  இவர் காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், இராஜ இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற ‘மயிலிட்டி’ சுவாமிநாதன் பூதாத்தைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,   பாஸ்கரி, வைத்திய கலாநிதி பகீரதி,  பவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவஞானசுந்தரம்,  தங்கவேல் ஆகியோரின் அருமை மாமனாரும்,  மயூரன், மதீபன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும், காலஞ்சென்ற கதிரித்தம்பி, காலஞ்சென்ற ஆறுமுகம் ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30 March  2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 7.00 மணி வரை Liberty Funeral Parlour 101, South Street, Granville  இல் பார்வை அஞ்சலிக்கு வைக்கப்படும்.

ஈமக்கிரியைகளும் தகனக்கிரியைகளும் 31 March 2014  திங்கட்கிழமை காலை 10.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.15 மணி வரை South Chapel, Rookwood மயானத்தில் இடம்பெறும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு:    சிவஞானசுந்தரம்.     0407901207
                               தங்கவேல்                  0435050808 

காலத்தின் முடிவு --ர.பாரதி

.














எத்தனை வேதனைகள்என்னைப் பெற்றெடுக்கும்போது பெற்றிருப்பாள்…
எத்தனை பொய்கள்என்னைச் சாப்பிட 
வைக்க சொல்லியிருப்பாள்…
எத்தனை தாலாட்டுகள்
என்னைத் தூங்கவைக்கப் பாடியிருப்பாள்…
எத்தனை துயரங்கள்
என் படிப்பிற்காக அனுபவித்திருப்பாள்…
எத்தனை சாபங்கள்
என்னை ஏசியியோருக்கு விட்டிருப்பாள்…
எத்தனை போரட்டங்கள்…
என்னை நன்றாக வளர்க்கக் கடந்திருப்பாள்…
எத்தனை அறிவுரைகள்
என்னை நல்வழிப்படுத்த சொல்லியிருப்பாள்…
எத்தனை வேண்டுதல்கள்
என்னை மகிழ்ச்சிக்காக் கடவுளிடம் வேண்டியிருப்பாள்..

தமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வு

.

அன்பாலயம் வழங்கும் இளம் தென்றல் 2014 -05.04.2014

.



ஞாயிறு மாலை இடம் பெற்ற சிட்னி உயர்திணை சந்திப்பு



வாழ்வனுபவங்களும்    வாசிப்பு   அனுபவங்களும்  சங்கமித்த     சிட்னி    உயர்திணை     சந்திப்பு.



சிட்னியில்    இயங்கும்    உயர்திணை    சந்திப்பு   அரங்கின்   மாத   இறுதியிலான    ஒன்று    கூடல்   கடந்த   ஞாயிற்றுக்கிழமை   30 ஆம்   திகதி மாலை    சிட்னி   பரமட்ட   பூங்காவில்   நடைபெற்றது.
செல்வி   யசோதா  பத்மநாதன்   ஒழுங்குசெய்திருந்த   இச்சந்திப்பில் படைப்பு    இலக்கியத்தில்   வாழ்வனுபவங்கள்   என்ற   தலைப்பில் மெல்பனிலிருந்து   வருதைந்த  எழுத்தாளர்   முருகபூபதி  உரையாற்றினார்.

கன்பராவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் காப்பற்றத் தவறிய இந்தியா

.
                          வழக்கறிஞர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் 
இந்தியா என்கிற ஒரு மாபெரும் தேசத்தின் ஆன்மிகச் சொத்துக்களை ,புராதனமான  கோயில்களை,  விலை மதிப்பில்லா விக்கிரகங்களை பாதுகாக்கும் பெரும் கடமையிலிருந்து இந்தியா தவறியுள்ளது வருத்தத்துக்குரியது. அதன் விளைவு தென் நாடுடைய சிவன் நூற்றெண்பது பாகை பயணித்து ஆஸ்திரேலிய தலை நகர் கன்பெராவில் தேசிய  கலை காட்சியகத்தில் ஆனந்த நடமாடுகிறார். தவிர விருத்தாச்சலம் கோவிலை சார்ந்த அர்த்த நாரீஸ்வரர் சிலை ஒன்று நியூ சவுத் வேல்ஸ் கலை காட்சியகத்தில் வாங்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே சோழர் காலத்தை சேர்ந்தவை. இரண்டுமே ஒரே நபரால் திருடி ஆஸ்திரேலியாவுக்கு விற்கப்பட்டவை.இரண்டுமே சர்வதேச சட்டங்களின் படி திருட்டு சிலை என்று தீர்மானிக்கப்படும் பட்சத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டியவை.

சுபாஷ் கபூர் அமெரிக்காவில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே குடியேறி விட்ட இந்திய வர்த்தகர்  . தென்னிந்தியாவில் இருந்து சிலைகளைக் கடத்தி நியூ யார்க்கில் உள்ள தனதுஆர்ட் ஆஃப் தி பாஸ்ட்’ கேலரி மூலம் விற்றுப் பல கோடி டாலர்கள் சம்பாத்தித்தவர். தவிர, ‘நிம்பஸ் எக்ஸ்போர்ட்’ என்ற பெயரில் சிலைகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்திருக்கிறார். தனது நிறுவனத்துக்கு ஒரு இணையத் தளத்தைத் தொடங்கி,அதன் மூலம் இணையத்தில்  சிலைகளை விற்று வந்திருக்கிறார்.அமெரிக்காஇங்கிலாந்து,ஹாங்காங்துபாய்ஜெர்மனிதாய்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் சுபாஷ் கபூருக்குச் சொந்தமாக  கலைக் காட்சியகங்கள்  உள்ளன. இவரது வியாபாரத் தொடர்புகள் இந்தியா,இந்தோனேஷியாபாகிஸ்தான்துபாய்ஹாங்காங்ஆப்கானிஸ்தான்பங்களாதேஷ்கம்போடியா,பாங்காக் என்று உலகளாவி  விரிந்திருந்தது. மேலும் உலகெங்கும் இது போன்ற அருங்காட்சியகம்  வைத்திருப்பவர்களுடனும் தொடர்புகொண்டு தனது சிலைகளை விற்று வந்திருக்கிறார்.

சங்க இலக்கியக் காட்சிகள் (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

செந்தமிழ்ச்செல்வர் பாடும்மீன் சு ஸ்ரீகந்தராசா எழுதும் சங்க இலக்கிய காட்சிகள் என்ற இலக்கிய பகுதியை பத்து வாரங்கள் தொடர்ச்சியாக தர இருக்கிறோம் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகிறோம். படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை பதியுமாறு வேண்டுகின்றோம்
ஆசிரியர் குழு

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள். அவற்றைப் படிக்கும்போது தமிழ் மொழியியன் செழுமையினையும், இனிமையினையும் நாம் உணருகின்றோம். அவை சொல்லுகின்ற சுவையான கதைகளிலும் நம் மனதைப் பறிகொடுக்கின்றோம். அவற்றில் ஆங்காங்கே வெளிப்படுத்தப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளுகின்றோம். அந்த வகையில் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை எல்லோரும் படித்து இன்புற வாய்ப்பளிப்பதே இக்கட்டுரைத் தொடரின்  நோக்கமாகும்.
-------------------------------------------------------------------

காட்சி 1
                                       
                                                 காட்டுவழியில் காதலர் இருவர்
அவனும் அவளும் காதலர்கள். வேறு வேறு ஊர்களைச் சேர்ந்த இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டுவிட்டனர். அவளைச் சந்திப்பதற்கு அவன் இரவுவேளைகளிலே அவளின் ஊருக்கு வருவான். யாருக்கும் தெரியாமல் அவளைச் சந்திப்பான். அவளோடு உறவாடுவான். இவ்வாறு களவு ஒழுக்கத்திலே இணைந்துவிட்ட இருவரும், கற்பு ஒழுக்கத்திலே ஒன்றுசேர்ந்து வாழ விரும்பினார்கள். ஆனால் அதற்கு அவளின் ஊரவரும் உறவினரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இருவரும் அறிவார்கள். இப்படியே களவு நெறியிலே நீடிக்கவும் முடியாது. என்றாவது ஒருநாள் இருவரும் கையும் களவுமாகப் பிடிபடவேண்டிவரும்.
எனவே, கற்புநெறியிலே அவனோடு செல்வதற்கு அவள் இசைந்தாள். ஊரையும் உறவினரையும் பிரியத் துணிந்தாள். பகலிலே இருவரும் பயணிக்க முடியாது. ஊரவர்கள் அவனைக் கொலை செய்தாலும் செய்வார்கள். இரவிலே அவனது ஊருக்குச் செல்வதிலும் அபாயம் உண்டு. இருவரின் ஊர்களுக்கும் இடைத் தூரம் அதிகம். இடையே கொடிய விலங்குகள் வாழும் பெருங்காடு ஒன்றையும் கடந்து செல்லவேண்டும்.

தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும் - முருகபூபதி




அனைவரிடமும்    ஏதோ   ஒரு  கதையோ   அல்லது   பல கதைகளோ இருக்கும்.  நிச்சயமாக   இருக்கும்.   ஆனால் -  இவர்களில்   சிலர்தான்    அதனை   எழுத்தில்   தருகிறார்கள்.   மற்றவர்கள்    உரையாடலின் பொழுது சொல்கிறார்கள்.   உரையாடல்களில்   ஒருவர்  சொன்ன  கதை   கேட்கப்பட்ட மற்றும்   ஒருவரினால்  வேறு  ஒரு   இடத்துக்கு காவிச்செல்லப்படும் பொழுது   அதன்   வடிவம்   மாறிவிடும்.   கண்வைத்து  காது  வைத்து மெருகூட்டி   வதந்தியாகவே   அது   பரவிவிடும்.  கேட்கப்பட்ட  வதந்தியின் அடிப்படையிலும்   ஒரு   புதிய  கதை  உருவாகிவிடும்.
உதாரணத்துக்கு ---  அவுஸ்திரேலியாவில்   ஒரு   சம்பவம்   நடந்தால்   அதனை தொலைக்காட்சி   ஊடகங்களில்   பார்த்து -   வானொலிகளில்  கேட்டு - பத்திரிகைகளில்   படித்துவிட்டு  அச்சம்பவம்   பற்றி   எதுவுமே    தெரியாத வீட்டுக்கு   வந்த   உறவினரிடம்   அல்லது  நண்பரிடம் அதனைச்சொல்லும்பொழுது   பார்த்த - கேட்ட - வாசித்த   அச்சம்பவம்   வேறு ஒரு   வடிவத்தில்   ஒரு   கதையாகவே   பின்னப்பட்டு   சொல்லப்படுவது அன்றாட   நிகழ்ச்சி.

அக்கினிக்குஞ்சு 12.04.2014

.

சிவாஜியின் கையெழுத்து - அ.முத்துலிங்கம்

.       

  ’சிவாஜி வருகிறார், சிவாஜி வருகிறார்’ என்று கத்திக்கொண்டே என் நண்பன் பரஞ்சோதி ஓடிவந்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. முதல் முறையாக நடிகர் சிவாஜி கொழும்புக்கு வரப்போகிறார். வருடம் 1959. தினகரன் பத்திரிகை ஆசிரியர் க.கைலாசபதியின் பெருமுயற்சியால் ஏற்பாடுசெய்யப்பட்ட முத்தமிழ் விழாவுக்கு சிவாஜி வருவது உறுதியாகிவிட்டது. நான் திட்டமிடத் தொடங்கினேன்.

சிவாஜியுடனான என்னுடைய பரிச்சயம் பல வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. எங்களுடைய வீட்டில் அண்ணர் சர்வாதிகாரி. பேப்பர் பறக்காமல் இருக்க ஒரு கல் வைப்பதுபோல ஆணை இடும்போதே அதை மறக்காமல் இருக்க ஓர் அடியும் வைப்பார். பராசக்தி படம் வந்தபோது அவர் என்ன செய்தார் என்றால் ஐந்து சதத்துக்கு விற்ற வசனப் புத்தகத்தை வாங்கி வந்து அதைபாடமாக்கச் சொல்லி எனக்கு கட்டளையிட்டார். நான் நாலு நாட்களில் ’நீதி மன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்று அடிக்குரலில் ஆரம்பித்து பேச்சை உணர்ச்சிகரமாக முடிப்பதற்கு பழகிவிட்டேன். அதுவெல்லாம் தனிமையான பயிற்சியின்போதுதான். அண்ணர் முன்னே நின்றபோது நாக்குழறி, மண்டைக்குள் இருந்த சொற்கள் வாய்க்குள் வராத சொற்களிலும் பார்க்க அதிகமாகிவிட்டன. அவர்சமிக்ஞை விளக்குப்போல, அடிக்கடி மனம் மாறுகிறவர். முழுவதையும் பாடமாக்கினால் படத்துக்கு கூட்டிப்போவதாகச் சொல்லியிருந்தார். வாக்கை காப்பாற்றாமல் போகலாம். ஒருநாள்  நண்பர்களை அழைத்துவந்து அவர்களுக்கும் பேசிக்காட்டச் சொன்னார்.  பேசி முடிந்ததும் நண்பர்கள் வயிறு குலுங்க சிரித்தார்கள். அது ஏன் என்றுமட்டும் எனக்கு புரியவில்லை.

சிட்னி தமிழ் அறிவகம் முகவரி மாற்றம்

.

அழியாத கோலமாக மனதில் நிற்கும் கலைஞன்

.
சினிமா ரசிகர்களின் மனதில் அழகான வீடு கட்டி அழியாத கோலமிட்டு நிரந்தரமாக  வசிப்பவர் பாலுமகேந்திரா. தலைமுறைகளுடன் போட்டியிட்டு ஐந்து படங்கள் தருவேன் என்றவர் எதிர்பார்த்திருந்தவர்களை ஏமாற்றி விட்டுச்சென்று விட்டார். இயக்குநரின்படம் நடிகரின் படம் என்ற நிலையைக் கடந்து பாலுமகேந்திராவின் படம்  என்ற புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். கதை, இசை, இயக்கம், நடிப்பு எல்லாவற்றையும் கடந்து பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவக்காண ரசிகர்கள் படை எடுத்தனர். அவரின் கமரா காட்டும் காட்சிகள் அனைத் தும் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த பாலுமகேந்திராவை காலம் தென்னிந்தியாவில் காலூன்றச் செய்து சாதனையாளராக்கியது. உலகின் சிறந்த படங்களுடன் தமிழ்ப்படங்களையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்து கேலி செய்பவர்களின் முகத்தில் அடிப்பது போல ஈரான் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். எமது படங்களைப் பார்த்து அவர்க்ள ஆச்சரியப்படவேண்டும் என்று சவால் விடுத்தார். அந்தச்சவாலில் அவர் வெற்றிபெறுவார் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் வாழ்வை முடித்து விட்டுச் சென்றுவிட்டார்.
இலங்கையில் இருக்கும்போது படிக்கின்ற காலத்திலேயே  சிறுகதை, கவிதை, குறும் படம் என்பனவற்றில்  சிறந்து விளங்கினார். இலண்டனில் உயர்கல்வியை முடித்தபன் பூனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு கல்வியில் தங்கப்பதக்கத்துடன் வெளியேறினார்.

மேலோங்கும் விஞ்ஞானம் - எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

விலங்காக இருந்தவனே 
      விந்தை பல செய்கின்றான்
நிலம்யாவும் அவன்நினைக்கின்
      நீள்சொர்க்கம் ஆகிவிடும்
நலம்காணும் எண்ணத்தில்
      நாளெல்லாம் உழைகின்றான்
அவன்கண்ட விஞ்ஞானம்
       அகிலத்தை ஆளுதிப்போ

விஞ்ஞானம் வளர்ந்ததனால்
     அஞ்ஞானம் அகன்றதென்பர்
நல்ஞான வளர்ச்சியினால்
     நாடெல்லாம் உயர்ந்ததென்பர்
கல்ஞானம் எனப்பெற்றோர்
     கண்டிப்பார் பிள்ளைகளை
விஞ்ஞானம் தானிப்போ
    மேலோங்கி நிற்கிறது

காலைமுதல் மாலைவரை
    கண்திறந்தால் விஞ்ஞானம்
வேலைசெய்யும் இடமெல்லாம்
    விதம்விதமாய் விஞ்ஞானம்
நாலுபேரும் கூடிநின்று
     நயப்பதுவும் விஞ்ஞானம்
நம்வாழ்வில் காண்பதெல்லாம்
    நனிசிறந்த விஞ்ஞானம்

செருப்பு.. பிஞ்சுபோச்சு!

.


கதை  1

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்குமரியாதை)



இலங்கைச் செய்திகள்

.
விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் கோபி? : தகவல் தரு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் பரிசுத் தொகை

நீதிகோரி நுண்கலைப்பீட மாணவர்கள் போராட்டம்

புலிகளின் புதிய தலைவர் கோபியின் நெருங்கிய உதவியாளர் கைது

புலிகளின் பிரதானி ஒருவரை தேடி விஷேட வேட்டை : கொழும்பை அண்டிய பகுதிகளில் இருக்கலாம் எனவும் தகவல்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகள் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது : இராணுவப் பேச்சாளர்

தமிழ் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு கோரி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாய் கைது

இலங்கை நிலைமை குறித்து ஜெனிவாவில் இன்று விவாதம் : நவியின் அறிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்படும்

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை தடுத்துவைத்து பொரும்பான்மையின மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விடு­தலைப் புலி­களின் புதிய தலைவர் கோபி? : தகவல் தரு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் பரிசுத் தொகை

24/03/2014  பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு பொலி­ஸா­ரினால் மேற்­கொள்­ளப் பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­களில் தேடப்­பட்டு வரும் சந்­தேக நபர்­க­ளான பொன்­னையா செல்வ நாயகம் கஜீபன் எனப்­படும் கோபி அல்­லது காசியன் மற்றும் அவ­ரது உத­வி­யா­ள­ராக கூறப்­படும் நவ­ரத்னம் நவ­னீதன் எனப்­படும் அப்பன் ஆகியோர் தொடர்பில் தகவல் வழங்­கு­வோ­ருக்கு ஒரு மில்­லியன் ரூபா பணப் பரி­சினை பொலிஸ் தலை­மை­யகம் அறி­வித்­துள்­ளது.
31 வய­தான கோபி மற்றும் 36 வய­தான அப்பன் ஆகியோர் தொடர்பில் சரி­யான தகவல் ஒன்­றினை வழங்­கு­வோ­ருக்கே இந்த பரி­சுத்­தொகை அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோகன சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தகவல் வழங்­கு­வோரின் இர­க­சியம் பேணப்­பட்டு அவர்­களின் பாது­காப்­புக்கு உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படும் எனவும் குறிப்­பிட்டார்.

உலக செய்திகள்


மலேசிய விமானம் புறப்படுவதற்கு முன் மர்ம பெண்ணிடமிருந்து விமானிக்கு தொலைபேசி

271 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்

MH370 விமானத்தில் பணித்த பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எகிப்து இராணுவத் தளபதி பதவியை இராஜினாமா செய்தார்

மலேசிய விமானம் புறப்படுவதற்கு முன் மர்ம பெண்ணிடமிருந்து விமானிக்கு தொலைபேசி



24/03/2014  காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தின் விமானி சஹாரி அஹ்மட் சாஹ் அந்த விமானத்தில் புறப்படுவதற்கு முன் அவருக்கு கையடக்க தொலைபேசியில் அழைப்பு விடுத்த பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
அந்த கையடக்க தொலைபேசி இலக்கமானது போலியான அடையாளத்தை காண்பித்து பெறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

LIVE IN CONCERT - S.P.B, CHITRA 03.05.2014

.


பாரதிரஜாவின் கனவு 1

.
சென்னைத் தெருக்களில் அலைந்த நூற்றுக்கணக்கானவர்களில் பாரதிராஜாவும், இளைய
ராஜாவும் அடக்கம். "மயில்' என்ற திரைக்கதைய உருவாக்கிய பாராதிராஜா அதனை
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கழகம் சிறந்த
திரைக்கதைகளுக்கு நிதி உதவி செய்து வந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு
அனுப்பிய விண்ணப்பப்படிவத்தில் கதை இயக்கம் பாரதிராஜா, கமரா நிவாஸ்,
இசை ராஜா என்று குறிப்பிட்டிருந்தார். ராஜா வேறு யாருமல்ல அவர் தான் இளைய
ராஜா.

நிதி உதவி கிடைக்கும். படம் வெளியாகும். அதன்பின்னர் தயாரிப்பாளர்கள் தேடிவ
ருவார்கள் என்று பாரதிராஜா காத்திருந்தார். அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.
அவருக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. தெலுங்கு இசையமைப்பாளரான பெண்டி
யாலா சீனிவாசன் என்பவர் "பட்டாம்பூச்சி' என்ற படத்துக்கு இசை அமைப்பாளராகப்
பணிபுரிந்துவந்தார். மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உதவி இசைய
மைப்பாளராகப் பணி புரிந்த கோவர்த்தன் பட்டாம் பூச்சிக்கு உதவியாளராக பணிபுரிந்தார்.

புகழ் மலர்கள்!

.

எல்லோரும் தேடினாலும்
சிலரை மட்டுமே தேடிச் செல்வது...

எல்லோரும் விரும்பினாலும்
சிலரை மட்டுமே விரும்பிச் செல்வது..

எல்லோரும் பின்தொடர்ந்தாலும்
சிலரை மட்டுமே பின்தொடர்வது..

எல்லோரும் சிறைபிடிக்க நினைத்தாலும்
சிலருக்கு மட்டுமே சிறைப்படுவது..

!பு  க  ழ்!

ஒருவன் எவ்வளவு உயராமானவன் என்பதைவிட  அவன்
எவ்வளவு உயர்வானவன் என்பதையே காலம் திரும்பிப்பார்க்கிறது.

ஒருவன் எவ்வளவு அழகானவன் என்தைவிட  அவன்
எவ்வளவு அழகான பண்புகளைக்கொண்டவன் என்பதையே இவ்வுலகம் எண்ணிப்பார்க்கிறது.

ஒருவன் வாழும்போது எவ்வளவோ இடங்களை ஆளுமை என்ற பெயரில் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அதையெல்லாம்விட.... 
அவன் இறந்தபின்...

எவ்வளவு மனங்களில்..
எவ்வளவு இடங்களை...

தன் அன்பால், ஆளுமையால் ஆக்கிரமித்திருந்தான் என்பதே நினைவில் கொள்ளத்தக்க சிறப்பான பண்பாக அமைகிறது..

ஒருவன் உடலும், உயிரும் இருக்கும்போது அவன் காதுபட பேசப்படும் புகழுரைகள் பெரும்பாலும் சுயநலம் கருதியதாகவும், பொய்மை நிறைந்தவையாகவுமே விளங்குகின்றன.

ஆனால்..

ஒருவன் மறைவுக்குப் பின்னர் பேசப்படும் புகழுரைகளில் சுயுநலம் மறைந்து உண்மை மட்டுமே நிறைந்திருக்கக் காண்கிறோம்..

இதோ மறைந்த மனித மலர்களுக்காக..
மலர்ந்த புகழ் மலர்கள் இக்கூற்றை மெய்பிப்பனவாக அமைகின்றன.

ஜீவநதி

.


கலை இலக்கிய மாத சஞ்சிகையான ''ஜீவநதி' பங்குனிமாத இதழ் திருகோணமலை மாவட்ட சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. ஜீவநதியின் 11ஆவது சிறப்பிதழ் இது. மலையகச் சிறப்பிதழ் வெளியிட்டு மூன்று மாத இடை வெளியில் திருகோணமலை மாவட்ட  சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. சிறப்பிதழ் வெளியிடுவதன் மூலம் பல வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுகின்றன. கலை, இலக்கியம் பற்றிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்கள்  சிறப்பிதழ் மூலம் ஆவணப் படுத்தப்படுகிறது. திருகோணமலை பற்றிய பல புதிய தகவல்களை இச்சிறப்பிதழின் மூலம் அறிய முடிகின்றது.

''திருகோணமலை சில இலக்கியக் குறிப்புகள்' எனும் கட்டுரையின் மூலம் இராஜ தர்ம ராஜா நீண்டதொரு பட்டியலைத் தந்துள்ளார். திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என அவரது பார்வைப் பரந்து விரிகின்றது. திருகோணமலை என்றாலே  மனதில் தோன்றுவது திருக்கோணேஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றி தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழி களில் வெளிவந்த நூல்கள் பற்றியும் திருக்கோணேஸ்வரத்தைப் பற்றிப் பாடியவர்களின்  விபரங்களையும் தந்துள்ளார்.

“சிங்கப்பூரின் கதை – லீ குவாங் யீ நினைவு அலைகள்” – நூலை முன்வைத்துச் சில குறிப்புகள்

.
singapore story 400
 இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் நகரங்களின் மேல் அமெரிக்கா அணுக்குண்டு போட்டது; அதுவும் பணக்காரர்கள் குறைவாகவும் ஏழைகள், உழைப்பாளிகள் அதிகமாகவும் மிகவும் அடர்த்தியாகவும் குவிந்து கிடந்த இரண்டு நகரங்களைத் தேர்ந்தெடுத்து குண்டு போட்டது. குண்டு போட்ட ஐந்து நொடிகளில் ஹிரோசீமா, நாகசாகி என்ற அந்த நகரங்களில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் அப்படியே உருகிக் கருகிச் செத்தனர். ஐன்ஸ்டீன்தான் அணுக்குண்டைக் கண்டுபிடித்தவர். அவரே ‘போட வேண்டாம்’ என்று அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டார். மேலும் போரில் அணுக்குண்டின் தேவை இல்லை. ஏனென்றால் ஜப்பான் ஏற்கெனவே எல்லா இடங்களிலும் தோல்வி அடையத் தொடங்கி விட்டது. இதைச் சுட்டிக்காட்டினார் ஐன்ஸ்டீன். ஆனாலும் அமெரிக்கா கேட்கவில்லை. செய்துவிட்ட அணுக்குண்டு ‘எப்படி வேலை செய்கிறது’ என்று சோதனை செய்து பார்க்க வேண்டும்; உலகத்தின் முன்னால் தானொரு பெரிய வல்லரசு என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்கிற வெறி இருந்தது. எனவே போர்க்களத்திற்கே சம்பந்தமில்லாத அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கிறோமே என்கிற மனச்சாட்சி அணுவளவும் இன்றி ஆடிக் காட்டியது.
                மக்கள் அலறி உருகிச் சாவதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஆணையிட்ட அன்றைய அமெரிக்க அதிபர் ட்ரூமென். பத்திரிக்கை நிருபர்கள் அவரை அணுகிக் கேட்கிறார்கள். “அணுக்குண்டின் கதிர் வீச்சினால் இவ்வளவு மக்கள் ஒரு நொடியில் உருகிச் சாகும் காட்சியை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?”
                ட்ரூமென் பதில் கூறுகிறார் இப்படி:-
                “என் வாழ்நாளிலேயே இன்றுதான் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த நாள்”
நிருபர்கள் மீண்டும் கேட்கிறார்கள்:-
அந்த மக்கள் கூட்டம் ஓலமிட்டு ஓடி உருக்குலையும் காட்சி உங்கள் மனதை ஒரு சிறிதும் துன்புறுத்தவில்லையா?
ட்ரூமென் சொல்லுகிறார்:-
‘அமெரிக்காதான் உலகிலேயே பெரிய வல்லரசு நாடு என்பதை நிரூபித்துவிட்டேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’
           

குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய பிரபல படத்தயாரிப்பாளர்!

.
cuckoo-movie-stills-00ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை எண்ணி சந்தோஷப்படுகிறவர்கள் திரைப்படத்துறையில் மிகக்குறைவு. பொறாமைத்தீயில் பொசுங்கிப்போகிறவர்களே அதிகம்.
அவன் யாரென்றே தெரியாவிட்டாலும், அடுத்தவனின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத நல்ல உள்ளங்கள் நிறைந்த இடம்தான் திரைப்படத்துறை.
இன்று வெளியாகி இருக்கும் குக்கூட படம் அருமையாக இருக்கிறது என்றும், படம் வெற்றியடைவது உறுதி என்றும் ரசிகர்கள் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், பிரபல படத்தயாரிப்பாளர் ஒருவர் கடும் சோகத்தில் இருக்கிறாராம்!
அவர்..நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ். சக்கரவர்த்தி. அது சரி.. குக்கூ ஹிட்டானால் இவருக்கு என்ன?
சில வருடங்களுக்கு முன் தன் மகன் ஜானியை ஹீரோவாக வைத்து ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு பூஜைபோட்டார் சக்கரவர்த்தி. 18 வயசு என்ற படத்தை ரேணிகுண்டா இயக்குநர் பன்னீர் செல்வம் இயக்கத்திலும், சந்திரபாபு என்ற படத்தை லிங்குசாமியின் உதவியாளரான ராஜுமுருகன் என்ற புதுமுக இயக்குநரை வைத்தும் தொடங்கினார்.
18 வயசு படம் 2012 ஆம் வருடம் வெளியானது. 15 நாட்கள் படப்பிடிப்பி நடைபெற்றநிலையில் சந்திரபாபு படத்தை ட்ராப் பண்ணிவிட்டார் சக்கரவர்த்தி. அதற்கு அவர் சொன்ன காரணம்..அந்த டைரக்டருக்கு படம் எடுக்கத் தெரியலை என்பதுதான்.
அன்று அவரால் படம் எடுக்கத் தெரியலை என்று குற்றம்சாட்டப்பட்ட ராஜுமுருகன்தான் இன்றைய குக்கூ படத்தின் இயக்குநர். இந்த ப்ளாஷ்பேக்கின் காரணமாகவே குக்கூ படத்தின் வெற்றி எஸ்.எஸ். சக்கரவர்த்தியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளதாம்.

மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க மக்களே!

Nantri 123tamilcinema

தமிழ் சினிமா

.
நிமிர்ந்து நில். 


பி.சமுத்திரகனியின் இயக்கத்தில், சமூகபொறுப்புணர்வுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் நிமிர்ந்து நில். பொதுவாக இதுமாதிரி சமூகத்திற்கு பாடம் சொல்லும் நற் கருத்துடைய திரைப்படங்கள், போதனையாக, சோதனையாக... போரடிக்கும்! ஆனால் பெரும் சாதனையாக சமுத்திரகனியின் நிமிர்ந்து நில் திரைப்படம், தியேட்டரில் சீட்டு நுனியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆரம்பகாட்சி முதல் இறுதிகாட்சி வரை கண்கொட்டாமல் கை தட்டவைப்பது தான் ஹைலைட்!

கதைப்படி, அரவிந்த் சிவசாமி எனும் ஜெயம் ரவி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழத்தெரியாமல் சட்டத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ஒருநாள் அறை நண்பரும், அலுவலக நண்பருமான சூரி உடன் இல்லாமல் பைக்கில் வேலையாக கிளம்பும் ஜெயரம் ரவி, லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும் டிராபிக் போலீஸ் எதிர்பார்க்கும் காந்தி தாள் தராததால் போலீஸ், கோர்ட், கேஸ் என ஏகத்துக்கும் அலைகழிக்கப்படுகிறார். டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் அரவிந்த் சிவசாமி அதாங்க, ஜெயம் ரவி, இச்சயமத்தில் தன்னை லஞ்சம் தந்து காபந்து செய்த ஆரூயிர் நண்பர் சூரியையும், அவருக்கு ஐடியா தரும் (ஜெயம் ரவியை ஒரு தலையாக காதலித்த படி) அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே பகீர் என்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன? ஜெயம் ரவி அதிகார வர்க்கத்தால் சட்டத்திற்கு புறம்பாக செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி, அமலாபால் மற்றும் கோர்ட்டில் ஜெயம் ரவியின் நேர்மை கண்டு ஈர்க்கப்பட்ட வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர். இவர்களது கனிவாலும், கவனிப்பாலும் விரைந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்தமுறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி! இதில் நமக்கெதுக்கு வேண்டாத வேலை... என வெகுண்டெழும் அமலாபால், தான் ரவியின் நேர்மைகண்டு ஆறுமாத காலமாக ரவிக்கே தெரியாமல் ரவியை பின்தொடர்ந்து, அவரை காதலிக்கத் தொடங்கியவர் என்பதையும் மறந்து அரவிந்த் சிவசாமி அலைஸ் ஜெயம் ரவியை பிரிகிறார். ஜெயம் ரவி அதுப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சூரி, வக்கீல் சுப்பு பஞ்சு, நேர்மையான ஏட்டு தம்பி ராமைய்யா, உண்மை டிவி. அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் ஆப்பு வைக்கிறார். அதில் ரவியை அடித்து துவைத்த போலீஸ்காரர்களும் அடக்கம்!

பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நமத்து போகச் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? அமலாபாலும் அவரது காதலும் என்னவாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது நிமிர்ந்து நில் படத்தின் மீதிக்கதை!

ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு பரிமாணங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, ஊழல் எதிர்ப்பாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் அநியாயங்களை கண்டு அவர் பொங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. வளைந்து கொடுத்து போகத்தெரியாதவனை வாழத்தெரியாதவன் என சிரிப்பது தானே நம் இயல்பு, அப்படித்தான் சிரிக்கிறோம்... ஆரம்பகாட்சிகளில் ஜெயம் ரவியை பார்த்து, ஆனால் அதன்பின் அவர் எடுக்கு அவதாரங்களும், விஸ்வரூபங்களும் தான் நிமிர்ந்து நில் படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் விஷயங்கள்! வாவ், ஜெயம் ரவி வாயிலாக இயக்குநர் சமுத்திரகனி தெரிகிறார், என்ன துடிப்பு, என்ன நடிப்பு!

ஆந்திரா, ராஜமுந்திரி - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்! ஆனாலும் ஆதிபகவன் ஜெயம் ரவிகளின் மேனரிஸங்கள் இரண்டு ரவிகளிடமும் இந்தப்படத்திலும் இருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! (ஆனாலும் ஆதிபகவன் தோல்வியையும், நிமர்ந்து நில் வெற்றி ஜெயம் ரவிக்கு ஈடுகட்டிவிடும் என்பது சிறப்பு!)

உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்... என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருக்கிறது. ஆனால், அதேநேரம் ரவியுடன், அமலாபால் திரும்ப சேருவது அமலாவின் அப்பாவும், ஊழல் பேர்வழிகளில் ஒருவர் என்பது தெரிந்ததும் வீட்டில் போராடுவது அமலாவின் பாத்திரத்திற்கும், படத்திற்கும் வலு சேர்க்கின்றன!

சூரி, இப்போதெல்லாம் கடிப்பதில்லை... கலாய்க்கிறார், ஜமாய்க்கிறார் என்பது நிமிர்ந்து நில் படத்திற்கும் பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, இன்ஸ் இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதனால் நிமிர்ந்து நில் படமும் பளிச்சிடுகிறது! 

எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் நிமிர்ந்து நில் படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் இமாலய வெற்றி!

அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவங்களுக்கு தப்பா ரூட் போட்டு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்! என்பது உள்ளிட்ட இன்னும் பல அனல் பறக்கும் வசனங்களில் நம்மை கவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் காரை பறக்கவிட்டு டி.வி. லைவ் ரிலே டிரையிலர் லாரியை மோத விடுவதும், ஜெயம் ரவிகளை தேவை இன்றி மோதவிடுவதையும் தவிர்த்திருந்தார் என்றால் நிமிர்ந்து நில் இன்னும் தில்லாக இருந்திருக்கும்! ஆனாலும், நிமிர்ந்து நில் - சமுத்திரகனியின் - தில் - ரசிகர்களின் நெஞ்சில்!