மகளிர் தினம் 8 March வாழ்த்துக்கள்

.



 உலகெங்கும் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் தமிழ்முரசுஅவுஸ்திரேலியாவின் மகளிர் தின வாழ்த்துக்கள்  .

மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், போரின் பெயரால் கொல்லப்பட்ட
அனைத்துப் பெண்களுக்கும் தலை வணங்குகிறோம்.

கருப்புக்கடல் - சௌந்தரி - மகளிர் தின கவிதை


Image result for womensday

.

ஒரு மகள்
ஒரு இளவரசி
நாளை ஒரு மனைவி
பின்பு ஒரு தாய்

சிறந்த நாட்கள் செய்யும்
சொந்த தெய்வம் போன்றவள்

உலாவித் திரியும் நிலாவாகும்
மனித இன்பத்தின் மறுவடிவம்

இவள் ஓர் அற்புத உயிரினம்
ஒரு திகைப்பூட்டும் அம்சம்

தடையற்ற வளம் கொண்ட
இவள் இல்லையென்றால்
பூமியில் உயிரோட்டம் இல்லை

புதைகுழி வெட்டும்
குகை மனிதர்களின்
நியாயமற்ற கைகளில்
குனிந்த தலையுடனும்
குறைக்கபட்ட கண்களுடனும்
மண்டியிட்டு விழுந்து
துரிதமாகத் தேய்கிறாள்

வரலாற்றில் பொறித்த
முறுக்கப்பட்ட பொய்களுடன்
முன்னோர் அளித்த பரிசுகளையும்
சுமக்க முடியாமல் சுமந்து
தனது அடுத்த இரகசியத்தை
மனதுக்குள் வளர்த்து
இரவில் தாமதமாக அழுகிறாள்

தோள் தேடுகின்றன
அவள் கண்ணீர்த் துளிகள்

கொல்லைப்புறத்தில்
ஓர் தங்கச் சுரங்கம் சிரிப்பதற்கு
அகந்தை களைந்து
நீ காரணமாக இருப்பாயா?

பெண்ணே
நீ ஓர் ஆச்சரியம்
வேரூன்றிய கருப்புக் கடல்

உன்னை யாரும் வார்த்தைகளால் சுடலாம்
உன்னை யாரும் கண்களால் காயப்படுத்தலாம்
இருண்டிருக்கும் உன் உள்ளடக்கத்தை
யாரும் களவாடிச் செல்லலாம்

வலியை உணர்ந்தபின்னும்
துக்கத்தில் வாழ்வதா?

தைரியம்
வலிமை
விசுவாசம்
பக்தி கொண்டவள் நீ

பலவீனம் வேண்டாம்
பரிதாபம் வேண்டாம்

காற்றுப் போல் எழு

முயற்சி செய்
உயரப்பற
இன்னும் பற
எதையும் நிறுத்தாதே

கோடை - மறைந்த கவிஞர் செல்வியின் கவிதை

.

அந்திவானம்
செம்மையை விழுங்கும்
அலைகள் பெரிதாய்
கரையைத் தழுவும்
குளத்தோரத்துப் புற்களின்
கருகிய நுனி
நடக்கையில்… காலை நெருடும்
மேற்கே விரிந்த
வயல்கள் வெறுமையாய்
வானத்தைப் பார்த்து
மௌனித்திருக்கும்
வெம்மை கலந்த
மென் காற்று
மேனியை வருடும்.
புதிதாய் பரவிய
சாலையில் செம்மண்
கண்களை உறுத்தும்
காய் நிறைந்த மாவில்
குயிலொன்று
இடையிடை குரலெழுப்பும்.
வீதியில் கிடந்த கல்லை
கால் தட்டிச் செல்ல
அதன் கூரிய நுனி
குருதியின் சுவையறியும்.

கார்த்திகா கனேசரின் புத்தக அறிமுக நிகழ்வு குறித்த பார்வை - மணிமேகலா.



.
கடந்த 2.3.1019 அன்று மாலை 6.00 - 9.00 மணிவரை வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் சந்நிதியின் மன்றலில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் கார்த்திகா கணேசரின் காலந்தோறும் நாட்டியக் கலைஇ தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்இ இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் 1969 இல் ‘தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் என்ற நூல் வெளியாகியது. ’காலந்தோறும் நாட்டியக்கலை’ என்ற நூல் 1980இல் வெளியாகி இரு பதிப்புகளைக் கண்டு தமிழ்நாட்டரசின் முதலாம் பரிசையும் வென்றிருந்தது.1984இல் வெளியான  ’இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றதோடு  கடந்த வருடம் குமரன் புத்தக இல்லத்தினரால் மீளச்சுப் பெற்றுள்ளது.



இவைகளின் அறிமுக நிகழ்வு திரு.ஈழலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் திரு.திருமதி.பவராஜா தம்பதியினர் மங்கள விளக்கேற்ற பக்தி பூர்வமான இறைவணக்கத்தோடு ஆரம்பமானது. பேரா.ஆசி.காந்தராஜாஇ செ.பாஸ்கரன்இ ம. தனபாலசிங்கம் ஆகியோரினால் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியை வழிநடத்தியவராக சோனா பிரின்ஸ் அவர்களும்; கார்த்திகா கணேசரை அறிமுகப்படுத்தியவராக செளந்தரி கணேசனும் வாழ்த்துமடல் ஒன்றை வாசித்தளித்தவராக ராணி.பாலாவும் அமைந்திருந்தது நிகழ்ச்சிக்கு மேலதிக வசீகரத்தை அளித்திருந்தது.

வாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு



துயர் மிகு ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நேர்ந்த இக்கட்டுகளை அனுபவ ரீதியாக எழுதிப் போந்தால் அது மெய்த்தன்மையோடே பல நாவல்களைப் பிரசவிக்கும். அதனால் தான் தொண்ணூறுகளுக்குப் பின் எழுந்த ஈழ இலக்கியங்களில் பெரும்பாலானவை காதலையும், இயற்கையையும் கொண்டாடவில்லை, போரின் வடுக்கள் தந்த பரிமாணங்களாகவே விளங்கின. இதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் என்னடா இது ஒரே தன் வரலாறு பேசும் படைப்பு என்றோர் சலிப்புத் தன்மை எட்டினாலும், இந்த அனுபவங்களோடு வாழ்ந்தவர்கள் அதை மீறிய கற்பனை உலகில் சஞ்சரிக்க விரும்புவதில்லை. தூத்துக்குடி படுகொலையோ, எல்லை தாண்டிக் காணாமல் போகும் மீனவன் நிலையோ, அல்லது கஜா போன்றதொரு சூறாவளி அனர்த்தமோ நிகழும் போது அதன் பின்னணியில் ஒரு படைப்பு எழுந்திருந்தால் அது காலத்தைத் தாண்டி நிற்கும் ஒரு வரலாற்றுப் படைப்பாக இருக்கும். இந்த மாதிரியான சிந்தனையோடே ஈழத்து எழுத்தாளர்கள் தாம் எதிர்கொண்ட போரியல் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு கதைகளை, நாவல்களை எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள். அதில் சொல்லப்படும் சம்பவங்கள், கதை மாந்தர்கள் எல்லாம் வாசகனுடைய வாழ்க்கையின் பக்கங்களைக் கிளறுவனவாக இருக்கும். அவ்விதம் எழுந்த ஒரு படைப்பே வாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்”.

இந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு வெளியேறிய பின்னரான பிரேமதாச ஆட்சிக் காலத்தைக் களமாகக் கொண்டு இந்த நாவல் இயங்குகின்றது. இரண்டாம் கட்ட ஈழப் போரென்பது முந்திய காலத்தோடும், பிந்திய கால மூன்றாம் கட்ட ஈழப் போரோடும் ஒப்பிடுகையில் மாறுபட்ட போரியல் வாழ்வினைக் கொண்டது. இந்தக் கால கட்டத்தில் தான் கொழும்பு நோக்கி வட புலத்து மக்கள் லொட்ஜ் (lodge) என்ற தற்காலிகத் தங்கு விடுதிகளில் (பலருக்கு அது ஆண்டுக் கணக்கில்) தங்கி வாழ நேர்ந்தது. வெளிநாட்டுக்குப் போகவிருக்கும் இளைஞனோ, யுவதியோ அல்லது குடும்பமோ அதன் நோக்கிலும், அன்றி அப்போது வெளிநாட்டுத் தொடர்பாடல் தொடங்கி வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை ஈறாக  முடங்கிப் போய் விட்ட நிலையில் கொழும்புக்கு வந்து அதன் நிமித்தமான தங்கலாகவும் இந்த லொட்ஜ் வாழ்க்கை பலருக்கு வாய்த்தது. தினம் தினம் காவல்துறையின் முற்றுகைகள், கைதுகள், நாட் கணக்கில் சிறையில் இருந்து திரும்புதல் என்று இங்கே விடுதி வாழ்க்கையில் இதுவும் ஒரு அங்கமாகவே மாறி இருந்தது அப்போது. இந்த நாவலைப் படிக்கும் போது அந்தப் பழைய நினைவுகளைக் கிளறி வைக்கிறது.

N.S தனபாலசுந்தரம் நெறியாள்கையில் " ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும் "

.
அவுஸ்திரேலிய தமிழ் திரைப்படத்துறையில்  இயக்குனரான N.S தனா என்று அழைக்கப்படடும் தனபாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது முழுநீளத் தமிழ் திரைப்படமான ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும் மிக விரைவில் அவுஸ்ரேலிய திரை அரங்குகளில் வெளிவர இருக்கின்றது. 


திரு தனபாலசுந்தரம் Sydney film School இல் diploma of screen கற்கை நெறியை 2006 ஆம் ஆண்டு பூர்த்தி செய்து, 2007 ஆண்டில் சிகரம் தொலைக்காட்சியின் அனுசரணையில் நினைவுகளே நினைவுகளே என்ற குறும்படத்தை இயக்கியிருந்தார். 2015 ம் ஆண்டு “யார் அந்த தேவதை” என்ற முழு நீளத்தமிழ் திரைப்படத்தை உள்ளூர் கலைஞர்ளின் பெரும் பங்களிப்போடு இயக்கியிருந்தார். 

மீண்டும் N.S தனா இயக்கத்தில் சந்திரா புரடக்சன் தயாரிப்பில்  “ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும்” என்ற திரைப்படம் விரைவில் அவுஸ்திரேலிய திரை அரங்குகளில் வர இருக்கிறது. கதையின் நாயகர்களாக தினேஷ் மற்றும் சுதர்சன் நடித்திருக்கிறார்கள் . தினேஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ஷோணா நடித்திருக்கிறார். 

 “ஒருகுயிலும் இரண்டு கோட்டான்களும்” படத்துக்கு கமராவை சிட்னி பிரசாத் பொறுபரபேற்க எடிட்டிங்கை ஜோன் டொமினிக் ( இந்தியா) செய்திருக்கிறார். கவி பேரரசு வைரமுத்து அனைத்பாது பாடல்களை எழுத இசை அமைத்திருக்கின்றார் வர்ஷன் (இந்தியா). சிட்னியை சேரந்த கண்மணி ஜெகேந்திரன், வர்சனின் இசையில் வைரமுத்துவின் வரிகளை பாடியிருக்கிறார். இவரோடு திப்பு, சத்யபிரகாஷ் மற்றும் அமிர்தவாஷினி ஆகியோர் பாடல்களை பாடியிருக்கிறார்கள் . கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்பவற்றை N.S தனபாலசுந்தரம் செய்திருக்கின்றார்

தனபாலசுந்தரம் அவர்களின் இரண்டாவது முழுநீளத் தமிழ் திரைப்படமான ஒரு குயிலும் இரண்டு கோட்டான்களும் மிக விரைவில் அவுஸ்ரேலியா திரை அரங்குகளில் வர இருக்கின்றது.


சர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண் - சபேசன்

.



சர்வதேச மகளிர் தினம் (International Women’s Day), மார்ச் மாதம் 8ம் திகதியன்று, உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது! நாடுகளினால், அரசுகளினால்,மொழிகளினால்மதங்களினால்பண்பாடுகளினால்அரசியலால்பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம், தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் எட்டாம் திகதியாகும்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம், கடந்த தொண்ணூறு ஆண்டுகளாகக்கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம்! எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை பெறவில்லை! அது தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. 

சாதாரணப் பெண்கள்’ என்று கருதப்படுபவர்கள், சாதனை படைத்த வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதுதான் சர்வதேச மகளிர் தினத்தின் சிறப்பாகும்! உலகின் பல்வேறு திசைகளில் வாழ்கின்ற பெண்கள், பல்வேறு காலப்பகுதிகளில், தமது உரிமைக்காகவும்சமத்துவத்துக்காகவும், நீதிக்காகவும்,சமாதானத்திற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளார்கள்.

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல் வெளியீட்டு விழா - காணொளி

.

உலகின் தலை சிறந்த ஆசிரியர் யசோதை செல்வகுமாரனுடன் கானா பிரபா

.

உலகின் தலை சிறந்த ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019) வென்ற யசோதை செல்வகுமாரனுடன் நேரடிச் சந்திப்பு.


உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக சிட்னியில் வாழும் ஈழத் தமிழ்ப் பெண் திருமதி யசோதை செல்வகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் நமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலையகத்துக்கு வந்து நீண்டதொரு பேட்டியை வழங்கிச் சிறப்பித்தார்.
அந்தப் பேட்டியைக் கேட்க
இந்த நேரடிப் பேட்டியின் முடிவில் நமது சமூக வானொலியில் இவ்வாறானதொரு நேர்காணலைக் கொடுக்கத் தனக்களித்த சந்தர்ப்பத்துக்கும் நன்றி பகிர்ந்ததோடு தனது Twitter பக்கத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

New South Wales தமிழ்த் திருச்சபை விசேட ஆராதனைகள்:

.

New South Wales தமிழ்த் திருச்சபை  
Corner of Memorial Avenue and Newman Street Merrylands அமைந்துள்ள Baptist Church ல் நடைபெற்று வரும் New South Wales தமிழ் திருச்சபையில்:

உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவின்  உயிர்த்தெழுந்த  பண்டிகையை முன்னிட்டு,  லெந்து கால தியான வழிபாட்டு ஆராதனைகள் பற்றிய விசேட அறிவித்தல்:
விசேட ஆராதனைகள்:

v  06/03/2019 –   8.00 – 9.00மணி வரை சாம்பல் புதன் கிழமை ஆராதனை வழிபாடு நடைபெறும். Rev. David Morgan தேவ செய்தியை வழங்க இருக்கிறார்.

v  ஒவ்வொரு புதன் கிழமைகளிலும்   மாலை 8.00 – 9.00மணி வரை லெந்து கால தியான வழிபாட்டு ஆராதனை நடைபெறும் (until 17th April 19).
இந்தியாவில் இருந்து வருகை தரும்  பாஸ்டர் வின்செட்ராஜ்  இயேசுவை த் தினம் பார்க்கிறேன்” சஞ்சிகையின் ஆசிரியர் சிறப்பு செய்தியை மார்ச் மாதம் புதன் கிழமை 20 ம் திகதி வழங்க இருக்கிறார்.
அனைவரும் பங்குபற்றி கடவுளின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.!!!

மேலதிக தொடர்புகளுக்கு:

ஜோன் குமாரசுவாமி            தொலைபேசி இலக்கம்:      Mobile: 0418 962 911
டேனியல் ஞானசீலன்:                                                             Mobile: 0400 975 957


இறைநிலைக்கே உயர்ந்து விட்டாள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்... அவுஸ்திரேலியா


   [ சர்வதேச மகளிர் தினத்துக்காக இக்கவிதை சமர்ப்பணம் ] 

         பொறுமைக்கு இலக்கணமாய் 
         புவிமீது வந்திருக்கும்
image1.JPG         தலையாய பிறவியென 
         தாயவளும் திகழுகிறாள் 
         மலையெனவே துயர்வரினும் 
         மனமதனில் அதையேற்று 
         குலையாத நிலையிலவள் 
         குவலயத்தில் விளங்குகிறாள்
       
          சிலைவடிவில் கடவுளரை 
         கருவறையில் நாம்வைத்து
         தலைவணங்கி பக்தியுடன் 
         தான்தொழுது நிற்கின்றோம் 
         புவிமீது கருசுமக்கும் 
         கருவறையை கொண்டிருக்கும்
          எமதருமை தாயவளும் 
         இறைநிலைக்கே உயர்ந்துவிட்டாள் 

           பெண்பிறவி உலகினுக்கே 
           பெரும்பிறவி எனநினைப்போம்
           மண்மீது மகான்கள்பலர் 
           கருசுமந்த பிறவியன்றே 
           காந்திமகான் உருவாக
           காரணமே தாயன்றோ 
           சாந்தியொடு சமாதானம்
           சன்மார்க்கமும் தாய்தானே 

அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் மாத்தளைசோமுவுக்கு சென்னையில் ‘கலைமகள்’ விருது


தமிழ்த் தாத்தாஎனப் புகழப்படும் .வே. சாமிநாதய்யர், கி.வா. ஜகந்நாதன் ஆகியோர் ஆசிரியராக இருந்த, பழம்பெரும் தமிழ் மாத இதழானகலைமகளின்’ 88-ஆவது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது.  ஒவ்வோராண்டும் இந்த ஆண்டு விழாவில் எழுத்தாளர்களுக்குக்கலைமகள்விருது வழங்குவது வழக்கமானது. இந்த ஆண்டு (2019) தமிழக எழுத்தாளர்களான வித்யா சுப்ரமணியன், திருமதி லட்சுமி ராஜரத்தினம், சிவசங்கரி ஆகியோரோடு, ‘தமிழ் ஓசைஆசிரியர் எழுத்தாளர் மாத்தளை சோமுவுக்கும்கலைமகள் விருதுவழங்கப்பட்டது.
விழாவில், மென்பொருள் துறையைச் சேர்ந்த பி.டி. சுவாமிநாதன் வரவேற்புரையையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தென்மண்டல இயக்குநர் செந்தில்குமார் தலைமை உரையையும், முனைவர் சோ. அய்யர் வாழ்த்துரையையும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், விருது பெறும் எழுத்தாளர்களின் அறிமுக உரையையும் நிகழ்த்தினார்கள்.
எழுத்தாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் கலைமகள் பதிப்பாசிரியர் திரு. பி.டி. திருவேங்கடராஜன் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். கலைமகள் விருதினை எழுத்தாளர்களுக்கு முனைவர் சோ. அய்யர் வழங்கினார். எழுத்தாளர் லட்சுமி ராஜரத்தினம், தான் எழுதத் தொடங்கி இந்த ஆண்டோடு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன என்றும், எழுபத்தியாறு வயதான போதும், தான் இளமையான மனதுடன் இருப்பதாகவும், கி.வா..வின் முன் திருப்புகழ் பாடிப் பாராட்டுப் பெற்றதை நினைவு கூர்ந்தும் பதிலுரையில் பேசினார்.