இருப்பது பேரின்பமன்றோ ! - ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் ... அவுஸ்திரேலியா )


               பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன் 
                    புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
image2.JPG              கட்டளகு உடலமைப்பை காணவில்லை
                     கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன் 
               சிரித்துநின்ற செவ்வாயை தேடுகிறேன்
                       சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
               என்றாலும் அவளேயென் இணையேயாவாள் 
                        இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்  ! 

               கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
                     கண்கூட  ஒளிமங்கி  வெகுநாளாச்சு 
               முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ 
                      மூச்சுவிட  அவளிப்போ முனுகுகின்றாள் 
                சுவையாக உணவளித்த அவளின்கைகள்
                       சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
                அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
                         அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு  ! 

              ஓடியாடித்  திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள் 
                    உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
               தேடித்தேடி  நான்கண்ட  தேவியிப்போ 
                      செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள் 
               வாடிவிட்ட  நிலையினிலும்  வடிவாயுள்ளாள் 
                         வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
                என்றாலும் உணவதனை ஊட்டும்போது
                        என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன் ! 

வேறு யாருமல்ல லெனின் மொறயஸ் - பகுதி 8 – ச. சுந்தரதாஸ்

.

லெனின் டைரக்ட் செய்த ஒரு படத்தின் பெயர் ஹித்துவத் ஹித்துவமய் (நினைத்தால் நினைத்ததுதான்) இந்தப் பெயரை தன் குணாம்சத்தின் அடிப்படையிலேயே படத்திற்கும் வைத்திருந்தார். ஏனென்றால் லெனினைப்  பொறுத்தவரை தான் நினைத்ததே செய்வார் என்பது அவருடன் பழகிய அனைவருக்கும் தெரியும்.

சிறுவயதிலிருந்தே தைரியசாலியாகவும், பிடிவாதமிக்கவருமாகவுமே லெனின் வளர்ந்தார். இதனாலேயே தன் தந்தையுடனும் முரண்பட்டு அவருடைய கட்டுப்பாடும் கண்டிப்பும் பிடிக்காமல் வீட்டை விட்டும் வெளியேறினார். இதனால் அவரது தந்தை சாள்ஸ் மொறயஸ் மிகுந்த வேதனையடைந்தார் என்பது உண்மையே!

ஆனாலும் தன் விருப்பப்படிதான் விரும்பிய துறையில் காலடி எடுத்து வைத்து அதில் பிற்காலத்தில் தடம் பதிக்கவும் செய்தார். படப்பிடிப்பின் போதும்  தான் நினைத்ததே அவர் செய்வார்.

காமினி கதாநாயகனாக நடித்த சூரயங்கெத் சூரயா படப்பிடிப்பு மருதானை பாலத்தருகே (1966ம் ஆண்டு) நடைபெற்றுக் கொண்டிருந்தது. காமினி கையில் ஒரு பெட்டியுடன் வில்லன்களின் ஆட்களிடம் இருந்து தப்பி ஒடிவந்து பாலத்தின் மேல் இருந்து குதிக்க வேண்டும். ரிஸ்க்கான காட்சி என்பதால் காமினி குதிக்க மறுத்துவிட்டார். மறுநிமிடம் லெனின் பாலத்திலிருந்து கீழே குதித்துவிட்டார். கூடியிருந்த அனைவரும் காமினி உட்பட அதிர்ந்து போய்விட்டார்கள்.

ஹித்தமித்துரா திரைப்படப் பிடிப்பு கற்பிட்டி கடற்கரையில் நடந்து கொண்டிருந்தது. காமினி உட்பட ஏனைய நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். திடிரென்று அப்பகுதியில் இரண்டு கோஷ்டிகளுக்கு நடுவே கலவரம் வெடித்தது. கையில் கம்பி, கத்தி, வாள் என்று தூக்கிக் கொண்டு மோதிக்கொண்டார்கள்.

நடந்தாய் வாழி களனி கங்கை -- அங்கம் 10 பழையன கழிதலும் புதியன புகுதலும் - ரஸஞானி


தமிழ்மொழி தொன்மையானது. அதற்கு இலக்கிய இலக்கண பாரம்பரியமும் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் நன்னூலில் ஒரு வசனம் வருகிறது. " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்ற அந்த வரிகள் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியை இனம் காண்பிக்கின்றது.
தொல்காப்பியர்  காலம், சங்க காலம், சங்கமருவிய காலம், நவீன இலக்கிய காலம்  என்று காலகட்டங்ளை பிரதிபலித்தவாறு தமிழ்மொழி வளர்ந்து இன்று புதியவடிவம் பெற்றுள்ளது.
இந்த " பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" வசனம்,  மொழிக்கு மாத்திரம் பொருத்தமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் களனி கங்கை தீரத்தில் பல மாற்றங்கள், குறிப்பாக அந்தப்பிரதேச மக்களின் அரசியல் சமூக, பொருளாதாரத்திலும் உற்பத்தி, ஏற்றுமதி,  இறக்குமதி வர்த்தகத்திலும் நேர்ந்து வருகின்றன. இதுபற்றி இந்த அங்கத்தில் பார்ப்போம்.
களனி கங்கை கொழும்பை நெருங்கும் பிரதேசத்திலிருந்து, கிராண்ட்பாஸ்   என்ற இடத்தை அவதானித்தால்  நாட்டின் பொருளாதாரத்திற்கு  வளம்  சேர்த்த மூவினத்தவர்களும்  இரண்டு நூற்றாண்டுக்கும் மேலாக அங்கு  செறிந்து வாழ்ந்திருக்கும் செய்திகளையும் அறியமுடிகிறது.
களனி கங்கையிலிருந்து கட்டிடங்கள், வீடுகள் நிர்மாணிப்பதற்குத் தேவையான மூலப்பொருள் ஆற்று மணல் கிடைக்கிறது. அதன் கரையோரங்களில் கீரை உற்பத்தி நடக்கிறது. அதனையடுத்து  தலைநகர வாசலுக்கூடாக பிரவேசித்தால், பல தனியார் துறை தொழில் நிறுவனங்கள் நீண்ட நெடுங்காலமாக அந்தப்பிரதேசத்தில் இயங்கிவருவதையும் அவற்றை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்துவந்திருப்பதையும் அறிய முடிகிறது.
அவற்றில் சில  நிறுவனங்களை வெளிநாட்டுக்கம்பனிகள் ஆரம்பித்து நிருவகித்துள்ளன.  முக்கியமாக கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் அமைந்துள்ள லிவர் பிரதர்ஸ் என்ற சவர்க்காரம், வாசனைசோப், உட்பட ஆடை சுத்திகரிப்பு தூள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் பெரிய நிறுவனம் பிரபலமானது.
எமது தாயகத்தில்  எமது முன்னோர்களிடத்தில் பல புதிய உணவு நாகரீகத்தையும் கலாசாரத்தையும் நடை, உடை, பழக்கவழக்கங்களையும் அறிமுகப்படுத்தியவர்கள் வெளிநாட்டினரே! அந்நியரின் ஆக்கிரமிப்பு பலதுறைகளிலும்  நூழைந்து,  போர்ட் சிட்டி வரையில்  நீடித்துவருகிறது.
சவர்க்காரத்தின் தொடக்க காலத்தை ஆராயப்புகுந்தவேளையில் பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன.

கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் வரிசையில் -- கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் புதிய கலை, இலக்கிய, ஊடகத்துறை மாணவர் பரம்பரையை உருவாக்க வேண்டியவர்! - முருகபூபதி


பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்கள் பெற்று, பின்னர் பல்கலைக்கழகங்களிலேயே தொழில் வாய்ப்பு பெற்று மாணவர்களுக்கு விரிவுரையாற்றிவரும் எழுத்தாளர்கள் பலரை நன்கறிவேன்.
அவர்களில் பலர் கலை, இலக்கியவாதிகளாகவும் விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்கின்றனர். அவ்வாறு நான் அறிந்த ஒருவர்தான் (கலாநிதி) அம்மன்கிளி  முருகதாஸ்.
1983 தொடக்கத்தில் எமது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டு விழாக்களை நாடுதழுவிய ரீதியில் கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் எம்மிடம் அம்மன்கிளி பற்றி குறிப்பிட்டார்.
ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளை ஆய்வு செய்திருக்கும் அம்மன்கிளி முருகதாஸ் அவர்களை முதல் முதலில் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில்தான் சந்தித்தேன்.
அச்சமயம் அவர் அங்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியிலிருந்தார். யாழ்ப்பாணம்  பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்புப்பாடமாகப்பயின்று தனது இளங்கலை, முதுகலை கலாநிதிப்பட்டங்களை பெற்றவர். இவரது பல்கலைக்கழக ஆசான்கள் இவரை இலக்கிய திறனாய்வாளராக்கி பெருமை பெற்றவர்கள்.
பேராசிரியர் கா. சிவத்தம்பியின் மாணவியான இவர், தனது ஆசான் எழுதிய Drama in Ancient Tamil Society என்னும் ஆய்வு நூலை தமிழாக்கம் செய்தவர். இந்நூலுக்கு, தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறையினால்  பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வரிசையில்  பரிசு கிடைத்துள்ளது.
இந்தத் தகவலை இன்றைய தலைமுறை பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுட்டிக்காண்பிக்க விரும்புகின்றோம்.
சமகாலத்தில் பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்களுக்கு சமகால இலக்கியம் குறித்தோ, தற்பொழுது வெளியாகும் இலக்கிய இதழ்கள் பற்றியோ எதுவுமே தெரியாத ஒருவகை சூனியம் தென்படுவதாக பரவலாகப்பேசப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் பேராதனை  பல்கலைக்கழகத்திற்கு சென்று தமிழ்த்துறையைச்சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடியபோதும் குறிப்பிட்ட தேக்கநிலை சூனியமாகவே எனக்கு  தென்பட்டது.
அங்கிருந்த ஒரு பேராசிரியர் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் தெரிவித்த செய்தியால் சற்று அதிர்ச்சியடைந்தேன்.
அங்குள்ள நூலகத்தில், ரவீந்திரநாத் தாகூர் பற்றிய தகவல்களை மேலதிகமாகத்தெரிந்துகொள்வதற்குச் சென்று, அவர் பற்றிய ஒரு நூலை எடுத்துப்பார்த்தாராம்.

கண் திருஷ்டியும் அறிவியலும்! – 3 ச.நாகராஜன்


 

.
திருஷ்டியைப் பற்றி அறிவியல் முத்தாய்ப்பாக என்ன சொல்கிறது என்பதைக் காண்பதற்கு முன்னர் தமிழர் தம் பழக்கங்களைத் தெரிந்து கொள்வோம்.

கண்ணுக்கு அழகூட்டுவதற்காக மட்டும் தமிழ் மங்கையர் மையைத் தீட்டிக் கொள்ளவில்லை. தன்னைத் தீய பார்வையிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் மையைத் தீட்டிக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு மை தீட்டும் தாய்மார் மறந்து விடாமல் அதே மையினாலேயே குழந்தையின் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைக்க மறக்கமாட்டார்கள்.
சில பொல்லாத கண்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தான் இந்த திருஷ்டிப் பொட்டு.

பாண்டிய இளவரசிகள் சென்ற கப்பல் கவிழ்ந்த போது



.
பழங்கால இந்தியாவில் கடல் வாணிபம் எப்படி நடந்தது என்ற சுவையான தகவல்களை பழைய நூல்கள் தருகின்றன. பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் பாண்டிய இளவரசி மீனாட்சியையும் சூர சேனப் பெண்மணி காஞ்சன மாலையையும் தொடர்பு
படுத்திப் பேசுவதைக் காணலாம்; சூரசேனர் என்பது வட இந்தியப் பகுதியில் வாழ்ந்த மக்கள். துவாரகை (குஜராத்) முதல்- மதுரா வரை ( உத்தரப் பிரதேசம்) ஆண்ட இனம்.  இதை புராணம் என்று ஒதுக்கிவிடலாம். பிற்கால நூல்களிலும் இத்தகைய தொடர்பு நீடித்து வந்தது  சமண மத நூல்களில் காணக்கிடக்கிறது.
(தெற்கிலிருந்து வடக்கே போன பிராமணர்களை அந்தந்த தேசத்தின் பெயர் சொல்லி அழைப்பர்; திராவிட தேசத்திலிருந்து சென்ற பிராஹ்மணர்களை திரவிட் (கிரிக்கெட் வீரரின் பெயர் த்ரவிட்) என்றும் பாண்டிய தேசத்திலிருந்து போன பிராஹ்மணர்களை பாண்டே, பாண்ட்யா (குஜராத்தி பிராஹ்மணர்) என்றும், தெலுங்க தேச பிராஹ்மணர்களை ‘தில்லான்’ (த்ரிலிங்க=தெலுங்க தேச) என்றும் அழைப்பர்.

இலங்கைச் செய்திகள்


மஹிந்தவிற்கு துணை போன பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த சன்மானம்!!!

சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

கர்நாடக சங்கீத இசையில் சாதனை படைத்தவரை சந்தித்தார் ஜனாதிபதி

போர்க்கப்பலை இலங்கைக்கு பரிசளித்த சீனா 

யாழ்ப்பாணக்கல்லூரி நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் - பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 யாழ்ப்பாண மாநகர சபை கூட்டணியின் புதிய உறுப்பினர் தெரிவு 

அச்சுவேலி தேர்த்திருவிழா; வடம் பிடித்த இராணுவ வீரர்கள்

இந்தியாவிலிருந்து தாயை காண வந்த இலங்கை தமிழர் கைது



மஹிந்தவிற்கு துணை போன பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருக்கு கிடைத்த சன்மானம்!!!

25/07/2018 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில்  அரசாங்கத்திடம் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டிற்கு உள்ளான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் இயன் பெய்ஸ்லி பாராளுமன்ற அமர்வுகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

MICHAELITES 20TH ANNIVERSARY MEGA MUSICAL NIGHT 04/08/2018









உலகச் செய்திகள்


பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்

அதிக வெப்பம் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 65 பேர் பலி!!!

சிங்­கத்தின் வாலுடன் விளை­யா­டா­தீர்கள் - ஹஸன் ரோஹானி

காட்டு தீயில் 24க்கும் மேற்பட்டோர் பலி : பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்!!!

கனடாவில் துப்பாக்கி தாக்குதல்- பலர் பலி என அச்சம்

கலாமின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் 

அமெரிக்காவை அழித்துவிடுவோம்; ஈரான் பகிரங்க மிரட்டல்

116 தொகுதிகளில் இம்ரான் வெற்றி; உத்தியோகபூர்வ அறிவிப்பு


பௌத்த துற­வி­க­ளான தாய்­லாந்து குகைச் சிறார்கள்


25/07/2018 தாய்­லாந்து குகை­யொன்றில் சிக்­கிய நிலையில் மீட்­கப்­பட்ட சிறார்­களில் 11 பேர் பௌத்த துற­வி­க­ளாக தற்­கா­லி­க­மாக துற­வறம் பூண­வுள்­ளனர். அதே­வேளை அவர்­களின் பயிற்­று­நரான 25 வயது இளைஞர் முழு­மை­யான பிக்­கு­வாக துற­வறம் பூண­வுள்ளார். இது தொடர்­பான வைபவம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.
தாய்­லாந்தின் வைல்ட் போவர் எனும் 16 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறு­வர்­களும் பயிற்­று­நரும் தாம் லுவாங் எனும் குகைக்குள் கடந்த ஜூன் 23 ஆம் திகதி நுழைந்த பின்னர் வெள்ளம் கார­ண­மாக வெளியே வர முடி­யாமல் தவித்­தனர். 9 நாட்­களின் பின் கடந்த 2 ஆம் திகதி பிரித்­தா­னிய சுழி­யோ­டி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர். அதன்பின் 13 பேரும் வெற்­றி­க­ர­மாக மீட்­கப்­பட்­டனர்.   

தமிழ் சினிமா - கடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம்

கார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன ராசி என்று தெரியவில்லை. எப்போதும் க்ளிக் ஆகிவிடும். பருத்திவீரனில் தொடங்கி, கொம்பனில் கிராமத்து கதையில் ஒரு படி மேலே சென்றார், தற்போது ஹாட்ரிக் கிராமத்து கதையாக கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார், கார்த்தி ஹாட்ரிக் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

ஊரிலேயே எல்லோரும் மதிக்கும் பெரிய இடத்து குடும்பத்தலைவராக சத்யராஜ். இவருக்கு 4 பெண் குழந்தைகள் வரிசையாக பிறக்கின்றது.

ஆனால், நமக்கு ஒரு ஆண் பிள்ளையாவது வேண்டும் என தவமாய் தவமிருக்க, கார்த்தி பிறக்கின்றார்.(தனக்கு ஏன் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்கு சத்யராஜ் விரும்புவதற்கு ஒரு காரணம் வைக்கப்பட்டுள்ளது).
சத்யராஜ் குடும்பம் தான் அந்த ஊரே என்பது போல் அவ்வளவு பெரிய குடும்பம், அவருக்கு ஒரே ஒரு ஆசை தான், தன் குடும்பத்தினரை ஒன்றாக நிற்க வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்க வேண்டும் என்பது தான்.
இந்த நேரத்தில் கார்த்தி தன் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், சாயிஷாவை காதலிக்க, இதனால் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்க, இவர்களை எல்லாம் கார்த்தி எப்படி சமாதானம் செய்து தன் விருப்பத்தை நிறைவேற்றினார் என்பதை எமோஷ்னல் செண்டிமெண்ட் கலந்து சுவாரசியமாக கொடுத்துள்ளார்.

படத்தை பற்றிய அலசல்

கார்த்தி உண்மையாகவே கிராமத்து படம் என்றால் குஷியாகிவிடுவார் போல. பருத்திவீரனில் கூட அழுக்கு லுங்கி, சட்டை அணிந்திருப்பார், கொம்பனில் முரட்டுத்தனமாக கிராமத்து இளைஞன். ஆனால், இதில் சட்டை காலர் கூட அழுக்கு ஆகாமல் செம்ம பந்தாவாக வேஷ்டி சட்டையில் பட்டையை கிளப்புகின்றார். அதிலும் விவசாயிகளுக்காக அவர் கொடுக்கும் குரல் இனி பலரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் தான்.
அதிலும் ஒரு ஸ்டேஜில் கார்த்தி விவசாயிகளின் பெருமையை பேசுகின்றார், அதிலும் பெற்றோர்கள் பிள்ளைகளை இன்ஜினியர் ஆக்க நினைக்கின்றனர், ஏன் நமக்கு சோறு போடும் விவசாயி ஆக்க நினைக்க மறுக்கின்றனர் என அவர் பேசும் காட்சிகள் திரையரங்கமே அதிர்கின்றது.
இவரை தாண்டி சத்யராஜ், பானுப்ரியா, மௌனிகா, விஜி, யுவராணி, சூரி, சரவணன், சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு ஒரு நட்சத்திர பட்டாளத்தையே படத்தில் கொண்டு வந்து பாண்டிராஜ் அசத்திவிட்டார். அதிலும் இத்தனை பேர் இருக்கிறார்கள், மனதில் நிற்பார்களா என்று பார்த்தால் அனைவருமே ஒரு சில இடத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். சாயிஷா மட்டும் படத்தில் இருந்து விலகியே நிற்கின்றார், பசங்க படத்தில் பார்த்த ஷோபி கண்ணு இதில் மிஸ்ஸிங் பாண்டிராஜ் சார்.
சூரி காமெடி ட்ரைலரில் பெரிதாக எடுப்படவில்லை என்றாலும், படத்தில் அவர் வரும் இடங்களில் எல்லாம் ஒன் லைன் கவுண்டரில் விசில் பறக்க வைக்கின்றார். அதிலும் தன் பாட்டியிடம் மெதுவாக விசிறுங்க குளிருது என நக்கல் அடிக்கும் காட்சியெல்லாம் சிரிப்பு சத்தம் அதிர்கின்றது.
படம் முழுவதும் நட்சத்திரங்கள், குடும்ப உறவுகள், பாசம், நேசம், பிரச்சனை, தீர்வு என நாம் பார்த்து பழகி போன டெம்ப்ளேட், வி.சேகர் படத்தை கொஞ்சம் ஆக்‌ஷனுடன் பார்த்தால் எப்படியிருக்கும், அதே போல் தான் இந்த கடைக்குட்டி சிங்கம், என்ன ஆக்‌ஷன் காட்சிகளில் கார்த்தி அடித்து பறக்கவிடுவது கொஞ்சம் ஓவராக தெரிந்தது. அதிலும் வில்லன் கதாபாத்திரம் அத்தனை வலுவானதாக இல்லை.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை நம் கண்முன் கொண்டு வந்துள்ளனர். அதிலும் அந்த ரேக்ளா ரேஸ் செம்ம விருந்து, டி.இமானும் கிராமத்து படம் என்பதால் குஷியாக தன்னிடம் இருக்கும் டெம்ப்ளேட் கிராமத்து டியூனை மக்களுக்கு பிடிக்கும்படி எப்படியோ கொடுத்துவிட்டார்.

க்ளாப்ஸ்

நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம்.
கார்த்தி-சூரி காட்சிகள் படத்தில் பல இடங்களில் நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.
பெண்களின் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்த விதம், இப்படியெல்லாம் கூட பெயர் வைக்கலாமா என்று ஆச்சரியப்படுத்தியுள்ளார் பாண்டிராஜ்
ரேக்ளா ரேஸ் காட்சிகள், பல பேர் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள், அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
வசனம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, குறிப்பாக சொத்து சேர்ப்பதை விட சொந்தங்களை சேருங்கள் எமோஷனலாகவும் சரி, தயவு செய்து சொந்தத்தில் மட்டும் பொண்ணு எடுக்காதீங்க என்ற காமெடி வசனங்களும் சரி, ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

வில்லன் கதாபாத்திரம் படத்தில் வலுவானதாக இல்லை, ஏதோ 10 பேரை அவ்வப்போது அனுப்புகின்றார், அவர்களையும் கார்த்தி அடித்து அனுப்புகின்றார், அந்த காட்சிகள் படத்தில் செட் ஆகவில்லை.
இரண்டாம் பாதியில் ஒரே பிரச்சனையை திருப்பி திருப்பி பேசும்படி காட்டியது.
மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சிறப்பாகவும் எடுத்து பாண்டிராஜ், கார்த்திக்கு ஹாட்ரிக் கிராமத்து வெற்றியை கொடுத்துவிட்டார்.
நன்றி CineUlagam