- கார்­வண்ணன்
24/12/2019  கொழும்பில் உள்ள சுவிஸ் தூத­ர­கத்தில் வீசா உதவி அதி­கா­ரி­யாகப் பணி­யாற்றும் கார்­னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண், கடத்­தப்­பட்டு அச்­சு­றுத்­தப்­பட்­ட­தாக எழுந்த குற்­றச்­சாட்டை, இலங்கை அர­சாங்கம் கையா­ளு­கின்ற விதம் கடு­மை­யான சர்ச்­சை­களை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.
ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ பத­வி­யேற்று ஒரு வாரத்தில் அந்தச் சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. அது­கு­றித்து பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவ­னத்­துக்கு சுவிஸ் தூதுவர், கொண்டு சென்­றி­ருந்தார். நியூயோர்க் ரைம்ஸ் மூலம், ஊட­கங்­க­ளிலும் அந்தச் செய்தி பரவத் தொடங்­கி­யது.
இந்தக் குற்­றச்­சாட்டுத் தொடர்­பாக குற்ற விசா­ரணைத் திணைக்­களம் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக அர­சாங்கத் தரப்பில் இருந்து தகவல் வெளி­யி­டப்­பட்ட சம­நே­ரத்­தி­லேயே, அவ்­வா­றான சம்­பவம் ஒன்று நடக்­க­வே­யில்லை என்று அர­ச­ த­ரப்பிலிருந்து மறுப்­பு­களும் வெளி­வரத் தொடங்கி விட்­டன.