மரண அறிவித்தல்

 .

சுப்பிரமணியம் மயில்வாகனம்

மலர்வு 29.06.1933            உதிர்வு 21.09.2020

யாழ்ப்பாணம், மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா மெல்பேணை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமனியம் மயில்வாகனம் அவர்கள் 21.09.2020 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சுப்பிரமணியம், இரத்தினம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான சுப்பையா, கனகம்மா சுப்பையா தம்பதிகளின் மருமகனும்,

இராஜேஸ்வரி (மெல்பேண்) அவர்களின் பாசமிகு கணவரும், மோகன் (மெல்பேண்), மகேந்திரன் ( சுவிஸ்), ஜீவன் (சுவிஸ்), காலஞ் சென்ற அகிலன், யசோ வரதராசன் (பிரான்ஸ்), குமணன் (இலண்டன்), மதனன் (மதி - மெல்பேண்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  

காலஞ் சென்ற கிருஷ்ணபிள்ளை, பூமலர் தர்மலிங்கம் (மெல்பேண்), பகவதி பாலசுப்பிரமணியம் (உடுப்பிட்டி-இலங்கை), காலஞ் சென்ற தம்பித்துரை, கந்தசாமி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

,

திவாகரன் (சிட்னி), தர்ஷினி மதனன் (மெல்பேண்), சங்கீதா பரோபன் (கனடா), சஞ்சீவன் (கனடா), முகுந்தன் (உடுப்பிட்டி), கவாஷ் (லண்டன்), இராஜேஸ்வரி மோகன் (மெல்பேண்), பவானி மகேந்திரன் (சுவிஸ்), சீதாதேவி ஜீவன் (சுவிஸ்), வரதராசன் (பிரான்ஸ்), ஜெனித்தா குமணன் (லண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமானாரும்,

சுகந்தா (இலங்கை), மயூரா (இலங்கை), மயூரன் (இந்தியா), ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

ரோஷினி, ஹேமப்பிரியா, ஷாலினி, சுவீவன், மதுசன், சீனுஜன், ஜீனுவா, ஜீவிகன், ரதீனா, கீஷோன், கவீனா, சந்தோஷ், சப்ராஷ், யவினாஷ் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும், ஹாசினி அவர்களின் அம்மப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் White Lady Funerals No 25 Cooper Street, Epping Victoria - 3076 Australia. என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரயும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :-

இராஜேஸ்வரி - மனைவி (மெல்பேண்) - +61 469 887 246

மோகன் - மகன் (மெல்பேண்) - +61 400 266 776

இராஜேஸ்வரி - + 61 449 633 717

மதி - மகன் (மெல்பேண்) - +61 430 982 841

தர்ஷினி - மருமகள் - + 61 415 556 849


அண்மையில் தன் 80ஆவது அகவைக்குள் காலடி பதித்திருக்கும்இ சிட்னி - கவிஞர் பல் வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி அவர்களின் அமுத விழாவிற்கான கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் பாராட்டுக் கவிதை.

                                                                   உ

           நூறுவரை உன் ஆயுள் நீளவேண்டும்!


உலகமது தழைத்தோங்க உயர்ந்தே நின்று

        ஓங்குதமிழ் தனைவளர்த்த வழியில் வந்தோன்

நிலமகளைத் தன்தமிழால் நிமிரச் செய்த

        நேசமிகு பண்பாளன் நெறியில் நின்று

பலகவிதை சுவைபடவே ஆக்கி இந்தப் 

         பார்மகிழத் தந்தமகன் பலரும் போற்ற

தளமதனில் பற்சிகிச்சை தன்னில் ஓங்கி

         தரணியது புகழ்ந்திடவே வாழும் ஐயன்.!


ஒப்பற்ற பெரும் புலவர் உலகம் போற்றும்

          ஓங்கு புகழ் சோமசுந் தரனார் தன்னின்

செப்பும் பேர் நிலைத்திடவே செய்த அண்ணல்

          சிறப்போங்கும் இளமுருகர் வழியில் வந்த

தப்பற்ற விழுதாகத் தரணி தன்னில் 

            தன்னைத்தான் நிறுவியவர் தமிழர் போற்ற

இப்புவியில் எழுச்சியுடன் தமிழும் காத்து

            ஏற்றமுற மருத்துவத்தின் எழிலும் காத்தார் 

பாதச் சுவடுகள் .......

 


இயற்றியவர் இளமுருகனார் பாரதிகந்தனை நினைந்து பெற்றோர் இட்ட

சந்திர வடிவேல் எனும்பேர் கொண்டோன்

அந்தமில் தெய்வச் சுந்தரத் தமிழில்

செந்தமிழ்க் கவிதை யாத்து மகிழ்வான் 

இணுவையூர்; பயந்த இன்றமிழ்ச் சான்றோன்

அணுகுவோர் தம்மை ஆதரித் திடுவோன்!

பாமர மக்களுக் கென்றும் உதவி 

தூமனத் துடனே இயற்றும் தூயோன்! 

நிதந்தொழும் தெய்வம் பரசிவ மான

சிதம்பரச் செல்வனைச் சிரமிசை ஏத்தித்

தினமும் தேனுல ராமலர் பறித்தே

மனமும் உவப்ப அர்ச்சித் திடுவோன்!

திருமுறை பண்ணொடு தினமும் பாடிக்

குருவெனத்; திகழ்ந்த யோகரைத் தொழுவோன்

சந்தன நிறத்தோன் சாதிகள் பாராச்

சுந்தரன் வாணிகம் செய்வதில் வல்லோன்  

கனிவாய்ப் பேசும் பண்பில் உயர்ந்தோன்!

மனித நேயம் ஓம்பிடும் மனத்தோன் 

சாந்த சொரூபி தலைக்கனம் இல்லோன்! 

மாந்தர் போற்றும் மாணிக் கமானான்!

விதிப்படி வருவதை விரும்பி ஏற்போன்!

மதிப்பொடு வாழும் நல்லோர் குடிமகன்!

இல்லம் நாடி வருவோர்க் கெல்லாம்

பல்சுவை விருந்து ஓம்பும் பெரியோன்!

இரப்பவர்க் கெல்லாம் இல்லை யெனாது

பரந்த மனதொடு பலதும் ஈய்பவன்

போதும் என்ற நிறைமனங் கொண்டோன்!

சூதும் வாதும் அற்ற மனத்தோன்!..............

அறமதை நினைப்பவன் அமைக்கிறான் நல்வழி ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... ஆஸ்திரேலியா            விதைத்தவன் உறங்குவான் விதை உறங்காது
             கதைப்பவன் மறையினும் கரு மறையாது 
             கொதித்தவன் அடங்கினும் கொதி அடங்காது
             பறித்தவன் பதுங்கினும் பறி  பதுங்காது   ! 


             படித்தவன்  ஒதுங்குவான்  படிப்பு  ஒதுங்காது 
             உழைத்தவன் உழலுவான் உழைப்பு உழலாது 
             நடிப்பவன் பெருகுகினும் நடிப்புப் பெருகாது 
             கொடுப்பவன் காட்டிடான்   கொடுப்பது  காட்டிடும்   !


            படைப்பவன் தெரிகிலான் படைப்பு தெரிந்துவிடும்
            பொறுப்பவன் புகழ்கிலான் பொறுப்பு புகழ்துவிடும் 
            இறப்பதை உணர்கிலான் இறப்பு உணர்த்திவிடும் 
            பிறப்பதை காண்கிலான் பிறப்பு காட்டிவிடும் 

அழகி ஒருத்தி இளநி விற்கிறாள் திருவண்ணாமலையிலே…. இயற்கை எழிலில் கண்ட உயிரோவியம் ! சுபாஷினி சிகதரன்


  

திருவண்ணாமலை ரமணாச்சிரமம் முன் வாயிலிலிருந்து கோயில் செல்லும் திசை நோக்கி பிரதான வீதியால் சிறிது தூரம் நடந்தால் வீதியின் இடப்பக்கத்தில் ஓர் ஒழுங்கை வாயில் போன்ற சிறிய சந்து தென்படும்.  இதற்குள் பிரவேசித்து மேற்கொண்டு நடந்தால் மலையினூடு செல்லும் ஒற்றையடிப் பாதை ரமண மகரிஷி வருடக்கணக்கில் தவம் செய்த விருபாக்ஷி குகை எனப்படும் ஆற்றங்கரையோரக் காட்டுக் குகைக்கு அழைத்துச் செல்லும். ஆறு எல்லாம் வற்றிவிட்டது. வெறும் தடயம் மாத்திரமே உள்ளது. நாம் கடைசியாகத் திருவண்ணாமலை சென்றது கிட்டத்தட்ட நான்கு வருடங்களின் முன். அப்போது வறட்சி நிலை. இப்போது மழைநீர் அதிகரித்து ஆறு ஓரளவுக்கு நடைபயிலக்கூடும். மிக அருமையான இடம்.  எங்கேயாவது சென்றால் ஏதாவது அறியாத சந்துபொந்துகளுக்குள் புகுந்து புறப்படுவது  எனது துணைவர் சிகனின் வழமை. திருவண்ணாமலை இது மூன்றாவது தடவை. காரணம், நான் ஒரு திருவண்ணாமலைப் பைத்தியம். கால்போன போக்கில் நடந்து திரிவோம். இம்முறை மூன்று நாட்கள் திருவண்ணாமலைப் பயணம், யோகி ராம்சுரத்குமார் ஆச்சிரமத்தில் தங்கியிருந்தோம். 

 

  

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு !இணையவழி காணொளி அரங்கு  சங்கத்தின் காப்பாளராக பதவி வகித்தவரான,   மறைந்த  எழுத்தாளர் கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவுக்காக சங்கம் ஒழுங்குசெய்திருக்கும்  நினைவரங்கு நிகழ்ச்சி, சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி ( திருமதி ) வஜ்னா ரஃபீக் தலைமையில்   எதிர்வரும்  ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இணையவழி காணொளி அரங்கின் (Zoom Meeting) ஊடாக நடைபெறும்.  இந்நிகழ்வில்  சிசு. நாகேந்திரன் அய்யா பற்றிய  நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் உரைகளும் இடம்பெறும். சிசு.நாகேந்திரன் எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம்,  நூல் பற்றி திருமதி புஷ்பா சிவபாலனும், பிறந்த மண்ணும் புகலிடமும் நூல் பற்றி திருமதி கலாதேவி பாலசண்முகனும், பழகும் தமிழ் சொற்களின் மொழிமாற்று அகராதி பற்றி திரு. அசோக்கும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பிப்பார்கள்.  அதனையடுத்து,  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்  ஆண்டுப்பொதுக்கூட்டம்  நடைபெறும்.    சங்கத்தின் உறுப்பினர்கள்  இணையவழிக் காணொளியில்  ( Zoom Meeting)  இணைந்துகொள்வதை  உறுதிப்படுத்தவும்.   

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81576308299?pwd=NUNZblp5VlZESHo1ZGJhMy9HTHJkUT09  Meeting ID: 815 7630 8299 Passcode: 231519 

தகவல்:  மு. ஶ்ரீ கௌரி சங்கர்  (செயலாளர் - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)  

தொலைபேசி:  04218 69 644

மின்னஞ்சல்:  atlas25012016@gmail.com                          Srigowri.sanker@gmail.com

கொரொனோ கால உறவுகள் ( சிறுகதை ) முருகபூபதி

 

“ அப்பா… உங்களது மெயிலுக்கு ஒரு தகவல் இணைத்துள்ளேன்.  “ என்றாள் மூத்த மகள். நான் வெளியே புல்வெட்டிக்கொண்டிருந்தபோது மகளின் அழைப்பு எனது பொக்கட்டில் இருந்த கைத்தொலைபேசியில் சிணுங்கியவாறு வந்தது. புல்வெட்டும் இயந்திரத்தை நிறுத்திவிட்டு,   “ என்ன தகவல்…?  “ எனக்கேட்டேன்.   “ நாளைக்கு மகள் ஜானுவின் பிறந்த தினம்.  யாரும் வரமுடியாது.  ஐந்து மைல்களுக்கு அப்பால் எவரும் நகரமுடியாது. கம்பியூட்டரின் முன்னால் அமர்ந்து ஸும்  ஊடாக சந்தித்துப்பேசி பிறந்த தினத்தை கொண்டாடவிருக்கிறோம்.  நீங்கள் நாளை ஃபிரீயாக இருப்பீங்கதானே…?  “   

 

 “  நான், பேத்தியை மிகவும் மிஸ்பண்ணுகிறேன்.  அவளை மட்டுமல்ல,  எனது எல்லாப்பேரக்குழந்தைகளையும் மிஸ்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.  என்றைக்குத்தான் இந்தக் கொரோனா போய்த்தொலையுமோ தெரியாது.  ஆறு ஏழு மாதமாகிவிட்டது குழந்தைகளைப்பார்த்து  “ சொல்லும்போது எனக்கு தொண்டை அடைத்தது. கண்கள் கலங்கின. சிரமப்பட்டு அடக்கினேன்.  “  என்னப்பா செய்யிறது.  நானும் அவரும்கூட வீட்டிலிருந்துதான் ஒன்லைனில் வேலைசெய்கிறோம். ஆளுக்கொரு அறையை எடுத்துக்கொண்டு, காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணிவரையும் அசையமுடியாத வேலை.  பிள்ளைகள் இருவருக்கும் தெரியும்தானே…?  அவர்களுக்கும் படிப்பு வீட்டிலிருந்துதான்.  ஒன்லைன் ஸ்டடி.  அவர்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.  வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது.   

ஆங்கிலத்தில் நடேசனின் நாவல் King Asoka’s Veterinary Hospital தனது மொழிபெயர்ப்பு நூலை காண்பதற்கு முன்பே விடைபெற்ற யுகமாயினி சித்தன் ! உலகில் முதலாவது விலங்கு மருத்துவமனை அமைத்த அசோக சக்கரவர்த்தி !! முருகபூபதி


 

 அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும்  விலங்கு மருத்துவர் நடேசன்,  கடந்த மூன்று தசாப்த காலமாக இலக்கியப் பிரதிகளும் ( சிறுகதை, நாவல்,  பயண இலக்கியம் ) பத்தி எழுத்துக்களும், தமது தொழில் சார்ந்த புனைவுசாராத படைப்புகளையும் எழுதிவருபவர். இவரது சிறுகதைகளும்  நாவல்களும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர் எழுதிய வண்ணாத்திக்குளம்,  உனையே மயல்கொண்டு ஆகிய நாவல்கள் ஆங்கிலத்திலும்,  வண்ணாத்திக்குளம் ,  மலேசியன் ஏர்லைன் 370  ( கதைத் தொகுதி )   என்பன  சிங்கள மொழியிலும்  வெளிவந்துள்ளன. உனையே மயல்கொண்டு நாவலும் Lost in you  என்ற பெயரில் ஆங்கிலத்தில் வரவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் என்ற எனது கட்டுரையில் ஏற்கனவே இந்தத் தகவல்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கின்றேன்.  

 

வியப்புமிகு உயிர் அற்ற உடல்கள் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .அண்மையில் ஒரு அம்மையார் என்னிடம் கூறினார், தனது பேரப்பிள்ளைகளிடம் கூறியுள்ளாராம், தான் இறந்தபின் திரும்பவும் குழந்தையாக அவர்களுக்கே வந்து பிறப்பேன் என, ஏன் பெரியவர் ஆன எமக்கு எமது வாழ்வு முடிந்து விடுகிறது. நான் என்ற ஒன்று இல்லாமல் போய்விடுகிறது என்பதை மனம் ஏற்பது இல்லையா? அதுவும் நான் உங்கள் குழந்தையாக வந்து பிறப்பேன் எனும்போது, எமது உறவுகளை பிரிய எமக்கு மனம் இடம் கொடுப்பதில்லை. இப்படியான எமது மனதுக்கு அமைதி அளிக்கத்தான் இந்த சித்--- மறுபிறப்பு தத்துவம் தோன்றியதோ, மறுபிறப்பு நாம் அழிந்து போகிறோம் என எண்ண விரும்பாத மனித மனதிற்கு ஆறுதல் அளிக்கிறதா?

நாம் திரும்ப பிறப்போம் என்ற நம்பிக்கை, ஏன் ஆசை எனவே வைத்துக் கொள்வோம் இது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த எகிப்திய மன்னர்களான Faroக்கள் தமது மறுபிறப்பிற்காக கட்டிய மாபெரும் பிரமிட்டுகளை காண்கிறோம். இந்த பெரிய பிரமாண்ட மலை போன்ற கட்டிடத்தில் உள்ள கற்களை நேராக இந்த பூகோழ உருண்டையில் இருந்து சந்திரனை நோக்கி அடுக்கினால் அது சந்திரனையே போய் அடையுமாம். நான் இதை ஏதோ கற்பனையில் கூறவில்லை. ஆராய்ச்சியாளர்களின் முடிவே இது.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 32 – மகுடி – சரவண பிரபு ராமமூர்த்தி


மகுடி – ஊதுகருவி  பாம்பாட்டிகள் பயன்படுத்தும் தொன்மை இசைக்கருவி மகுடி. இது துளைக்கருவிகள் அல்லது காற்று இசைக்கருவிகள் வகையைச் சேர்ந்தது. மகுடி இசைத்து பாம்பாட்டிகள் வித்தை காட்டும் சிற்பங்கள் தமிழக கோவில்களில் காணக்கிடைகின்றன. இக்கருவி அன்று முதல் இன்று வரை அதே அமைப்பில் தொன்மை மாறாமல் இருக்கின்றது. அம்பாசமுத்திரம் காசிபநாதர் கோயில் திருச்சுற்றிலுள்ள பாம்பாட்டி புடைப்பு சிற்பம் உள்ளது. இது 10ஆம் நூற்றாண்டு காலத்தியது. திருச்செங்கோடு மாதொருபாகர் கோவிலிலும் இவ்வாறான சிற்பம் உள்ளது.  உலர்ந்த காட்டு சுரைக்காய்(மகுடி சுரைக்காய்) எனப்படும் தாவரத்தின் காய் இதற்குப் பயன்படும். நன்கு முற்றிய சுரைக்காயின் கழுத்துப் பகுதி நீக்கப்பட்டு அதில் இரண்டு மூங்கில் குழல்கள் பொருத்தப்படும். இசையை ஏற்படுத்தக் கூடியவாறு அதில் ஏழு துளைகள் வரை இடப்படும்.  தேன்மெழுகில் கரித்துளை கலந்து சுரைக்காயை மூங்கிலுடன் இணைக்கும் பகுதியில் காற்று ஒட்டைகள் அடைக்கப்படும். இதே மெழுகில் சில அலங்கார வேலைகளும் செய்யப்படும்.  தமிழகம், இலங்கை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் இது பயன்பாட்டில் உள்ளது. சுமார் 30 ஆண்டுகள் முன்பு வரை சாதாரணமாக பாம்பாட்டிகளை தமிழகத்தில் காண முடிந்தது. தமிழகத்தில் பாம்பு பிடித்து வித்தை காட்டுதல் தடை

செய்யப்பட்ட பிறகு பாம்பாட்டிகள் அருகி விட்டார்கள். வேறு தொழில்களுக்குச் சென்று விட்டனர். வேறு தொழில் அறியாதவர்கள் வெறும் மகுடி இசைத்து யாசகம் பெறுகிறார்கள்.   மகுடியின் இசைக்கு மயங்காதவர்கள் இல்லை. மகுடி இசையின் நீட்சியாகத் தான் கோவில் விழாக்களில் இன்றளவும் நாதசுரத்தில் மகுடி இசைக்கும் வழக்கம் உள்ளது. என்ன தான் செவ்வியல் ராகங்கள் இசைக்கப்பட்டாலும் காவடி சிந்து மற்றும் மகுடி இசைக்கப்படும் பொழுது தான் வெகுமக்கள் உற்சாகமடைகின்றனர். ஏற்கனவே அழிந்துவிட்ட அல்லது ஒன்று இரண்டு இடங்களில் மட்டுமே காணப்படும் மகுடி இசையை நாம் எப்படிக் காப்பாற்ற போகிறோம்? விலங்குகள் வேட்டை தடை செய்யப்பட்ட பிறகு வேட்டையோடு தொடர்புடைய எக்காளக்கூத்து போன்ற நாட்டார் கலைகள் அழிந்தன. இதே நிலை தான் பாம்பாட்டிகள் மற்றும் அவர்களின் மகுடி இசைக்கும் இன்று. 

  
இவர்களைக் கண்டால் நாம் அவர்களை ஆதரிக்கலாம்.  காணொளி: https://www.youtube.com/watch?v=9TWhZQRhbho https://www.youtube.com/watch?v=fyF8IpDaBQs https://www.youtube.com/watch?v=kYWPpoyI87I https://www.youtube.com/watch?v=uCBPAngACGU https://www.youtube.com/watch?v=7Hspdoezj-M  ¬-சரவண பிரபு ராமமூர்த்தி


போற்றிடும் வாழ்வு புலருமே நாளும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


                குறையும் கறையும் குறளால் அகலும்

               நிறையும் பொறையும் படித்தால் பதியும் 

               துறையும் தொழிலும் அமைந்தால் நலமே 

               அறையும் சிறையும் அடிமை தருமே 

 

               கேளா மக்கள் கீழ்மை தருவார்

               தாளாக் கோபம் தக்கதை அழிக்கும் 

               வாழா மனிதர் மரமென ஆவார்

               வாழக் குறளைப் படிப்பது நலமே 

 

               தக்கது அகலின் தகைமைகள் மறையும் 

               பக்குவம் நிறையின் பண்புகள் மலரும்

               பெற்றிட யாவரும் பெருந்துயர் படுவார்

               பெறுமதி வந்திடின் பேரின்ப மடைவார் 

தியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

 


    

இலங்கைச் செய்திகள்

 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதம்

20ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பு

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட சிவாஜிலிங்கம் கைது

விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

கைதான சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் செப். 23 வரை தடுப்பில்

விக்கி - டெனிஸ் விவகாரம்; இருதரப்பு புரிந்துணர்வு இன்மையே இத்தனை நாள் தாமதத்துக்கு காரணம்

ஷானி அபேசேகரவுக்கு ஒக். 02 வரை வி.மறியல் நீடிப்பு

கடவுச்சீட்டு உள்ளிட்ட இரகசிய ஆவணங்கள் அச்சிடுவதில் மாற்றம்

வாகனங்கள் மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்கள் இறக்குமதி தடை

மோடியின் 70 ஆவது பிறந்த தினம்: பிரதமர் மஹிந்த தொலைபேசியில் வாழ்த்து

யாழ். மாவட்ட வீட்டுத்திட்ட பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு


12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நியமனக் கடிதம்

ஜனாதிபதியினால் 12 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்-12 New High Court Judges Appointed

பன்னிரெண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (14) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

உலகச் செய்திகள்

 அமெரிக்கா மீது சீனா கண்டனம்    

ஜப்பானின் புதிய பிரதமராக யொஷிஹிடெ சூகா

நஞ்சூட்டப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தாய்நாடு திரும்ப முடிவு

லிபியாவில் அகதிப் படகு கவிழ்ந்து 24 பேர் பலி

கொலம்பியாவில் ஆக்கிரமிப்பாளர் சிலையை கவிழ்த்த பழங்குடியினர்

வெறுப்புப் பேச்சினை எதிர்த்து ஒருநாள் பேஸ்புக் புறக்கணிப்பு

மத நிந்தனை குற்றச்சாட்டில் நைஜீரிய சிறுவனுக்கு சிறை

இஸ்ரேலுடன் பஹ்ரைன், ஐ.அ.இராச்சியம்; வெள்ளை மாளிகையில் அமைதி ஒப்பந்தம்

கொவிட்-19 தடுப்பு மருந்து: ஏற்கனவே பாதியை வாங்கிய உலகின் செல்வந்த நாடுகள்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஹோட்டல் குடிநீரிலேயே விசம்


அமெரிக்கா மீது சீனா கண்டனம்    

சீனா அதன் அணுவாயுத, ஏவுகணைத் திறனை மேம்படுத்துவதாகக் குறைகூறும் அமெரிக்க அறிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் தேசியப் பாதுகாப்பு, இராணுவத்தை நவீனமயமாக்குதல் ஆகியவை குறித்து அமெரிக்கா மீண்டும் அவதூறு பேசுவதாக சீன பாதுகாப்பு அமைச்சு சாடியது.

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 17 - நடு இரவில் - சுந்தரதாஸ்

.தமிழ் திரையுலகில் பல புரட்சிகரமான படங்களை உருவாக்கிய இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் ஆனால் அவருக்கு முன்பே இன்னும் ஒரு பாலச்சந்தரும் பல புதுமையான படங்களை இயக்கி ரசிகர்களை பிரமிக்க வைத்தார் அவர்தான் வீணை வித்துவான் எஸ் பாலச்சந்தர். இவர் டைரக்ட் செய்த பாடல்களே இல்லாத அந்தநாள் படம் வித்தியாசமான படமாக அமைந்தது. அதுபோல் அவர் உருவாக்கிய அவனா இவன், இது நிஜமா, பொம்மை போன்ற படங்களும் மாறுபட்ட படைப்புகளாக ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்டன.

கர்நாடக இசைத் துறையில் வீணை வித்துவானக கோலோச்சிய பாலசந்தர் திரையுலகை பொறுத்தவரை மர்மப் படங்களை உருவாக்குபவராக திகழ்ந்தார். இவருடைய படங்கள் எல்லாம் அடுத்தது என்ன என்று சஸ்பென்சாக இருக்கும். அந்தவகையில் 1970 ஆம் ஆண்டு எஸ் பாலச்சந்தர் தயாரித்து இயக்கிய படம் நடுஇரவில்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் 31 புவியெங்கும் தமிழ்க்கவிதைத் தொகுப்பினை இலக்கிய உலகிற்கு வரவாக்கிய மாலன் ! எனது ஆச்சி சேமித்த பிடி அரிசி !!எனது  ஆச்சி பற்றி முன்னரும் சொல்லியிருக்கின்றேன்.  அந்தக்கால ஆச்சிமார்  சிக்கனமாகவும்  கச்சிதமாகவும்  செலவுசெய்து குடும்பத்தின் தேரை நகர்த்துவதில் கைதேர்ந்தவர்கள். 

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மணியோடர் பொருளாதாரம் என்பர்.  அதற்குக்  காரணம் இருந்தது.  அங்கே படித்து அரசாங்க உத்தியோகம் பார்க்க, தென்னிலங்கை சென்ற ஆண்கள்,  மாதம் முடிய, மணியோடரில் அனுப்பிவைக்கும்  சம்பளப்பணத்தை நம்பியே, வீட்டின் தேவைகளை பெண்கள் கவனித்தார்கள். இது பற்றி எனது நண்பர் எஸ்.பொ. எழுதிய சடங்கு நாவல் பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். 

எனது தந்தையார் தென்னிலங்கைக்கு  புகையிலை வர்த்தகம் தொடர்பாக அடிக்கடி சென்று வருபவர்.  அவர் கொண்டுவரும் பணத்தை நம்பித்தான் எங்கள் ஆச்சி ( அம்மா) குடும்ப வண்டிலை செலுத்துவார். பூர்வீக சொத்துக்கள் ஏதுமில்லாத மத்தியதரக் குடும்பம் எங்களுடையது. அதனால்,  ஆச்சி மிகவும் சிக்கனமாகவே செலவுசெய்வார். அத்துடன் பசியோடு வரும் எவருக்கும் உணவளித்து அனுப்பிவைப்பார்.  ஆச்சி தினமும் உலையில் அரிசியை போடும் முன்னர்,  ஒரு பிடி அரிசியை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் போடுவார்.  அன்றாடம் நடக்கும் இந்நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கின்றேன். இத்தகைய  நடைமுறை சிங்கள மக்களிடமும் இருந்ததாக பிற்காலத்தில்

அறிந்துள்ளேன்.  உங்களில் பலருக்கும்  1971 ஆம் ஆண்டு காலத்தில் இலங்கையில் நடந்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கின்றேன். அவர்கள்  ஏழை, மத்தியதர குடும்பங்களிலிருந்து பொருளாதார ஏற்றதாழ்வுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப்போராட வந்தவர்கள். அந்த இயக்கம் தமிழில் மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கியது.  People Liberation Front என ஆங்கிலத்திலும் ஜனதா விமுக்தி பெரமுன என்று சிங்களத்திலும் அழைக்கப்பட்ட இந்த இயக்கத்திலும்  ஒரு நடைமுறை இருந்ததாக அறிகின்றேன். அதாவது அந்த இயக்கத்தின் இளைஞர்களின் தாய்மார் தினமும் சமைக்கும்போது,  உலையில் அரிசி இடுவதற்கு முன்னர் ஒரு பிடி அரிசியை எடுத்து சேமிப்பில் வைப்பார்களாம். அவ்வியக்கத்தின் இளைஞர்கள், சில நாட்களின் பின்னர் வீடு வீடாகச்சென்று அவ்வாறு சேமிக்கப்பட்ட அரிசியை சேகரித்துக்கொண்டு காடுகளுக்குள் சென்று தலைமறைவாக இருக்கும் இயக்கத்தவரின் சமையலுக்கு கொடுத்து பசிபோக்குவார்களாம். 


 தென்னிலங்கை பெரும்பான்மை இன மக்களில் கணிசமானவர்கள் மூன்று வேளையும் சோறு உண்பவர்கள் என்பதையும் அறிந்துள்ளேன். ஶ்ரீமா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு வந்தபோது, அவர்,                                                                                 “  சந்திரமண்டலத்திலிருந்தாவது அரிசியை இறக்குமதி செய்து தருவோம்  “ எனச் சொன்னதை,  எதிர்க்கட்சிகள் எள்ளிநகையாடிப்பேசியதை அறிந்திருப்பீர்கள். எங்கள் ஆச்சியும் தினமும் பிடி அரிசி எடுத்து சேமித்ததை பார்த்துவிட்டு,   “ ஏன்… அப்படி செய்கிறீர்கள் ..?  “ எனக்கேட்டபோது,  அவர்கள் சொன்ன வாழ்க்கைத் தத்துவம் என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. ஆச்சியின் தயாள சிந்தனை எமக்கு முன்னுதாரணம். நான் தற்போது வாழும் புகலிடத்தில் Mc Donald’s, KFC, Hungry jacks, Subway   முதலான அவசர உணவு வகையறாக்களைப்  பார்த்துவிட்டு,  எங்கள் ஆச்சியின்  அன்றைய  உளப்பாங்கு பற்றி எனது பேரக்குழந்தைகளிடம் சொன்னால் எடுபடுமா..? என்றும் எண்ணிப்பார்க்கின்றேன். 

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 09 தீர்க்கதரிசனம் இல்லையேல் தீர்வுகளும் இல்லை ! இலக்கியத்தோடு இணைந்த மாணவர் இயக்கம் !

         ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு  மிக மிக அவசியமான தேவை தீர்க்கதரிசனம்.  தமிழ்

சமூகத்தில் இது விடயத்தில் எமக்கு முன்னுதாரணமாக திகழ்பவர் மகாகவி பாரதி. இமயமலையில் எம்பெருமான் சிவன் வீற்றிருக்கிறார் என்றும்  அவரது உச்சந் தலையிலிருந்துதான் கங்கை ஊற்றெடுத்து பீறிட்டு   வற்றாத ஜீவநதியாக வருகிறாள் என்றும்   எமது முன்னோர்கள் சொல்லிக்கொண்டிருந்தபோது,  வெள்ளிப்பனி மலையில்  மீதுலாவுவோம் என்று சொன்னவர் பாரதி.  சந்திரனில் அவ்வையார் வடை சுடுகிறார் என்று சொல்லி குழந்தைகளை பெற்றவர்கள் நிலவுகாண்பித்து சோறூட்டுவதற்கு  பேக்காட்டியபோது,  சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றார். தெருக்கூட்டுபவர்களை தோட்டி எனவும் தாழ்த்தப்பட்டவர்கள் எனவும் சமூகம் ஒதுக்கிவைத்தபோது,  “ தெருக்கூட்டும் சாத்திரம் கற்போம்  “ என்றவர் பாரதி. வெளிநாடுகளில் அதுபோன்ற தொழிலுக்கு Commercial Cleaning Course & Services எனப்பெயர்.  நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த நீர்கொழும்பூரிலும் எமது தீர்க்கதரிசனமான ஒரு செயல்  1954 இல் நிகழ்ந்தது.  எனது இலக்கிய - ஊடகத்துறை வாழ்வோடு அந்த நிகழ்வும் தொடர்புபட்டது.  கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழ்ந்த எங்கள் நீர்கொழும்பூரில் வாழ்ந்த சைவசமயத்தைச்சேர்ந்த

தமிழ் மக்களின் பிள்ளைகள் படிக்கச்சென்றது கத்தோலிக்கப் பாடசாலைகள்தான். எனது அம்மா,  தனது கல்வியை நீர்கொழும்பு நியூஸ்ட்ரட்  கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் கற்றவர். எனது தாய் மாமனார் அங்கே பெரியமுல்லை என்ற பிரதேசத்திலிருந்த அல்கிலால் வித்தியாலயத்தில் கற்றவர். எனது அக்கா, கடற்கரை வீதி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் மாமாவின் மகள் ஆவேமரியா மகளிர் பாடசாலையிலும் மாமாவின் மூத்த மகன் புனித மரியாள் வித்தியாலயத்திலும் கற்றுக்கொண்டிருந்தார்கள். இந்நிலைதான் 1954 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்த நிலை.  கடற்கரை வீதியில் மூன்று கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருக்கின்றன.  திருவிழாக்கள்,  வருடாந்த ரதோற்சவங்கள்  இடம்பெறுகின்றன.   அதே வீதியில்    இந்து வாலிபர் சங்கம் ஒரு கட்டிடத்தில் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் முன்பாக அரசமர நிழலில் இயங்கியது. அதில் அங்கம் வகித்தவர்கள், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட கைதிகள் வணங்குவதற்காக ஒரு சிறிய கிருஷ்ணர் கோயிலையும் நிர்மாணித்தார்கள்.  தங்கள் சமயத்தைச்சேர்ந்த பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலையில் பரிசுத்த வேதாகமத்தை படித்து திரும்புகிறார்கள்,  அதனால்,  சைவசமயத்தை மறந்துவிடுவார்களே என்ற அச்சத்தில்,  குறிப்பிட்ட இந்து வாலிபர் சங்க மண்டபத்தில்  ஞாயிற்றுக்கிழமைகளில்  சைவசமயம் பற்றி சொல்லிக்கொடுக்கவும், தேவாரம், சிவபுராணம்  பராயணம் செய்யவும் ஏற்பாடு  செய்து,  வகுப்பு நடத்த முன்வந்தனர். 

மழைக்காற்று ( தொடர்கதை ) --- அங்கம் 53 முருகபூபதி


அபிதா,  குழந்தையைப்போன்று வீதியின் இருமருங்கையும் வைத்த விழி வாங்காமல்

பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்கு முன்னர் என்றைக்குமே பார்த்திராத வீதியில் அவள் கண்ணில் தென்பட்டவை  வாகனத்தின் வேகத்தினால் பின்னோக்கி விரைந்து நகர்ந்தன. அருகிலிருந்த ஜீவிகா,  கைத்தொலைபேசியில் முகநூலில் மூழ்கியிருந்தாள். சாரதியிடம்,  அபிதா அடிக்கடி  “அண்ணை… அது என்ன…. இது என்ன… “  கைநீட்டிக்காண்பித்த  இடங்களை கேட்டுத் தெரிந்துகொள்வதையும் சாரதி ரசித்தார்.   சாரதி, கழுத்தை திருப்பி,   “ நீங்கள் முன்பு இந்த கொழும்பு ரோட்டில் போனதே இல்லையா..?  “ எனக்கேட்டார்.  “  எங்கே அண்ணன்… வாழ்க்கையில் முதல் தடவையாக இப்போதான் இந்த வீதியால் வருகிறேன்.   “    ஜீவிகாவை வழக்கமாக பணிக்கு அழைத்துச்செல்லவரும்  வாகனம், அன்று அபிதாவையும் ஏற்றிக்கொண்டது. ஜீவிகாவின்  சுடிதார் துப்பட்டாவிலிருந்து மலர்ந்த பெர்ஃபியும் மணம்  அபிதாவின் நாசியை உரசியது.  சாரதியினதும் அபிதாவினதும் உரையாடலை ரசித்து மனதிற்குள் சிரித்துக்கொண்டே ஜீவிகா முகநூலில் மூழ்கியிருந்தாள்.  “  இதுதான் விமான நிலையத்திற்கு திரும்பும் ரோட்டு .  இப்போது நாங்கள்,  வலதுபக்கத்தால் கொழும்புக்கு அகலமான ரோட்டில் ஏறப்போகிறோம் “   சாரதி காண்பித்த இடப்பக்கத்தை அபிதா பார்த்துவிட்டு,   “ இதால போனால் ஏயார்போட் வருமா..?  அண்ணை “ எனக்கேட்டாள்.  “  ஓம். வரும்.  நீங்கள் போனதில்லையா…?   “ எனக்கேட்டாள் ஜீவிகா.  “  எங்கேயம்மா…  இதுவரையில் நான் அதனைப் பார்த்ததேயில்லையே… அதற்கான சந்தர்ப்பமும் வரவில்லை.  
வடபகுதிப் பிள்ளைகளை முன்பெல்லாம்  அவர்கள் படிக்கும் பாடசாலைகளிலிருந்து  வெளியூருக்கு

அழைத்துவந்து காண்பிக்கும் சுற்றுலா முறை இருந்தது.  போர் தொடங்கியதும் அதெல்லாம் பழைய கதையாகிவிட்டது.  முன்பே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன்தானே…  உங்கட நிகும்பலையூரையே நான் முன்னர் பார்த்திருக்கவில்லை.  அன்றைக்கு  நான் இரவு பஸ்ஸில் வரும்போது கண்ணுறங்காமல்தான் வந்தேன்.  எங்கே தவறான இடத்தில் இறங்கிவிடுவேனோ என்ற பதட்டத்தில் தூக்கமே வரவில்லை.    அன்று நான் நிகும்பலையை பார்க்க வந்ததும் உங்கட புண்ணியத்தில்தான். இப்போது கொழும்பு பார்க்கச்செல்வதும் உங்கட புண்ணித்தினால்தான் அம்மா.  “  சாரதி, அதனைக்கேட்டதும்  நெகிழ்ந்துவிட்டார்.   ஜீவிகாவை அழைத்துச்செல்ல வரும் சந்தர்ப்பங்களில் பல தடவை அபிதாவின் கைப்பக்குவத்தில் தேநீர் அருந்தியிருக்கும் அவருக்கு அபிதா மீது பச்சாதாபம் வந்தது.  “  எயார்போட் பார்த்ததில்லை.  கொழும்பு வீதியில் சென்றதில்லை.   கொழும்பையே வாழ்நாளில் பார்த்ததில்லை.  ஆனால், இன்றைக்கு ரி.வி.யில் தோன்றப்போகும் அதிசயம் எங்கட அபிதாவின் வாழ்வில் நடக்கப்போகுது அண்ணை. தெரியுமா..?  “ எனச்சொன்ன ஜீவிகா, அபிதாவின் மடியில் செல்லமாகத்தட்டினாள். தனக்கு முன்னால் இருக்கும் கண்ணாடியூடாக சாரதி அபிதவை பார்த்தார்.  வன்னியின் வட்டத்துக்குள்ளேயே  தனது  வாழ்க்கை குறுகியிருந்துவிட்டதை எண்ணிப்பார்த்து  அபிதா வெட்கமுற்றவாறு,  தொடர்ந்தும்  அகன்ற வீதியின் இருபுறத்தையும் பார்த்துக்கொண்டிருந்தாள். அருகிலிருந்த ஜீவிகா, கைத்தொலைபேசியை அணைத்துவிட்டு கண்ணயர்ந்தாள்.   “ அண்ணை ,  உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்.  “ என்று அபிதா கேட்டாள்.  “ இரண்டு.  ஒரு ஆண், ஒரு பெண். ஆஸ்திக்கு ஒன்று  ஆசைக்கு ஒன்று அவ்வளவுதான்.   உங்களுக்கு…?   “   “ ஆஸ்தியும் இல்லை, ஆசையும் இல்லை. வேறு எதுவுமே இல்லை.