அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!! - வித்யாசாகர்

.

நான்
முழுதாகப் படித்திடாத
புத்தகம் நீ;
அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத
நெருப்புக்குச்சிகள் நாம், 
உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத
இரவையும் பகலையும்
வாழாமலேயே
விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் 
போயிருக்கிறாய் நீ, 
நான் வேறேதேதோ பேசி
பேசி -
நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..

உன் சிரிப்பு
காற்றில் சலசலத்தபோது
எப்படியோ
கண்களை மூடிவிட்டிருக்கிறேன்
நீ காத்திருந்து காத்திருந்து
பேசியதையெல்லாம் -
தூரத்தில் பார்த்துவிட்டு
தெருமுனை திரும்பாமலே போயிருக்கிறேன்

இனிதே நடந்த இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2016

.


இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2016 நிகழ்வு இன்று 30 10 2016 இரவு இடம் பெற்றது. சுப்ப சிங்கர் பாடகர் சத்தியபிரகாசும் சோனியாவும் நிகழ்வில் சிறப்பு பாடகர்களாக கலந்து கொண்டு பாடினார்கள். இவர்களோடு உள்ளூர் பாடகர்கள் பலர் சேர்ந்து பாடி ஒரு நல்ல இசை நிகழ்வை கொடுத்தார்கள். இந்த நிகழ்விற்கு சக்தி இசைக் குழுவினர் இசை வழங்கினார்கள்.

இந்து மகளிர் கல்லூரியின் மூன்று மாடிக் கட்டிடத்திற்காக  இந்த இசை நிகழ்வு இடம் பெற்றது . துர்க்கை அம்மன் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு மண்டபம் நிறைந்த மக்கள் வருகை தந்திருந்தார்கள்.  திருமதி கலைச்செல்வி குகசிறி தலைமை உரையை வழங்கினார். இளம் தலை முறையினரான அபிதேவ் மற்றும் வருணி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆரம்பித்து வைத்தார்கள் . தொடர்ந்து மகேஸ்வரன் பிரபாகரன் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 மங்கள விளக்கை திருமதி ஜெகநாதனும் திருமதி கதிகாமநாதனும் ஏற்றி வைத்தார்கள்.


வானமுதத்தின் வண்ணத் தமிழ்மாலை 06 11 2016

.

அம்மா அரசியலுக்குப்பின்னாலிருக்கும் தீவிர விசுவாசம் By முருகபூபதி

.

அம்மா  அரசியலுக்குப்பின்னாலிருக்கும்   தீவிர விசுவாசம்
அண்ணாத்துரையின்  அறைகூவலை தவறாக அர்த்தப்படுத்தும்  தொண்டர்கள்
                                                                           முருகபூபதி
" அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு" என்ற பாடலை தனது  சொந்தக்குரலில்  பாடி  நடித்தவர்,  தமிழகத்தின் அம்மாவாகவே அழுத்தமாக பதிவாகிவிட்டார்.
எம்.ஜீ.ஆரின் அடிமைப்பெண் படத்தில் அவர் இரட்டைவேடஙகள் ஏற்றிருந்தார்.  1969 ஆம் ஆண்டில் இந்தப்படம் வெளியானது. கூனிக்குறுகி அப்பாவியாக தோன்றும் கதாநாயகனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டி அவனை வீரனாக்குவார்.
ஆனால், காலம் கடந்து, இன்று அவர் அரசியலில் யாருக்கு தன்னம்பிக்கை ஊட்டியிருக்கிறார்...? எவரை அடிமைப்படுத்தி குனிக்குறுக வைத்துள்ளார் என்பதை பார்க்கும்போது, சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பகுத்துப்பார்க்க  முடியவில்லை.


நான் சாத்தான்குளம் அப்துல் ஜபார் பேசுகிறேன் - Kana Praba.

என்னுடைய வானொலி ஊடக வாழ்வில் கடல் கடந்து தொடர்பில் இருக்கும் மிகச் சில ஊடக ஆளுமைகளில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இருப்பவர் பெருமதிப்புக்குரிய அப்துல் ஜபார் அவர்கள்.
இந்தியத் தமிழர், இலங்கைத் தமிழர் என்ற வேறுபாடுகளை அப்துல் ஜாபர் போன்ற மிகச் சிலரே களைந்து தமிழர் என்ற பொதுமையோடு இயங்குகிறார்கள். அவர் மேடையில் மட்டுமே நடித்திருக்கிறார்.

அறுபது ஆண்டுகளைக் கடந்த ஊடகப் பணி, அதைத் தாண்டி மனித நேயராக எம் தமிழ் உறவுகளின் சுதந்தர வேட்கையை தன் உணர்வாகக் கொண்டு இயங்குபவர்.
வாராந்தம் இந்தியக் கண்ணோட்டம் என்ற தொகுப்பை இரு தசாப்தங்களைக் கடந்து புலம்பெயர் வானொலிகளுக்காக ஆரம்பத்தில் இருந்த அதே துடிப்போடு கொடுப்பவர். 

இஸ்லாமியப் பெருமக்களின் புனித நோன்பு காலச் சிறப்புப் பகிர்வு, அரசியல் கருத்தாடல், தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் காலத்தில் நேரடிப் பகிர்வுகள் என்று புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் வானொலிகளுக்கான அவரின் பங்களிப்பாக நீண்ட காலம் தொட்டு வழங்கி வருகிறார். ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம் இவருக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவித்தது. இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு அப்துல் ஜபார் அவர்கள் குறித்த அறிமுகமாக இருக்கிறது. ஆனால் அதையும் தாண்டிய அவரின் ஊடகத் துறை அனுபவம் நீண்டது.

திருப்புகழ் விழா 06 11 2016

.

பண்டிகை தந்ததொரு பாடம் - தேமொழி

.

சிலர் உயிர்த்தெழுந்த நாளை உலகம் கொண்டாடும்
சிலர் உயிர்துறந்த நாளை அகிலம் கொண்டாடும்
நாம் வாழும் வாழ்க்கை நிர்ணயிக்கும்
நம் வாழ்விற்குப் பிறகு பெறும் மரியாதையை
நல்லவர் மாண்டால் துக்கம் சூழ்வதும்
தீயவர் மாண்டால் துயரம் நீங்குவதும்
எடுத்துரைக்கும் செய்தி அறியாதவரா நாம்
அறிவுறுத்தும் பாடம் புரியாதவரா நாம்
காந்தியாக ஏசுவாக வாழ்ந்ததற்காக
என்றும் போற்றப்படுவதும் நம் கையில்
நரகாசுரனாக  மகிஷாசுரனாக வீழ்ந்ததற்காக
என்றும் விழாவாகிப் போவதும் நம் கையில்
பிறர் போற்றும் வாழ்வாக இல்லாவிடினும்
பலர் தூற்றும் மறைவாக இல்லாதிருக்கட்டும்
திருந்தி நாம் வாழந்திட பெற்றிடும் அறிவுரையிது
தீபாவளிப் பண்டிகை தரும் நல்லதோர் பாடமிது

பாரத யுத்தத்தில் கொல்லப்பட்ட அந்த மிகமிக நல்லவன் யார்?

.

பதினெட்டு நாட்கள் நடைபெற்றது குருட்க்ஷேத்திரப் போர். அந்தப் போரில் அது பதினான்காவது நாள்.அன்று அதிக எண்ணிக்கையில்
கௌரவர்களைக் கொன்று குவிப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டபின் பாண்டவர்களின் கால்கள் பாசறையை விட்டு வெளிநடந்தன.அவர்களை வீரத் திலகமிட்டு வழியனுப்பி வைத்தாள் பாஞ்சாலி வெற்றி கிட்டியபின் தான் தலைமுடிவேன் என்ற சபதத்தின்படி, தலைவிரி கோலமாக இருந்த பாஞ்சாலி.

பாஞ்சாலி பார்த்துக் கொண்டிருக்கும் போதே வழிபடுகிற கண்ணன், அர்ச்சுனனின் தேரில் சாரதியாகத் தாவி ஏறி அமர்ந்தான். புல்லாங்குழல் வாசிக்கும் கண்ணனின் தாமரைப் பூங்கரங்கள், நல்லவர்களை வாழ வைத்து அல்லவர்களை அழிப்பதற்காக, தேர்க் குதிரைகளின் லகானைச் சடாரென்று கையில் பற்றிக் கொண்டன.

மற்றவர்களும் அவரவர் தேரில் அமர்ந்து போர்க்களம் நோக்கிப் புறப்பட்டார்கள். அந்தத் தருணத்தில்தான் பாஞ்சாலியிடமிருந்து அந்த விசித்திரமான வினா கண்ணனை நோக்கிப் புறப்பட்டது

‘‘கண்ணா! எல்லாம் தெரிந்த எம்பெருமானே! அனைத்துச் செயல்களையும் நடத்தும் ஆதிநாயகனே! இந்த யுத்தம் முழுவதையும் நீயே நடத்துகிறாய் என்பதை நான் அறிவேன். கொல்பவனும் நீ. கொல்லப்படுபவனும் நீ. வெல்பவனும் நீ. வெல்லப்படுபவனும் நீ. சொல். இன்று யார் யாரால்
கொல்லப்படுவார்கள்?”

(பாஞ்சாலியின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் பாண்டவர்கள் அனைவரும் கண்ணன் முகத்தை ஆவலோடு நோக்கினார்கள். இன்றைய போரின் நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவர் விழிகளிலும்)

எதனாலும் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத கண்ணன், கலகலவென நகைத்தவாறே சொன்னான்: ‘‘பாஞ்சாலி! உனக்கு ஆனாலும் எல்லாவற்றையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல். நல்லது. சொல்கிறேன். இன்று இரு தரப்பினராகப் பிரிந்து போரிடும் அனைவரிலும் மிகமிக நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான். இப்போது உலகில் வாழ்பவர்களில் அவனைவிட நல்லவர்கள் யாருமில்லை. அவன் இறக்கவிருப்பதை எண்ணி
என் மனம் இப்போதே வருந்துகிறது!”

இலங்கைச் செய்திகள்


நீதி கோரி கிளிநொச்சியில் மாபெரும் கண்டனப் பேரணி

யாழ்.பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து பேராதனை பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

விபசார விடுதி விவகாரம் : மட்டு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்.!

தமிழ் மக்கள் நிறைந்து வாழும் பகுதியில் ஏன் சிங்களவர்களை கடமையில் அமர்த்துகின்றனர் : கேள்வியெழுப்புகிறார் விக்கிரமபாகு

பொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு)

மாணவர்கள் படுகொலை : நீதி வழங்கக்கோரி லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சியில் பொலிஸார் இளைஞர்கள் இடையே மோதல் : பொலிஸ் மீது தாக்குதல் : வீதியில் டயர்கள் எரிப்பு : தொடருகிறது பதற்றம்

ஹர்த்தாலால் முடங்கியது யாழ்ப்பாணம்

யாழ்.துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பொலிஸாரின் தரப்பிலேயே தவறு

உலக சினிமா : Beautiful (2008)

.
‘ஆழகான பெண்ணை நம்பாதே’ என்ற வாசத்தை ஆட்டோவில் எழுதப்பட்டிருப்பதை படித்திருப்போம். உண்மையிலேயே பெண்ணின் அழகு ஆண்களுக்கு ஆபத்தாக இருக்கிறதா ? இல்லை. பெண்ணின் அழகை தேடிப் போகும் ஆண்களுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது. உண்மையில் பெண்ணின் அழகு ஆண்களைவிட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது.

ஆண்களுக்கு ஆபத்து என்று சொல்வது கூட அந்தப் பெண் தனக்கு வரும் ஆபத்தை அடுத்தவர் மீது திருப்பிவிடுவது மூலம் தன்னை அவள் தற்காத்துக் கொள்கிறாள். 

கிம்-கி-டுக் கதை எழுதியப்படம். அவரின் உதவியாளரும், புது இயக்குனருமான ஜுஹ்ன் ஜெய்-ஹங் இயக்கியிருக்கிறார். படத்தை கிம் கி டுக் இயக்கவில்லை என்ற குறை தவிர, அவரது படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. அதாவது அவரின் ’உடல் அரசியல்’.

ஒரு வேலை கிம்-கி-டுக் இயக்கி, ஜுஹ்ன் ஜெய்-ஹங் பெயரை இயக்குனராக போட்டுவிட்டாரோ என்று தோன்றும். கதையும், அதன் காட்சியமைப்பும் எல்லாம் கிம்-கி-டுக்கின் சாயல் அதிகமாக இருக்கும்.

ஒரு பெண்ணுக்கு அழகு எவ்வளவு பெரிய சாபம் என்பதை தனது கதையில் யூன்-யியாங் பாத்திரம் மூலம் காட்டுகிறார்.ஆரம்பக்காட்சியில், யூன்-யியாங்யை பொறாமை கண்களால் அவளது தோழி பார்க்கிறாள். அவளை போல் தான் அழகில்லை என்பதை ஏக்க மூச்சு விடுகிறாள். யூன்-யியாங்யை வெறுப்பேற்ற தனது காதலனை அறிமுகம் செய்கிறாள். ஆனால், அவளுடைய காதலன் ஏற்கனவே யூன்-யியாங்கிடம் காதலை சொல்லி, அவள் ஏற்காமல் மறுத்திருக்கிறாள். 

“படைப்பாளிகளைவிடவும் படைப்புகள்தான் பேசப்பட வேண்டும்” – நடிகர் சிவக்குமாரின் பேச்சு..!


“படைப்பாளிகளைவிடவும் படைப்புகள்தான் பேசப்பட வேண்டும்” – நடிகர் சிவக்குமாரின் பேச்சு..!

.
‘Paintings Of SivaKumar’ புத்தக வெளியீட்டு விழா இன்று லலித் கலா அகாடமியில் நடைபெற்றது.
நடிகர் சூர்யா முன்னிலையில் தமிழறிஞர் தமிழருவிமணியன் புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் அல்லையன்ஸ் பதிப்பகம் ஸ்ரீநிவாசன்,  இயக்குநர் லிங்குசாமி, இயக்குநரும்,  ஒளிப்பதிவாளருமான  ராஜீவ்மேனன், இயக்குநர் வசந்த், கவிஞர்-எழுத்தாளர் அறிவுமதி, டாக்டர் சொக்கலிங்கம் , ஓவியர் A.P.ஸ்ரீதர், ஓவியர் தியாகு, நடிகை ரம்யா பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்  நல்லகண்ணு, கவிஞர் பிரபஞ்சன், தனஞ்சயன், கவிதாலயா கிருஷ்ணன், பத்மஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னிலை வகித்த நடிகர் சூர்யா பேசும்போது, “அப்பாவிற்கு பிறந்த நாள் கொண்டாடுவது எப்போதுமே பிடிக்காது. சென்ற வருடம் பிறந்த நாள் கொண்டாடலாம் என்று நினைத்தோம். ஆனால் அன்று அவர் பழநி முருகன் கோவிலுக்கு சாமியை தரிசிக்க சென்றுவிட்டார்.
இந்த வருடம் அவருடைய 75-வது பிறந்த நாள். அந்த வகையில் அவருக்கு இந்த பிறந்த நாள் மிகச் சிறப்பான பிறந்த நாளாகும். இந்த நாளை நாங்கள் கண்டிப்பாக மிகப் பெரிய அளவில் அனைவருக்கும் என்றும் நினைவிருக்கும் பிறந்த நாளாக மாற்ற வேண்டும் என்று யோசித்துதான் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம்.
இந்த காபி டேபிள் புத்தகம் மிக முக்கியமான புத்தகம். இந்நாளை குறிக்கத்தான் இந்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம்.

வாய்க்கும் நல்லதீபாவளி - எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.

  இருளகற்றி ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி
  மருளகற்றி மனம்மகிழ வருமெமக்கு தீபாவளி
  நிறைவான மனதுவர  உதவிடட்டும்  தீபாவளி
  நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி !

       புலனெல்லாம் தூய்மைபெற
       புத்துணர்வு பொங்கிவர
      அலைபாயும் எண்ணமெலாம்
       நிலையாக நின்றுவிட
       மனமெங்கும் மகிழ்ச்சியது
       மத்தாப்பாய் மலர்ந்துவிட
       வாசல்நின்று பார்க்கின்றோம் 
       வந்திடுவாய் தீபாவளி !

       பட்டாசு வெடித்திடுவோம் மத்தாப்புக் கொழுத்திடுவோம்
       தித்திக்கும் பட்சணங்கள் அத்தனையும் செய்திடுவோம்
       கஷ்டமான அத்தனையும் கழன்றோட வெண்டுமென்று
       இஷ்டமுடன் யாவருமே இறைவனிடம் இறைஞ்சிநிற்போம் !

        தீபாவளித் தினத்தில் தீயவற்றைக் தீயிடுவோம்
        தீபாவளித் தினத்தில் திருப்பங்கள் வரநினைப்போம் 
        தீபாவளித் தினத்தில் சினம்சேரல் தவிர்த்திடுவோம்
        தீபாவளி எமக்குச் சிறந்ததெல்லாம் தந்திடட்டும் !

உலகச் செய்திகள்

.
பாக்கிஸ்தானில் பயங்கரம் : 58 பேர் பலி

25/10/2016 பாக்கிஸ்தானின் மேற்கு நகரான குவெட்டாவின் பொலிஸ் பயிற்சி கல்லூரியின் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 58 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுததாரிகள் கட்டடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்த ஆரம்பித்ததும் ஒரு பாரியளவிலான பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தாங்கள் மேற்கொண்டதாக எந்த குழுவும் இது வரை கூறவில்லை.     நன்றி வீரகேசரி 

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017'

.
தலைப்பு : கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 
- 'புலம்பெயர் இணைய வலைப் பதிவர் போட்டி 2017' - தகவல் பகிர்வு

உலகளாவிய தமிழ் ஊடகத்துறை நெறியாளர்களுக்கு
வணக்கம்!

கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 'புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017' தொடர்பாக தங்களுடன் தொடர்பு கொள்கிறோம். இத்தகைய செயற்திட்டம் பரவலான பார்வையாளர்களைச் சென்றடையவும் அதனூடாக எழுத்தூக்கமுடன் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்கு கொள்ளவும் தங்களைப் போன்ற ஊடக நெறியார்கள் தகுநல் பணியாற்றி ஒத்துழைப்பு வழங்க அன்புடன் எதிர்பார்க்கிறோம்.

நான் முகிலன் மறைந்த கவிஞர் கிபி அரவிந்தன் அவர்களுடைய சுமார் நான்கு தசாப்தமான நெருங்கிய தோழன். தற்போது காக்கைச் சிறகினிலே மாத இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றுகிறேன்

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் 
கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - 
'புலம்பெயர் இலக்கியப் பதிவர் போட்டி 2017' - வள்ளுவராண்டு 2048

காக்கைச் சிறகினிலே இதழ் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி. 

வடையென்றால் வாயைப் பிளக்கும் - Chicago பாஸ்கர்

.

குளிரடித்தாலும் வீட்டுக் கூரை ஒழுகினாலும் 

மழை பெய்தாலும் எங்கள் மனம் சோர்ந்தாலும் 

துயர் சூழ்ந்தாலும் என்னதான் துன்பம் துளைத்தாலும்

உற்சாகம் தந்து என்றும் உயிரூட்டும் வடையே!

வீட்டை விட்டு வந்தாலும், நாட்டை விட்டுப் பறந்தாலும் 

ஓட்டை போட்டு, பாட்டி சுட்டு, சொன்ன கதை மறந்தாலும் 

மனமெங்கும் நிறைந்திருக்கும், சுவை விட்டுப் போகுமா?

உலகெங்கும் கம கமக்க புகழ் கண்ட உளுந்து வடையே!பல்லில்லா பழையோர்க்கும் சொல்லில்லா சிறியோர்க்கும் 

பைக்கில் செல்லும் புதுசுக்கும் படித்தோர்க்கும் பாமரர்க்கும் 

சுடச் சுட ரீயோடும் தொட்டுத் தின்ன சம்பலோடும் 

சுவையூட்டும் மெதுவடையே உன்னை நாம் மறப்போமா?

இலங்கை அதிபருக்கு தேவை அரசியல் துணிச்சல்!

.

இலங்கையில் காவலர்களால் தமிழ் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான பவுன்ராஜ் சுலக்ஷன், நடராஜா கஜன் இருவரும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள் காவலர்கள். குண்டு பாய்ந்ததில் பவுன்ராஜ் பலியானார். துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஏற்பட்ட விபத்தில் நடராஜா கஜனும் உயிரிழந்தார்.
முதலில், “மாணவர்கள் சாவுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; வண்டியில் வேகமாகச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்கள்” என்றது காவல் துறை. மக்களின் எதிர்ப்பும் பிரேதப் பரிசோதனை முடிவு வெளிக்கொணர்ந்த உண்மையும் காவல் துறையினரின் குரூர முகத்தை அம்பலப்படுத்தியதால், “மாணவர்களை நிற்கச் சொல்லி சைகை காட்டினோம்; நிற்காததால் அவர்களைச் சுட வேண்டியதாகிவிட்டது” என்றிருக்கிறார்கள் காவலர்கள். இச்சம்பவம் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவமானது மனித உரிமை மீறல் மட்டும் அல்ல; 

அறிவோம் இஸ்லாம் - பாத்திமா மைந்தன்

.
49. நபிகளாரின் இறுதிப் பேருரை
ஹிஜ்ரி 10-ம் ஆண்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்ய முடிவு செய்தார்கள். 'கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்ல இருக்கிறேன்' என்ற நபிகளாரின் அறிவிப்பு அரபுலகம் முழுவதும் பரவி மக்கள் மனதில் பரவசத்தை ஏற் படுத்தியது. 
பல திசைகளில் இருந்தும் மக்கள் மதீனாவை நோக்கி திரண்டனர். துல்கஅதா மாதத்தின் இறுதியில் நபிகளார், அங்கிருந்து மக்கா புறப்பட்டார்கள். துல்ஹஜ் மாதம் 4-ந் தேதி வைகறை வேளையில் மக்காவை அடைந்தார்கள். 
மக்கா நகருக்கு வந்தவுடன் முதலாவதாக இறை இல்லம் கஅபாவை 'தவாப்' செய்தார்கள். ('தவாப்' என்பதற்குச் சுற்றி வருதல் என்று அர்த்தம்). இப்போதும் ஹஜ் செல்லும் புனித பயணிகள் நபி வழிப்படி 'தவாப்' செய்கிறார்கள். 
பின்னர் 'மகாமே இப்ராகீம்' (நபி இப்ராகீம் நின்ற இடம்) என்னும் இடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். பிறகு 'ஸபா' மலைக்குன்றின் மீது ஏறினார்கள். அப்போது இறைவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டே இருந்தார்கள். 

வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!

.


நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.
ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 
பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் -சார்வாகன் (குறுநாவல்) - -செங்கதிரோன் -

.
DSC009602000இல் எழுதப் பெற்றுப் பின் 2003இல் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் மணிவிழாச் சிறப்பு மலரில் இடம்பிடித்த அவரது ~சார்வாகன்| குறுநாவல், ~மௌனம்| எனும் மகுடம் இட்ட இம்மணிவிழாச் சிறப்பு மலரின் உள்ளே இவ்வளவு காலமும் மௌனித்துக் கிடந்த பின் இப்போது நூலுருப் பெற்று மகுடம் வெளியீடாக வெளிச்சத்துக்கு வரவுள்ளது. ஆம்! 15.10.2016 இன்று பி.ப.4.00 மணிக்கு இதன் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு சின்ன உப்போடை அல்மெய்டா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு ~மகுடம்| வெளியீட்டகத்தின் ஒன்பதாவது வெளியீடாக பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் ~சார்வாகன்| குறுநாவல் வெளிவருகிறது.
மகாபாரத இதிகாசக் கதையை மையப்படுத்தி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமிடையே நடைபெற்று முடிந்த குருஷேத்திர யுத்தத்தை நாவலின் கருப்பொருளாக்கி அதன்மூலமாக  யுத்தத்திற்கு எதிரான மனிதகுலத்தின் ஒட்டுமொத்தக் குரலாகச் ~சார்வாகன்| எனும் தலைப்பிலான இக்குறுநாவலைப் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பின்னியிருக்கிறார்.

தமிழ் சினிமா


அம்மணி


தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும், அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை மீறி நல்ல படைப்பு என்று சொல்வதே ஒரு கலைஞனுக்கான மரியாதை, அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த அம்மணியை எப்படி கொண்டு வந்துள்ளார் என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

Ammaniலட்சுமி ராமகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் வேலைப்பார்க்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், ஒரு மகன் குடிகாரன், மற்றொரு மகன் ஆட்டோ ஓட்டுனர். மகள் ஓடி போய் திருமணம் செய்து விடுகிறாள்.
லட்சுமி தன் பணிக்காலம் முடிந்து ஓய்வு எடுக்கும் நிலையில் அவருக்கு குறிப்பிட்ட தொகை பணமாக வருகிறது, இதை அறிந்து மகன்கள், பேரன் என அனைவரும் அவரிடம் அன்பு காட்ட நெருங்க, பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறது இந்த அம்மணி.

படத்தை பற்றிய அலசல்

லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு இயக்குனராக படத்திற்கு படம் மெருகேறுகிறார், அவர் நடிப்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை, ஒரு குப்பத்தில் எப்படி இருப்பார்களோ, அவர்களின் வாழ்க்கையை நம் கண்முன் கொண்டு வருகிறார்.
பணத்திற்காக நடிக்கும் மகன்களையும், பேரனையும் காட்டிய விதம் இன்றைய தலைமுறையில் நடக்கும் பல நிகழ்வுகளை கண்முன் கொண்டு வருகிறது, இவர் நடத்தும் தொலைக்காட்சி ஷோ கண்டிப்பாக உதவி இருக்கும் போல.
சரி, அம்மணி என்று ஏன் படத்திற்கு டைட்டில் வைத்தார்கள்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது, லட்சுமி ராமகிருஷ்ணன் வீட்டிலேயே அம்மணி என்ற ஒரு பாட்டி குடியிருக்கிறார், சொந்தங்களால் துரத்தி விடப்பட்ட இவர் லட்சுமி வீட்டில் தான் குடியிருக்கிறார்.
கிட்டத்தட்ட அம்மணி தான் லட்சுமியின் ரோல் மாடல், எந்த கவலையும் இல்லாமல், இந்த வயதிலும் அவர் சந்தோஷமாக தன் காலங்களை கழிக்கின்றார் என்பதை மிக அழகாக காட்டியுள்ளனர், இதை ஒரு காட்சியில் லட்சுமி அவரிடம் கேட்கும் போது கூட ‘வெளிச்சம் சென்று விட்டால் நம் நிழல் கூட நமக்கு சொந்தமில்லை’ என்று அம்மணி சொல்வது கவித்துவமான உண்மை.
படத்தின் ஒளிப்பதிவு இம்ரான் மிகவும் கவர்கிறார், “கே“வின் இசையும் கவணிக்க வைக்கின்றது, அதை விட ரெஜித்தின் எடிட்டிங் படத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்துள்ளார்.

க்ளாப்ஸ்

நடிகர்கள், நடிகைகளின் யதார்த்த நடிப்பு, குறிப்பாக அம்மணி பாட்டியின் துறுதுறு நடிப்பு.
படத்தின் வசனம் ரசிக்க வைக்கின்றது.

பல்ப்ஸ்

படத்தின் இடைவேளை வரை கதைக்குள் நாம் செல்ல கொஞ்சம் நேரம் எடுக்கின்றது.
மொத்தத்தில் அம்மணி நேர்த்தியான அழகு
Music:
K

நன்றி cineulagam