மரணஅறிவித்தல்



திரு பொன்னையா கந்தையா



யாழ்ப்பாணம் கரம்பனை பிறப்பிடமாகவும் அத்தியடி மற்றும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பொன்னையா கந்தையா அவர்கள் 10-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னியில்  சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான  பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும் காலஞ்சென்றவர்களான செல்லையாபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும், சந்திராதேவி கனகசபாபதியின் அன்புச் சகோதரனும், பாலகிருஷ்ணன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையும், சபாநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷா, வினேய், தர்ஷிகா, பிரேன், வறேன் ஆகியோரின் பாசமிகு பேரனும், ஆர்யாவின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12/08/14 செவ்வாய்க்கிழமை  மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக 2 Auburn Road, Auburn  இல்  T J Andrews Funerals மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் 13/08/14 புதன்கிழமை காலை 9.15 மணி முதல் 12.00 மணி வரை Rookwood Cemetery, East  Chapel  இறுதிக் கிரியைகளும் தகனக் கிரியைகளும் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கட்கு க சபாநாதன் Tel: 0408 432 680

அம்மா வரயிருக்கும் கடைசி இரவு.. (கவிதை) வித்யாசாகர்..

.

ந்த இரவைக் குடிக்க
ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள்
குடித்துவிட்டு கீழே சரிகையில்
பொழுது விடியும்;
விடிந்தால் அம்மா வருவாள்,

இத்தனை நாள் –
அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம்
நெஞ்சை அடைக்கும்,

அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம்
கண்ணீராய் உயிருருக வழியும்,

கலங்கியக் கண்பார்த்து அம்மா
துடித்துப்போவாள்’
ஈரம் நனைந்தப் பார்வையால்
எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி
ம்ம்.. என்னைப் பார் என்பாள்’
நான் மீண்டும் எனை
உயிர்பித்துப் கொள்வேன்,
அவள் அழைத்து
வா என்றதும்
அதிர்ந்து எழுந்து அவள்முன் நிற்பேன்,

சிட்னியில் சங்கீத இரட்டையர் - திருமதி பராசக்தி சுந்தரலிங்கம்

.

சென்ற சனிக்கிழமை 09/08/2014 மாலை ஆறரை மணியளவில் பரமட்டா ரிவர்சைட் அரங்கம் சங்கீத இரசிகர்களால் நிரம்பி வழிந்தது. திரு சிறீதரன் ( தமிழ் விக்கிபீடியா  புகழ் ) திருமதி வரலக்ஷ்மி (வீணை வித்துவான் )  தம்பதியினரின்  பிள்ளைகள் வெங்கடேஷ் சௌமியா சகோதரர்கள் வேணு, வீணா கான இசையை வழங்கிப் பெரு விருந்து ஒன்றை அளித்து மகிழ்வித்து விட்டார்கள்.

சங்கீத உலகிலே பல இரட்டையர்களைப் பார்க்கிறோம். பம்பாய் சகோதரிகள், ஆலத்தூர் சகோதரர்கள், சூலமங்கலம் சகோதரிகள், நீலா குஞ்சுமணி, கணேஷ்-குமரேஷ், கர்நாட்டிக்கா பிரதர்ஸ், றஞ்சினி -காயத்திரி என்று பலர். இந்த மேதைகள் எல்லோருமே ஒன்றில் வாத்திய இசையிலோ அல்லது வாய்ப்பாட்டிலோ பிரபலம் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் சிறீதரன் – வரலட்சுமி தம்பதிகளின் வாரிசுகள் புதுமை படைத்து விட்டார்கள். வெங்கடேஷ் புல்லாங்குழல் இசையிலும், சௌம்யா வீணை வாத்தியத்திலும், ஒரே மேடையில் இசையைக் கொண்டு வந்து தமது வித்துவத்தைக் காட்டி விட்டார்கள்.
இரண்டு வாத்தியங்களுமே வெவ்வேறான அமைப்பைக் கொண்டவை – ஒன்று தந்தி வாத்தியம், மற்றையது குழல் அல்லது காற்று வாத்தியம். இவை இரண்டையும் இணைத்து இசைத்து இனிய இசையை மீட்டுவது சாதாரண செயலல்ல. இருவருமே இருபது வயதிற்குள்ளேயே இருப்பார்கள். ஆனால், அவர்களின் வாசிப்பில் முதிர்ச்சி இருந்தது. இந்நிகழ்ச்சி ஒரு சாதாரண அரங்கேற்றம் போலல்லாமல் ஒரு நிறைவான கச்சேரியாக அமைந்திருந்தமை – ஒரு மாபெரும் சாதனை.

சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற வரலஷ்மி பூசை

.


எந்திரமாலை 2014, 16.08.2014

.

பரிணாம வழர்ச்சியும் இந்து மதமும் தசாவதாரம் - நாட்டியக்கலாநிதி கார்த்திகா கணேசர்

.

மனித சமூக வளர்ச்சியுடன் வளர்ந்த சிந்தனைகளை தன்னுள்ளே கொண்டது இந்து மதம். சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோது சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டது. அதைஉணர்ந்த ஞானிகளும் அறிஞர்களும் தமது கருத்துக்களைகூற அதுவே மதக்கருத்துக்களாகவும் கொள்ளப்பட்டதை நாம் அவதானிக்கலாம். இவ்வாறு காலாதி காலமாக வளர்ந்ததே இந்துமதம்

புராணங்கள் மத சிந்தனைகளை தத்துவங்களை மக்களுக்கு இலகுவாக புரியவைப்பதற்கே தோன்றியவை.அதே சமயம் மக்கள் அறிவு கூர்மைப்படாது சிந்தனையை தடைசெய்யும் கருவியாகவும் புராணங்கள் பயன்படுத்தப்பட்டன. முதத்தை மூடத்தனமாக மக்களிடம் திணிப்பதற்கு ஆக்கிய கதையே சிறுத்தொண்டர் புராணம். சுpவனடியார் பிள்ளைக் கறி கேட்டார் பெற்ற பிள்ளையை கொன்று கறிசமைத்தனர் பெற்றோர். கண்ணப்பரோ இறை பொருட்டு இரு கண்களையும் இழக்கத் தயாரானார். இவையாவும் சிந்திக்காது எதையும் இறைபொருட்டுச் செய் என்பதற்காகவே தோன்றிய கதைகள்.

சிட்னி திரை அரங்கில் அஞ்சான்

.
சிட்னி திரை அரங்கில் ஆகஸ்ட் 15ம் திகதி முதல் அஞ்சான் 
சூரியா சமந்தா மற்றும் சூரியின் நடிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் அஞ்சான் 


மெல்பனில் சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சி - 16-08-2014

.
மெல்பனில்  
 சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சி     Community Story Telling

அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்    கடந்த   சில மாதங்களாக  இலக்கியத்துறையில்   அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சிகளை  நடத்தி  வருகிறது. அதன்    தொடர்ச்சியாக    இந்நாட்டில்  குடியேறிய   ஏனைய  இனத்தவர்களின்   வாழ்வு     அனுபவம்   தொடர்பான சமூகத்தின் கதை பகிர்தல் நிகழ்ச்சியையும்   எதிர்வரும் 16-08-2014   திகதி   சங்கம்   நடத்தவிருக்கிறது.
 அவுஸ்திரேலியா    ஒரு  குடியேற்ற நாடாகவும்     பல்தேசிய கலாசார நாடாகவும்    விளங்குகின்றமையினால்    ஏனைய   இனத்தவர்களின் வாழ்வனுபவங்களையும்     தெரிந்துகொள்ளும்வகையில்     இந்நிகழ்ச்சி ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இந்நாட்டில்   வதியும்   தமிழ்ப்படைப்பாளிகள் -    கலைஞர்கள்   பிற இனத்தவர்களின்    வாழ்வு    அனுபவங்களை    நேரடி  உரையாடல்களின் மூலம்    தெரிந்துகொள்வதன்    ஊடாக    தமது   படைப்பு    இலக்கியம்     மற்றும்    கலைத்துறைகள்   தொடர்பான    சிந்தனைகளையும்    பார்வையையும்     மேலும்    விரிவுபடுத்திக்கொள்ள முடியும்.


நினைவுகள் இனிமை: துயரங்கள் நிறைந்த கணங்களுடன்:4 - திருநந்தகுமார்

.

பொலிஸ் கடேற்படையின் முதலாவது முகாம், களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்றது. அங்கு யாழ். இந்துக் கல்லூரி அணி விருது எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனினும் கடேற்படையில் இருந்த மாணவர்களிடம் ஒரு உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.  சில காலம் ஓய்விலிருந்த போதும் யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளின் மாவட்ட நிகழ்வுகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தல் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் ஆகிய கடமைகளில் பொலிஸ் கடேற் படையினர் ஈடுபட்டனர். 1973ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி முதலாவது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் கொழும்பில் நடைபெற்ற போது அதற்கென எமது கடேற்படையிலிருந்து எழுவர் குழு எனது தலைமையில் மீண்டும் கொழும்பு சென்றது. அதற்கு முன்னதாக ஒரு மாதம் மீண்டும் கடும் பயிற்சியில் ஈடுபட்டோம். கொழும்பில் ஐந்து நாட்கள் பொலிஸ் றிசேர்வ் தலைமையகத்தில் தங்கியிருந்து பயிற்சி மேற்கொண்டோம். ஏனைய ஐந்து பாடசாலைகளில் இருந்து வந்தவர்களும் நாமும் ஒரு அணியாக இருந்தோம். காலி முகத்திடலில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கலந்துகொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இலங்கைச் செய்திகள்



காணாமல்போனோர் தொடர்பான கலந்துரையாடலில் குழப்பம்;இராஜதந்திரிகளும் சிறைப்பிடிக்கப்பட்டனர்

11 இலட்சம் பேர் வரட்சியினால் பாதிப்பு

மலையகத்தில் தொடரும் மழையால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

அவுஸ்­தி­ரே­லி­யாவில் கொல்­லப்­பட்­ட­வரின் உடல் ஏழு மாதங்களின் பின் கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியை

பல்கலை மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை இடம்பெறவேண்டும் : டக்ளஸ்

மாணவன் மீதான தாக்குதல் சிறுபான்மை மக்கள் மீதான அடக்கு முறையை வெளிக்காட்டுகிறது: சுகிர்தன்

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் மரணம்: இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

. 
வேரைத்தேடி  கடல்  கடந்து  சென்றேன்.   இன்று  எனது  பேரன்  பேத்திகளுக்கு   காண்பிக்க   மீண்டும்   கடல்   கடக்க வேண்டும். 
எம்மவரில்   படர்ந்திருக்கும்    வேரும்  வாழ்வும்
ராமாராமநாதன்   நினைவுகள்

                                                       
 எழுத்தாளனுடைய    படைப்பை    பார்.    அவனது   தனிப்பட்ட வாழ்க்கையைப்பார்க்காதே   என்று    ஒரு   மூத்த   கவிஞர் சொல்லியிருக்கிறார்.   ஏனென்று   கேட்டதற்கு   ஒரு  மரத்தின் கிளையைப்பார்   அதில்    பூத்துக்குலுங்கும்   மலர்களையும்   அதிலிருந்து தோன்றும்   காய்    கனிகளையும்  பார்.   ஆனால்   அந்த   மரத்தின் வேரைப்பார்க்க    முனையாதே.   பார்க்க   முயன்றால்   மரம்தான் பட்டுப்போகும்.    ஒரு   கட்டிடத்தின்   அத்திவாரமும்    அப்படித்தான் அதனைத்தோண்டிப்பார்க்க    முயன்றால்   கட்டிடமே    சரிந்துவிடும்    என்றார். மேலும்   விளக்கம்   தருகையில்  -   ஒரு  ஹோட்டலுக்குச்சென்றால் சாப்பிட்டுவிட்டு  அதற்குரிய   பணத்தை    செலுத்திவிட்டு திரும்பிவிடவேண்டும்.    அந்த   உணவுவகைள்   தயாராகும்   சமையல் கூடத்தின்   பக்கம்   சென்றால்  சில  வேளை  அங்கு   சாப்பிடவும்   மனம் வராது   என்றும்   சொன்னார்.
தன்னை   ஒரு   திறந்த  புத்தகமாக  வைத்திருந்து    தன்னைப்படிப்பவர்கள் தன்னைப்போன்று   ஆகிவிடக்கூடாது   என்றும்   எச்சரித்தவர்தான் அந்தக்கவிஞர்.
அவர்தான்   கவியரசு   கண்ணதாசன்.
வேரைத்தேடி  மரத்தை   நாடக்கூடாதுதான்.    ஆனால் - ஒரு  மனிதன்  தனது பூர்வீகத்தின்   வேரைத்தேடுவது   சுவாரஸ்யமான    அனுபவம்தான்.   நான் சந்திக்கும்  சிலரிடம்   இந்தப் பூர்வீகம்    பற்றிய   உரையாடல்   வரும்பொழுது   உங்களது   நினைவிலிருக்கும்   மூதாதையர்களின்   பெயர் தெரியுமா?   எனக்கேட்பேன்.
அப்பா   பெயர்   தெரியும்.   அப்பாவின்   அப்பா   (தாத்தா)  பெயரும்  தெரியும். தாத்தாவின்   அப்பா   (கொள்ளுத்தாத்தா)   பெயரும்   தெரியும்.    அதற்கு அப்பால்    தெரியாது.    தெரிந்தவர்களிடம்   கேட்டுத்தெரிந்துகொள்ளவும் முடியாது.    அவர்களும்    போய்விட்டார்கள்   எனச்சொல்வார்கள்.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற வரலஷ்மி பூசை

.

சங்க இலக்கியக் காட்சிகள் 19- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும் சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

எங்கே வந்தாய்? எதற்காக வந்தாய்?



நீர்ப்பொய்கைகள் நிறைந்த அழகிய ஊர் அது. வற்றாத அந்த நீர்ப் பொய்கைகளிலே வாளை மீன்கள் துள்ளியெழுந்து புரண்டு விளையாடும். அதனால் எப்பொழுதம் நீரில் அலை எழும்பிக்கொண்டிருக்கும். அங்கே மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் விளக்கின் செந்நிறச் சுடரைப்போல விளங்கும். யானையின் விரிந்த பெரிய காதுகளைப்போன்ற அகன்ற தாமரை இலைகளோடு சேர்ந்திருக்கும் அந்தச் செந்நிறப் பூக்கள் நீரலைகளிலே அசைந்து அசைந்து ஆடும். அங்கே குடங்களிலே நீர்மொண்டு செல்வதற்காக வந்து பொய்கையில் இறங்கிய இளம்பெண்கள் அதனைக்கண்டதும் ஒருகணம் திடீரென அச்சப்படுவார்கள். அத்தகைய பொய்கைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன் தலைவன். அவனுக்குப் பரத்தையர் தொடர்பு அதிகம். ஒரு பரத்தையுடன் சிலநாட்கள் உறவுகொண்டாடிவிட்டுப் பின்னர் அவளை விட்டுவிட்டு வேறொருத்தியை நாடுவான். அவ்வாறு அவனுக்குப் புதிய புதிய பரத்தையர்களை அறிமுகப்படுத்துபவள்ää அதாவது கூட்டிக்கொடுப்பவள் ஒரு விறலி. இசைக் கலைஞி. அதாவது பாணன் ஒருத்தனின் மனைவி.

கடல்புறத்தில் ஒரு பெண்...

.

ஒரு இளம்பெண். கல்யாணமாகி மூன்று ஆண்டுகள். இரண்டு குழந்தைகள். இரண்டு வயதில் ஒன்று, ஒரு வயதில் ஒன்று. ஒரு நாள் கடலுக்குப் போன கணவன் திரும்பவில்லை. ஊர் தேடிப் போனது. ஆள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்துக் கடலோரப் பாதுகாப்புப் படையும் காவல் துறையும் பக்கத்து ஊரில் கரை ஒதுங்கிய ஒரு உடலைக் காட்டுகிறார்கள். உடல் என்று அதைச் சொல்ல முடியுமா? மீன் தின்ற மிச்சம். நீரில் ஊறி வெடித்த பிண்டத்தின் எச்சம். உயிர் உடைந்து, கதறித் துடிப்பவள் அப்படியே உறைந்து சரிகிறாள் சுவரோரம். சோறு இல்லை, தூக்கம் இல்லை. பித்துப் பிடித்தவளாய் உறைந்திருக்கிறாள்.
கடல்புறத்தில் ஒரு பெண் தனித்துப் பிழைப்பது அத்தனை எளிதல்ல. ஒரு ஆண் தினமும் கடலோடும்போதே, பெண் வீட்டு வேலையோடு ஆயிரம் கரை வேலைகளையும் சேர்த்துப் பார்த்தால்தான் ஜீவனம் சாத்தியம். இந்த நடைப்பிணம் இனி என்ன செய்யும் என்று ஊரும் குடும்பமும் கூடிப் பேசுகிறது. அவளை நோக்கி, கடல் கொன்றவனின் தம்பியைக் கை காட்டுகிறது. உடனிருக்கும் இரண்டு உயிர்களைக் காட்டி வற்புறுத்துகிறது. உலுக்குகின்றன பிள்ளைகளின் பார்வைகள். அவள் கரம் பிடிக்கிறாள். ஓராண்டு ஓடுகிறது. இப்போது இன்னொரு பிள்ளை அந்தக் குடும்பத்தில்.

‘அம்மா’வாகிறார் நயன்தாரா

.
முன்னணிக் கதாநாயகி ஒருவரை இயக்குவது அறிமுக இயக்குநர்களுக்கு அத்தனை சுலபமல்ல. ஆனால் 24 வயதே நிரம்பிய அஸ்வின் சரவணன் நயன்தாராவை இயக்கிவருகிறார். குறும்படங்கள் வழியே சினிமாவுக்கு வந்திருக்கும் இவர் கையிலெடுத்திருப்பது ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கதை. இன்னும் தலைப்பு சூட்டப்படாத இந்தப் படத்தில் நயன்தாராதான் முதன்மைக் கதாபாத்திரம். நெடுஞ்சாலை ஆரி நயன்தாராவின் கணவர். இந்த ஜோடிக்குக் கதைப்படி இரண்டு குழந்தைகள்.ஏற்கனவே ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தில்லவ குசன்களின் அம்மா சீதாப் பிராட்டியாக நடித்திருந்தார். ஆனால் அந்தக்கதாபாத்திரத்தின் புனிதத் தன்மை காரணமாக ரசிகர்கள் அதை ‘அம்மா’ கேரக்டராகப் பார்க்கவில்லை. ஆனால் இம்முறை நயன்தாரா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதை ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். இயக்குநர் அஸ்வினும் வியந்து போகிறார்.
“ஒரு யங் மம்மி கேரக்டரில் மிக அழகாகப் பொருந்தியுள்ளார் நயன்தாரா. நான் எனது கதைக்கான டெமோ வீடியோவின் சில நிமிடங்களை அவரிடம் காட்டினேன். பார்த்து முடித்த பிறகு அவர் எதுவுமே சொல்லாமல் கிளம்பிவிட்டர். இரண்டு தினங்கள் கழித்து என் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடன் வேலை செய்வதும், அவரை வேலை வாங்குவதும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது, இயக்குநரை முழுமையாக நம்பும் நட்சத்திரம் அவர். தேவையற்ற எந்தவொரு கேள்வியும் கேட்க மாட்டார். இந்தப் படத்தில் நயன்தாராவின் வசீகரத் தோற்றம் இருக்காது. அவரது உடைகள், வாழ்விடம் அனைத்துமே யதார்த்தமாக இருக்கும். அம்மா கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைப்பது பற்றிப் பலமுறை யோசித்தேன். ஆனால் அவர் இந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தியதைப் பார்த்து வியந்துபோனேன்” என்று குதூகலிக்கிறார் அஸ்வின்.

உலகச் செய்திகள்


காஸாவில் நெஞ்சை உறைய வைக்கும் இஸ்ரேல் போர் விமானத் தாக்குதல்

போர் நிறுத்த உடன்பாடு முறிவுக்குப் பின் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தீவிரம்: பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 1,650 ஆக உயர்வு

தென் ஆபிரிக்காவை உலுக்கிய 5.3 ரிச்டர் பூமியதிர்ச்சி;ஒருவர் பலி

ஆஸியில் புகலிடம்கோரியோரை இந்தியா ஏற்கத் தயார்


திரும்பிப் பார்க்கவில்லை - அ முத்துலிங்கம்

.
964 இல் நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்பு ‘அக்கா’. ஐம்பது வருடங்கள் ஓடிக் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டுவருகிறார் நற்றிணை பதிப்பகத்தை சேர்ந்த யுகன். அதற்கு நான் எழுதிய முன்னுரை.              

     திரும்பிப் பார்க்கவில்லை

சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். நான் அப்படியான கேள்வி ஒன்றுக்கு என்னைத் தயார் செய்யவில்லை. ஆகவே சற்று நேரம் திகைத்துப் போய்விட்டேன். அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்களுக்கு சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு முன்னர் யோசித்துப் பார்த்ததே கிடையாது. எங்கள் வீட்டில் பொதுவாக இருந்த ஒரே புத்தகம் பஞ்சாங்கம்தான். அதைத்தவிர பாடப்புத்தகங்கள் இருந்தன. கேள்வி கேட்டவர் அதைக் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன். அப்படியிருந்தால்கூட பாடப் புத்தகம் ஒன்றை நான் சொந்தமாக என் வாழ்நாளில் அனுபவித்ததும் கிடையாது.

முதலில் அண்ணருக்கு பாடப்புத்தகம் சொந்தமாக இருக்கும். அவருக்கு பிறகு அக்கா. அதற்கு பிறகு இன்னொரு அண்ணர். பிறகு மற்றுமொரு அண்ணர். இறுதியாக எனக்கு வந்து சேரும். மட்டை கிழிந்து, பல இடங்களில் ஒட்டுப்போட்டு, மூலைகள் சுருண்டு மடிந்து கிடக்கும். அவற்றை படித்துவிட்டு நான் தம்பிக்கு கொடுப்பேன். அதன்பின் அது தங்கையிடம் போய்ச்சேரும். ஆகவே நான் பாடப் புத்தகத்தை சொந்தம் கொண்டாட முடியாது. ஒருவருட காலம் ’கடன் வாங்கியது’ என்று வைத்துக்கொள்ளலாம்.

மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழா தி. - துலக்சனா கிழக்குப் பல்கலைக் கழகம்..

.
மாமாங்கேஸ்வரர் ஆலயத் திருவிழாவும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் பாரம்பரிய அரங்க விழாவும்:


மாமாங்கேஸ்வரர் ஆலயத்திருவிழாச் சூழலில் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் நடாத்திய பாரம்பரிய அரங்க விழா - 2014

பாரம்பரியக் கலைகளின் சமகாலத் தேவைகளையும் முக்கியத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கக் கலைஞர்களுடனும் சமூகங்களுடனும் இணைந்த வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கல்விச் செயற்பாடுகளில் பாரம்பரிய அரங்க விழா நான்காவது வருடமாக இம்முறையும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயதிருவிழா முற்றத்தில்; நான்கு நாட்களாக ( 21.07.2014 – 24.07.2014) இரவு பகலாக வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த வருடம் பாரம்பரிய அரங்க விழாவானது 21.07.2014 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் மாமாங்கேஸ்வரர் ஆலயமுற்றத்தில் அமைக்கப்பட்ட கூத்துக் களரியிலே ஆரம்பமானது. நிகழ்வினைக் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவர் கலாநிதி வ. இன்பமோகன் அவர்கள் தலைமை தாங்கி நடத்திச் சென்றார்.


இந்த காலத்திலயும் இப்படி நடக்குது

.

அஜித் - விஜய் ரசிகர்களின் 'கெத்து'ப் போட்டி முடிவு என்ன?


ஜூலை 27ம் தேதி அஜித் - விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட 'கெத்து'ப் போட்டியின் முடிவு என்ன என்பது தெரிய வந்திருக்கிறது.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே ஜூலை 27ம் தேதி ட்விட்டர் தளத்தில் பெரும் போட்டி நிலவியது. அன்று மதியம் விஜய் டி.வியில் 'விஜய் அவார்ட்ஸ்' நிகழ்ச்சியில் விஜய்க்கு சிறந்த பொழுதுபோக்கிற்கான விருது வழங்கியது ஒளிபரப்பட்டது. அதே நேரத்தில் சன் டி.வியில் அஜித் நடித்த 'வீரம்' ஒளிபரப்பட்டது.
நடிகர் விஜய் வாங்கிய 'சிறந்த பொழுதுப்போக்கு நடிகர்' விருதா அல்லது அஜித் நடிப்பில் ஒளிபரப்படும் 'வீரம்' திரைப்படமா என்று அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே யார் கெத்து என்ற போட்டி நிலவியது. அன்று காலை முதலே ட்விட்டர் தளத்தில் #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது. இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் உடனே #VIJAYFavHeroForever என்ற ஹாஷ்டேக் உருவாகி இந்திய அளவில் ட்ரெண்ட் செய்தார்கள்.

காணாமல்போகும் கடித இலக்கியம் -முனைவர் சௌந்தர மகாதேவன்

.
நம் நலத்தை அறிய யாருக்கும் ஆவல் இல்லாமலும், நமக்கு யார் நலத்தையும் அறிய நேரமில்லாமலும் நம் நாட்கள் நகர்கின்றன. மின்னஞ்சல் வந்த பின் பொங்கல் வாழ்த்து அட்டைகளோ, அஞ்சலடைகளோ நம்மை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கின்றன.
டாக்டர் மு.வரதராசனாரின் இலக்கியக் கடிதங்கள்


திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள், டாக்டர் மு.வரதராசனாரின் இலக்கியக் கடிதங்கள், நேருவின் கடிதங்கள் ஆகியவற்றை வாசித்துப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறேன். ஒன்றரையணா விலையில் சென்னை, பாரி நிலையம் 1954-ம் ஆண்டு வெளியிட்ட, “தம்பிக்கு, மு. வரதராசனார்” என்ற கடித நூலின் ஒவ்வொரு வரியும் கற்கண்டுச் சொல்லமுது.
அன்புள்ள எழில்… எனத் தொடங்கி, “தமிழ் மொழி நல்ல மொழிதான், ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்படவில்லையா? தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா?ஆய்வுக் கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? இல்லையானால் வெறும் பேச்சு ஏன்? வல்லமை இல்லாத நல்ல தன்மை வாழாது தம்பி! அது பொருட்பால் இல்லாத திருக்குறள் போன்றதுதான்.” மூச்சு விடாமல் இதை நெல்லையப்பர் கோவில் உள்தெப்பக்குளப் படியில் அமர்ந்து நண்பனிடம் ஏற்ற இறக்கத்தோடு பேசி மகிழ்ந்திருக்கிறேன்.
புதுமைப்பித்தன் கடிதங்கள்

தமிழ் சினிமா


ஜிகர்தண்டா



பல தடைகளை தாண்டி ரசிகர்களின் பேராதரவோடு இன்று வெளியாகியிருக்கிறது ஜிகர்தண்டா.தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்திச் சென்ற ‘பீட்சா’ பட இயக்குனரின் அடுத்த படைப்பு தான் இந்த ஜிகர்தண்டா.மதுரை என்றாலே சமீப காலமாக வெட்டுக்குத்து என்று தான் வருகிறது, அதற்கு இந்தப் படமும் விதிவிலக்கல்ல, ஆனால் இதில் சித்தார்த் போன்ற சாக்லேட் ஹீரோவை இக்கதையில் கொண்டு வந்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜை பாராட்டலாம்.படத்தின் கதையாக பார்த்தோமேயானால் குறும்படப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் சித்தார்த் அங்கு நீதிபதியாக வரும் பிரபல இயக்குநரான நாசரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். ஆனால் இன்னொரு நீதிபதியான நரேனுக்கோ சித்தார்த்தின் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகின்றது.இதனால் இரு இயக்குநர்களுக்குகிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. கோபத்தின் உச்சிக்கு செல்லும் நரேன் தானே சித்தார்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக நிகழ்ச்சியில் பொதுவில் அறிவிப்பு செய்கின்றார்.ஆனால் நரேனின் அலுவலகம் சென்ற சித்தார்த்திற்கோ அதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம் ஒரு ரவுடி கும்பல் பற்றிய கதையை தான் தயாரிப்பேன் என்று நரேன் சித்தார்த்திடம் கூறுகின்றார்.தயாரிப்பாளர் கூறியது போல் ரவுடி கும்பல் பற்றிய வித்தியாசமான கதையை தேடி அலையும் சித்தார்த், மதுரையில் மிகப் பெரிய ரவுடியான சேதுவின் வாழ்க்கையை படமாக எடுக்க அவரை தேடி மதுரைக்கே செல்கிறார்.ரவுடி சேது பற்றிய கதையை எவ்வாறு தெரிந்து கொள்கிறார். அந்த படத்தை இயக்கினாரா? அதில் யார் கதாநாயகனாக நடித்தது? என பல திருப்பங்களுடன் பின்பாதி கதை நகர்கின்றது.படத்தின் பலமே திரைக்கதை தான், அதேபோல் பல டுவிஸ்ட்டுகள் அங்கே அங்கே இருப்பது ரசிக்கும் ரகம். சித்தார்த்தின் எதார்த்த நடிப்பு எல்லோரையும் ரசிக்க வைக்கிறது, அதையும் தாண்டி நம்மை கவர்வது சிம்ஹா தான்,வில்லத்தனமான சிரிப்பு, நடை உடை, பாவனை என அனைத்து அசைவிலும் ஒரு ரௌத்திரம் ஆடிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்சந்தோஷ் நாராயணன் இசை மிகவும் வலு சேர்க்கிறது, குறிப்பாக பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ஆரியின் ஒளிப்பதிவு நம்மை மதுரைக்கே அழைத்து செல்கிறது. குறிப்பாக இண்டர்வல் பிளாக் முன்னாடி வருகிற மழை காட்சியில் நம்மை பிரமிக்க வைக்கிறார்.பலவீனம் என்று பார்த்தால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், இனி எத்தனை காலத்திற்கு தான் மதுரை என்றாலே அடிதடி என்று காட்டுவார்களோ!இந்த படத்தின் முலம் தலை சிறந்த இயக்குனர்கள் வரிசைக்கு கார்த்திக் சுப்புராஜ் செல்ல ஆரம்பித்து விட்டார். முதல் பாதி வேறு மாதிரி காட்டிவிட்டு இரண்டாம் பாதியை எதிர்மறையாகவும் அமைக்கலாம் என்று பின் வரும் சந்ததிக்கு ஒரு விதை விதைத்துள்ளார் நம்ம கார்த்திக்.உண்மையில் இந்த படத்தை ஏதோ தமிழில் க்வென்டின் டரான்டினோ இயக்கியது போலவே இருந்தது. மொத்தத்தில் மதுரையின் ஜிகர்தண்டா எப்போதும் நம்மை ஏமாற்றுவதில்லை, செம்ம டேஸ்ட் மா !














ரேட்டிங்-3.5/5 - 
நன்றி cineulagam