நாளை என் மகனும்.....

.

பலவண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்,
பார்த்திராத வடிவங்களில் பந்துகள்,
உச்சியிலொரு ஒழுங்கற்ற  சூரியன்,
நீரின்றித் துள்ளும் நீலநிறமீன்,
பக்கத்தில் பராக்குபார்த்தபடி
ஒற்றைக்கால் கொக்கு,
பாலுபானுவென்று ஆங்கிலத்தில்
அரைகுறையாய் எழுதப்பட்ட பெயர்கள்,
எல்லாமும் உணர்த்தின,
இதற்குமுன் அங்கேயொரு குழந்தை….
 ஆணோ பெண்ணோ தெரியவில்லை….
வசித்திருக்கிறது என்பதை!

ஒழுங்கற்ற வட்டமுணர்த்தியது
ஒன்றரை வயதிருக்கலாமென்பதை!
ஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியது
அது பள்ளிக்குழந்தையுடையதென்பதை!
எட்டுப்போட்டு  வரையப்பட்ட பூனைக்கு
இருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது
சண்டையிட்ட இரண்டுவாண்டுகளின்
கைவண்ணமென்பது!
சுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை
சீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது
சின்னவயதில் அப்பாவிடம்
வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.

வீடு பிடித்தால் சொல்லுங்கள்,
வெள்ளையடித்துத் தயாராக்கிவிடுகிறேனென்ற
உரிமையாளரிடம்….
 இப்படியே தரமுடியுமா என்றேன்.
விநோதமாய்ப் பார்த்தவரிடம்
விளக்க நா எழவில்லை….
மனவளர்ச்சியற்ற மகனிடம்
மாற்றம் உண்டாக்கும் என்றே
எங்கள் சோர்ந்த மனதோரம்
சுடர்விடும் நம்பிக்கையை!

***************
நன்றி geethamanjari

தமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வு

.
தமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வின் ஒரு பகுதியை காணலாம். மிகுதி அடுத்தவாரம் 


சிட்னி முருகன் கோவில் பூங்காவனம் 18 .03 .2014

.
படபிடிப்பு ஞானி


அபயகரம் நிகழ்ச்சி 29.03.2014

.

இப்படியும் ஒருத்(தீ) - அருணா செல்வம்.

.


(காதலுக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் உண்மைக்கதை) 
   
    அன்றொரு நாள் மாலை சேன் நதிக்கரை ஓரத்தில் இருந்த பெஞ்சியில் அமர்ந்து கொண்டு வெயிலில் மினுமினுக்கும் நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.

    அப்பொழுது ஐம்பது வயதுதிற்கு மேல் மதிக்கத்தக்க வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் என்னைப் பார்த்து சினேகிதமாக முறுவலித்தார். நானும் லைட்டாக சிரித்துவைத்தேன்.
    என்ன நினைத்தாரோ... என் அருகில் வந்து அமர்ந்தார். பின்பு திரும்பவும் என்னைப் பார்த்து சிரித்தார். வேறுவழியில்லாமல் நானும் கொஞ்சம் சங்கடமாக முறுவலித்தேன். உடனே அவர் சட்டென்று என்மிக அருகில் நெருங்கி உட்கார்ந்து உனக்கு அவரைத் தெரியும் தானே...என்றார்.
    எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திரும்பி அவரைப்பார்த்தேன். உண்மையில் அவரின் அதிகப்படியான மேக்கப் அவரின் வயதைக்கூட்டித் தான் காட்டியது. இவர்கள் யாரைக் கேட்கிறார்.... அவரின் மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் யார்... உங்கள் மகனைக் கேட்கிறீர்களா...?என்றேன்.

திரும்பிப்பார்க்கின்றேன் --- 29 - முருகபூபதி

.
அளவெட்டி   ஆசிரமக்குடிலில்    சந்தித்த  அ.செ.முருகானந்தன்
தமது    மரணச்செய்தியை  பத்திரிகையில்    பார்த்த  பாக்கியவான்
                                                                                                                            
      
                                                                                          அளவெட்டியில்    அந்த    இனிய    மாலைப்பொழுதில்     அவரைப்பார்ப்பதற்காக     புறப்பட்டபொழுது  மகாகவியின்   மூன்றாவது புதல்வர்   கவிஞர் சேரன்   தம்பி   சோழன்  -   அண்ணா  -  நீங்கள்   கற்பனை  செய்துவைத்துள்ள  தோற்றத்திலோ    நிலைமையிலோ   அவர்    இருக்கமாட்டார். - என்றார்.
 தம்பி  -  அவரது    எழுத்துக்களைப்படித்திருக்கிறேன்.   சக இலக்கியவாதிகளிடமிருந்து    அவரைப்பற்றி   அறிந்திருக்கின்றேன்.  ஆனால் அவரை  இன்று வரையில்  நான்   நேரில்    பார்த்தது    கிடையாது.  ஒரு மூத்ததலைமுறை    இலக்கியவாதியை  பார்க்கப்போகிறோம்   என்ற உணர்வைத்தவிர   வேறு     எந்தக்கற்பனையும்   என்னிடம்  இல்லை. என்றேன்.
 இன்றைய   தலைமுறை   வாசகர்கள்   கேட்கலாம் ---அது   என்ன    சேரன் - சோழன்?  என்று.
சங்ககாலத்தில்  வாழ்ந்த   மூவேந்தர்கள்    பாண்டியன்  -   சேரன்  - சோழன்.
ஆனால்    நவீன    உலகத்தில்  ஈழத்தில்  அளவெட்டியில்    வாழ்ந்த   கவிஞர் மகாகவி    உருத்திரமூர்த்திக்கு    ஐந்து    பிள்ளைகள்.     மூன்று    ஆண்கள். அவர்களின்     பெயர்     சேரன்  -    சோழன்  -  பாண்டியன்.     இரண்டு  பெண்பிள்ளைகள்.     அவர்கள்    அவ்வை   -   இனியாள்.    மகாகவியின் ஆண்பிள்ளைகள்   மூவரும் (மூவேந்தர்களும்)    தற்பொழுது    கனடாவில்.  அவ்வை    இலங்கையில்.    இனியாள்   மருத்துவராக   அவுஸ்திரேலியாவில்.

உயர்திணையின் இலக்கியச் சந்திப்பு - 30 .03 .2014

.

விண்ணைத் தாண்டி வருவேனே! - (சிறுகதை) -ஸிட்னி இரா. சத்யநாதன்

.
திரு. சத்தியநாதன் அவர்களின் இச் சிறுகதைக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” என்ற தலைப்பில் பிறிஸ்பேர்ன் தாய் தமிழ் பள்ளி நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிட்டியுள்ளது . 


டேவிட்  தனது இருக்கையில் இருந்தவாரே கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார் த்தான். காலை பத்து மணிதான் என்ற போதும் மார்ச் மாத வெய்யில் அந்த நேரத்திலும் சற்று உக்கிரமாகவே இருந்தது.

'டிம் இன்னும் வரவில்லை; நேரத்திற்கு வந்துவிடுவானே; ட்ரபிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்' என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். 'டிம் நல்லவன். அவனைப்போல, தொழிலில் அக்கறையும் திறமையும் உள்ளவனைத் தேடிப்பிடிப்பது இலேசல்ல' என்பது டேவிட்டுக்குத் தெரியும்.

விவசாயிகளுக்கு மாரி பொய்த்துப்போவது போல, டேவிட்டுக்கு இந்த கோடையும் பொய்த்துப்போனது.' டிசம்பர் தொடக்கம் மார்ச் வரை நீடிக்கும் இந்த வெய்யில் காலத்தில் பிஸினஸ் நன்றாகவே நடக்கும்; எப்படியாவது ஒரு புதிய ஹெலிகாப்டர் வாங்கிவிடலாம்' என்று நினைத்திருந்தான். இருநூறு கில்லோ மீட்டர் வேகத்தில் பதினாலு பேரை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய, 'ஸிக்கோஸ்கி - எஸ் 76(Sikorsky -s76) வகை ஹெலிகாப்டரை, சில மாதங்களுக்கு முன்புதான், பாரிஸில் நடைபெற்ற ஹெலிகாப்டர் ஷோ ஒன்றில் பார்த்திருந்தான். வேகம் மட்டுமல்ல, பாதுகாப்பும் அதிகம் உள்ள 'ட்வின் எஞ்சின்' ஹெலிகாப்டர் அது.

இலங்கைச் செய்திகள்


பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு

பிள்ளைகளை படையினரே கொண்டுசென்றனர் : ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவினர்கள்

கச்சதீவு, நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த 75 இந்திய மீனவர்கள் கைது

திருமலை நகர் ஹர்த்தாலால் ஸ்தம்பித்தது

இலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை

வெள்ளவத்தை பகுதியில் புதிதாக குடியிருப்போருக்கு பொலிஸ் பதிவு

பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

அச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா

பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு
20/03/2014  அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மன்றாசி தோட்டத்தின் தேயிலை மலைப்பகுதியில் இருந்து பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமொன்றை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 
இவர் இன்றுக்காலை தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு கடமைக்காக சென்றுள்ளதாக தெரிய வருவதுடன் இவர் நச்சருந்தி இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. 
சடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி 


பீடுடைய தமிழ்த் தாத்தா ! - எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்

.


      உள்ளமெலாம் தமிழுணர்வாய் ஊற்றெடுக்க
      ஊரூராய் அலைந்தாரே    உ வே சா
      தெள்ளுதமிழ் நூல்கள் தேடிநின்றவேளை
      செல்லரித்த சேதிகேட்டு திகைத்துநின்றார்

      ஏடுதேடி எங்கேயோ சென்றலைந்தார்
      காடுமேடு பாராமல் நடந்தலைந்தார்
      நாடுபோற்ற பணிசெய்து நலம்விளைத்தார்
      பீடுடைய தமிழ்த்தாத்தா ஆகிநின்றார்

     ஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிப்பதற்கு
     காட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தருவே ஐயா
     பூட்டியே வைத்தஏட்டை புத்தகமாக்கி வைத்த
     பாட்டனே எங்களையா பணிந்துனை நிற்கிறோமே

    ஏடெலாம் இடஞ்சலென்று எரித்திட முயன்றவேளை
    கேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா
    புதைகுழி வெட்டியேட்டை புதைத்தது கண்டபோது
    புயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா

   மெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து
   கைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்
   அய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்
   செய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்

பைந்தமிழ் மொழியைக் கற்று
பலபேரும் வியக்க நின்றாய்
சொந்தமாய் சேர்த்த  சொத்து
சுந்தரத் தமிழே ஆச்சு

உலகச் செய்திகள்


இந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்

ஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து எரித்த கணவன்


ரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா

இந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்

14/03/2014

9-வது இடத்தில் இளையராஜா

.
உலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டி யலில் 9-வது இடத்தை இளையராஜா பிடித்து ள்ளார்.உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட் டுள்ளது.
இப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9வது இடத்தினை பிடித்திருக்கிறார்.
இதில் இத்தாலியன் கம்போஸர் மொர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசையமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் 2-வது இடத்தையும், அமெரிக்க கம்போஸர் ஜான் வில்லியம்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

                                  டேஸ்ட் ஆப்  சினிமா பக்கம் படிக்க..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசைப்பணியாற்றியுள்ள இசைஞானி இளையராஜா இந்தப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.-
தகவல் தி இந்து தமிழ்

தொகுப்பு செல்வன்
நன்றி indrayavanam.blogspot

இலைகள் பழுக்காத உலகம்..... வெங்கட். புது தில்லி.

.
சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று தான் “இலைகள் பழுக்காத உலகம்”.  இந்த கவிதைத் தொகுப்பினை வெளியிட்டவர் பதிவுலகில் முத்துச்சரம் எனும் வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதிவரும் திருமதி ராமலக்ஷ்மி.  கவிதைகள்இ கட்டுரைகள்இ மொழிபெயர்ப்புஇ மிகச் சிறந்த புகைப்படங்கள் எடுப்பதுஇ என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். இப்புத்தகம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் மொத்தம் 61 – கல்கிஇ ஆனந்த விகடன்இ வடக்கு வாசல்இ அகநாழிகை போன்ற பல இதழ்களில் வெளிவந்த அவரது சிறப்பான கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். 61 கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தாலும் எல்லா கவிதைகளையும் இங்கே சொல்லி விடக் கூடாது எனும் உணர்வினால் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கப் போகிறோம்.

ஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூர் காலமானார்

.
kapoor
இலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதி வாளரும், பிரபல புகைப்பட கலைஞ ருமான எம். ஏ. கபூர் நேற்று கால மானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 78 ஆகும். மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 300க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களின் ஒளிப்பதி வாளராக கடமையாற்றியுள்ளார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாப னத்தினால் 2000ம் ஆண்டு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். அன்னாரின் ஜனாஸா அவர் வசித்து வந்த திஹாரியில் வைக்கப் பட்டிருந்ததுடன் நேற்று அஸர் தொழுகைக்கு பின்னர் திஹாரிய பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் பிரபல புகைப்படக் கலைஞருமான எம். ஏ. கபூரின் மறைவு கலை உல கிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என தகவல், ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை - 4)
சில வருடங்களுக்கு முன்பு நாளேடு ஒன்றில் வெளியான பத்திச்செய்தி:

ஒரு மழைநாளில் அதிகாலை நான்கு மணிக்கு கிரைண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் சிறுவனொருவன் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் காவலர் ஒருவர் பார்த்தார். அவனை எழுப்பி யாரென்று விசாரித்தபோதுஅவன் அந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும் வழக்கமாக ஆறு மணிக்கு அவனுடைய பணிநேரம் துவங்கும் என்றும் அன்று தாமதமாகிவிட்டதென்று பயந்து ஓடி வந்ததாகவும் சொன்னான். காவலர்சிறுவனின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி ஆராய்ந்தார். சுத்தமான ஏப்ரான் துணியொன்றும் மூன்று ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் சர்க்கரைப் பாகும் அதிலிருந்தன.

அந்தச் சின்னப் பையன் கண்விழித்தபோது பணிக்குச் செல்லத் தாமதமாகிவிட்டதென்று நினைத்துவிட்டானாம். "நீ ஏன் உன் அம்மாவை எழுப்பி நேரம் கேட்கவில்லை?" என்ற கேள்விக்குஅவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். "நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை?" என்ற கேள்விக்குஅவர்கள் வீட்டில் கடிகாரம் இல்லையென்றான். "கடிகாரம் இல்லையென்றால் உன் அம்மாவுக்கு மட்டும் எப்படி நேரம் தெரியும்" என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை. தாயைச் சார்ந்து வாழும் சிறார்களுக்கெல்லாம் தங்கள் தாயின் மதிநுட்பத்தின்பால் அளவிடற்கரிய நம்பிக்கை இருப்பதுபோல் அவனுக்கும் இருந்திருக்கலாம். அவனுடைய பெயர் ஆர்வி ஆஸ்பினால். அவன் ஜோன்ஸ் ஆலியில் வசித்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை.

இலங்கையில் சோழர் ஆட்சி

.

பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது. 

கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.

சார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில்.

1831 -- பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.


1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தார். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.
பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.
பீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.
பீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்!

சிட்னி தமிழ் அறிவகம் முகவரி மாற்றம்

.

தமிழ் சினிமா

வல்லினம்

சிலர் சுயநலத்துக்காக படம் எடுப்பார்கள் இன்னும் சில பேர் வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று தன்னை தக்கவைத்து கொல்வதற்காக படம் எடுப்பார்கள்.
ஆனால் ஒரு சிலர் மட்டுமே பொதுநலத்துக்காகவும், எதோ விதத்தில் இந்த படைப்பு உலகில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்பதற்காக எடுப்பார்கள்.
அந்த வரிசையில், சமூகத்தில் உள்ள சில சுயநலக்காரர்களின் பண போதையில், விளையாட்டு எவ்வாறு வணிக ரீதியாக மாறுகிறது என்பதையும் சமூகத்தின் பார்வையில் இன்று வரை விளையாட்டு வீரர்கள் ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக தான் கருதப்படுகிறார்கள் என்ற கதைக்கருவினை மையமாக கொண்டு ‘வல்லினம்’ என்ற படைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஈரம் என்ற திகில் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அறிவழகன் எண்ணத்தில் உருவான படம் ‘வல்லினம்’.
படத்தோடு மைய புள்ளியாக இதுவரை தமிழ்நாட்டுக்கு அவ்ளோ பரிச்சியம் இல்லாத பாஸ்கட் பால் தீம்மை கையாண்டு இருக்கிறார்.
எந்த வித புயல்டுப் அறிமுகம் இல்லாமல் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தன் ரயிலுக்காக கார்த்து கொண்டு இருக்கிறார் நகுல்.
அப்பொழுது ஒரு சிறிய ப்ளாஷ்பேக் கதையோடு நகர்கிறது படம், நகுலும் – கிருஷ்ணாவும் (சிறப்பு தோற்றத்தில்) நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் சிறந்த பாஸ்கெட்பால் வீர்கள்.
இந்நிலையில், ஒரு நாள் நடைபெற்ற பாஸ்கெட்பால் விளையாட்டில் எதிர்பாரத விதமாக நகுலின் வேகத்தால் தன் நண்பனை இழந்துவிடுகிறார். இதனால் சோகம் கொண்ட நகுல், ஊரும் வேண்டாம் இந்த கல்லூரியும் வேண்டாம் என்று பாஸ்கெட்பாலை எரிந்து விட்டு சென்னைக்கு தனது படிப்பை தொடர புறப்படுகிறார்.
சென்னை நேஷனல் கல்லூரியில் படிக்க வந்த இடத்தில் குணா, ஜெகன் போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது.
பிறகு எப்பொழுதும் போல கூத்து, கும்மாளம், நட்பு, காதல் என்று கல்லூரிக்கே உண்டான பாணியில் கதை நகர ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களும் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரர்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது எனும் தோனியிலேயே நடந்து கொள்கிறார் நகுல்.
கிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மேன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நன்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, பாஸ்கெட்பால் பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது.
தனது இறந்த நண்பனுக்காக பாஸ்கெட்பால் விளையாட்டை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்புவும் களமிறங்குகிறார்.
இந்த போட்டியில் யார் வென்றார்கள் மற்றும் விளையாட்டு எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
நகுல் நடித்த படத்திலே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் வல்லினம் தான் , இப்படத்திற்காக நடிப்பில் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறார் நகுல்.
ஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரராக மிகவும் சிரத்தையுடன் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். விளையாட்டை நேரில் பார்த்த உணர்வை தருகிறார்கள் அவரும், அவரது நண்பர்களாக வரும் அம்ஜத், சீனியர் வீரர் மற்றும் எதிரணியில் வரும் மதிவாணன் ஆகியோர். இருப்பினும் பாஸ்கெட்பால் விளையாட்டு பற்றி தெரிந்தவர்களுக்கு ஏமாற்றமே.
கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மிருதுளாவிற்கு வழக்கமாக (பணக்கார பெண்) கதாநாயகனை காரணமே இல்லாமல் காதலிக்கும் வேலை மட்டுமே கொடுத்திருப்பதால் நடிப்பிற்கு பெரிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது.
வில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மேலும் ஆதி, அது குல்கரனி, ஜே.பி, கிருஷ்னா, அனுபமா என நடிகர் பட்டாளம் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.
படத்தின் தொழில்நுட்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எஸ்.எஸ். தமன் இசையில் பாடல்கள் சலித்து போனது, ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் தமன்.
அறிமுக ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், தன் முதல் படத்திலேயே யார் இந்த பாஸ்கரன் என்ற கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகவும் மற்றும் நேர்த்தியாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார்.
ஒரு உன்னதமான படைப்புக்கு கண்டிப்பாக தோள் கொடுத்து தூக்க வேண்டும், அந்த வகையில் இது போன்ற படைப்பினை கொடுத்த அறிவழகனின் முயற்சியை பாராட்டலாம்.
மொத்தத்தில் வல்லினம் ஒரு உணர்ச்சி மிகையான உண்மையான படம் ஆனால் கமர்ஷியல் கலவை சேர்க்காமல் இருந்திருந்தால்!
மொத்தத்தில் விளையாட்டிற்கு கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை.
நடிகர்: நகுல்
நடிகை: மிருதுலா பாஸ்கர்
இயக்குனர்: அறிவழகன்
இசை: தமன்
ஓளிப்பதிவு: பாஸ்கர்
தயாரிப்பு: ஆஸ்கர் பிலிம்ஸ்
நன்றி சினிமா லன்கஸ்ரீ