பொறுமையும் வெறுமையும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்     மெல்பேண் .. அவுஸ்திரேலியா


வானத்தில் வட்டமிடும் குருவிகள் எத்தனை

வண்ணத்துப் பூச்சிக்கு வாலிருக்காசொல்லுங்க

தேன்குடிக்கும் வண்டினுக்கு சிரித்துவிட தெரியுமா

சொல்லுங்க சொல்லுங்க கேட்டுவிடத்  துடிக்கின்றேன்
முயலுக்கு மூளையுண்டா மூஞ்சூறு  சிரித்திடுமா
அணிலுக்கு பல்லிருக்கா அதுசப்பி தின்றிடுமா
குயிலுக்குக் காலுண்டா குரங்குக்குச் செவியுண்டா
கெதியாகச் சொல்லுங்க கேட்டுவிடத் துடிக்கின்றேன்

ஆடுதின்னாப் புல்லுண்டா அரணைக்குப் 
பல்லுண்டா
மாடுதின்னாப் பழமுண்டா மரங்கொத்தி 
பறப்பதுண்டா
காகங்கூடு கட்டிடுமா கறையானதைத்
தின்னிடுமா
காத்துவிட வைக்காமல் சொல்லிடுங்க 
கெதியாக

கருவறை வாசனை - கவிஞர் கனிமொழி

 



அன்புள்ள அம்மா ,

கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !


இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !

நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...

பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !

"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !

உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !

அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।

நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥

உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...

உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...

மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...


இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 70 வற்றாத கண்ணீரைச்சுரக்கும் தாய்மார் ! பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கவேண்டிய கடப்பாடு ! ! முருகபூபதி


போர்க்காலச்  செய்திகள் எழுதி எழுதி எனது நடுவிரலின் மேற்பகுதி  சற்று தடித்துவிட்டது. அவ்வப்போது அதனை அழுத்திக்கொள்வேன்.

அவுஸ்திரேலியாவுக்கு வரும் வரையில் அந்த விரல் அவ்வாறுதான் இருந்தது.

வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்குண்ட நூற்றுக்கணக்கான  தமிழ் இளைஞர்கள் தென்னிலங்கையில் பூசா முகாமுக்கு அழைத்துவரப்பட்டனர்.

மேலும் சிலர் தெற்கில் சில பொலிஸ் நிலையங்களிலிருந்த தடுப்புக்காவல் சிறைகளில் விசாரணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.

எனக்கு சிறுவயதில்,  1954 ஆம் ஆண்டு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்வித்தவரும்  எங்கள் ஊர் பாடசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியருமான  பண்டிதர் க. மயில்வாகனன் எமது தாய் மாமனார் சுப்பையாவுடன் என்னைத்தேடி வந்திருந்தார்.

நான் கொழும்பில் வீரகேசரியில் கடமை முடிந்து முன்னிரவில் வீடு


திரும்புகிறேன். அவர்கள் இருவரும் எனக்காக காத்திருந்தனர்.

பண்டிதரைக்கண்டதும், அவரது தாழ் பணிந்து வணங்கினேன்.  எனது  முன்னாள் ஆசிரியர்களை உலகில் எங்கே கண்டாலும் அவ்வாறு வணங்குவது எனது இயல்பு.

யாழ்ப்பாணத்திலிருந்து அவர் ஏன் அந்தநேரத்தில் என்னைத் தேடி வந்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.  அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, சங்கானை, வடலியடைப்பு, பண்ணாகம் முதலான பிரதேசங்களில் பல இளைஞர்கள் கைதாகி பூசாவுக்கு கொண்டுவரப்பட்ட செய்தியை எழுதியிருந்தேன்.

இதில் பண்ணாகம் பற்றி ஒரு செய்தியை தெரிந்துகொள்ளுங்கள். இதுதான் அமிர்தலிங்கத்தின் பூர்வீக ஊர். இங்கிருந்து சட்டக்கல்லூரி சென்ற அமிர் வட்டுக்கோட்டை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்.  1970 தேர்தலில் முன்னாள் அதிபர் ஆ. தியாகராஜாவிடம் தோற்றவர்.   அதன் பிறகு  அதே வட்டுக்கோட்டையில்தான் அமிர்தலிங்கம் தனிநாட்டுக்கோரிக்கையை அறிவித்தார்.  அதனையே இன்றளவும் வட்டுக்கோட்டை தீர்மானம் எனச்சொல்லிவருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் ஈழத்துப்புலம்பெயர் கலை, இலக்கிய முயற்சிகள். - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா –

 


ஓர் ஆவணப் பதிவுக்கான அடித்தளமே இந்தக் கட்டுரை. இதில் சேர்க்கப்படவேண்டிய தகவல்களைத் தந்துதவுமாறு அறிந்தவர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். முழுமையான பதிவு வெளியிடப்படும்போது, தகவல்களுக்கான மூலங்களும், உசாத்துணை விபரங்களும் குறிப்பிடப்படும்.

ஒன்பது கோடித் தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றார்கள். தமிழகமும், இலங்கையும் தமிழரின் பாரம்பரியத் தாயகங்கள். அந்தத் தாயகங்களுக்கு வெளியே எண்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

உலகின் மூலை முடுக்குக்களிலெல்லாம் தமிழன் தன் காலைப் பதித்திருக்கிறான். காலைப் பதித்த இடமெல்லாம் வாழத்


தலைப்பட்டுவிட்டான். வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் வாழ்வாதாரங்களுக்காகத் தாயகங்களைவிட்டு இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் நிலை பிறழ்ந்து போனார்கள். மொழியிழந்து போனார்கள். இனம் மறந்து போனார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் தாயகங்களோடு தொடர்பிழந்து போனாலும் மொழி மறந்துபோகாமல், இனப்பிறழ்வுக்கு ஆளாகாமல் இன்னும் தமிழராய் இருக்கின்றார்கள். தென்னாபிரிக்காவில், மலேசியாவில், சிங்கப்பூரில் இலங்கையின் மலையகத்தில் எல்லாம் இனத்துவ அடயாளங்களைப் பேணி அந்த மக்கள் தனித்துவத்துடன் வாழ்கின்றார்கள். அண்மைக்காலத்தில் தாயகங்களில் இருந்து, குறிப்பாகத்  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைத்துலக நாடுகள் பலவற்றில் அந்தந்த நாடுகளின் பிரசைகளாக மாறியவர்களாயும், மாறாதவர்களாயும், அகதிகளாயும் வாழ்கின்றார்கள். அவர்களெல்லாம் தாயகங்களோடு இணைந்தவர்களாயும், தாயக நினைவுகளைச் சுமந்தவர்களாயும், தாய்மொழிப்பற்று மிகுந்தவர்களாயும் அந்தந்த நாடுகளில் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். வாழுகின்ற நாடுகளில் வழங்குகின்ற மொழிகளிலே படிக்கவும், எழுதவும், பேசவும் வேண்டியது புலம்பெயர்ந்தவர்களுக்கு இன்றியமையாததாகின்றது. 

தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும் ! [ தேடல் நான்கு ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 
மெல்பேண் .... அவுஸ்திரேலியா
 


எழுபத்து இராண்டு பாடல்களுமே ஒரே இடத்தில் கிடைக்க வில்லை. புறத்திரட்டு என்னும்


நூல் பதினான்காம் நூற்றாண்டில் வந்தமைகிறது. அந்த நூலில் இருந்து அறுபத்து இரண்டு பாடல்களை வளையாபதியின் பாடல்கள் என்று அறிஞர்கள் கண்டறிந் திருக்கிறார்கள்.அடியார்க்கு நல்லார் என்பார் சிலப்ப திகாரத்துக்கு உரை எழுதி இருக் கிறார்.அவர் உரை எழுதும் பொழுது மூன்று பாடல்களை எடுத்துக்காட்டாய் கையா ண்டிருக்கின்றார். அந்த மூன்று பாட்டும் வளையாபதியின் பாட்டென்று தீர்மானித் திருக் கிறார்கள்.அத்துடன் மேலும் இரண்டு பாடல்களும் கிடைத்திருக்கின்றன. இலக்கணத் துக் கென்று பல நூல்கள் தமிழில் இருக்கின்றன அவற்றில் யாப்பருங்கலக்காரிகை என்பதும் முக்கிய இலக்கண நூலாகும்.

இந்த நூலுக்கு ஒரு தமிழறிஞரால் எழுதப்பட்ட விருத்தி உரையில் இரண்டு பாடல்கள் எடுத்துக்காட்டாய் கையாளப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கையாளப்பட்ட இந்த இரண்டு பாடல்களும் வளையாபதிக்கே உரியதாகும் என்று தமிழறிஞர்கள் சுட்டிக் காட்டி இருக் கிறார்கள். வளையாபதிக்கான பாடல்கள் இப்படித்தான் சேர்க்கப்பட்டன என்பதை வளை யாபதி பற்றி நோக்கும் பொழுது அறியக்கூடியதாக இருக்கிறது.

   


 நிறைவான நிலையில் வளையாபதி காப்பியம் கிடைக்கா விட்டாலும் - கிடைத்த பாடல் களைக் கருத்திருத்தில் இருத்தி அதனையும் காவிய வரிசையில் வைத்தமை யினைப் பாராட்டியே ஆகவேண்டும்.குறைவான பாடல்கள் கிடைத்த நிலையிலும் அதனூடாக ஒரு கதையினையும் இணைத்த பாங்கையும் பாராட்டவே வேண்டும்.

  சிலம்பில் புகார் வந்தது போல் வளையாபதியிலும் புகார்வருகிறது. இங்கு தான் - கதையின் நாயகனான நவகோடி நாராயணன் வருகிறான்.சிலம்பின் நாயகனான கோவலன் கண்ணகியை மணம் முடிக்கிறான். பின்னர் மாதவியையும் மணக்கிறான். கோவலனும் கண்ணகியும் வணிகர் குலத்தவர். மாதவி அக்குலத்தவள் அல்ல. வளை யாபதி நாயகன் நவகோடி நாராயணனும் வணிகர் குலத்தவன். வணிகர்  குலத் துப் பெண்ணை இவனும் முதலில் மணக்கிறான். பின்னர் வணிகர் குலம் அல்லாத இடத்தில் இருக்கும் ஒரு பெண்ணையும் இரண்டாந்தாரமாய்  மணக்கிறான்.கிட்டத்தட்ட கோவலனின் சகோதரன் போல வளையாபதி நாயகன் நவகோடி நாராயணனும் அமைகிறான் அல்லவா !

மூத்த முற்போக்கு படைப்பாளி செ. கணேசலிங்கன் சென்னையில் மறைந்தார் முருகபூபதி


இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும்  ஈழத்தின் மூத்த முற்போக்கு  எழுத்தாளர் செ. கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையில் கடந்த  04 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04 ஆம் திகதி மாலையே சென்னையில் நிறைவுபெற்றது. 


சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.  

மூத்த தமிழ் அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார்.

செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது.

சர்வதேசப்புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (இலக்கியத்திற்காக நோபல்


பரிசு பெற்றவர்) இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு தலைமைதாங்கிச் சிறப்பித்த பெருமையும் கணேசலிங்கனுக்குண்டு. புனா திரைப்படக்கல்லூரியிலும் அவர் சிறிதுகாலம் பயிற்சி பெற்றவர். அங்கு பிரபல இயக்குநர் மிருணாள் சென் போன்றவர்களுடன் நட்புறவுகொண்டவர். கமல்ஹாஸன் நடித்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான கோகிலா (கன்னடம்) திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இயங்கியிருக்கும் கணேசலிங்கன் – தமிழக சினிமா உலகின் கோலங்களை தமது கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரித்துள்ளார்.

நான் வதியும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகப்பிரவேசப் பரீட்சைக்கு தமிழும் ஒரு பாடம். தமிழ்மொழிப்பாடப் பரீட்சைக்கு தோற்றும் பல மாணவர்களுக்கு பெண்கள் தொடர்பாக வரும் நேர்முக – எழுத்துப்பரீட்சைகளுக்கு கணேசலிங்கனின் பெண்ணடிமை தீர என்ற நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது என்ற புதிய தகவலையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன். இந்த நூலும், குமரனுக்கு கடிதங்கள், குந்தவைக்கு கடிதங்கள் முதலான நூல்களும் பல ஆயிரம்பிரதிகள் வாசகர் மத்தியில் சென்றுள்ளன.

பாரதி தரிசனம் - அங்கம் 11 பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம் சுகி.சிவம், எந்த எண்ணத்தில் கருத்துக்களை திரிக்கின்றார்…? முருகபூபதி

 


இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நீண்டகாலப்பகை. அந்தப்பகை அவ்வப்போது தணிந்தாலும்,  நீறுபூத்த நெருப்பாக இரண்டு தரப்பிற்குள்ளும் கனன்றுகொண்டுதானிருக்கிறது.

 

இலங்கையில்  சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதை பேசுபொருளாக்கி எழுதியும் வாதிட்டும் வந்தது.

 

இலங்கை மலையகத்தை பசுமையாக்கிய இந்திய வம்சாவளி மக்களை


 நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.  எழுத்தாளர் மு. சிவலிங்கம் அம்மக்கள் கப்பலேற்றப்பட்ட அவலத்தை ஒப்பாரிக்கோச்சி என்ற படைப்பில் உருக்கமாக பதிவுசெய்துள்ளார்.

 

அறுபது  ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்திய-  சீனப் போர் குறித்து  பலதரப்பட்ட விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

இந்தப்போர் நடந்த காலத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியப் பிரதமராகவும்  சூ என் லாய் சீனப்பிரதமராகவும்  மா ஓ சேதுங்  சீன அதிபராகவும் பதவிகளை வகித்தனர்.

இந்திய – சீன யுத்தம் தொடங்குவதற்கு முன்னர்  1960 இல்          சூ என். லாய் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - உத்தரவின்றி உள்ளே வா & அவளுக்கென்று ஓர் மனம் - ச. சுந்தரதாஸ் - பகுதி 22

தமிழில் புதுமை இயக்குனர் என்று பேர் பெற்றவர் ஸ்ரீதர் .இவர் தயாரித்து இயக்கிய பல படங்கள் தமிழிலும்,ஹிந்தியிலும் சக்கை போடு போட்டன.1969ம் ஆண்டு வெளிநாடுகளுக்கு சென்று சிவாஜியின் நடிப்பில் சிவந்த மண் படத்தை தமிழிலும் ராஜேந்திரகுமார் நடிப்பில் ஹிந்தியிலும் தயாரித்து இயக்கினார் ஸ்ரீதர் .தமிழில் படம் வெற்றி பெற்ற போதும் ஹிந்தியில் படம் காலை வாரியது.இதனால் பலத்த பொருளாதார நட்டம் ஸ்ரீதருக்கு ஏற்றப்பட்டது.இந்த நட்டத்தை சரிப்படுத்த அகல கால் வைக்கத் துணிந்தார் அவர்.தனது சித்ராலயா பட நிறுவனத்தின் சார்பில் உத்தரவின்றி உள்ளே வா என்ற படத்தையும்,அவளுக்கென்று ஓர் மனம் என்ற படத்தை தமிழிலும்,ஹிந்தியிலும் கலரில் உருவாக்கத் தொடங்கினார் ஸ்ரீதர்.


அதுவரைக் காலம் சித்ராலயா தயாரித்த எல்லாப் படத்தையும் ஸ்ரீதரே டைரக்ட் செய்தார்.ஆனால் இம்முறை முதல் தடவையாக உத்தரவின்றி உள்ளே வா படத்தை தனது உதவி டைரக்ட்டரான என் சி சக்கரவர்த்தியை டைரக்ட் செய்ய அனுமதித்தார் ஸ்ரீதர்.படத்தின் கதையை ஸ்ரீதர்,கோபு,சக்கரவர்த்தி,வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் உருவாக்கினார்கள்.வசனங்களை சித்ராலயா கோபு எழுதினார்.முழு நீள நகைச்சுவைப் படமாக உத்தரவின்றி உள்ளே வா உருவானது.

நான்கு பிரம்மச்சாரி இளைஞர்கள் ஒரே வீட்டில் தங்கி உத்தியோகம் பார்க்கிறார்கள்.விடுமுறையை கழிக்க நால்வரும் திட்டமிட்டு கிளம்பத் தயாராகும் போது ஓர் இளம் பெண் அடைக்கலம் தேடி அவர்கள் வீட்டிற்கு வருகிறாள்.நால்வருக்கும் அவள் மீது அவள் மீது காதல் பிறக்கிறது.ஆனால் அவளோ நால்வருள் ஒருவனான ரவியை காதலிக்கிறாள்.இதற்கிடையில் சித்தசுவாதீனமற்ற ஓர் பெண்ணும்,தொடர்ந்து அநாதரவான ஒரு குழந்தையும் அந்த வீட்டுக்குள் நுழைகிறார்கள்.இவர்கள் யார் ஏன் வந்தார்கள் என்பதை வைத்து படம் நகர்கிறது.

உலகச் செய்திகள்

 வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் திரிபு

கொவிட்–19 மாத்திரைக்கு அமெரிக்காவில் ஒப்புதல்

ஹொன்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் காஸ்ட்ரோ

எல்லையை திறக்கிறது பீஜி

குடியரசானது பார்படோஸ்

உகண்டா விமானநிலையத்தை கையகப்படுத்தியதை மறுத்தது சீனா

27 சீனப் போர் விமானங்கள் தாய்வான் வானில் ஊடுருவல்


வேகமாகப் பரவும் ஒமிக்ரோன் திரிபு

கொரோனா வைரஸ் தொற்றின் ஒமிக்ரோன் திரிபு அதன் முந்தைய திரிபான டெல்டாவை விட வேகமாக பரவுவதாக தரவுகள் காட்டுகின்றன.

இலங்கைச் செய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவியது 'ஒமிக்ேரான்' திரிபு வைரஸ் 

புலிகளின் தங்கம் தேடிய இடத்தில் அகழ்வுப் பணி

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு முயற்சி

TNA பிரதேச சபை உறுப்பினர் நேற்று சடலமாக மீட்பு

பாராளுமன்றில் மு.கா எம்.பிக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் தர்க்கம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சரை ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையர் கொடூர கொலை; காரணமான அனைவருக்கும் தண்டனை

பாதுகாப்பு இல்லையென பாராளுமன்றிலிருந்து ஐ.ம.ச. எம்.பிக்கள் வெளிநடப்பு


இலங்கைக்குள் ஊடுருவியது 'ஒமிக்ேரான்' திரிபு வைரஸ் 

முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டார்

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கு ஒமிக்ேரான் கொவிட் வைரஸ் திரிபு தொற்று உறுதியாகியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

 கற்பகதருவாம் பனையினைக் கருத்தினில் இருத்துவோம் !          

        

                    [ சுவை பத்தொன்பது ]
             


                             

 
 
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
   மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
   
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 



பனையின் நாரைச் சாதாரணமாக எண்ணிய எங்களுக்கு - படுத்து உறங்கவும்

சுகமாக நித்திரை செய்யவும் கட்டிலின் ஆதாரமாய் ஆகி யே வந்திருக்கிறது என்னும் செய்தி - பனையின் நாரின் மீது மதிப் பினை ஏற்படுத்தி நிற்கச் செய்திட வைத்திருக்கிறதல்லவா ! தென் னையினைப் பிள்ளை என்று சொல்லி யே பேணி வளர்க்கிறோம். பனையினை முற்றத்திலோ , வீட்டின் அருகிலோ வைத்திருக்கவே மாட்டோம். ஆனால் தென்னையினை வீட்டைச் சுற்றியே வைத்திரு ப்போம். தென்னை மரங்கள் சூழவுள்ள தென்னந் தோப்புக்குள் வீடுகளை அமைத்து மகிழ்ந்திருப்போம். அதேவேளை பனந்தோப்புக்குள் வீடமைத்து இருப் போமா என்பது கேள்விக்குறியாகும். தென்னையி னைப் பேணும் அளவுக்கு பனையினைப் பேணுகிறோமா என்று எண் ணிப்பார்த்திட வேண்டும். ஆனால் இதைப்பற்றியே பார்க்கும் நிலை யிலே இல்லாமல் , பனையானது மிகவும் தாராளமாய் கொடுக்கும் அத்தனையையும் கொடுத்துத் திருப்தியடைந்த படியே இருக்கிறது. இதனால்த்தான் " மாநில மரமாய் " நிமிர்ந்து நிற்கிறது என்பது கரு த்திருத்த வேண்டிய விடயமெனலாம்.


படுத்துறங்கக் கட்டிலாய் அமையும் பனை நார் , இருக்கவும் பல வகையில் கதிரைகளுக்கு ஆதாரமாய் அமைகிறது.பனை நார் நாற் காலிகள் - சாய்வு நாற்காலிகள், கைப்பிடியுள்ள நாற்காலிகள்,சுழல் நாற் காலிகள் , என்று பல வகைகளாய் அமைந்து மக்களின் பயன் பாட்டுக்குக் கைகொடுத்து நிற்கிறது.

அதுமட்டுமல்லாமல் - லொறிகள், பேருந்துகள், ஓட்டுநரின் இருப்பிடமாகவும் பயனாகி நிற்கிறது. பனை நாரினால் செய்யப்படும் இருக்கைகள் நீண்ட தூர பயணத்தில் ஓட்டுநர்களுக்கு மிகவும் செளகரியமாக அமைகிறது. நீண்ட தூரப் பிரயாணமோ அல்லது தொடர்ந்து- நிதமும் பிரயாணம் செய்யும் பொழுது வாகனங்களின் இயந்திரத்தின் சூடும், தொடர்ந்து ஒரே இருப்பிடத்தில் அமரும் பொழுது ஏற்படும் சூடும் தணிப்பதற்கு , பனை நாரினால் ஆகிய இருக்கைகள் மிகவும் பொருத்தமானதாகவே இருக்கிறது.பனை நாரினால் ஆகிய இருக்கைகள் மிகவும் பாதுகாப்பானவை. அத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கும் உகந் தவை என்பது முக்கியமாகும். இன்று செயற்கை நாரான பிளாஸ்டிக் முன்னணிக்கு வந்து இயற்கையான பனை நாரினைப் புறந்தள்ளி விடும் நிலைக்கு