சிட்னி துர்க்கை அம்மன் மாசி மக மகோற்சவம்


தேர்த் திருவிழா 05/03/2023

 




















அணங்கு ஐவர் நாட்டியம் - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்



எமது தாயகத்தில் அல்லல் உற்றோருக்கு பொதுத்தொண்டு ஆற்றிவரும் 'பனை' நிறுவனத்திற்கு நிதி உதவி சேகரிப்பதற்காக ‘அணங்கு ஐவர்’ என்ற நாட்டிய நிகழ்வு 25 February 2024 அன்று Bryan Brown அரங்கில் நடந்தேறியது. இந்நிகழ்வின் மூலம் $ 12,000 சேர்ந்ததாக அறிவிக்கவும் பட்டது. பார்வையாளர்கள் அருமையான ஆடலைப் பார்த்து ரசிக்க மட்டுமல்லாது, தமது பணம் நல்லதொரு சேவைதனை வழங்கி மக்கள் வாழ்வை உயர்த்த உதவும் என்ற மன நிறைவையும் பெறுவதற்கு இந்நிகழ்வு வழிகோலியது.

மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்களில் இருந்தும் ஐந்து வேறுபட்ட நாயகியர் பாத்திரங்களை ஐந்து பெண்கள் ஏற்று ஆடினார்கள் .  முதலாவதாக அருந்ததி சுரேந்தர் குந்திதேவியாக தோன்றி, துர்வாச முனிவரின் வரத்தால் சூரிய தேவனைக் காண்கிறார். அவர் மூலம் கர்ப்பவதி ஆகிறார். இங்கு சிறுபிள்ளைத்தனமாக முனிவர் வரத்தை பரிட்சை பண்ண எண்ணும் அனைத்து முக பாவங்களையும் அருந்ததி சுரேந்தர் அற்புதமாக வெளிப்படுத்தினார். குடும்ப பந்தத்தில் ஈடுபட முடியாமல் உண்டான மனக்கவலை, குழந்தையைப் பராமரிக்க இயலாமை, சமூக ஏளனம் அத்தனையும் சேர, குழந்தையை ஆற்றிலே மிதக்க விடும் தாயின் ஆற்றாமை பார்வையாளர் மனதை உருக்கும் காட்சியாக அமைந்தது. குந்தி பாத்திரத்தை ஏற்றிருந்த அருந்ததி சுரேந்தர் உணர்ச்சி மேலீட்டால் தன்னை மறந்து ஆடியதுபோல் தோன்றியது .

வர்ணம், குந்திதேவி இவற்றிற்கான சாகித்தியங்களை மதுராந்தகி வைத்திலிங்கம் ஆக்கி இருந்தார். இவை அருமையாகவும் இனிமையாகவும் அமைந்திருந்தன.

வையத்துள் வாழ்வாங்கு வாழ பலவுரைத்தார் !


மகாதேவ ஐயர்   ஜெயரமாசர்மா

மேனாள்தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்  
மெல்பேண் ….  அவுஸ்திரேலியா 



நல்லறத்தை நன்னெறியை நாமுணர வைப்பதற்கு
வள்ளுவனார் உவந்தளித்த  நல்வரமே குறளாகும்
சொன்னயமும் பொருணயமும் எமக்கீயும் நன்னூலாய்
எஞ்ஞான்றும் விளங்குவது எங்கள் திருக்குறளாகும் 

ஆயிரத்து முன்னூற்று முப்பதென்ப தெண்ணல்ல 
அத்தனையும் அனைவருக்கும் வாய்த்தபெரு பொக்கிஷமே 
ஈராயிரம் வருடம் நிலைத்திருந்து  இம்மண்ணில் 
பேரொளியாய் திகழுவது வள்ளுவத்தின் பெருமையன்றோ 

தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர் பலராவர்
அனைவருமே அன்னைக்கு ஆசைமிகு புத்திரரே 
என்றாலும் வள்ளுவரை எம்மன்னை அணைத்திடுவாள்
வள்ளுவரால் தமிழமுது  வானளவும் சென்றதுவே 

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் - 55 தொகுப்பிலும் – பதிப்பிலும் பெற்ற புத்திக்கொள்முதல் அனுபவம் முருகபூபதி

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான் சம்பந்தப்பட்ட


நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, மீண்டும் மெல்பனுக்கு புறப்படும் தறுவாயில்,  ராஜஶ்ரீகாந்தன் நினைவுகள் நூலின் சில பிரதிகளை வடமராட்சியிலிருந்த  மூத்த எழுத்தாளர் நண்பர் தெணியானுக்கு சேர்ப்பித்தேன்.

அவர் எனக்களித்த வாக்குறுதியின் பிரகாரம், 20-03-2005 ஆம் திகதி கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இந்நூலின் அறிமுக நிகழ்வை நடத்தினார். அப்போது நான் அவுஸ்திரேலியாவிலிருந்தேன்.

கல்லூரியின் அதிபர் திரு. ம. குட்டித்தம்பியின் தலைமையில் நடந்த இந்நிழ்வில், கலாநிதிகள் எஸ். சிவலிங்கராசா, த. கலாமணி, செ. திருநாவுக்கரசு ஆகியோர் உரையாற்றினர். எனது சார்பில் நண்பர் தெணியான் உரையாற்றினார். இந்த நிகழ்வின்போதும் நூல் விற்பனையில் கிடைத்த பணம் யாவும் திருமதி லீலா ராஜஶ்ரீகாந்தனிடமே ஒப்படைக்கப்பட்டது.

எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான நண்பர்தான் ராஜஶ்ரீகாந்தன். 


நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 பெப்ரவரியில் புறப்பட்டபோது விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தவர்.  தொடர்ந்தும் என்னுடன் தொடர்பிலிருந்தவர். அவரது மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது.  அவரின்  ஆத்மா சாந்தியடையவேண்டும் என பிரார்த்திக்கொண்டே, என்னால் முடிந்ததை  அப்போது இலங்கையில் செய்தேன்.

தற்போது நண்பர் தெணியானும் எம்மத்தியில் இல்லை. இவர்கள் பற்றிய நினைவுகளை சுமந்தவாறே காலத்தை கடத்துகின்றேன்.

இவர்கள் இருவரும் எனக்குக்கிடைத்த மிகச்சிறந்த நண்பர்கள்.  இவர்களின் பிள்ளைகளுடன் தொடர்ந்தும் தொடர்பிலிருக்கின்றேன்.

இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடர் பதிவில், நான் மேற்கொண்ட இலக்கிய தொகுப்பு முயற்சிகள் பற்றியும் பேசவேண்டியிருக்கிறது. அந்த அனுபவமும் சுவரசியமானது.


1988 இற்குப்பின்னர்  எமது மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்களுடன்  மீண்டும் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது.  எனது அழைப்பின்பேரில்  சிட்னியிலிருந்து மெல்பனுக்கு  வருகை தந்த அவர்,  1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி மெல்பன் வை. டபிள்யூ. சி. ஏ. மண்டபத்தில் நடந்த எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியின் வெளியீட்டு அரங்கில் உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சிக்கு பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலாநிதி காசிநாதர் தலைமை தாங்கினார்.

நைஜீரியாவுக்கு தொழில் வாய்ப்பு பெற்று  எஸ்.பொ.  கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், ஜெம்பட்டா வீதியில்  நாடக, திரைப்பட கலைஞர் மாத்தளை கார்த்திகேசு தமது  இல்லத்தில் நடத்திய  பிரிவுபசார தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டேன்.

ஒரு விடுமுறைக்கு இலங்கை வந்திருந்தபோது  வீரகேசரிக்கு வந்து என்னை மீண்டும் சந்தித்த எஸ்.பொ. , ஆபிரிக்காவில் ஒரு தவம் என்ற தலைப்பில் ஒரு தொடரையும் எழுதத்தொடங்கி,  முதல் அத்தியாயத்தை தந்துவிட்டுச்சென்றிருந்தார்.

இதர அத்தியாயங்களையும் எஸ். பொ. அனுப்பிய பின்னர் அந்தத் தொடரை வெளியிடலாம் என்றார் வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன். ராஜகோபால். அந்தத் தொடரை எஸ். பொ. பின்னர் எழுதி அனுப்பவில்லை.  அதனால் வெளியாகவில்லை.

மீண்டும் மற்றும் ஒரு விடுமுறை காலத்தில் கொழும்பு வந்திருக்கும் எஸ். பொ. , என்னைத் தேடிக்கொண்டு வீரகேசரிக்குச் சென்றுள்ளார். நான் அப்போது அவுஸ்திரேலியா வாசியாகியிருந்தேன். ராஜகோபாலிடம் எனது முகவரியை பெற்றுக்கொண்டு சிட்னிக்கு வருகை தந்த எஸ். பொ. , எனக்கு கடிதம் எழுதி,  எமது நட்பை இந்த புகலிட தேசத்தில் புதுப்பித்துக்கொண்டார்.

மெல்பனில் நடந்த எனது சமாந்தரங்கள் நூல் வெளியீடு அவருக்கு மிகுந்த உற்சாகத்தையளித்தது.  எனது நூல் பற்றிய விமர்சன உரையை  மெல்பன் 3 zzz தமிழ் ஓசை வானொலியிலும் நிகழ்த்தினார். அக்கட்டுரை யாழ்ப்பாணத்திலிருந்து அச்சமயம் வெளியான திசை வார இதழிலும் கொழும்பில் தினகரன் வார மஞ்சரியிலும் வெளியானது.

சிட்னிக்கு நான் செல்லும் சந்தர்ப்பங்களில் எஸ்.பொ.வை அவரது  மூத்த மகன் மருத்துவர் அநுராவின் வீட்டில் சந்திப்பது வழக்கம். அப்போது அவர்கள் சிட்னியில் Strathfield என்ற பிரதேசத்தில் வசித்தார்கள்.

1990 ஆம் ஆண்டு  ஏப்ரில் மாதம் தமிழ்நாட்டிற்குச் சென்று பல எழுத்தாளர்களை சந்தித்தேன். அவர்கள் ஜெயகாந்தன், அசோகமித்திரன், ராஜம் கிருஷ்ணன்,   ‘ சிட்டி  ‘ சுந்தரராஜன்,  சோ. சிவபாதசுந்தரம், திலகவதி, சிவகாமி, அகிலன் கண்ணன், கே.சி. எஸ். அருணாசலம், தனுஷ்கோடி ராமசாமி, தா. பாண்டியன், பொன்னீலன், தி. க. சிவசங்கரன், இந்திரா பார்த்தசாரதி, கவிஞர்கள் வாலி, வைரமுத்து, மேத்தா, மேத்தா தாசன், முத்துதாசன், அக்கினிபுத்திரன், செ. யோகநாதன், சு. சமுத்திரம் ஆகியோர்.

கவிதை..”தனிமை என்றும் கொடுமை” - மெல்போர்ன் அறவேந்தன்

 




படித்தோம் சொல்கின்றோம்: நீறுபூத்திருக்கும் நீண்ட காலப் பிரச்சினையை நினைவூட்டும் ஆவூரானின் சின்னான் குறுநாவல் முருகபூபதி


இலங்கையின் வடபுலத்தில் சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவிலிருந்து,  அருட் திரு. தனிநாயகம் அடிகளார் முதல் பல ஆளுமைகள் அறியப்பட்டுள்ளனர். அவர்களில் கலை, இலக்கியவாதிகளும், ஊடகவியலாளர்களும், தன்னார்வத் தொண்டர்களும்  அடக்கம்.

ஆயினும், நெடுந்தீவின் நிலக்காட்சியுடன் எத்தனை படைப்பிலக்கியங்கள் வெளிவந்துள்ளன..? எனக்கேட்டால், செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற பிரபல்யமான நாவலைத்தான் குறிப்பிடுவார்கள்.

இந்நாவலை அவர் எழுதியமைக்கு, சிறிதுகாலம் அவர் அங்கே காரியாதிகாரியாக  ( D. R. O -  District Revenue Officer )  பணியாற்றியதும் முக்கிய காரணம். செங்கை ஆழியான், பின்னர் செட்டிகுளத்திலும் அதே பணியை தொடர்ந்ததன் பின்னணியில் காட்டாறு என்ற நாவலையும் எழுதினார்.

முன்னைய வாடைக்காற்று திரைப்படமாகவும் வெளியானது.

எனினும் அதன் பெரும்பாலான காட்சிகள், மன்னார்


பேசாலையில்தான் படமாக்கப்பட்டன.

நெடுந்தீவின் நிலக்காட்சியுடன்,  நான்கு தசாப்த காலத்திற்கு முன்பிருந்த சமூக கட்டமைப்பு குறித்து பேசுகிறது, அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் படைப்பிலக்கியவாதியான ஆவூரான் சந்திரனின் சின்னான் என்ற குறுநாவல்.

ஏற்கனவே ஆத்மாவைத் தொலைத்தவர்கள் என்ற கதைத் தொகுதியை வரவாக்கியிருக்கும் ஆவூரானின் இரண்டாவது நூலாக இந்தக் குறுநாவல் வெளிவந்துள்ளது.

யாழ். அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் பதிப்பகத்தினால், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆவூரானின் மணிவிழாக் காலத்தில்  இக்குறுநாவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவூரானுக்கு கடந்த ஜனவரி மாதம் 01 ஆம் திகதி 60 ஆவது பிறந்த தினம்.

ஆவூரானின் பூர்வீக ஊரான நெடுந்தீவைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர் – கல்வி இயலாளர் மாவிலி மைந்தன் சி. சண்முகராசா இக்குறுநாவலுக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். இந்நூலுக்கு மெல்பன் ஓவியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் பொருத்தமான முகப்போவியம் வரைந்துள்ளார்.

எழுத்தாளர் கே. எஸ். சுதாகர் அணிந்துரை தந்திருக்கிறார்.

இவர்கள் இருவருமே கனடா, அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.  இவர்களின் கருத்துக்களுடன், அவுஸ்திரேலியாவில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆவூரானின் இக்குறுநாவல் வெளிவந்துள்ளது.

நீண்ட நெடுங்காலமாக ஆவூரானின் மனதில் கனன்றுகொண்டிருந்த நெருப்பின் வெளிப்பாடாகவும் இந்த படைப்பிலக்கிய முயற்சியை அவதானிக்க முடிகிறது.

வடபுலத்தின் அடிநிலை மக்களின் பிரச்சினைகளை, போராட்டங்களை,  அவர்களின் ஆத்மாவை ஏற்கனவே படைப்பிலக்கியத்தில் பேசியவர்கள்:   டானியல், டொமினிக் ஜீவா, என். கே. ரகுநாதன்,  செங்கை ஆழியான், தெணியான், நந்தினி சேவியர் என எம்மால் ஒரு சிறிய  பட்டியலை தரமுடிகிறது. இந்த மூத்த தலைமுறை படைப்பாளிகள் தற்போது எம்மத்தியில் இல்லை.  எனினும் அவர்கள் சொன்ன - சித்திரித்த பிரச்சினைகள் இன்னமும் வடபுலத்தில் முற்றாக தீர்ந்துவிடவில்லை.

ஆயுதம் ஏந்திய விடுதலை இயக்கங்கள், களத்திற்கு வந்தபோது,  சாதிப்பிரச்சினை துப்பாக்கி முனைக்குப் பின்னால் மறைந்திருக்கிறது என்றுதான் பொதுவாகச் சொன்னார்கள்.

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் மருத்துவர் சியாமளா நடேசன் தன்னார்வத் தொண்டு நிறுவனம்

கண்டியில்   அங்குரார்ப்பணம்

 


இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன், அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் மருத்துவர் சியாமளா நடேசன், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

 இதன் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 26 ஆம் திகதி கண்டி, ரீஜன்னர் விடுதியில் நடைபெற்றது.

குறிப்பிட்ட புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி வழங்கும் தன்னார்வத்


தொண்டு நிறுவனத்தின் இணையத்தளத்தை, மகப்பேற்று மருத்துவ நிபுணர்   இந்தர்ஜித் சமரசிங்க  தொடக்கி வைத்தார்.  

 பேராதனை மருத்துவ,   பல் மருத்துவ,   மற்றும் மிருக மருத்துவ பீட  முதல்வர்களுடன் பல புற்றுநோய்ச் சிகிச்சை மருத்துவர்களும் இந்நிகழ்ச்சியில்  சமுகமளித்திருந்திருந்தனர்.

 இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான  மருத்துவர்  நிரஜ்ஜலா டீ சில்வா  தமது வரவேற்புரையில்,      இந்த நிறுவனத்தின்  நோக்கங்கள்  செயல்கள் அனைத்தும் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு    சிகிச்கைக்கான வாய்ப்பு வசதிகளற்ற  ஏழை  மக்களுக்கு  உதவும் முகமாகவே அமையும்  எனத் தெரிவித்தார்.

  இந்த நிறுவனத்தை இலங்கையில் ஆரம்பித்திருக்கும்  மகப்பேற்று மருத்துவ நிபுணர்  திருமதி சியாமளா நடேசனின் கணவர்   நோயல் நடேசன் இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,    தனது மனைவி சியாமளா  சிறிது காலத்திற்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் ,  எனினும் விரைவில் குணமாகியதையடுத்து,   எங்கள் தாயகத்தில்  புற்றுநோயால் பாதிக்கப்படும்  ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்தையே  கனவாகக்கொண்டிருந்தார். அந்தக்கனவை நனவாக்குவதற்காக தற்போது  இலங்கை வந்து இந்த தன்னார்வத்  தொண்டு நிறுவனத்தை தொடக்கியிருக்கிறார்.   என்றார்.  

 மருத்துவர்  சியாமளா நடேசன் தனதுரையில்,  புற்றுநோய் தனக்கு வந்த காலத்தில்  தான்  பெற்ற அனுபவங்களை விளக்கினார்.

 இந்நிகழ்வில் உரையாற்றிய இதர மருத்துவர்கள், எமது மக்களில் பெரும்பாலானவர்கள்  வெற்றிலை பாக்கு பாவனையினால் புற்றுநோய்க்கு ஆளாவதாகக் குறிப்பிட்டதுடன்,  இலங்கையில் விவசாயிகள், மற்றும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களிடம்,  பாக்குப்பாவனையின் பக்கவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வு  நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது என்றும், புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டதுமே மருத்துவர்களின் ஆலோசனைகளை நாடுவதிலும் ஆர்வம் காண்பிப்பதில்லை எனவும் குறிப்பிட்டனர்.

திரும்பிப்பார்க்கின்றேன் - இலங்கை வானொலியில் எனது முதல் பாடல் அனுபவம்! ஏகாந்தமாம் இம்மாலையில் என்னை வாட்டுது உன் நினைவே…. சறோஜினி ஆசீர்வாதம்


இந்தக்கட்டுரையை நான் அவுஸ்திரேலியா – மெல்பனிலிருந்து எழுதுகின்றேன்.  ஆனால், இதில் நான் சொல்லவரும் விடயம் எனது தாயகமான இலங்கையில் எனது சிறிய வயதில் நடந்த சம்பவம்.  

அதிலும்  நான் பாடிய பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான கதையைத்தான் இந்த கட்டுரையில் சொல்ல வந்துள்ளேன்.

எனக்கு சிறியவயது பருவம் முதலே பாடல்கள் பாடுவதற்கு மிகவும் விருப்பம்.  எனது குழந்தைப்பருவத்தில் இலங்கை வானொலியை நான் விரும்பிக் கேட்பதுண்டு. அதில் நேயர்விருப்பம் நிகழ்ச்சியில் எனக்கு;  பிடித்தமான பாடல்கள் அடிக்கடி ஒலிபரப்பாகும். நானும் சேர்ந்து பாடுவேன்.

நான் அவ்வாறு பாடுவது எனது அம்மாவுக்கு விருப்பம் இல்லை.  நான்


படிப்பில்தான் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று அம்மா அடிக்கடி எச்சரித்துக்கொண்டிருப்பார்.

நான் கற்ற பாடசாலையில் இடைவேளையின்போது நானும் எனது சிநேகிதிகளும் சேர்ந்து அவரவருக்கு விருப்பமான பாடல்களை இராகத்தோடு பாடுவோம்.  அது இன்பமான அனுபவம்தான்.

இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும்  நேயர்விருப்பம் நிகழ்ச்சி பற்றியும் நானும் சிநேகிதிகளும் எமக்குள் உரையாடிக்கொள்வோம்.

அந்த நிகழ்ச்சியில் பாடலை விரும்பிக்கேட்கும் நேயர்களின் பெயர்களையும் ஒலிபரப்புவார்கள். எங்கள் பெயர்களும் அவ்வாறு ஒலிபரப்பாகவேண்டும் என நாம் விரும்பினோம்.

குறைந்தது பத்துப்போருக்கு மேற்பட்டவர்கள் ஒரு பாடலை விரும்பிக்கேட்டு கடிதம் எழுதினால் மாத்திரமே அந்தப் பாடலை எமது பெயரையும் சொல்லிவிட்டு ஒலிபரப்புவார்கள்.

அதனால், நானும் எனது சிநேகிதிகளும் எங்கள் பெயர்களை எழுதி,  நாம் விரும்பும் பாடலின் முதல் இரு அடிகளையும் குறிப்பிட்டு கடிதம் மூலம் இலங்கை வானொலிக்கு அனுப்புவோம்.

வீட்டில் எமக்கு பொக்கட் மணிக்குத்தரும் பணத்தையே தபால் கட்டணத்திற்கு செலவிடுவோம்.

அவ்வாறு நாம் குறிப்பிட்டு எழுதி அனுப்பிய பாடல்கள் எமது பெயர்களுடன் வானொலியில் நேயர்விருப்பம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகும்போது அதனைக்கேட்டு நாம் மிகுந்த மகிழ்ச்சியடைவோம்.

நேயர்விருப்பம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்வேளைகளில் வானொலிக்கு பக்கத்திலேயே இருப்போம்.  நானும் தங்கை வதனாவும் இவ்வாறு சினிமாப்பாடல் கேட்டுக்கொண்டிருப்பது எமது அம்மாவுக்கு அவ்வளவு பிடித்தமில்லை.

அம்மா எங்களை எப்போதும் படி படி என்றே நச்சரித்துக்கொண்டிருப்பார்.    மகளே நீ  பாட்டுப்பாடி சினிமாக்காரியாகப்போகிறாயா…? அல்லது படித்து வாழ்க்கையில் முன்னேறப்போகிறாயா…? என்று கேட்பார்.

அதற்கு நான், படிப்பேன் – பாடுவேன் என்று ஒரே வார்த்தையில் சொல்வதுண்டு.

ஒருநாள் வானொலி நிலையத்திற்கு நேரில்வந்து பாடவிருப்பமுள்ள நேயர்கள், தங்கள் பெயர் விபரங்களை எழுதி கடிதம் மூலம் வானொலி கலையகத்திற்கு அனுப்பலாம் என்ற செய்தியை ஒலிபரப்பினார்கள்.

அதனைக்கேட்ட எனக்கு ஒரே குதூகலம்.  துள்ளிக்குதித்து எனது மகிழ்ச்சியை வீட்டில் வெளிப்படுத்தினேன்.  நானும் வானொலி நிலையம் வந்து பாட விருப்பம் என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டேன்.

ஒருநாள் அங்கிருந்து கடிதம் வந்திருந்தது.  வழக்கமாக எமது அப்பாவின் பெயருக்குத்தான் கடிதங்கள் வரும். ஆனால், அன்று எனது பெயருக்கு அக்கடிதம் வந்தபோது நானும் தங்கையும்  பாடசாலையில் இருந்தோம். அப்பா வேலைக்குச் சென்றிருந்தார்.

மாசி மகத்தின் மகத்துவங்கள்



தனாசிவம் குருக்கள்,
துர்காதேவி தேவஸ்தானம்,

சிட்னி, அவுஸ்ரேலியா.


(1) மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான்.

(2) மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

(3) மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

(4) சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான்.

(5) மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது.

(6) குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

(7) அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

(8) மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்தார்.

(9) பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

(10) உயர் படிப்பு படிக்க விரும்பு பவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசிமக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

வள்ளுவம் காட்டும் பன்முகம்


மகாதேவ ஐயர் 
ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

                  

 

    உலகில் பல மொழிகள் இருந்த போதிலும் தமிழ் மொழிக்கு பல


சிறப்புகள் இருக்கின்றன. 
அந்தச் சிறப் புக்களில் முக்கியமானது " திருக்குறள் தமிழில் அமைந்திருப்பதே என்பதைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆக வேண்டும். தமிழுக்குக் " கதி " எவை என்ற வினாவுக்குக் கம்பராமாயணமும் , திருக்குறளும் என்றுதான் பலரும் விடை சொல்லுவதுண்டு.இங்கே சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. கம்பரது இராமாயணம் சமூக த்தில் பல மாற்றங்களுக்கு வித்திட்டாலும் திருக்குறளின் இடத்தைத் தொட்டுவிடமுடியாது.

    திருக்குறள் - மதம் சார்ந்தது அல்ல.மொழியைப் பற்றிக் கூறுவதும்

அல்ல.இனம் சார்ந்ததும் அல்ல. 
" இறைவன் மனிதனுக்குக் கூறியது பகவத் கீதை.மனிதன் இறைவனுக்குக் கூறியது திருவாசகம். மனிதன் மனிதனுக்குக் கூறியதுதான் திருக்குறள்." இதனால் திருக்குறள் மனித மேம்பாட்டை மனத்தில் கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழும் வண்ணத்தைக் காட்டுவதற்காகவே வந்த நூலெனலாம்.

    சமணர் தமதென்பார்.பெளத்தர் தமதென்பார்.சைவரும் விட்டாரில்லை. கிரிஸ்தவ, இஸ்லாமிய கருத்து க்களும் வள்ளுவத்தில் இருக்கிறதென்று .. அவர்களும் விட்ட பாடில்லை.மொத்தத்தில் யாவரும் தமக்குரி யதே என்று உரிமை எடுக்கும் அளவுக்குத் திருக்குறள் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன என்பது இதினி ன்றும் புலப்படுகிறதல்லவா?

     திருக்குறள் எண்பது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றது.கிறீஸ்தவ மதநூலான பைபி ளுக்கு அடுத்த நிலையில் உலகமொழிகளில் மொழிபெயர்ப்புக்கு உட்பட்டது " திருக்குறள் "  என்கின்ற பொழுதே அதனுடைய பெறுமதி தெள்ளெனத் தெரிகிறதல்லவா.

      திருக்குறள் கருத்துக்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கூறப்பட்டிருக்கின்றன. திருக்குற ளுக்குப் பலர் தெளிவுரைகள், விளக்கவுரைகள் , என்று எழுதி இருக்கிறார்கள். உரை எழுதுகின்றவர்கள் சிந்தனையை ஒட்டியதாகவே அவர்களால் கூறப்படும் திருக்குறளுக்கான  கருத்துகளும் காணப்படும். அக் கக்ருத்துக்களை எல்லாம் நாம் படித்து விட்டு ..... வள்ளுவர் இப்படியா சொன்னார் என திகைக்கவோ தடுமாறவோ தவறான சிந்தனைகளை மனத்தில் கொள்ளவோ கூடாது.

     இதனையே வள்ளுவரும் அறிந்தாரே என்னவோ தெரியவில்லை

   எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

   மெய்ப்பொருள் காண்ப தறிவு ( 423 ) என்று அப்பொழுதே எழுதிவைத்துவிட்டார்.

   அறம், பொருள். இன்பம், இவை மனிதவாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதன. அறத்தின் வழியில் வாழ வேண்டும் வாழ்வதற்குப் பொருள் மிகவும் முக்கியமானது. பொருள் நல்லபடி அமைந்தால்த்தான் இன்ப த்தை அனுபவிக்க முடியும்.இவை வாழ்க்கையின் நடைமுறை. இங்கு தான் வள்ளுவரை நாம் பார்க்க வேண்டும்.பொருள் வேண்டும். அந்தப்பொருளையும் அறமான வழியிலே தேடவேண்டும்.அறமான வழி யில் வந்த பொருளைக் கொண்டு அறமான வழியிலேதான் வாழவும் வேண்டும். அப்படிவாழ்ந்து பார்..... வையத்துள் வாழ்வாங்கு வாழுவாய் என்று யாவருக்கும் வள்ளுவம் வழிகாட்டுகிறது.

    இந்த வழிகாட்டல் யாருக்கு என்று வினா எழுப்பினால் .... விடை .. யாவருக்கும் என்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணலாம் தானே ! உலகிலே வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் இது பொருந் தும் அல்லவா?

   மொழி வேறுபடலாம்.கலாசாரம் வேறுபடலாம்.நாடுகள் வேறுபடலாம் .... ஆனால் வாழ்க்கை என்று வரும்பொழுது அங்கு வள்ளுவரின் எண்ணம் உட்புகுந்தால் நன்மைதானே.இதனை யாவரும் சிந்திப்பது உகந்ததுதானே. 

     திருக்குறளை அறநூல் என்றுமட்டும் எடுத்துக் கொள்ளமுடியாது.அறத்தைமட்டுமே கூறுவதை தலை யாய நோக்கமாகக் கொண்ட நூல்கள் பல இருக்கின்றன. திருக்குறள் அறத்தையும் காட்டுகிறது. அகத்தை யும் காட்டுகிறது. இல்லறம் பற்றியும் சொல்லும் வேளை துறவறவறம் பற்றியும் சொல்லிநிற்கிறது.இல் லாள் பற்றியும் சொல்லுகிறது. இல்லத்திற்குச் செல்வமாக இருக்கும் குழந்தைச் செல்வம் பற்றியும் சொல் லுகின்றது.விருந்தோம்பலின் பண்பினையும் விட்டுவைக்கவில்லை.

     காமம் பற்றி இப்படியும் விளக்கமுடியுமா என்னும் அளவுக்கு வள்ளுவம் விளக்குகிறது.அதே வேளை கூடா ஒழுக்கம் என்றால் என்ன அதனால் ஏற்படும் விளையுகள்தாம் எவை என்பதையும் குறள் பிட்டுப் பிட்டு வைக்கின்றது.ஆட்சி பற்றி சொல்லுவது அத்தனையும் எல்லா அரசுக்கும் நாட்டுக்கும் ஏற்றனவா கவே விளங்குகின்றன எனலாம்.

முதல் சந்திப்பு மக்கள் வங்கி முகாமையாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம் மக்களின் எழுத்தாளரான கதை ! முருகபூபதி


ஒரு படைப்பாளி எதனை எழுதினாலும்அவ்வெழுத்து வாசகரின் கவனத்தை ஈர்க்காதுவிட்டால் காணாமல் போய்விடுவார்.

  நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகியிருக்கும்  சமகாலத்தில்,  படைப்பாளரின்  ஆக்கம் உடனுக்குடன் பதிவேற்றம் கண்டுவிடும்.

ஆனால்,  முன்பு இந்நிலையில்லை.  ஒரு பத்திரிகைக்கு அல்லது இலக்கிய இதழுக்கென  எழுதும்  படைப்பினை  தபாலில் அனுப்பி,  அது வெளிவரும்வரை காத்திருக்கவேண்டியிருந்தது.


இன்று முற்றாக நிலைமை மாறிவிட்டது.  காகித அச்சில் வெளிவரும் ஊடகங்கள், இத்தனை சொற்களுக்குள் எழுதுங்கள் எனக்கேட்கின்றமையால், படைப்பாளிகள், தாம் எழுதியவற்றை  பிழை திருத்தி செம்மைப்படுத்தும்போது எத்தனை சொற்கள் வந்துள்ளன என்பதையும் கூர்ந்து பார்த்துவிட்டே அனுப்பநேர்ந்துள்ளது.

இந்தச்சங்கடங்கள் இல்லாத ஒரு காலத்தில் எழுதத்தொடங்கியவர்தான் யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.

1997 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நான் இலங்கை சென்றிருந்தவேளையில் மல்லிகை ஜீவா எனக்குத்தந்த கதைத் தொகுதிதான் உணர்வின் நிழல்கள்.  எழுதியிருந்தவர் யோகேஸ்வரி சிவப்பிரகாசம்.

ஜீவா இந்தத் தொகுதியை என்னிடம் தரும்போது, இதனை எழுதியவர் யாழ்ப்பாணத்தில் மக்கள் வங்கிக்கிளையொன்றின் முகாமையாளர் என்ற தகவலையும் சொன்னார்.

வடபுலத்தில்   அப்போது போர்மேகங்கள் சூழ்ந்திருந்தமையால்  அந்தப்பயணத்தில், என்னால் யாழ்ப்பாணம் செல்லமுடியாதுபோய்விட்டது. அதன்பின்னர்,  2010 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, நல்லூர் ஆதீனத்தில் ஒரு இலக்கிய சந்திப்பில் எதிர்பாராதவகையில் யோகேஸ்வரி அவர்களை சந்தித்தேன்.

எனினும் நீண்டநேரம் அவருடன் கலந்துரையாட முடியாதுபோய்விட்டது.

யோகேஸ்வரியின் கதைகளை அவ்வப்போது படிக்கநேர்ந்தது. மீண்டும் ஒரு தடவை இலங்கை வந்தசமயம்  வடமராட்சிக்குச்சென்றுவிட்டு திரும்பும்போது, நான் பயணித்த வாகனச்சாரதியிடம் ,  தம்பி… இடையில் வரும் கோப்பாயில் ஒரு எழுத்தாளரை சந்திக்கவேண்டும்.  ஆனால், அவருடைய வீடுதான் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. அவர் வங்கிமுகாமையாளர். இந்தப்பகுதியில் எவருக்கும் தெரிந்திருக்கும். விசாரித்துப்போம்  “ என்றேன். இவ்வாறு நான் அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது,  வலது புறத்தில் பிரதேச செயலகம் தென்பட்டது.

பார் மகளே பார் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 எம் ஜி ஆரின் நடிப்பில் வெளிவந்து வெற்றி கண்ட படம்


பெற்றால்தான் பிள்ளையா. இந்த படம் வெளிவருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இதே பெயரில் நாடகம் ஒன்று மேடை ஏற்றப்பட்டு நடிக்கப் பட்டு வந்தது. யை ஜி பார்த்தசாரதியின் நாடக அமைப்பினால் மேடை ஏறிய இந்த நாடகத்தை பட்டு என்பவர் எழுதியிருந்தார். ஹிந்தியில் ராஜ்கபூர் நடிப்பில் வெளிவந்த பர்வரிஷ் படத்தின் கதையைத் தழுவி இந்த நாடகம் எழுதப்பட்டது. இந்த பெற்றால்தான் பிள்ளையா நாடகத்தை பலர் பார்த்தார்கள். அப்படிப் பார்த்தவர்களுள் சிவாஜி கணேசனும் ஒருவர். சிவாஜிக்கு நாடகம் பிடித்துப் போகவே அதனை படமாக்க தீர்மானிக்கப்பட்டது. 


கஸ்தூரி பிலிம்ஸ் சார்பில் தயாராகும் படத்தை ஏ பீம்சிங் டைரக்ட்

செய்வதாக ஏற்பாடானது. தன்னுடைய படங்களின் பெயர்கள் ப வரிசையில் ஆரம்பமாக வேண்டும் என்பதை ஒரு சென்டிமெண்டாக கொண்டிருந்த பீம்சிங் படத்துக்காக பெயரை மாற்றி பார் மகளே பார் என்று பெயர் சூட்டினார். இதன் காரணமாகவே பின்னர் எம் ஜி ஆர் நடித்த படத்துக்கு நாடகத்தின் பெயரான பெற்றால்தான் பிள்ளையா இடப்பட்டது.

ஜமீன்தாரர் சிவலிங்கம் அந்தஸ்து, கௌரவம், மரியாதை என்பவற்றில் அதீத நாட்டம் கொண்டவர். அவர் மனைவி லட்சுமி கணவனுக்கு அடங்கி நடப்பவள் . மருத்துவமனையில் இவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதே சமயம் அதே மருத்துவமனையில் நாட்டியக்காரி ஒருத்திக்கு இன்னும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. மருத்துவமனையில் ஏற்படும் விபத்தொன்றினால் குழந்தைகள் எவருக்கு பிறந்தன என்ற குழப்பம் ஏற்படுகிறது. நாட்டியக்காரியும் காணாமல் போய் விடவே இரண்டு குழந்தைகளும் தனக்கு பிறந்தவை என்று லட்சுமி கணவனுக்கு சொல்லிவிடுகிறாள். இரு குழந்தைகளும் ஒரே குடும்பத்தில் இரட்டையர்களாக வளர்கிறார்கள். பதின்னெட்டு ஆண்டுகள் கழித்து எதிர்பாராத விதமாக ஒரு பிள்ளை சொந்தப் பிள்ளை மற்றையது தத்துப் பிள்ளை என்ற உண்மை சிவலிங்கத்துக்கு தெரிய வருகிறது. எரிமலையாக வெடிக்கும் சிவலிங்கம் இரண்டு மகள்கள் மீதும் சந்தேகம் கொள்கிறார்.குடும்பத்தில் சூறாவளி வீசுகிறது.

ஹிந்தியில் இரண்டு ஆண் குழந்தைகள் என்றிருந்ததை தமிழில் இரண்டு பெண் குழந்தைகள் என மாற்றியிருந்தார்கள் . இதனால் படத்துக்கு சென்டிமென்டல் வலு கூடியது. ஒரு மகளாக விஜயகுமாரியும் , மற்றைய மகளாக புஷ்பலதாவும் நடித்தனர். விஜயகுமாரியை விட புஷ்பலதாவின் பாத்திரம் நன்றாக இருந்தது. சிவாஜியை எதிர்த்து அவர் பேசும் காட்சி சூப்பர். விஜயகுமாரி வழக்கம் போல் தியாகத்தின் சின்னமாக சித்தரிக்கப்பட்டார். தாயாக வரும் சௌகார் ஜானகி படம் முழுவதும் உருக்கமாகவும், சோகமாகவும் காட்சியளித்தார்.

சோதனை மேல் சோதனை 13 இற்கு வந்த சோதனை !? அவதானி

ஆறறிவு படைத்த மனிதர்களில்  பலர்  13 ஆம் இலக்கத்தை


துரதிர்ஷ்டமானது எனக் கருதுவார்கள்.  சில வெளிநாடுகளில் இருக்கும் உல்லாசப் பயணிகள் விடுதியில் 13 ஆம் இலக்க அறையும் இல்லை.

சில நாடுகளில் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமைகளில் வந்தால், அதனை கறுப்பு வெள்ளி என நம்பிக்கொண்டு வேலைக்குச் செல்வதை தவிர்த்துவிடுபவர்கள் பற்றியும் அறிந்திருக்கின்றோம்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டம் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் இற்றைவரையில் இலங்கை அரசியல் அரங்கில் தொடர்ந்தும் விவாதிக்கப்படும் பேசும் பொருளாகியிருக்கிறதே தவிர,  உருப்படியாக எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்த இலட்சணத்தில் 13 + ( பதின்மூன்று பிளஸ் ) என்றும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தப்பதிவில் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க படத்தை எமது வாசகர்கள் எத்தனை தடவைதான் பார்த்திருப்பார்கள். இதில் இடம்பெற்றுள்ள இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா, அமைச்சர்கள் காமினி திசாநாயக்கா, ஏ.ஸி. எஸ். ஹமீத் இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ், ஜே.ஆரின் சகோதரர் எச். டபிள்யூ. ஜெயவர்தனா ஆகியோர் தற்போது உயிரோடு இல்லை.

இந்த ஒப்பந்தத்தை அன்று எதிர்த்த ரணசிங்க பிரேமதாசவும் இன்றில்லை.  இவர்கள் மட்டுமன்றி, சுதுமலையில்  அப்போது மக்கள் முன்தோன்றி ஆயுதங்களை கீழே வைப்பதாகச் சொன்ன வேலுப்பிள்ளை பிரபாகரனும், கேர்ணல் கிட்டுவும் மற்றும் ஒரு  தரப்பிலிருந்த ஈ.பி. ஆர். எல். எஃப். செயலாளர் நாயகம்  பத்மநாபாவும்,  தமிழ்த்தலைவர்கள் அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும்  இன்றில்லை.  

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி வந்தால், குறிப்பிட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 36 வருடங்களாகின்றன.

1987 ஆம் ஆண்டு பிறந்த தமிழ் – சிங்கள – முஸ்லிம் குழந்தைகளும்  வளர்ந்து படித்து வேலை வாய்ப்பு பெற்று மணம் முடித்து பிள்ளைகளும் பெற்றுவிட்டனர்.

ஆனால், அன்று பிறந்த ஒப்பந்தம் இன்றும் அந்த இடத்திலேயே தவித்துக்கொண்டு நிற்கிறது.  ஆனால், அதனைப்பற்றிப் பேசிப் பேசிய பலரும் சலிப்பின்றி அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 36 வருட காலத்திற்குள் இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. அவ்வாறு மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் எமது அனைத்து அரசியல் தலைவர்களும் கையில் தூக்கிப்பிடித்துப் பேசுவது இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தைத்தான்.

அன்று வடக்கும் – கிழக்கும் இணைந்த மகாணசபை திருகோணமலையை தலைமையகமாக வைத்து இயங்கத்தொடங்கியது. அந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவரான  பின்னர் வந்த ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாச,  விடுதலைப்புலிகளை My Boys என விளித்து,  வரவேற்று கொழும்பில் உல்லாசப்பயணிகள் விடுதியில் தங்க வைத்து உபசரித்து, பணமும் ஆயுதங்களும் வழங்கி ஆதரித்து தனது வழிக்கு இழுக்க முனைந்தார்.

இறுதியில் அவர் 1993  ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி கொழும்பில் நடந்த மேதின ஊர்வலத்தில் ஒரு தற்கொலைதாரியினால் கொல்லப்பட்டார்.

மாசி மகம் சிறப்பு பதிவு




தனாசிவம் குருக்கள்,
துர்காதேவி தேவஸ்தானம்,

சிட்னி, அவுஸ்ரேலியா.



மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் அன்று இருக்கும் விரதத்திற்கு பெயர் தான் மாசி மக விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்து போய்க் கொண்டு தான் இருக்கும். ஆனால் மாசியில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே விசேஷமாக கருதப்படுவது ஏன் தெரியுமா?

மகம் நட்சத்திரம் 06/03/2023 அன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம் நிறைந்து கானம்படுகின்றது, இன்நாளில் நாம் இறை வழிபாடுகள் செய்யும் பொழுது மங்கள வாழ்வு பெறுவதாக புராண வரலாற்றுக் குறிப்புகள் எடுத்துரைக்கிறது. அதை பற்றிய விரிவான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்.’ என்பது ஜோதிட பழமொழி. அதாவது மகம் நட்சத்திரத்தில் பி‌றந்தவர்கள் இந்த உலகத்தையே ஆளும் தகுதியும், திறனும் உடையவர்களாக இருப்பார்களாம். மேலும் மகம் நட்சத்திரம் ஆனது பித்ருகளுக்கு உரிய நட்சத்திரமாகவும் பார்க்கப்படுகிறது. மாசி மகம் அன்று பௌர்ணமியும் சேர்ந்து வரும். முழு பூரண சந்திரனை கொண்டுள்ள மகம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்நாளில் விரதம் இருந்து இறை வழிபாடுகள் செய்யும் பொழுது கேட்ட வரம் கிடைக்கிறது என்பது பக்தர்களுடைய நம்பிக்கை