படுகொலை செய்யப்பட்ட டிமாஷா கயனகியின் கவிதை‏

.
(சம்பவம் – இலங்கை, எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் ‘இராணுவ வீரனது காதலை மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல’ என இராணுவத்தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது.)
கடந்த 24.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய கவிதை இது.,
எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிஸ்ட பரிசு யாருக்கு?

.

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் விற்பனை செய்த அதிஸ்டலாப சீட்டுக்களின் குலுக்கல் தெரிவு ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்காபியில் இடம்பெற்றது. மண்டபத்தில் பலர் கூடியிருக்க.நடுவர்களாக திரு.வேலுப்பிள்ளை திரு.நவரெத்தினவேல் திரு.சிவராமலிங்கம் திருமதி.இந்திராணி சிவசம்பு ஆகியோர் முன்னிலையில் திரு.ஜெயமேனன் அவர்களால் நடாத்தப்பட்டது. தெய்வீகா மரியநாயகம் கேசினி கேதீசன் கனூஜா சிறீதரன் ஹர்சினி சிறீதரன் ஆகிய நான்கு சிறுமிகளைக்கொண்டு சீட்டிழுப்பு செய்யப்பட்டது. பல தொண்டர்களின் உதவியுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

அதிஸ்ட இலக்கங்களை கீழே காணலாம்

SYDNEY MUSIC FESTIVAL 2014 - JUNE 7,8,9

.

வீணா - வேணு - இலய சங்கமமாக அமைந்த இசை வேள்வி 2014!

படங்கள்: திரு.ப. இராஜேந்திரன்.
'இசை வேள்வி' என்பது அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கர்நாடக சங்கீத நிகழ்வாக 2008ம் ஆண்டிலிருந்து நடாத்தி வருகின்றோம்.
2008ம் ஆண்டில் 'சங்கீத கலாநிதி' நித்தியஸ்ரீ மகாதேவன், 2010ல் 'வீணை' இராஜேஷ் வைத்தியா,
2012ல் 'கலை இளமணி' காஷ்யப் மகேஷ் எனக் கலைஞர்கள் பங்கேற்ற இசை வேள்விகளை திருப்திகரமாக அரங்கேற்றியிருந்தோம்.


மெல்பனில் நடந்த தமிழ் கவிதை இலக்கியம் அனுபவப்பகிர்வு

.

அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய  கலைச்சங்கம்   கடந்த   24 -5-2014    ஆம்    திகதி     சனிக்கிழமை        தமிழ்க்கவிதை   இலக்கியம்    அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சியை  மெல்பனில்      Darebin Intercultural Centre  மண்டபத்தில்  நடத்தியது.    சங்கத்தின்    நடப்பாண்டுக்கான    மூன்றாவது    அனுபவப்பகிர்வு   கவிதை    தொடர்பாக     நடத்தப்பட்டது.    சங்கத்தின்   தலைவர்    எழுத்தாளர்   Dr.  நடேசன்   தலைமையில்    நடந்த   இந்நிகழ்வில்   எழுத்தாளர்    திரு. லெ.முருகபூபதி    தொடக்கவுரை   நிகழ்த்தினார்.
  கவிஞர்  பாடும்மீன்  சு. ஸ்ரீகந்தராசா  இந்நிகழ்வை   நான்கு  அரங்குகளாக    ஒருங்கிணைத்திருந்தார்.
சங்க காலம்   முதல்    இன்றுவரை    கவிதை    இலக்கியத்தில்    ஏற்பட்டுள்ள  மாறுதல்கள்  -  (பாடு பொருளில் - உள்ளீட்டில் - வடிவத்தில்)
திரு.சு.ஸ்ரீகந்தராசாவின்   ஆரம்பவுரையுடன்  நிகழ்ச்சிகள்  தொடர்ந்தன.
கருத்துரைகள்   அரங்கில்  மனதில்   மிகவும்   பாதிப்பை  ஏற்படுத்திய   கவிதை  என்ற     தலைப்பில்   கவிதையைப்    படித்து    அதற்கான    காரணத்தை  சிலர்  பகிர்ந்து  கொண்டனர்.
திருவாளர்கள்  பொன்னரசு  சிங்காரம் - நோயல் நடேசன் -  அரவிந்தன் க.சிவசம்பு - சு.ஸ்ரீகந்தராசா  - திருமதி. சாந்தினி  புவனேந்திரரசா   ஆகியோர்     இந்நிகழ்வில்   பங்கேற்றனர்.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
குண்டு  வெடிப்பில்   ஒரு   கண்ணை    இழந்தபோதும்    இயங்கிய    அபூர்வ  கலைஞன்   ஸ்ரீதர்    பிச்சையப்பா

   புதுமைப்பித்தனது    வாழ்க்கை    தமிழ்    எழுத்தாளர்   ஒருவரின்  சோக நாடகம்  -    உயிருள்ள    எழுத்தாளர்களுக்கு    ஒரு    எச்சரிக்கை  -  என்று எழுதினார்    தொ.மு.சி.ரகுநாதன்.    ஸ்ரீதர்    பிச்சையப்பாவின்    மறைவுச்செய்தி கிடைத்தபோது    ரகுநாதனின்    அந்தக்கூற்றைத்தான்    நினைத்துப்பார்த்தேன்.
 இந்த   நினைப்பு    ஸ்ரீதரை    புதுமைப்பித்தனுடன்    ஒப்பிடும்    முயற்சியல்ல.
ஸ்ரீதர்   மட்டுமல்ல   பல   கலைஞர்கள்    எழுத்தாளர்களின்    வாழ்க்கையும்  சோகநாடகமாகத்தான்    அரங்கேறியுள்ளன.    பட்டியலிட்டால்    அது  அவர்களின்    உறவுகளை    காயப்படுத்தும்.    வாழ்பவர்களுக்கு   எச்சரிக்கை என்று    சொன்னாலும் -   எத்தனைபேரால்    இந்த   எச்சரிக்கை   சமிக்ஞையை      புரிந்துகொள்ள முடியும்    என்பது    மற்றுமொரு    கேள்வி.
 2009   ஆம்   ஆண்டு    டிசம்பரில்     இலங்கைவந்து     மீண்டும் அவுஸ்திரேலியா   திரும்புவதற்கு   முன்பு   2010   ஜனவரி  20  ஆம்  திகதி மாலை   கொழும்பில்   பூபாலசிங்கம்     புத்தகசாலையில்    2011   ஆண்டு   ஜனவரியில்   நடக்கவிருந்த     சர்வதேச   தமிழ்   எழுத்தாளர்    மாநாடு   சம்பந்தமான     செயற்குழுக்கூட்டத்தை     முடித்துக்கொண்டு   கீழ்  தளத்துக்கு   இறங்கி    வந்தபோது -    ஒருவர்    அண்ணா    என    விளித்தவாறு   வந்து   என்னை    கட்டி   அணைத்துக்கொண்டார்.

சிட்னியில் வாணிஜெயராமின் இசை நிகழ்ச்சி 07.06 .14

.
திரை இசை ஆரம்

சங்க இலக்கியக் காட்சிகள் 10 (செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.


கலங்காதே! கார் என்று மயங்காதே!

தலைவன் தன் கடமை காரணமாக வெளியூருக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. அவ்வாறு செல்லும்போது அவனது பிரிவைத் தாங்கமுடியாமல் கவலைப்பட்ட தலைவியிடம் கார்காலம் தொடங்குவதற்கு முன்னர் வந்துவிடுவதாக வாக்களித்துச் சென்றான். குறிப்பிட்ட கார்காலம் வந்துவிட்டது. ஆனால் அவன் வரவில்லை. அதனால் தலைவி ஆற்றொணாத் துயரில் ஆழ்ந்தாள். உண்ண மறுக்கிறாள். உறங்க மறக்கிறாள். தன்னை வருத்திக்கொண்டு தலைவன் வரும் வழியையே பார்த்தவாறு ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.

அவளைக்காண அங்கே அவளின் தோழி வரகிறாள். தலைவி அவளிடம் தன் கவலையைக் கூறுகிறாள். “மழை பெய்கிறது. மலர்ச் செடிகள் பூக்கத் தொடங்கிவிட்டன. எனவே மாரிகாலம் வந்துவிட்டது. என் காதலன் இன்னும் வரவில்லையே! அவன் வருவதாகச்சொன்ன காலம் இதுதான் அல்லவா?” என்று தோழியிடம் கேட்கின்றாள்.

அதனைக் கேட்ட தோழி அவளுக்காக இரங்கினாள். அவளது துன்பத்தைப்போக்க எண்ணினாள். அதனால், தலைவியிடம் பொய்யுரைத்தாள். “நீ நினைப்பதுபோல இப்போது வந்திருப்பது கார்காலமல்ல. இது வெறும் வம்ப மாரி. இது கார்காலம்போல உனக்குத் தோன்றுகிறது. உன் தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலம் இன்னும் வரவில்லை” என்று அவளைத் தேற்ற முனைகின்றாள்.

மெல்பேனில் வாணிஜெயராமின் இசை நிகழ்ச்சி 09.06 .14

.
திரை இசை ஆரம்


அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தீமூட்டித் தற்கொலை

.
ஜூன் 1, 2014
 
அவுஸ்திரேலியாவின் விக்ரோறியா மாநிலத்தில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன்னைத் தானே தீமூட்டித் தற்கொலை செய்துள்ளார். மெல்பேணிலிருந்து நூறு கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை காலை தன்னைத்தானே தீமூட்டிய நிலையில் சாலையால் சென்றவர்களால் மீட்கப்பட்ட லியோ சீமான்பிள்ளை என்ற தமிழ்ப்புகலிடக் கோரிக்கையாளர் பின்னர் உலங்கு வானூர்தி மூலம் மெல்பேண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டார். 95 சதவீதம் எரிகாயங்களுக்குள்ளான அவர் உயிருக்குப் போராடிய நிலையில் 01-05-14 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார்.
அவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அதிகளவு மனவழுத்தம், எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை, மீளவும் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படுவோமென்ற பயம் போன்றவை இவற்றுக்குக் காரணமாகவிருக்கின்றன.
லியோ குறித்து அவரது நெருங்கிய நண்பர் பிருந்தன் குறிப்பிட்டபோது,

உலகச் செய்திகள்இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர மோடி

மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் : வைகோ கைது

லிபிய ஊடகவியலாளர் சுட்டுக்கொலை

=======================================================
இந்தியாவின் பிரதமரானார் நரேந்திர மோடி


26/05/2014  இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2014 -14.07.2014

.


தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2014 -விக்டோரியா மாநிலம் 10.08.14

.

கொத்தமங்கலம் தந்த தமிழ் - பிரபா ஸ்ரீதேவன்

.


அண்மையில் ஒருநாள் கொத்தமங்கலம் விசுவனாதனின் அருளுரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்பொழுது அவருடைய தந்தையின் கவிதைகளைப் பாடினார். என்ன எளிமை,என்ன கவிநயம்என்ன கற்பனை வளம் சொல்லிக்கொண்டே போகலாம். அப்பொழுது இந்தத் தலைமுறைக்கு அவரைத் தெரியுமோ என்று தோன்றியது. புகழ் என்பதன் ஆயுட்காலம் ஒரு தலைமுறைதானா?
சமீபத்தில் வந்த ஜல்லிக்கட்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் பிராணிகள் வதை சட்டத்தையும் அரசியல் சாசனம் ஷரத்து 51அ(ஜி)(Art 51A(g))யையும் சுட்டிக் காட்டிஎல்லா உயிரினங்களிடத்திலும் கருணைக் காட்டுவது நம் அடிப்படை கடமை என்று கூறிபிராணிகளை சுத்தமான சுகாதாரமான இடத்தில் வைத்துப் பேண வேண்டும் என்றும்தேவையில்லாமல் நோக அடிப்பதும் சித்திரவதை செய்வதும் கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

இது பொறுத்து சுப்பு அவர்கள் வரிகளைப் பார்போம்.

மாயவரம் பக்கம் வண்டியிளுக்கிற
   மாட்டுக்குக் கொம்பையே காணோமே!

நாயம் தெரிஞ்சு படைக்கிற ஆண்டவன் 
   ஏனிந்த மாதிரி படைச்சுப்பிட்டான்?

கொம்பையும் வாலையும் வெட்டிவிட்டா மாடு 
   கொசுக்கடி நேரத்தில் என்ன செய்யும்?

தும்பிலேயும் போட்டுக் கட்டி வச்சா மாடு 
   துன்பப்படும் இதை அறியாரோ?

வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி

.
வரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி: இளைஞர் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு.


ஐதராபாத்: ஆந்திராவில், ஓட்டுச் சாவடியில் வரிசையில் நிற்காமல், ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவியை, இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்; மத்திய சுற்றுலா அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஆந்திராவில், தெலுங்கானாவுக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தலும் நடந்தது.
'பைபாஸ்' செய்தார்:
இதையொட்டி, ஐதராபாத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடியில், நடிகர் சிரஞ்சீவி, தன் மனைவி, மகள், நடிகரும், மகனுமான ராம்சரண் தேஜா ஆகியோருடன் வந்தார். அப்போது, ஓட்டுச் சாவடி யில் ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தனர். சிரஞ்சீவியும், அவரின் குடும்பத்தினரும், வரிசையில் நிற்காமல், நேராக ஓட்டுச் சாவடிக்குள் சென்று, ஓட்டளிக்க முயற்சித்தனர். அப்போது, வரிசையில் நின்றிருந்த, ராஜா கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியை தடுத்து நிறுத்தினார். ''நீங்கள், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,யாக வேண்டுமானாலும் இருக்கலாம்; மத்திய அமைச்சராக கூட இருக்கலாம். ஆனால், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள், மூத்த குடிமகனோ, மாற்றுத் திறனாளியோ இல்லை. எனவே, வரிசையில் நின்று, ஓட்டளியுங்கள்,'' என்றார். இதனால், சிரஞ்சீவி, கடும் அதிருப்தி அடைந்தார். இதைத் தொடர்ந்து, வரிசையில் நின்றிருந்த மற்ற வாக்காளர்களும், சிரஞ்சீவிக்கு எதிராக, கோஷமிட்டனர். வேறு வழியில்லாமல், சிரஞ்சீவி, வரிசையில் நின்று, ஓட்டளித்தார்.

மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! -- பாரதி மணி

.
இந்தியச் சாலைகளில் கோலோச்சிய வாகன ராஜா விடைபெறும் நேரம் இது!

இந்தியச் சாலைகளையும் அம்பாசிடர் கார்களையும் பிரித்துப் பார்க்கambassdor முடியுமா? அப்படி ஒரு காலமும் வந்துவிடும்போல இருக்கிறது. ஆம், இந்தியச் சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது இந்துஸ்தான் நிறுவனம். இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று கூறப்பட்டாலும் அம்பாசிடர்களின் காலம் நெருங்கிவிட்டது என்பதே உண்மை. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 24,000 கார்கள் விற்றுக்கொண்டிருந்த அம்பாசிடர் கார்கள் இப்போது அதில் பத்தில் ஒரு பங்குகூட விற்பதில்லை.

என்னைப் போன்ற வயதான இந்தியர்களின் பயண வாழ்க்கையின் முக்கிய அங்கமாயிருந்த, எங்கள் செல்ல 'ஆம்பி' வீரன் இன்று மார்க்கெட்டில் கிடைக்கும் விதவிதமான மேனாமினுக்கி கார்களுக்கிடையே போட்டி போட முடியாமல் தோற்றுப்போனான். எங்கள் காலத்தில், 'அம்பாசிடருக்கு நாலு வீல் மட்டும் இருந்தால் போதும்... பெட்ரோலே தேவையில்லை!' என்கிற அளவுக்கு எங்களை ஆட்கொண்டிருந்தது இந்த நண்பன்தான்!

சீன விமானப்படையில் 'குரங்கு படை'

.
சீன தலைநகர் பீஜிங் அருகே ஒரு விமானப்படை தளம் உள்ளது. China Monkey armyஅங்கு பறவைகள் கூட்டம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. போர் விமானங்கள் புறப்படும் போதும், தரை இறங்கும் போதும் பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து விமானங்கள் மீது மோதி விபத்து அபாயத்தை உருவாக்குகின்றன. இதை சமாளிக்க சீன விமானப்படையினர் பட்டாசு வெடித்துப்பார்த்தனர். விசேஷ காக்கைகளையும், துப்பாக்கிகளையும் கூட பயன்படுத்திப் பார்த்தனர். ஆனால் முற்றிலும் பலன் அளிக்கவில்லை. இறுதியாக, விமானப்படைக்கு உதித்த யோசனைதான், குரங்குகள் படை. பறவைகளை விரட்டும் வகையில், ஏராளமான குரங்குகளுக்கு விமானப்படை பயிற்சி அளித்துள்ளது. பயிற்சியாளரின் விசிலுக்கு அவை கட்டுப்படுகின்றன. மரங்களில் உள்ள பறவை கூடுகளை அழித்தல், பறவைகளை விரட்டுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றன. ஒரு குரங்கு 6 கூடுகள் வீதம் அழித்ததில், 180 கூடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இதனால், ''சீன ராணுவத்தின் புதிய ரகசிய ஆயுதம்'' என்று ராணுவ வட்டாரங்களில் குரங்குகள் செல்லமாக அழைக்கப்படுகின்றன.

நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு

.
நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்.
எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்.
எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள்.
இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும்.
அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே.
எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.
ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார், வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.
எளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும் இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காத தன்மை கொண்டவர்.

கூழாங்கற்களாக மாறிவிட்ட சொற்கள் - சுந்தர ராமசாமி:-

தமிழ்ச் சமூகத்தின் சொல் வியாதி பற்றி விளக்குகிறார் சுந்தர ராமசாமி


‘ரெட்டாரிக்’ என்ற ஆங்கிலச் சொல் சில நாட்களாக அடிக்கடி மனதில் வந்து கொண்டிருக்கிறது. மூல அர்த்தத்திலிருந்து அந்தச் சொல் விலகிப் போய்க்கொண்டிருப்பதான தோற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைய ஆங்கில விமர்சனக் கட்டுரைகள் ஒரு சிலவற்றில் அச்சொல் எதிர்மறையாக அல்லாமல் சாதகமாகக்கூடப் பயன்படுத்தப்படுகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இன்று தமிழ் வாழ்வு ஒரு அவலப் புள்ளியில் வந்து நிற்கிறது. சிக்கலான, மொழிவழிப்படுத்தக் கடினமான புள்ளி அது. ஆனால் தமிழ் வாழ்வில் மையச் சுழற்சி சார்ந்த புரிதல்- பல்வேறு கோணங்களிலிருந்து பெறும் பார்வைகளின் தொகுப்பாக- வெளிப்படாத வரையிலும் இந்திய வாழ்க்கையையோ, உலக வாழ்க்கையையோ, வியப்பூட்டும் பிரபஞ்ச விரிவு பற்றிய அறிவையோ நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. தமிழ் சார்ந்த வாழ்வின் உள்ளார்ந்த விதைகள் என்ன? இதைப் பற்றி நமக்கு இன்று தெளிவு இல்லை. இந்த விதைகளை நாம் ஊடுருவிப் பார்க்க முடியாதபடி எவ்வளவோ மாய்மாலங்கள், பொய்த்திரைகள், கபட வேடங்கள், தந்திரங்கள், நீட்சியான ஏற்பாடுகள் நம்மைச் சுற்றிக் கண்ணி வலைகளாக விரிந்து வாழ்வில் ஒரு பகுதியாக இறுகிக் கிடக்கின்றன. தனி நபர்களின் செயல்பாடுகளில் இருக்கும் ஊழல்களை ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு அம்பலப்படுத்த இயலவில்லை என்றால் சமூகச் சரிவுகளை எப்படி விளங்க வைக்கப் போகிறோம் என்பதும் தெரியவில்லை. ஊழலை அம்பலப்படுத்த முயலும்போது எனக்குச் சாதகமாக நிற்கும் ஒரு சூழலை ஏன் நான் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும், முக்கியமாக எழுத்தாளர்களுக்கு வலுப்பட்டுவிட்ட ஒரு சமூகத்தில் வாழ்க்கையை மேலும் கீழ்நிலைக்குத் தள்ளும் ஏற்பாடுகள்தான் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

இலங்கைச் செய்திகள்


பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி காணி சுவீகரிப்பில் படையினர் தீவிரம்

மலேஷியாவில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் நாடு கடத்தல்

பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதி

நாடு கடத்தப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் :மனித உரிமை கண்காணிப்பகம்

வவுனியாவில் மாணவனை காணவில்லை

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் ஜனாதிபதி மஹிந்தவிடம் இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தல்


காஞ்சனை – புதுமைப்பித்தன்

.
1
அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும் போலத்தான் நானும். ஆனால் என்னுடைய தொழில் எல்லோருடையதும்போல் அல்ல. நான் கதை எழுதுகிறேன்; அதாவது, சரடுவிட்டு, அதைச் சகிக்கும் பத்திரிகை ஸ்தாபனங்களிலிருந்து பிழைக்கிறவன்; என்னுடையது அங்கீகரிக்கப்படும் பொய்; அதாவது – கடவுள், தர்மம் என்று பல நாமரூபங்களுடன், உலக ‘மெஜாரிட்டி’யின் அங்கீகாரத்தைப் பெறுவது; இதற்குத்தான் சிருஷ்டி, கற்பனா லோக சஞ்சாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள். இந்த மாதிரியாகப் பொய் சொல்லுகிறவர்களையே இரண்டாவது பிரம்மா என்பார்கள். இந்த நகல் பிரம்ம பரம்பரையில் நான் கடைக்குட்டி. இதை எல்லாம் நினைக்கப் பெருமையாகத்தான் இருக்கிறது. நாங்கள் உண்டாக்குவது போல், அந்தப் பிரமனின் கைவேலையும் பொய்தானா? நான் பொய்யா? திடீரென்று இந்த வேதாந்த விசாரம் இரவு சுமார் பன்னிரண்டு மணிப்போதுக்கு ஏற்பட்டால், தன்னுடைய ஜீரண சக்தியைப் பற்றி யாருக்குத்தான் சந்தேகம் தோன்றாது? “அட சட்!” என்று சொல்லிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.
உட்கார்ந்தபடி எட்டினாற் போல மின்சார விளக்கைப் போடுவதற்கு வாக்காக வீட்டைக் கட்டி வைத்திருந்தான். போட்டேன். வெளிச்சம் கண்களை உறுத்தியது. பக்கத்துக் கட்டிலில் என் மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் என்ன கனவோ? உதட்டுக் கோணத்தில் புன்சிரிப்பு கண்ணாம்பூச்சி விளையாடியது. வேதாந்த விசாரத்துக்கு மனிதனை இழுத்துக்கொண்டு போகும் தன்னுடைய நளபாக சாதுர்யத்தைப் பற்றி இவள் மனசு கும்மாளம் போடுகிறது போலும்! தூக்கக் கலக்கத்தில் சிணுங்கிக் கொண்டு புரண்டு படுத்தாள். அவள் மூன்று மாசக் கர்ப்பிணி. நமக்குத்தான் தூக்கம் பிடிக்கவில்லை என்றால், அவளையும் ஏன் எழுப்பி உட்கார்த்தி வைத்துக் கொள்ள வேண்டும்?

உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

.
Photobucketஎப்போதுமே அது அப்படித்தான் நிகழ்கிறது. வருடம் பூராவும் சேற்றில் இறங்கி வேலை செய்து அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலிகளால் வருடத்திற்கு ஒருமுறைதான் நெல்லுச் சோறு சாப்பிட முடிகிறது. செங்கற்களையும் சிமெண்ட்டையும் மூச்சு வாங்க மேலே சுமந்துச் சென்று அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்க ஒழுகும் குடிசைதான் வாய்த்திருக்கிறது. பளபளப்பான வணிக வளாகத்தின் தங்க நகைக் கடையில் வேலை செய்யும் சிறுமியின் காதில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய ஜிமிக்கிதான் தொங்குகிறது.

மற்றவர்களுக்கெல்லாம் பட்டுச் சேலை நெய்து தரும் நெசவாளர்கள் தங்களுக்கென ஒரு பட்டுச் சேலையை சொந்தமாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமற்றதாக இருக்கிறது என்கிற யதார்த்தக் கொடுமையை நம்முன் வைக்கிறது பிரியதர்ஷனின் திரைப்படம் - 'காஞ்சிவரம்' .

1920 - 1948-களின் காலகட்டத்தில் பயணிக்கும் இந்தப் படம் சிறையிலிருந்து இரண்டு நாள் சிறப்பு அனுமதியின் பேரில் செல்லும் வேங்கடத்தின் நினைவலைகளின் மூலம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.வேங்கடம் (பிரகாஷ் ராஜ்) ஓர் சிறந்த பட்டு நெசவாளன். நெசவாளியான தன் தந்தையின் மரணத்திற்குக் கூட அவர் மீது போர்த்த பட்டுத்துணி இல்லாத வறுமை. பட்டுப் புடவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும்பான்மையும் முதலாளிகளுக்கே போகிறது. நெசவாளர்களுக்கு சொற்ப கூலிதான் தரப்படுகிறது. தனக்கு வரப்போகும் மணமகள் பட்டுப்புடவையுடன் வரவேண்டும் என்பது வேங்கடத்தின் கனவு. ஆனால் யதார்த்தமான சூழல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை.

வேங்கடத்திற்கும் (பட்டுப்புடவை இல்லாத) அன்னத்திற்கும் (ஷ்ரேயா ரெட்டி) நடக்கும் திருமணத்தினால் பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பட்டுப்புடவையுடன்தான் நடத்துவேன் என்கிற வாக்குறுதியை குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறான் வேங்கடம். சாத்தியப்படாத வாக்குறுதியாக இருக்கிறதே என்கிற அவநம்பிக்கையை அவன் மனைவி உட்பட மற்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதற்கென தான் பல வருடங்களாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சில்லறைக் காசுகளை மனைவியிடம் காட்டி அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அந்தப் பணத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தங்கைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

தனது மகளுக்கு எப்படியாவது ஒரு பட்டுச் சேலையை சம்பாதித்து விட வேண்டுமென்பது வேங்கடத்தின் ஆசை. வெறி எனக்கூடச் சொல்லலாம். இதற்காகத்தான் அந்தத் தவறைச் செய்கிறான். தன்னுடைய வேலையிடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் பட்டு நூற்கற்றை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு திருடி வருகிறான். சிறிது சிறிதாக தன் மகளுக்கான கனவுச் சேலையை ரகசியமாக நெய்கிறான். நோய்வாய்ப்படும் மனைவி இடையில் இறந்து போகிறாள். அந்த ஊருக்கு வரும் ஒரு எழுத்தாளனின் மூலம் கம்யூனிசத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளினால் முதலாளியுடன் முரண் ஏற்படுகிறது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நண்பனின் மகனுக்கே தன் மகளை நிச்சயம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீர்மானித்திருந்த படி மகளுக்கு சீதனமாக பட்டுச் சேலை ஒன்றை தருவதாக வாக்களிக்கிறார் வேங்கடம். ஆனால் சேலை முக்கால்வாசிதான் நிறைவடைந்திருக்கிறது.

பிறகு?....

வேங்கடம் தன் மகளுக்கான பட்டுச் சேலையை நெய்து அளித்தாரா? அவர் ஏன் சிறைக்கு செல்ல நேர்கிறது என்பதோடு மனத்தை உலுக்கிப் போடும் அந்த கிளைமாக்சையும் அறிய படத்தை நீங்கள் காணவேண்டும்.

()

வட இந்தியாவில் நானா படேகர், நஸ்ரூதீன் ஷா போன்றவர்கள் இருப்பது போல நமக்கு ஒரு பிரகாஷ் ராஜ் இருப்பது குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்புகளைப் பார்க்கும் நம் இயக்குநர்கள் அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான நடிகர்களை typical பாத்திரங்களில் மாத்திரம் பயன்படுத்தி மாற்றுச் சிந்தனையை, கதைப் போக்கை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள் என்பது வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இவ்வளவு சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

இந்தப் படம் முழுவதையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். திருமண வயது மகள் கொண்ட தந்தையின் தோற்றத்தையும் உடல் மொழியையும் திருமணமான புதிதில் இருக்கிற இளமையையும் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நுட்பமான பாவங்கள் நம்மை கலங்கடிக்கிறது. கிழட்டு வயதிலும் தம்மை இளமையான கதாநாயகன்களாக முன்நிறுத்திக் கொள்ளும் காமெடியர்களுக்கு மத்தியில் கதையின் போக்கிற்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பிரகாஷ் போன்ற நடிகர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்களும் அம்மாதிரியான நடிகர்களை நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவர்ச்சி பிம்பமாக ஆரம்பத்தில் அறியப்பட்ட ஷ்ரேயா ரெட்டி சிறந்த பாத்திரங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களைப் போலவே இதிலும் சிறிது நேரத்திற்கே வந்து போனாலும் தான் தோன்றுகிற காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கடத்தின் மகளாக வரும் பெண்ணும் (ஷம்மு) நண்பராக வரும் நடிகரும் (கூத்துப்பட்டறை நடிகர்) தம் பங்களிப்பை சிறப்பாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

()

சாபு சிரிலின் art direction குறித்து நிச்சயம் சொல்லியேயாக வேண்டும். இதே பிரியதர்ஷனின் கூட்டணியில் உருவான 'சிறைச்சாலை' படத்திலேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டவர் இதிலும் அதைத் தொடர்கிறார். 1900-களில் புழங்கியிருக்கும் பொருட்களை நிறைய உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஊருக்கே முதன் முதலாக வரும் மோட்டார் கார், ஒரு ரூபாய் நோட்டு, பழைய அணா நாணயங்கள், கிணற்று ராட்டினம், சைக்கிள் விளக்கு, கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சண விற்பனையாளனின் கூடை, பித்தளை பாத்திரங்கள் போன்றவை செயற்கையாக பார்வையாளனின் முன்வைக்கப்படாமல் காட்சிகளின் போகிற போக்கில் கண்ணில் தெரிகின்றன.

இசையைப் பற்றின அடிப்படை ஞானம் எனக்கில்லா விட்டாலும் இளைய ராஜாவின் பின்னணி இசையை என்னால் நுட்பமாக உணர முடியும். சமீபத்தில் பார்த்த 'சேது' படத்தில் சில விநாடிகளே தோன்றும் ஒரு மயிற்தோகைக்கு அவர் அளித்திருக்கும் அந்த இசை அவருக்கு மாத்திரமே சாத்தியம். இந்தப் படத்திற்கு M.G. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பல காட்சிளுக்கு மிகப் பொருத்தமாக இழையோடியிருக்கிறது. குழந்தை பிறந்திருக்கும் விழாவில் பாடப்படும் அதே பாடலை கிளைமாக்ஸ் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பது நம்மை கலங்க வைக்கிறது. திருவின் காமிரா 40-களின் காலகட்டத்திற்கு ஒத்திசைவான ஒளியைப் பயன்படுத்தி எந்த வித gimmics-ம் இல்லாமல் இயல்பாக பயணிக்கிறது.

அடிப்படையில் இந்தப்படம் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய நெசவாளர்களின் வறுமையைப் பற்றியும் தென்னிந்திய உழைப்பாளர்களிடையே கம்யூனிசம் முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அதன் வீழ்ச்சி குறித்தும் மெல்லிய குரலில் பேசுகிறது. தங்களின் கோரிக்கைகளுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக போராடும் வேங்கடம், தன்னுடைய மகளுடைய திருமண நாள் நெருங்கியவுடன் பட்டுச்சேலை கனவு நிறைவேறி விடாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்று சில தோழர்களின் பகைமையைப் பெறுகிறான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை அன்றைய அரசு எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது என்பதையும் இந்தப்படம் பேசுகிறது.

நாள் முழுக்க தறியில் அவர்கள் அவதிப்பட்டு பட்டுச்சேலையை உருவாக்கி மற்றவர்களை மகிழ்வித்தாலும் அவர்களின் வாழ்க்கை பட்டுச்சேலை மாதிரி வழுவழுப்பாக இல்லாமல் மிக்க வறுமையுடன் கரடுமுரடாகத்தான் இருக்கிறது என்பதை இந்தப்படம் எந்தவித பிரச்சாரத்தொனியுமின்றி இயல்பாகச் சொல்கிறது. பிரியதர்ஷன் இந்தப்படத்தை மிகச் சிரத்தையாக உருவாக்கியிருக்கிறார். காலவாக்கில் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் இரண்டையும் இணைக்கும் காட்சிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். வணிக நோக்கத்துக்கோ அல்லது விருது வாங்கும் நோக்கத்கோ அல்லாமல் தன்னுடைய 9 வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய ஆத்ம திருப்திக்கு இந்தப்படத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

IFFI, Toronto உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.

()

அடுத்த முறை ஒரு பட்டுப்புடவையை வாங்கும் போதோ அல்லது உடுத்தும் போதோ அதற்காக அழிக்கப்பட்ட பல உயிரினங்களோடு அதை உருவாக்கினவனின் வியர்வையையும் சற்று நினைவு கூர்வது நலம்.

(பண்புடன் குழுமத்தின் ஆண்டுநிறைவையொட்டி அதில் பிரசுரமான இந்தப் பதிவு இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி: பண்புடன்)

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)

.


னிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே சொல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(?). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டக் கட்டிலில் படுத்துக்கொண்டு குழந்தைப் புகைப்படத்தையும் மனைவி புகைப்படத்தையும் அம்மாவின் புகைப்படத்தையும் பார்த்துப் பார்த்து அழுதுக் கொண்டிருக்கும் மனதின் ரணம் இதயத்தை தனியாக எடுத்து’ பிழிய வலிக்கையில் வலிப்பதற்கு ஈடென்று வீட்டைவிட்டுப் பிரிந்து வாழ்வோருக்குத்தானே தெரியும்.
ஒருவன் இந்தியில் பேசி தமிழ்வாலா என்று கிண்டல் செய்வான், இன்னொருவன் மலையாளம் பேசியே உடன் நின்றுக் கொல்வான். யார் எதை பேசுகிறார்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று எதுவுமே புரியாது என்னவோ தலையெழுத்து வந்துவிட்டோம் என்று வாழும் நாட்கள் கத்தியின் மீது நடப்பதைக் காட்டிலும் கொடூரமானது.

அதில் வேறு காவிரி நீரா’ பெரியாறு அணையா’ கருணாநிதி தோல்வியா’ ஜெயலலிதா வெற்றியா’ வைகோ கொடி பிடித்தாரா எல்லாவற்றிற்கும் எங்களிடம் பதிலை எதிர்பார்க்கும் சகோதரத்துவ மாநிலங்களையெல்லாம் உடன் சேர்த்துக்கொண்டுதான், ஜனகனமன கேட்கையில் ஜெயஹிந்த் சொல்லிக் கொள்கிறோம். ஹிந்தி தெரியவில்லை அதற்கொரு பேச்சு, இந்தி தெரிந்து இந்தி தெரியாத தமிழரோடு தங்கவேண்டிவந்தால் அதற்குமொரு பேச்சு என’ அப்பப்பா, வெளிநாடுகளில் பணம் சம்பாதிப்பது சுலபம், மனிதர்களை வெல்வதும், தனிமையை உதறிவிட்டு பிறரோடு கலந்துப்போகப் பழக்கிக்கொள்வதும் இன்னொரு பெரிய சவால்தான்.

அழிவுப் பாதை செல்வதா ? - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.
சாதி மத  பேத மின்றி
சரி  சமமாய்  மனிதர் நாம் 
மேதினியில்  ஒரு குடியாய் 
மிடுக்காய்  நிமிர்ந்து  வாழ்வோம் !

சிறிய  குருவிக் கூட்டமெல்லாம் 
  சேர்ந்தே இனிதாய் வாழ்கையில்
அறிவிற்  சிறந்த மனிதர் நாமும் 
அழிவுப் பாதை செல்வதா ?

உலகில் வாழும்  மனிதர்க்கெல்லாம் 
ஓடும் குருதி  ஒரே நிறம் 
கலகம் பண்ணிக் கடிந்து வாழ்தல் 
காட்டு விலங்கின் இழி குணம் 
பிறப்பில் மனிதர்  எவரு மிங்குப் 
பெரியர் சிறியர்  இல்லையே 
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச் 
சிந்தை  யாலே  உயருவர் !
   
பழிகள் செய்து பாவியாகிப் 
பாரில் வாழ்வோர் சிறியவர் !
தெளிந்த அறிவு அன்பினோடு 
.சேர்ந்து வாழ்வோம் இனிமையாய்.!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

ஓநாய்களின் தர்மம் - The Wolf of Wall Street

.

நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் சம்பவம் ஒன்றுண்டு.  இதன் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை என்றாலும் சுவாரசியமானது. ஒரு முறை அவரது கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்ததாம். போக்குவரத்து காவலர் அதை நிறுத்தி 'ஏன் இத்தனை வேகமாக செல்கிறீர்கள்?' என கேள்வி எழுப்பினாராம். ராதா அவருக்கேயுரிய பிரத்யேக பாணியில் 'இன்னா மேன்.. நீ... வேகமா போறதுக்குதான்னே கார் இருக்கு. அதுக்குதான்னே... அதை கண்டுபிடிச்சிருக்கான். அதை நீ ஸ்டாப் பண்றியே.. அறிவில்லே.. நான்சென்ஸ்' என்றாராம். பொதுவாகவே கலகத்தன்மையோடு செயல்படுகிறவர்களைப் பற்றி உண்மையான தகவல்களோடு சுவாரசியமான பொய்களும் கூடவே கலந்து வரும். அப்படியொரு தகவல் இது. உண்மையா என தெரியவில்லை.

ராதா ஒருவேளை எழுப்பிய அந்தக் கேள்வி தார்மீக ரீதியாக அராஜகத்தன்மையுடையது என்று தோன்றினாலும்   தர்க்க ரீதியாக ஒருவகையில் அது சரியானது. விஞ்ஞான கண்டுபிடிப்புகளினால் ஏற்பட்ட தொடர்ந்த வளர்ச்சிகளின் மூலம் மனித குலம் காலத்தையும் தூரத்தையும் மிக வேகமாக இன்று கடக்க முடியும். முன்பு கால்நடையாக ஒருமணி நேரம் கடந்த தூரத்தை வாகனத்தின் தன்மைக்கும் வேகத்திற்கும் ஏற்ப இன்று சுமார் ஐந்து நிமிடத்தில் கடந்து விடலாம். வேகமே வாகனத்தின் அடையாளமும் நோக்கமும். அதற்காகவே அதிவேக வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தூரத்தை வேகமாக கடப்பதற்கே வாகனத்தை பயன்படுத்துகிறோம் எனும் போது வேகத்தை தடைப்படுத்தச் சொல்வது முறையா என்று ராதாவின் கேள்வியை ஒருவகையில் நியாயப்படுத்தலாம்.