கல்வித் தெய்வமே காட்டுவாய் கருணை !

 









மகாதேவ ஐயர் ஜெயராம்சர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா



வெள்ளைத் தாமரையில் வீணையுடன் வீற்றிருக்கும்
தெள்ளமுதே சரஸ்வதியே திரும்பிநீ பார்த்திடுவாய்
உள்ளிருக்கும் கசடனைத்தும் உருவழிய வைத்திடுவாய் 
வல்லமையே சரஸ்வதியே வணங்குகிறேன் வரமருள்வாய்

ஏட்டிலும் இருப்பாய் பாட்டிலும் இருப்பாய் 
மீட்டிடும் வீணை ஒலியிலும் இருப்பாய் 
கேட்டிடும் குரல்கள் அனைத்திலும் இருப்பாய்
கேட்கிறேன் கல்வியைத் தந்திடு தாயே 

வீரமொடு செல்வம் வந்தாலும் அம்மா 
வெற்றியினை அடைய கல்வியது வேண்டும்
ஆற்றலுடை கல்வியினை அளித்து  விடுதாயே
அனுதின முன்னைப் பணிகிறேன் அம்மா 

சிட்னி திரை அரங்கில் "யாதும் யாவரும்" - திரைக் காவியம் Dr. ஜெயமோகனின் நெறியாள்கையில்

சிட்னி திரை அரங்கில் "யாதும் யாவரும்"  - திரைக் காவியம் Dr. ஜெயமோகனின் நெறியாள்கையில், இனிய பாடல்கள் நிறைந்த திரைப்படம் .

Auburn Reading சினிமாவில்  


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் - வெல்லும் சொல் திறனாளர் தேர்வுப் பேச்சுப் போட்டி - 2023.




எட்டாவது வருடத்தில் 'வெல்லும் சொல்' போட்டிகள் மீண்டும் மிடுக்கோடு அரங்கேறவிருக்கின்றன.

கம்பன் வகுப்பு மாணவரும், கம்பன் கழகச் செயலாளருமான செல்வி ப்ரணிதா பாலசுப்பிரமணியன் கடந்த மூன்று ஆண்டுகள் இப்போட்டிகளைப் பல சவால்களின் (தீநுண்மித் தொற்று) மத்தியில் திறம்பட அரங்கேற்றியிருந்தார்.👏
இவ்வருடம், இரு கம்பன் வகுப்பு இளைஞர்கள் செல்விகள் அபிநயா பிரபாகர் மற்றும் ஜனனி ஜெகன்மோகன் இணைந்து,
நன்கு ஒழுங்கமைத்து வருகின்றனர்.👏

இந்ந வருடத்திற்கான போட்டிகள்,
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஒக் - 29ஆம் திகதி காலையிலிருந்து இடம்பெறவுள்ளன.

அகமுறையும் ஆன்மீக ஆனந்தப் பெருவிழா நவராத்திரி






மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ... அவுஸ்திரேலியா
 

 


  ஒன்பது என்பது எண்களிலும் முக்கியமானது. ஜோதிடங்களிலும் முக்கிய மானது.எண்கணித ஜோதிடத்
திலும் இன்றியமையாததாய் இருக்கிறது.இந்த ஒன்பதை நவ என்னும் பெயரினைக் கொடுத்து இராத்திரியுடன் இணைத்து  நவராத்திரி என்றும் அழைக்கின்றோம்.நவராத்திரி என்றாலே ஒன்பது இரவுகள் என்பதையும் எல்லோரும் அறிவோம். நவ - என்றால் இன்னுமொரு கருத்தும் இருக்கிறது. அதாவது புதுமை என்பதையும் கருத்திருத்த வேண்டும். நவநாகரிகம் என்று - புதிய அம்சங்களுடன் வந்தமைந்த நாகரித்தைப் பெயரிட்டு அழைக்கிறோம் என்பதையும் யாவரும் அறிவோம்.புதுமைகள் பல வாழ்வில் தொடர்ந்து வரவேண்டும் என்
னும் எண்ணத்தினால்தான் வருடந்தோறும் நவராத்திரியினைப் பக்தி பூர்வமாக அனுஷ்டித்து வருகிறோம் 
என்றும் எண்ணிடத் வைக்கிறதல்லவா !
 நவராத்திரி என்றவுடன் பெண்மைதான் முன்னே வந்து நிற்கும். பெண்மை என்றதும் அங்கு தலைமை தாங்குவது தாய்மைதானே ! தாயினைத் தெய்வமாக வணங்கும் முறை தொன்று தொட்டு சமூகத்தில் இருந்து வருகிறது என்பதை வரலாற்றால் அறிந்து கொள்ளுகிறோம்.எம்மைப் படைத்த ஆண்டவனையே " அம்மையே " என்றுதான் அழைத்து ஆராதிக்கின்றோம்.  மணிவாசகப் பெருமானே " அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளை ந்த ஆரமுதே " என்று தாயினையே முன்னிறுத்தி அந்தப் பரம்பொருளை விழிக்கின்றார். " தாயினும் நல்ல தலைவர் என்றடியார் " என்றும், " தாயும் நீயே தந்தையும் நீயே " என்றும். சம்பந்தப் பெருமானும்  தாயினை முன்னிறுத்திப் பாடுவதும் நோக்கத்தக்கதே.தமிழ் மூதாட்டி எத்தனையோ அறிவுரைகள் பகர்ந்தவர். அவர்கூட கொன்றை வேந்தனை ஆரம்பிக்கும் வேளை " அன்னையும் " என்றுதான் முதலடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறார்.

  நாம் வாழும் பூமியைய் தாய் என்கின்றோம் . வாழ்வினுக்கு அவசியமான பொறுமையைத் தாய் என்கின்
றோம். அனைவரின் அகத்திலும் அமரவேண்டிய கருணையையும் தாய் என்றுதான் சொல்லுகிறோம். ஓடுகி
ன்ற ஆறுகளுக்கும் தாய்மையைக் கொண்ட பெண்களின் பெயர்களையே சூட்டி பெருமைப்ப டுத்துகிறோம் 
அல்லவா ! 

தன்னார்வத் தொண்டர் இன்பரூபனின் வாழ்வும் பணிகளும் முருகபூபதி ( அண்மையில் வடமராட்சியில் நடந்த இன்பரூபனின் மணிவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் இடம்பெற்ற ஆக்கம் )


தினமும் வடமராட்சியிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணம் வந்து, அரியாலை கண்டி வீதியில் அமைந்திருக்கும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் பணிமனைக்குள் பிரவேசித்து, தனக்குரிய கடமைகளை படிப்படியாக நிறைவேற்றியவாறு, குறித்த பணிகள் தொடர்பாக வெளிக்கள வேலைத் திட்டங்களுக்கும் சென்று, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து பயணக்களைப்பு முகத்தில் தோன்றாமலிருக்க அனைவருடனும் புன்சிரிப்போடு உரையாடிவிட்டு, மாலையானதும் காலையில் புறப்பட்டு வந்த திசைநோக்கி, மீண்டும் சென்று, இரவுப்பொழுதில் வீடடைந்து, குடும்பத்தினருடன் பொழுதை கழிக்கும்  ஒருவருக்கு சேவை நலன் பாராட்டு விழா என அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

எமக்கு இறைவன் இரண்டு கரங்களை தந்திருக்கிறார். அதில் ஒன்று எமக்கு. மற்றது, ஏனையவர்களுக்கு என்பது வாழ்வியல் தத்துவம். இந்த தத்துவத்தை கடைப்பிடிப்பவர்கள் எவராயினும் அவர்கள் எமது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்களே.

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக நாம் இயக்கிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் தொடர்பாளர் நிறுவனமாக செயற்பட்டுவரும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் இம்மாவட்டங்களில் நடத்தப்பட்டுவரும் தகவல் அமர்வு – மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில்  நான் சந்தித்த சுறுசுறுப்பான அன்பர்தான் இன்பரூபன்.

அவரது பெற்றோர்கள் இவருக்கு மிகவும் பொருத்தமாகத்தான் பெயர் சூட்டியிருக்கிறார்கள் என்று நான் எண்ணுவதுண்டு.

இன்முகத்துடன் அனைவருடனும் உறவாடும், இவர் இருக்குமிடம் கலகலப்பாகவும் இருக்கும். சுவாரஸ்யமாகப்பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்துவார்.

இந்த இயல்புகள்தான் எம்மையும் இவருடன் நெருங்கச்செய்திருக்கிறது.

மௌனத்தீவு - நூல் வெளியீட்டு விழா - 29/10/2023

 


அம்மன் அருள் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரை வானில் முன்ணனி நடிகர்களாக வலம் வந்து


கொண்டிருந்த ஜெய்சங்கர், ஏவி எம் ராஜன், ஶ்ரீகாந்த் மூவரும் இணைந்து 1973 ஆண்டு ஒரு படத்தில் நடித்தனர். சமுகக் கதையின் அடிப்படையில் உருவான பக்திப் படமாக இப் படம் உருவானது.

தமிழ் மேடைநாடக கதாசிரியராக திகழ்ந்த பிலஹரி எழுதிய ஆராதனை என்ற நாடகமே இவ்வாறு அம்மன் அருள் என்ற பேரில் படமானது. இவர் எழுதிய ஆலயம், பாலாடை, கஸ்தூரி திலகம், ஆகிய நாடகங்கள் மேடையில் இருந்து திரைக்கு வந்தது போல் இந்த ஆராதனையும் அம்மன் அருள் ஆனது. புதிய பட நிறுவனமான அம்பிகா மூவிஸ் படத்தை தயாரித்தது.

ஊர் கோவில் பக்தர்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர் அக்

கோவில் பூசாரி. அவரின் மகள் கற்பகம் . அந்த ஊரின் பண்ணையாரின் மகனான பாபுவை பாம்பு கடித்து விட கற்பகம் கை வைத்தியம் செய்து அவனை காப்பாற்றி விடுகிறாள். தொடர்ந்து அவர்களிடையே காதல் மலர்கிறது. பண்ணையார் ஆரம்பத்தில் இதனை எதிர்த்தாலும் பின்னர் மகனின் விருப்பத்துக்கு இணங்குகிறார். பூசாரியும் மகளின் காதலுக்கு அனுமதி வழங்குகிறார். இதனிடையே இந்த திருமணத்துக்கு அம்மன் அருள் கிடைக்க வேண்டும் என்று வேண்டி பண்ணையார் கோவிலுக்கு வருகிறார். மடிக்கப் பட்ட ஒரு கடதாசியில் குங்குமமும், மற்ரொன்டில் விபூதியும் வைத்து அம்மனிடம் அனுமதி பெறும் படி பூசாரியிடம் கூறுகிறார் பண்ணையார்.

பண்ணையார் வேறு ஒரு பெண்ணுக்கு தன் மகனை கல்யாணம் செய்து கொடுக்க நினைக்கிறார் என்று பூசாரி சந்தேகிக்கிறார் . தன் மகள் காதல் நிறைவேறி அவளுக்கும் பாபுவுக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என்ற ஆசையில் இரண்டு கடதாசி தாளிலும் விபூதியை மடித்து வைத்து விடுகிறார். குங்குமத்தை எடுத்தால் அம்மனுக்கு சம்மதம் , விபூதியை எடுத்தால் அம்மனுக்கு சம்மதம் இல்லை என்று அர்த்தம். அம்மன் முன் வைத்து எடுத்த கடதாசியில் விபூதி இருப்பதை கண்ட பண்ணையார் தன்னுடைய மகனின் இந்த காதல் கல்யாணத்துக்கு அம்மன் அருள் இல்லை என்று கூறி சென்று விடுகிறார். பூசாரியோ தன் செயல் தனக்கே கேடாக முடிந்து விட்டதாக எண்ணி இடிந்து போய் விடுகிறார். அம்மன் அருளால் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதி படம்.

இப்படி தான் எழுதிய கதைக்கு வசனங்களையும் அருமையாக எழுதியிருந்தார் பிலஹரி. படத்தின் ஓட்டத்துக்கு வசனங்கள் கை கொடுத்தன. பாடல்கள் வாலி. இசை சங்கர் கணேஷ். தங்களால் பக்திப் பாடலுக்கும் இசையமைக்க முடியும் என்பதை ராதா ஜெயலஷ்மி குரலில் ஒலிக்கும் அகிலம் எல்லாம் விளங்கும் அம்மன் அருள் பாடல் முலம் நிரூபித்திருந்தார்கள் இரட்டையர்கள். எஸ் பி பி , சுசிலா குரலில் ஒலித்த ஒன்றே ஒன்று நீ தர வேண்டும் பாடலும் இனிமை.

உயரத்தில் வைத்த விளக்கு - (அமரர் ஜே ஐ தம்பிராஜா 1938 -2023) - யோகன் (கன்பரா)


நவாலியூரில் நான் வாழ்ந்த இளமைக் காலங்களில்  தினசரி பத்திரிகைகள் வாசிப்பதெற்கென பொது சன சமூக நிலையங்கள் பல இருந்தன. முருகானந்த  சனசமூக நிலையம், முரசொலி சன சமூக நிலையம்வளர்மதி சன சமூக நிலையம் என்பன நினைவுக்கு வரும் பெயர்கள். ஆனால் நூலகங்கள் என்று அப்போது ஊரில் இருந்ததில்லை. இது நவாலி YMCA  இனரின் நீண்ட காலக் கனவுகளில் ஒன்று. இதை சாத்தியமாக்க உழைத்த பலரில் ஒருவரான ஜோசேப் அண்ணன் (ஜே ஐ தம்பிராஜா) 11-10-2023 அன்று மறைந்து விட்டார்.  

 நவாலித் தென் இந்தியத் திருச்சபை வளவில் இருந்த கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்த YMCA பின்னர் எழுபதுகளின் இறுதியில் நவாலி சேச்சடியில்  பிரசாத் வீதியில் அமைந்திருந்த தனியார் மதில் வீடொன்றுக்கு  இடம் மாறியது. அந்த வீட்டின் ஒரு அறையில் YMCA நூலகம் ஆரம்பித்ததிலிருந்து பின்னர் அதே பிரசாத் வீதியில் வயற்கரையை அண்மித்திருந்த  வீடொன்றுக்கு இடம் மாறியது முதல் நூலகம் எழுச்சியுடன் இயங்கத் தொடங்கியது.

இந்த வீட்டையும் காணியையும் கலைஞர் S அருமைநாயகம் அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து YMCA  வாங்கிக் கொண்டது. இதே கலைஞர் அருமைநாயகம்தான் ஏ. ரகுநாதன் தயாரித்த 'நிர்மலா' திரைப்படத்தை  இயக்கி, எடிட்டிங் செய்தவர்.  அவரது வீட்டுக் கட்டிடத்தில் YMCA  அலுவலகமும், நூலகமும் இயங்கி வந்த வேளையிலேயே முன்னாலிருந்த காணியில் புதிய கட்டடத்திற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

எனக்குத் தெரிய திரு W. G. அன்னப்பா, திரு C. அருமைநாயகம் போன்ற  YMCA  தலைவர்களின் வரிசையில்  ஜோசேப் அண்ணனும் (திரு ஜே ஐ தம்பிராஜா) இணைந்து தொடர்ச்சியான உழைப்பின் பின்னணியில், திரு N அன்புராசா, திரு S விஜயகுலசிங்கம் போன்ற முழு நேர பணியாளர்களின் ஆற்றலுனும், அர்ப்பணிப்புனும் மற்றும் பல தொண்டர்களின் உழைப்புடனும் அந்த கட்டிடம் எழுந்து வருவது யாவருக்கும் உற்சாகத்தைத்  தந்தது. 

கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை பத்மநாதன் (சோ.ப) – நேர்காணல்

 


இலங்கைச் செய்திகள்

அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து போராட்டம் 

பலஸ்தீன தூதுவரிடம் தமது கவலையை வெளியிட்ட ரிஷாட் எம். பி

இலங்கையின் கடன் மீட்சிக்காக உகந்த வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் – சீன நிதி அமைச்சர் தெரிவிப்பு

அஜித் மான்னப்பெரும எம்பிக்கு 4 வார பாராளுமன்ற தடை

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளம் அம்மக்களின் அடையாளத்தை அழிக்கும் செயல்

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை அகற்ற கோரி முறைப்பாடு


அரசியலமைப்புக்கமைய அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்

- பின் பாராளுமன்றத் தேர்தல்; 2025 முதல் காலாண்டுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

October 22, 2023 10:13 am 

– இலங்கையை ஸ்மார்ட் நாடாகக் கட்டியெழுப்புவதே நோக்கம்
– ஸ்மார்ட் நாட்டிற்கான ஸ்மார்ட் கட்சியாக ஐ.தே.க. வை கட்டியெழுப்புவோம்

உலகச் செய்திகள்

காசா வைத்தியசாலை மிலேச்ச தாக்குதலில் சுமார் 500 பேர் பலி! - தாம் மேற்கொள்ளவில்லை என இஸ்ரேல் மறுப்பு

காசா மருத்துவமனை தாக்குதலை அடுத்து அரபுலகெங்கும் பெரும் ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு இஸ்ரேல் சென்ற பைடனின் இராஜதந்திர முயற்சிகளும் ஸ்தம்பிதம்

பலஸ்தீனர்களை ஏற்க எகிப்து மறுப்பு

இஸ்ரேல் -காசா மோதல்: இன்றைய நிலைவரம்

ஹமாஸ் அமைப்பை நீக்குவதே போரின் இலக்கு – இஸ்ரேல் தெரிவிப்பு


காசா வைத்தியசாலை மிலேச்ச தாக்குதலில் சுமார் 500 பேர் பலி! - தாம் மேற்கொள்ளவில்லை என இஸ்ரேல் மறுப்பு

October 18, 2023 3:16 pm 

– மிலேச்சத்னதம் வெளிப்படுவதாக உலக நாடுகள் இஸ்ரேல் மீது கண்டனம்

Women Under the Light - Gayathri Nisakulan - Exhibition October 29, 2.30pm to 5.30pm.

 .

Women Under the Light

Sydney based female photographer, Gayathri Nisakulan, will be exhibiting her colourful portraits of diverse women at this local event.

Originally from Sri Lanka, Gayathri owns Sydney based photography business, Gaya Photography. As a qualified photographer with a special interest in portraits, she has completed an advanced module “Perfect Portraiture” at the Photography Institute, Sydney. Gayathri is currently undertaking a Diploma of Photography and Digital Imaging course at the Photography Institute.

Through these images, Gayathri highlights unity and respect by showcasing portraits of proud women in their cultural clothing.

Case worker and employment officer Conscila Jerome Emilianus said, “The photographer wanted to celebrate diverse women and their cultural clothing. It not only highlights the beauty of the women and their clothing but also unity among the women. Through the lens the photographer has brought diverse women under one light."

The Exhibition will be held at The Granville Centre, 2a Memorial Dr, Granville, Sunday October 29, 2.30pm to 5.30pm.