நீர்வையின் ஓராண்டு பூர்த்தி நினைவுப்பகிர்வு நிகழ்வு

 .ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா 


  

    

     நிலத்தின் இயல்பு நீரில் தெரியும்
             குணத்தின் இயல்பு செயலில் புரியும்
    அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
             ஆளுமை அளவு அறிவினைக் காட்டும்  !

    கண்ணின் அழகு கருணையில் தெரியும்
            பெண்ணின் அழகு அடக்கத்தில் தெரியும்
    மண்ணின் அழகு வளத்தினில் தெரியும்
            வாழ்வின் அழகு வாழ்வதால் தெரியும்  !

     சொல்லின் அழகு சுவையினில் தெரியும்
               சுகத்தின் அழகு நலத்தினில் தெரியும்
      வெல்லும் அழகு விவேகத்தில் தெரியும்
              விடையின் அழகு மதியினால் தெரியும்  !

      பொறுமையின் அழகு உயர்வினால் தெரியும்
                 போதனை அழகு விடிவினால்  தெரியும்
      அறிவுடை அழகு அனைவர்க்குந்  தெரியும்
                ஆண்டவன் அழகு அனுதினம் தெரிமவுண்ட்றூயிட் தமிழ்க் கல்விநிலையம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை - 2021 பரமபுத்திரன்


மவுண்ட்றூயிட் தமிழ்ப் பள்ளியின் தமிழ்மொழி கற்றல் - கற்பித்தல் செயற்பாடு தொடர்பான நடப்பு நிலையும், எதிர்காலத் தேவையும் என்ற கருத்துநிலை அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பயிற்சிப் பட்டறையை நடாத்துவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் இவ்வாண்டுக்கான ஆசிரியர் பயிற்சிப் பட்டறை 21/03/2021 ஞாயிற்றுக்கிழமை  காலை ஒன்பது மணி முதல் ஒரு மணிவரை  ‘கொலிற்றன்’ அரச பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

 


 

மவுண்ட்றூயிட் தமிழ்ப் பள்ளியின் பதின்னான்கு ஆசிரியர்கள்,


மற்றும் நிர்வாகத்தலைவர், அதிபர், கல்விக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் சந்திரலேகா வாமதேவா  அவர்களும் செயலமர்வில் பங்குபற்றினார். நிர்வாகத்தலைவர் கில்பேட் தேவதாசன் அவர்கள் தலைமையுரை வழங்கி நிகழ்வினைத் தொடக்கிவைத்தார். தனது தலைமையுரையில் பாடசாலையின் வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் செய்யும் சேவையினைப் பாராட்டிய அதேவேளை, இன்னும் மேன்மையடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு, மேலும் எங்கள் மாணவர்கள் தமிழ்ப் பண்பாடுகளைத் தெரிந்து, அன்பு பண்பு நிறைந்தவர்களாக வாழப் பயிற்றுவித்தல் எங்கள் கடமையும் பொறுப்பும், எனவே நாம் எல்லோரும் இணைந்து அதனை நிறைவேற்றவேண்டும் என்று கூறி, இந்தச் செயலமர்வு அதற்கான உந்துசக்தியாக அமையவேண்டும் எனத்தெரிவித்து தனது உரையினைச்  சுருக்கமாக நிறைவுசெய்தார்.

 

எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 34 அரசியலில் யார் நல்லவர்…? யார் கெட்டவர்…? தார்மீகமும் காற்றில் கலந்த பேரோசையும் ! முருகபூபதி


யாழ்ப்பாணம் பொது நூலக எரிப்புடன், அந்த 1981 ஆம் ஆண்டு கடந்துவிடவில்லை.  அந்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் பற்றி எரிந்த தீ, படிப்படியாக மேற்கிலங்கையிலும் மலையகத்திலும் பரவியது.

அதற்கு  காலிமுகத்திடலுக்கு முன்பாக பிரிட்டிஷாரின் காலத்தில் அமைந்த நாடாளுமன்றத்தில் அரசு தரப்பு அமைச்சர்களும் எம். பி. க்களும் பேசிய பேச்சுக்கள்தான் பின்னணிக்காரணம்.

முக்கியமாக பாணந்துறை எம். பி. நெவில் பெர்னாண்டோ,


அமைச்சர் சிறில் மத்தியூ ஆகியோர் கொண்டு வந்த எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாதம்தான்.

அமிரை காலிமுகத்திடலில் கழுவேற்றிக்கொல்லவேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். விவாதங்கள் இரவு வரையில் தொடர்ந்தன.  அந்தச்செய்திகளை வீரகேசரியில் இரவு நேரப்பணியில்   ஒப்புநோக்கும்போது, என்னுடனிருந்த கிழக்கு மாகாணத்தில் கிரானைச்சேர்ந்த கனகசிங்கம், மற்றும் தனபாலசிங்கம் ஆகியோருடன் அரசியல் பேசிக்கொண்டிருப்பேன்.

கனகசிங்கம், பொன்னரி என்ற பெயரில் ஓவியங்களும் வரைவார். கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை கதைத் தொகுதிக்கும் அவர்தான் அட்டைப்படம் வரைந்தார்.

அத்துடன் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலிருந்து வௌியான சுதந்திரன் பத்திரிகையுடன் வெளியிடப்பட்ட சுடர்  கலை, இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இணைந்திருந்தார்.

சிட்னி முருகன் சப்பரத்திருவிழா 26/03/2021சிட்னி முருகன் தேர்த்திருவிழா 27/03/2021


 

சிட்னி முருகன் தீர்த்தத் திருவிழா 28/03/2021

 


மல்லிகை ஜீவாவின் வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் --- அங்கம் 09 ஜீவாவுக்கும் மேத்தாதாசனுக்குமிடையில் தந்தை – மகன் நேசம் ! அய்ரோப்பிய இதழும் சாதி அகம்பாவமும் !! முருகபூபதி


கம்பனுக்கு ஒரு தாசன் இருந்ததுபோன்று ( கம்பதாசன் ) பாரதிக்கு ஒரு தாசன் இருந்ததுபோன்று ( பாரதிதாசன் ) கவிஞர் மேத்தாவுக்கும் ஒரு தாசன் இருந்தார்.

 

அவர்தான் கவிஞர் மேத்தாதாசன்.

கவிஞர் மேத்தா,        இஸ்லாமியர்.  அவரது இயற்பெயர் முகம்மது மேத்தா.     மேத்தாவின் தாசனாகிய  கவிஞர் விஜயராகவன்       இந்து     பிராமணர்.

இந்தியாவில்      இந்துக்கள்  -    இஸ்லாமியர்      முரண்பாடுகள் 


   இந்திய சுதந்திரப்போராட்ட     காலத்திற்கு    முன்பிருந்தே    தொடங்கி பாகிஸ்தான்     பிரிவினையின்போது      உக்கிரமடைந்து ஆயிரக்கணக்கானோர்  பலியான  இரத்த  வரலாறை                                படித்திருக்கின்றோம்.  இந்தப்பின்னணியிலிருந்து மேத்தா – மேத்தாதாசனின் இலக்கிய     நேசத்தையும் நட்புறவையும்      நாம்      புரிந்துகொள்ளவேண்டும்.

 

மேத்தாவிடம்  மிகுந்த பிரியமாகவிருந்த  விஜயராகவனைப்                      (மேத்தா தாசனை) பார்த்த

   மேத்தாவின்   துணைவியார்  ஒரு  சந்தர்ப்பத்தில்                                      “ நல்லவேளை அவன் பெண்ணாகப்பிறக்கவில்லை. பிறந்திருந்தால்  என்பாடு               திண்டாட்டம்தான்   “     என்று      வேடிக்கையாகச்சொன்னார்.

 

பசுமை நிறைந்த நினைவுகளும் ! பார்த்து வியந்த பனைமரங்களும் !! யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் கற்றதும் பெற்றதும் !!! முருகபூபதிபாடசாலைப் பருவம் பசுமை நிறைந்த நினைவுகளை உள்ளடக்கியிருக்கும்.

எனது வாழ்வில், 1954 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரையில் நான்கு பாடசாலைகளில் எனது பெரும்பாலான பொழுதுகள் கழிந்திருக்கின்றன.

முதலில் எங்கள் நீர்கொழும்பூரில்  1954 ஆம் ஆண்டு விஜயதசமியன்று தொடங்கப்பட்ட விவேகானந்தா வித்தியாலயம் 32 மாணவர்களுடன் அங்குரார்ப்பணமாகியபோது, அதன் முதல் மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டு, 1963 ஆம் ஆண்டு முதல் தவணை வரையில் அங்கேயே ஆரம்பக்கல்வியை கற்றபின்னர், எதிர்பாராதவகையில் யாழ்ப்பாணம், அரியாலையில்  நாவலர் வீதியில் அமைந்த  அன்றைய ஸ்ரான்லிக்கல்லூரியில் பிரவேசிக்க நேர்ந்தது.

எனது வாழ்வில் பல எதிர்பாராத திருப்பங்கள், பால்யகாலம் முதலே நிகழ்ந்துவந்திருக்கின்றன.  அத்தகைய  திருப்பங்களும் முடிவில்லாமல் தொடருவதன் விளைவுதான்  இந்த ஆக்கத்தின்


ரிஷிமூலம்.

அண்மையில் எனது வாட்ஸ் அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அனுப்பியவர் இங்கிலாந்தில் வதியும் எனது குடும்ப நண்பர் மகேந்திரன்.

அதில், அவர்,  “ முருகபூபதி நீங்கள் முன்னர் கல்வி கற்ற எமது யாழ்ப்பாணம் அரியாலை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் சந்திப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி இணையவழியில் காணொளி ஊடாக நடக்கவிருக்கிறது.

அது நடக்கும் நேரம் உங்கள் அவுஸ்திரேலியாவில் நடுச்சாமம். இயலுமானால் இணைந்துகொள்ளுங்கள்.   “ என்று அந்த குறுஞ்செய்தி சொன்னது.

எனக்கும்  இந்த நிகழ்வு பற்றி அறிவிக்குமாறு ஒரு நண்பர் அவரிடம் தெரிவித்துள்ளார். யார் அந்த புண்ணியவான் என்பது தெரியவில்லை.

இச்செய்தி வந்த நாள் முதலாக எனது நினைவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது குறிப்பிட்ட  யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்.

1963 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டுவரையிலான சுமார் இரண்டு வருடகாலம்தான் அந்த வித்தியாலயத்துடன் எனக்கிருந்த உறவும் தொடர்பும்.  நானும்  எனது தாய்மாமனார்  மகன் முருகானந்தனும் அங்கே சென்று கற்கவேண்டிய சூழ்நிலையும் எதிர்பாராமல் வந்தது.

படித்தோம் சொல்கின்றோம்: மனோ சின்னத்துரையின் கொரோனா வீட்டுக்கதைகள் ! மற்றும் ஒரு பரிமாணத்தை நோக்கிச்செல்லும் படைப்பிலக்கியம் ! ! முருகபூபதிமுன்னொரு காலத்தில் மாத – வார இதழ்களில்தான் சிறுகதைகள் வெளிவந்துகொண்டிருந்தன.  முன்னொரு காலம் என்றால்,  பழந்தமிழ் இலக்கியம் அறிமுகமான அந்தக்காலம் அல்ல.

குறிப்பிட்ட முன்னொரு காலத்தில் இலங்கையில் இலக்கியத்துறையில் மறுமலர்ச்சிக்கால இலக்கியம் ,   மண்வாசனை இலக்கியம், முற்போக்கு இலக்கியம்,   பிரதேச மொழி வழக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், இடப்பெயர்வு இலக்கியம் என்று சிலவகை இலக்கியப்படைப்புகளை இலங்கையில் மாத இதழ்கள் தாங்கி வெளிவந்தன.

தமிழ்ப்பத்திரிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்ட வார இதழ்களும் இலக்கியப்படைப்புகளுக்கு போதியளவு


களம் வழங்கின.

காலம் மாறியது. இலங்கையில் இனநெருக்கடி உச்சம் பெற்றதனால் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்த கலை, இலக்கியவாதிகள், புகலிடத்திலிருந்து இதழ்களை வெளியிட்டு வந்ததுடன் புகலிட இலக்கியத்தையும் பேசுபொருளாக்கினர்.

மாறிக்கொண்டிருப்பது காலம்.  சமகாலத்தில்,  முகநூலின் வருகையையடுத்து பலரும் அதிலும் எழுதி  உடனுக்குடன் எதிர்வினைகளையும் வரவாக்கிக்கொள்கின்றனர்.

நவீன தொழில் நுட்பத்தின் தீவிர பாய்ச்சலினால், வரப்பிரசாதமான இணைய இதழ்களும், முகநூல்களும் இலக்கியம் பேசிவருகின்றன.

எவரும் தத்தமக்கென வலைப்பூவை வைத்துக்கொண்டும் தங்கள் அன்றாட பதிவுகளை அதில் ஏற்றமுடிகிறது.

இந்தப்பின்னணிகளுடன்தான், பிரான்ஸில் வதியும் எழுத்தாளரும்,  ஒரு கால கட்டத்தில்  ஓசை, அம்மா முதலான இதழ்களை வெளியிட்டவரும் மகாஜனாக்கல்லூரியின் பழையமாணவர் மன்றத்தின் பாரிஸ் கிளையின் ஊடாக புகலிட  நாடகக்கலைக்கு பங்களிப்புச்செய்தவருமான மனோ சின்னத்துரையின் கொரோனா வீட்டுக்கதைகளின் உள்ளடக்கத்தை பார்க்கமுடிகிறது.

இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட இலக்கியக்காலங்கள் ஒரு புறம் இருக்கட்டும், இனிமேல் நாம் கொரோனா காலக்கதைகளைப்பற்றி பேசுவோம் என்ற எண்ணத்துடன்,  உள்ளிருப்பு காலத்தில் தனது முகநூலில் எழுதிய கதைகளை தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.

உடனுக்குடன் தனது கதைகளுக்கு வந்த வாசகர் கருத்துக்களையும் நூலின் இறுதியில் ஏழு பக்கங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

கொழும்புத்துறை சமாதி திருக்கோயிலில் சிவ யோகசுவாமிகள் குரு பூசை பங்குனி ஆயிலியம் - 25 . 03 . 2021

                 உ

சிவயோகர் சுவாமிகளை

நினைவு கூருவோம்!

                              


சைவம் நலிந்த வேளையிலே

தழைக்கச் செய்து மெருகூட்டத்

தெய்வம் போல ஈழமதில்

சிவத்திரு யோகர் அவதரித்தார் 

 

என்றோ முடிந்த காரியமே

எல்லாம் முற்றும் உண்மை”யென்றும்

நன்றே குருவின் உபதேசம்

நாளும் சொல்லிப் போதித்தார்.

 

  'அதுஅப் படியே ! உள்ளதைக்காண்"

ஆர் அறி வாரோ “நாமறியோம்”

முதுமொழி யானவிவ் மந்திரங்கள்

முகிழ்த்திடும் பொருள்கள் விளக்கிடுவார்.

 

பொல்லாப் பொன்றும் இல்லை”யென்றார்

புலனை அடக்கச் சிவத்தியானம்

வெல்லும் நல்வழி சொல்லிவைத்தார்

விருப்பொடு ‘மௌனமாய்  இரு’வென்றார்.

 

ஸ்வீட் சிக்ஸ்டி 7- பாலும் பழமும் - ச சுந்தரதாஸ்

.

 1960ஆம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக கோலோச்சிக் கொண்டிருந்தவர் பீம்சிங். தொடர்ச்சியாக சிவாஜி கணேசனின் நடிப்பில் படங் களை டைரக்ட் செய்து அவை எல்லாம் அடுத்தடுத்து வெற்றி கண்டு கொண்டிருந்தன. அந்த வரிசையில் ஜி என் வேலுமணி சரவணா பிலிம்ஸ் சார்பில் உருவாக்கிய படம் பாலும் பழமும்.

பாகப்பிரிவினை என்று படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து இப்படத்தை உருவாக்கியது. சிவாஜியின் அனுசரணையுடன் வேலுமணி நட்சத்திரப் பட்டாளத்துடன் படத்தை உருவாக்கினார். சிவாஜி எம் ஆர் ராதா சுப்பையா பாலையா நாகையா சாயிராம் இவர்களுடன் மலையாளத்தில் பிரபலமாக திகழ்ந்த பிரேம் நசீர் என்று ஒரு அணிவகுப்பே படத்தில் இடம்பெற்றது. அதேபோல் சரோஜாதேவி சவுகார்ஜானகி சுந்தரிபாய் ஆகியோரும் இணைந்து கொண்டனர். ஜி பாலசுப்பிரமணியம் படத்தின் கதையை எழுதி இருந்தார்.

பீம்சிங் படம் என்றாலே குடும்ப படம் தான் என்று முத்திரை குத்தப்பட்டதனால் இப்படமும் உணர்ச்சிகரமான நடிப்பு மனதை நெகிழச் செய்யும் காட்சிகள் கருத்துள்ள வசனங்கள் என்ற வகையில் உருவானது. பாசுமணி வசனங்களை எழுதியிருந்தார். உணர்ச்சிகரமாக வசனம் எழுதிய பாசுமணி எம்ஆர் ராதாவின் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் பல பஞ்ச் வசனங்களையும் எழுதி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..! -- Dr.Fajila Azad

 மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!

 . Drஃபஜிலா ஆசாத்சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்எவ்வளவுதான் இன்று முழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஒரு முடிவோடு எழுந்தாலும்அந்த மகிழ்ச்சிக்கு இடையூறாக ஏதாவது ஒன்று நடக்கிறது அல்லது யாராவது வந்து நிற்கிறார்கள்என்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுஏன் எனக்கு மட்டும் மகிழ்ச்சி என்பது எப்போதும் எட்டாக் கனியாகவே இருக்கிறது?.

கலகலன்னு இருக்கிற கடை வீதியிலே ஒரு பத்து பேரை பார்த்து, ”உங்களுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்க விருப்பமாஇல்லை சோகமா இருக்க விருப்பமா” ன்னு சும்மா கேட்டுப் பாருங்க.

    நிச்சயமாவாழ்க்கையிலே யாராவது சோகமா இருக்க விரும்புவாங்களாசந்தோஷமாக இருக்கத் தான் விருப்பம்னு எல்லோரும் சொல்லுவார்கள்நீங்க உடனேஎப்பவும்எல்லோரும் சந்தோஷமா இருக்கிறீங்களான்னு கேட்டுப் பாருங்கள்… உடன் பாதிக்கு மேற்பட்டவர்களின் தலை கவிழ்ந்து விடும்.

நாம எல்லாருமே வாழ்க்கையிலே சந்தோஷமா இருக்கனும்னு தான் ஆசைப் படுகிறோம்ஆனாஏன் நம்மாலே எப்பவும் அப்படி இருக்க முடியலை.. ஏன்னாஎன் வாழ்க்கைஎன் மகிழ்ச்சி என்னை மட்டும் சார்ந்தது இல்லைன்னு நாம பிடிவாதமா நம்புகிறோம்நாம் எவ்வளவு தான் சந்தோஷிக்க ஆசைப் பட்டாலும்நம் சுற்றம்நட்புசுற்றுச் சுழல்இப்படி பல விஷயங்கள்நாம் அறிந்தும் அறியாமலும் நம்மை அதது போக்கிலே இழுத்துட்டுப் போக அனுமதித்து விடுகிறோம்.

 

பக்தி இயக்கத்தின் முன்னோடியாய் மிளிர்ந்த தமிழ்தந்த செல்வி காரைக்கால் அம்மையார் !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
                 
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 

 

  உலகிலே பல மொழிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மொழியும் முக்கியமான மொழிகள்தாம். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு மொழிக்குமே இல்லாத சிறப்பினை உலகில் எங்கள் தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்தச் சிறப்புத்தான் " பக்தி இலக்கியம் " என்னும் சிறப்பாகும். பக்தி என்பது - இலக்கியமாக எழுந்தி ருப்பது உலகமொழிகளில் தமிழ் மொழியில் மட்டுமே என்பதை எல்லா மொழியியல் அறிஞர்களுமே ஏற்றுக் கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு தனித்துவமாய் , வளர்ந்து யாவரும் வியக்கும் வண்ணம் பக்தி இலக்கியம் தமிழில் அமைந்திருக்கிறது என்பது தமிழருக்கெல்லாம் மிகவும் பெருமை அல்லவா !

  பக்தி இலக்கிய வரலாற்றை எடுத்து நோக்கினால் தமிழகத்திற்கு தனித்த தொரு இடமுண்டு எனலாம். சைவ நாயன்மார்களும்வைணவ ஆழ்வார்க ளும்  உவந்தளித்த பக்தி இலக்கியத்தால் எங்கள் தமிழ் மொழி " பக்தியின் மொழி " என்னும் சிறப்பினைப் பெற்றது என்பது மறுக்கமுடியாத உண்மை எனலாம். இவர்களின் அருட்பாடல்களால் " பக்தி இலக்கியம் " தமிழின் தமிழ்ச்சமூகத்தின் பெருஞ் சொத்தாக ஆகிவிட்டது எனலாம்.

இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐ.நா தீர்மானத்தால் இலங்கைக்கு குந்தகம்

குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை

ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை - பங்களாதேஷ் கைச்சாத்து

இரு தரப்பு பரஸ்பர நாணய பரிமாறல் உடன்படிக்கை

பொன்சேகாவிடமிருந்து ரூ. 100 கோடி கோரும் முத்தையா முரளிதரன்

வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த வேண்டும்

இராணுவ மயமாக்கல் வேண்டாம்! தென்னிலங்கையில் வெடித்தது போராட்டம்

கொள்கை தோல்வியுற்றால் நாடு அழிவுப் பாதைக்குள் செல்லும் - கோட்டாபய எச்சரிக்கை

ஸ்ரீதரன் எம்.பியின் மகன் மீது தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது


இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்-Resolution of UN Core Group of Countries on Sri Lanka Adopted by 11 Majority Votes

- சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் எதிர்த்து வாக்களிப்பு
- இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான் நடுநிலை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை 11 மேலதி வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான குறித்த பிரேரணையை எதிர்த்து பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிக்காது நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்-Resolution of UN Core Group of Countries on Sri Lanka Adopted by 11 Majority Votes

அந்த வகையில் பிரான்ஸ், ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், இத்தாலி, பிரேசில், ஆர்ஜென்டீனா உள்ளிட்ட 22 நாடுகள், இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று 

பன்றி சம்பந்தமில்லை; இந்தோனேசியாவுக்கு 'அஸ்ட்ராசெனகா' பதில்

இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல்

‘சினோவக்’ தடுப்பூசி: எழுவருக்கு சுகவீனம்

சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கியுள்ள கப்பலால் நெரிசல்

மோடி - ஜி ஜின்பிங் உட்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு பைடன் அழைப்பு

ஸ்ரீலங்கா போன்று சீனாவிடம் சிக்க மாட்டோம்! பங்களாதேஷ் இறுமாப்பு


இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் பைசுல் சுல்தான் தெரிவித்துள்ளார்.

68 வயதான இம்ரான் கான் தற்போது சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக சுகாதார அமைச்சர் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பேர்த் பாலமுருகன் கோவில் வருடாந்த திருவிழா 15/04/2021 - 27/04/2021