மரணஅறிவித்தல்

 

திரு. சிவப்பிரகாசம்வாகீஸ்வரன்‌ 



யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும்‌, வளர்ப்பிடமாகவும்‌, Sydney Baulkham Hills, Paxton னை வதிவிடமாகவும்கொண்டிருந்த திரு. சிவப்பிரகாசம்வாகீஸ்வரன்அவர்கள்கடந்த 17.03.2022 வியாழக்கிழமையன்று Paxton இல் காலமானார்‌.

அன்னார்உரும்பிராயைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.சிவப்பிரகாசம்‌, திருமதி.இராசம்மா சிவப்பிரகாசம்ஆகியோரின்அன்பு மகனும்,‌ சண்டிலிப்பாயைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான திரு.வைத்திலிங்கம்‌, திருமதி.பொன்னம்மா வைத்திலிங்கம்‌ ஆகியோரின்‌ அன்பு மருமகனும், காலஞ்சென்ற திருமதி ஞானலக்‌ஷ்மி வாகீஸ்வரன்‌ அவர்களின்‌ அன்புக் கணவரும், வாகினி, சுரேஷன்‌, ஜியோதினி, ரமேஷ்‌ ஆகியோரின்‌ பாசமிகு தந்தையாரும்‌, சண்முகானந்தன்‌, கமலலோசனி, சிவராஜ்‌, தர்மினி ஆகியோரின்‌ அன்பு மாமனாரும், ராஜீவ்‌, அபிராமி, கவினி, விசாகினி, சாயி சசி, விஷ்ணகோபன்‌, சாயி சத்தியானந்தா, சாயி கணேஷ்‌, சாயி சதி, சாயி பிரகேஷ்‌, ஆகியோரின்‌ அன்புப் பாட்டனாரும், தாட்ஷாயினி, கபிலன், சுரஜீவ்‌, ஏட்ரியன், கௌரு, ரேகாஞ்சலி, தான்யா ஆகியோரின்‌ அன்புப்‌ பாட்டனாரும், சாய் ஞானசித்தி, அர்ஷயா, அக்க்ஷய சயி, மைக்கல், பழனி, நேஹாஞ்சலி, ஆகியோரின் பூட்டனாரும்,  

காலஞ்சென்ற திருமதி.யோகேஸ்வரி துரைரத்தினம் ‌(மெல்பேண்), காலஞ்சென்ற திருமதி.ராஜாத்தி நடராசா (இங்கிலாந்து), காலஞ்சென்ற திருமதி.சாரதாதேவி சங்கரலிங்கம்‌ (இங்கிலாந்து), காலஞ்சென்ற திரு.சிவராஜகுலேந்திரன்‌ (உரும்பிராய்), திரு.செல்வச்சந்திரன்‌ (இங்கிலாந்து) ஆகியோரின்அன்புச் சகோதரனும் ஆவார்‌.

காலஞ்சென்ற திரு.துரைரத்தினம், காலஞ்சென்ற திரு.நடராஜா, திரு. சங்கரலிங்கம்‌ (இங்கிலாந்து), பத்மினி(இங்கிலாந்து), காலஞ்சென்ற திரு.சிவபாதசுந்தரம்‌, காலஞ்சென்ற திருமதி.தங்கலட்சுமி செல்வராஜ்‌, காலஞ்சென்ற திருமதி.ராஜலட்சுமி நல்லையா, காலஞ்சென்ற திரு.சிவஞானசுந்தரம்‌, காலஞ்சென்ற Dr சிவபாலசுந்தரம் ‌(மெல்பேண்‌), திருமதி.யோகலட்சுமி மணியா்பிள்ளை (சிட்னி), திருமதி.ஜெயலட்சுமி சிவசுப்பிரமணியம்‌ (சிட்னி), ஆகியோரின்அன்பு மைத்துனரும் ஆவார்‌.

அன்னாரின்ஈமக்கிரியைகள்Sydney Macquarie Park Crematorium, Delhi Road, Macquarie Park. Palm Chapel இல்எதிர்வரும்வியாழக்கிழமை 24.03.2022 காலை 9:30 மணி முதல் பிற்பகல்11:30 மணிவரை நடைபெறும்‌.

இவ்அறிவித்தலை உற்றார்‌, உறவினர்கள்‌, நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்‌.

தகவல்-குடும்பத்தினர். தொடர்புகளுக்கு:

சுரேஷன் :- +61415117769

ஜியோதினி :- +61402571321

ரமேஷ் :- +61414350162

ராஜீவ்‌ :- +6587551475


வாழ்வாங்கு வாழுவதை மனமுழுக்க நிறைக்கின்றார் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்

மெல்பேண் .... அவுஸ்திரேலியா 


கையில்லா பலருள்ளார் காலில்லா பலருள்ளார்
கண்ணில்லா பலருள்ளார் வாய்பேசா பலருள்ளார்
என்றாலும் இவர்கலெல்லாம் இவ்வுலகில் வாழுகிறார்

எவருக்கும் தீங்கிளைக்க இவரென்றும் எண்ணுகிலார் 

குறையெது வுமில்லாமல் குவலயத்தில் பலருள்ளார்
குறைகாணும் வழியிலவர் நிதம்பயணப் படுகின்றார்
குறையின்றிப் பிறந்ததனை மனமதிலே இருத்தாமல்
நிறைகுறைவாய் இருப்பதனை நெஞ்சேற்க மறுக்கிறது 

ஊனமுற்றோர் தினமென்று ஒருதினத்தை முன்னிறுத்தி
ஊனமுற்றோர் என்போரை  உயர்த்தியே பலவுரைப்பார்
உரைப்பவர்கள் அரங்குக்குள் வருவதற்கு முன்னாலே
குருடுடென்பார் செவிடென்பார் நொண்டியென்பார் கேலியுடன் 

மேடைகளில் ஏறுவார் வீரவார்த்தை கொட்டிடுவார்
ஊனமென்னும் சொல்லதனை உரைத்திடலே தவறென்பார்
உள்ளுக்குள் அவர்மனமோ ஊனமாய் ஆகிருக்கும்
உடல்குறைவு உடையாரை ஊனமுற்றோர் எனவுரைப்பார் 

கந்தவேளைக் கருங்குயிலே வரக்கூ வாயே! - பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

 

சிவமயம்






          














பாதிமதி ஏறுசடைப் பரனார் நெற்றிப்

            பரந்தவிழி உகுத்திட்ட ஆறு பொறிகள்

சோதிப்பொலி வுடனாறு மதலை களாகிச்

            சுந்தரத்தா யணைக்கவந்த அறுமுக வேலனை!

ஆதிகேசவன் மருகனை! அமரர் தொழவே

             அருளொளிவி ரிக்கின்ற வைவேல் முருகனை!

நாதியற்று நலிவுற்றோர்; நலந்தனைக் காத்திட

            ஞானமுதலைப் பூங்குயிலே வரக்கூ வாயே!


சுந்தரமதி முகமாறும்  சோதியோ டாடத்

                தூய்மைமிகு பொன்முடிகள் துலங்கி ஆடச்      

சந்தணியும் மார்பில்முப் புரிநூ லாடச்

                  சக்திகளாய்ப் பாவையரும் பக்க மாடப்

பந்தமறுக் கும்வைவேல்செங் கரத்தி லாடப்

                  பசுந்தோகை தனைவிரித்தே மயிலும் ஆட

வந்தாதரி யென்றடியார் மன்றா டவந்தருள்

                 வடிவேலனைப் பூங்குயிலே வரக்கூ வாயே!

  

 விந்தையென அருணகிரியின் உயிரைக் காத்து

                     விலைகாணாப் புகழாரஞ் சூட்ட வைத்து

 முந்தைவினை தீர்;த்துப்பத மீய்ந்தளித் தானை!

                    முத்தமிழுக்(கு) அணிசேர்த்தோர்க்(கு) அருள்தந் தானை!

 செந்தமிழுக்(கு) ஏங்கிஒளவைக் கருளி னானை!

                    தினைப்புலத்தில் வரித்திட்ட வள்ளி கேள்வனை!

 வந்தவதா ரஞ்செய்து சைவமுந் தழைக்க

                   வழிசெய்யப் பூங்குயிலே வரக்கூ வாயே!

 

கவிதை - த. நந்திவர்மன்

 


முருகபூபதியின் புதிய நூல் யாதுமாகி 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியீடு


வுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுகளைக்கொண்ட புதிய நூல் யாதுமாகி.

இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியாகிறது.

கலை, இலக்கியம், கல்வி, ஊடகம், நடனம்,  தன்னார்வத் தொண்டு, சீர்மியப்பணி, திரைப்படம், விடுதலைப் போராட்டம், முதலான பல்துறைகளில் ஈடுபட்ட பெண் ஆளுமைகள் குறித்த தனது மனப்பதிவுகளை கடந்த காலங்களில் எழுதி வந்திருக்கும் முருகபூபதி, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம், கடித இலக்கியம், புனைவுசாரா பத்தி எழுத்துக்கள், திறனாய்வு முதலான துறைகளில் இதுவரையில் 25 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பவர்.

சிறுகதைக்காகவும் நாவலுக்காகவும் இலங்கையில் தேசிய சாகித்திய விருதுகளை இருமுறை பெற்றிருக்கும் முருகபூபதி, அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் முதலான அமைப்புகளினதும் ஸ்தாபக உறுப்பினருமாவார்.

ஸ்வீட் சிக்ஸ்டி 6 -தாயைக் காத்த தனயன் - - - ச சுந்தரதாஸ்


 

தாய் சொல்லைத் தட்டாதே என்ற வெற்றிப் படத்தை தயாரித்த சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர் அந்தப் படம் நூறாவது நாளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போதே தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார்.படத்தின் பெயர் தாயைக் காத்த தனயன்.தாய் சொல்லைத்த தட்டாதே படத்தில் இடம் பெற்ற நடிகர்கள், கலைஞர்களை கொண்டே அடுத்த படத்தை தொடங்கிய தேவர் கதாபாத்திரங்களையும் முந்தைய படத்தைப் போலவே அமைத்து விட்டார்.தாய் சொல்லைத்த தட்டாதே,தயைக் காத்த தனயன் இரண்டிலும் தனயன் புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரன்.தாய் பி கண்ணாம்பா.கதாநாயகி பி சரோஜாதேவி .வில்லன் எஸ் ஏ அசோகன்.அதில் கதாநாயகிக்கு அப்பாவாக வந்த நடிகவேள் எம் ஆர் ராதா இதில் அண்ணனாக வருகிறார்.ஆனால் முந்தைய படத்தில் நடித்த குலதெய்வம் ராஜகோபால் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.மாடப்புறா படத்தின் போது எம் ஜீ ஆருக்கும் ராஜகோபாலுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்தப் படத்தில் அவர் இடம் பெறவில்லை.அவருக்கு பதில் எம் ஆர் ராதாவின் மூத்த மகன் எம் ஆர் ஆர் வாசு புதுமுக நடிகராக இதில் நகைச்சுவை வேடம் ஏற்றார். முந்தைய படத்தைப் போல் இதிலும் தேவர் வில்லனின் கையாளாக நடித்தார்.இவர்களுடன் ஜீ சகுந்தலாவும் நடித்தார்.

பத்து தலைமுறைக்கு சொத்து இருக்கும் குடும்பத்தில் பிறந்த சேகர் பொழுது போக்குக்காக வேட்டையில் ஈடுபடுகிறான்.புலி வேட்டையின் போது அவன் வைத்த குறி பிசகவே புலி தப்பி விடுகிறது.ஆனால் புள்ளிமான் சிக்குகிறது.அதாவது மரகதம் என்ற இளம் மங்கை அறிமுகமாகிஇருவர் இடையே காதல் மலர்கிறது.ஊரில் உள்ள போக்கிரி முத்தையா மரகதத்தை அடைய பல தடுகிதங்களை செய்கிறான்.மரகதம் சேகர் காதலை ஆரம்பத்தில் எதிர்க்கும் சேகரின் தாயும் மரகதத்தின் அண்ணனும் பின்னர் மனம் மாறுகிறார்கள்.ஆனாலும் பழி வாங்கத் துடிக்கும் புலி தாயின் மீது பாய அதனுடன் கட்டிப் புரண்டு சண்டை போட்டு தாயைக் காத்த தனயன் ஆகிறான் கதாநாயகன்சேகர்.

ரஷ்யாவைப் பலவீனப்படுத்த மேற்குலகம் விரித்துள்ள சதிவலையின் களமா உக்ரைன்?


ரஷ்யா உலகின் பலம் மிக்கஅணுவாயுத வல்லரசு. இந்நாடு கடந்த மாதம் 24ஆம் திகதி உக்ரைன் மீது பெரும் எடுப்பில் போரை ஆரம்பித்தது. இப்போர் ஆரம்பமாகி மூன்று வாரங்களாகியுள்ள போதிலும், யுத்தம் நீடித்த வண்ணமே உள்ளது. இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி சமாதானத்தைஏற்படுத்துவதற்கான முயற்சிகள்வெற்றியளிக்காத நிலையில், யுத்தப் பேரழிவுகளுக்கு உக்ரைன் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் சார்பு நிலையை உக்ரைன் எடுத்ததன் விளைவாக ரஷ்யாவின் படையெடுப்புக்கு உள்ளாகியுள்ளது. இப்படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவுமாறு அந்நாட்டு ஜனாதிபதி வெளடிமிர் வெலன்சி கோரியும் உதவ மறுத்த இந்நாடுகள் யுத்தத்தை நிறுத்தி சமாதான வழிக்கு ரஷ்யாவை கொண்டு வருவதற்கான நேரடி முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவை கோபம் கொள்ளச் செய்து, இப்போர் நீடிப்பதற்கான நடவடிக்கைகளையே அவை முன்னெடுத்து வருகின்றன.  

சிட்னி முருகன் வருடாந்த திருவிழா - பூங்காவனம் - 19/03/2022

 



சிட்னி முருகன் வருடாந்த திருவிழா - கொடியிறக்கம் - 18/03/2022

 


சிட்னி முருகன் வருடாந்த திருவிழா - தீர்த்தம் - 18/03/2022

 

சிட்னி முருகன் வருடாந்த திருவிழா - தேர்த் திருவிழா 17/03/2022

சிட்னி முருகன் ஆலயத்தில் 17/03/2022 வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த தேர்த் திருவிழாவின் சில காட்சிகள்.

https://www.facebook.com/Sydney-Murugan-Temple


தங்கத் தேரோடும் எங்கச் சீரான சிட்னியிலே! நாடோர்கள் கொண்டாடும் நற்றமிழர் நல்விழா!!

சிட்னி முருகன் வருடாந்த திருவிழா - சப்பரத் திருவிழா 16/03/2022

 


https://www.facebook.com/Sydney-Murugan-Temple

ஆணவம் மிஞ்சினால்…. எஞ்சுவது என்ன…? அவதானி


இலங்கை தமிழர்  தரப்பு அரசியல் மட்டுமல்ல -  சிங்கள, முஸ்லிம் தரப்பு அரசியலுக்கும் 70 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு இருக்கிறது.

இந்தப்பின்னணியில், தேர்தல் ஆணையாளர் திணைக்களத்தில் பதிவுசெய்வதற்காக எழுபதிற்கும் மேற்பட்ட கட்சிகள் விண்ணப்பங்களை அனுப்பிவிட்டு காத்திருக்கின்றன. இச்செய்தி அண்மையில் வெளியானது !

ஏற்கனவே பல கட்சிகள் நாடாளுமன்றிலும், உள்ளுராட்சி மன்றங்களிலும் தத்தமது பிரதிநிதிகளை வைத்திருக்கின்றன.

காலத்துக்கு காலம் தங்கள் தனிப்பட்ட காரணங்களினாலும்,   தன்முனைப்பு ஆணவத்தினாலும், கருத்து மோதல்களினாலும்


கட்சிகளிலிருந்து வெளியேறி,  புதிய புதிய கட்சிகளை உருவாக்கியவர்கள் பற்றி அறிந்திருக்கின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்த பின்னர்,  தோன்றிய ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து பண்டாரநாயக்கா தனித்துச்சென்று உருவாக்கியதே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

அதேபோன்று தமிழ்க்காங்கிரஸிலிருந்து புதிதாகத் தோன்றியதே தமிழரசுக்கட்சி.  சமமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியிலும் பிளவுகள் தோன்றி புதிய புதிய கட்சிகள் உருவாகின.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் பலதடவை பிளவுகளைக்  கண்டது.

அதில் ஒரு பிளவுதான் இன்று ஆளும் பொதுஜன முன்னணி கட்சி. அதற்கு முன்னர் சந்திரிக்காவும் அவரது கணவர் விஜயகுமாரணதுங்காவும் சேர்ந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறி மக்கள் கட்சியை உருவாக்கினர்.

ஐக்கிய தேசியக்கட்சியில், ரணிலா, சஜித்தா தலைமை ஏற்பது என்ற போராட்டத்தின் விளைவுதான் இன்றைய ஐக்கிய மக்கள் சக்தி.

தமிழர் தரப்பு அரசியல் கட்சிகள் குறித்து பேசவே வேண்டாம். தமிழ்க்காங்கிரஸ், தமிழரசு இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு இறுதியில் என்ன நடந்தது…?

ஆனந்தசங்கரி அதனை தன்வசப்படுத்திக்கொண்டு தனி வழிசென்றார்.

கற்பகதருவினைக் கருத்தினில் இருத்துவோம் ! [ சுவை முப்பத்து நான்கு ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
 மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

                                                  

  இரும்பினைக் கண்டு பிடிக்க முன்னரே இரும்பு போன்ற ஒன்று


எங்களுக்கு அயலிலேயே இருந்தது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா அறியும் ஆவல் ஏற்படுகிறது அல்லவா அது வேறு எதுவுமே இல்லை. எங்களின் சொந்தமரம் பனைதான் அதுவாகும்.இரும்பை ஒத்த வலிமை உடையதாக பனை இருந்திருக் கிறது என்பது எமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறதல்லவா ! ஏறக் குறைய நூற்று இருபது வருடங் கள் வரையிலும் பனைமரம் இருக்கும் என்று அறிந்திட முடிகிறது. மனிதனது வாழ்நாளும் நூற்று இருபது வருடங்கள் என்று பொதுவாகவே சொல்லப்பட்டாலும் அந் தளவு காலத்துக்கு வாழ்வது என்பது அரிது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே மனிதனைவிடப் பனையின் ஆயுட்காலம் என் பது நீண்டதாகவே இருக்கிறது என்பதை மனமிருத்துதல் முக்கிய மாகும்.மனிதன் மாநிலத்தில் நீண்ட காலம் வாழ்ந்தாலும் அவனிடத்து காணப்படும் வள்ளல் தன்மையை விடப் பனையிடம் காணப்படும் வள்ளல் தன்மை மிகவும் சிறப்பானதாகும் என்பதும் நோக்கத்தக்கது. பனையானது அடியிருந்து நுனிவரை எல்லாவற்றையுமே மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் கொடுத்தபடியே இருக்கிறது. தனக்குத் தேவையான அனைத்தையுமே மனிதன் பனையிடமிருந்து பெற்றுக் கொண்டே இருக்கிறான் என்பது மறுக் கமுடியாத உண்மையெனலாம்.

இலங்கைச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

யாழ்ப்பாணம் நாவற்குளி விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமரினால் திறந்துவைப்பு

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம்

யாழில் 50 பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைப்பு


ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு 

- பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க முடியாது
- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு

உலகச் செய்திகள்

 ரஷ்யா மீது தடைகள் அதிகரிப்பு: போர் களத்திலும் முட்டுக்கட்டை

உக்ரைனில் இருந்து மாணவரை மீட்டதற்காக அயல் நாட்டு தலைவர்கள் மோடிக்கு நன்றி​ தெரிவிப்பு

பொதுமக்கள் தஞ்சமடைந்த திரையரங்கு மீது தாக்குதல்

பைடனுக்கு ரஷ்யா தடை

உக்ரைன் போர் 4ஆவது வாரத்தை தொட்டது; மனித இழப்பு அதிகரிப்பு


ரஷ்யா மீது தடைகள் அதிகரிப்பு: போர் களத்திலும் முட்டுக்கட்டை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா நேற்று ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளன. உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யப் படை ஸ்தம்பித்திருப்பதாக மேற்கத்திய நாடுகள் குறிப்பிட்டபோதும் போரினால் பேரழிவுகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.