“பேனாவைக்கொல்ல முடியாது” ருத்ரா

.
charlie-hebdo-cartoon-morin
இந்த‌
“ஒரு வரிக் கவிதையை”
தலைப்பாய் சூட்டியிருக்கிறது
“தி இந்து தமிழ்”
தனது தலையங்கத்தில்!
பிரெஞ்சு மண்
ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது.
வற‌ட்சி தீப்பிடித்த சிந்தனை
இப்படிவெறி பிடித்ததை
இன்று தான் பார்க்கிறது.
அது என்ன‌
வெறும் விறைத்த “ஈஃப்பில் கோபுரமா?”
ஃப்ரான்ஸ் நாட்டு பாரீஸில்
மக்கள்
நட்டு வைத்த
சுதந்திரத்தின் முதுகெலும்பு அது!
முதுகெலும்பற்ற
துப்பாக்கிப்புழுக்கள்


சிட்னி முருகன் ஆலயத்தில் தைப் பூசம் 03.02.15


எழுதமறந்த குறிப்புகள். - முருகபூபதி

.
அவுஸ்திரேலியாவில்  சமூகப்பணிக்கு  முன்மாதிரியான உதாரண புருஷர்
பாதிப்புற்ற  குழந்தைகளின்  பக்கம்  நிற்கும்  தொண்டர் நவநீதராஜாவுக்கு 70வயது.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்து  குடியேறியது   முதல்  என்னை பிரமிப்பில்   Mr.Navaneetharajahஆழ்த்திக்கொண்டிருக்கும்  இந்த  கடல்  சூழ்ந்த கண்டத்தின்    முன்னேற்றமும்    வளர்ச்சியும்  பற்றிய  தேடலில் ஈடுபட்டிருக்கும்    தருணங்களில் -  கடின  உழைப்பினால்  முன்னேறி தான்    சார்ந்த  சமூகத்திற்கும்  தான்    உளமார  நேசிக்கும் தாயகத்திற்கும்  தன்னாலியன்றவரையில்  தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களும்     என்னை    பிரமிப்பில் ஆழ்த்துகிறார்கள்.    அப்படிப்பட்டவர்கள்  எனது  நேசத்துக்குரியவர்களே.
அத்தகைய   உதாரண புருஷர்கள்  தாம்  எங்கு  வாழநேரிட்டாலும் தமக்கும்  தம்முடன்  இணைந்திருப்பவர்களுக்கும்  தான்  வாழும் நாட்டுக்கும்    மிகுந்த  விசுவாசமாகவே    இருப்பதனால்   அவர்கள் குறித்த    மனப்பதிவும்  மரியாதைக்குரியதாகவே    இருக்கிறது.
 அந்த  வரிசையில்  இந்த  எழுத  மறந்த  குறிப்புகள்  தொடரில்   நான் சொல்ல விரும்புவது    எம்மத்தியில்  வாழும்  அன்பர்   திரு. நவநீதராஜா    அவர்கள்   பற்றியது.   அவருக்கு  எதிர்வரும்  6   ஆம் திகதி   70    வயது   பிறக்கிறது.

சங்க இலக்கியக் காட்சிகள் 37- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

மனம் விரும்புதே உன்னை!

விதை விதைத்தல், அருவிவெட்டுதல், ஆடுமாடு மேய்த்தல் என்று ஓடியோடி உழைத்துப் பல தொழில்களைச் செய்யும் முல்லை நிலத்து மக்கள் உடற்பலம் மிக்கவர்கள். தலைவன் தொழில் காரணமாக பிரிந்து செல்வதும் அவன் வரும்வரை கவலையோடு தலைவி காத்திருப்பதும் முல்லைநிலத்து மக்களின் வழமையான வாழ்க்கைமுறை. அதனால்தான் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை நிலத்து உரிப்பொருள் என இலக்கணம் வகுக்கிறது தொல்காப்பியம்.

இலங்கைச் செய்திகள்

 பிர­தம நீதி­ய­ர­ச­ராக ஸ்ரீபவன்

 'கடூ­ழிய சிறை தண்­ட­னையாய் உணர்ந்தேன்' : ஓய்வு பெறும் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஷிராணி உருக்கம்

வட மத்திய மாகாண முதலமைச்சராக பேஷல ஜயரத்ன சத்தியப்பிரமாணம்


 பிர­தம நீதி­ய­ர­ச­ராக ஸ்ரீபவன்

31/01/2015 இலங்­கையின் 45 ஆவது பிர­தம நீதி­ய­ர­ச­ராக கன­க­ச­பா­பதி ஸ்ரீபவன் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்து கொண்டார்.

திருவாசக முற்றோதல் 2015

.

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.

.(மூங்கிலின் இருபுறமும் தீப்பற்றிக்கொண்டபோது அதன் இடையில் சிக்கிக்கொண்ட எறும்பு)

“இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு.”

இவ்வரிகளை,

முதல் முறை படித்போது கவிதை நயம் உணர்ந்தேன்..

இரண்டாம் முறை படித்த போது உவமை நயம் உணர்ந்தேன்..

மூன்றாம் முறை படித்த போது எறும்பின் வலி உணர்ந்தேன்...

நான்காம் முறை படித்த போது எறும்பைப் போன்ற தலைமக்களின் மனவலியை உணர்ந்தேன்....

இப்போது எனக்கு ஒரு ஐயம் எழுகிறது..

எறும்பின் வலி முதல் முறை படித்த போது ஏன் என்னால் உணர முடியவில்லை..?

‘பூனை எலியை விரட்டுகிறது, 
இரண்டும் ஓடுகின்றன..
இரண்டும் ஓட்டம் தான் ஆனால் இரு ஓட்டத்துக்கும் வேறுபாடு உண்டு.

வெளிவந்து விட்டது வானவில் ஜனவரி மாத இதழ்

.
 வெளிவந்து விட்டது வானவில் ஜனவரி மாத இதழ் 2015.
2014-2015 ஆண்டு கார்த்திகை - மார்கழி - தை மாதங்களுக்குரியவானவில் (இதழ் 47, 48, 49) வெளிவந்துவிட்டதுஇதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.

இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.


கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம்.


https://manikkural.files.wordpress.com/2015/01/vaanavil-47-48-49_2015.pdf

மருதடி விநாயகர் பதிகம்

.
யாழ், மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் மகாகும்பாவிசேடம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது,

இதையொட்டி இப்பதிகம் பிரசுரமாகிறது, 


      ahH;g;ghzj;J  நாவலியூர்  @j';fj; jhj;jh@
      f/ nrhkRe;jug;g[ytu; mtu;fs; mUspa
      khdpak;gjp kUjo tpehafu; gjpfk;      
                           


                     


    fhg;g[


                     kUjo tpehafu;

             jpUtsU'; fy;tptUe; jPtpidf nshL';
           FUtUSk; tPL';if TLk; - bgUts";nru;
           khdp kUjoapy; te;jUSk; Ie;Jfuj;(J)
           MidKfj; jhidepide; jhy;/

                     ehkfs;

           te;jtpid tpf;fpd';fs; khw;Wk; kUjothH;
           je;jpKfj; bje;ij jkpH;ghlr; - re;jjKk;
           j";rk";brhy; t";rpk";R jz;rpyk;g[ bfh";Rtp";R
           g";Rk";R ghjg';f ak;/

                     FU

           rpe;jpf;Fk; bka;aoahu; bra;fUk'; ifTl;Lk;
           je;jpf; flt[s; jkpH;tUnk – Ke;jp
           videpide;jpg; g[tpg[Fe;jw; g[JkpF";brhw; wUktd;bghw;
           fdff";rf; fHdpide;jf; fhy;/

இன்னொரு முறை அகதி வாழ்க்கை வேண்டாம்...

.

'இன்னொரு முறை அகதி வாழ்க்கை வேண்டாம்... இந்தியாவில் இருந்து எங்களை போகச் சொல்லாதீர்கள்!'தமிழக முகாம்களில் அகதிகள் உருக்கம் | தாய்நாடு திரும்ப ஒருசிலர் விருப்பம்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை மீண்டும் அந்நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் என்ன கருதுகிறார்கள்? இதுபற்றி அறிய அவர்களைச் சந்தித்தோம்.
மதுரை ஆனையூர்
தர்மதாஸ் (55):
இலங்கையின் மன்னார் அருகே உள்ள மாடியபட்டிதான் என் சொந்த ஊர். 1991-ல் தமிழகம் வந்தேன். மனைவி, 3 குழந்தைகளுடன் இங்கு வசிக்கிறேன். இலங்கையில் நிலங்கள் உள்ளன. வசிக்கவும் வேலைக்கும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துகொடுத்தால், நாடு திரும்பலாம்.
செல்வி (56):

விழுதல் என்பது எழுகையே" - பகுதி 37 ச.நித்தியானந்தன் ,இலங்கை.

பகுதி – 37 தொடர்கிறது
நடந்தது யாவுமே ஒரு கனவாக இருக்கக்கூடாதா 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , மருத்துவபீடம் பேராசிரியர் குமாரவேல், கலா, சாந்தன் கோப்பாய் இராணுவ புலனாய்வாளர்களால் இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்தப்பட்டது.
இராணுவத்தினரின் சித்திரவதைகள்
கோபமடைந்த அதிகாரியின் கையால் அடிபட்டு உடைந்த கையெலும்பு
பொலிஸ் விசாரணைகள்
தலைகீழா கட்டித் தொங்கவிட்டது
மனித உரிமைக்குழுவினர் வந்து பார்வையிட்டமை
செஞ்சிலுவைச்சங்கம் உணவுப் பொதிகள் தந்தமை
பூசா பனாகொடை வெலிக்கடையென்று மாறி மாறி அடைக்கப்பட்டமை
நோ டேற் என்னும் கொடுமையான விளக்கமறியலில் கழிந்த 3 வருடங்கள்.
இறுதியாக சாட்சிகள் போதவில்லை நிதாஸ் என்று கூறி தீர்ப்பெழுதிய நீதிபதி
இனி இந்த நாட்டிலிருக்க முடியாதென்று எல்லா சொத்துகளைகளையும் ஈடு வைத்து ஏஜன்சியிடம் பணம்கட்டிய அந்த நாள்.
கொழும்பில் லொட்ஜில் ஆடு மாடுகள் போல் அடைபட்டு கிடந்த அந்த ஆறேழு மாதங்கள்
இறுதியாக கனவு நாடாகிய சுவிஸ் நோக்கிய பயணம் புறப்பட்ட அந்த அதிகாலை
தாய்நாட்டைவிட்டு மேலெழுந்த விமானம்.
அதன் பின் இங்கு வந்து பட்ட அவலங்கள் ”
சீலன் மாரிமுத்தாகிய உச்சக்கட்ட அவலம்: 
இதெல்லாம் கனவாயிருக்காதா 
கண் விழித்து பார்க்கையில் மருத்துவபீடத்;தில் பேராசிரிய பாலசுப்பிரமணியம் உயிர் இரசாயனவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் காட்சி விரியாதா?
மனம் அங்கலாய்த்தது 

Manju is not a sex starved bitch....ஒரேயொரு திரைப்படத்திற்காக, தமிழ் சினிமாவின் வரலாற்றின் பக்கங்களில் விமர்சகர்களாலும் ஆர்வலர்களாலும் ஒரு படைப்பாளி தொடர்ந்து நினைவுகூரப்படுகிறார் என்றால் நிச்சயம் அது அபூர்வமான விஷயம்தான். அத்திரைப்படம் 'அவள் அப்படித்தான்' - அந்த இயக்குநர் 'ருத்ரய்யா'. இதுவரை வெளியான அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் வடிகட்டி அதில் கறாராக பத்து சிறந்த சினிமாக்களை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அந்தப் பட்டியலில் என்னுடைய தேர்வாக நிச்சயம் 'அவள் அப்படித்தான்' இடம்பிடித்து விடும். அத்திரைப்படம் வெளிவந்த காலக்கட்டத்தையும் பின்னணியையும் வைத்து யோசிக்கும் போது அந்த திரைப்படத்தின் குறைகளையும் போதாமைகளையும் கடந்து கூட அதுவொரு மிகச் சிறந்த உருவாக்கம் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

1978-ல் வெளிவந்த இத்திரைப்படத்தை ஏறத்தாழ என்னுடைய 22 வது வயதில், அதாவது 1992-ல் பார்த்தேன். யாரிடம் இத்திரைப்படத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டேன் என்று நினைவில்லை. எழுத்தாளர் சுஜாதாவாக இருக்கலாம். ஏனெனில் என்னுடைய ரசனை மாற்றத்தின் பல வாசல்களை திறந்து விட்டவர் அவரே. அவருடைய அபுனைவு எழுத்துக்களில்தான் முதன்முறையாக பல சிறந்த எழுத்தாளர்களின், சத்யஜித் ரே உள்ளிட்ட பல அற்புதமான திரைக்கலைஞர்களின் அறிமுகங்கள் என்கேற்பட்டது. சத்யஜித் ரே மரணத் தறுவாயில் இருக்கும் போது ஞானோதயம் வந்த தூர்தர்ஷன் அவருடைய திரைப்படங்களை அப்போது தொடர்ச்சியாக  ஒளிபரப்பியது. 'பதேர் பாஞ்சாலி' என்கிற உன்னதத்தின் பின்னணியைப் பற்றி ஏதும் அறியாமலேயே அதை முதன்முறை பார்த்து விட்டு உறைந்து அமர்ந்திருந்த அந்த நள்ளிரவு நினைவுக்கு வருகிறது.

என்னென்ன நோய் "உறுப்புகளின் அறிகுறிகள் !

.

  நமக்கு என்னென்ன நோய் என்பதை நம் உறுப்புகளின் அறிகுறிகள் மூலமே தெரிந்து கொள்ளலாம்:-
கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி? :
  சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேறமுடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி .. என்ன வியாதி?:
  அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது. தீர்வு : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?:
  அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த அழுத்தத்தால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பி விடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது. தீர்வு : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

நூல் அறிமுகம்: ராஜாஜி ராஜகோபாலனின் "ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்"

.

ராஜாஜி ராஜகோபாலன் ஈழத்தில் இருந்த கனடாவுக்குச் சென்று அங்கு வசித்த வருபவர்.  அவருடைய படைப்பாகவளரி எழுத்துக்கூடம் வெளியிட்ட ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம் பற்றி சில குறிப்புக்கள் .  கவிதை என்பது உள்ளத்து உணர்வுகளை வெளிக்கொணரும் மொழியின் ஒரு அழகிய பகுதி . அந்தக்கவிதையை கையிலெடுத்த ராஜகோபாலன் ஈழத்து வாழ்வியலை அதன் பண்பாட்டம்சங்களை அழகிய கவிதைகளாக இத்தொகுதியில் தந்திருக்கிறார். "அம்மாமெத்தப் பசிக்கிறதே" என்ற கவிதை போர் முனையில் சிதைந்த ஒரு சிறுவனின் வாய்ப்பாடாக பின்வருமாறு வெளிப்படுகிறது "வானமே எங்கள் கூரையம்மா. வெண் மணலே எங்கள் கம்பளமாம். வேலிக்கு வெளியே வேறுலகம். வேதனை என்பதே நம்முலகம்.
"மரங்கள் என் நண்பர்கள்" என்ற கவிதை இயற்கையோடு இணைந்து இவர் கவி மனதை வெளிப்படுத்துகிறது. "ஒழுகும் நிழலின் அணைப்பில் அயர்வேன் .தழுவும் இதழ்களில் காதலில் கரைவேன் தேயும் மரங்களின் தியாகத்தை மதிப்பேன் .தாங்கும் தண்டினில் தந்தையை துதிப்பேன்." என தொடர்கிறது அக்கவிதை . "மங்கையராய் பிறப்பதற்கே" என்ற கவிதை பெண்ணடிமைத் தனத்தை யதார்த்தமாக எடுத்துரைக்கிறது. "மாவை அரைக்கிறாய் மாவாய் அரைபடுகிறாய் . உரலில் இடிக்கிறாய் உரலால் இடிபடுகிறாய். பகலில் முறிகிறாய் படுக்கையிலும் முறிகிறாய்." எனத் தொடர்கிறது அக்கவிதை .

ஸ்ரீமத் பாகவத சப்தாக ஜான யஜ்னம்


தமிழில் ஏப்ரல் மா தம்  2ம்  திகதி முதல் ஏப்ரல் மா தம்  9ம்  திகதி வரை  ஸ்ரீ சச்சிதானந்தா  சாய் அவர்களால் சிட்னியில் நடைபெறும் .

விபரம் பின்னர் தரப்படும் 

துறவி

  .


ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்
வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் .
அப்ப
திடீர்னு ஒரு காட்டுக்குள்ள
வச்சு அவன் வந்த பைக் பஞ்சர்
ஆய்ருச்சு. உடனே பக்கத்துல
பார்த்தான் தூரத்துல ஒரு மடம்
தெரிஞ்சது உடனே அங்க போய்
எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்
அங்க இருந்த
துறவி சொன்னாரு .
தம்பி நேரம்
வேறு போயிருச்சு இந்த
இருட்டுக்குள்ள நீங்க
ஊருக்கு வண்டிய
சரி பண்ணி போகனுமா ?
பேசாம இங்க

தமிழ் சினிமா ஆம்பள

  .

ஆம்பள - Cineulagam

தமிழ் சினிமாவில் என்றுமே கமர்ஷியல் படங்களுக்கு ஒரு வரவேற்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் சுந்தர்.சி என்றால் சொல்லவா வேண்டும், ஏற்கனவே விஷால்-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகிய மதகஜராஜா படம் இன்னும் வெளிவரவில்லை.
ஆனால், அதெல்லாம் பார்த்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது என தன் சொந்த தயாரிப்பிலேயே விஷால் களம் இறங்கியிருக்கும் படம் தான் ஆம்பள. பூஜை போட்ட முதல் நாளே கூறியது போல் இந்த பொங்கலுக்கு வெளிவந்தது.
கதை
கதையாக ஆம்பள படத்தை பார்த்தோம் என்றால் புதிதாக ஒன்றுமில்லை, பிரிந்த குடும்பத்தை சேர்த்து வைக்கும் தமிழ் சினிமாவின் 75 வருட ஹிட் பார்முலா கதை தான். இதை சுந்தர்.சி அவர்களே பல படங்களில் கையாண்டுள்ளார்.
விஷாலுக்கு மூன்று அத்தைகள், அவர்கள் எல்லோருக்கும் ஒரு பொண்ணு, அந்த பெண்ணை தான் நீ திருமணம் செய்ய வேண்டும் என பிரபு கட்டளையிடுகிறார். அண்ணன், தம்பி என ஒரு பட்டாளத்துடன் தன் ஊருக்கு கிளம்புகிறார் விஷால்.
அங்கு தன் அத்தைகளுக்கு தெரியாமல் அத்தை பெண்களை கடத்த நினைக்கும் விஷாலின் முடிவு விபரீதமாகிறது. இதை தொடர்ந்து தன் அத்தை பெண்களை விஷால் பிரதர்ஸ் குருப் கைப்பிடித்ததா? என்பதே மீதிக்கதை.
நடிகர், நடிகைகளின் பங்களிப்பு
ஆம்பள என்ற தலைப்பிற்கு ஏற்றார் போல் விஷால் மிரட்டுகிறார். ஹன்சிகா வழக்கம் போல் என்று சொல்வதை விட வழக்கத்திற்கு மாறாக கூடுதல் கவர்ச்சி காட்டியிருக்கிறார். சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை, தனக்கு கொடுத்த வேலையை கலக்கலாக செய்து கொடுத்துள்ளார்.
அதிலும் தன் வழக்கமான கவுண்டர் ஸ்டைலில் ’காவி டிரஸ் போட்டவன் எல்லாம் கலர் கலரா பிகரை கரெக்ட் பண்ணும்போது காக்கி சட்டை போட்ட நான் கரெக்ட் பண்ணக்கூடாதா?’ என கேட்கும் இடத்தில் கைத்தட்டல் அடங்க நேரமாகிறது.
சதீஸ், வைபவ் எல்லாம் சைடிஸ் போல தான் உள்ளனர். அத்தை பெண்களை பார்ப்பதா? அல்லது அத்தைகளையே பார்ப்பதா? என ரம்யா கிருஷ்ணன், கிரண் என்று சுந்தர்.சி செம்ம விருந்து வைத்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழன் ஆதி இசை இளைஞர்களை கண்டிப்பாக கவரும், பாடல்களில் பழகிக்கலாம் மட்டும் ஓகே.
க்ளாப்ஸ்
விஷாலின் துறுதுறு நடிப்பு+ஹன்சிகா கிளாமர், இதையெல்லாம் தன் ஒரு வரி கவுண்டர் வசனத்தால் ஓரங்கட்டுகிறார் சந்தானம். ஒளிப்பதிவு மிகவும் கலர்புல்லாக இருக்கிறது.
பல்ப்ஸ்
பார்த்து கசந்து போன திரைக்கதை, யூகிக்கும் அடுத்தடுத்த காட்சி.மொத்தத்தில் இந்த ஆம்பள இன்னும் கொஞ்சம் கம்பீரமாக இருந்திருக்கலாமோ? என கேட்க வைக்கிறது.
ரேட்டிங்-2.5/5
நன்றி cineulagam