மலரும் முகம் பார்க்கும் காலம் 24 - தொடர் கவிதை
.
கவிதையை எழுதியவர் திரு. வெற்றிவேலு வேலழகன் -பண்ணாகம் -யேர்மனி இவர் சிறந்த கவிதைகளை பல இணையங்களிலும் சமூகத் தளங்களிலும் வெளியிட்டு வரும் ஒரு நல்ல எழுத்தாளன் ஆக உள்ளார்.
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும்.
உலக வல்லரசுகளே!
விண்வெளிக்கு சென்றவர்களே!!
விஞ்ஞான மேதைகளே!
குளாயில் குழந்தை உண்டாக்கியோரே!!
மெஞ்ஞானம் போதிப்போரே!
அணுவை ஆய்வு செய்வோரே!!
கணணிக் கனவான்களே!
உலக மயமாக்கலின் உத்தமர்களே!!
தரவரிசைப் பணக்காரர்களே!!!
இருபத்தியோராம் நூற்றாண்டில்
இது நாம் வாழும் தேசம். பார்த்தீர்களா?
என் தேசத்தை பாளைகள் நிறைந்த பனைமரம் போலே
ஏழைகள் நிறைந்த எம் தேசத்தைப் பாருங்களேன்
விதைகளற்ற வெள்ளரியையும்,
கத்தரியையும் விற்றுப் பிளைக்கும்
விலை மாதைவிடக் கேவலமான வியாபாரிகளே!
கொஞ்சம் பாருங்கள் நம் தேசத்தை!
ஏழையின் " மலரும் முகம் பார்க்கும் காலம்" வரும் என்ற
நம்பிக்கை சாகாதவனின் ஏக்கம்.
மறைந்த அருண் விஜயராணிக்கு கண்ணீர் அஞ்சலி.
.
நீண்ட காலம் அவுஸ்ரேலியா மெல்பேனில் வாழ்ந்துவந்த இலங்கை எழுத்தாளர் அருண் விஜயராணி அவர்கள் இன்று காலமாகி விட்டார் என்று முருகபூபதி தந்த துயரச்செய்தி நம்மை வாட்டுகின்றது. சமுதாய சீர்கேடுகளை தயங்காது தன் சிறுகதைகள் மூலம் வன்மையாக கண்டித்து வரும் நேர்மையான, சமூக அக்கறை உள்ள எழுத்தாளரின் மறைவை கேட்டு கலங்கி நிற்கிறோம் . கன்னிகாதானங்கள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. துயரத்தால் வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது .
நீண்ட காலம் அவுஸ்ரேலியா மெல்பேனில் வாழ்ந்துவந்த இலங்கை எழுத்தாளர் அருண் விஜயராணி அவர்கள் இன்று காலமாகி விட்டார் என்று முருகபூபதி தந்த துயரச்செய்தி நம்மை வாட்டுகின்றது. சமுதாய சீர்கேடுகளை தயங்காது தன் சிறுகதைகள் மூலம் வன்மையாக கண்டித்து வரும் நேர்மையான, சமூக அக்கறை உள்ள எழுத்தாளரின் மறைவை கேட்டு கலங்கி நிற்கிறோம் . கன்னிகாதானங்கள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. துயரத்தால் வாடும் குடும்பத்தினருக்கு தமிழ்முரசுஅவுஸ்ரேலியா ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது .
சகோதரி அருண். விஜயராணிக்கு பிரியாவிடை - முருகபூபதி (20-12-2015)
.
மேதாவிலாசம் கொண்டவர்களுக்கு அற்பாயுள்தான் என்பது எழுதப்படாத விதி. எம்மிடமிருந்து விடைபெறும் எமது அருமைச்சகோதரி, எங்களுக்கெல்லாம் ஒரு பாசமலராக வாழ்ந்தவர். இவ்வளவு சீக்கிரம் அவருடைய பெற்றவர்களும் மாமா மாமியாரும் இவரை அழைத்துக்கொள்வார்கள் என்று நாம் கனவிலும் நினைத்திருக்க மாட்டோம்.
ஆனால் கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்தான் என்று விஜயராணியின் ஆதர்சக்கவிஞர் சொல்லியிருக்கிறார்.
அந்தக்கவிஞரே மரணத்தின் தன்மை சொல்வேன். மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் என்றும் சொல்லிவிட்டுத்தான் சென்றார். அவ்வாறு எங்கள் விஜயராணிக்கு ஆதர்சமாகத்திகழந்தவர்களிடம்தான் இவரும் செல்கிறார் என்று நாம் எமது மனதை தேற்றிக்கொள்வோம்.
அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் பன்முகம்கொண்டவை. இப்படியான அபூர்வமான மனிதர்கள் ஆயிரத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள்.
வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பத்து ஆண்டுகள்
.
டிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.
டிசெம்பர் 5, 2005 ஆண்டு வலைப்பதிவு உலகில் ஆரம்பித்த என் எழுத்துப் பயணம் இந்த மாதத்துடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து நிற்கின்றது.
ஈழத்தில் நானும் (நாமும்) வாழ்ந்து கழித்த அந்த நாட்களின் "கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்" மடத்துவாசல் பிள்ளையாரடி என்ற என் முதல் குழந்தை வலைப்பதிவினூடாகப் பதிவேற வேண்டும் என்ற முனைப்பில் அப்போது எழுத ஆரம்பித்தேன். மடத்துவாசல் பிள்ளையார் எங்கள் கிராமத்துக் கோயில் அந்த ஆலயத்தின் வாசல் படிகளில் எனது நண்பர் குழாமுடன் பேசிக் கழித்த் இளமை நாட்களின் நீட்சியே இந்த இணைய உலகப் பதிவு.
அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் (எழுத்து, நாடகம், சினிமா, மரபுவழிக் கூத்து) குறித்த விரிவான பகிர்வுகளைக் குறித்த ஆளுமைகளை ஒலி வழிப் பேட்டி செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற பேரெண்ணமும் எழவே அவற்றையும் சேர்த்துக் கொண்டேன். ஈழத்துப் படைப்புலக ஆளுமைகள் குறித்து தமிழகத்து நண்பர்களோடு ஈழத்தின் இன்றைய தலைமுறையும் அவற்றைப் பயன்படுத்தி வருவதைக் கண்டு இந்தப் பணியில் நிறைவை உண்டு பண்ணியிருக்கிறது.
குறிப்பாக நவீன நாடக மரபை ஈழத்தமிழ் தமிழ் உலகிற்குச் செய்து காட்டிய திரு தாசீசியஸ், ஈழத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேராசிரியர் கா.சிவத்தம்பி, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மூலம் தமிழ் உலகை ஒன்றிணைத்த தனிநாயகம் அடிகளார் போன்றோர் குறித்த விரிவான ஒலி மற்றும் எழுத்து ஆவணப் பதிவுகள் எதிர்கால இணையத் தேடல்களில் புதையல்களாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
ஒரு பயணமும் இரண்டு மரணக் குறிப்புகளும் - கான பிரபா
.
எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நேற்றுக் காலை எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி அக்காவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இன்று காலை சிட்னியில் இருந்து மெல்பர்ன் நோக்கிப் புறப்பட்டேன்.
சிட்னி விமான நிலையம் நோக்கி விடிகாலை ஐந்து மணிக்கு எனது காரை முடுக்கி விட்டு கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இணைய ஒலிபரப்பை மொபைல் போனில் தட்டினேன். சத்யசாயி பாபாவின் பாடல் ஒன்றை P..சுசீலா பாடிக் கொண்டிருந்தார். விஜயராணி அக்காவின் ஆன்மிகத் தேடலுக்கு சாயி பஜன் தான் வழிகாட்டி. அவரின் இறுதிப் பயணம் காணப் போய்க் கொண்டிருக்கும் எனக்கு சாயி பாடல் ஒலித்தது ஏனோ அந்த நேரம் இடம், பொருள், ஏவல் கண்டு ஒலித்ததாகப் பட்டது.
கிட்டத்தட்ட 16 வருடங்கள் அருண் விஜயராணி அக்காவின் தொடர்பில் இருந்திருக்கிறேன். எத்தனையோ நண்பர்களோடும், கூடப் பிறந்த சகோதரரோடும் கூட முரண் பட்டிருக்கிறேன். ஆனால் விஜயராணி அக்கா எது சொன்னாலும் தட்டாமல் கேட்டிருக்கிறேன், நடந்திருக்கிறேன். வாழ்க்கைப் பயணத்தில் இடையில் வந்து வழிகாட்டி விட்டுப் போயிருக்கிறார் என்று அவரின் இறந்த நாள் அன்று என் மனைவிடம் சொல்லி நொந்தது ஏனோ மீண்டும் நினைப்புக்கு வந்தது.
மாமழையும் மாந்தர் பிழையும்! - மேகலா இராமமூர்த்தி
.
தமிழகத்தின் நீராதாரத்திற்கு அடிப்படையான வடகிழக்குப் பருவமழை (Northeast monsoon) இவ்வாண்டு பொய்யாமல் பெய்துள்ளது. வந்த ஓரிரு நாட்களிலேயே விரைவாய் விடைபெற்றுச் சென்றுவிடும் கடந்த ஆண்டுகளின் மழைபோலல்லாது, இவ்வருடத்திய மழை மிக்க வாஞ்சையோடு தமிழகத்தில் ஓரிரு வாரங்கள் தங்கிப் பெய்திருக்கின்றது.
விளைவு…? சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், புதுவை, சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான வட மாவட்டங்கள் தண்ணீரில் மிதக்கின்றன; மக்களோ கண்ணீரில் மிதக்கின்றனர். ’அமிழ்தம்’ என்று வள்ளுவரால் வர்ணிக்கப்பட்ட பெருமைமிகு மழைக்குச் சிலநாட்கள்கூடத் தாக்குப்பிடிக்க இயலாமல் தடுமாறும் தமிழகத்தின் அவலநிலையை என்னென்பது?
மக்களின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையான நீரைச் சரியான முறையில் தேக்கிவைப்பதும், அதனைப் பாதுகாப்பதும் அரசின் தலையாயக் கடனாகும். இதற்காக இன்றைய ஆட்சியாளர்கள் ஒன்றும் கரிகாற்சோழனைப்போல் புதிதாய்க் ’குளம்தொட்டு வளம்பெருக்க’ வேண்டியதில்லை. ஏற்கனவே வெட்டப்பட்டிருக்கும் ஏரிகளையும், ஆறுகளையும், குளங்களையும் ஒழுங்காய்த் தூர்வாரிப் பராமரித்திருந்தாலே போதும். அவற்றின் நீர்க்கொள்ளளவு அதிகரித்திருக்கும்; கனமழையின் தாக்கத்தால் அவை உடைத்துக்கொள்ளாமல் இருந்திருக்கும். அரசாங்கம் இத்தகைய செயல்களில் போதிய கவனம் செலுத்தியதாய்த் தெரியவில்லை.
சங்கடமான இச்சூழலில், நம் பண்டை மன்னர்களைக் குறித்துப் ’பழம்பெருமை’ பேசாதிருக்க முடியவில்லை. அவர்கள் எதில் திறன்வாய்ந்தவர்களோ இல்லையோ நீர்நிலைகளைத் தேக்கிவைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதிலும் திறன்வாய்ந்தவர்களாகவே திகழ்ந்திருக்கின்றனர்.
எனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார் - தாமரைச்செல்வி .
.
இலக்கியப்பயணத்தில் இணைந்து வந்த எனதருமைத்தோழி பாதிவழியில் விடைபெற்றார்
என் இனிய தோழி ! அருண் விஜயராணியின் மறைவுச்செய்தியை திரு முருகபூபதி அவர்களின் மின் அஞ்சல் மூலம்
அறிந்து கொண்டேன். மனதுக்குள் தாங்கமுடியாத துயரம் நிரம்பிக்கொண்டது.
அவரது சிரித்த முகமும் மலர்ந்த விழிகளும் மிடுக்கான தோற்றமும் கண்களுக்குள் நிழலாடியது .எங்களுக்குள் இருப்பது நாற்பதுக்கும் மேற்பட்ட கால நட்பு . எழுபத்துமூன்றாம் ஆண்டு இலங்கை வானொலிக்கு ஆக்கங்கள் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் ஒருவருக்கொருவர் பேனா நண்பர்களாகத்தான் அறிமுகமானோம் .எங்களுடைய ஆக்கங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அபிப்பிராயம் சொல்லிக்கொள்வோம் .அந்த விமர்சனங்கள் நாம் இலக்கிய உலகில் எம்மை வளர்த்துக்கொள்ள பெரும் உதவியாக இருந்தது .
நாம் கடிதங்கள்
மூலம் அறிமுகமாகி ஒரு வருடத்தின் பின் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது . அந்நேரம் விஜயாவின் சிறியதந்தை எங்கள் பரந்தன் புகையிரத நிலைய அதிபராக பணியாற்றிக்கொண்டிருந்தார் .அவர் வீட்டுக்கு வந்த விஜயா அவர் மகள்
மஞ்சுவுடன் என்னைச்சந்திக்க எம் வீட்டுக்கு வந்திருந்தார் .
" உங்கள் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் தாமரைச்செல்வி
." என்று என் கை பிடித்து
சொன்ன அந்த வினாடியிலிருந்து எம் நட்பு இன்னும் இறுக்கமாகியது.
திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி
.
சிங்காரிதான் காவேரி - காவேரிதான் சிங்காரி
( கடந்தவாரத் தொடர்ச்சி )
நனவிடை தோய்தலில் வீரகேசரி - தினக்குரலின் ஊடகவியலாளர்
தனபாலசிங்கம்
என்னையும் தனபாலசிங்கத்தையும் செய்தி ஊடக வாழ்க்கைக்கு திசை திருப்பிய ஒருவரும் இருக்கிறார்.
அவர்தான் நண்பர் ஆ. சிவநேசச்செல்வன். தற்பொழுது கனடாவில் வதியும் அவர் 1983 இல் வீரகேசரியில் பிரதம ஆசிரியருக்கு வெற்றிடம் வந்தபொழுது, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நூலகராக இருந்துவிட்டுவந்து இணைந்துகொண்ட விரிவுரையாளர்.
அவரை எனக்கு ஏற்கனவே கைலாசபதி யாழ். பல்கலைக்கழகத்தில் தலைவராக இருந்தபொழுது நடத்திய தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு காலத்திலிருந்து நன்கு தெரியும். அவர் வீரகேசரியில் இணையும்பொழுது நானும் ஆசிரிய பீடத்திலிருப்பதாகத்தான் நம்பிக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்ற முதல் நாள் ஒரு திங்கட்கிழமை. அன்று எனக்கு விடுமுறைநாள். என்னைத் தேடியிருக்கிறார்.
Subscribe to:
Posts (Atom)