பவளவிழாக்காணும் ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் புன்னாலைக்கட்டுவனிலிருந்து தமிழர் புலம்பெயர் நாடுகள் வரையில் பயணித்த யாத்ரீகன் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கன்பராவில் 04-06-2016 இல் ஒழுங்குசெய்யும் பாராட்டு நிகழ்வு முருகபூபதி


மெல்பனில் ' திரைவிலகும்போது' நாடக நூல் அறிமுகவிழா


இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய இளம்தலைமுறை கலைஞர் எழுத்தாளர் திருச்செந்தூரனின் திரைவிலகும்போது நாடக நூலின் அறிமுகவிழா மெல்பனில் எதிர்வரும் 07-05-2016 சனிக்கிழமை நடைபெறுகிறது.
இடம்:         Springers Leisure Centre மண்டபம்
                                  400 Cheltenham Road - Keysborough.

காலம்: 07-05-2016 சனிக்கிழமை மாலை 5.30
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

அஞ்சலிக்குறிப்பு வாழ்வின் துன்பியல் அரங்காற்றுகையில் கானல் திரைக்குப்பின்னால் வாழ்ந்த எழுத்தாளர் கே. விஜயன் முருகபூபதி


அடுத்தடுத்து  எம்மிடமிருந்து  விடைபெறுபவர்களின்   வரிசையில் இலக்கிய   நண்பர்  கே. விஜயனும்  அண்மையில்   இணைந்துகொண்டு எம்மிடமிருந்து  அகன்றுவிட்டார்.
இவருடைய   பெயரில்  சென்னையில்  ஒரு  திரைப்பட  இயக்குநர் இருந்தார்.   ஜெயகாந்தனின்   நண்பர்.    அதனால்  ஈழத்து  எழுத்தாளர் விஜயனை   நான்   காணும்   சந்தர்ப்பங்களில்  "  எப்படி  இயக்குநர்  சார்?" என்று   வேடிக்கையாக  அழைப்பதுண்டு.
கே. விஜயன்  என்ற  பெயர்   ஈழத்து  இலக்கிய  உலகிலும் தமிழ்ப்பத்திரிகைச்சூழலிலும்   நன்கு  பிரசித்தி  பெற்றிருந்தது.
சிறுகதை,  தொடர்கதை,   நாவல்,  கட்டுரை,  விமர்சனம்,  பத்தி எழுத்துக்கள்,   கலை  இலக்கிய  நிகழ்ச்சிகள்  பற்றிய விவரணச் சித்திரம்   என  நிறைய  எழுதிக்குவித்தவர்தான்  விஜயன்.   அத்துடன் வீரகேசரி,   சுடரொளி  ஆகிய  பத்திரிகைகளிலும்  பணியாற்றியவர்.
நான்   எழுதத்தொடங்கிய  காலத்திற்கு  முன்பே  எழுதியவர். இவருடைய   தொடர்கதை  ஒன்று  மித்திரன்  நாளிதழில்  வெளியான சமயத்தில்    அதனை (Proof Reading)  ஒப்பு நோக்கியிருக்கின்றேன். அச்சமயத்தில்   அவர்  வெள்ளவத்தையில்   ஒரு ஆடைத்தொழிற்சாலையில்  பணியிலிருந்தார்.
இலங்கையில்  தேசிய  இலக்கியம்,   மண்வாசனை,  பிரதேச  மொழி வழக்கு   முதலான  சொற்பதங்கள்  பேசுபொருளாக  இருந்த  அக்கால கட்டத்தில்   விஜயன்,  கொழும்பு  வாழ்  மக்களின்  பேச்சுத்தமிழில் தமது   கதைகளை   எழுதியவர்.

சைவமன்றம் சிட்னி - பண்ணிசை விழா 2016
இலங்கைச் செய்திகள்


பளையில் மக்கள் தெங்கு பயிர்ச் செய்கை சபைக்கு எதிராக கிளர்ச்சி

பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.!

பனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்

பங்­க­ளாதேஷ் மத்­திய வங்­கியில் கொள்ளை ; 8 இலங்­கை­யர்கள் தொடர்பு


கிராம சேவகரின் கொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


தாஜுதீன் கொலை  : முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது


பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

காணாமல்போன மூவர் வெலிக்­கடை சிறையில்

தாஜுதீன் கொலை : பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்
பளையில் மக்கள் தெங்கு பயிர்ச் செய்கை சபைக்கு எதிராக கிளர்ச்சி

19/04/2016 தமது காணிகள் தமக்கே வழங்கப்படும் எனக் காத்திருந்த காணி உரிமையாளர்கள் தமது காணிகள் தமக்கு வழங்கப்படாத நிலையில் பொறுமையிழந்தவர்களாக நேற்றைய தினம் தமது காணிகளுக்குள் நுளைந்து தமது காணிகளுக்கான எல்லைகளையிட்டு காணிகளைத் துப்புரவாக்க முற்பட்டனர்.

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் மூன்று நிகழ்ச்சிகள் 15 05 16

                                  
மெல்பனில் கருத்தரங்கு  -    14-05-2016  
         ஈழத்தமிழ் படைப்பிலக்கியத்துறையில்  கடந்த  முப்பது (1976 - 2016) வருடகாலத்தில்     தோன்றியிருக்கும்  மாற்றங்கள்  தொடர்பான  தொனிப்பொருளில்   எதிர்வரும் 14-05-2016   ஆம் திகதி   சனிக்கிழமை மாலை  3.00   மணியிலிருந்து   மாலை 6.00  மணி வரையில்  மெல்பனில்,       சங்கம்,  இலக்கிய கருத்தரங்கை   ஒழுங்குசெய்துள்ளது.   இந்நிகழ்வில்   உரையாற்ற    இலங்கையிலிருந்து   எழுத்தாளரும்   ஞானம்  மாத  இதழ்  ஆசிரியருமான   டொக்டர்  தி. ஞானசேகரன்   வருகை  தருகின்றார்.      நடைபெறும்   இடம்:     VERMONT  SOUTH   COMMUNITY  HOUSE
                           1,  Karobran Drive - Vermont   South, Vic - 3133
-------------------------------------------------------------------------------------------
கன்பராவில்   கலை, இலக்கிய சந்திப்பு    04-06-2016 
        ' ஞானம் ' ஆசிரியர்  ஞானசேகரன் பவளவிழா
           எதிர்வரும்  04-06-2016  சனிக்கிழமை  கன்பராவில்     சங்கத்தின்  கலை, இலக்கியம் - 2016  நிகழ்ச்சி   கன்பரா  தமிழ்  மூத்த  பிரஜைகள்  சங்க மண்டபத்தில்   நடைபெறும்.       ஈழத்தின்  மூத்த படைப்பாளியும்  ஞானம்   இதழின்   ஆசிரியருமான  டொக்டர் தி. ஞானசேகரன்    அவர்களின்    இலக்கியப்பணிகளை  பாராட்டும்  பவளவிழாவும்   நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்   நூல் விமர்சன அரங்குகருத்தரங்கு,   ஆவணப்படக்காட்சி என்பனவும்   இடம்பெறும்.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 25 04 2016 - சிட்னி


வருகிற ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.30 க்கு தமிழர் மண்டபத்தில் (றீயன்ஸ் பார்க்; - துர்க்கை அம்மன் கோயில்)நடைபெறவிருக்கும் தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிற்கு  இலங்கையின் தலை சிறந்த பேச்சாளர் ‘செஞ்சொற் செல்வர்’திரு ஆறு திருமுருகன் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி. 


தமிழ் ஓசை வழங்கும் "திரை இசை மாலை " 30.04.2016

.


தமிழ்ப் படைப்பாளர் விழா 01.05.2016

.
அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கும்  " தமிழ்ப் படைப்பாளர் விழா" 01.05.2016


உலகச் செய்திகள்


ஈக்­கு­வ­டோரை உலுக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி 77 பேர் உயி­ரி­ழப்பு ; 588 பேர் காயம்

நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 246 ஆக உயர்வு : 2500 பேர்காயம்

ஆப்கான் தலை­ந­கரில் தற்­கொலைக் குண்டு தாக்­குதல்; 30 பேர் உயி­ரி­ழப்பு; 327 பேர் காயம்
ஈக்குவடோரை தாக்கிய பூமியதிர்ச்சியில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 413 ஆக உயர்வு
இதுவே என் கடைசி உரையாகக் கூட இருக்கலாம்


ஈக்­கு­வ­டோரை உலுக்­கிய 7.8 ரிச்டர் பூமி­ய­திர்ச்சி 77 பேர் உயி­ரி­ழப்பு ; 588 பேர் காயம்


தமிழ் சினிமா


தெறி
இளைய தளபதி விஜய் நடிப்பில் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது தெறி. ராஜா ராணிபிரமாண்ட வெற்றிக்கு பிறகு தளபதியுடன், அட்லீ கைகோர்த்துள்ள படம் என்பதே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது

விஜய் படத்திற்கென வழக்கம் போல் சில தடைகள்...ஆனால், இதையெல்லாம் அசல்ட்டாக தட்டி விட்டு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்ப களம் இறங்கிவிட்டார் விஜய் குமார்
கதைக்களம்
தன் மகள் நைனிகாவுடன் கேரளாவில் நிம்மதியான, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் விஜய். அங்கு நைனிகாவின் டீச்சர்எமிக்கு விஜய் மேல் காதல் ஏற்படுகின்றது. ஜாலியாக செல்லும் இவர் வாழ்க்கையில் உள்ளூர் ரவுடிகளால் தன் மகளுக்கு பிரச்சனை வர விஜய், அடித்து துவம்சம் செய்கிறார்.
பின் இத்தனை அமைதியாக இருக்கும் உங்களுக்குள் எப்படி இந்த மிருககுணம் என எமி கேட்க, பாட்ஷா ஸ்டைலில் விரிகிறது ப்ளாஷ்பேக்
ஊருக்குள் யார் தப்பு செய்தாலும் தட்டிகேட்கும் நேர்மையான போலிஸ் அதிகாரியாக விஜயகுமார், ஐடியில் பணிபுரியும் ஒரு ஏழை குடும்பத்தை சார்ந்த பெண் கற்பழிக்கப்படுவதை அறிகிறார்.
அவர் யார் என்பதை கண்டிப்பிடித்து நடு பாலத்தில் கொன்று தொங்க விட, அந்த இறந்தவரின் அப்பா அமைச்சர் மகேந்திரன்.
பின் அவர் விஜய் குடும்பத்தையே கொல்ல, உயிரை கையில் பிடித்துக்கொண்டு விஜய் கேரளா செல்கிறார்.
ஆனால், இவர் உயிரோடு இருப்பதை அறிந்த மகேந்திரன் மீண்டும் விஜய்யை துரத்த, இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது என விஜய் ஆடும் தெறியாட்டமே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இளைய தளபதி திரைப்பயணத்தில் பெஸ்ட் பெர்ப்பாமன்ஸ் என கூறலாம், நைனிகாவிற்கு அழகான தந்தையாக சமந்தாவிற்கு நல்ல கணவன் என அசத்துகிறார். அதிலும் விஜயகுமாராக போலிஸ் லத்தியை கையில் எடுத்து அதகளம் செய்கிறார்.
ப்ளாஷ் பேக் காட்சிகளில் வரும் சமந்தாவும் விஜய்யுடனான காதல் காட்சிகளில் மனதை கொள்ளை கொள்கிறார். அதிலும், தன் அப்பாவிடம் விஜய்யை அறிமுகப்படுத்தும் காட்சி, ராதிகாவிடம் எனக்கு அம்மா இல்லை, நீங்க என்னை உங்க பொண்ணா ஏத்துக்கோங்க என சொல்லும் காட்சியில் சூப்பர் சமந்தா.
எமி ஜாக்ஸன் தான் எதற்கு என்றே தெரியவில்லை, ப்ளாஷ்பேக் கேட்பதற்காவே படத்தில் வந்து செல்கிறார். இவை அனைத்தையும் விட படத்தில் நம்மை மிகவும் கவருவது நைனிகா குட்டி தான்.. இன்னும் பல வருடங்களுக்கு கால்ஷிட் புல் தான். அத்தனை அழகாக சின்ன வயதில் விஜய்க்கே கவுண்டர் கொடுத்து நடித்திருக்கிறார். தெறிடா பேபி.
படத்தில் பல காட்சியமைப்புகள் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அட்லீ காட்சிப்படுத்தியுள்ளார். பாலியல் தொல்லை, குழந்தை தொழிலாளர், வட இந்திய வேலையாட்களை இங்கு நடத்தும் விதம் என பல சென்சிட்டிவ் விஷயங்களை மாஸ் மன்னன் விஜய் வாயிலாக கூறியுள்ளார். ஜி.வி பின்னணி இசையில் கலக்கினாலும் கொஞ்சம் தீம் மியூஸிக்கில் தனி ஒருவன் சாயல்.
க்ளாப்ஷ்
கண்டிப்பாக தளபதி தான்....அனைத்து ஏரியாவிலும் ரவுண்ட்கட்டி அடித்துள்ளார்.
விஜய்-சமந்தா காதல் காட்சிகள். மொட்டை ராஜேந்திரன் காமெடி, அதைவிட நைனிகா க்யூட் பெர்ப்பான்ஸ்
மகேந்திரன் கடைசி வரை கெத்தை விடாமல் சின்ன புன்னகையால் மிரட்டுகிறார். நடிப்பிற்கு வெல்கம் சார்.
படத்தின் காட்சியமைப்புக்கள்.. குறிப்பாக குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்தவரை நடு ரோட்டில் புரட்டியெடுக்கும் காட்சி, வட இந்தியா சிறுவன் அழகம் பெருமாள் இறந்தவுடன் சாக்லேட் சாப்பிடும் காட்சி (படம் பார்த்தவர்களுக்கு புரியும்) கிளாஷ் தெறி.
படத்தின் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள், அதிலும் பஸ் ஏரியில் விழுந்த பிறகு விஜய் அந்த 100 அடி பாலத்தில் குதிக்கும் காட்சி பிரமிக்க வைக்கின்றது.
பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் குறிப்பாக அந்த பேய் வருவது போன்ற காட்சி லாஜிக் மீறல்
சத்ரியன், என்னை அறிந்தால் சாயல் ரொம்பவே தெரிகின்றது.
மொத்தத்தில் தற்போது தெரிகிறதா அந்த புலி பதுங்கியது தற்போது பலமாக பாய்வதற்கு தான்...தெறியாட்டம்
ரேட்டிங் 3.25/5 நன்றி  cineulagam