தமிழ்முரசு நேயர்களுக்கு எமது நத்தார் வாழ்த்துக்கள்

.

தமிழ்முரசு நேயர்களுக்கு எமது நத்தார் வாழ்த்துக்கள்

அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஒன்று கூடல்

.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நத்தார் இரவு ஒன்றுகூடலில் 80 பதற்கும் மேற்பட்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில் நுட்பவியலாளர்கள் என்போர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். சிலரால் வருகைதரமுடியாதிருந்தாலும் பலர் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

வருடாவருடம் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்ற குடும்பத்தினர் ஒன்றுகூடி உணவருந்தி மகிழும் நிகழ்வு இடம் பெறுவது வழமையானது. 2013 ம் ஆண்டிற்கான அந்தநிகழ்வின் படங்களில் சிலவற்றை கீழே காணலாம்.



மார்கழி மாத சிறப்புக்கள் -டாக்டர் சந்திரிகா சுப்ரண்யன்

.
பீடை மாதம் என்ற அடை மொழியோடு ஒதுக்கப்பட்ட மாதமா?

பீடை மாதம் என்ற அடை மொழியோடு அழைக்கப் படும் மார்கழி மாதம் உண்மையிலே ஒதுக்கப்பட்ட மாதமா? பீடு அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி பெருமை கொண்ட மாதம் என்பதே மருவி  பீடை மாதம் என்றாகியாது என்றே கொள்ள வேண்டும்.
சூரியனின் இயக்கம்  வடக்கு நோக்கி தெற்கு நோக்கி நடக்கும்.  அந்த இயக்கம்  அயனம் – பயணம் எனப்படும்.. கதிரவன்  தெற்கு நோக்கி இயங்குவது தட்சிணாயனம். வடக்கு நோக்கி இயங்குவது உத்தராயனம். பின் தை மாதத்தில் உத்தராயனம் தொடங்கும். தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழி.
தை மாதம் உழவர் வயலின் விளை பொருட்களை வீட்டுக்கு கொண்டு வரும் திரு நாளாம் பொங்கல் நடக்க இருப்பதால் தட்சிணாயனத்தின் கடைசி மாதம் மார்கழியில் அவை தொடர்பான வயல் சார்ந்த அறுவடை முதலான தொழில்களில் மிகுந்த நேரம் செலவிட இருக்கிற காரணத்தினால் வேறு விசேடங்களுக்கு நேரம் ஒதுக்குவதில்லை.உண்மையில் உணவு முதலான தானியங்களை சேமிக்கும் மாதம் இதுவாகும்.

திருவாசக முற்றோதல் 2013

.

சிட்னி முருகன் ஆலயத்தில் இடம் பெற்ற ஆருத்திரா தரிசனம் 19.12.2013

.




பிரியாணி படம் என் பார்வையில் - கனா பிரபா

.


மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறது வெங்கட் பிரபு டீம். மலையாளத்தில் வந்த த்ரில்லர் படங்கள், குறிப்பாக அண்மையில் பிருத்விராஜ் நடிப்பில் வந்த "Memories" போன்ற படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகனுக்கு பிரியாணி ஒரு வெறுஞ்சோறு ஆகவே படும். நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தனியாகவும், முழு நீள மசாலாப் படங்களைத் தனியாகவும் வைத்துப் பார்த்து ரசிப்பதில் தப்பேதுமில்லை. ஆனால் முழு நீள மசாலா என்ற பெயரில் வழக்கமான இரவு விடுதி, இரட்டை அர்த்த வசனங்கள், மது போதைக் கொட்டங்களையே அரைவாசி வரை காட்டி கொஞ்சூண்டு விறுவிறுப்பைக் கடைசிக் காட்சியில் காட்டிப் புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜாவின் 100 வது படம் என்ற பெருமையை மட்டும் கொண்டிருக்கிறது. ஆரம்பம் உள்ளிட்ட இவரின் சமீப சறுக்கல்களைப் பொறுப்போடு கவனிக்க வேண்டும்.

பருத்தி வீரனோடு தொலைந்த கார்த்தியை இயக்குனர் பாலா போன்றவர்களிடம் கொடுத்து மீட்டெடுக்க வேண்டிய அவசியம் மீண்டும் உணரப்படுகின்றது.

நடிகர் ராம்கிக்கு மீள் வரவாக அமைந்த இந்தப் படத்தில் அந்த சிபிஐ அதிகாரியாக இவரையே போட்டிருந்தால் எவ்வளவு கம்பீரமாக இருந்திருக்கும், இன்னொரு துணை நடிகராகப் பயன்பட்டிருக்கிறார்.

இலங்கைச் செய்திகள்



 யாழில் மலேரியா தடுப்பு

இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் மீட்பு


தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்

வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை மறு அறிவித்தல்வரை மூடுவதற்கு உத்தரவு

உள்நாட்டு, வெளிநாட்டுக் கலைஞர்கள் வழங்கும் மாபெரும் பரத நாட்டிய நிகழ்வு

யாழில் மலேரியா தடுப்பு

16/12/2013   
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து இந்தியாவுக்கு பயணத்தை மேற்க் கொள்பவர்களுக்க மலேரியா கட்டுப்பாட்டு மருந்து குளிகை கொடுக்கும் நடவடிக்கைகள் சுகாதார வைத்தியதிகாரியினால் மேற்க்கொள்ளப்படவுள்ளது.


தமிழ் மாணவி மாதுமையை தமிழ்முரசு வாழ்த்துகிறது

.


HSC  நடந்து முடிந்து விட்டது. பல மாணவர்கள் குதூகலித்துக் கொண்டிருப்பார்கள். இந்த வேளையில் தமிழ் பாடத்தில் அதி உயர்  புள்ளியைப்   பெற்று Minster for Education Adrian Piccoli  யிடமிருந்து  விருதினைப் பெற்ற பெருமையை பெற்றிருக்கிறார் செல்வி மாதுமை கோணேஸ்வரன். இவரை   வாசகர்கள் சார்பாக தமிழ்முரசு வாழ்த்துகிறது.

இவரை பயிற்றுவித்த கோம்புஸ் தமிழ் கல்விநிலயத்தையும் ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு ஊக்கமளித்த பெற்றோரையும் பாராட்டுகிறோம் .

112 பாடங்களுக்கு 121 பிள்ளைகள் அதிஉயர் புள்ளிகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களில் 83 பெண்களும் 38 ஆண்களும் என்பது குறிப்பிடத்தக்கது.



திரும்பிப்பார்க்கின்றேன் - 20 -முருகபூபதி

.

இதுவரையில்    எழுதியதைப்படியுங்கள்      எனச்சென்ன      ஆளுமை   ஜெயகாந்தன்
                                                       


தமிழ்நாடு      இடைசெவல்      கிராமத்தில்     கி.ராஜநாராயணனை    1984 இல் சந்தித்தபொழுது,     சென்னையில்     'ஜெயகாந்தனை   பார்க்கவில்லையா?" என்று    கேட்டார்.
' இல்லை.     அவரைப்பார்ப்பதற்கு       ஏதோ    தயக்கம்.     அவர்     மிகவும் கோபக்காரர்      என்று     சிலர்      சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால்     அவரைச்சந்திப்பதில்    எனக்கு     ஆர்வம்     இருக்கவில்லை" என்றேன்.
' உங்கள்    கணிப்பு    தவறு.     அவர்      பழகுவதற்கு    இனியவர். அவரைச்சீண்டினால்      என்ன      எவரைச்சீண்டினாலும்     கோபம்    வருவது இயல்புதானே.     சென்னையிலிருந்து     வெகு தூரம்    என்னைப்பார்க்க வந்திருக்கிறீர்கள்.     ஆனால்   -   அவரைப்பார்க்கத்தவறிவிட்டீர்களே... நீங்கள்     திரும்பிச்செல்லும்பொழுது     அவரையும்    சென்னையில் பாருங்கள்."    என்றார்    கி.ரா.
'மதுரைக்குத்திரும்பி      அங்கிருந்து      இராமேஸ்வரம்      சென்று     கப்பல் மார்க்கமாக     இலங்கை      திரும்புகின்றேன்.      அடுத்ததடவை     வரும்பொழுது    நிச்சயம்    ஜெயகாந்தனை     சந்திப்பேன்."     என்று அவரிடம்     சொன்னவாறு -     மீண்டும்    தமிழகத்திற்கு    1990   ஏப்ரிலில் சென்றவேளையில்     நான்    அவுஸ்திரேலியா    வாசியாகியிருந்தேன்.

தமிழ் பேசுவோம் தமிழில் மட்டும் பேசுவோம்

.

தமிழை கலப்பில்லாமல் பேசவேண்டிய அவசியத்தை பற்றி சிந்திக்கவைக்கும் குறும்படம்





வரலாற்றுத் தடங்கள் – கட்டுரை -- ஷம்மிக்கா

.


நேற்று பிரான்ஸ் நாட்டிலிருந்து ஊரைச் சுற்றிப்பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த நண்பன் குகநேசனுடன் உரையாடியதன் மூலம் அந்தச் சம்பவம் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது.

அது நடந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்டன.


அன்று அலுமினியம் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போயிருந்த இராசன் அண்ணை மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தபோது அந்த அதிசயத் தகவலைச் சொன்னார். அலுமினியம் தொழிற்சாலை, மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் இருக்கும் பிரதேசத்தில் இருந்து கீரிமலைக்குப் போகும் பாதையில் அமைந்துள்ளது.

சீமெந்துத்தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கற்கள் அகழ்ந்தெடுக்கும்போது அந்த அதிசய சம்பவம் நடந்தது. குவாறியில் டைனமற் வெடிக்கும்போது சிதறியகற்களுடன் நீரும் சீறிப் பாய்ந்தது. சிலநிமிடங்கள் நீடித்த அந்தக்காட்சியில், வானோக்கிப் பாய்ந்த நீர் மாவிட்டபுரம் கோபுரமளவிற்கு உயர்ந்ததை தான் அலுமினியம் தொழிற்சாலையில் இருந்து பார்த்ததாக அண்ணா சொன்னார். வெடித்த இடத்தில் ஒரு பெரிய  குகை இருந்ததாகவும் அது முடிவில்லாமல் சுரங்கமாகப் போவதும் ஒரு வரலாற்றுப்புதுமை என்றும் சொன்னார். அண்ணை சொல்லிவிட்டு தன்பாட்டில் மீண்டும் வேலைக்குப் போய்விட்டார். அவர் சொன்ன எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார் அவருக்கு இளையவரான எனது அடுத்த அண்ணன் ஆனந்தன்.

தெளிவத்தை ஜோசப்பின் - மனிதர்கள் நல்லவர்கள் -நயப்புரை

.
முருகபூபதி

இந்த   ஆண்டு     தமிழகத்தின்    விஷ்ணுபுரம் விருதைப்பெற்றுக்கொள்ளும்  தெளிவத்தை  ஜோசப் இலங்கை மலையகத்தின் மூத்த எழுத்தாளர்.  இவரை உங்களில் பலர் 2009 ஆம் ஆண்டு  நாம் அவுஸ்திரேலியாவில்  நடத்திய ஒன்பதாவது எழுத்தாளர் விழாவில் சந்தித்திருப்பீர்கள். வெகு சுவாரஸ்யமாகப்பேசுவார்.  அவரது எழுத்துக்களும் சுவாரஸ்யமானவை.
மனிதர்கள்  நல்லவர்கள்  என்ற சிறுகதையை  அவர்  மல்லிகையில்  பல வருடங்களுக்கு முன்னர்  எழுதியிருக்கிறார்.  காலத்தை முந்திய கதையென்றாலும் மனித உணர்வுகள் இன்றும் அப்படியே வௌ;வேறு வடிவங்களில்தான் இருக்கின்றன. அதனால்  காலத்தை வென்றும் வாழும் கதையாக  என்னை கவர்ந்தது.
அனைவரும் ஒன்றாகிக்களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது. அது தீபாவளி இந்தக்கதையில்.
இங்கு நாமும் ஒன்றாக கூடிக்களிக்க இந்த அமர்வு தேவையாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவின்  இயந்திரமயமான வாழ்க்கை வாழும் எம்மவருக்கும்  குடும்ப ஒன்று கூடல்கள்  வாராந்தம் அல்லது மாதாந்தம் அல்லது வருடாந்தம் தேவையாக இருக்கிறது.
இலங்கையில் மலையகத்தில் பண்டிகைகள்தான் உறவினர்கள் ஒன்று கூடுவதற்கு சிறந்த நிகழ்வாகியிருக்கிறது என்பதை கதையின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.
 அடுத்த வரியை பாருங்கள்: பஸ்ஸில் ரயிலில் தியேட்டரில் ஒரு நல்ல இடம்பிடித்துக்கொள்வதற்கு முட்டிமோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை. இந்த அங்கதம்  எந்தவொரு நாட்டு மக்களுக்கும்  பொருந்துகிறது.

உலகச் செய்திகள்

விண்­வெ­ளிக்கு இரண்­டா­வது தட­வை­யாக குரங்கை வெற்­றி­க­ர­மாக அனுப்­பிய ஈரான்

துண்டிக்கப்பட்ட கரத்தை ஒரு மாதத்தின் பின் பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை


ஈராக்கில் ஷியா யாத்திரீகர்கள் மீது தாக்குதல்: 66 பேர் பலி
தென் சூடா­னிய தலை­ந­கரில் உக்­கி­ர மோதல்: 26 பேர் பலி; 130 பேர் காயம்

முசாபர்நகர் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த 30 குழந்தைகள் பலி

பண மோகத்தால் இளைஞரை பிணமாக்கிய பெண்கள்

 சோமாலியாவில் 4 மருத்துவர்கள் சுட்டுக்கொலை
 
 தென் சூடானிய பிரதான நகரை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்


=======================================================================
விண்­வெ­ளிக்கு இரண்­டா­வது தட­வை­யாக குரங்கை வெற்­றி­க­ர­மாக அனுப்­பிய ஈரான்

16/12/2013   ஈரா­னா­னது விண்­வெ­ளிக்கு மனி­த­ரு­ட­னான பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான தனது நிகழ்ச்­சித்­திட்­டத்தின் அங்­க­மாக இந்த வரு­டத்தில் இரண்­டா­வது தட­வை­யாக குரங்­கொன்றை வெற்­றி­க­ர­மாக அனுப்பி வைத்­துள்­ள­தாக அந்­நாட்டு ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்­ஹானி தெரி­வித்தார்.
பர்காம் என்ற மேற்­படி குரங்கு விண்­வெ­ளியில் ஆரோக்­கி­ய­மா­க­வுள்­ள­தாக அவர் கூறினார்.
அந்­நாடு இதற்கு முன் முதல் தடவையாக குரங்கொன்றை விண்­வெ­ளிக்கு அனுப்­பிய போது, அனுப்­பப்­பட்ட குரங்கு ஒன்­றா­கவும் தரை­யி­றங்­கிய குரங்கு வேறொன்­றா­கவும் காட்­டப்­பட்­டமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
ஈரா­னா­னது தனது விண்வெளி நிகழ்ச்சித் திட்­டத்தை ஏவு­கணை தாக்­கு­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தக்­கூடும் என மேற்­கு­லக நாடுகள் அச்சம் கொண்­டுள்­ளன.
இந் நிலையில் விண்­வெ­ளிக்கு குரங்கை அனுப்பும் செயற்கிரமத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகளுக்கு ஈரானிய ஜனாதிபதி பாராட்டைத் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி 

மனிதர்கள் நல்லவர்கள் -சிறுகதை --தெளிவத்தை ஜோசப்

.        

    
                                                                  
 

நாளைக்குத் தீபாவளி .
பண்டிகை நெரிசலில் பஸ் திணறியது.
கை நிறைந்த பைகளும்பை நிறைந்த சாமான்களுமாய்ஆட்கள் முட்டி மோதிக்கொண்டிருந்தனர்.
உத்தியோகம் என்று பிரித்துவிட்ட பிறகு பெற்றவர் பிள்ளைகளுடன் கணவன் மனைவி மக்களுடனும் – உற்றார் உறவினருடனும் ஒன்றாகிக் களிக்க ஏதாவது ஒரு பண்டிகை வரவேண்டியிருக்கிறது.
இந்த பஸ்சை விட்டாச்சுன்னா அடுத்தது அஞ்சுக்குத்தான்” என்றபடி தனது முழுப்பலத்தையும் காட்டி ஒருவர் முண்டி முன்னேறுகிறார்.
பஸ்ஸில் – ரயிலில் – தியேட்டரில் ஒரு நல்ல இடம் பிடித்துக் கொள்வதற்கு முட்டி மோதும் அளவுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல இடம் பிடிப்பதற்கு நம் மக்கள் முட்டுவதில்லை. மோதுவதில்லை.

மரண அறிவித்தல்

.
திருமதி சகிதேவி கந்தையா
(இளைப்பாறிய ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி)




இறப்பு : 12 டிசெம்பர் 2013


யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகிதேவி கந்தையா அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(இன்ஸ்பெக்டர்), சிவநாயகி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்ற இராமலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமலிங்கம் கந்தையா(இளைப்பாறிய விரிவுரையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.கந்தகுமார்(குமார்- ஐக்கிய அமெரிக்கா), சக்திகுமார்(சக்தி- UK), யோககுமார்(யோகு- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஷார்மினி, நிராஞ்ஜினி, விராஞ்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:சனிக்கிழமை 14/12/2013, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Golders Green Crematorium 62, Hoop Lane Golders Green London NW117NL 
தகனம்
திகதி:சனிக்கிழமை 14/12/2013
முகவரி:Golders Green Crematorium 62, Hoop Lane Golders Green London NW117NL 
தொடர்புகளுக்கு
மகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956837475

மரண சடங்குகள் பாரதி மண்டேலா - ஜீவகுமாரன்

.



பிறப்பு - 11-12-1882                              18-07-1918
இறப்பு - 11-09-1921                               05-12-2013
வயது  - 39                                              95
மரணத்தில் கலந்து கொண்டோர்  14 பேர் மட்டும் . நூற்றுக்கு மேற்ப்பட்ட உலகத்தலைவர்கள்  லட்ச்சக்கணக்கான மக்கள்

ஒருவர் சுதந்திரப் போராட்ட வீரர். கவிஞர் - பத்திரிகை ஆசிரியர் -  எழுத்தாளர் - பன்மொழி வித்தகர்
மற்றவர் உலகம் தலைவணங்கும் அரசியல்வாதி.
ஒருவர் இந்தியாவின் விடுதலையையையும் சமாதானத்தையும் கனவு கண்டவர்.

மற்றவர் தென் ஆபிரிக்காவிற்கு விடுதலையையும் பெற்று உலக சமாதானத்திற்கான நோபல் பரிசையும் பெற்றவர்.
இருவரும் வாழ்ந்த காலங்களும் வாழ்ந்த வயதுகளும் மிகவும் மாறுபட்டது. இரண்டு காலங்களிலும் உலக அரசியலின் நிலைப்பாடுகளும் வேறுவேறானவையே.

மண்டலேவின் மொழி பேச்சாய் இருந்தது. இசையும் நாட்டியமும் அவருக்கு இயற்கையிலேயே இருந்தது. அதில் அரசியல் மட்டும் இருந்தது. அத்துடன் அரசியல் பின்பலமும் இருந்தது. எனவே மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியதாய் இருந்தது.

தமிழ் சினிமா

பிரியாணி – விமர்சனம்

பிரியாணி – விமர்சனம்


பிரியாணி என்றாலே எல்லோரையும் கவர்ந்து சுண்டி இழுத்து நமது வாயில் ஜிராவை கசிய விடும் தன்மை கொண்டது என்பது அறிந்து விஷயம். இதுபோல் பல மாதிரியான பிரியாணியை பார்த்து ரசித்து ருசித்த நமக்கு வெங்கட்பிரபுவின் கைவண்ணத்தில் தயாரான பிரியாணி ஒரு கட்டு கட்டும் வகையில் அமைந்து இருக்கிறது .
கட்டி முடிக்காத பாலத்தில் இருந்து படு வேகமாக காரில் ஹய் ஜம்ப்பில் அந்தரத்தில் கார் பறக்கும் போது பிரேம்ஜியின் வழியில் தான் கதை ஆரம்பமாகிறது. தோழன் உயிர் காப்பான் ஆனால் பிரேம்ஜியின் தோழனான கார்த்தி என் உயிர் மட்டுமே எடுப்பான் என ஏக பில்டப்போடு ஃப்ளாஷ்பேக் சொல்ல துவங்குகிறார் பிரேம்ஜி , கார்த்தியும் பிரேம்ஜி இருவருமே சின்ன வயதிலிருந்தே நண்பர் பிரேம்ஜி கரெக்ட் செய்ய நினைக்கும் பெண்களையெல்லாம் கார்த்தி கரெக்ட் செய்துவிட அவ நல்ல பொண்ணு இல்ல மச்சி என்று பிரேம்ஜியை சமாதான வார்த்தை சொல்லி எஸ்கேப் ஆகி ப்ளேபாய் கேரக்டரில் எல்லா பெண்களையும் சொல்லி அடிக்கிறார் கார்த்தி. எல்லாவற்றையும் சகித்து கொண்டு நட்பின் இலக்கணமாக கடைசி வரை கூடவே வருகிறார் பிரேம்ஜி.
வழக்கம் போல் குடி,கும்மாளம் என கதை நகர்கிறது. கார்த்தியின் மாமாவாக வரும் சுப்பு மேனஜராக இருக்கும் கம்பெனியில்தான் கார்த்தியும், பிரேம்ஜியும் வேலை பார்க்கிறார்கள். நாசர் இந்தியாவின் டாப் 10 தொழில் அதிபர்களில் ஒருவர், அவருடைய மருமகனாக ராம்கி. சுப்புவின் கம்பெனியில் நடக்கும் ஒரு விழாவுக்கு நாசர் வர அங்கே ஒரு சந்தர்ப்பத்தில் கார்த்தியின் அறிமுகம் நாசர்க்கு கிடைக்கிறது.
பிறகு வழக்கம்போல பார், பார்ட்டி என நகர்கிறது கதை. ஒரு சமயத்தில் கார்த்தியும், பிரேம்ஜியும் ஃபுல் போதையில், பிரியாணி கடையை தேடும்போதுதான் ஒரு செம ஃபிகர் கதையில் எண்ட்ரி ஆகிறார். கார்த்தியை பற்றி சொல்லவே வேண்டாம் பிரேம்ஜி ஆளையே கரைக்ட் செய்யும் இவர் இப்படி ஒரு லெக் பீஸ் கிடைச்சா விடுவாரா. அந்த ஃபிகரை பின் தொடர்ந்து செல்கிறார்கள் இருவரும். அப்போது தான் இவர்களின் ஆனந்த வாழ்க்கையில் தோனி சிக்சர் அடிச்ச மாதிரி வாயை பிளக்க வைக்கிறது இவர்கள் செய்யும் கொலை. அந்த கொலையை நாங்க பண்ணல என்று கார்த்தியும், பிரேம்ஜியும் சொல்ல போலீஸ் இவர்களை நுங்கு எடுப்பதற்கு பதிலாக கார்த்தி போலீஸை புரட்டி எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். யார் அந்த கொலையை செய்தது அதில் நாம் எப்படி மாட்டினோம் என்று இரண்டாம் பாதியில் தீ மிதிக்கும் பக்தன் போல அவ்வளவு வேகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு அவ்வளவு வேலை பளுவை தரவில்லை வெங்கட் பிரபு. பதிலுக்கு உமா ரியாஸ் விஜயசாந்தியின் ஒன்னு விட்ட தங்கச்சியோ என என்னும் அளவுக்கு ஆக்‌ஷனில் விளையாடி இருக்கிறார். கார்த்தியின் பட வரிசையில் இதற்கு முன்பு சில சறுக்கல்கள் இருந்தாலும் இந்த படம் அவரை ஒரு படி மேலே ஏற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நடிப்புக்கு கூடவே பிரேம்ஜி இருக்கும் போது நீங்க தாராளமா அடுத்த படத்தையும் வெங்கட் பிரபுவுடன் பண்ணலாம்.
யுவனுக்கு இது 100வது படம். ஃபாரின் எல்லாம் சென்று என்னென்ன புது புது இசை கருவிகள் இருக்கிறதோ அதை எல்லாம் உபயோகித்திருக்கிறார். ஒரு புதுவித புத்துணர்ச்சி மனதுக்குள் சில்லறையாய் சிதறி விழுகிறது. இன்னும் மெலடியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இனி பிரியாணி சாப்பிடும் போது ஒரு செம பீஸ் நம்மை கிராஸ் பண்ணிபோனா கூட கையில் ஒரு லெக் பீஸ் வச்சி சமாதானப்படுத்திக்க வேண்டியது தான்.  நன்றி tamilcinema