மரண அறிவித்தல்

 அமரர் குமாரசாமி சோமசுந்தரம்
பிறப்பு : 30/04/1944      இறப்பு:  17/09/2012

ஈழத்தில் வேலணையை பிறப்படமாகக் கொண்டவரும், மெல்பேனில் வசித்துவந்தவருமான திரு சோமா சோமசுந்தரம் அவர்கள் 17ம் திகதி காலை மரணமானார்.
இவர் ரஞ்சினியின் அன்புக் கணவரும், லக்ஷ்மகுமார், கேதாரதேவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலம்சென்ற கலாநிதி மருதப்பு, அமெரிக்காவில் வசிக்கும் கமலாதேவி மற்றும் சிட்னியில் வசிக்கும் செல்வராணி ஆகியோரின் அருமை சகோதரரும், காயாவின் அன்பு பாட்டனாருமாவார்.
அன்னாரின் உடலம் 19ம் திகதி புதன்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து 9 மணி வரை   Police Road, Springvale Road சந்தியில் அமைந்துள்ள John Allison Monk House  இல் பார்வைக்காக வைக்கப்படும்.
இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு Springvale மயானத்தில் உள்ள  Boyd Chapel இல் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்க 03 9090 7726 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நெருப்பின் கனல் -கவிதை - செ.பாஸ்கரன்

.

 
அவள் விழியோரங்களில் கண்ணீர்த் துளி
நெஞ்சு விம்மி தணியும் சோகம்
ஆண்துணை இல்லாதவள் என்று
அழைக்கும் குரல்கள் அவளை அச்சமூட்டியது
நட்பின் போர்வையில் புகுந்து கொண்டு
நடிக்கும் ஆண்களின் அரக்கத்தனம்
அவளை ஆத்திர மூட்டியது
அவளின் விசும்பும் ஒலிகளுக்குள்
வெட்டருவாள்போல் விழுகின்ற வார்தைகள்
அவன் நட்புடன்
செவிமடுத்துக் கொண்டிருந்தான்
இவனாவது நண்பனாய் இருக்கிறானே என்ற
நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது.
தேனீர்க்கோப்பையை அவனுக்காய் நீட்டினாள்
தளிர் விரல்கள் நர்த்தனமாடின
வாங்கும் தருணத்தில்
அவள் விரல்களையும் தீண்டிக்கொண்டான்
தற்செயல் என்று அவள் சிரித்தாள்
தனக்கான அங்கீகாரம் என அவன் நினைத்தான்
பேசிக் கொண்டிருந்தவளின் சின்ன விரல்களை
பற்றிக்கொண்டவன் பார்வையில்
நட்பிற்கு பதிலாய் காமம் தெரிந்தது
அவள் தலைகவிழ்ந்தாள்
நட்பின் விழுமியங்களும் கவிழ்ந்து கொண்டது
இப்போது அவள் விழிகளில்
தெரிவது கண்ணீரல்ல
நெருப்பின் கனல் ,
அவள் நிமிர்ந்து கொண்டாள்.

சிட்னி முருகன் தெற்கு வீதி கட்டிடம் திறப்பு விழா 16.09.2012

.

                                                                                                             
                                                                                                          படப்பிடிப்பு ஞானிTEARS OF VANNI

.

சொல்லமறந்த கதைகள் 10 - அங்கம் 02


காத்திருப்பு புதுவை நினைவுகள் (அங்கம் 02)
- முருகபூபதி – அவுஸ்திரேலியா
Puthuvai-5 புதுவை இரத்தினதுரை தனது குடும்பத்திற்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்குச்சென்று உழைத்து திரும்பிய பின்னர், விடுதலைப்புலிகளினால் ஈர்க்கப்பட்டு அவர்களின் கலை. பண்பாட்டுக்கழகத்தினை வளர்த்தார். 1986 இல் நான் அவரை இறுதியாகச்சந்தித்தபோது அவருக்கு தனித்தமிழ் ஈழம்தான் கனவு. அவரின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
அவர் ஒருகாலத்தில் மாக்ஸீயம், கம்யூனிஸம் பேசியவர். எழுதியவர். அதிலிருந்து முற்றாக விடுபட்டாரா? என்பது எனக்குத்தெரியாது. ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமையை விட்டும் அதன் கொள்கைகளை விட்டும் இறுதிவரையில் அவர் விடுபடவில்லை.
அதிதீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக மாறிவிடுவார்கள் என்று மேதை லெனின் சொல்லியிருக்கிறார். இயல்பிலேயே மென்மையான குணமுள்ள எங்கள் புதுவையும் ஒரு கட்டத்தில் வெளியே வரலாம் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.
1987 இல் நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் அவருடன் தொடர்புகள் ஏதும் இன்றி மிகுந்த சோர்வுடன் இருந்தேன். எனினும் எதிர்பாராதவிதமாக அவரது இயக்கத்தின் தமிழ்த்தாய் வெளியீடாக வந்த நினைவழியா நாட்கள் கவிதைத்தொகுப்பின் பிரதியொன்றை அவுஸ்திரேலியாவில் நீண்டகாலம் வதியும் நண்பர் சண்முகம் சபேசன் எனக்குத்தந்தார்.
சபேசன் விக்ரோரியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் முக்கியஸ்தர். அத்துடன் பிரதி புதன் கிழமைதோறும் இங்கு ஒலிபரப்பாகும் 3CR தமிழ்க்குரல் வானொலியின் ஊடகவியலாளராகவும் பிரதான ஒலிபரப்பாளராகவும் பணியிலிருப்பவர். அரசியல் கருத்துக்களுக்கு அப்பால் எனது நல்ல நண்பர்.
அவரிடமும் மற்றும் ஒரு நண்பரான யாதவனிடமும் அவ்வப்போது புதுவை பற்றி கேட்டறிவேன். அவர்களும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக இருந்த ஜெயக்குமாரும் (இவர் மறைந்துவிட்டார்) அவ்வப்போது மண்ணுக்கு சென்று வருபவர்கள். அவர்கள் இலங்கை சென்று திரும்பினால், இலங்கை சென்று வந்ததாகச்சொல்ல மாட்டார்கள். மண்ணுக்கு சென்று வந்ததாகவே சொல்வார்கள். அந்தளவுக்கு ஈழமண்ணில் அவர்களுக்கு பற்றிருந்தது. ரணிலின் புண்ணியத்தினால் சமாதான காலம் வந்தபோது அவர்கள் தம்முடன் மேலும் பலரையும் அழைத்துக்கொண்டு மண்ணுக்குச்சென்று மீண்டு வந்தனர். பிரபாகரன் நடத்திய உலகப்பிரிசித்தம் பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டையும் கண்டு களித்தனர்.

இலங்கைச் செய்திகள்

.
 அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது 

மாத்தளனில் மீள்குடியேறிய மக்களின் அவலம்

யாழ். புற்று நோய் வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 15 ஆம் திகதி

பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்தும் அதேவேளை இனப் பிளவுகளுக்கும் பாலம் போட வேண்டும்

மட்டக்களப்பில் படுதோல்வியடைந்த தமிழரசுக்கட்சி

காணிப் பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசு முக்கிய உத்தரவு

இன்றைய கிழக்கு மாகாணத் தேர்தலின் பின்னரான இந்திய வகிபாகம் என்ன?: பாஸ்கரா

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து 16 மைல் தொலைவில் படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே

.

                                                                   சி. ஜெயபாரதன், கனடா

மகாகவி பாரதியின் சிரார்த்த தினம் செப்ரெம்பர் 11 1921 இதையொட்டி இக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம்.

சுதந்திரக் கவி பாரதி
இதந்திரு மனையின் நீங்கி,
இடர்மிகு சிறைப்பட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறி,
பழிமிகுந்து இழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல்
விளைந்தெனை அழித்திட்டாலும்,
சுதந்திர தேவி! நின்னைத்
தொழுதிடல் மறக்கிலேனே.
தேசியக் கவி சுப்ரமணிய பாரதி
பாரதியால் தமிழ் உயர்ந்ததும், தமிழால் பாரதி உயர்ந்ததும் இன்று யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். பாரதி மக்கள் கவி. மானுடம் பாட வந்த மாக்கவி. புது நெறி காட்டிய புலவன். தன்னைப் பின்பற்றித் தமிழ் வளர்க்க ஒரு பரம்பரையைத் தோற்றுவித்த ஓர் உயர்கவி. எண்ணத்தாலும், எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர். பல்துறை அறிஞர், தொலை நோக்கினர், அறிவியல் பார்வை நல்கிய கவிஞானி. மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை அவர் படையல். புதிய தமிழகத்தை உருவாக்கக் கனவு கண்ட கவிக்குயில். சுதந்திரப் போரில் பாரதியின் பாடல் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத் தீயாய், சுதந்திரக் கனலாய்ப், புனலாய்த் தமிழ் நாட்டை வீறுகொள்ளச் செய்தது.
ச. மெய்யப்பன், எம்.ஏ. [அண்ணாமலைப் பல்கலைக் கழகம்]
பாரதி மகாகவியா இல்லையா வென்று பாரதியின் படைப்புகளைத் திறனாய்வு செய்து, பாராட்டுக்குரிய ஒரு கட்டுரையைக் கோவை ஞானி திண்ணை அகிலவலையில் [டிசம்பர் 12, 2003] வெளியிட்டு இருந்தார். மகாகவிகள் எனப் போற்றப்படும் காளிதாசர், கம்பர், வால்மீகி, வியாசர், தாகூர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் வரிசையில் பாரதியார் நிற்கத் தகுதி பெற்றவரா அல்லது பாரதியை வெறும் தேசீயக் கவி என்று ஒதுக்கி விடலாமா என்னும் கேள்வி ஒரு சமயம் எழுந்திருக்கிறது! பாரதிக்கு மகாகவி என்னும் பட்டமளிப்பது முறையா அல்லது தவறா என்று ஆய்வதற்கு முன்பு மேற்கூறப்பட்ட கவிஞர் காளிதாசர், வால்மீகி, கம்பர், வியாசர், ஷெல்லி, ஷேக்ஸ்பியர், காய்தே, பைரன் ஆகியோர், பாரதி தனது காவியத்தில் கையாண்ட நூற்றுக் கணக்கான பல்வேறு நிகழ்கால, மெய்யான, முரணான மனிதக் குறைபாடுகளை, மானிடப் பண்புகளை நடைமுறைகளைத், தேசீயப் போராட்டங்களை எந்த வகையிலாவது தொட்டிருக்கிறார்களா என்று பார்ப்பது முதற்கண் அவசியம். அதாவது மற்ற மகாகவிகளை ஒப்பிட்டு பாரதியை எடை போடாமல், பாரதியை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொண்டு மற்ற கவிஞர்களின் தரத்தை, நயத்தை, உயரத்தைத் திறனாய்வு செய்ய ஒருவர் விரும்பலாம்! பாரதியைத் தராசின் ஒரு தட்டில் அமர வைத்து, மற்ற கவிஞர் ஒவ்வொருவரையும் நிறுத்துப் பார்த்துத் தரத்தை அறிய முற்படலாம்!

அவர்கள் உலகம் -சிறுகதை -கே.எஸ்.சிவகுமாரன்


.


மணி ஏழு!

கொழும்புக் கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வண்டி புறப்படுகின்றது.கூட்டம் அதிகமில்லை.

இரண்டாம் வகுப்புப் பெட்டியென்றில் சுந்தரமூர்த்தியும் இன்னுமொரு இளைஞனும்இருக்கின்றனர்.

வேகமாக ஓடுகின்றது ரெயில்!

சுந்தரமூர்த்தி யன்னலூடே வெளிப்புறக்காட்சிகளைப் பருகிக் கொண்டிருக்கிறான்.அந்த இளைஞனோ ஒரு நாவலின் கடைசிப் பக்கங்களைப் படித்துக்கொண்டிருக்கிறான்.

பிரபலமான ஒரு தமிழ் நாட்டுப் பிரசுராலத்தினரால் வெளியிடப்பட்டிருந்த அந்தநாவலின் ஆசிரியர் வேறு யாருமிலர்!

ஈழத்துப் பிரபல எழுத்தாளனான சுந்தரமூர்த்திதான்!

தன்னெதிரே சதையும் குருதியுமாக அமர்ந்திருக்கும் சக பிராயாணிதான்சுந்தரமூர்த்தி என்பதை அவ்விடம் வாசகன் அறியான்!

ராகமைக்கு வந்து சேர்கின்றது வண்டி.

'அப்பப்பாஎன்ன வெப்பம்!' என்று அலுத்துக் கொள்கிறான் அந்த யுவன்.

பேச்சுத்துணைக்கு யாருமில்லை என்ற சுந்தரமூர்த்திக்கு மகிழ்ச்சிதான்!

'ஆமாம்சரியான வெப்பநிலைதான்!'

பெர்லினிலிருந்து அவுஸ்திரேலியாவரை தொடரும் பெயர்தல்australia refugஇதுவரையில் இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக அல்லது பாதுபாப்பற்ற சூழல் காரணமாக இலங்கைக்குள் இடம்பெயர்ந்த, இலங்கையைவிட்டு இடம்பெயர்ந்த அல்லது புலம்பெயர்ந்த மக்களின் எண்னிக்கையின் புள்ளிவிபரங்கள் பற்றி எவருமே கவலைப்படுவதில்லை. யுத்தத்தால் மரணித்தவர்கள் தொடர்பான எண்ணிக்கை பற்றி தமிழர் தரப்பில் ஒரு புள்ளிவிபரமும் இலங்கை அரசு தரப்பில் இன்னொரு புள்ளிவிபரமும் இருப்பதால், இதில் எந்த புள்ளிவிபரம் சரியென்பதும் எவருக்கும் தெரியாது. புலம்பெயர்ந்த மக்களை மரணித்தவர்கள் அல்லது காணாமல் போனவர்கள்  பட்டியலில் சேர்ப்பதில் பூரிப்பவர்களும் நம்மிடையே இருப்பதால், இலங்கைக்கு வெளியே உயிர் வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கையின்   புள்ளிவிபரங்கள்  ஓரளவிற்கேனும் சரியாக கணக்கெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான கணக்கெடுப்பு,  இலங்கையின் மனிதவளத்தில் எவ்வளவு வீதத்தினரை இழந்திருக்கிறோம் என்பதை அறிவதற்கும் உதவியாக இருக்கும்.

உலகச் செய்திகள்

.
லிபியாவில் ரொக்கெட் வீசி தாக்குதல்: அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலி

அல்கொய்தாவின் முக்கிய கட்டளைத் தளபதி பலி

ஈரான் மீது முழுமையாகப் போர் தொடுக்க எவையெல்லாம் தேவை? அமெரிக்கா போட்டுள்ள கணக்கு

லிபியாவில் ரொக்கெட் வீசி தாக்குதல்: அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலி

 

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தபட்டதில் ஒருவர் பலியானார்.

இதனை தொடர்ந்து லிபியாவுக்கான அமெரிக்க தூதர் பாதுகாப்பான் இடத்துக்கு செல்ல முயன்றபோது அவரது காரைக் குறி வைத்து ரொக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழோசை 2012 இற்கான விருதை பெறுகிறார்கள்


குப்பை தேசம்

.


என்ன செய்வதென்று தெரியாமல் காகங்கள் காலையிலேயேகரையத்தொடங்கிவிட்டன.ஆமாம் இந்தப்பட்டணத்தில் கோழி கூவாது.இங்கு மட்டுமல்ல எந்தப்பட்டணத்திற்கு சென்றாலும் கோழி கொக்கரிக்க மட்டுமே செய்யும்ஆனால் இன்னும் மக்கள் நம்புகிறார்கள் கோழிதான்கூவுகிறதென.ஆனால் பட்டணத்தில் கறிக்கடைகளில் மட்டுமேகொக்கரித்தும் கூவிக்கொண்டும் இருந்தன கோழிகளும் சேவல்களும் .

காகங்கள் கரைந்துகொண்டிருந்தது தானே.ஆமாம்காலை 7மணியாகிவிட்டதென யாரும் சொல்லாமல் தெரிந்திருந்தது காகங்களுக்கு.மனோ பாட்டி முன்னோர்களுக்கு படைப்பதென கருதி இரண்டு கரண்டிமாவினை இட்டவித்து சுவற்றின் மீது வைத்தாள்காகத்தின் கரைச்சல்முடிந்ததுநகரத்தில் இரைச்சல் ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே யாசகம் கேட்டு வந்தான் சிறுவன் ஒருவன், எதுவுமில்லை என்று சுருக்கங்களை சுருக்கி கோரமுகம் காட்டினாள்.

அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத்தொகுப்பு கு.சின்னப்பபாரதி இலக்கியப் பரிசு

.


அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைத்தொகுப்புக்கு மணிவாசகர் பதிப்பகத்தின் சிறந்த நூலுக்கான நூலாசிரியர் விருது, கவிதை உறவு சஞ்சிகையின் சிறந்த சிறுகதை நூலுக்காக அமரர் சு.சமுத்திரம்விருது, புதுவை நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விருது, கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளையின் சிறந்த நூலுக்கான விருது போன்றன கிடைத்த நிலையில் இப்போது மீண்டும் அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது" சிறுகதைத்தொகுப்புக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளையின் இலக்கிய விருது கிடைத்துள்ளது.
மறைமலை அடிகள்

.

தமிழ் சினிமா


'18 வயசு' - மனநோயாளியின் காதல்

அம்மாவின் தவறான நடத்தை, அப்பாவின் தற்கொலையால் மனநிலை பாதிக்கப்படுகிறார் ஜானி. இந்த சூழ்நிலையில், ஆதரவற்ற காயத்ரி அப்பாவின் நண்பர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி ஜானியின் அப்பார்ட்மென்டுக்கே வருகிறார். ஜானியிடம் பழகும் காயத்ரி, ஒரு கட்டத்தில் காதலிக்கத் துவங்குகிறார்.

தன்னை படிக்க வைக்கும் பெரிய மனுஷன், தன்னை அடைய நினைப்பதை சகிக்க முடியாமல் ஜானியோடு ஓடிவிட முடிவு செய்கிறார். தாயின் காதலனை தாக்கி, தாயை கொன்று விட்டு ரத்தக்கறையோடு காயத்ரி முன் வந்து நிற்கிறார் ஜானி. போலீஸ் ஜானியை பிடித்துச் செல்கிறது. நிர்க்கதியற்று நிற்கிறார் காயத்ரி. ஜானியை காப்பாற்றத் துடிக்கிறார் மனநல மருத்துவர் ரோகிணி. தண்டிக்க துடிக்கிறது போலீஸ். காயத்ரியின் காதலுக்காக எதுவும் செய்ய தயாராக நிற்கிறார் ஜானி. இவற்றில் எது நடந்தது, எது நடக்கவில்லை என்பது மீதி கதை.

18 vayasu
18 vayasu

உடம்பை ஆட்டியபடி நடக்கும் மேனரிசம், தயங்கி தயங்கி பேசும் வார்த்தைகள், எதையும் நெகட்டிவாக நினைக்கத் தெரியாத மனசு, தீடீரென ஆக்ரோஷப் பாய்ச்சல் என இரண்டாவது படத்திலேயே ஆச்சரியம் காட்டுகிறார் ஜானி. ‘நாளைக் காலை 10 மணிக்கு வா போகலாம்’ என காயத்ரி சொல்ல, முதல் நாளிலிருந்தே காத்திருப்பது, காயத்ரியை ஈவ் டீசிங் செய்பவனை துரத்திச் சென்று துவைப்பது என ஒரு மனநோயாளி பெண்ணின் மனதுக்குள் செல்லும் அற்புத தருணங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறார். காயத்ரி அமைதியான அழகுப் பெண்.

யாருமற்ற விரக்தியை அப்படியே முகத்தில் பிரதிபலிக்கிறார். ஜானியின் இன்னொரு பக்கத்தை தெரிந்து கொண்ட பின் தயக்கத்துடம் அவரை விரட்டியடிப்பது இயல்பான நடிப்பு. காதலுனுக்காக மகனையே புறக்கணிக்கும் கொடூர தாயாக யுவராணி மிரட்டுகிறார்.

அவர் காதலனாக நடித்திருக்கும் டாக்டர் சூரி, முகத்தில் அப்பாவி தனத்தை வைத்துக் கொண்டு தவறான மனிதராகப் பிரமாதப்படுத்துகிறார். குப்பை மேட்டில் ஜானி அவரை வதம் செய்யும் காட்சியில் கண்களில் அப்படி ஒரு மரணபயத்தை காட்டியிருக்கிறார் சூரி.

கரடுமுரடான போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு அப்படியே பொருந்தியிருக்கிறார் ஜே.எஸ். ஜானியுடன் மோதும்போது உயிர் பயத்தில் அலறி அது மற்றொரு போலீசுக்கு தெரியும்போது அவமானத்தால் கூனி குறுகி யதார்த்தமாக நடித்திருக்கிறார். மற்றொரு மனநோயாளியாக சத்யேந்திரன் சிரிக்க வைக்கிறார். படத்தின் அத்தனை கேரக்டர்களும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
18 vayasu
18 vayasu

கொடூரமான காட்சிகளைகூட எல்லை மீறாமல் அதன் கனத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர். தினேஷ்-சார்லஸ் போஸ்கோ இசையில் நா.முத்துக்குமார், யுகபாரதியின் பாடல் வரிகள் சுகம். சக்தியின் ஒளிப்பதிவு சிறப்பு. மனநோயாளி ஜானியை அபார்ட்மென்ட் வாசிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? மரணத்தை எதிர்நோக்கும் மனநோயாளியை டாக்டரே சுதந்திரமாக உலவ விடுவது எப்படி? இரண்டு கொலை செய்தவரை கைது, கோர்ட், அல்லது போலீஸ் காவலில் சிகிச்சை என்று போகாமல் போலீசாரும் அவருடன் கண்ணாமூச்சி ஆடுவது ஏன்? ‘அவனுக்காக ரெண்டு புல்லட் லோட் பண்ணி வச்சிருக்கேன்’ என்று சொல்லும் போலீஸ் அதிகாரி, கிளைமாக்சில் வெறுங்கையோடு சென்று அடிவாங்குவது ஏன்? இப்படி கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
நன்றி வீரகேசரி