சிட்னி முருகன் கோவிலுக்கு வருகை தந்த ஆஸ்திரேலியாவின் முதல் பிரதமரான Anthony Albanese அவர்களுக்கு மிகவும் அன்பான வரவேற்பு 01/11/2024
கந்தசஷ்டி சிறப்பம்சம்
கந்தனும் வந்தான் !
மூன்றாவது சர்வதேசச் சிலப்பதிகார மாநாடு 2024 சிட்னி அவுஸ்திரேலியா சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டிகள் 03/11/2024
தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். தமிழரின் முதல் காப்பியம் முத்தமிழ் காப்பியம். தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும். இவற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு உலகச் சிலப்பதிகார அறக்கட்டளை தமிழ் இலக்கியக் கலைமன்றம், சிட்னி மற்றும் பிற தமிழ் அமைப்புகள் இணைந்து சிலப்பதிகாரம் 3வது சர்வதேச மாநாட்டை நவம்பர் 30 & டிசம்பர் 01 2024 ஆகிய தினங்களில் தமிழர் மண்டபத்தில் நடத்தவுள்ளன.
3வது சிலப்பதிகார மகாநாட்டை முன்னிட்டு சிலப்பதிகாரத்தின் பெருமையையும் சிறப்புக்களையும் மாணவர்களும் அறியும் பொருட்டுப் பேச்சுப்போட்டிகள் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று நடத்தப்பட்டன.
போட்டியின் நடுவர்கள் புகைப்படத்தில் உள்ளனர்.
எப்போதும் துன்பமில்லை என்றுரைத்தார் வள்ளுவரும்!
-சங்கர சுப்பிரமணியன்
நூல் தந்தான் வான்புகழ் வள்ளுவன்
ஆசை வேண்டுமென்று சொன்னவன்தான்
பேராசை வேண்டாமென்றான்
ஆதலாலினால் அவன் நமக்கு எல்லாமும்
தேவைக்கேற்ப வேண்டுமென்றான்
அத்தகைய ஆசையைத்தான் வேண்டும்
என்றான் ஏற்றமிகு குறளினிலே
தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்கும்
செயல் நமக்கு வேண்டாமென்றான்
அதிகம் வேண்டாம் எமக்கு என்றுகூறுமவன்
துறவறம் வேண்டாம் என்றான்
எல்லாம் வேண்டாமென துறந்துவாழ்வதற்கா
காமத்துப்பால் தந்தானவன்
ஆதலினால் மானிடரே வேண்டுதல்
வேண்டாமை பொருள் அறிவீர்
வாணி ராணி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
இந்திய திரையுலகில் சில கதைகள் சாகாவரம் பெற்றவை. அவை
காலத்துக்கு காலம் புதிய வடிவங்களில் மீண்டும் மீண்டும் படமாகிக் கொண்டே இருக்கும். ரசிகர்களும் அவற்றை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படி மறு அவதாரம் எடுத்த ஒரு படம் தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த வாணி ராணி படம். 1964ம் வருடம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என் டி ராமராவ் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடிக்க வெளிவந்து வெற்றி பெற்ற படம் ராமுடு பீமுடு. இந்த படத்தை விஜயா வாஹினி ஸ்டுடியோ அதிபர்களாக , விஜயா கம்பைன்ஸ் நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் தமிழில் எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயரில் படமாக்கினார்கள். தமிழின் சூப்பர் ஸ்டாரான எம் ஜி ஆர் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் 1965ல் வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தை ஹிந்தியில் சூப்பர் ஸ்டாரான திலீப்குமார் நடிப்பில் ராம் ஆவ்ர் ஷியாம் என்ற பேரில் படமாக்கி அப் படமும் வெற்றி கண்டது. இது நடந்து ஆறு ஆண்டுகளாகிய பின்னர் இதே கதையை ஹிந்தியில் சி. பி சிப்பி என்பவர் சீதா அவ்ர் கீதா என்ற பெயரில் படமாக்கினார். ஹிந்தியில் பிரபலமான சலீம், ஜாவேத் என்ற இரட்டை கதாசிரியர்களை கொண்டு , ஒரே உருவ ஒற்றுமை கொண்ட இரண்டு ஆண்களின் கதையை இரண்டு பெண்களுக்குள் நடக்கும் கதையாக மாற்றி , ஹிந்தியின் பெண் சூப்பர் ஸ்டாரான ஹேமாமாலினி நடிப்பில் படமாக்கினார்கள். அந்தப் படமும் சக்கை போடு போட்டது. தாங்கள் தயாரித்த படத்தின் கதையை உல்டா செய்து படமாக்கி காசு பார்த்து விட்டார்கள் என்று நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் சிப்பியை போட்டு உலுக்க அவர்களுக்குள் ஓர் உடன்பாடு வந்தது. அதன் பிரகாரம் சீதா அவ்ர் கீதா படத்தை தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கும் உரிமையை நாகிரெட்டி, சக்கரபாணி இருவருக்கும் தாரை வார்ப்பதாக இணக்கம் காணப்பட்டது. அதன் படி சீதா அவ்ர் கீதா தமிழில் வாணி ராணி என்று மறு வடிவம் பெற்றது.
மௌன சாட்சியாக களநிலவரத்தின் ஒரு தரப்பை சுயவிமர்சனம் செய்யும் ‘ஒற்றைப் பனைமரம்’
October 28, 2024 6:00 am 0 comment
இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர், அங்கு எஞ்சி வாழும் தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பயங்கரவாதத்தால் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு அவல நிலையில் உழல்கிறது என்பதையும் கடந்த காலத்தின் எச்சங்களுடன் சித்தரித்திருக்கிறது ‘ஒற்றைப் பனை மரம்’. 2009இல் போரில் சரணடைந்த பெண் போராளியான கஸ்தூரி (நவயுகா), குண்டு வீச்சுக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவியைப் பறிகொடுத்த சுந்தரம் (புதியவன் ராசய்யா), அவர் தனது மகளாகத் தத்தெடுத்துக்கொண்ட அஜாதிகா ஆகியோர் பல வருட முகாம் வாழ்க்கைக்குப் பின்னர், சொந்த ஊரான கிளிநொச்சிக்கு வந்து வசிக்கத் தொடங்குகிறார்கள். ஆனால், போருக்குப் பிறகான வாழ்க்கை, அவர்கள் நினைத்ததைப் போல் இல்லை. “சயனைட் குப்பியைக் கடித்துச் செத்திருக்க வேண்டியதுதானே” என முன்னாள் போராளிகளைச் சக மனிதர்கள் சிலர் கேட்கின்றனர். போரில் அனைத்தையும் இழந்து வறுமையிலும் வெறுமையிலும் உழலும் அப்பாவி கைம்பெண்கள் சிலரைப் பாலியல் தொழிலுக்கு வற்புறுத்திப் பணிய வைக்கின்றனர். ஆண் போராளிகளில் சிலரோ வயிற்றுப்பாட்டுக்காக, அடிதடித் தொழில் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
அநுர குமார திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கமும் - டி.பி.எஸ். ஜெயராஜ்
.
அநுர குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘ இடதுசாரி ‘ நட்சத்திரம் – 4
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்வை பற்றிய எனது கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம் இதுவாகும். முதலாவது பாகத்தில் நிகழவுகள் நிறைந்த அவரது ஆரம்ப வாழ்க்கையையும் இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுன( ஜே வி.பி.) வுக்குள் அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி பற்றியும் மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்துக்கு அவரின் உயர்வு பற்றியும் எழுதியிருந்தேன்.
இந்த நான்காவது பாகத்தில் திசாநாயக்கவின் தலைமையில் ஜே.வி.பி. எவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலையைத்துவ கட்சியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்குகிறேன்.
அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வில் 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி ஒரு முக்கியமான தினமாகும். அந்த தினத்தில்தான் ஜே.வி.பி.யின் 17 வது தேசிய மகாநாடு நடைபெற்றது. கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமே அந்த மகாநாட்டின் சிறப்பாக அமைந்தது. 24 வருடங்களாக ஜே.வி.பி.யின் தலைவராக இருந்து வந்த சோமவன்ச அமரசிங்க பதவியில் இருந்து இறங்கினார். அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபலமாக அறியப்பட்ட அநுர குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் புதிய தலைவராக வந்தார்.
சோமவன்ச தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போகின்றார் என்பது மகாநாட்டுக்கு முன்னதாகவே பொதுவாக தெரிய வந்தது. எதிர்காலத் தலைவர் யார் என்பதே தெரியாமல் இருந்தது. புதிய தலைவராக வரக்கூடியவர்கள் என்று கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி, பிமால் இரத்நாயக்க மற்றும் அநுரா குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரவலாக அடிபட்டன.இவர்களில் ரில்வின் சில்வாவே பெரும்பாலும் புதிய தலைவராக தெரிவாவார் என்று நம்பப்பட்டது.
ஜே.வி.பி.யின் தலைவர் என்ற வகையில் தனது ஓய்வை அறிவித்த சோமவன்ச அமரசிங்க புதிய தலைவராக அநுரா குமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார். ரில்வின் சில்வாவே அவரை வழிமொழிந்தார். பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. ரில்வின் சில்வாவும் விஜித ஹேரத்தும் முறையே பொதுச் செயலாளராகவும் பிரசாரச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். தேசிய அயைப்பாளராக பிமால் இரத்நாயக்க தெரிவான அதேவேளை ஓய்வை அறிவித்த தலைவர் சோமவன்ச அமரசிங்க சர்வதேச விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தலைமைத்துவ மாற்றம் முரண்பாடு எதுவும் இல்லாததாக சுமுகமாக இடம்பெற்றதே முக்கியமாக குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. இலங்கையில் பெரும்பாலான கட்சிகளில் நிலவும் உட்பூசலையும் குழுவாதத்தையும் அங்கு காணமுடியவில்லை. பல வருடங்களாக ஜே.வி.பி.யின் பெரும்பாலான உறுப்பினர்களின் நேசத்துக்குரியவராக அநுரா விளங்கி வந்ததால் எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தார். 2008 ஆம் ஆண்டில் விமல் வீரவன்ச குழுவினரதும் 2012 ஆம் ஆண்டில் குமார் குணரத்தினம் குழுவினரதும் பிளவுகளை அடுத்து கட்சி ஓரளவுக்கு பலவீனப்பட்டு உறுப்பினர்கள் மத்தியில் உறுதி குன்றிப் போயிருந்தது. புதிய ஒரு தலைவரின் கீழ் புதிய ஒரு செல்நெறி ஜே.வி.பி.க்கு அவசியமாக தேவைப்பட்டது. அநுரா குமார திசாநாயக்க அதற்கு மிகவும் பொருத்தமானவராக தெரிந்தார்.
இரு முக்கியமான தேர்தல்கள்
தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அநுரா குமார திசாநாயக்க 2015 ஆம் ஆண்டில் இரு முக்கியமான தேர்தல்களுக்கு முகங்கொடுத்தார். ஒன்று 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் .மற்றையது 2015 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தல். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முட்டை அப்ப இரவு விருந்தில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திராபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடாடார்.
இலங்கைச் செய்திகள்
திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது
சுற்றுலாத்துறை வருமானமாக 8.5 பில்.டொலரை பெற எதிர்பார்ப்பு
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார பைக்குகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி
இலங்கையில் University of East London பல்கலைக்கழகத்தின் புதிய சந்தைக் கூட்டாளராக Infinite Group
திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது
திருடர்களைப் பிடிக்கும் விடயத்தில் அரசாங்கத்திற்கு அவசரம் கிடையாதென, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உலகச் செய்திகள்
அமெரிக்காவில் தீபாவளிக்காக பாடசாலைகள் விடுமுறை
காசாவில் இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் 45 பேர் பலி: லெபனான், சிரியாவிலும் தாக்குதல்
இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு தயார்
படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தம்
கிழக்கு ஸ்பெயின் மழைவெள்ளத்தில் 63 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் தீபாவளிக்காக பாடசாலைகள் விடுமுறை
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நியூயோர்க் பாடசாலைகளுக்கு இன்று தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதேபோல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அக்டோபர் 28 அன்று ஜனாதிபதி பைடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.