இது நிறம்மாறும் பூ.. (கவிதை) வித்யாசாகர்1
வீடு பெருக்குகையில்
விளையாட்டுப் பொருட்களை எல்லாம்
புலம்பிக்கொண்டே எடுத்து
அடுக்கினால் அம்மா

விளையாட்டு பொருட்களை எல்லாம்
புலம்பிக் கொண்டே
களைத்துப் போட்டது குழந்தை..
--------------------------------------------------------------------

2
விளையாட்டு 
பொருட்களைப்போலவே
மனதிற்குள் அடுக்கிவைத்துக் கொள்கிறார்கள்
குழந்தைகள் நம்மை

இது அப்பா
இது அம்மாவென்று!
--------------------------------------------------------------------

நான் ரசித்த கச்சேரி பிரணிதா பாலசுப்ரமணியன்


சிட்னி  இசை விழாவில்  மூன்று தினங்கள்   காலை முதல் மாலை வரை  இசை மழையில் நான் நனைந்தேன். ரஞ்சினி காயத்திரி, உன்னி கிருஷ்ணன், அருணா சாய்ராம், அபிஷேக் ரகுராம், நித்திய ஸ்ரீ, ரவிக்கிரன், பந்துலா ராமா போன்ற  உலகில் உள்ள மிக பிரபல்லியமான கர்நாடக சங்கீத மகான்கள் சிட்னி மேடையை அலங்கரித்தனர்.  இவரகளுடன் புகழ் பெற்ற பக்க வாத்திய வித்துவான்களும் வருகை தந்தனர்.  இவர்கள் எல்லோரும் மிகவும் சிறப்பாக, வியக்கதைக்க முறையில் இசை மழை பொழிந்தனர். ஆனாலும் என்னக்கு மிகவும் பிடித்த கச்சேரி ரஞ்சினி காயத்திரியின் இசை நிகழ்ச்சி.
ரஞ்சினி காயத்திரி என்பவர்கள் சங்கீத உலகிலே   பல விருதுகளும்  பட்டங்களும்  பெற்றவர்கள்.  அவர்களுடைய   பெரும் கடல் போன்ற சங்கீத ஞானத்தால்  பலருடைய  உள்ளங்களை  கொள்ளைக் கொண்டவர்கள்.
இவர்களுடைய கச்சேரியை  கேட்பதற்கு  நான் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன்.  முத்தையா பாகவதர் இயற்றிய “ கம் கணபதே”  என்ற கீர்த்தனையோடு தங்களுடைய கச்சேரியை அழகாக  சிரித்த முகத்தோடு ஆரம்பித்தனர்.  இப் பாடல் ஹம்சத்வனி ரகத்திலும்  திஸ்ர நடை ஆதி தாள திலும்  அமைந்திருந்தது.   இது எனக்கு  ஒரு மிகவும் பிடித்த கீர்த்தனை என்ற படியால் கச்சேரியின் ஆரம்பத்தில் இருந்தே  நான் இசை கடலில்  மூழ்கி விட்டேன். இதைத் தொண்டர்ந்து பல அருமையான  இனிமையான  கிருதிகளை பாடி என்னை மகிழ்வித்தனர் .அவர்கள்   பாடிய பாட்டுகளின்  ராகங்கள் மிகவும் ரம்மியமாக  இருந்தது.  சில ராகம்க மிகவும் அரிதாக  பாடும் ராகங்கள்.
இவர்களுடைய   கச்சேரியின்  சிறப்பு அம்சம்  என்னவென்றால் “ ராகம் தானம் பல்லவி” என்பதை  இரட்டை ராகங்களில் பாடினர்.  "ஆரபி மானம் வைத்து ஆதரிப்பார்   என்னை  ஆனந்த பைரவி"   என்ற பல்லவியை எடுத்துக்கொண்டு ஆரபி ராகத்திலும் ஆனந்தபைரவி ராகத்திலும் பாடினர்.  அதுமட்டும் அல்ல வியக்கத் தக்க முறையில் ஆனந்தப்ஹைரவியில் ஆரம்பித்து சிந்து பைரவி, நட்ட பைரவி, வசந்த பைரவி, அஹிர் பைரவி, சலக பைரவி என்று  எல்லாவிதமான   பைரவி  ராகங்குக்குள்ளேயும்  புகுந்து விளளையாடினர்.   இது   அவர்களுடைய மனோதர்ம  திறன்களை  பெரிதும் வெளிபடுத்திய   பாடலாக அமைந்திருந்தது..
 மேலும் இவர்கள் பாடும் போது  குரல்கள்  இணைந்து  இனிமையாக ஒலித்தது
அவர்கள் மாறி  மாறி  பாடும் போது   கேட்பதற்கு  நன்றாக இருந்தது
அதே நேரம் ஒருவர் பாடும் போது மற்றவர்  ரசிப்பார்  ஊக்கபடுத்துவர்     அதுவும் பார்க்க நன்றாக இருக்கும். அதோடு   பக்க  வாத்தியகாரர்கள்  இவர்கள் பாட்டுக்கு இன்னும் அழகு  சேர்த்தனர்  அதனால் நான் இந்த கச்சேரியில் மயங்கி  போனேன்
இவ் அருமையான கச்சேரியை நிறைவு செய்வதற்கு  “அபங்கில்”  ஒரு மிகவும் ஆழமான் கருத்துள்ள பாடலை பாடினார்கள்இதை பாடுவதற்கு முன்னரே இப் பாட்டில் அடங்கியுள்ள கருத்தை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தனர்.  அவர்கள் கூறிய கருத்து என்னவேன்றால்,  ஒருவர், தங்களை விட குறைந்த நிலையில் இரு பவர்க்கு  உதவும் போது அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவன் போல் மதிக்கபடுகிரார்.  அப்படி உதவி செய்பவரை நாம்  "சாது "  அன்று போற்றவேண்டும் என்று  கூறி இப் பாடலை பாடினார்கள். சங்கீத உலகிலே அபாங் என்ற கவி நடையில் அமைந்த பக்தி பாடல் பாடுவதில் ரஞ்சினியும் காயத்ரியும் திறமை மிக்கவர்கள். இதனால் ரசிகர்கள் இன்னும் ஒருa’ அபங்” பாடும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டதால் அவர்களால் பாட முடியவில்லை.  அத்துடன் அவர்க ளுடைய  கச்சேரி நிறைவு பெற்றது.
இப்பிடியான  மிகவும் அருமையான  கச்சேரியை கேட்பதற்கு மிகவும்  அதிஷ்டமுள்ளவராகிறேன்.   வேறு பல நாடுகளில் சிட்னியை விட பல சங்கீத ரசிகர்கள் இருக்கின்றனர்.   அவர்களுக்கு அதிகமாக  பல வருடங்களுக்கு ஒரு முறை  ஒரு சங்கீத விழாவிற்கு போயிருப்பர்.   அனால் சிட்னியை போல இவர்களுக்கு  ஒவ்வொரு ஆண்டும்  ஒரு சிறந்த  சங்கீத விழா போவதற்கு  வாய் ப்பு பெறுவது மிகவும் குறைவு  என்ற காரணத்தினால் கடந்த ஒன்பது வருடங்களாக நடக்கும்  இந்த இசை விழாவில்  கலந்து கொள்ள நான்  மிகவும் கொடுத்து வைத்து  உள்ளேன்.


வெயிற்கால வியர்வைத் துளிகள்.. (கவிதை) வித்யாசாகர்

1
தெ
ருவோரம் ஒதுங்கிநின்றேன்
மழையில்லை
செருப்பறுந்தக் காலில்
சுட்டது வெயில்;

செருப்பின்றி எதிரே
மீன்கூடைச் சுமந்துபோனாள் கிழவி
சுட்டது மனம்!
--------------------------------------------------------------------

2
தா
கத்திற்கு
பெப்சி வாங்கப்போனேன்
பசிக்கு
பிச்சைக் கேட்டு
நிற்கிறது ஒரு குழந்தை!!
--------------------------------------------------------------------

எழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை முருகபூபதிஇலக்கியப்பிரவேசம்   செய்த  காலப்பகுதியில்  சென்னை   வாசகர் வட்டம்   வெளியிட்ட அறுசுவை  என்ற  ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற   நூலைப்படித்தேன்.   அதில்  சார்வாகன்  என்ற  பெயரில் ஒருவர்  அமரபண்டிதர்  என்ற  குறுநாவலை   எழுதியிருந்தார்.
அவர்   ஒரு  மருத்துவநிபுணர்  என்ற  தகவல்,   நான் அவுஸ்திரேலியாவுக்கு  வந்த பின்னர்தான்  தெரியும்.   அவர் தொழு நோயாளர்களுக்கு  சிறந்த  சிகிச்சையளித்தமைக்காக  இந்திய அரசினால்   பத்மஸ்ரீ  விருதும்  வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டவர். எங்கள்    மூத்த  தமிழ்  அறிஞர்  கி. இலக்ஷ்மண  அய்யரின் துணைவியார்   பாலம்  அவர்களின்  ஒன்றுவிட்ட  சகோதரர். மெல்பனுக்கு   அவர்  வந்தபொழுது   எனக்கு  அறிமுகப்படுத்தினார் திருமதி  பாலம்  லக்ஷ்மணன்.
 சார்வாகன்  அவரது  இயற்பெயரல்ல.  அந்தப்  புனைபெயரின் பின்னாலிருந்த   கதையை    தமிழக  சார்வாகனே   சொன்னார்.
மகாபாரதத்தில்    குருஷேத்திர  களத்தில்  கௌரவர்களை   அழித்து வெற்றிவாகைசூடிய   பாண்டவர்கள்,   தருமருக்கு  பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில்    அந்தச் சபையிலிருந்து  எழுந்து  அந்த  வெற்றியின் பின்னாலிருக்கும்    பேரழிவை   சுட்டிக்காண்பித்து  கடுமையாக விமர்சித்தவர்   சார்வாகன்  என்ற  முனிவர்.   அவரது  கூற்றால் வெகுண்டெழுந்த  மக்கள்  அவரை    அடித்தே  கொன்றுவிட்டார்களாம். சார்வாக  மதம்  என்ற  புதிய  கோட்பாடு  உருவானது  என்றும் பாஞ்சாலியும்   அந்த   மார்க்கத்தை  பின்பற்றியதாக  கதை இருப்பதாகவும்   சார்வகன்  என்ற  புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர்    ஸ்ரீனிவாசன்  சொன்னபொழுது  மகாபாரதத்தின் மற்றுமொரு  பக்கத்தை   தெரிந்துகொண்டேன்.

ஒரு ஆண்டு நிறைவாகிறது! ’’விழுதல் என்பது எழுகையே’’என்ற பெருந் தொடர்கதை  26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக  வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது  என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.

விழுதல் என்பது எழுகையே பெருந் தொடரின்  50வது வாரம்
விழுதல்  என்பது எழுகையே (அவுஸ்திரேலியா) அருண் விஜயராணி  தொடர்ச்சி பகுதி 50  கதை தொடர்கிறது.


உடம்பு அடித்துப் போட்டால் போல் இருந்தது
இன்றைக்கு வேலைக்குப் போகவேண்டாம் ஆறுதலாக எழும்பி ஆறுதலாகக் கோப்பி குடித்து ஆறுதலாகச் சாப்பிட்டு ஆறுதலாக சுடு தண்ணீரில் ஆசை தீரக் குளித்து வெளிநாட்டுக்கு வந்த நாளில் இருந்து இந்த ஆறுதல் என்ற வார்த்தையே மறந்து விட்டது போல் இருந்தது. சீலன்  எழும்பி வேலைக்கு வரமுடியவில்லை என போன் பண்ணிட்டு  மறுபடியும் கட்டிலில் வந்து  விழுந்தான்.
குமரன் யாழ்ப்பாணம் போவதாக சொல்லி இருந்தான்.
அம்மாவுக்கு ஒரு நல்ல சீலை அப்பாவுக்கு வேட்டி தங்கச்சிக்கு ஒரு நல்ல வடிவான காஞ்சிபுரம் இவ்வளவும் இண்டைக்கு கடைக்குப் போய் வாங்க வேண்டும்.

இலங்கைச் செய்திகள்


20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி

வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ

சனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்

பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை

புலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி

09/06/2015 அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூல வரைபை பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்த நிலையில் அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

உலகச் செய்திகள்


நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

ஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிப்பு

ஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள்; 18 பேர் உயி­ரி­ழப்பு

மண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்..!நீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

08/06/2015 அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா

காக்கா முட்டைதமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது மிக குறைவு. அப்படி குழந்தைகளை வைத்து படம் பண்ணினாலும் அந்த குழந்தைகளின் குழந்தை தனம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.அதேபோல விருதுகள் வாங்கிய படம் என்றால் அது திரையரங்குகளுக்கு செல்லுபடியகாது என்றும் ஒரு எழுதப்படாத விதியுள்ளது, ஆனால் இவ்விதிகளை உடைத்துள்ளது இந்த காக்கா முட்டை!
கதை
சென்னை குப்பத்தில் வாழும் 2 சிறுவர்கள், சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டை (ஆம், படத்திலும் இதே பெயர்தான்) குடும்பத்துக்கு உதவ முடியாத சூழலில் இருக்கும் அப்பா, குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமக்கும் அம்மா, பாசமிகு பாட்டி, ரயில்வேயில் வேலை செய்யும் இவர்களின் பெரிய நண்பனான பழரசம், இவர்கள் மட்டும்தான் இவர்களின் சொந்தம்.
குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டவர்கள், ஒரு முறை அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் திறக்கப்பட்ட பிட்சா (Pizza) கடையையும், தொலைக்காட்சியில் வரும் பிட்சா விளம்பரத்தையும் பார்த்த சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடவேண்டும் என ஆசை எழுகிறது.
அதற்காக தாங்களே அதற்கான தொகையை தயார் செய்ய பல வேலைகளை செய்கிறார்கள். பிறகு அந்த தொகைக்கு பிட்சா வாங்க செல்கிறார்கள்.ஆனால் குப்பத்தில் வாழும் சிறுவர்களான இவர்களை உள்ளே விடமறுக்கிறார் கடையின் மேலாளர்.
அதனால் எற்படும் அவமானம், அதை வீடியோ எடுக்கும் மற்றொரு சிறுவன் அந்த வீடியோ பிறகு Viral ஆக பரவ இதை சாக்காக வைத்து கொண்டு ஆதாயம் தேடும் இரு குப்பத்து இளைஞர்களும் அக்குப்பத்தின் MLAவும்,. சின்ன பிரச்சனையை ஊதி பெரிதாக்கும் ஊடகம்.
இப்பிரச்சனையிலிருந்து வெளிவர துடிக்கும் கடை முதலாளி, இதைப்பற்றி எதுவும் தெரியாமல் தங்கள் உலகத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கும் இரு காக்கா முட்டைகள், பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை!
நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்
இந்த படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவருக்கும் இது முதல் படம்போல யாருக்கும் தோன்றாத அளவில் நடித்திருக்கிறார்கள், பல முன்னணி நடிகர்கள் கூட இவர்களை போல எதார்த்தமாக நடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி.
பிட்சா டெலிவரி செய்ய வந்தவரை நிறுத்தி பிட்சாவை காண்பிக்க சொல்லும் போதும், பிட்சா வாங்க பல வேலைகள் செய்து சம்பாதிக்கும் போதும், பானிபூரிக்கு பதில் உடைகளை Deal பேசி வாங்கும் காட்சிகளில் அவர்களின் எதார்த்த நடிப்பிற்கு ஈடு இணையில்லை.
இவர்களின் தாயாக நடித்த ஐஸ்வர்யாவை பாராட்டாமல் இருக்கவே முடியாது இவ்வளவு இளம் வயதிலேயே தாயாக நடிக்க பல நாயகிகள் மறுத்துவரும் நிலையில் அதை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றியடைந்திருக்கிறார். சிறுவர்களின் பாட்டி, பிட்சாவிற்க்கு பதில் தோசையில் Decorate செய்து தரும் காட்சியில் செம லூட்டி!
இவர்களை தவிர ரமேஷ் திலக், பாபு அந்தோனி அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களாக சிம்புவை திரையில் காணாத ரசிகர்களுக்கு இவரின் சிறப்புதோற்றம் ஒரு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது,
”நம்ம வீட்டு Address என்னமா?” ”சேரி பசங்கன்னா உள்ள விடமாட்டாங்களா?” என்ற கேள்விகள் மனதை நெருடுகின்றன.இரு சிறுவர்கள், அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் அதனால் எற்படும் விளைவுகள் என சாதாரண கதை களத்தை எடுத்துக்கொண்டு மிக அழகாக இந்த காக்கா முட்டையை அடை காத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகண்டன்.
இவரின் நடிகர்கள் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதினால் காட்சிகளை வடிவமைத்தற்க்கு மிகவும் உதவியுள்ளது. மிகக் குறுகலான சேரி வீதிகளையும், கால் நீட்ட முடியாத சிறு வீட்டையும் கூவம் ஆற்றங்கரையையும் மிக எதார்த்தமாக படம் பிடித்துகாட்டியிருக்கிறார்.
இப்படத்தில் முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் எதுவும் கிடையாது! ஆம் இந்த படத்தில் இடைவேளை என்றே ஒன்று கிடையாது, இடைவேளை இல்லாமல் எடுத்து அதில் வெற்றியடைந்ததுக்கும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்!
படத்தின் நீளம் வெறும் 109 நிமிடங்கள் மட்டுமே அதை மிக எளிமையாகவும் மிக அழகாகவும் நமக்கும் விருந்து அளித்திருக்கிறார் எடிட்டர் கிஷோர். இவரின் மறைவு தமிழ் சினிமாவிற்க்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது.
படத்தின் கதை போக்கிற்கேற்ப அழகாகவும், அளவாகவும் இசையமைத்திருக்கிறார் ஜீ.வி பிரகாஷ் குமார். பின்னணியும் சரி பாடல்களும் சரி மனதை வருடுகிறது.
க்ளாப்ஸ்:
இரு காக்கா முட்டைகளின் எதார்த்த நடிப்பும் மற்ற எல்லா நடிகர்களின் ஒத்துழைப்பும் இயக்குனரின் எளிமையான கதை.
அதை மிக நேர்மறையாக கையாண்ட விதம்.ஜீ.வி பிரகாஷ் குமாரின் அழகான இசை.
பல்ப்ஸ்:
”இவை தேவைதானா” என்று யோசிக்கவைக்கும் சில இடங்கள்!
மொத்ததில் ஒரு எதார்த்த குழந்தைகளுக்கான சினிமாவான இந்த காக்கா முட்டை தமிழ் சினிமாவை கௌரவப்படுத்தும் ஒரு உன்னத படைப்பு!
ரேட்டிங்: 3.75 / 5     நன்றி  cine ulagam