மரண அறிவித்தல்

                  திருமதி சரஸ்வதி அம்மா செல்லையா 
        ஓய்வு பெற்ற ஆசிரியை புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி

நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி அம்மா செல்லையா அவர்கள் 20.10.2010 புதன்கிழமை காலமானார்.
அன்னார் அமரர் இளையதம்பி செல்லையாவின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான சிவக்கொழுந்து சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான இளையதம்பி சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம் சென்ற நடராஜா, லக்சுமிப்பிள்ளை, தியாகராஜா, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் கலாராணி, மோகன், ஜெயகௌரி, கேதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும் திருச்செல்வம், சறோஜினி, ஜெயக்குமார், கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும் விசாகன், வாகீசன், ஸ்ருதி, ஆதித்தியா, அபிநயா, பைரவி, வைஷ்ணவி, விதூசன், கேஷினி ஆகியோரின் ஆசைப் பேத்தியும் முத்துலிங்கம், சிவபாக்கியம், ரட்ணசிங்கம், பழனித்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்
தொடர்புகளுக்கு

திருச்செல்வம் (மருமகன்) 612  9484  1239 ,  61 0408 188 155

மோகன் (மகன்)  905 - 294 - 5887
ஜெயக்குமார் 612 - 9634 – 2152 & 61 427 110 235
கேதீசன் (மகன்) 0409 407 684 அல்லது 02- 9873 2500


Viewing
Date:      22/10/2010 Friday
Time:      6pm to 9pm
Venue:    Macquarie Park Cemetery    
              Magnolia Chapel
  (Cnr Plassey Rd & Delhi Road
              North Ryde
Final Rituals
Date:      23/10/2010 
Time:      9am to 11am
Venue:    Lot103 Colbarra Place
 West Pennant Hills                    
Cremation
Date:      23/10/2010 Saturday
Time:     12.30pm
Venue:    Macquarie Park
              Camellia Chapel
              Cnr Plassey Rd & Delhi Road
              North Ryde

அவுஸ்ரேலிய செய்திகள்

.
இனவெறிச் செயலில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய போலீசார் 4 பேர் டிஸ்மிஸ்


இனவெறிச் செயலில் ஈடுபட்ட போலீசார் 4 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். 5 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இனவெறி இ-மெயில்களை சுற்றுக்கு விட்ட 15 போலீஸ்காரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலியாவில் போலீஸ் துறையில் வேலை செய்பவர்கள் மத்தியில் ஒரு இ-மெயில் மூலமாக ஒரு வீடியோ கிளிப்பிங் சுற்றுக்கு விடப்பட்டது. அந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது. அதில் ரெயிலில் கூட்டமாக இருக்கிறது. இதனால் ரெயில் கூரை மீதும் மக்கள் பயணம் செய்கிறார்கள். ரெயில் ஒரு நிலையத்தில் நின்ற போது கூரை மீது பயணம் செய்த ஒருவர் எழுந்து நிற்கிறார். அப்போது அவர் தலைக்கு மேலாக செல்லும் மின்சார கம்பியை தன் ஒரு கையால் பிடிக்கிறார். இதில் மின்சாரம் தாக்கி அவர் பலியாகிறார்.

ஆன்மீக கருத்துரை

உலகச் செய்திகள்

.

1. இந்திய தூதரகத்தின் அலட்சியம்-பாஸ்போர்டடைத் தொலைத்த சென்னை பெண் விமான நிலையத்தில் மரணம்

 2. தாய்லாந்தில் தேடுதல் நடவடிக்கை; 130க்கும் அதிக இலங்கையர் கைது

1.   இந்திய தூதரகத்தின் அலட்சியம்-பாஸ்போர்டடைத் தொலைத்த சென்னை பெண் விமான நிலையத்தில் மரணம்

துபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் பீபி லுமடா. 40வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.

தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

ஒரு ரசிகையின் பார்வையில் MELODIC RHYTHMS

.
கடந்த 9ம் திகதி மாலை ஆறு மணிக்கு நூலக மண்டபம் ஒன்றில் நடன விருந்தொன்றுக்கு அழைப்பிதழ் வந்திருந்தது.பிரபல நாட்டிய ஆசிரியையும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 'பண்பாட்டுக் கோலங்கள்' என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து அளிப்பவருமான திருமதி கார்த்திகா கணேசரின் மாணவிகளின் நடன நிகழ்ச்சி அது


சிலி நாட்டின் மிக மகத்தான மாபெரும் மனிதநேய உலக சாதனை

.


உலக சாதனைகளிலேயே மிகவும் மகத்தான மாபெரும் சாதனையை நிலை நாட்டியிருக்கிறது சிலி நாடு.  தங்கச் சுரங்கத்துக்குள்  சிக்குண்டு இறந்து விட்டனர்  எனக்கருதப்பட்ட 33 தொழிலாளர்களை 68 நாள்கள் மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.  சிலி நாட்டின் இந்த மனிதநேய சாதனை, இதற்கு முன்னர் உலகின் வேறெந்தத் தேசத்தினாலும் அடையப்படாத ஒன்று
உலக வரலாற்றிலேயே,  ஏன் மனித வரலாற்றிலேயே  சிலியின் சாதனை பிரமிக்கத்தக்க ஒன்றாகும்

உள்ளங்கள் இரண்டு கவிதை

.

ஒண்றணக் கலந்த
உன்னத நாள் நினைவுகள் இன்று
உணர்வுகள் அலைபாய
கண் இமைகள் நடனமாட
இதயம் இசை போட
இன்பத்தில் நான் மகிழ்ந்து
ஒரு நொடி ஊமையான
அந்த நாள் நினைவுகள்.
அன்பான துனைவி எனக்கு
ஹலாலாக தாரமான தத்துவனாள்
இன்னாள் எங்கள் திருமண நாள்

நியூ சவுத் வேல்ஸ் மாநில சமூக ஒத்துழைப்புத் திட்டம்

.
SydWest Multicultural Services Inc., உடைய செய்திகள்

(New South Wales Community Partners Program) (CPP)
பல்கலாசார மற்றும் பன்மொழி சமூகத்தினரை

முதியோர் கவனிப்பு சேவைகளுடன் தொடர்புபடுத்துதல்
(Connecting Culturally and Linguistically Diverse Communities to Aged Care Services)

அவுஸ்திரேலிய அரசினது ‘உடல்நலம் மற்றும் மூப்படைவு திணைக்கள’த்தின் முயற்சி
(An initiative of the Australian Government Department of Health and Ageing)

தமிழ் சினிமா

.
*கைமாறிய 'சுல்தான்'கவலையை உதறிய ரஜினி
*மலையாளப் படத்தில் நடிக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்!
*நடிகர் விஜய் செய்த உதவி மரணத்தை வென்ற சிறுவன்

கைமாறிய 'சுல்தான்'கவலையை உதறிய ரஜினி
.

எந்திரனுக்கு முன்பே துவங்கப்பட்டு எந்திரனுக்கு பிறகும் இழுபறியில் கிடந்த படம் சுல்தான் தி வாரியர். என்னென்னவோ நினைத்து படத் தயாரிப்பில் இறங்கிய சவுந்தர்யா ரஜினி, இப்படத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடம் வாழ்நாள் முழுக்க தாக்குப்பிடிக்கிற அனுபவம்! அவரது திருமணத்திற்கு பிறகு சுல்தானின் போக்கில் திடீர் முன்னேற்றம்.



நண்பேன்டா படித்துச் சுவைத்தது

யநண்பேன்டா  படித்துச் சுநண்பேன்டா  படித்துச் சுவைத்தது வைத்தது ன்னலூnanடே விரிசல் கண்ட வட்ட நிலவு                                                     அருண் மதுரா


காட்டெருமை சைவம். ஆனால், அது எதிர்ப்படும் மனிதர்களைத் துவம்சம் செய்து விடும் காரணமில்லாமல். வாழ்க்கையில் பல தருணங்களில் காட்டெருமைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டு. அவற்றைத் தூரத்தே கண்டு ஓடிவிடுவதே அறிவு, எனினும், மாட்டிக் கொள்வதே விதி.
அப்படி ஒரு தருணத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. துக்கத்தை இன்னும் கொஞ்சம் பிசைந்தால், சந்தோஷமா அழலாம் என்பது சுந்தர ராமசாமியின் அழகிய வரி. அனிச்சையாக பண்பலை வானொலியைச் சொடுக்க, நட்பின் தேசிய கீதமான அப்பாடல் ஒலித்தது.
“உள்ள மட்டும் நானே உசுரக் கூடத் தானே
என் நண்பன் கேட்டா, வாங்கிக்கன்னு சொல்லுவேன்;

சச்சின் புதிய சாதனை - டெஸ்ட் கிரிக்கெட்டில் 14,000 ஓட்டங்கள்:

.
டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ஓட்டங்களை கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.

பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

சச்சின் இதுவரை 171 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 சதங்களையும், 57 அரைச்சதங்களையும் பெற்றுள்ளதோடு இதுவரை 14002 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் அதிகபட்ச ஓட்டமாக 248 ஓட்டங்களை பெற்றமை குறப்பிடத்தக்கது.


இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் - பாகம் 10

.

பின்பு 2ஆம் இராஜேந்திரன் காலத்தில் அவனது மூத்த புதல்வனும் பெரு வீரனுமாகிய இராஜேந்திர சோழன் இலங்கேஸ்வரனாக முடிசூடிக் கொண்டான். இலங்கேஸ்வரன் உத்தம சோழன் என்னும் சிறப்புப் பெயர் கொண்டு வழங்கப்பட்டான்.

அவனது அதிகாரிகளில் ஒருவனாகிய பல்லவராயன் என்னும் மூவேந்தன் வேளான் அநுராதபுரத்திலே புத்தமித்திரனின் பெயரால் சைத்தியமும் பள்ளிகளும் எழுப்பி, போதிசிறி ரமணவர் எனும் சங்கநாயகருக்கு வனப்புடைய குடையொன்றினையும் கவிபீலிச் சயனத்தையும் வழங்கினான் என்று கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள சாசனம் குறிப்பிடுகின்றது.



தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் நூற்றாண்டு விழா

.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நாளை 14ஆம் திகதி காலை மாலையென இரண்டு நேர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. காலை அமர்வுகள் அதிபர் திருமதி. சிவமலர் அனந்தசயனன் தலைமையில் பாவலர் துரையப்பா மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

ஆன்மீகம்

.

                                                          நம்மாழ்வார்
"அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது"  அத்தகய மானிட பிறவியின் பயனை மறந்து நாம் அற்ப ஆசைகளில்  நாட்டம் கொண்டு அந்த பகவானை பல சமயங்களில் மறந்தும் விடுகிறோம். ஆனால் அந்த பக்த ரக்க்ஷகனோ  நம்மை எப்போதும் மறப்பது இல்லை. நம்மை வழிநடத்த  பல அடியார்களை யுகம் தோறும்  ஆவதரிக்க செய்கிறார். இப்படி அவரை  எளிய முறையில் அடைய  வழி  கட்டியவர்களில் நம் ஆழ்வார்கள் முதன்மையானவர்கள் . அவர்களில் " நம்மாழ்வார் " என்று பிரியமாக கருதப்பட்ட நம்மாழ்வார் பற்றியும் அவரின் சீடரான மதுரகவி ஆழ்வாரை பற்றியும் இந்த வாரமும் அடுத்த வாரமும் காண்போம்.

இந்திய கிரிக்கெட் வெற்றியால் காட்டம்- கேம்ஸ் வில்லேஜ் அறைகளை சூறையாடிய ஆஸி. வீரர்கள்

.

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியை 2-0 என்ற வெற்றிக் கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி சூறையாடியதைப் பொறுத்துக் கொள்ள முடியாத காமன்வெல்த் போட்டிக்காக வந்திருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், கேம்ஸ் வில்லேஜ் அறைகளை சூறையாடினர். சச்சின் டெண்டுல்கரையும் சரமாரியாக விமர்சித்து திட்டியுள்ளனர்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு: மொழிபெயர்ப்பு அரங்கு

.
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கும் இடம்பெறவுள்ளது.

குறிப்பிட்ட அரங்கில், கண்காட்சிக்காக இதுவரையில் வெளியான தமிழ் - ஆங்கில, ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. படைப்பாளிகள் மற்றும் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சியினால் ஏற்கனவே வெளியான நூல்களை அனுப்பிவைக்கலாம்.

சிறுகதை, நாவல், கவிதை, வரலாறு, சிறுவர் இலக்கியம் மற்றும் பிறமொழி இலக்கியங்கள் இக்கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல்களை இக்கண்காட்சியில் இடம்பெறச்செய்வதற்காக எழுத்தாளர்களினதும் மொழிபெயர்ப்பாளர்களினதும் ஆதரவு கோரப்படுகிறது. எனவே மொழிபெயர்ப்பு நூல்கள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கண்காட்சி முடிவுற்றதும் உரியமுறையில் அவை அனுப்பிவைக்கப்படும்.

மொழிபெயர்ப்பு நூல்களை 20-12-2010 ஆம் திகதி முன்பதாக அனுப்பவேண்டிய முகவரி:

International Tamil Writers Forum

3 B, 46th Lane, Colombo-06. Srilanka.

மேலதிக விபரங்களுக்கு:

திக்குவல்லை கமால்
00 11 94 38 22 92 118

E.Mail:  international.twfes@yahoo.com.au

editor@gnanam.info
dickwellekamal@gmail.com

மருத்துவம்

.
காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?


நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா ? நிச்சயம் முடியும் .

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
 

கிரிக்கெட்

.
இந்தியா ஆஸ்திரேலியவை  கிரிக்கெட்டில் இரண்டு தடவையும்  தோற்கடித்தது  இந்தியா கவாஸ்கர் போர்டர் விருதுவை தன்வசம் ஆக்கியது

ஆஸ்திரேலிய டொலர் அமெரிக்க டொலரோடு சம நிலைக்கு வந்துள்ளது