செ. பாஸ்கரன்
அன்சாக் நாள் (Anzac Day) அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 25ம் நாள் நினைவுகூரப்படுகிறது. இவ்வருடம் 95 வது நினைவு நாளாக நினைவுகூரப்படுகிறது. 1915ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ம் திகதி அவுஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் பிரித்தானிய பேரரசின் கூட்டுப்படையாக சேர்ந்து கொண்டு முதலாம் உலகப் போரின்போது துருக்கி மீதான போர் நடவடிக்கையில் இறங்கியது. துருக்கிக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் என்ன பிரச்சனை என்ற ஒரு கேள்வி எழுகின்றது.
நான் இரசித்த இதமான ராகங்கள்
. திருமதி கார்த்திகா கணேசர்.
வருடா வருடம் ஈழத்தமிழர் கழகத்தால் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் சேர்க்கப்படும் நிதி ஈழத்தில் அல்லல் உறும் உறவுகளுக்கு அனுப்பப்படும். அது மட்டுமல்ல கழகத்தவர் உணவு தயாரித்து விற்பது போன்ற தொண்டுகளைச் செய்து நிதிதிரட்டுவது அதையும் சொந்த நாட்டிலே வாழும் மக்களின் துயர் துடைக்கவே. அல்லல் படும் எமது மக்களின் துயர் துடைக்க உழைக்கும் இந்த தொண்டர்களின் சேவை பாராட்டபட வேண்டியதே.
இவ்வருட கலை நிகழ்ச்சியாக நடந்ததோ "இதமான இராகங்கள்" என்ற இசை நிகழ்ச்சி.

சைவமன்றம் நடாத்தும் இராப்போசன விருந்து 2010
மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதி சேகரிப்பதற்காக வருடா வருடம் சைவ மன்றத்தினால் நடாத்தப்படும் இராப்போசன விருந்து இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி ஞாயிற்றுகிழமை இடம் பெற இருக்கிறது.
'சுழலும் தமிழ் உலகம்" நூல் வெளியீடு
.
கலாநிதி சந்திரலேகா வாமதேவா எழுதிய சுழலும் தமிழ் உலகம் (30 கட்டுரைகள்) என்ற நூல் வெளியீட்டு விழா மே மாதம் 01 ஆம் திகதி 2010 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஹோம்புஷ் ஆண்கள் உயர்நிலைப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவிருக்கின்றது.
சமுதாயத்தோடு சம்பந்தப்படுகின்ற பலவகையான பார்வைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருகிறது சுழலும் தமிழ் உலகம். இதன் ஆசிரியரான கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்கள் இலங்கையின் பிரபலமான எழுத்தாளரான இலங்கையர்கோன் அவர்களின் மகள் என்பது பெருமைக்கான விடயம். இலங்கையர்கோனின் வெள்ளிபாதரசம் என்ற சிறுகதை நம் நெஞ்சத்தை விட்டகலாத ஒன்றாகும்.

பேர்த் மாநிலத்தில் நிலஅதிர்வு
.
சென்ற செவ்வாய்க்கிழமை 20 – 04 – 2010 மாலை 8.17 மணிக்கு நிலஅதிர்வு கணக்கின் படி 5 என்ற அளவில் கல்கூர்லியிலிருந்து (Kalgoorlie) வடமேற்குத் திசையில் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கோல்ட்பீல்ட் (Goldfield) என்ற இடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது.

இனியமாலைப் பொழுதில் ஒரு இசை வேள்வி
.
திருமதி கனகாம்பிகை ஜெகநாதன்
சென்ற ஞாயிற்றுக்கிழமை 18 – 04 – 2010 அன்று சிட்னி Silverwater Road Bahai Centre மண்டபத்திலே அவுஸ்திரேலிய கம்பன் கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இசைவேள்வி நிகழ்வு நடைபெற்றது. அதில் உலகப்புகழ் திரு ராஜேஸ் வைத்தியா அவர்களின் வீணைக்கச்சேரி அரங்கேறியது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் உள்ளடக்கி காலத்தால் அழியாத இலக்கியமாகக் கம்பன் காவியம் விளங்குகின்றது. கம்பன் பெயரால் இயங்கும் கம்பன் கழகம் அவுஸ்திரேலியாவில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டு இருப்பது பெரிதும் மகிழ்வு தருவதாகும். கடந்த 4 ஆண்டுகளாக இசைவேள்வி என்ற நிகழ்வுகள் மூலம் சிறந்த இசை நிகழ்ச்சிகளை சிட்னி வாழ் கலா இரசிகர்களுக்கு அளித்து வருவது பெரிதும் போற்றுதற்குரியது.

பகவத் கீதை
.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய!
வணக்கம். மீண்டும் தங்களை இந்த பகுதியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற வார கட்டுரை குறித்து தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி.
இந்த காலத்தில் நம் வாழ்க்கை மிக வேகமாக உருண்டோடுகின்றது. சமையலாக இருந்தாலும் சரி, படிப்பாக இருந்தாலும் சரி அல்லது விளையாட்டாக இருந்தாலும் சரி - எல்லாவற்றிலும் நாம் விரைந்து செயல்பட வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம். நமக்கென்று நாம் ஒதுக்கி வைக்கின்ற நேரம் குறைந்து கொண்டே வருகின்றது. இது முக்காலமும் அறிந்த அந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிக நன்றாகத் தெரியும். அதற்காகவே அவர் நம்முடைய நலனை கருத்திற்கொண்டு, இப்படிப் பட்ட சூழலில் வாழும் நம்மை வழி நடத்திச் செல்ல பகவத் கீதையை பாடி இருக்கிறார். வேதங்களின் சாரமான இந்த நூலை வணங்கி நம்முடைய இந்த முதல் பாடத்தைத் துவக்குவோம்.

வாழும் போதே கௌரவிப்பு! ஈழத்து படைப்புலகின் நண்பன்:திரு.பத்மநாப ஐயர்.
.
முல்லைஅமுதன்
வாழும் போதே கௌரவிக்கிற நிகழ்விற்கு பொருத்தமானவர்களில் முதலிடத்தை பெறுபவர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள். ஈழத்து இலக்கிய உலகில் பன்முகப் பார்வை கொண்டவர். நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்து சக்தியாக விளங்குபவர். பதிப்பு, படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதின் திறமை, திசைகளெங்கும் வருகிற படைப்புகளில் தரமானவற்றை பலரையும் படிக்க வைப்பதிலும் முன் நிற்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெளியீட்டு துறையில், ஆக்கங்களை தொகுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவது நமக்கு கடவுள் தந்த கொடையாகும்.

முற்றத்து நினைவும் உள்ளத்து ஆதங்கமும்
இனிய பல படைப்புக்களை வழங்குவதுடன் என் உள்ளத்து ஆதங்கத்தையும் வெளிப்படுத்தக் களம் அமைத்த தமிழ் முரசு பத்திரிகைக்கு என் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சோனா பிறின்ஸ்
‘‘பிள்ள எழும்பு கோயில் மணிஅடிச்சிட்டு” இந்த வார்த்தைகள் தான் என்னை அதிகாலையில் கண் விழிக்கச் செய்யும். நான் மட்டுமல்ல எங்கள் ஊரில் உள்ள அனைவருமே கோயில் மணி ஓசை கேட்டுத் துயில் எழுவார்கள் என்றால் அது மிகையாகாது.
அம்மம்மாவை இறுகக் கட்டியணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் என்னை அதிகாலை 5 மணிக்கு அடிக்கும் கோயில் மணியைச் சொல்லி அம்மம்மா எழும்ப வைப்பா. எனக்கோ சிணுக்கம் வந்துவிடும், உடனே ‘கொஞ்ச நேரம் அம்மம்மா என்று கெஞ்சத் தொடங்குவேன். ஆனால் அவவோ விடமாட்டா அது போலத்தான் படுக்கைக்கு போவதற்கு முன்பாக, அவவிற்கு அருகில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு சிறிய சிறிய செபப்புத்தகங்கள் வைத்திருப்பா அவை அனைத்தும் சொல்லி முடிக்கும் வரை. “அம்மம்மா நித்திரை வருகுது” என்றாலும் விடமாட்டா. எல்லாம் சொல்லாமல் படுத்தால் “நடுச்சாமத்தில் பேய்வந்து கண்ணைக் குத்தும்” என்று பயங்காட்டியே எல்லாம் சொல்லி முடிக்கும் வரை விழித்திருக்க வைத்துவிடுவா. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது தான் இருக்கும். அப்போதே “பின் தூங்கி முன் எழுவாள்” என்பது போல்தான் என் தூக்கம்.

திருமுறை முற்றோதல்
திருமுறை முற்றோதல்
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்
உலக சைவப் பேரவையின் அவுஸ்த்திரேலியாக் கிளையினர் கடந்த நான்கு வருடங்களாக திருமுறை முற்றோதலை ஓவ்வொரு மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமைகளிலும்; காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடாத்தி வருகின்றனர். அத்துடன் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை திருமுறைகளிலுள்ள ஒரு பதிகத்திற்கு பொருள் கூறப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றது. முதல் நான்கு திருமுறைகளும் முற்றோதல் செய்யப்பட்டு 04.04.2010 ஞாயிற்றுக் கிழமை முதல் ஐந்தாம் திருமுறையின் முற்றோதல் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 02.05.2010 ஞாயிற்றுக்கிழமை பத்தொன்பதாவது பதிகம் தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.
சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18,000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.
இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை (Cnr Burlington Rd & Rochester St)
நேரம்: 02.05.10 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.15 முதல் 10.15 வரை
பேராசிரியர் விஜயலட்சுமி ராமசாமி
((M.A., M.Ed., Ph.D.).)
அவர்கள் வழங்கும் சமயச்சொற்பொழிவு
“திலகவதியாரும் திருநாவுக்கரசரும்”
காலை 10.30 முதல் 12.30 வரை
திருமுறை முற்றோதல்
மேலதிக விபரங்களுக்கு:
திரு க சபாநாதன் Tel: 96427767
திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு மா அருச்சுனமணி Tel: 87460635
கெவின் ரட்டிற்கும், ஜோன் ஹோவார்டிற்கும் இடையில் வேறுபாடில்லை – விக்டர் ராஜகுலேந்திரன்
.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் கெவின் ரட்டிற்கும், முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவார்டிற்கும் இடையில் எவ்வித வேறுபாடுமில்லை என அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் செயலாளர் விக்டர் ராஜகுலேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் விவகாரத்தில் இரண்டு பிரதமர்களுமே ஒரே விதமான கொள்கையையே பின்பற்றி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் அமைப்புக்களினால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு அவுஸ்திரெலிய நிர்வாகம் செவிசாய்ப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அகதிகள் தொடர்பான அண்மைய நிலைப்பாடு பெரும் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தர்ப்பவாத அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் அவுஸ்திரேலிய தொழிற்கட்சி, தமிழர்களை நிர்க்கதியாக்கியுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
ஜோன் ஹோவார்டின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட நிலைமைகளை முற்று முழுதாக மாற்றி அமைப்போம் என வாக்குறுதி அளித்தே, தொழிற்கட்சி ஆட்சி பீடேமேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் தேர்தல்கள் நடைபெறவுள்ள காரணத்தினால் சகல கட்சிகளும் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் என அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் கன்பரா டைம்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை எனவும், அகதி அந்தஸ்து கோருவோருக்கு ஊக்கமளிக்க வேண்டாம் எனவும் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம அவுஸ்திரேலியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குளோபல் தமிழ் செய்திகள்
வீடுகளிலும், மற்ற பொது இடங்களிலும் முதியோர் சேவை
Auburn Tamil Society NSW Inc. Unity-Love-Selfless Service auburntamilsociety.org.au
அன்புள்ள நண்பர்களே ,
எனது பெயர் ஸ்ரீ வித்தியா ஹரிலிங்கம் உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் . நான் நியூ சௌத்வேல்ஸ் சமுதாய கூட்டுறவு திட்டத்தினதும் ஓபன் தமிழ் கழகத்தினதும் செயல் திட்ட அதிகாரியாக பணிபுரிகிறேன்.
நமது ஆஸ்திரேலிய அரசாங்கம், முதியோர் சுகாதார இலாகா மூலம், பல நிறுவன ங்களுக்கு நிதி உதவி வழங்கி, மொழி, கலாச்சார, ரீதியாக பின்தங்கியிருக்கும் முதியோருக்கு உதவி புரிந்து வருகிறது. இந்த முதியோர் சேவை, முதியோர் வீடுகளிலும், மற்ற பொது இடங்களிலும் வழங்கப்படுகின்றது.
இந்த முதியோர் திட்டத்தின்கீழ்தான், தமிழை தாய் மொழியாகக் கொண்ட முதியோரின் தேவைகளை பூர்த்திசெய்ய என்னை நியமித்திருக்கிறார்கள் .
ஆங்கில மொழி அறியாத அன்பர்களுக்கு நமது சமுதாயத்தில் நடக்கும் பல கலாச்சார, சமய நிகழ்ச்சிகளைப் பற்றி தெரிவிப்பது, கல்வி, பொது அறிவு செய்திகள் - இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது. இவை யாவும் அடுத்த சில மாதங்களில் துவங்கப்பட விருக்கின்றன .
எல்லோரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கு பெற வேண்டுமெண்பதே எங்கள் அவா . இவைகளைப்பற்றி இன்னும் அறிய விரும்புவோர், கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
தொடர்வுகொள்ள வேண்டிய முகவரி:
SREE VITHYA HARILINGAM
TAMIL PROJECT OFFICER
COMMUNITY PARTNERS PROGRAM
SYDWEST MULTICULTURAL SERVICES INC-CALDACI PROJECT
SUITE 9, 125 MAIN STREET BLACKTOWN 2148
PO BOX 869 BLACKTOWN 2148
TEL: (02) 8825 3739
FAX: (02) 9621 4702
WEB: www.sydwestmsi.org.au
E-mail: sree@sydwestmsi.org.au

அவுஸ்திரேலியாவிற்கான தமிழ் படகுப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் ‐ பாலித கொஹணே
.
சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் வரவேற்கத் தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்ட அமுலாக்கத்தினால் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைப்பு காட்டும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையினால் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோருவோர் வேறும் நாடொன்றை இலக்கு வைத்து படையெடுக்கக் கூடுமென அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்த அவுஸ்திரேலியாவின் தீர்மானத்திற்கு இந்தோனேஷியா வரவேற்பு
இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்ற அவுஸ்திரேலியாவின் தீர்மானத்தை வரவேற்பதாக இந்தோனேஷிய அரசாங்கம் அறவித்துள்ளது.
மனித உரிமை அமைப்புக்கள் இந்தத் தீர்மானம் குறித்து அதிருப்தி வெளியிட்ட போதிலும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் நடமாட்டத்தை இதன் மூலம் தடுக்க முடியும் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் தெகு பயிசயா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் பிராந்தியத்தில் சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக மலேசியா, இந்தேனேஸியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தீர்மானத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திச் செல்லும் நபர்களது நடவடிக்கைகளை வரையறுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாட்டி வைத்தியம்
.
மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.
மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்:
1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.
2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.
அறிகுறிகள்:
மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.
முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.
முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம்.
முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும்.
பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.
கைவைத்தியம்:
1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.
2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.
3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.
5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.
6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும்.
இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.
7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.
உணவுப்பழக்கம்:
வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும்.
காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.
கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்
தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

Subscribe to:
Posts (Atom)