மரண அறிவித்தல்

                               திரு அலோசியஸ் ஜெயமன்னன் (ஜெயம்) 

                                         
                    தோற்றம் : 8 செப்ரெம்பர் 1942 மறைவு : 10 யூன் 2011

தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சூராவத்தையை யும் , கொழும்பு வத்தளையையும்  வதிவிடமாகக் கொண்ட அலோசியஸ் ஜெயமன்னன் அவர்கள் வத்தளையில் 10-06-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.  அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் இராசமணி தம்பதிகளின் அன்புமகனும்,  டொறின் செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,  ஜெயச்சந்திரா(அவுஸ்திரேலியா), ஜெயக்குமார்(கொழும்பு), ஜெயரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  ஆன் வதனா, டெலினா, சங்கீதா ஆகியோரின் மாமனாரும்,  ஜெடன்,   ஜொகான், ஜொஆன், ஜென், ஜெனோசினி, ஜெனேமி, ஜொவான்சி, அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

ஜெயச்சந்திரா ஒஸ்ரேலியா 0415934591

பிறந்தநாள் வாழ்த்து

அபிதாரணி சந்திரன்


விக்டோரியாவில் பக்கனம் பகுதில் வசிக்கும் அபிதாரணி சந்திரன் தனது ஏழாவது பிறந்தநாளை 15/6/2011 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்.

இவரை அப்பா,அம்மா,அண்ணன் துவாரகன் மற்றும் அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், அத்தை, அன்ரி, சித்தப்பா ஆகியோர் சீரும் சிறப்புமாகப் பல் கலையும் கற்றுப் பல்லாண்டு

வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்


சிட்னி தமிழ் அறிவகம் நடாத்திய கொடிவார விழா- கரு

.

யாழ் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்வதற்காக சிட்னி தமிழ் அறிவகம் கொடிவார விழாவை கடந்த சனிக்கிழமை யூன் மாதம் 4ம் திகதி ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலையில் மாலை 6 மணிக்கு நடாத்தியது. 
படப்பிடிப்பு: சோதிராஜா


இவ்விழாவை திரு திருமதி ஞானசேகரம் அவர்கள் மங்கள விளக்கேற்றி தொடக்கிவைத்தார்கள்.

காலையும் அவள் கனவும் -கவிதை -செ.பாஸ்கரன்.


.

காலை இளம் சூரியனும்
கண்விழித்து தரைபார்க்க
காவிரியின் நீரலைகள்
காய்ந்த நிலம் பாய்ந்துவர
சேவலொன்று விடிந்ததற்காய்
செய்தியொன்றை சொல்லி நிற்க
சேயிழையாள் கண்மலர்ந்து
புலர் பொழுதைப் பார்த்திருப்பாள்.
நாளை வரும் காதலனின்
நிலைவலைகள் பரந்துவிட
நாணி முகம் சிவந்து கொள்வாள்
ஜன்னல் இடைவளியே
வந்து விழும் வானம்
விரட்டியது யாரென்று
தலை தூக்கிப் பார்த்திடுவாள்

சேக்கிழார் விழா

.
சைவமன்றமும் உலக சைவப்பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையும் இணைந்து நடாத்தும் சேக்கிழார் விழா

19-06-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி

கல்வி, கலை, இலக்கியம் சங்கமித்த எழுத்தாளர்விழா 2011


.
                                                                                                               -ரஸஞானி-


அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பனில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி பிரஸ்டன் நகரமண்டபத்தில் சங்கத்தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிட்னியிலிருந்து பிரபல எழுத்தாளரும் சீர்மிய செயற்பாட்டாளருமான திருமதி கோகிலா மகேந்திரன், கம்பன் கழக ஸ்தாபகரும் தமிழ்க்கல்வி போதனாசிரியரும் இலக்கியவாதியுமான திரு.திருநந்தகுமார், மற்றும் பேர்த்திலிருந்து நூலகம் பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு. கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்து உரையாற்றினார்கள்.

இலங்கை இந்தியச் செய்திகள்

.
#சென்னை சேத்துப்பட்டு அடுக்குமாடி வீட்டில் பயங்கரம்: தாய், 2 மகள்கள் தீக்குளித்து சாவு
இலங்கை மீது பொருளாதாரத் தடை தமிழக சட்டசபையில் தீர்மானம்
ஜெயலிலிதாவை எப்படி கையாளப் போகிறது அரசாங்கம்?


கடந்த 60வருட காலமாகத் தமிழர்கள் எவ்வாறு கொன்று குவிக்கப்பட்டார்கள் என்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லையா?
                                                                                 - ஜூட் லால் பெர்னாண்டோ

இன்று, முள்ளிவாய்க்காலிலும் அதேபோல் மற்றும் பிற இடங்களிலும் கொல்லப்பட்ட ஆயிரமாயிரம் தமிழர்களின் மரணத்துக்காக எங்கள் இதயங்களின் அடிநாளத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறோம். அவர்கள் யார்? அவர்கள் எங்கள் அழகான பிள்ளைகள். வீரமிக்க எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள், பிரியத்துக்குரிய நமது பெற்றோர் மற்றும் மூதாதையர், ஆனால் அவர்களின் புதைகுழிகள் எங்கேயிருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை.

மெல்பேர்ன் மாநகரில் உரும்பிராய் இந்துக் கல்லூரி நூறாவது ஆண்டுவிழா

  .

 கடந்த சித்திரை மாதம் 3 ம் திகதி (03 .04 .2011 ) பார்ம்ஸ் உணவகம் சின்டலில் நூறாவது ஆண்டுவிழாவை   உரும்பிராய் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடினார்கள்.பழைய மாணவர் திரு.சற்குணம் அவர்கள் தமது பாரியாருடன் மங்கள விளக்கு ஏற்றி வைக்க கல்லூரி கீதத்தினை அனைவரும் இசைத்தனர்.



இசை விழா - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்


.

சிட்னியில் யூன் மாதம் 11, 12, 13ம் திகதிகளில் இசை விழா. இவ்வாறு புலம் புயர்ந்த நாட்டிலே இசை விழா. எந்தவித பிரச்சனையும் இல்லாது நம்மை தேடி இசைவிழா வந்தது நாம் செய்த பாக்கியம்தான்.

இசைவிழா எனும்போது என்மனதிலே அலைபோதும் இனிய பழய ஞாபகங்கள். அதை உங்களுடன் பகிர்வதில் ஒரு திருப்தி ஏன் ஆனந்தம் என்றே கூறலாம். நான் எனது குருநாதர் ஆன வழுவூரார் வீட்டிலே குருகுல  வாசம் செய்த காலத்து அனுபவங்கள் பலப்பல.

இடப்பெயர்வு - உருவகக்கதை -முருகபூபதி



.

அந்தக்கிராமத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்த ஒதுக்குப்புறமான நிலப்பரப்பில் வீட்டுக்கழிவுகளும் குப்பைகளும் குவியத்தொடங்கியதும் எங்கிருந்தோ வந்த கோழிக்கு மிகுந்த கொண்டாட்டமாகிவிட்டது.
அந்தக்கோழிக்கு தாராளமாகவே தீனி கிடைத்தது. குப்பைமேட்டுக்கு தானே ராஜா என்ற இறுமாப்புடன் அன்றாட உணவுதேடி வரும் காகங்கள் பட்சிகளை களைத்துவிடும். குப்பைமேட்டில் கொட்டப்படும் சமையலறைக்கழிவுகள்  யாவும் தனக்கே சொந்தமானது என்ற மனப்பாங்கில் பறவைகளை அந்தப்பக்கம் அந்தக்கோழி அண்டவிடுவதில்லை.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்து


..
                                                                  -தேவி திருமுருகன், மெல்பேண்.

மேலை நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மொழிக்கும், தமிழ்க்கலைக்கும் ஆற்றிவரும் அளப்பரிய தொண்டுகளுக்கு மற்றுமொரு சான்றாகக் கொள்ளக்கூடிய வகையில் பாரம்பரியத் தமிழ்க்கலைகளில் ஒன்றான தென்மோடி நாட்டுக்கூத்தினை அண்மையில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடாத்தியமை அமைந்தது.

கிராமங்களில் வட்டக்களரியில் ஆடப்படும் நாட்டுக்கூத்து மேடை நிகழ்ச்சியாகப் பரிணாமம் பெற்றபோது, இலங்கையில் பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் அதனைப் பேணி வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் பெற்றன.

மாபெரும் திருநாளும் , மண்ணின் நினைவுகளும்

   .       
ஆனிமாதம் பதின்மூன்றாம் திகதி வந்தாலே போதும் ,பாஷையூர் மண் திருவிழாக் கோலத்தினால் களைகட்டத் தொடங்கி விடும் . கடல் அலையில் துள்ளிவிளையாடும் மீன்கள் பாடும் பாட்டையெல்லாம் ,சோழகக் காற்று கரையை நாடி சுமந்து வரும் . தம்திருவிழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று போலும் கடல் வளங்களை
அந்த நாட்களில் அதிகம் அதிகம் வாரி வழங்குவார் , எம் ஊரின் காவலராக வீற்றிருக்கும் புனித அந்தோனியார் ."என் சீடர் என்பதற்காக இவர்களுக்கு ஒரு குவளை தண்ணீர்
கொடுப்பவர்கள் அதன் பலனை அடையாமல் போகமாட்டார்கள் "என ஆண்டவராகிய இயேசு திருவாய்மலர்ந்தார் . 

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

.
பாகம் 2

அனைவரும் ஒன்றே:

ஜீசஸ் கூறினார்: என் அருமை மகனே அனைவரும் ஒன்றே அதனால் அனைவருடனும் ஒரே மாதிரியாகப் பழகு அனைவரும் இதே தாய் மண்ணில்தான் பிறந்தோம். இதே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். இதே நீரைத்தான் பருகிறோம். அப்படியிருக்கையில் ஏன் இந்த வேற்றுமைகள் எல்லாம்? அனைத்து வேற்றுமைகளையும் உதறிவிட்டு, ஒற்றுமையுடன் வாழுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உள்ளதென உணருங்கள். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிராமங்களுக்குச் சென்று, தேவையானவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்யலாம். கிராமப்புற முன்னேற்றத் திட்டங்களை செயல் படுத்தலாம். அவ்வாறு செய்வதால் நீ ஏதோ பெரிய சேவை செய்துவிட்டதாக நினைக்காதே. உண்மையில் சொன்னால், இதெல்லாம் உன்னுடைய கடமை. நீ சேவை செய்வதற்கு பிறந்தவன். ஆகவே பிறருக்குச் சேவை செய்வதில் உனது வாழ்நாளைச் செலவிடு. பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஏக்கப்படாதே. யார் சேவகனாக இல்லையோ அவனால் நாயகனாக (தலைவனாக) விளங்க முடியாது. உண்மையில், ஒரு உண்மையான சேவகனே உண்மையான நாயகன்.

காதல் - திருமணம் என்ன வித்தியாசம்?

.

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, “அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கேஉனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது”என்றார்.

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சை

.

உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.
தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான்.

பதினொராவது எழுத்தாளர் விழா(2011) -கவிதை

.

அவு/தமிழ் இலக்கிய கலை சங்கம்
ஆண்டுக் கொரு தரம் கூடும்
எழுத்தாளும் மனங்கள் எல்லாம்
ஏங்தி நிற்கும் விழாக் கோலம்

கருத்தரங்கு, கவியரங்கு_நல்ல
கதை சொல்லும் சிறு அரங்கு
மழலைகளின் குரல் அரங்கு
மாணவர்க்கு தனி அரங்கு-எம்
மகளிர் தரும் சுவை அரங்கு
மகிழ்ந்து நிற்க உண்ணவரங்கு

மீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்

.
உயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும்,
வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல். ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான வாசனை அவைகளை மறைத்துக்கொண்டது எனலாம்.

உலகச் செய்திகள்





*டுனீசியா படகு விபத்தில் 200 பேர் பலி
*தென் சீனாவில் வெள்ளம்: 21 பேர் பலி
*ஜேர்மனி நாட்டு பண்ணையிலே இ -கோலி பிரச்சினை _
*இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 பேர் பலி 325 பேர் காயம்

fighting2ஜெருசலேம்:இஸ்ரேல்பாலஸ்தீன எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீன ஆர்வலர்கள் மீது இஸ்ரேல் துருப்புக்கள் மேற்கொண்ட துப்பாக்கி

பிரயோகத்தில் 25 பேர் பலியானதுடன் 325 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய கிழக்கு போரின் 44 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போதே இஸ்ரேல் படைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளன.

பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து தாம் குழப்பமடைந்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதுபோன்ற ஆர்ப்பாட்டம் கடந்த மாதம் நடைபெற்ற போது ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைகளைத் தாண்டிச் சென்றிருந்தனர்.இதனைத் தொடர்ந்து இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதைத் தடுப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தமிழ் சினிமா

.
எங்கேயும் காதல்


வாழ்க்கையில் எங்கேயும் எப்போதும் கமிட்டாகாமல் ஜாலியாய் இருப்பேன் என்ற முடிவோடு இருக்கிறார் ஒருவர்.

இவருக்கும் பாரிஸிலேயே பிறந்து வளர்ந்து இந்திய கலாச்சாரங்களில் ஊறியவள் என்று சொல்லப்படுகிறவளுக்கும் இடையே ஆன காதல் தான் கதை.

பார்த்த மாத்திரத்திலேயே ஹீரோவை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதன் பிறகு அவனைப் பற்றிய விவரங்கள் அவளுடய டிடெக்டிவ் அப்பாவின் கேஸ் ஃபைலினால் தெரிய வருகிறது. அதன் பிறகு அவனைக் காப்பாற்ற அவள் எடுக்கும் முயற்சியெல்லாம் பெரிய லாஜிக் சொதப்பல்கள். அதை சொல்ல முடியாமல் அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்றால் அவன் காதல் என்றால் காத தூரம் ஓடிவிடுபவன் என்று தெரிந்ததால். அவன் ஊருக்கு கிளம்பும் போது தன் காதலை தெரிவிக்காமல் இருந்து விடுகிறாள்.

அதன் பிறகு ஒரு வருடம் அவனுக்காக அவள் காத்திருக்கிறாள். அடுத்த வருட லீவுக்கு வரும் போது மீண்டும் சந்திக்கிறார்கள். அவனை இம்ப்ரஸ் செய்ய நெகட்டிவான ஒரு அப்ரோச்சை செய்து தன் காதலை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அவனுக்கு புரிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. ஜெயம் ரவியிடம் ஒரு கார்பரேட் லுக் இருக்கிறது ஆனால் அந்த வயதுக்கான இளமை துள்ளல் இல்லை. பிரபுதேவாவிடம் இருக்கும் ஒரு லைவ்லினெஸ் அவரிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கும் ஹன்சிகாவுக்குமிடையே நல்ல 'கெமிஸ்ட்ரி'.

6 இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிப்பு


.

தற்போதைக்கு ஆறு அல்லது ஏழு இலட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதனின் எச்சம் வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் கற்காலத்துக்கு முந்திய (lower paleoloithic) காலத்து மனிதன் இலங்கையில் வாழ்ந்திருப்பதற்கான உறுதியான தடயமாக அதனைக் கொள்ள முடியும் என்று தொல்பொருளியல் ஆராய்ச்சித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் ஹோமோ இரெக்டஸ் வர்க்க மனிதன் இலங்கையில் வாழ்ந்திருந்ததற்கான உறுதியான தடயம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கற்காலத்துக்கு முந்திய காலத்து மனிதன் பயன்படுத்தியதாக கருதப்படும் கற்கோடாரிகள் சில வடமராட்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதையடுத்தே தொல்பொருளியலாளர்கள் மேற்கண்ட அறிவித்தலை விடுத்துள்ளனர்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள கற்கோடாரியானது ஆச்சூலியன் ஆயுத கலாசாரத்தைச் சோ்ந்தவையாகும் என்றும் அவர்கள்  மேலும் குறிப்பிட்டுள்ளனர்.