23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்




.
21 சபைகளை கைப்பற்றி ஆளும் தரப்பு அமோக வெற்றி : கொழும்பு மாநகரசபை மீண்டும் UNP வசம்:-
01.

கொழும்பு மாவட்டம்- கொழும்பு மாநகர சபை
ஐக்கிய தேசியக் கட்சி 24 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 06 ஆசனங்கள்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 02 ஆசனங்கள்
ஜனநாயக ஐக்கிய முன்னணி 02 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு 02 - 01 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி - 01 ஆசனம்
சுயேட்சைக் குழு 01 - 01 ஆசனம்
02.
கொழும்பு மாவட்டம்- தெஹிவளை - கல்கிஸ்ஸ மாநகர சபை
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 16 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்கள்
ஜனநாயக மக்கள் முன்னணி 01 ஆசனம்
மக்கள் விடுதலை முன்னணி 01 ஆசனம்

Helensburgh ஸ்ரீ வெங்கடேஷ்வர கோவிலில் தேர்த் திருவிழா

.
இம் மாதம் 7 ம் திகதி வெள்ளிக்கிழமை ஹெலன்ஸ்பேர்க்  ஸ்ரீ வெங்கடேஷ்வரர்  கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க தேர்த்திருவிழா கோலாகலமாக இடம் பெற்றது . இரண்டாவது வருடமாக இடம் பெறும் இத் தேர்த்திருவிழாவில் ஸ்ரீ வெங்கடேஷ்வரர் ஆரோகணித்து வந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது . நாதஸ்வர இசை முழங்க சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.

இந்தியாவில் இருந்து பிரத்தியேகமாக அழைக்கப்பட்ட புகழ்பெற்ற விசேட நாதஸ்வரக்கலைஞர்கள் கலைமாமணி ஷேஷம்பட்டி சிவலிங்கம் அவர்களும், செல்வம் கண்ணன் அவர்களும், புகழ்பெற்ற விசேட தவில் கலைஞர்கள் கலைமாமணி திருப்பூங்கூர் முத்துகுமாரசாமி அவர்களும், வெல்லியம்பாக்கம் பழனிவேல் அவர்களும் ‘ வெங்கடேஸ்வரர் ஆலய பிரமோற்சவ திருவிழாவில் தொடர்ந்து 10 நாட்களும் தெய்வீக இசைமழை பொழிந்து சிறப்பித்தார்கள்.

மீண்டும் ஒரு தேர்தல் -ராம்கோ மாரிமுத்து


.

மீண்டும் ஒரு தேர்தல் வருகிறது!
வாக்காளனே!
உன் வாக்குகளுக்கு விலை கூறி
வாடிக்கையாளர்கள் வருவார்கள்!
வசமிழந்து விடாதே!

சிட்னி முருகன் கோவிலில் வாழை வெட்டு திருவிழா

.
சென்ற வியாழக்கிழமை சிட்னி முருகன் ஆலயத்தில் வாழை வெட்டு திருவிழா ( மானம்பூ ) மிக கோலாகமாக இடம் பெற்றது . நவராத்திரி விழாவின் போது இடம் பெற்ற இந்த திருவிழாவில் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு இறை அருள் பெறும் அற்புத காட்சியை கிழே படங்களில் காணலாம்.


சுருதி






MONA LISA வை சந்தித்தேன் -

.
                                                                                 நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
                                                                                         
இன்று உலகிலேயே அதிகப்படியாக பேசப்படும் ஓவியம் LEONARDO DA VINEI  என்ற 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஓவியரது MONA LISA ஓவியமே. இந்த ஓவியம் Paris தொல்பொருட்காட்சி சாலை Louvre இல் உள்ளது. அண்மையில் நான் Paris சென்ற போது Louvre காட்சி சாலையில் MONA LISA ஓவியத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. LEONARDO வரைந்த வேறு பல ஓவியங்களும் அங்கிருந்தது. இந்த ஓவியம் மட்டும் ஏன் பிரபலமானது. மற்ற ஓவியங்களில் காணாத அழகை இதில் காணவில்லை. அப்படிஇருக்க இதுமட்டும் ஏன் உலக பிரசித்தி பெற்றது என்ற கேள்வி எழுந்தது.



இலங்கைச் செய்திகள்


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

* ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் முதலில் ஜனாதிபதிக்கே அனுப்பப்பட்டன : விக்கிலீக்ஸ்


* இலங்கையில் மீண்டும் பிச்சைக்காரர்கள் கொலை'

* இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவது மட்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் பணியாகாது. அதற்கப்பால் மக்களுக்கான மனிதநேயப் பணியாற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும்.



கலாநிதி கந்தையாவின் ஆவணப் பணி- நடேசன்


.

அவுஸ்திரேலியாவில் 14 வருடங்கள் உதயம் இதழை நடத்திவிட்டு மூடிய பின்பு என்னிடம் இருந்த ஒளிப்படங்களைப் பார்த்தபோது அதிக அளவில் இருந்த படங்கள் கலாநிதி கந்தையாவுடையதாகும். உதயம் பத்திரிகையை ஆரம்பித்தபோது எனக்கு அறிமுகமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர்
சிட்னியிலிருந்து உதயத்திற்கு அடிக்கடி விடயதானங்களும் ஒளிப்படங்களும் அனுப்பிக்கொண்டிருந்த கலாநிதி ஆ.கந்தையா.           அண்மையில் சிட்னியில் காலமானார்.

உலகச் செய்திகள்

*  சோமாலியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்; 70க்கும் மேற்பட்டோர் பலி

* சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு: 17 பேர் பலி

* ஐ.நா. சபையில் இணையத் துடிக்கும் பலஸ்தீனத்திற்கு முதல் வெற்றி



ATBC யின் சரஸ்வதிபூசை


.
ஆஸ்திரேலியாவின் 24  மணி நேர தமிழ் வானொலியான ATBCசென்ற வியாழகிழமை நிலைய கலையகத்தில் சரஸ்வதிபூசை கொண்டாடியது .அன் நிகழ்வின்போது இடம் பெற்ற காட்சிகள் சிலவற்றை கீழே காணலாம் .

ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்

.
steve_jobs_நியூயார்க்: கம்ப்யூட்டர் உலகில் பல அரிய சாதனைகளைப் படைத்த ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் (வயது56) மரணமடைந்தார். புற்றுநோயால்அவதிப்பட்டு வந்த அவர் நியூயார்க் நகரில் மரணமடைந்தார். அறிவாளிகளும் சாதனையாளர்களும் நீண்ட காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இவருடைய மரணம் அமைந்துள்ளது.


வெள்ளைப்புறா ஒன்று...... க.நவம்

.

மனசு குதூகலித்தது!

'யுரேக்காஎனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது.

இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் - அதிலிருந்து திருட்டுத் தனமாகஎன்னையே ஆலிங்கனம் செய்யத் துருதுருக்கும் இரண்டு கண்கள் என்றபொன்வண்டுகள் - பொன்னை உருக்கி உச்சந்தலையில் வழிந்தோட வார்த்தாற்போன்று, பாளம் பாளமாகப் பளபளக்கும் கழுத்தளவோடிய காந்தக் கூந்தல் -இவையாவும் சேர்ந்து என் நிஷ்டையைக் குழப்பிவிட்டன.

'வாழ்நாள் பூராவும் அந்த அழகு தேவதையின் கடைக்கண் கடாட்ஷத்திற்காக,அவளது காலடியில் ஆயுட் கைதியாகவே கட்டுண்டு கிடக்கலாம்'

மனசு அங்கலாய்க்கிறது!

அந்த வெள்ளைக்காரப் பெண்புறாவின் தாபம் ததும்பும் கண்ணெறிகையைஎதேச்சையாகக் கண்டுகொண்ட கணம் முதலாக என் இதயம் பீரங்கியாய்,அவளுக்காக அடையாள அணிவகுப்பு மரியாதை வேட்டுக்களைத் தொடர்ந்தும்தீர்த்துக்கொண்டே இருக்கிறது.

மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 12


.
                                                                                  பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
அத்தியாயம் 12

ஊரைக் குறிக்கும் பாடல்கள்

சில பாடல்கள் எந்தெந்த ஊர்களில் வழக்கிலிருந்திருக்கக்கூடும் என்று ஊகிக்கத்தக்க வகையில் உள்ளன. ஊர்களைக் குறிப்பிட்டு அல்லது சம்பந்தப்படுத்தி வெளிப்படையாக வேறுசில பாடல்கள் காணப்படுகின்றன. அவ்வாறான பாடல்கள் சில தனியாக இப்பகுதியில் தரப்படுகின்றன.


கிரானிலிருந்து என்ர கிளி எழுதும் காகிதத்த
வாசித்துப் பார்க்க மனம் தாங்கக் கூடுதில்லை

கன்னிக் கிரான்குரவி கடுமழைக்கு ஆற்றாமல்
மி;ன்னிமின்னிப் பூச்சாலே விளக்கெடுக்கும் கார்காலம்

ஏறா வூரானென்று ஏளனமாய்ப் பேசாதடா
மோறா போட்டகத்தி-உன்ர, மூர்க்கத்திற்கு மருந்துகட்டும்

இலக்கியப்பரிசு 2011


.

.கு.சின்ன்னப்ப்பபாரதி அறக்கட்ட்டளை சார்பாக 2011 ஆம்ஆண்டு இலக்கியப்பரிசுக்காக தேர்வுசெய்யப்பட்டுள்ள நூல்கள்



முதன்மைப் பரிசு ரூபாய் ஐம்ப்பதாயிரமும் – விருது தமிழ் மொழி (பெறுபவர்)
1. வவுனியூர் .இரா.உதயணன் – லண்டன் நூல் – பனிநிலவு
பிறமொழி பின்னர் அறிவிக்கப்படும்.
சிறப்புப் பரிசு ரூபாய் பத்தாயிரமும் – விருதும் பரிசு பெறுபவர்கள நூல்-  வெளிநாடு
1. வி.ஜீவகுமாரன் – டென்மார்க் சங்கானைச் சண்டியன்
2. நாகரத்தினம் கிருஷ்ணா – பிரான்ஸ் மாத்தகரி
3. சை.பீர்முகமது – மலேசியா -பெண்குதிரை
4. நடேசன் – ஆஸ்திரேலியா -வண்ணத்திகுளம்
5. தெணியான் – இலங்கை ஒடுக்கப்பட்டவர்கள்
6. கே.விஜயன் – இலங்கை மனநதியின் சிறு அலைகள்
7. சிவசுப்பரமணியன் – இலங்கைசொந்தங்கள்