தாய் மண் பிரிவும் புலம் பெயர் வாழ்வும்

.

சாண்டில்யன்  (கந்தர் பாலநாதன்)

தாய் மண்ணில் அவதரித்தோம்,
மழலை பேசி பெற்றோருடன்
இடியப்பம், புட்டுண்டு மகிழ்ந்தோம்,
வயல் வெளியில் பாடித்திரிந்தோம்,
கல்லூரியில் நல்வழிகளைப் பயின்றோம்,
பல்கலைக்கழகம் சென்றோம்,
தொழிலில் இணைந்தோம்,
இந்நிலையில் பண வாசனை
எம் மூளையை தழுவியது,
பணம் கொள்ள புலம் பெயர்ந்தோம்,
சிலர் குழந்தைகள் கல்விக்கென
புலம் பெயர்ந்தோம்,
பண வாசனை தழுவிய பெற்றோர்
புலம் பெயர் வாழ்வில்
பணக் கொத்துக்களை கொண்டனர்,
குழந்தைகள் பெற்றனர்
கல்வியெனும் செல்வம்,
குழந்தைகள் தொழிலில் ஈடுபட
பிறந்ததே காதலெனும் பித்த வாசனை,


அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 2016

.


அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் கம்பன் திருவிழா 2016 அண்மையில் (21 - 23 /10),
கோலாகலமாக சிட்னியில் அரங்கேறியிருந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையிலிருந்து புகழ்பூத்த பேச்சாளர் கம்பவாரிதி இ. ஜெயராஜ், கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன், கவிஞர் வாசுதேவா மற்றும்,
தமிழ்நாட்டிலிருந்து புலவர் இரெ. சண்முகவடிவேல், பேராசிரியர் வி. அசோக்குமரன், அவுஸ்திரேலியத் தமிழறிஞர்கள்,
இளைஞர்கள், கவிஞர்களென பலரும் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து சிறப்புச் செய்திருந்தனர்.
புதிதாய் மலர்ந்த "கம்பன் சிறுவர் அரங்கம்" மற்றும் "கலை தெரி அரங்கம்" என்பன மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பட்டி மண்டபமும் வழக்காடு மன்றமும் மண்டபம் நிறைந்த தமிழ் நெஞ்சங்களுடன்
இலக்கியச் சுவையும் ஜனரஞ்சகமும் நிறைந்த நிகழ்வுகளாக அமைந்திருந்தன.

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலா!

.

இது குறித்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-‘சூப்பர் மூன்’ எனப்படுவது பூமிக்கு மிக அருகில் நிலவானது காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த நிகழ்வானது 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதாகும். இந்த ‘சூப்பர் மூன்’ கடந்த 1948- ம் ஆண்டு தோன்றியது. அதனைத்தொடர்ந்து தற்போது அனைவருக்கும் காட்சியளிக்க உள்ளது.நிலவானது பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. இந்த பூமியை சுற்றிவரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48 ஆயிரம் கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும்.தற்போது இதே போல் பூமிக்கு மிக அருகாமையில் வருகிற 14-ந் தேதி வந்து கடந்து செல்லும். இந்த ‘சூப்பர் மூன்’ துபாயில் அமீரக நேரப்படி மாலை 5.52 மணிக்கு முழுமையாக காட்சி தர உள்ளது. இந்த காட்சியை துபாயில் வசிக்கும் அனைவரும் காண முடியும். இந்த நிகழ்வு கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வந்ததைவிட சிறப்பானதாக இருக்கும்.


கந்தசாமியும் கலக்சியும் 19 11 2016

.

படித்தோம் சொல்கின்றோம் - ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும் -முருகபூபதி

.
மௌன வாசிப்பில் வெடித்தெழும்  சிரிப்பலைக்குள் மூழ்கும்  அனுபவம் தரும் நாவல்
 ஜே.கே.யின் கந்தசாமியும் கலக்சியும்
       
                                                                         
நவீன படைப்பிலக்கியப்பிரதிகளை நான்  வாசிக்கத்தொடங்கிய 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் ஒரு எழுத்தாளர், "இலக்கியம் படைப்பவர்களுக்கு கம்பராமாயணமும் கல்குலசும் ஓரளவாவது தெரிந்திருக்கவேண்டும்"  என்றார்.
அவுஸ்திரேலியாவில் எமக்கு  கணினி அறிமுகமானதன் பின்னர், எழுத்தாளர்களுக்கு  கம்பராமாயணம் முதல் கம்பியூட்டர் வரையில் தெரிந்திருத்தல் வேண்டும்  என்ற  நிலை வந்தது.
ஜே.கே. எழுதியிருக்கும் கந்தசாமியும் கலக்சியும் படைப்பை படித்ததும், மேலும் ஒரு படி சென்று கலக்சியும் தெரிந்திருக்கவேண்டியதாயிற்று.
ஒரு ஓவியக்கண்காட்சியில் பால்வீதியை சித்திரிக்கும் படத்தை பார்த்திருக்கின்றேன். பால்விதியில் கலக்சி வருகிறதாம்.  பார்த்ததில்லை.  ஜே.கே.யின் இந்தப்படைப்பில் பார்க்க முடிகிறது.  ஒரு நாவலாக தொடங்கினாலும்  நாவலுக்கே  உரித்தான  நேர்கோட்டுத்தன்மையில்  விரியவில்லை.
இன்றைய திரைப்படங்களும் நேர்கோட்டுத்தன்மையில் வெளியாவதில்லை.  அதனால் 1950 -  60  களில் வெளியான தமிழ்ப்படங்களின் கதைகளை அம்மாவின் வாயால் கேட்டதுபோன்று தற்காலப்படங்களின்  கதைகளை  கேட்கமுடியவில்லை.


கவி விதை - 18 - --விழி மைந்தன்--

.
அகதி



கடல் அலைகள் தாலாட்ட, களிப்பு மிகு கனவுகளோடு  தூங்கி வழிந்து கொண்டிருந்த கவின்மிகு குக்கிராமம் கண்ணன் துறை. வலையில் பட்ட மீன்களைத் தவிர வேறு யாரும் அங்கு வேதனைப் பட்டதில்லை.   குலை தள்ளிய வாழைகளை விட வேறெவரும் அங்கு  குனிந்ததில்லை. அலை கடலன்றி வேறு யாரும் அங்கே  அமைதி இழந்தது இல்லை.  ஆர்ப்பரிப்பைக் கடலுக்கு விட்டு விட்டு, அமைதியுடன் வாழ்ந்து வந்தனர் அவ்வூர் மக்கள்.

இந்தக்  குக்கிராமத்தில் பிறந்தவன் சேந்தன்.


தூங்கி வழிந்த கிராமத்தை  அடித்து எழுப்ப ஒரு விடி காலையில் விரைந்து வந்தது யுத்தம்.

அன்றைக்கு 'எழும்பியவர்கள்' இன்னும் போய்  இருக்கவில்லை. இருக்க முடியவில்லை!

சேந்தனின் குடும்பம், பக்கத்துக்கிராமமாகிய ஆளையடியில் உறவினர் வீட்டில் வந்து தங்கிற்று. அங்கும் யுத்தம் அவர்களைத் துரத்தி வந்த போது, சற்றுத் தூரத்தில் இருந்த செல்வபுரத்திற்கு வந்து சேர்ந்தது.

சேந்தனின் பெற்றோர் கொஞ்சம்  படித்தவர்கள். அவனது தந்தை, ஒரு சிறு பாடசாலையில் ஆசிரியராய் இருந்தார்.

சிட்னியில் நெல்லைக் கண்ணனின் இலக்கிய சந்திப்பு 19 11 2016

.
தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டு கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு. 
ஆஸ்திரேலியவில் முதல்முறையாக தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன்.
அனைவரும் வாரீர் திகட்டாத தமிழை அள்ளி பருகிட வாரீர்.




மோடியும் ஆயிரமும்



.

திரும்பிய பக்கமெல்லாம் பொருளாதார மேதைகளாக இருக்கிறார்கள். 

பணத்தை ஹவாலாவில் பதுக்கியிருப்பார்கள். தங்கமாக மாற்றியிருப்பார்கள். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்களை முடக்குவதால் சிறு குறு வியாபாரிகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று அடித்து நொறுக்குகிறார்கள். மோடியை நாகரிக கோமாளி என்றெல்லாம் எழுதித் தீர்க்கிறார்கள். மோடி எதைச் செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனநிலை தேவையற்றது. அவகாசமே தராமல், செய்தியைக் கசியவிடாமல் வைத்திருந்து ஒரே இரவில் ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்வது என்பது லேசுப்பட்ட முடிவில்லை. தைரியமான, அசதாரணமான முடிவு இது.

ஹவாலா என்பது இந்திய ரூபாய் தாள்களை அப்படியே கொண்டு போய் சுவிட்சர்லாந்தில் பதுக்குவதில்லை. இங்கேயிருக்கும் புரோக்கரிடம் நூறு கோடி ரூபாயைக் கொடுத்தால் அந்தப் பணத்தை அவன் வாங்கி வைத்துக் கொண்டு நாம் கைகாட்டுகிற வெளிநாட்டு ஆளுக்கு நூறு கோடி ரூபாய்க்கான அந்நாட்டுப் பணத்தைத் தரச் சொல்லி அங்கேயிருக்கும் ஹவாலா புரோக்கரிடம் நாம் பணம் கொடுத்து வைத்திருக்கும் புரோக்கர் சொல்வான். ஆக, ரூபாய் நோட்டுக்கள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றன. 

உலகச் செய்திகள்


அனைத்து அமெரிக்கர்களுக்கும் நானே ஜனாதிபதி : ஹிலாரிக்கும் நன்றி தெரிவிப்பு : வெற்றியின் பின்னர் டொனால்ட் 

 மன வேதனையை ஏற்படுத்தியுள்ள தோல்விக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் : சற்றுமுன்னர் ஹிலாரி உருக்கம் (காணொளி இணைப்பு)

கருப்பு பணத்திற்கு வந்த சோதனை ; மோடியின் அதிரடி அறிவிப்பு

செல்லுபடியாகாத 500 மற்றும் 1,000 ரூபா தாள்கள் : மக்களுக்கு ரிசர்வ் வங்கி ஆலோசனை.!

லண்டனில் இடம்பெற்ற டிராம் விபத்தில் 7 பேர் பலி ; பலர் காயம்

 “ட்ரம்ப் ஜனாதிபதி இல்லை” நியூயோர்க் உட்பட 7 நகரங்களில் மக்கள் கொந்தளிப்பு

மட்டக்களப்பில் குண்டுகள் மீட்பு.!




சிந்தையில் நிற்கும் சிட்னி திருவிழா

.
  

ஆங்கில நாட்டினிலே அழகுதமிழ் சபையேறி அனைவரையும் அணைத்து
நின்ற அதிசயத்தைச் சொல்லுகிறேன்.வெள்ளையர்கள் தாமும் விருப்புடனே
சேலையுடன் துள்ளுதமிழ் விழாக்காண துடிப்புடனே வந்துநின்றார்.நல்ல
தமிழ் பேசிநின்ற நம்முடைய பிள்ளைகளை நாலுபேர் அறிவதற்கு நற்சபை
யாய் அமைந்ததுவே !
   கவிகம்பன் விழாவினையே கருத்துடனே நடத்திநின்ற காளையரைக்
கன்னியயரை கனம்பண்ணல் முறையன்றோ.ஜெயராமின் துணிவாலும் பணி
வான குணத்தாலும் ஜெயமான விழாவாக அமைந்தமையை அறிந்திடுவோம்.
   யாழ்மண்ணில் நடக்கின்ற விழாவாக நான்கண்டேன்.ராஜ கதிரைகளும்
ராஜசபை அலங்காரமும் ஜோராக இருந்ததை யாவருமே ரசித்தார்கள்.
ஜெயராஜின் கற்பனைகள் சிந்தாமல்,சிதறாமல், அவரின் மனத்தைப் பிரதி
பலிப்பதாக மண்டப ஒழுங்கமைப்பு , அலங்காரம், வரவேற்று உபசரித்தல்,
அத்தனையும் அமைந்தமையைக் கட்டாயம் குறிப்பிடவே வேண்டும்.
     அக்கால மன்னர்கள் தமிழுக்கு உழைத்தோர்களைக் கெளரவித்து
அவர்களுக்கு குடை கொடி ஆலவட்டம் சகிதம் சபைக்கழைத்து பரிசில்கள்
வழங்கினார்கள் என்று இலக்கியங்கள் வாயிலாகப் படித்திருக்கின்றோம்.
  இக்காலத்தில் மன்னர்களுக்குப் பதிலாக அரசாட்சியாளர்கள் தங்கள்
மனம் போனபடி பாராட்டிப் பரிசளிப்பதையும் காண்கின்றோம்.ஆனால்
கம்பன்கழகம் போன்ற ஒரு அமைப்பு செய்வதைப்போல வேறு எந்த தமிழ்
அமைப்புகளும் இப்படி ஒரு கெளரவிப்பு விழாவினைச் செய்யவில்லை என்றே
கூறலாம்.

சதுரங்க வேட்டை -2 - வா.மணிகண்டன்



,

ஒரு காலத்தில் சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆசையிருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் போது ரஜினி மாதிரி ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம். எட்டாம் வகுப்பு படித்த போது ஆள் குண்டுமுட்டி மாதிரி ஆகியிருந்தேன். மன்சூர் அலிகானாக ஆகிவிடக் கூடும் என்று தோன்றியது. நல்லவேளையாக இப்பொழுது ஓமக்குச்சி நரசிம்மனாகியிருக்கிறேன்.

எங்கள் ஊர்தான் சின்ன கோடம்பாக்கம் ஆயிற்றே? ஒரே சமயத்தில் ரஜினி, விஜயகாந்த், சிரஞ்சீவி என்று பெரும் நட்சத்திரங்களின் படப்பிடிப்புகள் பக்கத்து பக்கத்து வயல்களில் நடப்பதைப் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்புகளை வாயைத் திறந்து பார்க்கும் போது நடிகைகளுக்கு அடுத்தபடியாக இயக்குநர்கள் மீதுதான் ஈர்ப்பு உண்டானது. எப்படியும் நடிகை ஆக முடியாது. ஆனால் இயக்குநர் ஆகிற களை முகத்தில் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தேன். சொல்லி வைத்தாற் போல அந்தச் சமயத்தில் பெரும்பாலான இயக்குநர்கள் கத்தரிக்கப்பட்ட தாடியுடன் தோள் மீது சிறு டர்க்கி துண்டை போட்டுக் கொண்டு விரட்டியடித்துக் கொண்டு இருந்தார்கள். அதற்காகவே விரைவில் தாடி முளைக்க வேண்டுமென்று வேண்டாத சாமி இல்லை. ஆனால் இன்று வரைக்கும் சீரான தாடி முளைக்கவேயில்லை. இயக்குநர் வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்ற முடிவுக்கு வருவதற்கு அது ஒன்று மட்டுமே போதுமானதாக இருந்தது.

1000 ரூபாய் நோட்டுகளால் மேலும் மாசுபடும் கங்கை?

.
மத்திய அரசு செல்லாது என்று அறிவித்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் ஏற்கனவே மாசுபட்டு கிடக்கும் கங்கை நதி மேலும் களங்கப்பட்டு விடுமோ? என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர்.
1000 ரூபாய் நோட்டுகளால் மேலும் மாசுபடும் கங்கை?
லக்னோ:

நடைமுறையில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின்னர் கணக்கில் வராத கருப்புப் பணத்தை பலர் தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் தங்களது வெறுப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உதயதாரகையிலிருந்து காலைக்கதிர் வரையில் - முருகபூபதி

.
( முற்குறிப்பு:    நேற்று   முன்தினம் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட   விடியலின் வீச்சு  சிறப்பு மலரில் வெளியான  கட்டுரை.   வடபுலத்திலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் காலைக்கதிர் நாளிதழின்  முன்னோட்டமாக வெளியானது  விடியலின் வீச்சு)

கல்லிலிருந்து கணினி வரைக்கும் பாய்ந்திருக்கும் மொழிகளில் தமிழ் தொன்மையானது. இந்தத்தொன்மையிலிருந்து உருவான  ஊடகத்துறையின் வளர்ச்சியில்  தமிழர்களின் வேட்கையையும் புரிந்துகொள்ள முடிகிறது.
விடியல் - உதயம்  முதலான  சொற்பதங்கள்  இயற்கையுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும் மனிதவாழ்வு மீதான நம்பிக்கையையும் சார்ந்திருக்கிறது.
இற்றைக்கு 175 வருடங்களுக்கு  முன்னர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையிலிருந்து வெள்ளிதோறும் வெளியான உதயதாரகையிலிருந்து இன்று வெளியாகும் காலைக்கதிர் வரையில் இலங்கையின் வடபுலத்திலிருந்து வெளியான பத்திரிகைகளின் பெயர்களிலும் மேற்குறிப்பிட்ட இயற்கையின் எழுச்சியை காணமுடிகிறது.
அன்று பல தசாப்தங்களுக்கு முன்னர் அச்சு ஊடகமாக வெளியான உதயதாரகைக்கும், இந்த யுகத்தில் மின் ஊடக கால கட்டத்தில் வெளியாகும் (அச்சுமுறைமையில் மாற்றங்கள் பலவற்றைக்கடந்துள்ள நிலையில்) காலைக்கதிருக்கும் இடையே நிரம்பவேறுபாடுகள் இருந்தபோதிலும், அவற்றின் நோக்கங்கள் ஒன்றாகவே திகழ்ந்திருக்கிறது.
மக்களுக்கு செய்தியை தருவது. அதிலும் உண்மையைத்தருவது. உண்மைக்கு சுடும் இயல்பும் இருக்கிறது.


இலங்கைச் செய்திகள்


ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியை சந்தித்தார்.!

'ஆவா குறூப்' சந்தேக நபர்கள் அறுவர் கைது; மூன்று முக்கிய சந்தேக நபர்கள் தலைமறைவு

 "மக்களை மதிக்காத மிருகமே போய் விடு" தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுநாயக்க விமானசேவைகள் ஜனவரி முதல் மத்தளையில் : எரான் தகவல்

பரோன்ஸ் அனிலேவை சந்தித்தார் இரா.சம்பந்தன்

யாழ் . அரசாங்க அதிபரை சந்தித்த கனேடிய பிரதிநிதிகள்

நிர்மாணிக்கப்பட்ட  கிளிநொச்சி பொதுச்சந்தை  முதலமைச்சரால் திறந்து வைப்பு 

ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் : விசாரணயில் CID அதிர்ச்சி தகவல்


பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்

.

பசளிக் கீரை­யா­னது ஆரோக்­கிய குண­முள்ள அற்­புத உண­வாகக் கரு­தப்­ப­டு­கி­றது.  இந்­நி­லையில் அதனை நிலக்­கண்­ணி­வெ­டி­களை கண்­டு­பி­டிக்கும் கரு­வி­யாக மாற்றி அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் புதுமை படைத்­துள்­ளனர்.
அவர்கள் பசளி இலை­க­ளுக்குள் நுண்­ கு­ழாய்­களை உட்­செ­லுத்தி அவற்றை வெடி­பொ­ருட்­களைக்  கண்­டு­பி­டிக்கும் உணர் ­க­ரு­வி­யாக மாற்­றி­யுள்­ளனர்.
இந்­நி­லையில் மேற்­படி பசளித் தாவ­ர­மா­னது எதிர்­கா­லத்தில் நிலக்­கண்­ணி­வெ­டிகள் உள்­ள­டங்­க­லான வெடி­பொ­ருட்­களை அகற்றும் கரு­வி­யாக நிபு­ணர்­களால்  பயன்­ப­டுத்­தப்­ப­டலாம் என  மேற்­படி கண்­டு­பி­டிப்பை மேற்­கொள்­வதில் பங்­கேற்ற  அமெ­ரிக்க மஸா­சுஸெட்ஸ் தொழில்­நுட்ப நிறு­வ­கத்தைச் சேர்ந்த பொறி­யியல் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.
அவர்கள் நிலக்­கண்­ணி­வெ­டி­க­ளிலும் ஏனைய வெடி­பொ­ருட்­க­ளிலும் பயன்­ப­டுத்­தப்­படும்  நைத்­தி­ரோ ­அ­ரோ­மற்றிக்ஸ் என்ற இர­சா­ய­னத்தைக் கண்­ட­றியும் வகையில் அந்த பச­ளிக்­கீ­ரையை வடி­வ­மைத்­துள்­ளனர்.
இந்த இர­சா­யனம் நிலக்கீழ் நீரில்  அவ­தா­னிக்­கப்­படும் பட்­சத்தில் பசளித் தாவர இலை­களில் உட்­செ­லுத்­தப்­பட்­டுள்ள நுண் குழாய்கள், அகச்­சி­வப்பு புகைப்­ப­டக்­க­ரு­விகள் மூலம் இனங்­கண்­ட­றி­யப்­ப­டக்­கூ­டிய ஒளிர்வு சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்தும்.
மேற்­படி புகைப்­ப­டக்­க­ரு­வியை ஸ்மார்ட் கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை ஒத்த அளவிலுள்ள சிறிய கணினியில்  இணைத்து பயன்படுத்த முடியும்.  அந்தக் கணினியானது பெறுபேற்றை  பயன்பாட்டாளருக்கு இலத்திரனியல் அஞ்சலாக அனுப்பி வைக்கும்.

500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களை மாற்ற வங்கிகளில் குவிந்த மக்கள்

.


நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகளில் திரண்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
ரூ.500 மற்றும் ரூ.1,000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், இந்த ரூபாய் தாள்களை வங்கிகளில் வைப்பு செய்து வரவு வைத்துக்கொள்ளலாம் என்றும், 4000 ரூபாய் வரை புதிய 500, 2000 ரூபாய் தாள்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்களிலும் இதுபோன்று ரூபாய் தாள்களை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. 
அதேசமயம் நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர்.  ஏ.டி.எம். நிலையங்களில் நாளை புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் தாள்கள்; வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நாடு முழுவதும் இன்று வங்கி திறக்கப்பட்ட நிலையில், பணத்தை மாற்றுவதற்காகவும், வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காகவும் வங்கிகளில் மக்கள் குவிந்துள்ளனர். காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் தாள்களை பெற்றுச் செல்கின்றனர்.

தமிழ் சினிமா

கடலை




சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்தவர் மா.கா.பா. ஆனந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் கடலை, இதில் ஐஸ்வர்யா இவருக்கு ஜோடியாக நடிக்க, பொண்வன்னன், யோகிபாபு, ஜான்விஜய் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

கதைக்களம்

பொண்வன்னனின் மகன் மா.கா.பா, தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ஹீரோவை போல் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறார்.
தன் மகனை எப்படியாவது விவசாயத்திற்கு கொண்டு வரவேண்டும், அது சம்மந்தமாக படிக்க வைக்க வேண்டும் என்று பொண்வன்னன் எண்ணுகிறார், ஆனால், மா.கா.பா அதையெல்லாம் கேட்கமால் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
ரியல் எஸ்டேட் செய்யும் ஜான் விஜய் 500 ஏக்கர் விவாசய நிலங்களை ஆக்ரமிக்க எண்ண, இதை பொண்வன்னன் தடுக்க நினைக்கின்றார்.
ஆனால், தன் கையை வைத்து தன் கண்ணை குத்தும் கதையாக மா.கா.பாவை பகடை காயாக ஜான் விஜய் பயன்படுத்த பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மா.கா.பா ஒரு நடிகனாக இந்த படத்தில் கொஞ்சம் முன்னேறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும், ஆட்டம், பாட்டம் என கலக்குகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஸிற்கு பெரிதும் சொல்லும்படி கதாபாத்திரம் இல்லை, ஆனால், யோகி பாபு தான் படத்தின் இரண்டாவது ஹீரோவே என்று சொல்லி விடலாம்.
இவர் திரையில் தோன்றினாலே ஆடியன்ஸ் சிரிக்கத்தொடங்கி விடுகின்றனர், தன் ஒன் லைனால் செம்ம அப்லாஸ் வாங்குகிறார்.
சாமின் இசையில் பின்னணி சூப்பர், பாடல்கள் மனதில் நிற்கவில்லை, ஒளிப்பதிவு கவர்கிறது.

க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு குறிப்பாக யோகி பாபு.
படத்தின் முதல் பாதி மற்றும் மெசெஜ்.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரைக்கதை தடுமாறுகின்றது.
மொத்தத்தில் ஒரு முறை கடலையை சுவைக்கலாம்.
Cast:

நன்றி  cineulagam