.
செல்வன் அஸ்வின் சண்முகலிங்கம் நியூசவுத்வேல்ஸ் மானிலத்தில் 91 புள்ளிகளைப்பெற்று தமிழ்ப் பாடத்திற்கான அதி கூடியபுள்ளிகளை பெற்றவர்
உயர்தர வகுப்புக்கான பரீட்சை முடிவுகள் சென்றவாரம் வெளிவந்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ்சில் தமிழை ஒரு பாடமாக உயர்வகுப்பில் எடுத்து சித்தியடைந்தது மட்டுமல்லாது 90இற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்று பாண்ட் 6 இல் தேறியுள்ளார்கள் தமிழ் மாணவர்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.
செல்வன் பிரணவன் சிவக்குமார்
செல்வி அஞ்சனா பாஸ்கரன்
வன்னி நிலம் கண்ணீர் வடிக்கிறது. செ.பாஸ்கரன்
.
வன்னிநிலமெங்கும் வாழ்விழந்த பெண்கள்
தேச மீட்பிற்காய் தேடிப்பிடித்ததினால்
பக்குவப் பட்டதும் படாததுமாய்
அவசரக் கல்யாணம்
குழந்தைகளே குழந்தைக்கு தாயான பெரும் துயரம்
காலிழந்து கையிழந்து கட்டியவன்தனை இழந்து
வாழ்க்கை வெறுமையிலே வாழுகின்ற பரிதாபம்
யார் எவரைத் தேற்றுவது.
சோகக் கதைகேட்டால் சொட்டுகின்ற கண்ணீரில்
வன்னி நிலம் நனைகிறது
படகில் தப்ப முயன்ற இலங்கை அகதிகள்
. ஆஸ்திரேலியாவுக்கு படகில் தப்ப முயன்ற இலங்கை அகதிகள் உள்பட 5 பேர் கைது நீலாங்கரை அருகே படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உள்பட 5 பேர்களை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து கைது செய்தனர். சென்னையை அடுத்த நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி கடற்கரையோரம் ஒரு வேனில் 10 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டு இருப்பதாக பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தந்தனர். அடையாறு துணை கமிஷனர் சாரங்கன் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி, நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். |
எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்
பகுதி 4
;.குறிகாட்டுவானில் கடற்படையினர் வாகன போக்குவரத்து ஒழுங்குகளையும் கார்ப்பார்க் ஒழுங்குகளையும் பார்க்கின்றார்கள். 25 இல் இருந்து 30 கடைகள் வரை காணப்படுகின்றது. இதில் 20 கடைகள்வரை தகரத்தால் கட்டப்பட்டிருக்கும் கடைகள் பெரும்பாலான அல்லது அனைத்துக்கடைகளுமே சிங்களவர்களினால் நடாத்தப்படுகின்றன. இனிப்பு வகைகள் புளுக்கொடியல் தொதல் போன்றவைதான் அதிகமாக காணப்படுகின்றது. இன்னும் 7 கடைகள்வரை நிரந்தரக் கட்டிடங்களால் ஆன கடைகள். இதிலும் இரண்டு கடைகள் தமிழர்களின் கடைகளாகவும் மற்றயவை சிங்களவர்களாலும் நடாத்தப்படுகின்றது. இதில் ஒரு கடை புங்குடுதீவில் பிரபல வியாபாரியாக இருந்த மணியம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் திருநாவுக்கரசு அவர்களுடையது. நான் 83 க்கு முன்பிருந்த நிலையை பார்க்கிறேன். திருநாவுக்கரசு அவர்களின் ஒரு கடையும் இரண்டு மூன்று கடலைக்கடைகளுமே இருந்த இடம் இன்று இப்படி இருக்கிறது.
அநுத்தமா — அரவிந்த்
.
அநுத்தமா காலமாகியதை முன்னிட்டு இந்த கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது
அநுத்தமா மனம் தளர்ந்தார். அநாயாச மரணம் கிட்டவேண்டும் என்பது அவர் பிரார்த்தனை. டிசம்பர் 3 இரவு 8.44 வரை நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், 8.45 க்குக் காலமாகிவிட்டார். கேட்ட வரம் எழுதியவருக்குக் கேட்ட வரம் கிடைத்துவிட்டது.
பரமாச்சாரியார் பாராட்டிய நாவல்! — திருப்பூர் கிருஷ்ணன்
பத்மநாபனை 12 வயதிலேயே கைப்பிடித்து புகுந்த வீடு வந்துவிட்டவர் ராஜேஸ்வரி. மாமனாருக்கு அவர் மகள் மாதிரி. மாமனாரிடம் முதல் சிறுகதையைப் படிக்கக் கொடுத்தார். தலைப்பு: ‘ஒரே ஒரு வார்த்தை’. கதையைப் படித்த மாமனார் சொன்ன ஒரே வார்த்தை: ‘பலே!’ லலிதா சஹஸ்ரநாமத்திலிருந்து அநுத்தமா என்ற பெயரைச் செல்ல மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டினார். அதன்பின் அநுத்தமா எழுதிக் குவிக்கலானார்.

வெளிச்ச வீடு --கவிதையும் படமும்-
திருவெம்பாவைச் சிறப்பு
.
பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா
இது மார்கழி மாதம். திருவெம்பாவைக் காலம்.
மாதங்களில் சிறந்தது மார்கழி என்பார்கள். மங்கையர்களுக்குப் பிடித்ததும் அந்த மாதமே என்பார்கள். சைவசமயத்தவர்களைப் பொறுத்தவரை உடலும் உள்ளமும் ஒருவகைத் தூய்மையை உணர்கின்ற மாதம். காரணம் அது திருவெம்பாவைக்காலம். அதிகாலைவேளையில் அயலவர்களோடும் உறவினர்களோடும் கூடி, ஆலயத்தை நாடி, திருவெம்பாவை பாடி, பக்தியிலும், மகிழ்ச்சியிலும் மூழ்கியிருக்கும் மாதம். மணிவாசகப் பெருமான் பாடிய திருவெம்பாவை மார்கழி மாதத்திற்கே ஒரு தனித்துவமான பண்பாட்டுக் கோலத்தை உருவாக்கிவிட்டது. சைவர்களின் பண்பாடாக மட்டுமன்றித் தமிழர்களின் பண்பாடாகவே அது வழங்குகின்றது, தமிழர்களிடையே இலங்குகின்றது.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்கள். அவ்வாறு கல்நெஞ்சத்தையும் கசிந்துருகவைக்கும் கனிவாக பாடல்களே திருவாசகப்பாடல்கள். அத்தகைய திருவாசகத்திற்கே மணியாக விளங்குவது திருவெம்பாவையாகும். திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்களைக் கொண்டது.

அவுஸ்ரேலிய செய்திகள்
வியாழன், டிசம்பர் 16, 2010
கிறிஸ்துமஸ் தீவில் அகதிகள் கப்பல் மூழ்கியதில் 28 பேர் உயிரிழப்பு
இலங்கையர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அவுத்திரேலியாவின் கிறிஸ்மசு தீவுக்கு அருகில் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் குறைந்தது 28 அகதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
42 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடலில் மரணமான பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் காணப்படுவதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்----திலகபாமா-
.
கூடுதலும், பிரிதலும் பின்னிப் பின்னிக் கோலங்களாகின்ற வாழ்க்கை இயல்பு என உணர்ந்து விட முடியா பொழுதுகள் எங்கள் கைவசமிருக்கின்றன குட்டியின் பிடனியை கவ்விக் கொண்டு அந்த நாய் வந்த போது பயத்தோடு ஒதுங்கியே நின்றேன். குட்டிகளோடு இருக்கின்ற எந்த உயிரினமும் தாக்கி விடக் கூடிய அபாயம் இருப்பதால் மனதில் பயம். நாய்கள் குட்டி போட்டதும் குட்டியை தின்று விடும் என்று அறிந்திருந்த தகவலும் நினைவில் வர குட்டியை தின்னுவதை காண நேர்ந்து விடுமோ அப்படித் தின்றால் என்னைக் கடித்ததை விட அதிக வலியாக தவித்துப் போவேனே எனும் அச்சம் இன்னும் அதிகமாய் இதயத்தை தடதடக்கச் செய்தது. உடலெல்லாம் உதிர்ந்த மயிரோடும் காயமுற்ற உடம்போடும் யாரும் விரும்பி வளர்க்கின்ற நாயல்ல என்பது நன்றாகத் தெரிந்தது ஒட்டிய வயிறு சூம்பிப் போன முகம் பாலூட்டும் உறுப்புகள் மட்டும் தன்னை நிறைத்துக் கிடந்தன.
ஸ்ரீ ஆண்டாள் வைபவம்
.
சென்ற வாரம் திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தை பார்த்தோம். இந்த வாரம் ஆழ்வார்களின் கடைசி ஆழ்வாரும், பெரியாழ்வரின் செல்ல பெண்ணும் ஆன
“ கோதை” என்னும் “ஆண்டாளின்” மஹிமையை பற்றி காண்போம்.
பூதேவி நாச்சியார் ஸ்ரீமன் நாராயணானிடம், ஸ்வாமி! பூலோகத்தில் தாங்கள் யார் மீது மிக்க அன்பு கொள்வீர்? என்று வினவினாள். அதர்க்கு பகவான் மனம் மகிழ்ந்து "யார் அழிவிர்க்கு உரிய உடலில் பற்று வைக்காமல், நம் மீது பக்தி கொண்டு பாமாலை பாடி பூமாலை சூட்டி வணங்குகிறானோ அவன் மேல் மிக்க ப்ரீதி என்று கூறுகிறார்.
வைகுண்டம் ரங்கமந்திரம் - ஷைலஜா
.
ஸ்ரீரங்கம்!
நினைத்தாலே இனிக்கும் பெயர்!
சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்வன் கேண்மினோ
என்று ஆழ்வார் பெருமான் அருளியதுபோல யார் என்ன நினைத்துக்கொண்டாலும் சொல்லத்தான் வேண்டும் ஆம், அரங்கன் என்றபெயரைக்கேட்கும்போது உடலில் மி(இ)ன் அலைகள் பாய்வதை உணரமுடிவதுபோல வேறெந்தப்பெயரும் தாக்குவதில்லைதான்!
திரும்பத்திரும்ப திருவரங்கம் போகிறாயே அலுக்கவில்லையா என்று சிலர் கேட்பார்கள். ஒவ்வொரு முறையும் அரங்கன் புதிதாய் நம்மை பிறக்கவைக்கிறானே !
நமக்காக அவன் சொர்க் கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறானே?
முரண் ---- சிறுகதை
.
- ஸ்ரீ -ஸ்ரீஸ்ரீஸ்ரீ ச்ப்டக்ப்ப்கஹ்ஹ்க்
"ஸ்... ஆ ஆ!" மெலிதாய் கூவினாள் கவிதா.
ஹாலில் முகச்சவரம் செய்துகொண்டிருந்த ரமேஷ், அவளது குரல் கேட்டு பதட்டமாய்ச் சமையலறைக்கு விரைந்தான்.
"என்ன ஆச்சு கவி?!"
"ஒண்ணுமில்லேப்பா, இட்லி குக்கர் திறக்கும்போது ஆவி கைல பட்டுடுச்சி" விரலை ஊதியவாறே சொன்னாள் கவிதா.
"ஹையோ, என்னம்மா இது, பார்த்து வேலை செய்யக் கூடாதா? இனிமே நீ சமையல் வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம ஒரு ஆளைப் போட்டுக்கலாம். முதல்ல கையைக் காட்டு, பர்னால் போட்டு விடறேன். சாயந்திரம் சரியாகலைன்னா டாக்டர் கிட்ட போகலாம். பரபரத்தான் ரமேஷ்.

ஷங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியன் விருது!
.
இயக்குனர் ஷங்கருக்கு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதை தட்டிச் சென்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சிஎன்என் ஐபிஎன் லைவ் நியூஸ் ஏஜென்ஸி சிறந்த இந்தியர்கள் என்ற பெயரில் விருதுகளை அளித்துவருகிறது. அரசியல், விளையாட்டு, வர்த்தகம், பொது சேவை, மற்றும் பொழுதுபோக்கு என ஐந்து துறைகளுக்கும் தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 6 பேருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பின்பு வாக்குகள் சேகரிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும்.
இந்த ஆண்டு பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருதுக்கு, அமீர் கான், ரஜினிகாந்த். சல்மான் கான், இயக்குனர் ஷங்கர், ஷிலாங் செம்பர் நிறுவனம் மற்றும் விக்ரம் ஆதித்தியா பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு சென்ற பெருமைக்காக (எந்திரன் படத்திற்கு) இயக்குனர் ஷங்கருக்கு அதிக வாக்குகள் கிடைத்து, இந்த ஆண்டின் பொழுதுபோக்குக்கான சிறந்த இந்தியர் விருது கிடைத்தது.

Subscribe to:
Posts (Atom)