08/10/2019 திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்நீர் ஊற்று பகு­தியிலுள்ள தொல்­பொருள் திணைக்­களம் உரி­மை ­கோரும் பிள்­ளை யார் கோயில் அமைந்­துள்ள பிர­தே­சத்தில் கோயில் அல்­லது பெளத்த விகாரை அமைப்­ப­தற்கோ அல்­லது திருத்த வேலைகள் செய்­வ­தற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்­த­ரவை திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் பிறப்­பித்­துள்ளார்.