சிட்னி முருகன் கோவிலில் நாதஸ்வர கச்சேரி 09-04-2012

.
         நாட்டிய கலாநிதி - கார்த்திகா கணேசர்
 படபிடிப்பு ஞானி

ஏப்ரல் 9 ஆம் நாள் 2012 நடக்க இருக்கும் நாதஸ்வர கச்சேரிக்கு வாருங்கோ, நீங்கள் தான் கலைஞரை அறிமுகப் படுத்த வேண்டும் என கூறினார் தனிக்குமார். நாதஸ்வர தவில் கலைஞரை அறிமுகப் படுத்துவதா? அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும்? திருவிழாவிலே முருகனுக்கு அடுத்த படியாக மக்களை கவர்ந்தவர்கள் அவர்கள். அவர்களை ஏன் அறிமுகப் படுத்த வேண்டும் என்றேன். இது எல்லாம் சம்பிரதாயம், கட்டாயம் வாங்கோ ஏன் வற்புறுத்தினார். கலாசார மண்டபத்தில் கலைஞரைக் கண்டேன். மிகுந்த மரியாதையுடன் இப்படி ஒரு சம்பிரதாயமாம். அதனால் தான் உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். உங்களைப் பற்றி கூறுங்கள் என்றேன். 

நெடுந்தீவு ஆச்சிக்கு- கவிதைகள் -வ.ஐ.ச.ஜெயபாலன்


.

எனது மூதாதையரின் தீவு
அலைகளின்மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி
காலம் காலமாய் உன்னைப் பிடித்த
பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின
போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்
தென்னம் தோப்பு
நானும் என் தோழரும்
செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.
தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின்மேல்
காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.
என்ன இது ஆச்சி

மலரும் மாலை பரிசுகள் 2012 - 21.04.12 Saturday

.
 யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் மலரும் மாலை பரிசுகள் 2012

மெல்பேர்னில் அரங்கேறிய இளம் துளிர் - 2012.Perpetual Money Transferஆதரவில் மெல்பேர்ன் George Wood Performing Arts Centerல் கடந்த சனிக்கிழமை 14.04.2012 மாலை மண்டபம் நிறைந்த ரசிகப் பெருமக்களின் முன்னிலையில் அரங்கேறிய மாபெரும் இசை விருந்து இளம் துளிர் - 2012.
அவுஸ்திரேலியாவில் பிரபல்யமான இளம் இசையமைப்பாளர் பல்கலை வித்தகன் நிரோஷன் சத்தியமூர்த்தியின் நெறியாள்கையில் புதிய பூபாளம் இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மனதைப் பிடித்து விட்ட அல்லது கொள்ளை கொண்ட நிகழ்ச்சியாக அமைந்திருந்தது. தென்னிந்திய திரைப்படப் பாடகர்களான முகேஷ், ஷியாம், அனித்தா ஐயர், பிரியதர்ஷினி ஆகியோர் உட்பட சிட்னி, மெல்பேர்ன் இசைக் கலைஞர்களின் கூட்டு முயற்சியாக ஒரு வெற்றிப் படைப்பாக நடந்தேறியது என்றால் அது மிகையாகாது.


சிட்னியில் சித்திரை திருவிழா 22 April

.


Appar Guru Pooja at Helensburgh Siva Temple Complex.


ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவிலில் புதுவருட திருவிழாவும் நிகழ்ச்சியும் 15-04-2012

.

                                                                                                 படப்பிடிப்பு  சோதி

இளம் துளிர் -2012 சிட்னி 22 04 12

.

இலங்கைச் செய்திகள்

மனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் ஆஸியிலிருந்து பிரேம்குமார்

போதிய வசதிகளின்றிய நிலையில் இயங்கும் 17 பாடசாலைகள்

அரசியல் தீர்வு பற்றி அரசு இனி எப்போது பேசும்?


தொடரும் மனித உரிமை மீறல்கள்

நெருக்கடியான தருணத்தை அரவணைக்கும் இலங்கை 
மனித உரிமை மீறல்கள் எனது கடத்தல் மூலம் அம்பலம் ஆஸியிலிருந்து பிரேம்குமார்


12/4/2012

இலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற செய்தி சர்வதேசத்துக்கும் உள்நாட்டிற்கும் எனது கடத்தல் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டவருமான பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார்.

சிட்னியில் பரத நாட்டிய நிகழ்ச்சி 22.04.12


சிட்னியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா மகா சமாதி ஒராண்டு நினைவு தினம்


பகவான் ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் ஓராண்டு நினைவு தினத்தில் நாம் எப்படி வழிபட வேண்டும் என்பதை பேராசிரியர் அனில்குமார் கீழே தரப் பட்ட இணையத் தளத்தில் கூறுகின்றார் .

http://www.youtube.com/v/JiH2sARnxJg?version=3&autohide=1&autoplay=1

மௌனம் கலைகிறது 8 –நடராஜா குருபரன்


பல்லைப் பிடுங்கிய பாம்பாக கருணாவை பேழைக்குள் போட்ட சிங்கள பெருந் தேசியவாதம்:-மௌனம் கலைகிறது 8


நடராஜாகுருபரன்
பல்லைப் பிடுங்கிய  பாம்பாக கருணாவை  பேழைக்குள் போட்ட சிங்கள பெருந் தேசியவாதம்:-மௌனம் கலைகிறது 8
வன்னியில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மகாநாட்டில் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டதும் கிழக்கில் நிற்காது வெளிநாடொன்றிற்குச் சென்றுவிட வேண்டுமென்றும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் அவர் தன்னிடமுள்ள பணமனைத்தையும் கூடவே எடுத்துச் செல்ல முடியுமெனவும்  சமாதான முயற்சியில் ஈடுபட்ட இணைத் தலைமை நாடுகளில் ஏதாவதொன்றின் மூலம் இதற்கான  ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் புலிகள் கூறியதாகவும் இதற்காகக் கருணாவுக்கு இரண்டு அல்லது மூன்று கிழமைகள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும்  அப்போது  கசிந்த  தகவல்கள்   தெரிவித்திருந்தன.

மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 3

.

வரலாற்று நாடகம்
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)

- காட்சி நான்கிற்கு முன்னுரை -

நாட்டை விட்டு விரட்டப்பட்ட துட்டகைமுனு
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில்,
தீகவாப்பிப் பிரதேசத்தில் உள்ள காட்டில்
மறைந்து வாழ்ந்துவருகிறான்.
வருடங்கள் பல உருண்டோடிவிட்டன.
மன்னன் கவந்தீசன் தனது இளைய மகனும், துட்டகைமுனுவின் தம்பியுமான சதாதீசனிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இறந்து விடுகின்றான். தந்தை இறந்ததையும்,
தம்பி அரியணையில் அமர்ந்ததையும்
அறிந்த துட்டகைமுனு நாடுதிரும்புகிறான்.
சதாதீசனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற சூழ்ச்சிசெய்கிறான். ஒருநாள் மாறுவேடத்தில் அரண்மனையினுள்
தந்திரமாகப் புகுந்த அவன்,
அரண்மனைப் பூங்காவில் உலவிக்கொண்டிருக்கும் சதாதீசனைக் காணுகிறான்.


காட்சி 4

களம்:- அரண்மனைப்பூங்கா
பங்குகொள்வோர்:- துட்டகைமுனு
சதாதீசன்
தாய் விகாரமகாதேவி.

(சதாதீசன் பூங்காவிலே உலவிக்கொண்டிருக்கிறான் திடீரென துட்டகைமுனு அவன் முன் தோன்றுகிறான்)

குறளில் குறும்பு – கூழா அல்லது ஊழா?

.
வானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்
ஞானா: அப்பா......அப்பா.....இண்டைக்கு அப்பா.....அம்மாவக்கு ஒரு test வைக்கப் போறன் அப்பா.

அப்பா: உனக்கு ஞானா வேறை வேலை இல்லையே....அம்மாவை ஏன் குழப்பப் போறாய்.

ஞானா: சும்மா ஒரு கிழுகிழுப்புக்தான் அப்பா. திருக்குறளிலைதான் test பண்ணப் போறன்.

அப்பா: என்னவேன் செய் ஞானா. என்னை மாட்டிவிட்டிடாதை.

ஞானா: சும்மா எனக்குப் பின்னாலை வாருங்கோ அப்பா. பிறகு நடக்கிறதைப் பாருங்கோ.

அப்பா: சரி.....சரி.......நீ.....போ ஞானா ......நான் பிறகு வாறன்.

உடுவில் மகளிர் கல்லூரி இராப்போசன விருந்து

.

உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் சென்ற சனிக்கிழமை Greyhond Racing Club , Yagoona வில் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட அங்கத்தவர்களையும் அவர்களின் குடும்ப உறவுகளையும் அங்கு இடம் பெற்ற நிகழ்வுகளில் சிலவற்றையும் காணலாம் .


படப்பிடிப்பு :ஞானி

உலகச் செய்திகள்


சியாசின் பனிப்பாறை சரிவில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரம்

சிரியாவும் அனானின் சமாதான திட்டமும்

சிரியாவில் போர் நிறுத்தம் அமுல்: துப்பாக்கி, பீரங்கிகளின் சத்தம் ஓய்ந்தது

சியாசின் பனிப்பாறை சரிவில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரம்

9/4/2012

சியாசின் பகுதியில் பனிப் பாறை சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன .

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாசின் மலைப் பகுதியில் நேற்று முன்தினம் பனிச் சரிவு ஏற்பட்டதில், ஜியாரி என்ற இடத்தில் முகாமிட்டிருந்த பாகிஸ்தானிய வீரர்கள் 124 பேர் உள்ளிட்ட 135 பேர் பலியாயினர். 19 ஆயிரம் அடி உயரத்தில், ( - 50) பாகை செல்சியஸ் வெப்பநிலை கொண்ட இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு போதிய வெளிச்சம் இல்லாததால், மீட்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழ் சினிமா

.
நந்தா நந்திதா

nanda_nanditha_வழக்கமான ரவுடி காதல், கதை தான் நந்தா நந்திதாவும்! ஆட்டோ டிரைவர் அப்பாவின் 2ம் தாரத்தால் வீட்டை விட்டு துரத்தப்படும் அம்மாவை இழந்த ஹீரோ நந்தா, நண்பர்கள் மூலம் வட்டி பணம் வசூல் செய்யும் வேலையை பார்க்கிறார். கூடவே பணத்திற்காக யாரையும் தீர்த்துகட்டும் உத்தியோகமும் நந்தாவை வந்தடைகிறது! ஒரு பக்கம் அடிதடி, வெட்டுகுத்து என்று நந்தா ஆக்ஷன் நாயகர் அவதாரம் எடுத்திருந்தாலும், மற்றொருபக்கம் நாயகி நந்திதாவுடன் லவ் எபிசோட்டிலும் புகுந்து விளையாடுகிறார்.

nanda_nanditha_2
நாயகர் நந்தாவை, நாயகி நந்திதா நல்லவர் என்று நம்பிக்கொண்டு லவ்-விக் கொண்டிருக்க, ஒருநாள் நந்தா இடைத்தேர்தல் வேட்பாளர் சண்முகராஜனை, காசுக்காக வெட்டி வீழ்த்துவதை கண்கூடாக பார்க்கிறார். அப்புறம்...? அப்புறமென்ன தப்பிபிழைக்கும் சண்முகராஜனிடமிருந்து நந்தா தப்பி பிழைத்தாரா...? நந்தா - நந்திதாவின் காதல் கை கூடியதா...? நாசர் ஒருபக்கம் நந்தாவை தேடக் காரணம் என்ன...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாக விடையளிக்க முயற்சிக்கிறது நந்தா - நந்திதாவின் மீதிக்கதை!

nanda_nanditha_3
நந்தாவாக ஹேமச்சந்திரன், நந்திதாவாக மேக்னாராஜ், அரசியல்வாதியாக சண்முகராஜன் அவரைப்போட்டுத்தள்ளும் கூலிப்படைத் தலைவராக நாசர் உள்ளிட்ட சகலரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். ஸ்ரீ ஸ்ரீனிவாச ரெட்டியின் ஒளிப்பதிவும், எமிலின் இசையும், ராம்ஷிவாவின் இயக்கமும் "நச்" என்று இல்லை என்றாலும் "பச்" என்னும் அளவிலும் இல்லாதது ஆறுதல்!

ஆக மொத்தத்தில் "நந்தா நந்திதா" - "நன்றா நன்றில்லையா" என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்...!

நன்றி தினக்குரல்nanda_nanditha_4விண்மீன்கள்

vinmeengal_நூறு படங்களுக்கு மேல் இயக்கி மறைந்த இயக்குநர் கே.சங்கரின் பேரன் விக்னேஷ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் முதல்படம் தான் "விண்மீன்கள்". முத்தான படமும் கூட!

செரிபரல் பேல்சி எனும் வாயில் பெயர் நுழையாத ஒரு நோயினால் பிறக்கும்போதே பாதிக்கப்படும் ஒரு குழந்தை, வளர்ந்து பெரியவன் ஆனதும் இந்த உலகத்தில் சந்திக்கும் சந்தோஷங்களும் பிரச்னைகளும் தான் "விண்மீன்கள்" படத்தின் மொத்த கதையும்!

காதல் தம்பதிகளான விஷ்வா, ஷிகா ஜோடிகளின் ஆசை குழந்தை ஜீவா. பெரிபரல் பேல்சி எனும் ஒருவித மூளை மற்றும் உடல் வளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கிறது! அதை காப்பகத்தில் விட்டு வளர்க்காமல் தன்னம்பிக்கையுடன் தாங்களே வளர்க்கின்றனர் விஷ்வா-ஷிகா ஜோடி. பெற்றோரின் ஆதரவு அரவணைப்பில் வளரும் ஜீவாவும், மருத்துவதுறை வியக்கும் வண்ணம் வளர்ந்து ஆளாகிறார். உடல் ஊனம், வீல் சேர் பயணம்... என்றாலும் பருவ வயதில் ஜீவாவிற்குள்ளும் காதல் எட்டிப்பார்க்கிறது. அனுஜா ஐயர் மீதான அந்த காதல் கை கூடியதா...? இல்லை வீல்சேர் வாசம், விதி வசம்... இத்யாதி, இத்யாதிகளால் கை மீறிப் போனதா...? என்பது உருக்கமான க்ளைமாக்ஸில் ரசிகர்களின் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் உத்தியுடன் வித்தியாசமாக படமாக்கப்பட்டிருப்பது "விண்மீன்கள்" படத்தின் பெரியபலம்!

மேஜிக் நிபுணராக வரும் விஷ்வாவும், அவரது காதல் மனைவியாக வரும் ஷிகாவும் படத்தில் நிஜமான கணவன்-மனைவி மாதிரி வாழ்ந்திருப்பது விண்மீன்கள் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்களில் ஒன்று! அவர்களது குழந்தையின் குறைபாடு படம் பார்க்கும் ரசிகர்களையும் தொற்றிக் கொள்ளும் படி நடித்திருக்கும் இடங்களில் ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!

சிறுவன் ஜீவாவாக வரும் கிருஷ்ணாவும் சரி, வாலிப ஜீவாவாக வரும் ராகுல் ரவீந்தரும் சரி, அந்தப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கின்றனர். பலே பலே! அப்பா விஷ்வா துணையுடனான கிருஷ்ணாவின் வீல்சேர் ஓட்டப்பந்தயமும் சரி, அனுஜா ஐயர் உடனான ராகுல் ரவீந்தரின் காதல் வசப்படுதலும் சரி இயல்பாக இருப்பது பிரமாதம்! ஜீவாவின் காதலியாக வரும் அனுஜா ஐயர், மாமா பாண்டியராஜன் உள்ளிட்டவர்களும் விண்மீன்கள் படத்தின் பலமான நட்சத்திரங்கள்!

vinmeengal_2
ஜூபினின் பாடல்கள் இசையும், பின்னணி இசையும் தேனும் பாலும் கலந்த திகட்டாத சுவை என்றால், ஆனந்த் ஜெவின் ஒளிப்பதிவு திணை மாவு எனும் அளவிற்கு பிரமாதம்!

ஜீவா ஊட்டி வந்து, மாமா பாண்டியராஜனுடன் வாழும்போது அவரது தாய், தந்தை, விஷ்வா, ஷிகா என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது உள்பட இன்னும் சில வினாக்களுக்கும் டைரக்டர் விக்னேஷ் மேனன் அழகாக விடையளித்து இருந்தால் விண்மீன்கள் மேலும் உயரத்தில் ஜொலித்திருக்கும்!

உடல் வளர்ச்சி இருந்தும், கை, கால் தளர்ந்த ஒரு கதை நாயகனுக்கு தாயும், தந்தையும், காதலியும் தரும் ஆதரவை ரசிகர்களும் தந்தால் சரி! ஆக மொத்தத்தில் கமர்ஷியல் தனம் இல்லாத "விண்மீன்கள்", அதன் இயக்குநர் விக்னேஷ் மேனனின் கண்கொண்டு பார்க்கும் ரசிகர்களுக்கு சிறந்த "நல் நட்சத்திரங்கள்"!

நன்றி தினக்குரல்