மரண அறிவித்தல்

                                          .
                                                              திருமதி. மகேஸ்வரி சின்னத்துரை 


இலங்கை தெரணியகலவை பிறப்பிடமாகவும் யாழ் தெல்லிப்பழையை வதிவிடமாகவும்  கொண்ட மகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 30 06 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிட்னி ஆஸ்திரேலியாவில் இறைபதமடைந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான உடுவிலைச்  சேர்ந்த சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், மற்றும் நாகலிங்கம் செல்லாச்சியின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னார்  முருகதாசன், நிலோஜனா, சுலோஜனா, விமலதாசன் அனோஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும் , அனுராதா, குலேந்திரன், காலம் சென்ற ரஞ்சன், ரமணி, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலம் சென்றவர்களான அரியம்மா, பத்மாவதி, ராஜேந்திரா மற்றும் மகேந்திரா, பாலேந்திரா தெய்வேந்திரா , யோகேஸ்வரி,புஷ்பவதி,கமலாவதி, புவனேந்திரா, கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும் 
கீர்த்திகன், ஆர்திகன்,அரன்யா, நிரோதா சுஜன், நிகுலன்,பிறேமிகா பிரஸாந், கீர்த்திகா முகுந்தன், றஜீன் , நிலோஷன் , நிகாஷன், அஞ்சனா , சஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும், சிந்தூரி , ஷ்ரவன் , டிலன்,எய்டன், சியாரன், ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இத்தகவலை உற்றார் , உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகனக் கிரிகைகள் பற்றிய விபரம் பினனர் அறியத் தரப்படும்.

தொடர்புகளுக்கு:  சுலோஜனா றஞ்சன் 02 8810 9363

மரண அறிவித்தல்


திருமதி நகுலாம்பிகை வேலாயுதம் சிட்னியை வதி விடமாகக் கொண்ட  திருமதி நகுலாம்பிகை  வேலாயுதம்    அவர்கள் 27.06.2019 அன்று காலமானார் .
இவர்  Dr .தில்லைநாயகம்  வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும் ,   சுப்ரதீபன் (தீபன் ),  சபாரட்ணம் (சபா ) ஆகியோரின் அன்புத்தாயாரும் ,  காலம்சென்றவர்களான  நன்னி க்குட்டி  சபாரத்தினம் , காமாட்சிப்பிள்ளை சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும் , காலம்சென்றவர்களான  வேலுப்பிள்ளை தில்லைநாயகம் , சின்னத்தங்கம் தில்லையநாயகம் ஆகியோரின் அன்பு மருமகளும் , காலம்சென்ற திலகவதி பொன்னையா (கனடா),
சத்தியவதி நடராஜா (சிட்னி ),  கமலாவதி பத்மநாதன் (லண்டன் ),  சாரதாதேவி ஷண்முகரட்னம் (இலங்கை ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் ஜூலை மாதம் 3ம் திகதி புதன்கிழமை மாலை 2.30 மணியில் இருந்து 4.30 மணிவரை Rockwood மயானத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து இறுதிக் கிரிகைகள் இடம்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர் .

 தககவல் சுப்ரதீபன் 61 481 302 527

மரண அறிவித்தல்


நீராவியடி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும்சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, நடனசபேசன் பொன்னுசாமி அவர்கள், சனிக்கிழமை 29.06.2019 அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுசாமி - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா - திலகவதி (றோஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவி அவர்களின் அருமைக் கணவரும், சுகலன், சுஜிந்தா அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

கனி அமுது, விஷ்ணுவர்த்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும், ரூபன், அர்ஜுன், ஐஷானி ஆகியோரின் பாசமிகு பேரனாரும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம், இராஜசுந்தரம், இராமச்சந்திரன் மற்றும் கமலாம்பிகை, கருணாகரன் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சகுந்தலாதேவி மற்றும் சாந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல், பார்வைக்காக வியாழக்கிழமை, 04.07.2019 அன்று காலை 9:30 மணி முதல் - 10:30 மணிவரை Palm chapel, Macquarie Park Crematorium தில் வைக்கப்பட்டு 10:30 மணி முதல் 12:30 மணிவரை கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும் என்பதனை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

-->
தகவல் : சுகலன் - 0405 337 075

காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மகாதேவஐயர் ஜெயராமசர்மா..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


      திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு 
       பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே
       நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு
       நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

      காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்
      தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்
image1.JPG      சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று
      சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

      பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்
      பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்
      இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்
      கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

      கருவிலே கற்பனையை காவிவந்த கண்ணதாசன்
      உருவிலே கம்பனாய் காளிதாசன் போலானான்
      துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்
      அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

      வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய் தமிழாக்கி
      காதினுக்குள் செலுத்துதற்கு காரணமாய் இருந்தானே 
      கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்
      போதனையாய் பாவெழுதி போதித்தான் கண்ணதாசன் !

      இந்துமதம் இதயத்தில் யேசுமதம் கவனத்தில் 
      எல்லோர்க்கும் ஏற்கும்படி இயற்றினான் நூலிரண்டை 
      எவர்மனமும் நோகாமல் இறைகருத்தைப் பகர்ந்ததனால்
      எல்லோரும் போற்றுகின்றார் என்றும் கண்ணதாசனையே !

பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்டிருந்த தில்லைநாதன்


28/06/2019 எஸ்.தில்­லை­நா­தனின் மரணம் எம்­மத்­தி­யி­லி­ருந்து பல்­திறப்புல­மையும் ஆளு­மையும் கொண்ட மூத்த ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரை அப­க­ரித்துச் சென்­று­விட்­டது.
அரை­நூற்­றாண்­டுக்கும் அதி­க­மான கால­மாக ஊட­கத்­து­றையில் சேவை­யாற்­றிய தில்­லை­நாதன் 1960களின் முற்­கூறில் அச்சு இத­ழி­யலில் பணி­யாற்றத் தொடங்­கி­யி­ருந்­தாலும், பிற்­கா­லத்தில் இலத்­தி­ர­னியல் ஊட­கத்­து­றை­யிலும் தனது முத்­தி­ரையைப் பதித்­தவர். மும்­மொ­ழி­க­ளிலும் வள­மான ஆற்­றலைக் கொண்ட அவர் வீர­கே­ச­ரியில் ஒரு இளை­ஞ­னாக 1960களில் சேர்ந்தபோது இலங்­கையின் தமிழ்ப் பத்­தி­ரிகை உலகில் பழுத்த அனு­ப­வமும், அறி­வாற்­றலும் உடை­ய­வர்­க­ளாக விளங்­கிய கே.வி.எஸ்.வாஸ், எஸ்.டி.சிவ­நா­யகம், கே.சிவப்­பி­ர­காசம் போன்­ற­வர்­களின் வழி­ந­டத்­தலில் பணி­யாற்றும் அதிர்ஷ்­டத்தைக் கொண்­டி­ருந்தார். ஒரு அலு­வ­லகச் செய்­தி­யாளர் என்ற வகையில் அந்த நாட்­களில் இள­மைத்­து­டிப்­புடன் தில்­லை­நாதன் செயற்­பட்ட பாங்கு முன்­னு­தா­ர­ண­மா­ன­தாகும்.

ஒரு மனிதநேயவாதியின் தார்மீகக் குரலாக ஒலிக்கும் நூல் நடேசனின் "எக்ஸைல்" குறித்து எனது நோக்கு - கலாநிதி மு. ஸ்ரீகௌரிசங்கர்


எக்ஸ்ஸைல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பின்வருமாறு விளங்கப்படுத்தியுள்ளார்கள்.
Exile: The state of being barred from one's native country, typically for political or punitive reasons.
அதாவது ஒருவர் தேசத்தினின்று அகற்றப்படுதல் அல்லது வேறு நாட்டில் தலைமுறை வாழ்வு வாழுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இது ஏன் நடைபெறுகிறத?  என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படமுடியும், என்றாலும் நடேசன் அவர்கள் இங்கு தனது அனுபவம் மூலம் வித்தியாசமான ஓர் உணர்வை பதிவுசெய்துள்ளார்.
" 1984 ஏப்ரலில் எனக்கு,  குருட்டுப் பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப்பயணம். நாட்டைவிட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பயணம், முதலான காரணங்களினால் பிரியும் போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால்,  நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பிரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது." என்று நடேசன் தனது எக்ஸையில் அனுபவத்தை ஆரம்பிக்கிறார்.
நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல்,  எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில்  தங்கள் வாழ்க்கையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை நடேசன் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.
இந்நூலை அறிமுகம் செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேனென்று கூறினால் அது மிகையாகாது. அதற்குமுன் யார் இந்த நடேசன்? மற்றும் அவரின் பின்புலம் என்ன? என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

பயணியின் பார்வையில் - அங்கம் 12 கல்விபொதுத் தராதர பரீட்சைகள் முடிந்ததும் மாணவருக்கு தொழில் பயிற்சி அவசியம்! " வடபகுதியில் பன்னிரண்டு இடங்களில் ரயில்வே கடவை இல்லை ! பன்னிரண்டு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன!!" - முருகபூபதி


இலங்கையில் நாடெங்கும் சீரான பஸ்போக்குவரத்து இருந்தபோதிலும்,  பயணிகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தவாறே விழிப்புடன் பயணிக்கவேண்டியிருக்கிறது.
வருடாந்தம் அங்கு நடக்கும் வீதி விபத்துக்கள் பற்றிய புள்ளிவிபரங்களை போக்குவரத்து துறை சார்ந்த பொலிஸார் ஊடகவியலாளர்களை அழைத்து தகவல் தெரிவித்துவருகிறார்கள்.

தூரப்பயணங்களில் ஈடுபடுத்தப்படும் பஸ்வண்டிகளின் சாரதிகளின் கவனக்குறைவினால் அதிகாலைப் பயண வேளையில் வரும்  உறக்கக் கலக்கத்தினால் பல விபத்துக்கள் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து தினமும் இரவுவேளையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் தனியார் துறை பஸ்வண்டிகள் பயணிகளுடன் பயணிக்கின்றன. அவற்றில் ஆசனம் பதிவுசெய்யவேண்டியவர்கள் அதற்கான முகவர்களிடம் சென்று பதிவுசெய்துகொள்ளலாம்.

வடக்கிற்கான பாதையில் கொழும்பிற்கு அப்பால், ஆசனம் பதிவுசெய்யக்கூடிய அலுவலகங்கள் எங்கள் ஊர் நீர்கொழும்பிலும் இருக்கிறது. அங்கு சிலாபம் வீதியில் பெரியமுல்லை என்ற இடத்தில் பஸ்கள் அனைத்தும் தரித்துச்செல்கின்றன.
பல இரவுப்பொழுது ஹோட்டல்களும் உணவு விடுதிகளும் இயங்குகின்றன. சில 24 மணிநேரமும் தனது சேவையை பயணிகளுக்கு வழங்கிவருகின்றன. நீர்கொழும்பு பிரதான நகரத்திற்கு சமீபமாக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருப்பதனால், ஏராளமான உள்ளூர் வெளியூர் பஸ்கள் இங்கும் தரித்து நின்று வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் ஏற்றிச்செல்கின்றன.
இவ்வாறு பஸ்களில் பயணிக்கவிரும்பாத வெளிநாட்டினர், முன்னேற்பாடாக கட்டுநாயக்காவில் கார்களை வாடகைக்கு எடுத்து,  செல்லவேண்டிய ஊர்கள் - இடங்களுக்கெல்லாம் சென்று திரும்பிய பின்னர், மீண்டும் கார்களை ஒப்படைத்துவிட்டு விமானம் எறி விடைபெற்றுக்கொள்கின்றனர்.
சுருக்கமாகச்சொன்னால்,  நெடுஞ்சாலைகளில் பயணங்கள் பலவிடயங்களில் சௌகரியமாக இருந்தாலும், பஸ் ஆசனப்பதிவுகளில் நேர்ந்துவிடும் குறைபாடுகளினால் பயணிகள் சிரமங்களுக்கும் ஆளாகிவருகின்றனர்.
அனைத்து தொடர்பாடல்களும் கைத்தொலைபேசியூடாகவிருப்பதும் இச்சிக்கல்களுக்கு காரணம் எனலாம்.  ஆசனங்களை பதிவுசெய்யும் முகவர்களுக்கும் பஸ் நடத்துனர்களுக்கும் இடையில் தொடர்பாடலில் நீடிக்கும் குறைபாடுகளினால் பல பயணிகள் முன்னேற்பாடாக ஆசனம் பதிவுசெய்திருந்தபோதிலும், இடைவழியில் ஏறும்போது பல சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.
அன்று நான் நீர்கொழும்பு -  சிலாபம் வீதியில் பெரியமுல்லையில் இரவுவேளையில் கொழும்பிலிருந்து பருத்தித்துறை செல்லும் அந்த தனியார் பஸ்ஸிற்காக காத்து நின்றேன். சரியாக இரவு 10 மணிக்கு வரும் என்று அந்த முகவர் ( பெண்) சொல்லியிருந்தார்.
நானும் இன்னும் ஒரு சில பயணிகளும் இரவு 11 மணிவரையில் அங்கு காத்திருந்தோம். அந்த பஸ் தாமதமாக வந்து ஏற்றிச்சென்றது. இடைவழியில் மேலும் சில பயணிகள் ஏறினார்கள். அவர்களில் சிலருக்கு அந்த பஸ்ஸில் அமர்ந்து செல்வதற்கு ஆசனம் இல்லை.

கான்பரா கலை இலக்கியவாதிகள் சங்கமித்த கலை இலக்கிய விழா 2019 - ரஸஞானி
கலை இலக்கியம் சார்ந்த வெளிப்பாடுகளை இரசிகர்கள், வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் கான்பரா கலை இலக்கிய வட்டம் நடத்திய ஒன்று கூடல் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கான்பரா தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
நூல்களின் அறிமுகம், கருத்துரைகள், குறும்படக்காட்சி ஆகிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இந்த ஒன்றுகூடல் தமிழ் மூத்த பிரஜைகள் சங்கத்தின் செயலாளர் திரு. சிவபேசன் தலைமையில்  நடைபெற்றது.
அமரர் கி. இலக்‌ஷ்மணன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின்  வாழ்வையும் பணிகளையும்  நினைவுகூரும் வகையில் அன்னார் பல வருடங்களுக்கு முன்னர் எழுதிய,  இலங்கை தேசிய சாகித்திய விருதும் தமிழக அரசின் விருதும் பெற்ற இந்திய தத்துவஞானம் மற்றும் சமீபத்தில் வெளிவந்த அன்னாரின் மற்றும் ஒரு நூல் சிப்பிக்குள் முத்து ஆகியனபற்றிய மதிப்பாய்வுகளும் இந்நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்டது.
அமரர் இலக்‌ஷ்மணன் அவர்களின் துணைவியாரும் கலை இலக்கிய ஆர்வலரும் இலங்கை கல்வித்திணைக்களத்தின் சமய – தமிழ்ப் பாடநூல்களின் முன்னாள் ஆசிரியருமான திருமதி பாலம் இலக்‌ஷ்மணன் அமரரின் வாழ்வையும் பணிகளையும் பற்றி உரையாற்றுகையில்,

-->

 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே 

என்னும் திருஞானசம்பந்தர் கூற்றினை மேற்கோள் காண்பித்து பேசினார்.


பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் 1969 - 2019 ச. சுந்தரதாஸ்


அடிமைப் பெண்

எம். ஜி. ஆர் மிக்சர்ஸ் சார்பில் எம்.ஜி.ஆர் தயாரித்த இரண்டாவது படம் அடிமைப்பெண்.  நாநோடி மன்னன் படத்iதின் வெற்றியைத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்குப் பின் இந்தப்படம் உருவானது.  முதலில் எம்.ஜி.ஆர் சரோஜாதேவி நடிப்பில் சில காட்சிகள் எடுக்கப்பட்டு பின்னர் சரோஜாதேவி படத்திலிருந்து நீக்கப் பட்டு ஜெயலலிதா இரட்டை வேடத்தில் இதில் நடித்ததோடு மட்டுமன்றி அம்மா என்றால் அன்பு என்ற பாடலையும் தனது சொந்தக் குரலில் பாடியிருந்தார்.  அசோகன் மனோகர் சோ பண்டரிபாய் ராஜஸ்ரீ என்று பலர் நடித்த இந்தப் படத்தில் எம். ஜி. ஆருடன் சில காலம் முரண்பட்டிருந்த சந்திரபாபுவும் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் தயாரிப்பாளரான எம்.ஜி.ஆர் படத்தயாரிப்பிற்கான செலவைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதை படத்தின் காட்சிகளும் பிரம்மாணடடமும் எடுத்துக் காட்டின. சரித்திரக் காலக்கதை என்ற போதும் பலவித அரங்குகளை அமைத்து அசத்தியிருந்தார் கலை இயக்கனர் அங்கமுத்து.

நாடோடி மன்னன் படத்தைத் தயாரித்த போது நிதி நெருக்கடிக்கு எம்.ஜி.ஆர் ஆளாகியிருந்தார். இதன் காரணமாக கேவா கலரில் படமாக்கியிருந்தார். ஆனால் 1969ல் வெளிவந்த அடிமைப் பெண்ணை முழுநீள ஈஸ்ட்மண் கலரில் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?ஈஸ்டர் ஞாயிறு தினமான ஏப்ரல் 21ந் திகதி இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் ஊடுருவிவிட்டதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான இஸ்லாமிய மக்களைக் கொண்ட இலங்கை போன்ற நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பலமாகக் காலூன்றுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவானதாகவே உள்ளன என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. அதிலும் இலங்கையில் பௌத்தமதத்திற்கும் (70.2%) இந்துமதத்திற்கும் (12.6%) அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலேயே இஸ்லாம் (9.7%) இருப்பதால், முதலிரு இடங்களிலுள்ள மதங்களை மீறி இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துக்களை சுலபமாகப் பரப்பவும் முடியாது. அதற்காக, இலகுவாகத் தகவல்களைப் பரிமாற்றங் செய்யக்கூடிய இன்றைய உலகில், இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களில் சொற்ப அளவிலானோரை அடிப்படைவாதக் கருத்துக்களின்பால் ஈர்க்கப்படுவதைத் தடுத்துவிடவும் முடியாது. 

ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதல்கள் நடந்து ஏறத்தாள 48 மணி நேரங்களின் பின்னரே ஐ.எஸ். அமைப்பு தாக்குதல்களுக்கு உரிமை கோரியது. இது இலங்கையில் மாத்திரமன்றி உலகெங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது. எனினும் உரிமை கோருவதற்கு ஐ.எஸ் ஏன் 48 மணிநேரங்களை எடுத்துக் கொண்டார்களென்ற கேள்வியும் எழுந்தது. ஐ.எஸ். இலங்கையில் ஊடுருவிவிட்டதாக எண்ணி விசாரணைகளை முடுக்கிவிட்ட இலங்கை அரசு துரிதமாக செயலில் இறங்கி, இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவர்களென பலரைக் கைது செய்தது. தற்கொலைத் தாக்குதல்களின் சூத்திரதாரியெனக் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் தலைமை தாங்கிய அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அந்த அமைப்பின் மீது தடையும் விதிக்கப்பட்டது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணம் 2019


300 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான்!

இரண்டாவது வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்!

262 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ்

பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்!

பிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து!

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்த ஆஸி.

தடுமாறிய நியூஸிலாந்தை மீட்டெடுத்த இணைப்பாட்டம்!

வாய்ப்பினை தக்க வைத்த பாகிஸ்தான்!

பதிலடி கொடுத்து வாய்ப்பை தக்க வைக்குமா மே.இ.தீவுகள்?

வெளியேறத் தயாரான மேற்கிந்தியத்தீவுகள்

கிரிக்கெட்டில் விராட்டின் புதிய மைல்கல்!

203 ஓட்டத்துக்குள் சரணடைந்த இலங்கை!

நிதானமாக ஆடி முடித்த தென்னாபிரிக்க ; கைநழுவிப் போன அரையிறுதி வாய்ப்பு!

பாகிஸ்தானுக்கு 228 ஓட்டங்களை இலக்காக வைத்த ஆப்கான்

வாய்ப்பினை கைவிடாத பாகிஸ்தான்!

போல்ட் ஹெட்ரிக் ; வெற்றி ஆஸி.வசம்! 

அதிரடியில் ஆரம்பித்து அதிரடியில் முடித்த இங்கிலாந்து!

முதல் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்து!


300 ஓட்டங்களை கடந்த பாகிஸ்தான்!

23/06/2019 தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 308 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைச் செய்திகள்


அரசியலமைப்பின் 18, 19வது திருத்தச் சட்டங்களை இரத்துச் செய்ய வேண்டும் ; ஜனாதிபதி

தற்கொலை தாக்குதல்: முன்னாள் பாதுகாப்பு செயலருக்கு எதிராக குற்றவியல் விசாரணை

அனைத்து தரப்பினர்களும் இணைந்து செயற்படுங்கள் -  ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்

மைக்பொம்பியோவின் இலங்கை விஜயம் ஏன் இரத்துச்செய்யப்பட்டது?

இவ்வாரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்- மன்னிப்புச்சபை அச்சம்

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பின் நிரந்தரப் பதிவாளர்

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவும் பிரிட்டிஷ் சபை

பெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்  சாட்சியமளிக்க  மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு

போதை பொருள் பாவனைக்கு எதிராக முள்ளிவாய்க்கால் மக்கள் ஆர்ப்பாட்டம் !

அபாயா விவகாரம் : ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

மூத்த ஊடகவியலாளர் எஸ் . தில்லைநாதன் மறைந்தார்

யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

கோத்தபாயவிற்கு மேலும் நெருக்கடி- அமெரிக்க நீதிமன்றில் பலர் வழக்கு

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு- பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருப்பது என்ன?

குடிநீருக்கு அவதியுறும் வவுனியா மக்கள்

தங்கொட்டுவ சந்தையில் முஸ்லிம்களும் வியாபாரம் செய்யலாம் ; நீதிமன்றம் உத்தரவு!

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக செயல்படுத்த திட்டம்

முஸ்லிம்கள் குறித்த, அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்திற்கு தலாய்லாமா கடும் கண்டனம் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்

உலகச் செய்திகள்


ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத்  தடைகள் இன்று முதல்

ஐஎஸ் உறுப்பினர்களை விசாரணை செய்யுங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள்- மனித உரிமை ஆணையாளர்

ஈரானின் ஆன்மீகதலைவரிற்கு எதிராக தடை- டிரம்ப் அதிரடி

 "ரஷ்யாவுடனான எஸ் - 400 ஏவுகணை ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை"

எந்­த­வொரு நாட்­டு­டனும் போரை நாட­வில்லை பதற்­ற­நி­லைக்கு அமெ­ரிக்­காவே காரணம் : ஈரான்

ஜி - 20 மாநாட்டில் வெளியிடப்பட்ட பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்!

ஈரான் விவகாரம் : ஒன்றிணைந்து  செயற்படடுவதற்கு  மோடி - ட்ரம்ப் ஒப்புதல்

வடகொரிய எல்லைக்குள் கால்பதித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் புதிய பொருளாதாரத்  தடைகள் இன்று முதல்

24/06/2019 ஈரான் அணு ஆயு­தங்­களை உடை­மை­யாகப் பெற்றுக் கொள்­வதை தடுக்கும் வகையில் அந்­நாட்­டுக்கு எதி­ராக  பிர­தான மேல­திக தடை­களை அமெ­ரிக்கா விதிக்­க­வுள்­ள­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீ பாலா முருகன் கோவில், பேர்த் - பாலஸ்தாபன கும்பாபிஷேக அழைப்பிதழ் 04/07/2019மெல்பனில் கவிதா மண்டலம் 2019

முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மகாநாட் டை முன்னிட்டு பேச்சுப்போட்டி 25/08/2019


தமிழ் சினிமா - சிந்துபாத் திரைவிமர்சனம்


விஜய் சேதுபதியின் படங்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அவரின் படங்கள் பண பிரச்சனைகளால் ரிலீஸ் விசயத்தில் சிக்கில் நிலவுகிறது. அப்படித்தான் தற்போதும். இந்த சிந்துபாத் வெளியாக வேண்டிய நாளில் வராமல் படம் தள்ளிபோய் இன்று களத்தில் இறங்கியுள்ளது. படம் எப்படி என பார்க்கலாம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி ஊரில் அனைவரும் அறிந்த திருடன். அவருடன் சூர்யா என குட்டிபையன் அவரின் ஆதரவாக இருந்துவருகிறார். இவர் வேறு யாருமல்ல அவரின் நிஜ மகன். சேதுபதிக்கு காதில் வேறு சற்று பிரச்சனை. ஏதோ ஒரு பிழைப்பு, ஏதோ ஒரு வாழ்க்கை என இருந்தாலும் ஜாலியாக ஓட்டிகொண்டிருக்கிறார்.
அதே ஊரில் சாதாரண குடும்பத்து பெண்ணாக அஞ்சலி. ஒருநாள் இவரை ஏதேச்சையாக சேதுபது பார்த்துவிட காதல் வயப்படுகிறார். அஞ்சலி பேசினால் ஊரே கேட்கும் என்பது போல சத்தமான குரல். ஆனால் இவர் செய்யும் அட்டகாசம் குறும்புத்தனம்.
இப்படியிருக்க எப்படியோ ஒருவழியாக இவரும் அவரின் பால் காதலில் விழுகிறார். இதற்கிடையில் வேலைக்காக தாய்லாந்து செல்கிறார். அங்கு ஒரு பெரும் சமூக விரோத சம்பவமே நடைபெறுகிறது.
அஞ்சலி அதில் சிக்க விசயம் தெரிந்து அதிர்ச்சியான விஜய் சேதுபதி அவர் இருக்கும் இடத்தை தேடி பயணப்படுகிறார். அங்கு இவரும் வேறொரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள இருவரும் போன காதலி என்ன ஆனார், என்ன பிரச்சனை, சமூக நீதி கிடைத்ததா, வாழ்க்கையில் இருவரும் இணைந்தார்களா என்பதே இந்த சிந்துபாத்.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி எப்போதும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். அப்படியானவருக்கு கையில் சிக்கியது இந்த சிந்துபாத். படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தும் அவர் இந்த படத்திலும் காட்டியுள்ளார். காது கேளாமை என்றாலும் அவரின் செய்கை, நடந்துகொள்ளும் விதம் என கேரக்டரில் ரியல் பிரதிபலிப்பு.
அவருடன் இப்படத்தின் மூலம் அவரின் மகனும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்பாவை போல பிள்ளை என்பது சரியாக தான் இருக்கிறது. சிறு பையன் என்றாலும் நடிப்பை உள்வாங்கி கடைசிவரை தன் அப்பாவுடன் கதையில் டிராவல் செய்கிறார். மகனுக்கு சேதுபதி நல்லா கிளாஸ் எடுத்திருப்பார் போல.
அஞ்சலி பற்றி சொல்ல வேண்டாம். அனுபவம் வாய்ந்த நடிகை. அவரின் திறமைக்கு இப்படம் ஒரு நல்ல வாய்ப்பு. சத்தம் போட்டு பேசுவது அவரின் நேச்சுரல் ஸ்டைல் போல. சில இடங்களில் அவரின் ரியாக்சன் அங்காடி தெரு படத்தின் பார்த்ததை போல உணரலாம்.
இவர்களோடு பலரும் அறிந்த விவேக் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வழக்கம் போல அவரும் தனக்கான இடத்தை படத்தில் ஃபில் பண்ணி விடுகிறார்.
படத்தின் இயக்குனர் அருண் குமார் சிந்துபாத் மூலம் நவீன அழகு மருத்துவம் என்ற பெயரில் உலகளவில் நடக்கும் பெரும் அநியாயத்தை வெளிச்சம் போட்டு காட்டி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
தாய்லாந்து, தென்காசி என ஒளிப்பதிவாளர் காட்சிகளை படம் பிடித்த விதம் இயற்கையாக அமைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.
யுவனின் இசை படத்தின் ஓப்பனிங் தீம் மூலம் எண்ட் வரை கதைக்கு பொருத்தமான உணர்வுகளை தருகிறது. பாடல்களும் ஓகே..

கிளாப்ஸ்

விஜய் சேதுபதியின் சின்ன சின்ன ரியாக்‌ஷன் கூட இம்பிரஸன்.
அஞ்சலியின் எமோஷலான நடிப்பு. இருவருக்குமான ரொமான்ஸ் சூப்பர்.
சூர்யா விஜய் சேதுபதியின் குட்டி குட்டி காமெடி செய்கை படத்தில் எனர்ஜட்டிக்.

பல்பஸ்

படம் நீண்ட கால அளவாக சிலருக்கு தெரியலாம். அதனால் பொறுமையாக கடைசி வரை பார்க்க வேண்டும்.
மொத்தத்தில் சிந்துபாத் தாமதாக வந்தாலும் சரியான அட்டம்ட். மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வை காட்டிய இயக்குனருக்கு நன்றி. நன்றி  CineUlagam